நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 4

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
டெல்லி:

சத்யன் தன் பள்ளி படிப்பு முழுவதும் சிங்கப்பூரில் முடித்து விட்டு, தன் அம்மாவின் மனநிலை மாற்றத்திற்காக குடும்பத்துடன், இந்தியா திரும்புபவர்கள். சொந்த ஊருக்கு செல்லாமல் தலைநகர் டெல்லியில் செட்டிலாகி விட்டனர். டெல்லியில் தன் தொழில் நல்ல முறையில் முன்னேறியதால் ஹோட்டல் தொழில் ஆரம்பித்த சில வருடங்களிலே இந்தியாவிலும் கிளையை தொடங்கி இருந்தார். தன் மனைவிக்காக இந்தியாவுக்கு வருவதற்கு, முன்பு சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் நல்ல திறமையான நபரின் மேற்பார்வையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, டெல்லியில் உள்ள தொழிலையே மேலும் சிறப்பாக செய்ய ஆரம்பித்தார்.

சத்யனும் டெல்லியில் பிரபல கல்லூரியில் கேட்டரிங் படிப்பதற்காக ஆர்வம் காட்டவும். கேசவனும் மகனின் ஆசை நிறைவேற்றி வைத்தார். அதோடு தன் தொழிலை பிற்காலத்தில் கவனித்துக் கொள்வதற்காக கரஸில் "எம்.பி.ஏ ஹோட்டல் மேனேஜ்மென்ட்" டிகிரியும் படித்தான். அவனின் அறிவு திறமைக்கு இரண்டு படிப்பையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து இரண்டு டிகிரியையும், நல்ல முறையில் கற்று வந்தான். அவனின் படிப்பு நல்ல விதமாக சென்றாலும், அவனின் திறமை எல்லாத் துறையிலும் அவனை கால்பதிக்க செய்தது, அவனும் படிப்பில் சிறந்து விளங்கினான். முதல் வருடம் படிப்பில் கவனம் செலுத்தும் முன்பு ஷில்பாவின் நட்பு அவனை படாய்படுத்தி எடுத்தது. அவளுக்கு கொடுத்த இடத்தை பெண் தோழி என்ற இடத்தை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருந்தான். ஆண் நண்பர்களை மட்டுமே புதிதாக தன்னுடன் சேர்த்து இருந்தான். அவனின் படிப்பு இப்படியே மூன்று வருடங்களை கடந்து சென்றது. அவனின் படிப்பில் கோல்ட் மெடல் வாங்கி தன்னுடைய துறையிலே இன்னும் மாற்றங்கள் கொண்டு வருவதற்காக , சத்யனே தன் தந்தையிடம் இருந்து ஹோட்டலின் முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டான்.

பிரபா வீட்டில் தீடிரென பிரம்மை பிடித்தது போல எப்பவும் சுவரை வெறிக்க பார்த்துக் கொண்டு இருப்பாள். அதனால் அவளை வீட்டில் தனியாக யாரும் விட்டதே இல்லை. அவளின் கூடவே எப்போதும் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு பெண்மனியை வேலைக்கு நியமித்து இருந்தார் கேசவன். அதன் பிறகு அவளின் வாழ்க்கையை நல்லவிதமாக கடந்து சென்றது. அப்படியிருக்கும் போது தான் கேசவனுக்கு ஓய்வு நேரம் அதிகமாக கிடைக்கவும், தன் மனைவியுடன் செலவழிக்க ஆரம்பித்தார். அப்படி அவன் கூடவே இருக்கும் போது நடைபெற்ற சம்பவத்தால் தன் மகனின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் நடைபெறும் என்பது தெரிந்து இருந்தால், தன் மனைவியுடன் வெளியே செல்லாமலே இருந்து இருப்பார். என்ன சம்பவம் என்பதை பின்னாடி சொல்லுறேன்.

டெல்லியில் உள்ள சத்யனின் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. இந்தியாவுக்கு வரும் வெளி நாட்டு பயணிகள் மட்டுமல்லாது, அரசியல் கட்சியினரும் இந்த ஹோட்டலில் தான் தங்குவார்கள். சத்யனின் பொறுப்பில் ஹோட்டலில் மேலும் பல மாற்றங்களை கொண்டு வந்து இருந்தான். அவனின் ஹோட்டலின் பெயர் "பிரின்ஸ் பேலஸ்", அதனால் கூட வெளிநாட்டினரை பெரிதும் கவர்ந்து இருக்கலாம். அவனின் முழு நேரப்பணியும் ஹோட்டலில் கவனம் செலுத்துவது மட்டுமே, அப்போதும் அவனின் நினைவில் வந்து போனது "இளா" என்னும் தேவதையின் நினைவு தான். இப்படி நினைவில் மட்டுமே இருந்தவனை வாழ்வில் இனி என்றுமே நினைக்க முடியாத சூழலை, தன் இளாவுடன் சேர்த்து வைப்பதாக கூறிய தாயின் செயலே, தன் இளாவை மறக்க வேண்டிய சூழலை ஏற்படும் என்பதை சத்யன் கனவிலும் நினைக்கவில்லை, இந்த கவலையோடு தன்னுடைய ஹோட்டலில் அவனுடைய அறையில் யோசனையுடன் உட்கார்ந்து இருந்தான்.

சத்யனின் யோசனை எல்லாம் அவனின் கல்யாணத்தை பற்றி தான் விடிந்தால் சத்யனின் கல்யாணம், இந்த கல்யாணத்தால் அவனுக்கு ஏற்படுவது, சந்தோஷம் இல்லை. மனக்கவலை மட்டுமே இதை பற்றி அறிந்த ஒரே நபர் அவனின் தாய் அவளும் இப்போது எதையும் பற்றி யோசிக்கும் மனநிலையில் இல்லை. சத்யனின் யோசனையை கலைக்கும் விதமாக அவனின் ரூம் கதவு தட்டப்பட்டது. அவனும் தன் யோசனை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வந்து கதவை திறந்தான். அங்கு நின்றது அவனின் தோழன், நாளையும் அவன் தான் மாப்பிள்ளையின் தோழன்.

சத்யனின் நண்பன் மணப்பெண்ணுக்கு உறவு முறையில் அண்ணன் முறையாகும். தோழர்கள் கல்யாண விஷயம் பேசுவதற்கு முன்பே "மாப்பிள்ளை, மச்சான்" என்று அழைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் அப்படியொரு நெருங்கிய நட்பு. இந்த நண்பனிடம் கூட சத்யன் தன் சிறுவயது காதல் பற்றியும் அந்த காதலி தற்போது தன் மனதில் காதலினால் போட்ட மேடையில் ராணியாக இருப்பதையும் பகிர்ந்தது கிடையாது. ஒருவேளை இவனுக்கு தெரிந்து இருந்தாலாவது இந்த கல்யாணத்தை தடுத்து இருப்பான். சத்யனும் தன்னவளை நேரில் சந்தித்த பிறகு தான் தன் காதலை அவளுக்கும், தன் மொத்த குடும்பத்துக்கு தெரிவிக்க நினைத்து, அதை தன்னுள்ளே புதைத்து இருந்தான். ஆனால் இப்போது காலத்தின் கட்டாயத்தால் மொத்தமாக அவனின் காதலையே யாருக்கும் தெரியாமலே புதைக்க வேண்டியதாக போய் விட்டது.

(சத்யனின் நண்பன்) சிவா மாப்பிள்ளையின் முதுகில் ஓங்கி அடித்தவன். என்னடா நான் வந்து இவ்வளவு நேரமாச்சி நீ என்னடானா "என் தங்கச்சி கூட இப்பவே டூயட் பாட போய்டீயா," டா மாப்பிள்ளை என்றவன். சத்யனின் கையைப் பிடித்து, நீ ரொம்ப நல்லவன் டா என் தங்கச்சி நிலைமை தெரிஞ்சும் நீ அவளை கல்யாணய் பண்ணிக்க சம்மதிச்சதே, உன் பெருந்தன்மையை காட்டுது டா, என்றவனின் போன் அலறியதும். அதை எடுத்து பார்த்தவன். சத்யா என் சித்தப்பா தான் கூப்பிடுறார். நான் போய் என்னனு பார்த்துட்டு வாரேன். நீ தூங்குடா அப்பதான் நாளைக்கு கல்யாணத்தில் ப்ரைட்டா இருப்ப, "குட் நைட்" என்றவன் அங்கிருந்து சென்றதும். தன் அறையை பூட்டியவன் தன் கழுத்தில் இருந்த செயின் டாலரை மட்டுமே பார்த்து இருந்தான். அந்த செயின் இளாவின் அம்மா அவனுக்கு சிறு வயதில் போட்டா விட்டது. அதை பார்த்தவனுக்கும் தன் மொத்த சொந்தமும் தன் நினைவில் நிறைத்து இருந்தவன். அன்றை இரவு தூங்காமல் ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டு இருந்தான்.

சத்யன் இயற்கையிலே எளிதில் யாரிடமும் மனம் விட்டு பேச மாட்டான். ஆனால் தான் நினைத்ததை முடிக்கும் வரை ஓயாமல் உழைப்பான். அதில் வெற்றி பெற்ற பிறகே அவனின் உணவு, வீடு, உறவு எல்லா நினைவு அவனுக்கு வரும். ஹோட்டல் "பிரின்ஸ் பேலஸ்" 35 மாடி கட்டிடம் எப்போதும், பகல் போலவே காட்சியளிக்கும். அங்கு வந்து இருந்தவர்களின் தேவையை பொருத்து அவர்களின் அறையில் மாற்றங்கள் செய்தும் கொடுப்பார்கள். சத்யனின் திருமணமும் அந்த ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் தான் நாளை நடைபெற இருக்கிறது. அதே ஹோட்டலில் ஒரே நேரத்தில் பத்து திருமணம் கூட நடைபெறும் சகல வசதிகளும் அங்கு இருந்தது. அப்படிபட்ட ஹோட்டலின் நாலாப் பக்கமும் கார்ட்டன் ரெஸ்ட்டாரன்ட் போல செட் செய்து இருந்தான்.

கார்ட்டன் ரெஸ்டாரன்ட் :

சத்யனின் ஹோட்டலின் ஒரு முனையில் இருப்பது தான் இந்த ரெஸ்டாரன்ட். அங்கு இந்தியாவில் இருக்கும் எல்லா ஸ்டேட் ரேடியோ ஜாக்கிகளும் தங்களின் இணைந்து செயல்படும் ஊழியர்களுடன் ஒரு பார்ட்டி நடந்து கொண்டு இருந்தது. அந்த விழா ஒரு இரண்டு நாட்களாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அதில் ஒவ்வொரு ஸ்டேட் ஜாக்கிகளும் தங்களின் கலாச்சராப்படி தங்களின் பார்ட்டியை என்ஜாய் செய்து கொண்டு இருந்தார்கள். இவர்களின் விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுவதால் அங்கு அந்த தனியார் நிறுவனம் கார்டன் ரெஸ்டாரன்டை மொத்தமாக அட்வான்ஸ் புக் செய்து இருந்தனர். அவர்களின் சேப்டிக்காக அதிக அளவில் பெண்கள் இருப்பதாலும், அவர்களுக்கு தங்குவதற்கான அறையும் அங்கே புக் செய்து கொடுத்து இருந்தனர். அவர்களையும் சத்யனின் கல்யாணத்துக்கு கேசவன் அழைத்து இருந்தார். தன் சொந்தங்கள் இல்லாத தன் மகனின் திருமணத்தில், தன் ஹோட்டலில் தங்கி இருப்பவர்களை தன்னுடைய உறவுகளாக ஏற்று அழைத்து இருந்தார்.

மறுநாள் காலை:

ஹோட்டலின் ஒரு தளமே கல்யாண மண்டபமாக மாற்றி இருந்தனர். அங்கு தான் "சத்யன் வெட்ஸ் ரஞ்சனி" என்ற பேனர் வைத்து இருந்தனர். மணமேடையும் கிரன்டான அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாப்பிள்ளையின்அறையில் சத்யன் எந்த அலங்காரமும் செய்யாமல் நேற்று உட்கார்ந்து இருந்த ஜன்னலின் அருகிலே உட்கார்ந்து இருந்தான்.

கேசவனும் பிராபாவும் தங்களுக்கான அறையில் இருந்தனர். கேசவன் பிரபா என்னம்மா நம்ம பையனோட கல்யாணம் நீ வர மாட்டேன் சொன்னா எல்லாரும் என்ன நினைப்பாங்க. நம்ம பையன் தான் என்ன நினைப்பான். அவனுக்கு நம்மளை தவிர வேற யாரும் உறவு இல்லையேம்மா, அப்படியிருந்தும் நம்ம போகலைனா நம்ம பையன் தனிமரமா நிற்பான் என்றார், இந்த வார்த்தை பிரபாவுக்கு பலமுறை உள்ளுக்குள் எதிரொலித்தது. அதன் பிறகு எந்த பிரச்சனையும் இல்லாமல் கிளம்ப ஆரம்பித்தாள்.

சிவா..., காலையில் கல்யாணத்துக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்தவன். சத்யனின் அலங்காரம் எந்தளவில் இருக்கு என்று பார்க்க வந்தவன். சத்யனின் நிலமையை பார்த்து ஷாக்காகி நின்று நேரம் கடந்து செல்வதால், அவனிடம் சென்றவன். "டேய் மாப்பிள்ளை நீ என்னடா இப்படி இருக்கிற" நான் எப்பவும் உன்னை மாப்பிள்ளை கூப்பிடுறதுனால, உனக்கு எந்த வித்தியாசமும் தெரியாம போயிட்டா.," நீ இன்னைக்கு கல்யாண மாப்பிள்ளை டா என்று அவனின் கையில் பட்டுவேஷ்ட்டி சட்டையை கொடுத்து ரெடியாகி சொன்னவன். கையோடு அவனை பாத்ரூம்க்குள் தள்ளினான்.

"மணப்பெண்ணின் அறையில் ரஞ்சனி" எதையோ தொலைத்தது போல பீயூட்டிஷியன் செய்யும் அலங்காரத்திற்கு பொம்மை போல உட்கார்ந்து இருந்தாள், மணமக்கள் இருவரும் தங்களின் கல்யாணத்துக்கு கடமையே என்று கிளம்பி கொண்டு இருந்தனர்.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top