அந்தி சாயும் மாலை வேளையில் அழகிய வண்ணப் பறவைகள் கூட கீச்சிடும் சத்தத்தை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு அவனின் புல்லாங்குழலின் ஓசைக்கு மதி மயங்கி நின்றது....!!
சிப்பி இமைகளை மென்மையாக மூடிக்கொண்டு மெய் மறந்து தன் புல்லாங்குழலை வாசித்து கொண்டிருந்தான்...!!!
அவனின் வாசிப்புக்கு ஈடுகொடுத்து கத்திக்கொண்டிருந்தாள் அவனின் தாய் கண்மணி...
" ஊருல இல்லாத அழகியா அவ.. பொண்ணுன்னு இருந்தா சம்பந்தம் பேச தான் போவாங்க..வேணாம்னு சொல்ல வேண்டியது தானே.. அதுக்காக என் பையனை என்னென்ன சொல்லிட்டாங்க... ஊருல இல்லாத பொண்ணை பெத்து வைச்சுட்டாங்க.. ஏன் அவங்களுக்கு குறைன்னு எதுவும் இருக்காதா என்ன??.... என் பையனுக்கு வெளியே ஊனம் இருந்தா... அவங்களுக்கு
மனசில ஊனம் இருக்கும்...
நாக் கூசாமல் என்ன வார்த்தை சொல்லிட்டாங்க...என் பையனைக்கு வேற யாரும் பொண்ணா தர மாட்டாங்க... அதெல்லாம் ராணி மாதிரி வருவா பாருங்க.. அப்போ எல்லாம் வாய் மேல கை வைச்சு பாக்கல... என் பெயரையே மாத்தி வைச்சுக்கிறேன்..
இப்போ என் பையனை குறை சொன்ன வாய் எல்லாத்தையும் இழுத்து வைச்சு அறுத்துப்போடறன் அறுத்து..என கூறிக்கொண்டே தன் முந்தானையை இடுப்பில் எடுத்து சொருகி கொண்டு புலம்பியப்படியே வீட்டுக்குள் நுழைந்தாள் கண்மணி.. வெளியில் நிறுத்திய பேச்சை வீட்டிற்குள் தொடர்ந்தப்படியே மெல்லிய குரலில்
" என் பையனுக்கு அழகில்லையா , இல்ல அறிவில்லையா.!! இல்ல நல்ல வேலை தான் இல்லையா.. இவ இல்லையினா என் ராசாவுக்கு வேற பொண்ணா கிடைக்க மாட்டா.. கண்டிப்பா இளவரசியே என் வீட்டு இளவரசனக்கு கிடைப்பா என தன் சோகத்தையும், கோபத்தையும் கிச்சனில் உள்ள பாத்திரங்களிடம் காட்டி கொண்டிருந்தாள் கண்மணி...
கண்மணியின் சோகத்திற்கு காரணமானவனோ தன் தாயின் சோகத்தை கண்டு..கண்களில் ஜீவனில்லாமல் தன் இசையை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தான் தமிழிசையின் இளஞ்செழியன் ..!!
அவன் இசையில் சோகங்கள் கூட பனி துளியாய் மறைந்து தான் போகும்... சில நிமிடங்களில் அவனின் இசையில் தன் சோகத்தை முழுவதும் மறந்தாள் அவனின் தாய்..!! ஆனால் அதை விடாமல் வாசிப்பவன் உள்ளத்தில் தான் என்ன ஓடுகிறது என எவராலும் கணிக்கமுடியவில்லை.
************
தன் பட்டு தாவணியை கையில் பிடித்தப்படியே அந்த வீட்டின் முற்றத்தை மூன்று முறையேனும் சுத்தி இருப்பாள்..
"ஏய் எல்லாம் எங்க இருக்கீங்க... நான் மட்டும் எல்லாரையும் தொட்டேன் அப்பறம் எல்லாரும் அவுட் தான் பாத்துக்கோங்க.. எல்லாம் என் கை கிட்ட வாங்க நான் நாலு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தரேன்" என இவள் கூறவும்
"ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் வேணாம் அக்கா... நீயே வைச்சுக்கோ..."என குட்டி வாண்டின் குரல் மென்மையாக ஒலிக்க...
"டேய் வாண்டு குட்டி நீ மட்டும் என் கையில கிடைச்ச நடு மண்டையிலயே நங்குன்னு கொட்டி வைக்கறேன் பாரு"என சிறிதாக மிரட்டிக்கொண்டே ஒரு கையில் தவணையை பிடித்துக்கொண்டு மற்றோரு கையை காற்றில் மிதக்க விட்டப்படி மெல்ல மெல்ல தேடினாள். எவரையும் காணாமல் போக தன் பொறுமையை இழந்தவள் தன் கண் கட்டை அவிழ்த்துவிட்டப்படி அனைவரையும் எங்கே என பார்க்க அவள் வீட்டில் இருந்த அனைத்து வாண்டுகளும் ஒன்றாக கூடி நின்று அவளை பலித்து காட்ட அனைவரையும் ஒரே எட்டில் பிடித்துவிடும் வேகத்தில் தூரத்தினாள் இளஞ்செழியனின் சொந்தகாரி தமிழிசை...
*****************
இசைத்து முடித்தவனின் கண்கள் இரண்டும் கலங்கி இருக்க அதை தன் வலதுபக்க தோள்பட்டையில் தேய்த்துகொண்டே நிமிர்ந்து பார்க்க தன் தாய் அருகில் இருந்தாள்.. வரவழைக்கப்பட்ட ஒற்றை சிரிப்பை சிரித்தான்... அவன் சிரித்தாலும் அவனின் சோகத்தை அறியாமல் இருப்பாளா அவனின் தாய் .. "என்னை மனிச்சுடு செழியா.. நீ ஆயிரம் தடவை மாட்டேன்னு சொன்ன நான் தான் கேட்கலை... என்னை மன்னிச்சுடு.. என கூறும் போதே அவர் வாயில் கையை வைத்து கொண்டு சொல்ல வேண்டாம் என தலையை ஆட்டிட.. அவன் கையை எடுத்து விட்டவர் "இல்லைப்பா.. என்னை பேச விடு நான் பண்ணது தப்பு தான் உன்னை ஒவ்வொரு தடவையும் கஷ்டப்படுத்தறேன்.. என கண்களில் கண்ணீருடன் கூற தன் தாய் சொல்லிற்கு மறு மொழியை தன் இசையில் கூறினான்.. அதை கேட்டு மெல்லியதாக சிரித்தாள் அவனின் தாய் " ஹா...ஹா.. உனக்கும் அந்த பொண்ணை பிடிக்கலையா.... என்னது மாங்கா மாதிரி இருக்கா பொண்ணு... ஹஹ்ஹ அப்படியெல்லாம் சொல்லக்கூடாது செழியா ..." எனக்கூற சிரித்தவன் தன் தாயின் தோளை அணைத்தவாரு கீழே சென்றான்..
( தன் இசையால் தன் மனதிலுள்ளதை கூறும் வல்லமையுடையவன் நம் தமிழிசையின் இளஞ்செழியன்..)
இளஞ்செழியன் அழகிற்கு அழகு சேர்க்கும் பேரழகன்.. 28 வயது இளைஞன்..ஆறடி ஆண்மகன்.. அவன் கன்னக்குழி சிரிப்பில் விழாதவர் இல்லை ..தன் இசையால் அனைவரையும் மயக்கும் இசையின் அரசன்.. ஆம் வருங்காலத்தில் தமிழிசையின் அரசன் தான்.. சிறு வயதில் தந்தையின் விபத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் தந்தையை மட்டுமல்ல பேசும் திறனையும் இழந்தவன்...!!! ஆயிரம் தான் அழகன் என்றாலும் பேசும் திறனற்றவன் அல்லவா.. அதனால் தான் என்னவோ அவனிற்கும் பார்க்கும் சம்பந்தம் அனைத்தும் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது..
கண்மணியின் பிடிவாதத்தால்
இன்று தன் தாய் மாமன் வீட்டிற்கு பெண் கேட்டு செல்ல தன் மாமனை தவிர மற்ற அனைவரும் வாய்க்கு வந்தப்படி பேச அதில் முழுவதும் நிலைகுலைந்து போனது செழியன் தான்.. ஆம் வாய்க்கு வாய் ஊனம்.. ஊமை என்றல்லவா கூறினார்கள்... வார்த்தைக்கு வார்த்தை பேசி பிறரை கொல்லாமல் கொள்வதற்கு பேசாமல் மௌன மொழி பேசுவது எவ்வளவோ மேல் அல்லவா... இது நாள் வரை தன்னிடம் உள்ள குறையை பெரியதாக எடுத்து கொள்ளதவன்.. இன்று தன் சொந்த பந்தங்கள் அனைவரும் தன்னை ஒரு வார்த்தை சொல்லும் போது தன் தாய் அவமானம் பட்டதை நினைத்தவன் முதல்முறையாக தான் ஊமையாக இருப்பதை நினைத்து கவலைக்கொண்டான்...ஆனால் கண்மணி சும்மா வரவில்லை பேசிய அனைவரையும் வாயடைத்துவிட்டு தான் நகர்ந்தாள்... ஆனால் இவர்களின் பேச்சு இளஞ்செழியனுக்கு புதியதல்லவா.. இதுநாள் வரை தன்மகனை எவர் குறைக்கூறினாலும் அதை அவன் காதிற்குக்கொண்டு சென்றதில்லை தன்னோடு வைத்துக்கொள்வார்..!!! கணவனை இழந்த துக்கத்தில் இருந்தவருக்கு தன் மகன் பேசாமல் இருப்பதை பார்த்தவர் தந்தையின் இறப்பின் அதிர்ச்சியில் பேச மறுக்கிறான் என நினைத்துக்கொண்டு அதை பெரிதும் கவனிக்காமல் விட ஒரு காலத்தில் சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.. டாக்டர் அனைவரும் கை விட்ட நிலையில் கூட இன்றுவரை தன் மகனை பேச வைக்கும் முயற்சியில் இருக்கிறார் கண்மணி...
****
காலையில் பரபரப்புடன் அறையிலிருந்து வந்தவள் "ஏய் வாண்டு குட்டி எங்க சில்வண்டை காணோம் சீக்கரம் கூட்டிட்டு வா.. அவளை ஸ்கூல்க்கு கூட்டிட்டு போகணும்" என தமிழிசை கூறவும் அதற்கு வாண்டு குட்டியோ அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்..
"ஏய் என்ன டா அப்படி பாக்கற" என தமிழ் கேட்க..
"இல்லைக்கா.. நீ இன்னைக்கு என்னமோ ஒரு மாதிரி நல்ல இருக்க..!!" என வாண்டு கூறவும்
"கொஞ்சம் தூரமா போறேன் சோ அதான் கொஞ்சமா மேக்கப் போட்டேன்" என கூற
"என்ன...?? இந்த இத்துப்போன பவுடரை போட்டா.!! அது உனக்கு மேக்கப்பா?? நீயெல்லாம் வெஸ்ட்டு கா.?? இவ்வளவு பெரிய போன் வைச்சு இருக்கல்ல டிக்டோக் போயி பாரு சப்பை மூஞ்சிக்கூட மேக்கப் போட்டுட்டு செமயா இருக்காங்க..!! நீயெல்லாம் அவங்க கிட்ட டியூசன் போகணும் என சிரித்துக்கொண்டே கேளி செய்தவனை முறைத்தவள் "என்ன டா கிண்டலா இரு டி போயிட்டு வந்து பாத்துக்கிறேன்" என கூறிவிட்டு சில்வண்டை தேடி சென்றாள்...
தமிழிசை ... நவீன உலகில் வாழும் கிராமத்து பெண்... 24 வயது சிட்டுக்குருவி.. ஐந்தடிக்கு சற்றே உயரம் குறைவு தான்...அதிகம் பேசுபவள் மட்டுமல்ல சிரிக்கவும் வைப்பாள்...!! சிறுவயதில் இருந்தே ஆசிரமத்தில் வளர்ந்தவள்..!! ஆசிரமத்தின் விதிமுறைப்படி தன் படிப்பை முடித்ததும் வெளியில் வந்தால்..!! தன் முதுநிலை படிப்பை முடிக்கும் முன்னறே பேங்க் (bank) எக்ஸாம் எழுதி அதில் தேர்ச்சியடைந்து கிராமத்திலுள்ள பேங்கில் (bank) வேலைக்கும் சேர்ந்தாள்.. அதற்கு பின் தனது இரண்டு பெரிய ஆசைகளில் ஒன்று பெரிய வீட்டை வாங்குவது (வாங்கிவிட்டாள்).. மற்றொன்று தன்னைப்போல் அனாதை குழந்தையை தத்திற்கு எடுத்து வளர்ப்பது...( சட்டப்படி 25 வயதுடைய single parent தத்திற்கு குழந்தை வளர்க்கலாம்.. ஆனால் ஒரு சில ஆசிரமத்தில் வளர்க்கும் தகுதியுடைய பெற்றோருக்கு மட்டுமே தத்திற்கு எடுக்கும் வாய்ப்பு உண்டு).. தான் வளர்ந்த ஆசிரமத்தில் தத்திற்கு எடுக்க நினைத்து கேட்க அவர்களோ அவளுக்கு திருமணம் முடிந்த பிறகு அனுமதி வழங்க குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை நாள் என்றால் ஆசிரமத்திலுள்ள அனைத்து குழந்தைகளையும் அவள் வீட்டிற்கு அழைத்து வந்து விடுவாள்.. தான் தத்திற்கு எடுத்த இரு குழந்தைகள் மட்டும் வாரம் நான்கு நாட்களாவது அவளுடன் இருந்து விடுவார்கள்..அவர்களின் வயது மற்றவர்களை விட குறைவு என்பதால் ஆசிரமத்திலும் அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை..)) அவள் ஆசைப்படியே இரண்டு குழந்தைகளை தத்திற்கு எடுத்தவள் பெரியவனுக்கு மதிவாணன் எனவும் அடுத்தவளுக்கு வான்மதி எனவும் பெயர் வைத்தால்.. (வான்மதி) சில்வண்டிற்கு வயது 2... (மதிவாணன்) வாண்டு குட்டிக்கு வயது 4 ..!!.
இரண்டு வயதாகியும் இன்றுவரை பேசாமல் இருக்கும் வான்மதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவளிற்கு பேசும் திறன் இல்லை .. என கூறவும் அதற்கு வருந்தி அப்படியே முடங்கி கொள்ள நினைக்காமல் அடுத்து என்ன செய்வது என்ன யோசித்தாள்..அதன் பொருட்டு தான் இன்று அவளை ஸ்கூலில் சேர்த்தி விடுவது..!!!மதிவாணன் ஆசிரமத்திலுள்ள பள்ளியிலேயே படிக்க வான்மதியை மட்டும் திருச்சியில் உள்ள *** ஸ்கூலில் சேர்க்க சென்றாள்.... (ஊனமுற்றோர்களின் தனி திறமையை வெளிக்கொண்டு வர
அரசின் உதவியுடன் நிறுவப்பட்ட தனியார் பள்ளி...)
**********
"சீக்கரம் வா ரேவதி டைம் ஆயிருச்சு" என திரும்பி தன் தோழியிடம் கூறிக்கொண்டே ஒரு கையில் குழந்தையை பிடித்துக்கொண்டே அழைத்து சென்றவள் ஒரு பாறை போன்ற பூவின் மீது மோதி நின்றாள்...
"ஏய் யாரு டா அது..!! இப்படி வந்து இடிச்சது.." என நினைத்தவள் தன் மூக்கை தேய்த்துக்கொண்டே அண்ணார்ந்து பார்த்தவள்
"எப்படி வளந்து இருக்குப்பாரு பனைமரத்துக்கு பொறந்த பனைங்கா.. "என நினைத்து கொண்டவள்
'யோ பார்த்து வரமாட்டாயா..?? அறிவு இருக்கா.. இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்க கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாம இருக்க..!! பொண்ணுன்னா இஇ ன்னு இழிச்சுட்டு வர வேண்டியது இல்லைன்னா..!! இப்படி வந்து மோத வேண்டியது ..!! என்னய்யா நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.. நீ என்னடானா கல்லு மாதிரி நிக்கற..!! ஏதாவது பேசு..!! என அவன் முகத்தை அண்ணார்ந்து பார்க்க அவனிடம் எந்த பதிலும் இல்லாமல் போக சற்றே மனமிரங்கியவள் "சரி மன்னிப்பு கேளு.. நான் உன்னை மன்னிக்க முயற்சி பண்ணறேன்..!! என அவனை மன்னிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தால் தமிழிசை...!! அவளிடம் எந்த பதிலும் கூறாமல் போனவனை முறைப்புடன் பார்த்தவள் "சரியான திமிரு பிடிச்சவன் போல.. மறுபடியும் கைல மாட்டு அப்பறம் இருக்கு உனக்கு .." என மனதில் நினைத்தப்படி நடந்து செல்ல பாதி தூரத்தில் போனவள் திரும்பி பார்க்க நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் அவளின் தோழி ரேவதி... "ஏய் உனக்கு வேற தனியா சொல்லனுமா வா டி" என அவளிடம் தன் கோபத்தை காட்டவும்....அவளை முறைத்த வண்ணமே வந்தவள்
"ஏன் டி உனக்கே ஓவரா தெரியலையா! அவரு ஒரு வழியில தான் வந்தாரு.. நீ தானே என்னை பார்த்துட்டுப்போயி இடிச்ச..!! பாவம் அவரு என்ன டி பன்னாரு..!! ஒருத்தன் அமைதியா இருந்த போதுமே நம்ம என்னவேன சொல்லி திட்டிட வேண்டியது..!! இப்போ அமைதியா இருந்துட்டு போறவன் நீ தனியா எங்காவது போகும் போது ஏதாவது பிரச்சினை பண்ணா என்ன டி பண்ணுவ... இப்படி போறவன் வரவன் எல்லாருகிட்டையும் வம்பு வளர்த்துக்கிட்டா..?? என்ன டி அர்த்தம் நீ வேற ஒத்தையா தங்கி இருக்க..!! கொஞ்சம் கூட அறிவு வேணாமா" என அவளின் மீதுள்ள அக்கரையில் கூற..
"பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலை டி.. அப்படியே வம்பு பண்ணா ஒரு கை பாத்தரலாம்.. திருச்சிக்காறப் பொண்ணுக்கு கையே கத்தி விரலே வீச்சு தெரிஞ்சுக்க...!" என கூறிவிட்டு நடந்தவளை பார்த்து தன் தலையிலடித்து கொண்டாள் தமிழிசையின் தோழி..

Author: Bhuvana
Article Title: விழி தீண்டும் மௌனமொழி 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.