நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 6

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிலா..., ஷாக்காகி நின்றது "சத்யனை" பார்த்து தான். அதுவரை தான் பேசிக்கொண்டு இருந்தது தன் சொந்த மாமா என்று தெரியாத நிலாவுக்கு மணமேடையை பார்க்கவும், எல்லாம் புரிய ஆரம்பித்தது. ஏனெனில் அங்கு மாப்பிள்ளையாக நின்ற சத்யன் தன் தாத்தாவின் சாயலை உரித்து வைத்து இருந்தான். அதனால் தான் நிலா ஷாக்காகி நின்றாள்.

அதோடு இவ்வளவு நாள் எனக்கு மட்டுமே என்று உரிமை கொண்டாடிய, என் அத்தான் இன்னும் சில நிமிடத்தில் வேறு ஒரு பெண்ணுக்கு சொந்தமா என்று மொத்த ஷாக்கையும் குத்தகைக்கு எடுத்தது போல நின்றிருந்தாள். உள் மனதில் மாமா வெளிநாட்டு அல்லவா போனார். அப்புறம் எப்படி டெல்லி என்று குழம்பமும் இருந்தது. இவளின் அதிர்ச்சியை கவனிக்காமல் கேசவன்..., "அம்மாடி நீ யாரு?? எந்த ஊரு?? என்று கேள்வி கேட்கவும்..,

நிலா தன்னைப் பற்றிய விவரங்களை கூற தொடங்கினாள். "நாஞ்சில் நிலா" ( இந்த பெயர் அவளின் பணிக்காக வைத்த புனைப்பெயர்..., அவளை பற்றிய மற்ற விவரங்களையும் பார்த்துருவோம், நிலா தன் இறுதி வருடம் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டு இருக்கிறாள், படிப்பில் அவள் ரொம்ப சுட்டி, அவளின் இறுதி வருடப்படிப்பு என்பதால், ப்ராஜெட் என்றே பாதி நாள் கல்லூரி செல்ல வேண்டாம் என்பதாலும், பொழுதுபோக்குகாக வேலை தேடவும், அவளின் இனிமையான குரலினால் "ஹலோ எப். எம்"வில் வேலை கிடைத்தது. வீட்டினர் எல்லாரும் பகல் நேர வேலைக்கு மட்டுமே பெர்மிஷன் கொடுத்து இருந்தனர். ரேடியாவில் வேலை பார்ப்பதில் அதிக விருப்பம் இருந்ததால், தாத்தாவை ஜஸ் வைத்து இந்த வேலைக்கு வீட்டிலுள்ள எல்லார் சம்மதமும் பெற்றாள். தன் வீட்டிலிருந்து..., ரேடியோ ஸ்டேஷன் ஜங்ஷனுக்கு சென்று வர அரைமணி நேரம் மட்டுமே என்பதால் இரவு ஏழு முதல் எட்டு மணி வரை நடைபெறும் நிகழ்ச்சிக்கு சேர்ந்தாள். அந்த நிகழ்ச்சி இவளின் குரலால் மக்களிடம் அதிக பிரபலமானது. அதிக ரசிகர்களும் குவிந்தனர். அந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றதால் தமிழ்நாட்டின் சிறந்த ரேடியோ ஜாக்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவளும் அவளுடன் பணிபுரியும் எழிலரசனும் டெல்லி வரை வந்திருக்கிறோம் என்றவள். தன் குடும்பத்தை பற்றி விளக்கமாக கூறாமல், அப்பா, அம்மா ஒரு தம்பி இவ்வளவு தான் என் வீட்டு உறுப்பினர்கள் என்று சொல்லி முடித்தாள்.

ஹாலின் என்டரன்ஸில் ஒரே சலசலப்பு... என்ன என்று எட்டி பார்த்த நிலாவுக்கு அங்கு நிற்பவர்களையும், அவர்களின் பிரச்சனை பற்றியும் தெரியாததால், அதை கூர்ந்து கவனிக்காமல் விட்டு விட்டாள். ஆனால் சத்தம் கேட்ட திசையை நோக்கி அசோக்குமார் வேகமாக செல்லவும் தான் கேசவனும் அங்கு பார்த்தார்...,

ஒரு ஆடவன் மாப்பிள்ளை போன்ற அலங்காரத்துடன் பட்டுவேட்டி பட்டுசட்டையுடன், அசோக்குமார் அடியாட்களுடன் வாய்த்தகராறு நடந்து கொண்டு இருந்தது. அதை பார்த்ததும் கேசவனுக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.., ஆனால் அசோக்குமாரின் முகத்தில் ஒரு பதற்றமும், கோவமும் சேர்ந்த கலவையான முகமாக காணப்படவும், அம்மாடி ஒரு நிமிடம் நீ என் மனைவி அருகில், அவளுக்கு துணையா உட்கார்ந்து இருப்பீயா..?? நான் போய் என்ன பிரச்சனைனு பார்த்துட்டு வாரேன் எனவும்..

நிலா..., "என்ன அங்கிள் இதுக்கு போய் இப்படி பெர்மிஷன் கேட்டுட்டு இருக்கீீங்க..., "இரு மா என்றால் இருந்துட்டு போகிறேன்" எதுக்கு கேட்கிறதுக்கே தயங்குறீங்க, நீங்க தாராளமா எவ்வளவு நேரம் கழித்துனாலும் வாங்க. "அத்தையை பார்த்துககிறது என் பொறுப்பு...",

கேசவன்..., என்னம்மா சொன்ன அத்தையா..??? "நிலா" ஸாரி அங்கிள் எங்க ஊரில் பேசுற மாதிரி பேச்சு பழக்கத்தில் சொல்லிட்டேன். ஆண்டியை நான் பார்த்துக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தாள். கேசவனும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து வாசல் நோக்கி சென்றார்.

"அசோக்குமார்..." டேய் அநாதை நாயே!!! பிச்சைகார, பரதேசி..., எதுக்குடா இப்ப இங்க வந்த..., உன்னை தான் நாங்க வேண்டாம்னு தலை முழுகிட்டோமே...!! அப்புறம் ஏன்டா இங்க வந்த மானங்கெட்டவனே..., என்று கோவத்தில் வார்த்தைகளை அள்ளி வீசவும்..., அதுவரைக்கும் அமைதியாக இருந்த அசோக்குமாரின் மனைவி என்னங்க பார்த்து பேசுங்க..., என்ன இருந்தாலும் அவர் நம்ம____ என்று சொல்லவும்..., அசோக்குமார் அவளை முறைத்து பார்க்கவும்.., அதில் பயந்து வாயை மூடிக் கொண்டாள். ஆனாலும் அவளின் கையிலிருந்து குழந்தை அந்த ஆணிடம் தாவியது. அதையும் தடுக்க முயற்சித்த அசோக் குமாரிடம்..., தன் கோவத்தை காட்டும் விதமாக அவர் தடுத்தும் குழந்தையை தன் வசம் வாங்கியவன். அதன் நெற்றியில் முத்தமிட்டதுடன்..., "குழந்தை ஐ லவ் யூ அப்பா என்றுதும்..". பதிலுக்கு அவனும்..., "மீ டூ பேபி" என்றான்.

இதைப் பார்த்த கல்யாண வீட்டினர் அனைவருக்கும்..., அப்போது தான் தெரிந்தது. அவர் தான் கல்யாண பெண்ணின் கணவர் என்று.., அதன் பிறகு அசோக்குமாரின் கோவம் எல்லையை கடந்து..., இப்ப உன் பிள்ளையை தூக்கிட்டு வெளியே போடா என்று வாசலில் வைத்தே அவரை வெளியே துரத்தவும்..., அவனுக்கு துணைக்கு வந்த காவலர்கள், அசோக்குமாரின் முன்பு வந்து அவரை தடுக்கவும்..., மீண்டும் எல்லாருக்கும் குழப்பம் "ஐய்யோ...", அதுக்குள்ள இது போலீஸ் கேஷாகிட்டா என்று கல்யாண நடக்கும் ஹால் மீண்டும் பரபரப்பானது...,

சத்யனும் அதுவரை பொறுமையாக பார்த்துக் கொண்டு இருந்தவன்..., தன் தந்தையும் கூட்டத்தினுள் மெளமாக நிற்பதை பார்த்தவனுக்கு, அங்கு என்ன பிரச்சனை என்பது தெளிவாக புரியவுமில்லை. ஏனெனில் மணமேடைக்கும், வாசலுக்கும் இடையில் ஆயிரம் பேர் அமருவதற்கு போதுமான இடம் இருந்தது. அந்த அளவுக்கு தூரத்தில் நடக்கும் பிரச்சனை அவனுக்கு கேட்க வாய்ப்பில்லை. அதோட மண்டபத்தில் இருந்தவர்களின் சலசலப்பு சத்தமும் அவனுக்கு வாசலில் நடக்கும் பிரச்சனையை கேட்க உதவவில்லை... என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்வதற்காகவே..., "சத்யனே.. வாசலை நோக்கி நடந்து வந்தான்".

சத்யன் வாசலுக்கு நடந்து வரும் போது..., அவனின் பார்வை ஹாலில் இருந்த அனைவரையும் ஒரு முறை சுற்றி வந்தது. அப்போது தான் அவனின் கண்ணில் பட்டாள் "நிலா...", அவளை பார்த்தவுடன் அவனுக்குள் தோன்றிய உள்ளுணர்வு மீண்டும் அவளை பார்க்க தூண்டவும்..., மீண்டும் தன் பார்வையால் அந்த இடத்தில் அலசி ஆராயும் முன்பு, அவனின் செக்யூரிட்டி கார்ட்ஸ் மற்றும் பிரபல தொழிலதிபர்கள் பலரும் அவனுக்கு அருகில் வந்து கைகுலுக்கி..., வாழ்த்து தெரிவிக்கவும், அவனின் கண்கள் ஏமாற்றத்துடன் வந்திருந்தவர்களிடமே பதிலளித்தது. மற்றவர்களுக்கு பதிலளித்து கொண்டே பிரச்சனை நடக்கும் பகுதியான வாசலுக்கு வந்திருந்தான். அங்கிருந்த சத்ததினால் அவன் தன் கண்ணில் தெரிந்த தேவதையை மறந்து இருந்தான்.

அசோக்குமார்..., சத்யனை அங்கு பார்க்கவும், மாப்பிள்ளை நீங்க ஏன் இங்க வந்தீங்க, நீங்க போய் மணமேடையில் உட்காருங்க..., யார் தடுத்தாலும் இந்த கல்யாணம் நடந்தே தீரும்..., என்னை மீறி எவன் இந்த கல்யாணத்தை தடுக்கிறானு, நான் பார்க்கிறேன் என்று கர்ஜிக்கவும். வாசலில் போலீஸ் படையே வந்திறங்கியது. அதை பார்த்த அசோக்குமார் டேய் என்னடா உன்னால முடியாம போனதாலா போலீஸ் படையையே வர வைச்சிருக்கீயா என்று நக்கலாக கேட்கவும்.

அந்த கூட்டத்தை விளக்கி கொண்டு உள்ளே வந்த கமிஷ்னர் என்ன "மிஸ்டர். அசோக்குமார்" உங்க வீட்டு கல்யாணத்துக்கு இவ்வளவு போலீஸ் வோர்ஸ் வர வைச்சிருக்கீங்க..., என்ன நடக்குது ஸார் இங்க என்றவர். அந்த பிரச்சனை நடத்தும் ஆணிடம் வந்த கமிஷ்னர்.., நம்ம டிப்பார்மென்டே உங்களுக்கு சப்போர்ட்டா நிற்கிறளவுக்கு. அப்படி என்ன தான் பிரச்சனை.., "(அசிஸ்டன் கமிஷ்னர்) ஏசி. ரஞ்சன்" என்று கேட்கவும்..., ரஞ்சனின் பார்வை மேடையில் இருந்த மணப்பெண்ணை ஒரு முறை தீண்டி வந்தது.

ரஞ்சனியும் அதுவரை அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளால் அவளுடைய அப்பாவின் பேச்சை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் கண்கள் கலங்கி அவனுக்கு மட்டுமே புரியும் விதத்தில் கண்களால் பதிலளித்தாள். அதனை பார்த்த பிறகே அவனும் துணிச்சலுடன் பேச தொடங்கினான்.

ரஞ்சன்..., "ஐம் ஸாரி ஸார்" இந்த ப்ராளம் நானே கேன்டில் பண்ணிரலாம் நினைச்சி தான் இங்க வந்தேன். ஆனால் எனக்கே தெரியாம என்னோட விசுவாசி, உங்களுக்கு தகவலை தெரிவிச்சி உங்க டைம்மை வீணாக்கிட்டாங்க நினைக்கிறேன் என்னும் போத தன்னுடைய டிரைவரை ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பியவன் தொடர்ந்து பேசினான். ஸார் இது "என் பொண்ணு ஐஸ்வர்யா" இவளோட அம்மாவுக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடு ஸார். அதை காரணம் காட்டி எங்கிட்ட இருந்து இரண்டு பேரையும் பிரிச்சி கூட்டி வந்துட்டார் என் மனைவியின் பணக்கார அப்பா. நானும் சரி கொஞ்சநாள் பிரிஞ்சி இருந்தா அவளும் என் அன்பை புரிஞ்சி என்னை தேடி வருவானு பார்த்தா, அவர் அவளுடைய வாழ்க்கையிலிருந்தே என்னை தூக்கி எரிய நினைச்சி அவளுக்கு விருப்பமில்லாமலே வேற கல்யாணம் செய்து வைக்க பார்க்கிறார். அதை தட்டிக் கேட்க வந்த என்னிடம் பிரச்சனை பண்ணுறார் என்று சொன்னதும்.

கமிஷ்னர்...., "என்ன சொல்லுறீங்க ரஞ்சன். உங்களுக்கு தெரியாமலே உங்க மனைவிக்கு வேற கல்யாணம் பண்ணுறாங்களா..." இது சட்டப்படி குற்றமே. அதுக்கு நீங்க இங்க வந்து ஏன் பிரச்சினை பண்ணுறீங்க என்று ரஞ்சனிடம் எதிர் கேள்வி கேட்கவும்..,

ரஞ்சன்..., "ஸார் இந்த அசோக்குமார் பொண்ணு தான் என்னுடைய மனைவி..." அவளும் நானும் ஐந்து வருஷமா லவ் பண்ணினோம். அப்புறம் ஒருநாள் அவளுடைய பிடிவாதத்தினால் தான் எங்க கல்யாணம் ரிஜிஸ்டர் ஆபிஸில் நடந்தது. அப்ப இவர் வெளிநாடு சென்று இருந்ததால்..., அவருக்கு எங்க காதல் பற்றி எதுவும் தெரியாது. எங்க கல்யாணம் முடிந்த கையோடு செளத் சைட் டிரான்ஸ்பர் வாங்கிட்டு அங்கே செட்டிலாயிட்டோம்..., அவருக்கு மகள் காணாமல் போயிட்டானு நினைச்சி கவலையிலே கொஞ்ச நாளில் ஸ்ட்ரோக் வந்துட்டு..., எங்களை தேடவும் இல்லை. அவருடைய டிரிட்மென்ட் முடிய வருஷம் கடந்துட்டு, எங்களுக்கு பாப்பாவும் பிறந்துட்டா. அதனால எங்களை இனி பிரிக்க மாட்டார்னு..., திரும்பவும் நார்த் சைடுக்கே வந்தோம். அதுக்குள்ள இவருக்கும் உடம்பு சரியாகிட்டு, அப்ப எங்களுக்குள்ள சின்ன கருத்து வேறுபாடு அதை சந்தர்ப்பமா பயன்படுத்தி என் மனைவியை தனியா சந்திச்சி பேசி என்னுடைய வேலையையும் அதில் கிடைக்கும் வருமானம் போதாது..., உயிருக்கு பாதுக்காப்பு இல்லை. நான் சொந்த பந்தமில்லாத அனாதை இவனுக்கு சப்போர்ட்டுக்கு யாரும் கிடையாது என்று பல விஷயங்களை சொல்லி, அவளை ப்ரைன் வாஷ் பண்ணி, எங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையை பெரிசு பண்ணி பிரிச்சி கூட்டிட்டு போயிட்டார். அப்பவும் என் பொண்ணு, அவளுக்கு ஒரு சேப்ட்டியா இருப்பா என்பதால தான் என் மனைவிக் கூடவே அனுப்பினேன். ஆனால் இப்ப என் குழந்தையால, என் பொண்டாட்டிக்கு ஏற்பட்ட பாதிப்பை காரணம் காட்டி, இந்த கல்யாணத்தை நடத்த முயற்சிக்கிறார். அதோட என் தன்மானத்தை சீண்டி பார்க்கிறார். இப்பவும் என் மனைவிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. அதை நீங்களே அவளிடம் கேட்டு பாருங்க ஸார் என்று தன் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறி முடித்தான். இந்த சத்யன் ஸாரையும் கேட்டு பாருங்க என்று சொல்லி முடித்தான்.

கமிஷ்னர் மட்டுமல்லாது சுற்றி இருந்த எல்லாருக்கும் இந்த கதையை கேட்டதும் தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்தது..., (ஏன் உங்களுக்கு கூட தலை சுத்தியிருக்குமே...)
கமிஷ்னர்..., ரஞ்சன் சொல்லுவதை மட்டும் கேட்டு எந்த முடிவுக்கு வர முடியாது. அதோடு அசோக்குமார் டெல்லியில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு இருக்கும் கோடிஸ்வர்களில் ஒருவராவார். இவர்கள் இரண்டு பேரிடமும் விசாரித்தால் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியாது. இதில் சம்மந்தப்பட்ட மணப்பெண்ணிடமே விசாரிக்கலாம் என்று கமிஷ்னர் ரஞ்சனியை பார்க்க செல்லவும்..., அவரின் முன்பு வந்து நின்றான் சத்யன்.

சத்யனை பார்த்ததும், கமிஷ்னர்..., "ஸாரி மிஸ்டர் சத்யன் உங்க கல்யாணத்துல இப்படியொரு குழப்பம் வரும் நான் எதிர்ப்பார்க்கலை..." அதற்கு சத்யன் "இட்ஸ் ஓகே ஸார்...", எந்த ப்ராளமா இருந்தாலும் கிளீயர் பண்ணிட்டா எனக்கும் திருப்தியா இருக்கும்..., "ஸோ யூ கேரியான் ஸார்" மனசுக்குள் கடவுளே உனக்கு ரொம்ப தேங்க்ஸ் என் பஞ்சுமுட்டாய்க்கு நான் துரோகம் பண்ணலை.., அந்த சந்தோஷமே எனக்கு போதும் என்ற நினைத்துக் கொண்டான்.

கேசவனுக்கு இங்கு நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் பார்த்ததும், ஐய்யோ கடவுளே என்னுடைய ஒரே பிள்ளை கல்யாணத்திலும் இவ்வளவு குழப்பமா..., இது எல்லாத்துக்கும் நான் தானே காரணம் என்று எண்ணியவரின் கண்ணில் நீர் கசியவும், அதை பார்த்த சத்யன் "அப்பா என்ன இது நீங்க இப்படி அழலாமா", எல்லாம் நன்மைக்கே என்று அவரை சமாதானம் செய்தவன். "வாங்க அப்பா அம்மாகிட்ட போகலாம்" என்று தன் தந்தையுடன், பிரபாவுக்கு அருகில் சென்றான்.

கமிஷ்னர்..., ரஞ்சனியிடம் வந்தவர், "ஹலோ மிஸஸ் ரஞ்சன்" என்றதும். அவளும் "ஹலோ ஸார்" என்று ஒரு தெளிவில்லாத மனதுடன் சொல்லவும். கமிஷ்னர் ரஞ்சனியின் ஒவ்வொரு முகபாவனைகளையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். அதை தொடர்ந்து உங்களுக்கு இந்த கல்யாணத்தில் முழு விருப்பமா..., இல்லைனா உங்க அப்பாவின் கட்டாயத்தால நடக்குதா.., என்று கேட்டார்.., ரஞ்சனியின் கண்கள் தானாகவே அசோக்குமாரை பார்த்தவள், மீண்டும் தன் கணவனை பார்த்தாள். அசோக்குமார் கண்களாலே அவளை மிரட்டினார். ஆனால் அவளின் கணவனின் கண்களில் காதலும் பாசமும் மட்டுமே இருந்தது. அதோடு அவரின் கையிலிருந்த குழந்தையின் முகம் அவளின் நெஞ்சில் ஒரு அழுத்ததை ஏற்படுத்தியது.

அப்போது மகளின் அருகில் வந்த தாய்..., "ஏய் ரஞ்சி இப்பவாவது உன் மனசாட்சி படி பேசுடீ...," இதை விட்டா உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது என்று அழுது புலம்பவும்..., ரஞ்சனி என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் முழித்தாள், அப்போது அவளின் குழந்தை "அம்மா..., அப்பா பாவம் மா.., நம்ம அப்பாகூடவே இருக்கலாமா மா..., என்று கெஞ்சுவது போல பேசவும்...," ரஞ்சனியின் யோசனை தன் குடும்பம் என்று திரும்பியது. அதன் பிறகு எதுவும் யோசிக்காமல், நான் என் ரஞ்சன் கூடவே செல்கிறேன் என்றது தான் தாமதம்...,

ரஞ்சன், "ஸார் இதுக்கு அப்புறம் வேற எந்த விசாரணையும் தேவையில்லைனு நினைக்கிறேன்". அப்புறம் இன்னொரு ஹெல்ப் என் மனைவிக்கும் எங்களுக்கும் இந்த மாதிரி ஒரு கல்யாணம் நடக்க வில்லைனு, ரொம்ப நாளா ஒரு ஏக்கம் இருந்துட்டே இருந்தது. இப்ப அதையும் நிறைவேற்றிக்கலாம் நினைக்கிறேன், "வித் யூவர் பெர்மிஷன்" என்று கேள்வியோடு நிறுத்தவும்...,

கமிஷ்னர்..., "உங்க ஆசை நியாயம் தான் ரஞ்சன்..., ஆனாலும் இதில் மிஸ்டர் சத்யன் எந்த தப்புமே செய்யாம அவமானபடுற மாதிரி ஆகிடுச்சி.." இதுக்கு முழுக்க முழுக்க உங்க பக்கம் தவறும் ஒரு காரணமாகும். ஏன்னா நீங்க இன்னைக்கு வரைக்கும் காத்திருக்காமல் இதுக்கு முன்னவே இந்த கல்யாணத்தை பற்றி சத்யனிடம் பேசியிருந்தால், அவருக்கு இந்த அவமானம் வந்திருக்காது..., இப்ப அவருடைய கல்யாணத்துக்காக பண்ணின ஏற்பாட்டில் நீங்க உங்க கல்யாணத்தை செய்து கொள்ள நினைப்பது..., அவரை மேலும் கஷ்டப்படுத்துவது போல மாறிவிடும். அதனால நீங்க இதை பற்றி அவரிடம் நேரடியாவே கேட்டுக் கொள்ளுங்கள் என்று ஒதுங்கி கொண்டார்.

ரஞ்சன்..., கமிஷ்னர் பேச்சை கேட்டவுடன்.., சத்யனிடமே நேரடியாக பேசிக் கொள்ளலாம் என்று அவனிடமே சென்று "ஸாரி ஸார்..., எனக்கு முதல்ல ஒரு சின்ன தயக்கம், உங்களை பிரதர்னு கூப்பிடவா..., அப்படினா தான் நார்மலா பேச முடியும். சத்யனுக்கு..., ரஞ்சனின் நேர்மையான பேச்சு ரொம்ப பிடித்து இருந்தது. அதனால் சத்யன், ரஞ்சனை சகோதரன் என்று அழைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து விட்டான். பிரதர், நீங்க கடைசி நிமிடத்திலாவது வந்தீங்களே, இல்லையினா எத்தனை பேர் வாழ்க்கை இந்த கல்யாணத்தால பாதிச்சிருக்கும். (அதோடு என்னுடைய சிறு வயதிலிருந்து எனக்காக காத்திருக்கும் பஞ்சுமுட்டாயின் நிலைமை என்னவாயிருக்கும் என்று மனசுக்குள் மட்டும் யோசித்துக் கொண்டான்.) ஒரு போலீஸ் ஆபிஷருக்கே இவ்வளவு தயக்கமா, தாராளமா இந்த மணமேடையை உங்க கல்யாணத்துக்கு பயன்படுத்திக்கோங்க, உங்க கல்யாணத்துக்கு, என்னுடைய பரிசாக இந்த திருமண செலவை நானே செய்கிறேன் என்று அவரை மணமேடையில் கொண்டு விட்டவன். அவரின் கழுத்தில் மாலையும் அணிவித்து விட்டான். ரஞ்சனின் பக்கத்தில் ரஞ்சனியை உட்கார சொல்லவும், அவளும் தன் முகத்தில் சந்தோஷத்தை நிரப்பிக் கொண்டு தன் மகளுடன் மண்மேடையில் உட்கார்ந்தாள்.

சத்யன்..., ஐயரிடம் நடக்கட்டும் என்று சொல்லவும், அசோக்குமார் கோவத்தோடு தன்னுடைய ஆட்களுடன் வெளியேறினார். ரஞ்சனியின் தாயாருக்கும் மனசு முழுக்க சந்தோஷமாக இருந்தது. சத்யனிடம் நன்றி கூறினாள். அப்போது ஐயர்..., அம்மா நீங்க இதுக்கு முன்னாடி கட்டுன தாலி கழுத்தில இருக்கா, என்று தயங்கி தயங்கி கேட்கவும்...,

ரஞ்சன்..., "ஐயரே எங்களுக்கு இதுக்கு முன்னாடி நடந்தது ரிஜிஸ்டர் மேரேஜ்...," அப்ப நாங்க இது பற்றி எல்லாம் யோசிக்கவில்லை..., அதனால இப்ப தான் எங்களுக்கு முதல்முறையா தாலி கட்டி நம்ம சம்பிரதாயம் படி கல்யாணம் நடக்கப் போகுது..., இன்னும் நேரம் கடத்தாம சீக்கிரம் மந்திரத்தை சொல்லுங்க என்றான்.

அப்போது ரஞ்சன் தன் டிரைவரை அழைத்து தன் செக் புக்கை எடுத்து வரச் சொன்னவன், அதில் ப்ளாங் செக் ஒன்றில் கையெழுத்து போட்டு சத்யனிடம் கொடுக்க சொன்னான். சத்யன் அதை வாங்க மறுக்கவும்., "ப்ரதர்...," இந்த கல்யாணத்துக்கு நான் செலவு பண்ணனும் எனக்கு சின்ன ஆசை..., "உங்களோட விருப்பத்துக்காக வேனும்னா..., நீங்க வாங்கின தாலியை உங்களின் சகோதரனுக்கு செய்வதாக நினைத்த ஏற்றுக் கொள்கிறேன் எனவும்.." சத்யனும் சம்மதம் தெரிவித்தான். அதன் பிறகு ஐயர் மந்திரத்தையும், ஒமங்குண்டத்தையும் சேர்த்து வளர்க்க ஆரம்பித்தார்.

சத்யன் மணமேடையிலிருந்து கீழே வரவும் அவனின் பெற்றோருடன் நின்ற நிலாவை ஆச்சரியமாகவும்..., சந்தோஷமாகவும் பார்த்தான்..., மணமேடையில் ரஞ்சன் ரஞ்சனியின் கழுத்தில் பொன்னாலான தாலி செயினை கட்டினான். எல்லாரும் அவர்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தார்கள்.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top