நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 7

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சத்யனும் அங்கிருந்த நிலாவை பார்த்தவனுக்கு என்னவோ "தன்னுடைய இளாவாக தோன்றியது..," அதற்கு காரணம் அவளின் முகத்தில் இருந்த மச்சம் அவனுக்கும் "இது தான் தன்னுடைய பஞ்சிமுட்டாயா" இருக்குமோ என்று தோன்றியது. சரி கல்யாணம் முடிந்து எல்லாரையும் அனுப்பி வைச்சிட்டு பார்க்கலாம். நம்ம அப்பா அம்மா கூடவே இருக்கிறாளே, அப்படினா அப்பாவுக்கும் , அம்மாவுக்கும் அவளை அடையாளம் தெரிஞ்சிட்டா..., "ச்..ச்ச..." இருக்காது. நமக்கே இன்னும் அவளை பற்றி தெரியாம அம்மாவும் அப்பாவும் எப்படி என்று குழப்பத்தோடு நின்றான்.

கமிஷ்னர்..., "மிஸ்டர் சத்யன்" எனக்கு இன்னொரு கம்ப்ளைன்ட்டும் வந்துருக்கு. அதையும் நான் என்ன ஏதுனு தெளிவா தெரிஞ்சிக்கிட்டா ஆக்ஷன் எடுக்க உதவியா இருக்கும். அதுக்கு உங்க கோ- ஆப்ரேட் வேனும், என்றவர். எதன் அடிப்படையில் இந்த கல்யாணம் நடக்க நீங்க சம்மதிச்சீங்க நான் தெரிஞ்சிக்கலாமா??

சத்யன்..., "கமிஷ்னர் ஸார் என்று பேச்சுவார்த்தை தொடங்கவும் தான் அசோக்குமாரால் வெளியே ஒரு வேலை விஷயமாக அனுப்பப்பட்ட சிவா உள்ளே வந்தான். அவனுக்கும் வாசலில் தான் யாரோ ஒருவர்..., கல்யாணத்தில் தீடிர்னு மாப்பிள்ளை மாற்றிட்டாங்க..., இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் நம்ம வந்தமா போனமானு இருக்குனும் என்று வேறு ஒருவரிடம் புலம்பியது..., சிவாவின் காதில் விழவும், பதறியவன். தன் நண்பனின் நிலை என்னவோ என்று அவனை தேடி வரவும், சத்யனும் ஏன் இந்த கல்யாணம் நடக்க இருந்தது என்று சொல்ல தொடங்கினான்.

என் அப்பா பெரிய பிஸினஸ்மேன் தான். இருந்தாலும் அவருடைய மனசுல ரொம்ப நாளா ஒரு பாரம் அழுத்திட்டே இருந்தது. அது எங்க அம்மாவின் உடல்நலம் கொஞ்சம் பாதிக்கபடவும், அவருக்கு அம்மாவுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லையேனு ஒரு வருத்தம் இருந்தது. இதை புரிஞ்சிகிட்டு தான் நான் என் படிப்பை முடிச்ச கொஞ்ச நாளிலே அப்பாவுடைய பிஸினஸை கையில் எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். அப்பெல்லாம் அப்பாவுக்கு ரொம்ப நேரம் ஃப்ரீயா கிடைக்கவும்..., அப்படி ஒரு நாள் அப்பா.., அம்மாவை கூட்டிட்டு வெளியே போனாங்க,

அப்பா, அம்மா இரண்டு பேரும் முதலில் போனது சிட்டியிலே இருக்கிற பெரிய மாலுக்கு, அங்க வர்றவுங்க எல்லாருமே வசதியானவுங்க மட்டும் தான்.., ஏன்னா அங்க இருக்கிற பொருட்கள் எல்லாமே ரொம்ப காஸ்ட்லி, அன்னைக்கு வீக்கென்ட்டு என்பதால் மாலில் பயங்கர கூட்டமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து அப்பாவுக்கு ஆடிட்டரிடம் இருந்து போன் வரவும்..., அம்மாவின் கையை விட்டுவிட்டார், அப்பாவின் கவனம் சிறிது தவறவும், அம்மா..., அப்பாவை விட்டுட்டு பக்கத்தில் நின்ற ஒரு குட்டிக் குழந்தையை தூக்குவதற்காக செல்லவும்..., அப்போது பக்கத்தில் பார்ச்சலை தூக்கி சென்ற ஒருவனை கவனிக்காமல் அவனை இடிச்சிட்டாங்க..., அவனின் பேலன்ஸ் தவறி கையிலிருந்த பார்ச்சலை கீழே போட்டு விட்டான். அந்த பார்ச்சல்காரனிடம் ஸாரி கூட சொல்லாம அம்மா குழந்தையை மட்டுமே பார்த்து போயிட்டு இருந்து இருக்காங்க..., அப்ப தீடிர்னு ஆ...ஆ...ஆ என்று அலறல் சத்தம் கேட்டு இருக்கு, அதை அப்பாவும் கவனிக்கலை...,

அதில் தான் பிரச்சனையே ஆரம்பித்தது. அந்த தவறி விழுந்த பார்ஷலில் முழுக்க கெமிக்கல்ஸ் இருந்து இருக்கு, அது பக்கத்தில் நின்ற பெண்ணின் முகத்தில் படவும் அவள் வலியில் கத்தியிருக்காங்க.., இது தெரியாத அம்மா கீழே விழுந்தவளை பார்க்கவும் இல்லை..., (அம்மா ஏன் குழந்தை பின்னாடி அப்படி போனாங்கனு இனி வரும் எபிகளில் அப்புறமா சொல்லுறேன்...) ஒரு சின்ன விளக்கம் மட்டும் அம்மாவுக்கு என் தங்கை எங்களை விட்டு போன கொஞ்சநாளில் மனநிலை பாதிக்கப்பட்டு, டீரிட்மென்ட் எடுத்தாங்க..., அப்புறம் கொஞ்சநாளில் அது சரியாப்போச்சு... இருந்தாலும் என் தங்கை வயசுல சின்ன குழந்தைகளை பார்த்தா அம்மா சுற்றி நடக்கிற விஷயத்தை எல்லாம் மறந்து குழந்தை மேல கவனமா இருப்பாங்க..., இந்த ஆக்ஸிடென்ட் நடக்கும் போது அப்படி தான். அம்மாவுடைய கவனம் முழுக்கு அந்த சின்ன குழந்தையிடமே இருந்து இருக்கு...,

இந்த சம்பவம் எதுவுமே தெரியாம அப்பாவும் போன் பேசிட்டு, டென்சனுடன் அம்மாவை காணாமல் எல்லா இடத்தில் தேடவும்..., அம்மா அப்பாவின் கண்ணுக்கு தெரியவே இல்லை..., அப்ப தான் அந்த மாலில் இருந்த பெரிய ஸ்கீரினில், மால் என்டரன்ஸில் கேட்டில் அம்மா நிற்கிறதைப் பார்த்து, அவசரமாக அங்கு சென்றவர், அம்மாவை தன் கையில் பிடித்து அவுங்களை உலுப்பி, தெளிவடைய செய்த பின்பு என்னம்மா இப்படி தனியா எங்கேயும் போகாதனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் என்று சிறிது கண்டிப்புடன், அம்மாவை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துட்டு வந்துட்டாங்க.

ஆனால் அந்த அடிப்பட்ட பெண் பற்றி எங்களுக்கு எதுவுமே விவரம் முதலில் தெரியாது, அப்பாவுடைய ப்ரென்ட் தான் மாலில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அந்த பொண்ணு ஹாஸ்பிட்டல் தூக்கிப் போனதை சொன்ன பிறகு தான் எங்களுக்கு தெரியும்.

அப்பா எனக்கு சொல்லவும்..., தான் அப்பாவை ஹாஸ்பிட்டல் வரச் சொல்லிட்டு நானும் நேரா ஹாஸ்பிட்டலுக்கு சென்றேன். அங்க அந்த பொண்ணோட ப்ரென்ட்ஸ் எல்லாரும் பயந்து போய் இருந்தாங்க. நான் யாருன்னு அவுங்களுக்கு தெரியாததால அவுங்க பக்கத்தில் நின்னு டாக்டர் வந்து சொல்லும் தகவலை கேட்டகிறதுக்கா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். சிறிது நேரத்தில் டீரிட்மென்ட் கொடுத்த டாக்டர் வெளியே வந்து அவுங்களுக்கு முகத்தில் கெமிக்கல் பட்டதால் முகத்தில் உள்ள தோல் ரொம்ப டேமேஜோகி விட்டது. அதே போல உடம்பிலும் கொஞ்சம் காயம் இருக்குது. அவுங்களுக்கு ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ணினா தான் முகத்தை சரி செய்ய முடியும், அப்புறம் கண்ணிலும் எதாவது பாதிப்ப இருந்தா..., வேற கண் பொருத்தினால் மட்டுமே பார்வை கிடைக்கும் என்று அவளின் நிலையை அவளுடன் வந்த தோழிகளிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது தான், அந்த ஹாஸ்பிட்டல் ரிஷப்சன் பரப்பரப்பாக இருந்தது. டாக்டர் என்னவென்று விசாரிக்கவும், அவர் அந்த ஏரியாவின் பெரிய தொழிலதிபர் என்பது, அவருடைய ஒரே மகள் இப்ப கெமிக்கல் ஆக்ஸிடென்ட் கேஷில் அட்மிட்டாகியிருப்பதும் தெரிய வந்தது. அவருக்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர். அவருடைய ஓரே செல்ல மகளின் நிலைமே தெரியவும், தன்னுடைய வெளிநாட்டு பயணத்தை பாதியில் கேன்சல் செய்து கொண்டு கடுங்கோவத்தோடு தன் மகளை காண வந்திருந்தார்.

டாக்டர் அவருடைய மகளின் நிலையை சொல்லவும், இவரும் கோவத்தோடு உள்ளே வரவும் சரியாக இருந்தது. வந்த வேகத்தில் டாக்டரின் சட்டையைப் பிடித்து கழுத்தை நெறித்தவர். என்னடாச்சி என் பொண்ணுக்கு என்ன நடந்தது, அவளுக்கு எப்படி அடிப்பட்டது.., என்று கோவத்தோடு கேட்டவரின் கோவம் அங்கிருந்த எல்லாரின் உடம்பையும் பயத்தால் ஆட்டியது.

இவர் இவ்வளவு கோவமாக கேட்டும் பதில் வராததால், அடுத்த கட்டமாக தன் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து டாக்டரின் நெற்றியில் வைத்து, நான் பத்து எண்ணுறதுக்குள்ள என்ன நடந்தது, எனக்கு சொல்லலைனா, நான் துப்பாக்கியை உன் நெற்றியில் அழுத்திட்டு போயிட்டே இருப்பேன். என்னை யாரும் எதுவும் கேட்க முடியாது..., என்று மிரட்டினார்.

இவருடைய மிரட்டலை பார்த்து ஹாஸ்பிட்டல் ரிஷப்ஷனில் இருந்த பெண் பயந்து போய் போலீஸ்க்கு இன்பாஃர்ம் செய்யவும், அவர்களும் உடனே கிளம்பி ஹாஸ்பிட்டல் நோக்கி வந்தனர்.

தொழிலதிபர் கோவத்தில் துப்பாக்கியை மீண்டுமொரு முறை கையிலெடுத்து லோடு செய்தவர், டாக்டர் நெற்றியில் வைக்கவும்...,
மிஸ்டர். அசோக்குமார் என்ன பண்ணுறீங்க என்ற கம்பீரமாக குரல் கேட்டது. தன் பெயரை இவ்வளவு தைரியமாக யார் அழைப்பது என்று திரும்பி பார்த்தவருக்கு பின்னால், டெல்லி போலீஸ் படையே நின்று இருந்தது. எல்லாருக்கும் தலைமையாக ஹாஸ்பிட்டல் அருகில் ரவுன்ட்ஸில் இருந்த அசிஸ்டென்ட் கமிஷ்னர் ரஞ்சன் வந்து இருந்தார். அவரை பார்த்ததும் இருவருக்கும் இதுவரை நடந்த மற்ற பிரச்சனைகள் எல்லாம் கண் முன் தோன்றி மறைந்தது.

ரஞ்சன் தன் கடமையை எண்ணி தொழிலதிபர் அசோக்குமார் கையிலிருந்த துப்பாக்கியை வாங்க முறய்சிக்கவும், அசோக் குமார் தன் பிஏ வை ஒரு முறைப்புடன் பார்த்து வைத்தார். அதில் அர்த்தம் புரிந்த "அசோக்குமார்" "பிஏ" ரஞ்சனிடம் வந்து ஸார்..., கன்னுக்கு லைசென்ஸ் இருக்கு ஸார் என்று தன் கையிலிருக்கும் பைலில் சில பேப்பரை எடுத்து அவரிடம் காட்டவும்..., அதை பார்த்தும்..., (அசிஸ்டென்ட் கமிஷ்னர் சுருக்கி ) ஏ.சி. ரஞ்சன் நீங்க காட்டுன பேப்பர்ஸ் அவருடைய பாதுக்காப்புக்காக மட்டும் யூஸ் பண்ணலாம் என்ற விதிமுறையுடன் தான் இருக்கு, ஆனால் நீங்க உயிரை காப்பாற்றுகிற டாக்டரையே உயிரை எடுத்துருவேன் மிரட்டுறதுக்கு இல்லை என்றவன். அவரின் கையில் இருந்த துப்பாக்கியை வாங்கி விட்டு, அங்குள்ள பிரச்சனையை வேறு இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்க சொல்லியவர், அங்கிருந்து கிளம்பி விட்டார். அப்ப எனக்கு இவர் தான் உள்ள இருந்த பொண்ணோட ஹஸ்பென்ட் தெரியாது. இவர் கிளம்பின போன பிறகு தான். நான் ரஞ்சனி அப்பாகிட்ட போய் பேசினேன். அவர் என் சட்டையை பிடிச்சி என் பொண்ணுக்கு மட்டும் எதாவது ஆச்சினா...., உன் குடும்பத்தையே அழிச்சிருவேன் மிரட்டினார். அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சி அவருடைய "பி ஏ" அவர்கிட்ட ஏதோ பேசின மாதிரி இருந்தது. நானும் நம்மகிட்ட நஷ்ட ஈடு பணம் எதுவும் கேட்பாங்க நினைச்சேன். ஆனால்... அவர் என் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் உன் அம்மா மேல கேஸ் போட மாட்டேன். என்னால சட்டப்படி தண்டிக்க முடியாவிட்டாலும், என்னோட பதவி பலத்தால உன் குடும்பத்தை அழிச்சிருவேன் என்று மிரட்டினார்.

இதையெல்லாம் கேட்டுட்டு இருந்த என் அப்பாவும், வேண்டாம் சத்யா.., என்னோட கவனக்குறைவால் ஏற்பட்ட பிரச்சனைக்காக நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டாம். நானும் அவரிடம் ஸார் எவ்வளவு பணம் வேனும்னாலும் தாரேன். உங்க பொண்ணோட மெடிக்கல் செலவு முழுக்க நானே ஏற்றுக் கொள்கிறேன். முடிஞ்சா வேற ஐ டிராஸ்ப்ளனேஷனுக்கு ஏற்பாடு பண்ணுறேன் என்று சொல்லி பார்த்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. அவரோட ஒரே முடிவு என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது மட்டுமே...,

எனக்கு அப்ப மிஸ்டர் ரஞ்சன் பற்றி விவரமும், அவருடைய மனைவியை தான் என்னை கல்யாணம் பண்ண சொல்லுறாங்கனு தெரியாது. கடைசியில வேற வழியே இல்லாம தான் அம்மாவின் நலனுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டியதா போச்சி, என்று இந்த அவசர கல்யாண ஏற்பாடு பற்றி சொல்லி முடித்தான்.

சத்யன்..., "இந்த கதையை சொல்லும் போது நிலா பிரபாவுடன் தான் நின்று இருந்தாள், அவள் ஒரு தூணின் மறைவில் நின்று இருந்ததால், சத்யனின் கண்ணுக்கு அவள் தெரியவில்லை. அவனும் அவளை தேடவும் இல்லை. இந்த கதையெல்லாம் கேட்டவுடன் தான் நிலாவுக்கு அவனின் அம்மா பாசம் புரிந்தது, அதோடு அவனின் மனசில் வேறு யாருமில்லை என்பதையும் தெரிந்துக் கொண்டாள்.

கமிஷ்னர்..., "ஸாரி மிஸ்டர் சத்யன்" உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை நடந்துருக்கும்னு எங்களுக்கு தெரியாது "அசோக்குமார்..., ரஞ்சனோட" குடும்ப பிண்ணணி இல்லாததாலும், அவருடைய நேர்மை, வசதி குறைவு எல்லாத்தையும் பார்த்து தான் அவரை வெறுத்து இருக்கிறதாவும், அதோட அந்த ஆக்ஸிடென்ட் மூலமா உங்க இரண்டு பேரையும் வாழ்க்கையில் சேர்த்து வைக்க முயற்சித்து தன் மகளுக்கு நிரந்தரமான ஒரு செழிப்பான, உயர்ந்த இடத்தில் திருமணம் பண்ண முயற்சித்துருக்கார் என்று விளக்கம் சொல்லி முடித்தார்.

சத்யனும்..., "இட்ஸ் ஓகே ஸார்..." நாங்க கிளம்புறோம் என்று தன் பெற்றோரை நோக்கி நடந்து சென்றான். இந்த முறை நிலா அங்கிருந்து நகராமல் அப்படியே நின்று இருந்தாள். இவனும் என்ன யோசித்தானோ தெரியவில்லை.
அவளை பார்த்து மெல்லிய சிரிப்பை சிந்தியவன், தன்னுடைய மீசையை ஒரு கையால் தடவிய படியே நடந்து வந்தான். அவனின் செயல்கள் நிலாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

நிலாவுக்கும் அவனை பார்த்ததும் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. இருவரும் தங்களின் அருகில் நிற்கும் பெரியவர்களை மறந்து ஒருவர் மீது ஒருவரின் பார்வை மிகவும் தீவிரமாக இருந்தது.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top