நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 8

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சத்யன்..., நிலாவை பார்த்து மெளனமாக சிரித்துக் கொண்டே வரவும், நிலாவும் இந்த அத்தான் நம்மளை கண்டுபிடிச்சிடாங்களா, அவரோட லுக்கே ஒரு மாதிரியா இருக்கே என்று மனதில் நினைத்தவள். அவனை பார்த்து இவளும் சிரித்து வைத்தாள்.

கல்யாணம் வேறு ஒருவருக்கு நடந்தாலும், வந்த விருந்தினர் அனைவரையும் கண்டிப்பாக சாப்பிட்டு செல்லுமாறு சத்யன் கூறியிருந்ததால். நிலாவுடன் வந்த எழில் "ஏய் நிலா" வா சாப்பிடலாம் என்று தூரத்தில் நின்று கையசைத்து அழைக்கவும், அவளும் அப்பாடி நம்ம தப்பிச்சிரலாம், என்று எண்ணியவள், கேசவனிடம் திரும்பி அங்கிள் நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டு அவசரமாக கிளம்பவும்.., சத்யன் அவளுக்கு பக்கத்தில் வந்து இருந்தான்.

நிலாவுக்கு பட்டாம்பூச்சி பறந்த மனதில், இப்போது உள்ளுக்குள் ஒரு விதமான குறுகுறுப்பை ஏற்படுத்தியது. ஐய்யோ இவரை விட்டு தள்ளி போக மனசு வரலையே.., ஆனாலும் இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தாலும் நானே எல்லா உண்மையை ஊளறிருவேன் என்று பதட்டமாகி நகர்ந்தவளை, ஒரு கரம் பிடித்து தடுக்கவும். நிலா உண்மையில் உறைந்தே போய் விட்டாள்.

பிரபா..., தான் நிலாவை தடுத்தாள். எங்கம்மா போற.., நீ எங்கூட இருந்த இந்த கொஞ்ச நேரமும், எனக்கு என்னோவோ இவ்வளவு நாள் நான் மிஸ் பண்ணின என் உறவுகள் கிடைச்ச மாதிரி இருந்தது. நான் பண்ணின வேலையால என் பையன் வாழ்க்கையே கெடுக்க பார்த்து இருக்கிறேன். நல்ல வேளை என் பையனோட மனசுக்கு அவனுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்று சொல்லும் போதே சத்யனின் கையையும் பிடித்து அருகில் இழுக்கவும்..., சத்யனின் இன்னொரு கை நிலாவின் வெற்றிடையில் தெரியாமல் உரசவும்..., நிலா ஷாக்காகி கண்களை இறுக முடிக் கொண்டாள். ஆனால் சத்யன் எர்த் ஷாக் ஏற்பட்டு தன்னை இழுப்பது போல உணர்ந்தவன். அவளை நிமிர்ந்து பார்க்கும் போது அவள் கண்களை மூடியிருப்பது மட்டும் தான் தெரிந்தது.

எழில்..., அழைத்தும் இன்னும் நிலா வராததால் அவன் கோவத்தோடு அவளுக்கு அருகில் வந்தவன். அவளின் தோளை தொட்டு உலுக்கவும், நிலா நிஜவுலகுக்கு வந்து.., முதலில் பார்த்தது சத்யனை தான். அவன் எதுவுமே நடக்காதது போல நின்று தன் அம்மாவிடம் பேசவும். அதை பார்த்த நிலா..., சரியான சாமியாரா இருப்பார் போல..., எல்லாம் எங்கிட்ட வர்ற வரைக்கும் அப்புறும் பார்த்துக்கலாம் என்று எண்ணியவள். எழிலின்..., நச்சரிப்பு தாங்காமல்...,

நிலா..., அங்கிருந்து செல்லுவதற்காக மீண்டும் பிரபாவை பார்த்து அத்..., "ஸாரி ஆன்ட்டி நான் கிளம்புறேன் என்று சொல்லவும் தான் சத்யன் அவளை பார்த்து முறைப்பதை தெரிந்துக் கொண்டாள். அவனின் பார்வை செல்லும் இடத்தை பார்த்தவள், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே, நான் யாருன்னு தெரியாமலே இவ்வளவு பொறாமையா..., அத்தான் உங்களுக்கு என்று நினைத்து கொண்டிருந்தாள்.

பிரபா..., நிலாவை கூப்பிட்டு நீ என்னை ஆன்ட்டினு கூப்பிட வேண்டாம். அத்தைனே கூப்பிடுமா..., அது தான் எனக்கும் சந்தோஷமா இருக்கு..., எனக்கும் ஊரில் உன்னை போல ஒரு மருமகள் இருக்கிறாள். அவளை தான் சத்யனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் என்று எனக்கு "நீண்ட நாள் ஆசை" எனவும்..., இவளுடைய ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிது அல்ல , என்பது பிரபாவுக்கு தெரியவில்லை.

நிலா..., சத்யனை பார்த்தாள். அவனின் முகத்தில் எந்த ரியாக்ஷனும் நிலாவுக்கு தெரியவில்லை. "இருடா" உன்னை கவனிச்சிக்கிறேன் என்று நினைத்தவள். சரி "அ...அத்..அத்தை.." என்று சொல்லும் போதே அவளுக்கு மனசுக்குள் அப்படியொரு சந்தோஷம், இவ்வளவு சீக்கிரம் உங்களை எல்லாம் பார்ப்பேனு, நினைச்சி கூடப் பார்க்கலை என்று குதுகளித்து கொண்டவள். இந்த விஷயத்தை ஊருக்கு போனவுடன் பாட்டிகிட்ட தான் முதலில் சொல்லனும். அவுங்களுக்கு இவ்வளவு நாள் மாமா குடும்பம் பற்றிய இருந்த ஏக்கத்தை தீர்த்து வைச்சிரலாம். மாமாவையும் தாத்தாவையும் சமாதானாம் பண்ணி சீக்கிரம், நம்ம குடும்பத்தை ஒன்னு சேர்க்கனும். அப்புறம் தான் அத்தானிடம் பேசனும் என்று உறுதி எடுத்துக் கொண்டாள். அந்த உறுதி அவளால் காப்பாற்ற முடியுமா என்பதை அடுத்து வரும் எபிகளில் பார்க்கலாம்...,

சத்யனுக்கு..., அவள் தன்னுடைய நிலா என்பதையும் அவளுடைய முகத்தில் இருந்த மச்சமும், அவளிடம் அவனுக்கு தோன்றிய ஈர்ப்பையும் வைத்தே உறுதி செய்து கொண்டான். ஆனாலும் அவளே சொல்லாத போது, நான் ஏன் சொல்லுனும் என்று அவனும் அமைதியாக இருந்தாலும் அவனின் கண்கள் அவளை ரசிப்பதை தவிர வேற எதையும் செய்ய மறுத்தது. சின்ன குழந்தையில் தன்னை பிடித்துக் கொண்டே திரிந்தவள். இப்போ இவ்வளவு அழகு தேவதையா..., ஒரு அவார்ட் பங்ஷனுக்கு வர்ற அளவுக்கு முன்னேறிட்டாளா..., எல்லாம் என் அத்தையோட வளர்ப்பு என்று தன் அத்தையை புகழ்ந்தவனின்..., கண்ணில் அப்ப தான் அந்த காட்சி பட்டது.

எழில்..., நிலாவின் கையை பிடித்து இருப்பதை பார்த்து கோவத்தில் தான் அவளை முறைத்தான். அதை பார்த்த சத்யன் முறைக்கவும் அவள் அதை கண்டு ்கொள்ளவே இல்லை. அதனால் அவனுடைய கோவம் அதிகரிக்கவும், அவளின் மீது இருந்த ரசனை மாறி எல்லா உணர்வுகளையும் மறைத்து கொண்டு நின்றான். அங்கு வந்த அவனின் "பிஏ ஏஞ்சல்" "ஸார் நமக்கு இப்ப ஒரு அர்ஜென்ட் மீட்டிங், போகனும்" என்றதும். அவன் இவளை அப்புறமா பார்த்துக்கலாம் என்று தன் தாயிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்லும் போதும், அவளை கோவத்தோடு ஒரு பார்வை பார்த்து கொண்டே சென்றான்.

நிலாவும்..., இவரை சமாளிக்கிறது பெரிய விஷயமில்லை என்று எண்ணியவள். எழிலை பிரபாவிடம் அறிமுகப்படுத்தினாள். "இவன் எனக்கு உடன்பிறவா சகோதரன் மாதிரி அத்தை" என்று அவனை பற்றிய சிறிய அறிமுகத்தை கொடுத்து முடிக்கவும், கேசவனும் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு, இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவரிடமும் நிலாவை பார்த்து தனக்கு தோன்றிய உணர்வுகளையும், அவளை அத்தை என்று அழைக்க வலியுருத்தியதையும், அப்படியே எழில் பற்றி தனக்கு தெரிவித்த எல்லா விஷயத்தே கேசவனிடம் கூறிவிட்டு அவரின் பதிலுக்காக அவருடைய முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

கேசவன்..., என்னம்மா நானும் உங்கிட்ட முதல்ல சொன்னது, இதே விஷயம் தானே , நிலாவை பார்த்தால் எங்க சொந்த பந்தம் போல உள்ளுணர்வு உணர்த்துகிறது என்றும்..., நம்ம சொந்தமே கண்ணுக்கு தெரிவது போலவும், அதனால நானே அவளை நம்ம இரண்டுபேரையும் "மாமா அத்தை" தான் கூப்பிட சொல்லனும் நினைச்சி இருந்தேன். ஆனால் நான் யோசித்ததை நீ செய்து முடிச்சிட்ட, என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

இந்த சந்தோஷத்தோடு எல்லாரும் சேர்ந்தே சாப்பிட சென்றனர். அங்கு சென்ற பிறகும் இருவரையும் ஒரு சேரில் உட்கார வைத்தவள். தன் அன்னை எப்போதும் சமையல் செய்யும் போது, இது என் அண்ணனுக்கு பிடிக்கும். இது என் மயினிக்கு பிடிக்கும், அப்படி சொல்லி செய்வதை நினைவு வைத்தவள். அதன்படியே இருந்த உணவு பொருட்களை தேடி தேடி அவர்களுக்கு பிடித்தது மட்டும் எடுத்துக் கொண்டு வந்தவள். அவர்களிடம் தட்டை நீண்டவும் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஆனால் இருவரும் வாய்விட்டு எதையும் கேட்டுக் கொள்ளவில்லை என்றாளும்.. இருவரின் மனதில் இவளே தங்களின் சொந்த மருமகளாக இருந்தாள் நல்லா இருக்கும் என்று தோன்றவும்..., ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அவளும் அவர்கள் இயல்பாக சிரிப்பதாகவே நினைத்துக் கொண்டாள்.

பிரபா..., தான் ஏன்மா நிலா உன் ஊர் பெயரை சொல்லவில்லை என்று அவளை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பதை உணர்ந்த நிலா..., எழிலிடம் கண்ணை காட்டவும்.., அவனும் இவளை காப்பாற்ற எண்ணி நிலா நம்மளை அப்பவே மேனேஜர் வரச் சொன்னார். சீக்கிரம் சாப்பிட்டு வா என்று பேச்சை மாற்றி, சொல்லியது போல அவளை சிறிது நேரத்தில் அங்கிருந்து அழைத்தும் சென்றான்.

"கேசவனும்..., பிரபாவும்...." நிலா சென்ற பிறகும் அவளை பற்றிய பேசினார்கள். அதன்பிறகு அவர்களும் நாளை நிலாவை நம்ம வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.

எழில்..., நிலாவை., அழைத்துச் செல்லும் போதே இங்கேயும் உனக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்காங்களா.., "சின்ன குயில் சித்ரா" உன்னை சுற்றி என்னதான் நடக்குது. அந்த இரண்டு பெரியவர்களும் உன்னை ரொம்ப அன்பா பார்த்துக்கிறாங்க, "யாரு நிலா அவுங்க." உனக்கு முன்னாடியே அவுங்களை தெரியுமா.." ரொம்ப நெருக்கமான உறவினர் மாதிரி நீயும் நடந்துக்கிட்ட எனக்கு இதையெல்லாம் அப்பவே உன்கிட்ட கேட்கனும் தோனுச்சி நீ அவுங்க கூட பேசிட்டு இருக்கவும் தான் நான் எதுவும் கேட்டுக்கவில்லை.

நிலா..., டேய் நீ என்னை விட இரண்டு வயசு சீனியர் தான் இருந்தாலும், இந்த ஒரு தடவை பொருத்துக்கோ என்று அவனின் தலையில் நங்கென்று கொட்டியவள்.., உங்கிட்ட எத்தனை தடவை "சித்ரா மேடம் பெயரை சொல்லி என்னை கிண்டல் பண்ணாதேனு சொல்லி இருக்கேன். உனக்கு மறந்து போச்சா...." அப்புறம் என்ன சொன்ன அப்பவே கேட்கனும் நினைச்சியா நல்லவேளை உன் ஓட்ட வாயை வைச்சி எதையும் உளறாம இருந்தீயே..., "உளறுவாயா" என்று அவனை கிண்டல் செய்தவள். அவனிடம் தன் மொத்த குடும்ப கதையையும் சொல்லி முடித்தாள். டேய் திரும்பவும் சொல்லுறேன் இதை யாரிடமும் உளறிறாதே., நீ எதாவது பண்ணி வைச்சேனு தெரிஞ்சது, அப்புறம் இருக்குடா உனக்கு என்று அவனை செல்லமாக மிரட்டினாள்.

சத்யன்.., அவனுடைய பி. ஏவுடன் மீட்டிங் முடித்து விட்டு, வெளியே வரவும்..., அவனுடைய தொழில் சம்ந்தபட்டவர்கள் எல்லாரும் மிஸ்டர். "எஸ். ஆர். பி" (சத்ய ரெங்கநாத பிரபு) சுருக்கம் தான் அது. நீங்க இந்தியா வந்த கொஞ்ச வருஷத்திலே இந்த ஃபீல்டுல ரொம்ப சீக்கிரம் நேர்மையான வழியில் சாதிச்சி காட்டி இருக்கீங்க..., அதுக்காக உங்களை பாராட்டி ஒரு கிரன்ட் பார்ட்டி ஏற்பாடு பண்ணலாம் இருக்கோம். அதோட அந்த பார்ட்டி நடக்க போறது, நம்ம செஸத் இந்தியாவில் தான்., அந்த ஏற்பாட்டை எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரமே உங்களுக்கு "இன்பர்மேஷன் தர்றோம் ஸார்" என்று பேசி அவனை அனுப்பி வைத்தனர். தன் பிஏ வையும் தன்னுடைய காரில் அழைத்து வந்தவன். டிரைவரிடம் முதலில் அவனை இறக்கி விட்டுட்டு அப்புறம் தன்னுடைய வீட்டுக்கு செல்ல சொன்னான்.

அதே போல பிஏ வை இறக்கி விட்டுட்டு,
தன் வீட்டை நோக்கி சென்றவனுக்கு ஒரு பெரிய ஹோட்டல் ரிஷப்ஷனில் இருந்து போன் வந்தது, ஸார் நீங்க சீக்கிரம் வாங்க, இங்க பெரிய பிரச்சனையே போய்கிட்டு இருக்கு, நீங்க வரலைனா, நாங்க போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிருவோம் என்று கட்டளை போல சொல்லவும். அவர்களுக்கு அவனின் மொபைல் நம்பர் வைச்சி யாரென்று தெரியாததால் அப்படி பேசி விட்டனர்.

அவனும் நம்மளை யாருனு தெரியாம இப்படி பேசுறாங்கனு ஈஸியாக எடுத்துக் கொண்டவன். போன் வந்தது தன்னுடைய பெர்ஷனல் நம்பர்..., இந்த நம்பர் மிகவும் நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால் யாருக்கு பிரச்சனையா இருக்கும் என்று யோசனையோடு டிரைவரிடம் அந்த ஹோட்டல் பெயரை சொல்லி அங்கு செல்ல சொன்னவன். வீட்டுக்கும் அழைத்து வருவதற்கு நேரமாகும் என்பதை கூறியிருந்தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN