நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 9

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சத்யனின் மொபைலுக்கு வந்த அழைப்பின் படி, அந்த ஹோட்டலுக்கு சென்றான். அங்கு ஒரு டேபிளை சுற்றியும் பல வெயிட்டர்ஸ், அப்புறம் அந்த ஹோட்டல் மேனேஜர் எல்லாரும் நின்று இருந்தனர். சத்யனுக்கும் குழப்பமாக இருந்தது. யாரா இருக்கும் என்ற யோசனையோடு அந்த டேபிளை நோக்கி நடந்து வந்தவன், டேபிளை நெருங்கியதும் கூட்டத்தை விலகி விட்டு உள்ளே பார்க்கவும்., அதிர்ச்சியாகி நின்றான்.

மேனேஜரும் அப்போது..., ரிஷப்ஷனில் இருக்கும் பெண்ணிடம், "என்னம்மா நீ போன் பண்ணும் போது, அந்த ஆள் வரேனு சொன்னானா..." எப்படி. இந்த குடிகாரன் வேற நம்ம கழுத்தை அறுக்கிறான். இன்னும் எவ்வளவு நேரமாகுமோ, இவன் ப்ரென்ட் அந்த லூசு வர்றதுக்கு என்று சொல்லவும். அந்த ரெஸ்டாரன்டே அதிரும் அளவுக்கு மேனேஜரின் கன்னத்தில் இடியை தாக்கியது, போல தன் கரத்தால் அவனை அறைந்து இருந்தான். அவனும் ஷாக்காகி "எஸ். ஆர். பி ஸார்" என்று தன்னுள் சொல்லிக் கொண்டான். ஒரு கையால் தன் கன்னத்தை தாங்கி கொண்டு நின்றான். அதன் பிறகே ஹோட்டலில் உள்ள அத்தனை பேருக்கும் அவனை பற்றி தெரியவும். எம். டி க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே அவரும் அங்கு வந்தார். சத்யனை பார்த்து நடுங்கி கொண்டே வந்தவன்.

எம். டி..., "ஸார் நீங்க எங்க இங்க.??, எதுவும் "வேனுமா ஸார்" என்றவனை கண்டுக்காமல் சத்யனை கூட்டத்தின் நடுவில் இருந்தவனை நிமிர்த்தி விட்டு அவனின் முகத்தை பார்த்தவன். "டேய் சிவா..., என்னடா..., நீ ஏன் இப்படியெல்லாம் பண்ணுற" என்று அவனை எழுப்ப முயற்சிக்கவும்..., ஹோட்டலின் எம் .டி சத்யனுக்கு அருகில் வந்து ஸார் ஒரு ஐந்து நிமிஷம்., நான் சர்வென்ட் வைச்சி அவரை கொஞ்சம் தெளிய வைக்கிறேன் என்றதும். சத்யனும் அங்கிருந்த ரிசப்ஷன் சோபாவில் உட்கார்ந்து சிவாவின் வருகைக்காக காத்திருந்தான்.

சிவாவை..., மேனேஜர் சொன்னது போல பத்து நிமிடத்தில் சத்யனிடம் அழைத்து வந்தனர். அவனுக்கு ஒரு இ்ருக்கையை காட்டி உட்காருங்க., "ஸார் என்று ஒரு ஸாரில் ஒரு அழுத்தம் கொடுக்கவும்". "சிவா ஸாரி மச்சான்." உண்மையாவே நீ மச்சானாக போறேனு எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா, ஆனால் அது எல்லாமே என் சித்தப்பா மிரட்டி தான் நடந்தது தெரியும் போது, எனக்கு ரொம்ப கஷ்டமாகிட்டு டா..., எங்க நானும் இதுக்கு உடந்தையா இருப்பேனு..., என்னை பற்றி தப்பா நினைச்சிருவீயோனு..., ஒரு குற்ற உணர்ச்சியோடு தான், நீ கல்யாண மண்டபத்திலிருந்து கிளம்பவும், நானும் நேரா இங்க வந்துட்டேன்..., எனக்கு வேற வழி தெரியலை டா..., நீ என்னை நம்புடா என்று அவனின் கையைப் பிடித்து கெஞ்சினான்.

சத்யனுக்கே அந்த செயல் வேதனையாக இருந்தது. இருந்தாலும் என்ன செய்ய நான் அந்த சமயத்தில் இவனிடம் பேசியிருக்க வேண்டும். அதைவிட்டுட்டு என் வேலையை பார்க்க கிளம்பி போனது எவ்வளவு பெரிய தப்பு என்று நினைத்தவன். ஹோட்டலில் அவன் குடித்ததற்கு பில் செட்டில் செய்து விட்டு அவனை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன். ஆமாம் எனக்கு ஒரு டவுட் எப்படிடா இவ்வளவு டீரிங் பண்ணியும் நீ ரொம்ப தெளிவா இருக்க..., ஒரு தள்ளாட்டம் கூட இல்லையே, அப்புறம் எப்பவும் உங்கூட ஒட்டிட்டே இருப்பானே அந்த வேலுவை எங்கடா..???

சிவா..., மச்சான் வேலு ரொம்ப நல்லவன் டா அவனை வீட்டுக்கு அனுப்பிட்டு, நான் மட்டும் தான் இங்கே வந்தேன். அப்பவும் அவன் என்னுடைய முகத்தை பார்த்தே நான் கஷ்டத்தில் இருக்கேனு, என்னை தனியா விட ரொம்ப யோசிச்சான். நான் தான் அவனை சமாதானம் பண்ணி அனுப்பி வைச்சேன். அவனும் ரொம்ப நல்லவன்டா, உன்னோட புது பிராஜெட்ல அவனை யூஸ் பண்ணிக்கோடா..., அப்புறம் நான் அடிச்ச சரக்கு எல்லாமே ஃபாரீன் சரக்குடா.., அதான் எவ்வளவு அடிச்சும் போதை ஏறவும் இல்லை. என் துக்கம் குறைவும் இல்லை. "உண்மையில் ரஞ்சனி ரொம்ப நல்ல பொண்ணு..."

சத்யனும்..., சரி ரொம்ப புகழாதே எல்லாம் நல்ல படியா முடிஞ்சது. ரஞ்சனியை அவுங்க ஹஸ்பென்ட்டு கூட சேர்த்து வைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அதை விட இன்னைக்கு இன்னொரு சந்தோஷமும் கூடவே கிடைச்சிருக்கு, அதைப் பற்றி தெரிஞ்சிக்க நாளைக்கு காலையிலே நம்ம போகனும் டா.., அப்புறம் எப்படி எங்கிட்ட இருந்த ஒளிவானு நானு பார்க்கிறேன்.

சிவா..., "டேய் மச்சான் என்னடா என்னவெல்லாமோ உளறுற...," கல்யாணம் நின்ற சோகத்தில இப்படி புலம்ப ஆரம்பிச்சிட்டீயா..., தண்ணி அடிச்ச நானே தெளிவா இருக்கும் போது..., நீ புலம்புறதைப் பார்த்தா கஷ்டமா இருக்குடா.., சத்யன்..." இருக்கும்டா இருக்கும்.., "டேய் தண்ணி அடிச்சியே., எதாவது சாப்பிட்டியா.."

சிவா..., மச்சான் நீ என் மேல எவ்வளவு பாசம் வைச்சிருக்க., நான் தண்ணியடிச்சேன் தெரிஞ்சும், அக்கறையா சாப்பிட்டியானு கேட்கிறே, நீ எங்கையோ போயிட்ட டா..., முதல்ல நல்ல ரெஸ்டாரன்ட் பார்த்து நிறுத்துடா.." என்றான்.

சத்யன்..., "டேய் லுக் சிவா...", இது தான் "பஸ்ட் அன்ட் லாஸ்ட்", இனி நீ இப்படி பிகேவ் பண்ணின நடக்கிறதே வேற..., "பீக்கேர்புல் என்று உரிமையோடு மிரட்டியவன். உன்னை ஐய்யோ பாவமேனு பார்த்தா, நீ ரொம்ப ஓவரா போற, இனி என்னைக்காவது தண்ணி அடி அப்புறம் இருக்குடா உனக்கு என்றவன். அக்கறையோடு ஒரு நைட் லேம் ரெஸ்டாரன்டில் காரை நிறுத்த சொன்னவன். டிரைவரையும் சாப்பாட்டு வரச் சொன்னவன். அண்ணா நீங்க ஆட்டோ பிடிச்சி போயிட்டுங்க..., நாளைக்கு காலையில வீட்டுக்கு வாங்க. நானே இனி மேனேஜ் பண்ணிக்கிறேன் என்றவன். அவரை சாப்பிட சொல்லி விட்டு, ப்ரென்ட்ஸ் இருவரும் வேறு ஒரு டேபிளில் சாப்பிட அமர்ந்தனர். சத்யன் இரவு நேரங்களில் லைட்டான சாப்பாடு சாப்பிடும் பழக்கம் இருந்ததால், ப்ளேன் சப்பாத்தி.., மற்றும் வெஜ் குருமாவும். வெஜ் சாலட் ஆர்டர் செய்து இருந்தான்.

சிவாவோ.., அடித்தது ஃபாரீன் சரக்கு என்றாலும், சாப்பாட்டில் ஒரு குறையும் வைக்காமல், வெளுத்துக் கட்டினான். சத்யன்... சிவாவின் சாப்பாட்டை பார்த்து டேய் என்னடா இப்படி சாப்பாடுற, அதுவும் இந்த மிட்நைட் டைம்ல, என்று அறிவுரை சொன்னாலும், வேண்டியதை ஆர்டர் செய்து கொடுத்து சாப்பிடடான். இருவரும் ஆர்டர் செய்த சாப்பாட்டு வரவும், அதை சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து, சத்யனின் நேராக ஹெஸ்ட் ஹவுஸூக்கு சென்றனர். அன்றைய இரவை ஹெஸ்ட்ஹவுஸில் கழித்தனர். இரவு முழுக்க சிவா சத்யனின் நின்று போன திருமணத்தை பற்றியே பேசினான்..., அதில் வெறுப்பான் சத்யன் டேய் நீ இங்கே தூங்கு நான் மாடிக்கு போறேன் என்று மாடியிலிருக்கும் தன்னறைக்கு சென்றான்.

சத்யனுக்கு மாடியில் இருக்கும் அறையில் இருந்தாள். தன்னுடைய சொந்த கிராமத்தில் இருப்பது போல ஒரு நிம்மதியாக உணர்வு தோன்றும். எனவே எவ்வளவு கழைப்பாக வந்தாலும்..., இங்கு வந்தவுடன் அன்னை மடியில் குழந்தை போல எல்லா கவலையையும் மறந்து நிம்மதியாக தூங்குவான். ஆனால் இன்று அவனுக்கு தூக்கம் எட்டாக்கனியாக மாறிப் போனது, அவனும் இளையராஜாவின் பாடல்களை கேட்டும், ஆனால் தூங்கலாம் என முயற்சித்தும் எல்லாம் தோல்வியிலே முடிந்தது. என்னடா இந்த சத்யாவுக்கு வந்த சோதனை என்று ஆழமாக யோசிக்கும் போது தான், அவனின் தூக்கத்தை கெடுப்பது எது என்று தெரிந்துக் கொண்டான். அட இவளோட நினைப்பு தான் நம்மளை ரொம்ப தொந்தரவு செய்துதா., என்று நினைத்தவன்.

ஹெஸ்ட்ஹவுஸில் இருந்து தன்னுடைய "பிரின்ஸ் பேலஸ்" ஹோட்டலை நோக்கி கிளம்பினான். செல்லும் முன்பு ஹெஸ்ட்ஹவுஸ்..., வாட்ச்மேனிடம் உள்ளே சிவா இருப்பதையும், காலையில் அவனுக்கு சத்யன் இரவில் சென்றதை சொல்லாமல், முக்கியமான வேலை விஷயமாக வெகு காலையில் சென்றதாக மட்டுமே தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவனுடைய கார் நின்ற இடம் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் தான் அங்கு அந்த நேரத்தில் ஒரு கார் வெயிட்டிங்கில் நின்று கொண்டு இருந்தது. அதை பார்த்தும் சத்யன் இந்த நேரத்தில் இங்கு வந்து கார் வெயிட் செய்ய என்ன அவசரம் என்றவன், தன்னுடைய காரிலிருந்து இறங்கி அந்த "வோலா" கார் டிரைவரிடம் சென்று யாருக்காக..., எங்கு செல்வதற்கு என்று விசாரித்துக் கொண்டு இருக்கும் போதே..., அந்த வோலா காரை நோக்கி இரண்டு நபர்கள் நடந்து வருவதை சத்யன் கவனித்தான். முதலில் சத்யன் அவர்களை பார்க்கவும்..., எதுவும் தெரியாதது போல வேறு ஒரு காரின் பின்பக்கமாக சென்று மறைந்துக் கொண்டவன்.

காரை புக் செய்தவர்களும் காருக்கு அருகில் வந்து ஒருவன் விசாரிக்கவும், கூடவே வந்த பெண்ணின் கைகளை இறுக்கமாக பிடித்து இருப்பதும், அவளை ஏதோ ஒரு பாஷையில் மிரட்டுவதும் சத்யனுக்கு தெரிந்தது. அந்த வோலா காரின் டிரைவரும், வந்த நபர்களை காரில் ஏற்றிக் கொண்டு, அந்த கார் ஹோட்டலில் இருந்து வேகமாக வெளியே பறந்து சென்றது. சத்யனும் இந்த பஞ்சு பற்றி விசாரிக்கிறதுக்காக வந்தா, நமக்கே தெரியாம இங்க என்னவெல்லாமோ நடக்கிறதே.., என்ற யோசித்தவன். அந்த காரை பின்தொடர்ந்து சென்றான்.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top