நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே...05

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் 05

செழியனுக்கும் இதழியனிக்கும் தேர்வுகள் முடிவு பெற வீட்டில் இருக்க தொடங்கினர். ஆனால் இன்னும் அனலனிற்கு பரிசை முடியவில்லை. அதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கவே அவனை தொந்தரவு செய்யாமல் வீட்டில் இருந்து எதாவது சேட்டை செய்ய தொடங்கினார்கள்.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் விதுவையும் அழைத்துக்கொண்டு வந்திடுவான் செழியன். இவ்விரு வீட்டினருக்கு இவர்களை வாழ்வில் ஒன்று சேர்க்க வேண்டும் என்பது ஆசை. அதனாலே விதுவின் வீட்டில் அவளை வெளியே அழைத்து செல்வதற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் இருந்தது..


மனிதர்கள் போட நினைக்கும் முடிச்சை விட இறைவன் போட்டு வைத்த முடிச்சிற்கே சக்தியும் பலமும் அதிகம். யாருக்கு யார் என்று இருக்கிறதோ அவர்களுக்கு அவர்களே..


அக்னிகா விதுஷா இதழியனி செழியன் என நால்வரும் சேர்ந்து விளையாடினர். இதை எல்லாம் மேலே இருந்த அறையில் இருந்து அனலன் பார்த்து கொண்டு இருந்தான்.


அவர்கள் நால்வரும் சேர்ந்து உப்பு விளையாட்டு விளையாட அக்னிகா அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக காத்திருந்தாள்.


அந்த விளையாட்டை விளையாட மணலில் செவ்வகம் போல் வடிவமைத்து கொண்டு அதில் இரண்டு லைன் போட வேண்டும் . ஒருவர் அவர்களை கடந்து அந்த உப்பை எடுத்துச் செல்ல வேண்டும் மூன்று கட்டத்திலும் ஒரு ஒருவர் நிற்க அவர்களின் கண்ணில் மண்ணை தூவி அதில் இருந்து தப்பிப்பதே அந்த உப்பு விளையாட்டு ஆகும்..


அக்னிகாவை தடுப்பதற்காக முதலில் விது நிற்க இரண்டாவது செழியன் இருக்க மூன்றாவதாக இதழியனி நின்றிருந்தாள்...


முதலில் இருந்த விதுவை தாண்டி எப்படியோ தட்டி தடுமாறி வந்த அக்னிகா செழியனிடம் இருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் இருக்க அவளின் அந்த குட்டி மூலைக்கு ஏதோ ஐடியா வரவே அதை செயல் படுத்தி வெற்றியும் கண்டாள்...


அவளை முறைத்த படி செழியன் நிற்க அவனிற்கு பழிப்பு காட்டிவிட்டு கண் அடித்துவிட்டு இதழியின் புறம் திரும்பினாள்.


அவளின் செயலில் திகைத்தவனிற்கு நெஞ்சில் ஏதோ குத்தியது போல் உணர்வு ஏற்பட அதை தொட்டு தடவிக் கொடுத்தான். அதற்குள் விது அவன் பக்கத்தில் வரவே அவர்கள் விளையாட்டை பார்க்க ஆரம்பித்தான்...


இதழியனி " நீ எப்படி என்கிட்ட இருந்து தாண்டுறன்னு பாக்கலாம் டி " என்று கூறி அவளிற்கு வழி தராமல் தடுத்துக் கொண்டு இருக்க...


அனலன் அவன் கையில் இருந்த புத்தகத்தை மூடிவிட்டு அவளையே பார்க்க தொடங்கினான்...


யாரோ தன்னை பார்ப்பது போல் உணர்ந்த இதழியனி மெதுவாக பார்வையால் அனைத்து இடங்களையும் சோதனை போட்டு கொண்டு இருக்க எதற்ச்சியாக மேலே பார்க்க அங்கே அனலன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...


அவனின் பார்வை வீச்சில் துளைந்து போனவள் அப்படியே நிற்க இது தான் நேரம் என்று அக்னிகா அவளை கடந்து வந்து விட்டால்...


" ஹையா நான் ஜெய்ச்சிட்டேன் " என்று அக்னிகா ஆர்ப்பாட்டம் போட அதில் தன்னை மீட்டெடுத்தவள் தன் முன் நின்றிருந்த இருவரையும் நோக்க அவர்கள் கையில் கயிறு மட்டுமே இல்லை இருந்திருந்தால் எமனாகவே மாறி இருப்பார்கள்...


அவர்கள் முறைப்பதை அறிந்த இதழியனி மெதுவாக அந்த இடத்தை விட்டு ஓட அவளை இருவரும் சேர்ந்து துரத்த ஆரம்பித்தனர்..


இதழியனி " என்ன உங்களால‌ பிடிக்க முடியாது போங்க டா " என்று பழிப்பு காட்டிவிட்டு ஓட


"ஒழுங்கா நின்னுடு " என்று செழியன் அவளை பிடிக்க முயல..


"நிக்க முடியாது போங்கடா " என்று கூறி திரும்பி பார்த்தவாறே ஓட எதிரே வந்த அனலன் மீது மோதி கீழே விழ போக அவளை கீழே விடாமல் இடை சுற்றி பிடித்து நிறுத்தினான்..


பெணவளின் இதயத் துடிப்பு அதிகரிக்க இருவரது இமைகளும் அதன் நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது. இருவரும் ஒருவரையொருவர் மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருக்க "அனலா அவள விட்டுடாத டா " என்று குரல் கொடுக்க இருவருமே தன்னிலை வந்தனர்.


அதற்குள் செழியனும் விதுவும் வர " புடிச்சிட்டோம் அக்கா " என்றாள் விது ஏதோ பெரிய விஷயத்தை பிடித்தது போல்...


செழியன் அவள் காதை பற்றி திருக "செழியா வலிக்குது டா " என்று கத்த "இன்னும் நல்லா திருகு டா " என்று விது கூற..


"ஆண்டி " என்று மாதவியை அழைக்க மாதவியும் வந்து சேர்ந்தார்...


"டேய் ஏன் டா என் பொண்ணோட காத பிடிச்சு திருகுற " என்று கேட்க...


"இவளால நாங்க கேம்ல தோத்து பொய்ட்டோம் மா " என்று மேலும் காதை திருகிய படி கூற


"சரி போதும் விடு பாவம் டா சின்ன பொண்ணு " என்க " மா அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு தான் இவ சின்ன பொண்ணுனா அப்போ நானும் தான சின்ன பையன் " என்று அவள் காதை விட


"ஆமா நீயும் சின்ன பையன் இன்னும் எவ்வளவு வயசானாலும் நீங்க எனக்கு சின்ன பசங்க தான் சரியா " என்று அவன் கேசத்தை கலைத்திட இதையெல்லாம் அனலன் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான்...


அதன்பின் அனைவருக்கும் மதிய உணவு மாதவி பரிமாற அனைவரும் பேசி மகிழ்ந்த படி உண்டு முடித்தனர்..


இதற்கிடையில் இவர்கள் அக்னிகாவையே மறந்து விட்டனர்.


மாலை நேரம் வர விதுவும் செழியனும் கிளம்ப எண்ணி வெளியே வர அந்த நேரம் தான் செழியனிற்கு அக்னிகாவின் நினைவு வர " எங்க அக்னிய காணோம் " என்று சொல்ல..


" இங்க எங்கேயாவது தான் இருப்பா அவளுக்கு எப்போதும் இப்படி எங்கள பயமுறுத்துறதே வேலையா வச்சிருப்பா நீ கவல படாம வீட்டுக்கு போ " என்று அவர்களை அனுப்பி வைத்தான் அனலன்.


ஆனால் செழியனின் மனதுக்கு ஏதோ தவறாகவே பட்டது .அவள் ஏதோ ஆபத்தில் இருப்பது போல் அவனது உள் மனசு கூச்சலிட மன பாரத்துடன் அந்த இடத்தை விட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றான்...


இரவு நேரம் வரவுமே அக்னிகாவை உண்மையில் காணவில்லை என்று தெரிய வர மூவரும் சேர்ந்தே தேட தொடங்கினர்.


அங்கும் இங்குமாய் பிரிந்து ஒவ்வொருவரும் தேட தொடங்கினர்..


இதற்கிடையில் விதுவை வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த செழியனின் ஞாபகம் முழுவதும் அக்னிகாவே நிறைந்திருந்தாள்.


"செழியா உனக்காக தான் டா இங்க எல்லாரும் வெயிட்டிங் சீக்கிரமா ஃப்ரெஷ் ஆயிட்டு வா டா சாப்பிடலாம் " என்று அவனது அன்னை நிர்மலா கூற


அதை கூட காதில் வாங்காதவன் அவன் அறை நோக்கி சென்றான்..


"என்ன ஆச்சிங்க இவனுக்கு " என்று ஆதங்கத்துடன் பக்கத்தில் இருந்த கணவரை கண்டு கேட்க..


" தெரியல மா வந்தா கேட்போம் " என்று ஆனந்தராஜ் சொல்லி மனைவியை உட்கார வைத்து " எப்போ பார்த்தாலும் உனக்கு உன் புள்ள தான் முக்கியமா டி இந்த புருஷன கண்டுக்க கூட மாட்டேங்கிற " என்று அவரது கணவராய் கேட்க


"இதுல என்ன சந்தேகம் எனக்கு என் புள்ள தான் முக்கியம் . உங்கள நான் ஏன் பாத்துக்கணும் வேணும்னா உங்க அம்மாவ வர சொல்லுங்க அவுங்க உங்கள நல்லா பாத்துப்பாங்க மிஸ்டர் ராஜ் " என்று அவரை கிண்டலடிக்க..


"ஏன் டி உனக்கு என்ன வேல என்ன பாத்துக்குறதுக்காக தான உன்ன எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே " என்று இல்லாத கோபத்தை கொண்டு அவர் கேட்க...


"அய்யோ என் செல்ல புருஷாக்கு கோபம் கூட வருதே என்ன ஆச்சரியம் அடடா " என்று நக்கலடிக்க


" என்னவா கிண்டல் அடிக்கிற இரு " என்றவர் அவரது கண்ணத்தில் இதழ் பதிக்க நிர்மலா அதிர்ந்து நின்றார்..


இருவரது காதலும் வயதானாலும் குறையாமல் அலை மோத அவர்களது புதல்வனோ குளியலறையில் ஷவரில் முன் நின்றுக் கொண்டு இருந்தான்..


எவ்வளவு நேரம் இருந்தானோ அது அவனுக்கே தெரியாது கீழிருந்து அவனது அன்னை அவனை அழைக்கும் வரை


"செழியா கொஞ்சம் சீக்கிரமா கீழ வாடா இன்னும் மேல என்ன பண்ணிக்கிட்டு இருக்க " என்று கத்த


அதில் உணர்வுக்கு வந்தவன் " இதோ வரேன் மா " என்றவன் குளியலறை விட்டு வந்தவன் ஷார்ட்ஸ் அண்ட் டிஷெட் போட்டுக் கொண்டு கீழே வந்தான்...


நிர்மலா இருவருக்கும் உணவு பரிமாற சாப்பிட அமர்ந்தவன் ஏதோ கொரித்து விட்டு வேகமாக அறைக்கு சென்று விட்டான்..


அறைக்கு வந்தவன் அனலனிற்கு அழைப்பு விட அவனது மொபைலை எடுத்த இதழியனியின் அழுகை சத்தம் மட்டுமே அவனுக்கு கேட்டது.."இதழி உனக்கு என்ன ஆச்சி எதுக்கு இப்படி அழுகுற அங்க யாருக்கும் எதுவும் இல்லையே " என்று கேட்டவனின் மனதில் அக்னிகா ஞாபகம் வர" அக்னிக்கு என்ன ஆச்சி இதழி " என்ற குரலில் சிறிது உடைந்து இருந்தது...அவள் மேலும் அழுக " இப்போ அழுகுறத நிறுத்திட்டு அவளுக்கு என்ன ஆச்சின்னு சொல்லு " என்று கத்தஅதில் பயந்தவள் " அக்னிகாவ காணோம் செழியா " என்று கூறஅதை கேட்ட செழியா உடைந்து போய் விட்டான்.." என்ன சொல்லுற " என்று மனதில் இது உண்மையா இருக்கவே கூடாது என்று வேண்டிய படி கேட்க..." அக்னிய சாய்ங்காலத்துல இருந்து காணோம் செழியா " என்று அழுகையுடன் கூறஅடுத்த நொடி மொபைலை துண்டித்தவன் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக பறந்தான்..சிறிது நேரத்தில் அங்கே வந்தவன் விவரம் அறிந்து அனலனுடன் தேட தொடங்கி இருந்தான்.எங்கே தேடியும் கிடைக்காமல் போக இருவரும் அடுத்து எங்கே தேடுவது என்று யோசிக்க இருவருக்கும் நினைவில் வந்தது அவர்களது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் அந்த காடு போன்ற இடமே...இரவென்று பாராது அவர்கள் அங்கு டார்ச் லைட் உதவியுடன் செல்ல சிறிது தூரம் வரை சென்ற அவர்களுக்கு எந்த ஒரு துருப்பும் கிடைக்காமல் போக திரும்பி செல்லலாம் என்று தீர்மானித்து இருவரும் திரும்ப அவர்களுக்கு எங்கிருந்தோ முனங்கல் சத்தம் கேட்க இருவரது இதயமும் கனத்த மனதுடன் முனங்கல் வந்த வழியை நோக்கி செல்ல அங்கே அவர்கள் கண்டது உயிரில்லா உருவமாய் பாதி மயக்கத்தில் இருந்த அக்னிகாவே...வேகமாக செழியன் அவனது மேல் சட்டையை எடுத்து அவளின் கீரல் பதிந்திருந்த உடலை மறைத்தவன் சுற்றி முற்றி வெறி கொண்ட வேங்கையாய் பார்க்க அங்கே மது பாட்டில்கள் மட்டுமே இருந்தது..உடனே அனலன் அவளை தூக்கிக் கொள்ள இருவரும் அந்த காட்டை விட்டு வந்து அவளை காரில் படுக்க வைத்து விட்டு ஹாஸ்பிடல் நோக்கி சென்றனர்..இதழியனிக்கும் மாதவி மற்றும் அந்தோனியருக்கும் அவள் கிடைத்து விட்டதை தெரிவித்து மருத்துவமனை பெயர் சொல்ல மூவரும் கிளம்பி மருத்துவமனை வந்தனர்...அக்னிகாவுக்கு சிகிச்சை நடக்க அவளுக்கு நடந்ததை ஒரு அண்ணணாக கூற முடியாமல் தவித்தவன் மனதை தைரிய படுத்திக் கொண்டு அவர்களிடம் கூறினான்...அவன் கூறிய நொடி மாதவி கதறி அழுக அவரை சமாதானம் படுத்த முயன்றனர்...சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்த மருத்துவர் " சீஸ் அவுட் ஆஃப் டேஞ்டர் பட் அவுங்க கண்ணு முழிக்க இருபத்து நாலு மணி நேரம் ஆகும். அந்த பொண்ண குடிக்க வச்சி இப்படி பண்ணி இருக்காங்க " என்று கோபத்துடன் கூறிவிட்டு சென்றார்...இருபத்தி நாலு மணி நேரம் கடந்த பிறகு மெதுவாக பிரிக்க முடியாமல் பிரிக்க முயன்றால் அக்னிகா.அவள் கண்டது முதலில் செழியனை தான் அதன் பிறகே சுற்றி உள்ளவர்களை கவனித்தால்...அவளுக்கு உடல் முழுவதும் வலியே இருக்க அவளால் கைகளை கூட அசைக்க முடியவில்லை...அவளை ஒருவாரம் மருத்துவமனையில் இருந்து கவனமாக பார்த்துக் கொண்டனர்...பின்னர் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். நாட்கள் அதன் போக்கில் சென்றது.அவள் அறையிலே முடங்கி விட்டால் ஆண்களை கண்டாலே பயந்து நடுங்க ஆரம்பித்தது இருந்தால்...இதழியனியிடம் மட்டும் பேசத் தொடங்கி இருந்தாள். இதற்கிடையில் இதழியனிக்கும் செழியனுக்கும் மார்க் வர அவர்களை அடுத்தகட்ட வகுப்பில் சேர்த்தனர்...இதயழியனியை அனைத்து பள்ளிகளிலும் சேர்க்க முன் வராமல் இருக்க அவளது மதிப்பெண் வந்தவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு அவளுக்கு சீட் தர வந்தனர்..ஆனால் அவளோ " நான் கௌர்மெண்ட் ஸ்கூல்லையே படிச்சிக்கிறேன் . இந்த ஸ்கூல்லாம் படிச்சா நான் பாவ பட்டவல்லா மாறிடுவேன் எனக்கு அது தேவையில்லை. அதுவும் இல்லாமல் அவுங்களோட ரெப்யூடேஷன் ஸ்பாயில் ஆக நான் காரணமா இருக்க விரும்பல " என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்ல அனைத்து பள்ளிகளுக்கும் காறி துப்பியதை போல் இருந்தது...~சுவாசிக்கும்..
 

Sri Ram

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super update amlu ....agni yen da anga pona?avala ipdi panavanga yaaru? Idhazh last la sonna words super ....next epi ku waiting :(
 
OP
Ashwathi

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super update amlu ....agni yen da anga pona?avala ipdi panavanga yaaru? Idhazh last la sonna words super ....next epi ku waiting :(
Rmba simple de diamyyyy.. endha Oru ponnukum safety measures therinji irukanum adhu theriyama irukuradhu naala avangalai avngalala kaathuka mudiuradhu I'lla...
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top