நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

என் மனம் கவர்ந்தவள்... 1

hemapreetha

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹாய் நட்புஸ்...

இதோ உங்கள் மனதை கவர்ந்து செல்ல "என் மனம் கவர்ந்தவள் " லோடு வந்துட்டேன் படிச்சிட்டு எப்படி இருக்குனு மறக்காம சொல்லுங்க நட்புஸ்....


என் மனம் கவர்ந்தவள்... 1

மணமகளின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் மணமகனும்.....
மணமகனுக்காக அழகிய பதுமையாய் கையில் பால் சொம்புடன் அலங்கரித்து அழகோவியம் சிலையாய் மணமகள் வந்து நிற்க.... மணமகனின் முதல் பார்வையில் வெட்கப்பட்டு ஓடி ஒளிந்து நின்று நாணத்துடன் எட்டிப்பார்க்கும் மணப்பெண்ணை போல் அழகிய வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் எட்டிப்பார்க்க நான் ஓய்வெடுக்க செல்கிறேன் என சந்திரன் சென்றிருக்க சில்லென்று வீசும் குளிர் காற்று உடலை தழுவி செல்ல சோம்பல் முறித்தவாறு தன் குளியல் அறையை நோக்கி நகர்ந்தான் மதன்.....

அவன் பேருக்கு ஏற்றாற்போல் அவனும் மன்மதன் தான்.....
மதன் அதிகாலை எழும் பழக்கம் உடையவன்.... இவ்வழகிய காலைப் பொழுதில் நகரமே அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க சிலர் மட்டும் அங்கங்கே நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்....
இந்த ரம்மியமான சூழல் மனதிற்கு அமைதி நிலவிக் கொண்டிருந்தது இதை ரசிப்பது என்பது அவனுக்கு மிகப் பிடித்தமான ஒன்று....
ஒவ்வொரு நாளும் பல விதமான பிரச்சனைகளை சந்திக்கிறோம்.... அந்தந்த பிரச்சனைகளை அந்தந்த நாளிலே முடித்து விட வேண்டும் ஒவ்வொரு நாளின் ஆரம்பத்தையும் புத்துணர்வோடு எதிர் கொள்ள வேண்டும் என்பது மதனின்
கருத்து....

ஒரு நாளின் தொடக்கம் என்பது அந்நாளின் காலைப்பொழுதில் ஆரம்பமாகும் ஒவ்வொரு நாளின் தொடக்கமும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவன் மதன்.....
அதுமட்டுமில்லாமல் தனது உடலையும் மனதையும் சீராக பராமரிக்கும் பழக்கம் உடையவன் தினமும் காலையில் யோகா உடற்பயிற்சி போன்றவைகளை செய்த பின்னே அவன் வேலைகளை செய்ய தொடங்குவான் இதனை தினசரி வேலையாக கொண்டவன்....

நேரங்களை வீணாகக் செலவழிப்பது என்பது அவனுக்குப் பிடிக்காத ஒன்று எப்பேர்ப்பட்ட வேலையையும் திறம்பட செய்து முடிக்கும் வல்லமை படைத்தவன்....
தன் எதிராளியின் கண்களை கண்டு அவர்களின் நோக்கத்தை அறிந்து கொள்ளும் திறமை உடையவன் அதனாலே என்னவோ தன் தந்தை உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அவர் இவ்வுலகை விட்டு சென்ற பின்பும் தன் படிப்பாலும் திறமையாலும் இன்று முதல்நிலையில் வைத்திருக்கிறான்..

மதன் சிறு வயதிலிருந்தே தன் தந்தையை முன்மாதிரியாக நினைத்து வாழ்பவன் அதனாலேயே தன் தந்தை செய்யும் தொழில் துறையாய் எடுத்து படிக்க நினைத்தான் பொறியியல் துறையில் ஐடி பிரிவை தேர்ந்தெடுத்தான் அதில் மிக அருமையாக படித்து முடித்த பின் மேல்படிப்புக்காக வெளிநாடு சென்று படித்தான் அதன்பின் தன் தந்தையுடன் சேர்ந்து தொழில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என நினைத்திருந்தான்....

வெளிநாட்டிற்கு சென்றாலும் அங்கிருக்கும் வரை கட்டுப்பாடுடன் வாழ்ந்தவன் எந்த பெண்களையும் தன் அருகில் கூட அண்டா விடாதவன் ....
எத்தனையோ பெண்கள் அவன் மேல் காதல் கொண்டு வலை வீசினாலும் அதிலெல்லாம்
அவன் சிக்கவில்லை சிக்க நினைத்ததும் இல்லை..
பெண்கள் அவன் மேல் விழுந்து விழுந்து பழகினாலும் அவர்களை எட்ட நிறுத்திய பழகுவான் அதையும் மீறி அவர்கள் எல்லை மீறினால் அவனின் தீ பார்வை ஒன்றே போதும் அவர்கள் அங்கிருந்து ஓடியே விடுவார்கள் பின் அவன் பக்கமே திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் அத்தனை கட்டுப்பாடுடன் வாழ்ந்தவன்....

மதனின் தந்தை தொழிலில் ஏற்பட்ட
சரிவுகளாலும் நஷ்டங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்து விட்டார் தந்தையின் மரணத்தை தாங்க முடியாமல் உடைந்து போனான் தந்தையின் இறப்பிற்கு காரணம் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் சரிவும் என அவன் அறியவே செய்தான் அப்பாவின் மனதை உருகுலைத்த நஷ்டத்தையும் கம்பெனி வீழ்ச்சியையும் சரிசெய்து நிலைநிறுத்தி அதனை முதல் நிலையில் கொண்டு வர வேண்டும் என மனதில் தீர்க்கமாய் முடிவெடுத்தான்....

அவனுடைய கவனம் முழுவதும் கம்பெனியை முன் நிலைக்குக் கொண்டு வருவதில் மட்டுமே இருந்தது அவனுடைய தனிப்பட்ட வாழ்கையை பற்றி அவன் துளியும் சிந்திக்கவில்லை காதல் கல்யாணம் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமும்மில்லை ....
வாழ்வில் அவனின் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தன் கம்பெனியை முதலிடத்திற்கு கொண்டு
வந்தான் மதனின் சிந்தனையும் செயலும் தொழில் பற்றி மட்டுமே இருக்கும் அவனுக்கு பெண்கள் மேல் எந்த ஈடுபடும் வந்ததில்லை.... ஏனோ இந்நாள்வரை எந்த பெண்ணாலும் அவன் மனம் கவரப்படவில்லை....

இதுவரை அவனுக்கு எந்த பெண் மீதும் எந்த ஒரு ஈர்ப்பும் வந்ததில்லை அவன் அதை விரும்பவும் இல்லை....

மதன் ஆபீஸ் கிளம்பி கீழே வரை சுந்தரிக்கு தன் மகனை பார்க்கும் போது அவர் கண்களையே பட்டுவிடும் போலிருந்தது அத்தனை அழகு மதன் ஆண்கலே பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அழகு ....
அவனின் கடைக்கண் பார்வைக்காக தவமிருக்கும் பெண்களை இதுவரை அவன் ஏறெடுத்து கூட பார்த்ததில்லை....


ஆறடி உயரம் கட்டுமஸ்தான தேகங்கள் சீராக வளர்ந்து இருக்கும் கேசங்கள் பார்வையில் ஒரு வசீகரம் அனைவரையும் தன் வசப்படுத்தும் கண்கள் நேர் நாசி என்னிடம் எந்த கேட்ட பழக்கமும் இல்லை என சொல்லும் சிவந்த உதடுகள் கம்பீரமான நடை என அனைத்தும் ஒரு ராஜகுமாரனை போலிருந்தது.... அவனின் மெல்லிய புன்னைகை ஒன்று போது மற்றவர்கள் அவனிடம் மயங்க அதனை வசீகரமும் அழகும் உடையவன் எதற்கும் எதிலும் அலட்டிகொள்ளாதவன் மதன் ... இத்தனை அழகு இருந்தும் என்ன பயன் அழகை ஆராதிக்க ஒரு பெண் இல்லையே!! என்ற ஏக்கம்தான் சுந்தரிக்கு....

எவ்வளவு எடுத்துச் சொல்லியும் தன் மகன் பிடிவாதமாக இருக்கிறான் என்ற கவலை தான் மனதை வதைத்தது மதன் எத்தனை முறை கல்யாணத்தைப் பற்றிப் பேசினாலும் அவன் முடிவு ஒன்றாகவே இருந்தது "எனக்கு கல்யாணம் வேண்டாம்" என்ற பதில் மட்டுமே இருந்தது சுந்தரிக்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் போனது சுந்தரிக்கு மதன் இப்படியே பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தால் அவன் வாழ்வு என்னாவது என்ற எண்ணத்தில் சுந்தரி இருக்க......

என்னம்மா இவ்வளவு யோசனையாய் இருக்கீங்க?? என்றும் மதன் குரலில் நிகழ்வுக்கு வந்த சுந்தரி எனக்கு இருக்கும்" ஒரே கவலை 'உன் கல்யாணத்தை பத்தி தான் மதன் '
உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டா என் கடைசி காலத்துல நான் நிம்மதியா கண்ணை மூடி விடுவேன்"....

ஐயோ !! அம்மா ஏன் இப்படி எல்லாம் பேசுற...

கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் ப்ளீஸ் அம்மா இந்த டாபிக்கை இதோட விடு என் முடிவு ஒன்றுதான் "நான் இப்போ கல்யாணம் பண்ணிக்க விரும்பல" சோ என்னை கட்டயபடுத்தாதீங்க ப்ளீஸ் இப்ப எனக்கு பசிக்குது என்ன டிபன் பண்ணி வெச்சிருக்கீங்க என பேச்சை மாற்ற....
இட்லி சாம்பார் பண்ணி இருக்கேன் வாப்பா சாப்பிடலாம்...

சுந்தரி மதனுக்கு பரிமாற அம்மா என்ன பத்தி எதையும் யோசனை பண்ணிட்டு உங்க மனசை போட்டு குழப்பிக்காதிங்க சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க மா நான் கிளம்புறேன் நீங்க பத்திரமா இருங்க என கூறிவிட்டு அவன் ஆபீஸ் கிளம்பி விட்டான்...

ஆனால் சுந்தரி மனமே எல்லாவிதத்திலும் சொல்லி ஆகிவிட்டது சிறுபிள்ளையாய் இருந்தால் அடித்து பயமுறுத்தி வழிக்கு கொண்டுவரலாம் தோலுக்கு வளர்ந்தால் தோழன் என்பார்கள் அவனை கண்டிக்க முடியாமல் தண்டிக்கும் முடியாமல் குழம்பி போயிருக்கும் மனதை என்ன சொல்லி சமாதானம் செய்ய....
இப்படியே விட்டால் இவன் பிடிவாதம் குறையாது இனி இவன் போக்கில் விட்டால் சரியாக வராது... இவன் வயதில் இருப்பவர்கள் எல்லாம் பொண்டாட்டி பிள்ளையோட சந்தோஷமா இருக்காங்க ஆனா இவன் மட்டும் ஏன் இப்படி இருக்கான் இவனை இப்படியே விட்டால் சரியாகாது இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என மனம் பதைத்தது வரட்டும் இன்னைக்கு நைட் ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும் மதன் ஆபீஸ் சென்ற பிறகு வேலையில் பளுவால் அவன் வீட்டில் நடந்த விவாதத்தை மறந்தே போனான் சுந்தரி ஒரு முடிவோடு காத்திருந்தால் தன் மகனிடம் பாசத்துடன் பரிவுடன் கேட்டால் வேலைக்கு ஆகாது என முடிவு எடுத்தால்.....

இரவும் மதன் வீட்டிற்கு வந்தவுடன் அவன் ரூமுக்கு சென்று ப்ரெஷ்ஷாகிவிட்டு கீழே வந்தான்... அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசாமல் இருந்த சுந்தரி சாப்பிட்டு முடித்த பின்னர் மதனிடம் பேசத் தொடங்கினார் மதன் கொஞ்சம் இருப்பா உன்கிட்ட பேசணும் என தொடங்கினார்...

என்ன பேசணும்?? சொல்லுமா [email protected] ஏதாவது பிரச்சினையா...

ஆமா! பிரச்சனைதான் மத்தவங்கள இல்ல உன்னால தான்....

என்னமா சொல்றே என்னால பிரச்சனையா!!....

ஆமா! நீ தான்...

நான் என்ன பண்ணுனா....

நீ என்ன பண்ணல உன் வயசு பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோசமா இல்ல....
நீ கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்தா என்ன அர்த்தம்..... அம்மா எனக்கு பிடிக்கல அவ்வளவுதான் காரணம் கேட்காதீங்க.....

என் கேட்கக்கூடாது??

அம்மா ப்ளீஸ் நான் ஏற்கனவே சொன்னது தான்.....

எனக்கு அதெல்லாம் தெரியாது மதன் இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்
"ஒன்னு நீ கல்யாணம் பண்ணிக்கோ இல்லாட்டி நான் இந்த வீட்டை விட்டு போகிறேன்" இதுல உனக்கு எது விருப்பமோ அதை சொல் எனக் கூற அதிர்ச்சியில் விளிம்பிற்கே சென்று விட்டான் மதன் " தன்னை பிளாக்மல் செய்கிறார் " என்பது அவனுக்குப் புடியாமல் இல்லை ஒருவேளை கல்யாணம் வேண்டாம் என்றால் அம்மா கண்டிப்பாக அவர் சொன்னதை செய்து விடுவார் என மதனுக்கு தெரியும்....
இப்போ நான் என்ன பண்ணனும்??

நீ கல்யாணம் பண்ணிக்கணும்....

"சரி" என்ற ஒற்றை சொல்லை கூறி விட்டு அவன் ரூமிற்கு சென்று விட்டான் இப்போதைக்கு சரி என்று சொன்னதே சந்தோஷமாக இருந்தாலும் ஒரு புறம் அடுத்து என்ன செய்யப்போகிறானோ என்ற பயம் இருக்கவே செய்தது முடிந்தவரை விரைவில் திருமணத்தை நடத்த வேண்டும் என எண்ணினார் மகனே சம்மதிக்க வைத்தாகிவிட்டது... அடுத்து பெரிய வேலை பெண் தேடும் வேலை என் கண்ணில் நல்ல பெண்ணை காட்டி விடப்பா என முருகனிடம் மனமார வேண்டிக் கொண்டார் சுந்தரி அவனை சம்மதிக்க வைத்தது கூட பெரிய விஷயம் இல்லை ஆனால் திருமத்திற்கு பெண் தேடுவது!! எத்தனை பெரிய வேலை என பெருமூச்சு விட்டார் சுந்தரி முருகா என் விட்டு வர போகிற மஹாலஷ்மியை சீக்கிரமா என் கண்ணுல கட்டிடப்ப ....

சுந்தரிக்கு இஷ்ட தெய்வம் என்றால் அது முருகன் தான்... பல முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் அவ்வாறு சென்றதுதான் திருப்போரூர் கந்தசாமி கோவில் அங்கு வீற்றிருக்கும் கந்தசாமி (முருகர் ) மிகவும் சக்தி உடையவர் உண்மையான மனதுடன் மனமுருகி அவரிடம் வேண்டினாள் கண்ணெதிரி பலன் கிடைக்கும் என்பது பலர் அவர்களின் அனுபவத்தின் முலமாக சொன்னது....

2_05_06_59_re_2_H@@IGHT_365_W@@IDTH_675.jpg


*ஸ்தல வரலாறு :*

முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார்.

திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். இங்கு கந்தசுவாமி என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.

பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன.

கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. இக்கோவில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார்.T_500_1365.jpg


சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோவில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி
உண்டு...

கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது.

பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார்.

கந்தசுவாமி இத்தலத்தில் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தியாக அருளுகிறார். கோவிலுக்கு அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோவில் உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம் இது.

இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம்.

(செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள யந்திர முருகனை வழிபடுகின்றனர். மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.)

இவ்வாறு சுந்தரி இக்கோவிலை பற்றிய வரலாற்றை கேள்வி பட்டிருக்கிறார்... அன்று முதல் அங்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டார்.....
மனதில் நிம்மதி இல்லாத நேரத்தில் அங்கு சென்று விடுவார் சுந்தரி... அது போன்றுதான் இன்று அக்கோவிலுக்கு சென்றார்

அங்குள்ள முருகனிடம் மனமுருக தன் பிள்ளைக்கு ஏற்ற அழகான குணமான ஒரு பெண்ணை தன் கண்ணில் காட்டு காந்த என மனமுருக வேண்டினார் வெகுநேரமாகியும் அங்கிருந்து எழ மனமில்லாமல் அமர்ந்திருந்தார் சுந்தரி எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தால் என தெரிய வில்லை பின் எழுந்து பிரகாரத்தைச் சுற்றி வர இரண்டு அடி எடுத்து வைக்க முற்பட தடுமாறி மயங்கி சரிந்து கீழே விழப்போன சுந்தரியை இரு மென்மையான கரங்கள் தாங்கி பிடித்தது அப்படியே கைத்தாங்கலாக கூட்டி சென்று பிரகாரத்தில் அமர வைத்தால் அந்த பெண்....

அம்மா!! இவங்க மயக்கத்திலே இருக்காங்க நீங்க கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்க என தாயிடம் அவள் கூறியது சுந்தரியின் காதில் அந்த மென்மையான குரல் எங்கோ கேட்பதுபோல் கேட்டுக் கொண்டிருந்தது அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என மனம் நினைத்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை சிறிது நேரம் கழித்து சுந்தரியின் முகத்தில் தண்ணீர் தெளித்து பின் கொஞ்சம் தண்ணீரை குடிக்கும் வைத்தால் பின் சுந்தரி நிதானத்திற்கு வரும் வரை காத்திருந்தால் அந்த பெண்

சுந்தரி கண் விழித்தபோது அவள் முன் அழகே உருவாய் ஒரு பெண் புடவையில் பார்ப்பதற்கே மகாலட்சுமி போல் தன் எதிரில் அமர்ந்து இருந்தாள் அவள் கண்களில் தெரிந்த பதற்றமே தன்னை விழாமல் தாங்கிப் பிடித்த இரு கரங்கள் அவருடையதுதான் என்று உணர்த்தியது

ஆண்ட்டி !! இப்போ எப்படி இருக்கீங்க இப்போ உங்க உடம்பு பரவாயில்லையா திரும்ப மயக்கம் வர்ற மாதிரி இருக்கா என அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றால்...

இப்போ பரவாயில்லைமா ரொம்ப நன்றி மா எனக்கு உதவி பண்ணதுக்கு என அவர் நெகிழ்ந்து சொல்ல...

இதுல என்ன இருக்கு உங்களுக்கு நான் பெருசா எந்த உதவியும் பண்ணலையே அப்புறம் எதுக்கு இந்த நன்றி எல்லாம்...
ஆமாம் என் மயங்கி விழ பாத்தீங்க?? ...என அவள் அக்கறையாய் விசாரிக்க

காலையிலிருந்து சாப்பிடல மாத்திரையும் போடல அதனால தான் மயக்கம் வந்திருக்கும்...

ஆண்ட்டி நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க" கடவுளை பட்டினி இருந்து தான் பிரார்த்தனை பண்ணனும்னு யாரும் சொல்லலையே அப்புறம் ஏன் இப்படி பட்டினி கிடந்து உடம்பை கெடுத்துக்குரிங்க கடவுள் கிட்ட பக்தி இருக்கலாம் ஆனால் உடம்பை வதைச்சிகிட்டு பக்தியோடு இருக்கணும்னு எந்த அவசியமும்
இல்லை "...

நீயும் என் பையன மாதிரி பேசுற அவனும் இப்படிதான் என்னை திட்டுவான் ஆனால் நான் தான் கேட்கலை என்ன பண்றது மா இப்படி விரதம் இருந்தாலது அந்த கடவுளுக்கு என் பிரார்த்தனை கேக்கும்குற ஆசைதான்...

உங்க பிரார்த்தனை ஏத்துவாவென இருக்கட்டும் அந்த கடவுள் கண்டிப்பா அதை நிறைவேற்றுவர்.... திரும்பவும் இப்படிப் பட்டினி கிடந்தது உடம்ப கெடுத்துக்காதிங்க ப்ளீஸ்.....

சரி மா இனிமே இப்படி பண்ணமாட்டேன் என அவர் உறுதி கொடுத்த பின்னே அவள் நிம்மதியானால்...

உன் பெயர் என்னமா ??

என் பெயர் ஆருணிதா..
ஆண்ட்டி... இவங்க என்னோட அம்மா.

சுதாவிற்கு வணக்கம் சொல்ல பதிலுக்கு அவரும் புன்னகையுடன் வணக்கம் சொன்னார்.....
நீங்கள் உங்கள் பொண்ண ரொம்ப நல்ல வளர்த்து இருக்கீங்க எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கா உங்க பெண் ஆனால் எதுவும் பெரிதாக செய்யவில்லை என்கிறாள்...

இதில் என்னமா இருக்கு மனிதர்களுக்கு மனிதர்கலே உதவளான எப்படி ... இதுல என்ன இருக்கு இதெல்லாம் ஒரு பெரிய உதவியே இல்லை என அவரும் கூற..

சரி தான் "தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை" னு சும்மாவா சொன்னாங்க சரி உங்கள மாறியே உங்க பொண்ணு இருக்க என்றார் சுந்தரி..

நீங்கள் எப்படி வந்தீங்க??
இப்ப எப்படி போவீங்க??
பத்திரமா போயிடுவீங்களா ??
நான் வேணும்னா உங்கள உங்க வீட்டுல கொண்டு வந்து விடவா??
என அக்கறையுடன் கேட்க..

பயப்படாதமா நான் பத்திரமா போய் விடுவேன் என உறுதி அளித்த பின்னே அவள் நிம்மதியாய் சென்றாள்.....

தன் மனம் கவர்ந்தவளை சந்திக்க நேரிடும் காலம் வெகுதூரமில்லை என்பதை மதன் அறியவில்லை.... இவர்களின் சந்திப்பில் இவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை இருவரும் எப்படி சந்திக்கப் போகிறார்கள் என்பதை பின்வரும் காலத்தில் பார்ப்போம்....
தொடரும்....
 

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
super starting bby :love: :love: :love: :love:
eagerly waiting for next ud....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN