நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

என் மனம் கவர்ந்தவள்... 2

hemapreetha

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
20200710_162600.jpg


ஆருணிதா வின் அன்பான வார்த்தைகள் சுந்தரியின் மனதை முழுவதும் நிறைவுபடுத்தியது ..... ஏனோ ஆருணிதா வை பார்த்ததுமே சுந்தரியின் மனதிற்கு மிகவும் பிடித்து போய்விட்டது.... சுந்தரிக்கு இப்படி ஒரு பெண்
தன் மகனுக்கு மனைவியாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைக்காமல் இருக்க முடியவில்லை.....
வீட்டிற்கு வந்த பிறகு கூட அந்த பெண்ணை நினைவுதான் சுந்தரிக்கு எவ்வளவு அன்பான
எளிமையான பெண் ஆருணி.... ஏனோ அவளின் முகமும் அவளின்
அன்பான பேச்சும் மனதை விட்டு அகல மறுத்தது.....


மதன் ஆஃபீஸில் இருந்து வந்ததும் அவனிடமும் இதைப் பற்றிக் கூற
சுந்தரி ஆருணி பற்றி புகழ்ந்து தள்ள மதன் கூட அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என மனதில் ஒருவித ஆர்வம் உண்டானது அவையெல்லாம் ஒரு புறம் தள்ளிவிட்டு.....

என்ன அம்மா எத்தனை முறை
சொல்லி இருக்க இப்படி
சாப்பிடாமல் இருக்காதிங்கனு நேரத்துக்கு சாபிடுங்கனு சொன்ன கேட்க மாட்டீங்களா இனிமேலாவது நேரத்திற்கு சாப்பிட்டு மாத்திரை போடுங்க என அவன் பங்கிற்கு அவனும் திட்டிவிட்டு சென்றான்...

சுந்தரி அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவதால் அவர்கள் இருவரையும் சந்திக்க நேர்ந்தது......


ஆரணி தாவும் சுதாவும் சுந்தரியிடம்
நல்ல நட்புடன் பழகினார்கள்
சுந்தரிக்கு அவர்களை மிகவும் பிடித்துப்போனது சுதா சுந்தரி இருவருக்குள்ளும் நல்லா நட்பு உருவானது...
சுதா சுந்தரியை தன் வீட்டிற்கு
வருமாறு அழைத்திருந்தார் சுந்தரியால் மறுக்க முடியவில்லை அதனால் சென்றார் முதல்முறையாக செல்கிறோம் ஏதாவது வாங்கி போகலாமென பூ பழங்கள் சிலவகை இனிப்பு மற்றும் கார வகைகள் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு சென்றார்....

சுந்தரி அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது முதலில் சுதாவின் கணவர் குருநாதன் தான் வரவேற்றார்...

வாமா தங்கச்சி..
எப்படி இருக்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க??
என அவர் என உரிமையுடன் விசாரிக்க அவர் விசாரித்ததை விட அவர் கூறிய தங்கை என்ற வார்த்தை மட்டுமே சுந்தரியின் மனதில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க..
சுதா ஆருணி எங்கே என கேட்க ஆருணி உள்ளதான் இருக்காம்மா...
சுதா கிச்சன் ல இருக்க
இதோ கூப்டுறான் மா...
அண்ணா நீங்க கதவு திறந்ததும்
நான்தான் சுந்தரி னு எப்படி கண்டுபிடிச்சீங்க நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது அப்புறம் எப்படி அண்ணா...

யாருமா சொன்னா எனக்கு உன்ன தெரியாது ன்னு என் வீட்ல உன்னை பத்தி பேசாத நாளே இல்லமா சுதா தான் உன் புராணத்தை பாடுரான பத்தாத குறைக்கு ஆருணியும் கூட்டு சேர்ந்து கிட்ட...
அவங்க பேசியதிலிருந்து நீதான் சுந்தரி தங்கச்சியா இருக்கணும்னு நினைச்சேன் அதனால் தான் மா தங்கச்சின்னு சொன்னேன்..

ஐயோ!! அண்ணா என்ன வெச்சு
உங்களை ரொம்பவே கொடுமை பண்ணி இருக்காங்க போலயே

ஆருணி என்ன பண்ற...... யார் வந்திருக்காங்கன்னு பாரு ..

இதோ வரேன் பா என சிட்டாக பறந்து வந்தால் ஆருணி ....

ஆண்ட்டி எப்ப வந்தீங்க
இப்பதான் வந்தேன் ஆருணி குட்டி

இப்போ தான் எங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா உங்களுக்கு என்ன அவள் செல்லமாக கோபித்துக் கொள்ள

சாரி அருணிமா அதான்
வந்துட்டேன்ல இனிமேல் அடிக்கடி வருவேன்
போதுமாடா கண்ணா...

ஆருணி சுந்தரியின்
கழுத்தை கட்டிக்கொண்டால் ....
சுந்தரிக்கு பெண் பிள்ளை இல்லாததால் அந்த குறையை ஆருணி முலம் தீர்த்துக் கொண்டார்...

ஆருணி க்கு சுந்தரியை மிகவும்
பிடித்துப்போனது அவரின் குணமும் தன் மேல் அவர் காட்டும் பாசமும் ஏனோ ஆருணிதாவை கவர்ந்தது அதன்பின் சுந்தரி அவ்வப்போது அங்கு சென்று பார்த்துவிட்டு வருவது உண்டு அதுபோல் சுதாவையும் ஆருணித்தவயும் சுந்தரியின் வீட்டிற்குப் அழைத்தார்......

இருவரும் எந்த மறுப்பும் செல்லாமல் சுந்தரியின் வீட்டிற்கு வருவதாக ஒப்புக்கொண்டனர்....

சுந்தரின் வீட்டிற்கு சென்ற இருவரும் பெரிய அதிர்ச்சி.....
சுந்தரியின் விடு பெரிய மாளிகை போல் இருந்தது அங்கு இருக்கும் வேலை ஆட்களும் அந்த வீட்டின் பிரம்மாண்டமும் சுந்தரி எவ்வளவு பெரிய வசதி படைத்தவர் என்று
நன்றாக காட்டியது அவர்கலால் இதை நம்பவே முடியவில்லை ஏனென்றால் சுந்தரி இதுவரை தன் பணக்காரி என்று துளியும் காட்டிக்கொண்டது இல்லை அத்தனை எளிமையாக தான் தங்களிடம் நடந்து கொண்டுள்ளார் சுதா விற்கும் மற்றும்
ஆருணிதா விற்கும் அதன்பின் சுந்தரியின் மேல் மரியாதை கூடியது மனதில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பார்களா என
தோன்றியது....

சுதாவும் ஆருணி தன் வீட்டிற்கு வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தாலர் சுந்தரி
இவர்கள் இருவரையும் பார்த்ததில் தலை கால் புரியவில்லை...

வாங்க! வாங்க!
உக்காருங்க ரெண்டு பேரும் என்ன சாப்பிடுறீங்க டீ காபி
ஜூஸ் என்ன வேணும் என்ன கேட்க ஐயோ ஆண்ட்டி ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க
ஏன் இத்தனை பரபரப்பு இந்த பக்கம் கொஞ்சம் வேளை இருந்துச்சு அதான்
அப்படியே உங்களை பார்த்துட்டு போலாம்னு
வந்தோம் எதுவும் வேணாம் ஆண்ட்டி என ஆருணி பேசி முடிக்கும் முன்பே அதெல்லாம்
முடியாது முதல் முதல்ல வீட்டுக்கு வந்திருகிங்க ஏதும் வேண்டாம்னு சொல்றீங்க அதெல்லாம் முடியாது ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என அவர்
கண்டிப்புடன் சொல்ல வேறு வழியின்றி ஆருணி ஒத்துக்கொண்டால் ஜூஸ் மட்டும்
போதும் என்று சொல்ல சரி மா... என முத்தையா விடம் இரண்டு ஜூஸ் கொண்டு
வரும்படி கூறினார் ஆருணிதா சுதா மற்றும் சுந்தரி மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் பெரியவர்கள்
பேசிக்கொண்டிருக்க ஆருணி அமைதியாய் உட்கார்ந்திருந்தாள் ஆருணி குட்டி நீ வேணும்னா வீட்டை சுத்தி பாரேன் முத்தையா
ஆரணிய கூட்டிட்டு போய் அவளுக்கு வீட்டை ச சுத்தி காட்டிட்டு வாங்க என கூறினார்...

ஆருணியும் முத்தையா உடன் சென்றால் வீட்டை சுற்றி பாக்க ......

ஒவ்வொரு அறையயையும் கட்டிக்கொண்டு
வர அங்கு ஒவ்வொரு அறையும் அவ்வளவு அழகாய் பராமரிக்க பட்டிருந்தது இவை
அனைத்தும் சுந்தரின் கைவண்ணம் என புரிந்தது அங்கு எல்லா அறைகளையும் முத்து
திறந்து காட்ட ஒரு அறையை மட்டும் திறக்காமலேயே அடுத்த அறைக்குச் சென்றார் முத்துஅண்ணா இது யாருடைய ரூம்......

அம்மா இது மதன் தம்பியோட ரூம் உள்ள யார் போனாலும் மதன் தம்பிக்கு பிடிக்காது ரொம்ப கோபப்படுவார் நம்மா அடுத்த ரூம் பொய் பார்க்கலாம் மா என அங்கிருந்து சென்று விட்டார்... மதன் அன்று வேலை
காரணமாக வெளியில் சென்று இருந்தான்...

ஆமா முத்தையா அண்ணா யார் அந்த மதன்...
சுந்தரி அம்மா பையன் மதன் தம்பி கோவக்காரர் மா ஆன ரொம்ப நல்லவர்மா...
மதன் தம்பி மாறி ஒரு பையன உலகத்துலயே பாக்க முடியதுமா அவ்ளோ தங்கமான பையன் ....
முத்தையா அண்ணா இப்போதான
சொன்னிங்க மதன் ரொம்ப கோவக்காரர்னு திரும்பவும் நல்லவர்னு சொல்றிங்க....
கோவக்காரர் ஹா இருந்த கெட்டவர்னு அர்த்தம் இல்லாம "கோவம் இருக்க எடத்துலதான் குணம் இருக்கும்னு"
சொல்லுவாங்க அதே போலத்தான் மதன் தம்பியும்.....

ஓஓஓ...

வாங்கம்மா மத்த இடத்தையும் பார்த்திடலாம்

வாங்க அண்ணா..

வீட்டைச் முழுவதும் சுற்றி
பார்த்து விட்டு கீழே வந்தால் ஆருணி

என்னமா விடு எல்லாம் சுத்தி பார்த்தாச்சா பத்துடன் ஆண்ட்டி......

ஆருணி இந்த ஆண்ட்டி காக ஒரு உதவி பண்ணுவியா என சுந்தரி கேட்க..

நான் என்ன பண்ணனும் சொல்லுங்க.ஆண்ட்டி செய்கிறேன் அதுக்கு ஏன் உதவி அது இதுன்னு சொல்றீங்க..

இந்த பக்கம் தானே உன்னோட காலேஜ் இருக்குனு சொன்ன உனக்கு எப்பல்லாம்
நேரம் கிடைக்குதோ அப்போ நீ வந்து போறியா ஆருணி....
எப்பவும் நான் மட்டும்தான் தனியா இருக்கணும் டா என் பையன் எப்போவும் வீட்டிலேயே இருக்கவே மாட்டான் வேலை வேலைனு ஓடிட்டே இருப்பான் அதான் நீ வந்து போன நல்லா இருக்கும்னு தோணுது எனக்கு
என்ன சொல்ற ஆருணி ..

ஆருணிதா என் தாயின் முகத்தை பார்க்க சுதாவோ சரி என்று சொல் என கண்களை முடி திறக்க அவரின் சம்மதத்தை புரிந்துகொள்ள ஆருணிதா வும் கண்டிப்பா வரேன் ஆண்ட்டி என்று சொன்னால் ....
அவர்கள் இருவரும் விடை பெற்றுச்சென்றனர்

அவ்வபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆருணி சுந்தரி வீட்டிற்க்கு வந்து போவதுண்டு ஆருணி....

ஆருணிக்கு இந்த வீடும் அங்கு உள்ள ஆட்களும் நன்கு பழகி போனார்....
அங்குள்ள வேலைக்கு ஆட்கள் முதல் சுந்தரி வரை அனைவர்க்கும் ஆருணித்தவை மிகவும் பிடித்து போனது.....

ஆருணிதா வின் அழகும் அன்பான குணமும் அனைவரின் மனதையும் கவர்ந்தது அவளின் மென்மையான பேச்சு அனைவர் மனதிலும் இடம் பிடித்தது அந்த வீட்டில் செல்லப்
பிள்ளையாக வலம் வந்தாள் ஆருணி

ஆருணி படிப்பில் மிக கெட்டிக்காரி
அனைத்திலும் அவள் முதலிடம் பிடிப்பவள் ஆனால் அவள் எதையும் பெரிதாக காட்டிக்கொள்ள விரும்பாதவள்...
அதேநேரம் நண்பர்களுடன் சேர்ந்து அவள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சம்ஜெஞ்சம்
அல்ல.... கலகலப்பானவள் மற்றவர்கள்
மனதை காயப்படுத்த விரும்பமாட்டாள்.....

ஆருணிதா வின் நண்பர்கள் கார்த்தி, சுஜி,
கிருஷ்ணா, ஜீவிதா, இவர்கள் நால்வரும் மதுவைப் போல படிப்பில் கெட்டிக்காரர் இந்த ஐவரும் கல்லூரியில் அனைத்திலும் முதலிடத்தில் இருப்பவர்கள் ...
இவர்கள் BE கம்ப்யூட்டர் சயின்ஸ் கடைசி ஆண்டு படித்து கொண்டு இருப்பவர்கள்....

அடிக்கடி சுந்தரி வீட்டிற்கு வந்து சுந்தரி யை பார்த்துவிட்டு செல்வது ஆருணி யின் வழக்கம்...
அன்றும் ஆருணி சுந்தரி வீட்டுக்கு வரும்
போது ஏனோ ஆருணி ஒருவித குழப்பத்தோடு வந்தால் சுந்தரிக்கு எதோ
சரியில்லை என்பது மட்டும் புரிந்தது மதியம் சாப்டியா ஆருணி என கேட்க சாப்பிட்டேன்
ஆன்ட்டி...

உடம்பு ஏதும் சரி இல்லையா...

அப்டிலாம் இல்லை ஆண்ட்டி நல்லாத்தான் இருக்கான்...

அப்புறம் ஏன் டல்லா இருக்க என்னாச்சும்மா காலேஜ்ல ஏதாவது பிரச்சனையா என்ன இல்ல ஆன்ட்டி அதெல்லாம் ஏதும் இல்ல அப்புறம் என்ன...

அது நாளைக்கு என் காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூ....

நல்ல விஷயம்தானே அதுக்கு ஏன் இவ்வளவு டல்லா இருக்க....

கேம்பஸ் இன்டர்வியூ நல்ல விஷயம் தான் ஆனால் வர கம்பெனி தான் பிரச்சனை....

என்ன ஆருணி சொல்லுற எந்த கம்பெனி வருது என்ன பிரச்சனை.....

மதன் குரூப் ஆப் கம்பெனி பிரைவேட் லிமிடெட் பிரச்சினையே அந்த கம்பெனி ஏம் டி மதன் தான் ஆண்ட்டி.....

ஏன் என்னாச்சு அந்த கம்பெனி ஏம் டி என்ன பண்ணாரு உன்னை ஏதாவது வம்பு பண்ணன என்ன ஒன்றும் அறியாதவள் போல் கேட்டாள் சுந்தரி.....

அதெல்லாம் எதுவும் பண்ணல அந்த ஏம் டி க்கு பொண்ணுங்களை கண்டாலே பிடிக்காதம் அவர் பொண்ணுங்கள செலக்ட் பண்ண மாட்டாராம் அதன் ரொம்ப கஷ்டமா இருக்கு ஆண்ட்டி....
எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா எப்படியாது இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு போகலாம்னு நினைச்சேன் இப்போ எதுவும் நடக்காததுபோல என
அவள் புலம்ப அந்த மதன் பொண்ணுங்கள வெறுப்பவனாகவே இருந்தாலும் திறமைகளுக்கு
மதிப்புக் கொடுப்பவர் கூட இருக்கலாம் இல்லையா....
எதை வச்சு வேலை கிடைக்காதுனு நீயே முடிவு பண்ணிட்ட.....

அப்படியும் கூட இருக்கலாம் ஆனாலும் ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது ஆன்ட்டி.....
அப்படி எல்லாம் பயப்பட தேவையே இல்லமா உன் திறமை மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு சோ கண்டிப்பா நீ செலக் ஆக தான் போற பாரு...

அப்படி நடந்தால் சந்தோஷம்தான் ஆண்டி சரீ ஆண்ட்டி டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் அம்மா தேடுவாங்க பாய் ஆண்ட்டி என்று கூறி விட்டு சிட்டாக பறந்தாள் ஆருணி....
ஆருணியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரி மனதில்
ஒரு ஆசை ஆருணி தனக்கு மருமகளாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என.... ஆனா அதுக்கு நம்ம பையன் ஒத்துக்கணுமே நேரம் வரும் போது இத பத்தி மதன் கிட்ட பக்குவமா பேசி சம்மதிக்க வைக்கணும்....


ஆருணி மருமகள வந்தா நல்லா இருக்கும் என நினைக்கும் போதே மிகப்பெரிய சந்தோஷம் மனதில் முழுவதும் ஆக்கிரமித்து
போன்ற ஒரு உணர்வு முகத்திலும் சிரிப்பு ஒற்றிக்கொண்டது....

தான் வீட்டிற்கு வந்ததை கூட கவனிக்காமல் ஏதோ சிந்தனையில் இருந்தா அம்மா வை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது
மதன்க்கு... மதன் கூப்பிட்ட போது கூட அவர் அதை கவனிக்காமல் எங்கோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் சுந்தரி அம்மா என்று தோளை குலுக்கினான் மதன்... அப்போதுதான் நிகழ்விற்கு வந்தால் சுந்தரி எப்போ வந்த மதன் சரிதான் நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன யோசனை அதுவும் சந்தோஷமா இருக்க போலாமா என்ன
விஷயம் அப்படி என்ன அம்மா சந்தோஷமான விஷயம்

அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா சும்மாதான் என்ன ஆருணி யை பற்றி எதையும் அவனிடம் காட்டிக் கொள்ளாமல் மறைத்தார் ஏனென்றால் ஆருணியை பற்றி தான் சொல்வதை விட அவன் அவளைப் பற்றி
அறிந்துகொள்வது நல்லது என மனதில் தோன்றியது....

என்னப்பா இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்ட அதிசயமா இருக்கு ஒன்னும் இல்லமா....
நாளைக்கு மீட்டிங் இருக்கு அப்புறம் ஒரு காலேஜ்க்கு இன்டர்வியூ பண்ண போகனும் அப்புறம் மீட்டிங்கு பைல்ஸ் எல்லாம்
கொஞ்சம் ரெடி பண்ணனும் அதான் சீக்கிரம் வந்துட்டான் மா... சரிம்மா நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன் நீங்க டிபன் எடுத்து வைங்க நான் செம பசியை இருக்கு என கூறி கொண்டே அவன் ரூமிற்கு சென்றான்

தன் மகனை பார்க்க பரிதாபமாக இருந்தது ஓடிக்கொண்டே இருக்கிறான் சரியாக சாப்பிடுவதில்லை சரியாக தூங்குவதில்லை எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறான் என்ன செய்வது மதனின் கடின உழைப்பினால் தான் இத்தனை அளவிற்கு வளர்ந்து நிற்கிறான் தொழிலதிபர்களின் முன்னிலையில் இருக்கிறான் இவனைப் பார்த்து சந்தோசப் படுவதா இல்லை வேதனைப் படுவதா என்ன புரியவில்லை சுந்தரிக்கு.....
சுந்தரி இரவு உணவு எடுத்து வைக்க சென்றுவிட்டார் அதேநேரம் மதனும் கீழே வர தன்னுடன் தாயும் உணவைத்தான் மதன்....

சுதாவிடம் புலம்பிக் கொண்டே இருந்தால் ஆருணி... ஏண்டி இப்படி பொலம்பி தள்ளுற கூல் ஏன் டென்ஷன் ஆகுற நாளைக்கு கதை நாளைக்கு பாத்துக்கலாம் இப்படி பொலம்பிட்டு இருக்கிறது மட்டும் உன் அப்பாக்கு தெரிஞ்சா உன் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிடுவாரு நான் கஷ்டப்பட்டு நீ வேலைக்கு போறதுக்கு சம்மதம் வாங்கி வச்சிருக்கேன் போய் நல்லா தூங்கு நாளைக்கு பிரஸ் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணு ..... எப்படி பொலம்புறதால எல்லாம் சாரி ஆயிடுமா இல்லை தான அப்புறம் என் எப்படி பொலம்பிகிட்டு இருக்க சாப்பிடு போய் நிம்மதியா தூங்கு எதை பத்தியும் யோசிக்காத.....

காலை சீக்கிரமாவே எழுந்து குளித்து முடித்து தன்னை தயார்படுத்திக் கொண்டள் என்றும் விட இன்று கூடுதலாக தன்னை அழகுபடுத்திக் கொண்டால் ஆருணி....
ஆருணி இயற்கையாகவே அழகுதான் அழகுக்கு மேலும் அழகு சேர்த்து பார்ப்பவர்களுக்கு தேவதை போல் காட்சியளித்தாள்......
ஆருணி கல்லூரிக்கு கிளம்புவதற்காக கீழே வந்தால் அம்மா நான் கிளம்புறேன்.....

ஆருணி அவ்வளவு அழகாயிருந்தாள் எத்தனை அழகு தன் மகள் தன் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது ஆருணிக்கு திருஷ்டி எடுத்தால் சுதா அம்மா நான் சுந்தரி ஆண்டி வீட்டுக்கு போயிட்டு அப்புறம் காலேஜுக்கு போற.....

அருணிமா சாப்பிட்டு போ.....
இல்லம்மா ஆண்ட்டி இன்னைக்கு மார்னிங் பிரேகஸ்டர் அங்க சாப்பிட சொன்னாங்கமா அவங்க சாப்பிடாம வெயிட் பண்ணுவாங்க அம்மா எனக்காக அதன் கோச்சுக்காத மா நான் கிளம்புறேன்....
சரி ஆருணி டென்ஷன் ஆகாம இன்டர்வியூ அட்டென்ட் பண்ணு ரிசல்ட் என்னவா இருந்தாலும் சரி அதை பத்தி கவலை படாதே.....
ஓகே மா.....
நான் பாத்துக்கறேன் என தன் தாயை சமாதானப்படுத்தினாள்.....
தாயுள்ளம் அதை ஏற்கவில்லை காரணம் தன் மகள் மேல் அவளுக்கு நம்பிக்கை இருந்தாலும் நேற்றிரவு அவள் கூறியதில் தன் காலேஜ்க்கு இன்று வரும் கம்பெனி ஏம் டி க்கு பெண்களை கண்டாலே பிடிக்காது என்று அவள் சொன்னது மனதில் ஒரு பயத்தை உருவாக்கியது....
அவள் செலக்ட் ஆகாமல் போனால் அவள் மனம் காயப்படும் என சுதாவின் மனம் ஒரு புறம் அவளை நினைத்துக் கொண்டே இருந்தது....தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN