சுவாசம் - 4

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 4

ஒரு பெண் சிரிக்கும் போது

அழகாகத் தெரிவாள்...
அவளை சிரிக்க வைத்து
ரசிக்கும் ஒரு ஆண்

அதை விட அழகாக தெரிவான்...!

அன்று தன் தாயின் வற்புறுத்ததால் பதிமூன்று வயதில் வீட்டை விட்டு டெல்லி போன வர்மனோ தன் தாயின் மேலுள்ள கோபத்தாலும் அவர்களே பேசட்டும் என்ற வீம்பாலும் இருந்து விட, அதன் பிறகு அவன் இங்கு வரவே இல்லை.

மகனின் விருப்பம் இல்லாமல் அவனைப் பிடிவாதமாக அனுப்பி வைத்த சந்திரவதிக்கு அன்று புற்றுநோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்க அதைத் தன் மகனிடமும் அண்ணனிடமும் மறைத்தவள் தான் படும் கஷ்டத்தை மகன் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் தன் இறுதி காலத்திற்குப் பிறகு மகன் தன்னை ஏன் அவன் தாத்தா வீட்டு உறவில் ஒட்ட விட வில்லை என்று குறை சொல்லக் கூடாது என்பதற்காகவும் மகனை தன் மாமனாருடன் அனுப்பி வைத்தாள் சந்திரவதி.

அதன் பிறகு தன் நோயை அண்ணனிடம் சொன்னாலும் கடைசி வரை தன் மகனிடம் மட்டும் தெரிவிக்கவோ பிறர் தெரியப்படுத்தவோ விடவில்லை அவள். இந்த நோயால் படாத பாடுபட்டவள் நோயின் வீரியத்தால் கடைசி காலத்தில் தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று விரும்ப மாமனின் மூலமாக அதை அறிந்த வர்மனோ தாயைப் பார்க்க வர. சந்திரவதி தன் மகனைப் பார்த்த சந்தோஷத்தில் வர்மாவின் கையைப் பிடித்துக் கொண்டே அன்றே இறந்தும் விட, தன் தாயின் இறுதிக் காரியத்தை முடித்து அங்கேயே இருந்தான் வர்மன்..

அன்று சிறுவயது பிடிவாதத்தால் தன் தாயை இழந்த அவன் தன்னை வளர்த்த தன் மாமனோட கடைசி காலத்திலாவது அவருடன் இருக்கலாம் என்று முடிவு செய்து இங்கேயே இருந்தான் வர்மன். தாயின் இழப்பு துயரத்தில் இருந்தவனை அவன் நண்பர்கள் வெளியே அழைத்து வர, அப்போது அங்கு நடந்தது தான் தேவிக்கும் அவனுக்குமான இவ்வளவு பிரச்சனை!

நான் தான் வர்மன் என்று அவன் சொன்னதும் நம்ப முடியாத தன்மையுடன் ஆ…. என்று வாய் பிளந்து அவனைப் பார்த்தாள் தேவி.

அன்று பார்த்த வர்மனுக்கும் இன்று பார்க்கும் வர்மனுக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு பட்ட வெளிச்சமாய் அவள் கண்களுக்கு தெரிந்தது. அன்று கன்னம் ஒட்டி முகத்தில் கண் மட்டும் எடுத்துக் காட்ட முட்டை கண் என்று ஒல்லியாக கருப்பாக எப்போதும் இடுப்பில் கைலியிலேயே சுற்றிக் கொண்டிருந்தவன் தான் இன்று சற்று மாநிறத்தில் இருபத்தி மூன்று வயது ஆண் மகனின் கம்பீரத்துடன் டீ ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் சகிதம் கண்ணில் பவர் போட்டிருக்க அவன் உடையும் பேச்சுமே சொன்னது அவன் நன்கு படித்த மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்று.

ஆனால் இதை எல்லாம் விட தேவியின் கண்களுக்கு அவன் ஒரு ரவுடி பொறுக்கி என்று முன்பே அவள் மனதில் பதிந்து போனதால் இப்போது அவன் தன் தாய்க்காக மொட்டை அடித்து மீசை தாடி மழித்திருந்த கோலம் கூட அவள் கண்களுக்கு அவனை ஏதோ சினிமா படங்களில் வரும் பெண்களை துரத்தும் வில்லனாகவே காட்டியது

அவள் வாய் பிளந்து நிற்கவும்
“ஏய்…. நீ கேட்ட வர்மா நான் தான்! இப்போ சொல்லு நீ யார் டி?….” என்று அவன் அதிகார தோனியில் கேட்க

“தோடா.. அதுங்காட்டியும் மறந்து பூட்சா உனுக்கு? அடேய் இடிமாடு! அப்போ நீ என்ன அடயாளம் கண்டுக்கலயா?” என்று அவள் பயமின்றி எதிர் கேள்வி கேட்கவும்..

இப்போதும் அவன் தன் விழி சுருக்கி யோசிக்க சற்று தள்ளியிருந்த அவன் நண்பர்களில் ஒருவன் அவனிடம் நெருங்கி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்
“டேய் நீ இந்த ஊரை விட்டுப் போறதுக்கு மின்ன இந்த பொண்ணு கையால தான் டா அடி வாங்கிக்கினு போன” என்று கிசுகிசுக்க, சடாரென அவன் புறம் வேகமாகத் திரும்பியவனோ “டேய் நான் அடி வாங்கினத மட்டும் சொன்னியே! திரும்ப அவளுக்கு நான் அடி கொடுத்ததை சொன்னியா டா?” என்று மூச்சுக் காற்றில் சூடேற வர்மா கேட்க

“டேய் வர்மா! அவ உன் கிட்ட மட்டும் தான் டா அடி வாங்கி இருக்கா. ஆனா அவ இதுவரைக்கும் எத்தனை பேருக்கு அடி கொடுத்திருக்கா தெரியுமா? அப்போ அதைத் தான எண்ணிக்கையா வச்சி சொல்ல முடியும்? இப்ப கூட பாரு நம்ம பாலு நெஞ்சில எப்படி ஏறி மிதிக்கிறானு!” என்று மறுபடியும் அந்த நண்பன் அவளை ஒரு திமிர் பிடித்தவள் என்கிற ரீதியில் அவளைப் பற்றி எடுத்துச் சொல்ல உடனே தன் கோபத்தை அவளைப் பிடித்திருந்த கையின் அழுத்ததில் இவன் காட்டவும், வலி தாங்க முடியாமல் அந்த ஒல்லிக் குச்சி உடம்புக் காரி ஸ்ஸ்….. ஸ்…. ஆ… என்று துடிக்க

“அடியேய் குல்ஃபி! உன்னை எங்கையோ பார்த்து இருக்கோமேனு அப்பவே நினைச்சேன் டி. இப்ப தான் தெரியுது நீ தான் அந்த ராங்கிக்காரினு! இன்னும் நீ திருந்தல இல்ல? ஒரு ஆம்பளப் பையன் நெஞ்சில காலை வச்சிருக்க? எடு டி அந்த காலை!” என்று அவன் குரலை உயர்த்தாமலே அதே நேரம் எரிமலையின் சீற்றத்துடன் அவன் வெடிக்க, தன் கை வலியையும் மீறி அவன் வார்த்தையை அலட்சியம் செய்தவளோ

“இப்போ இவன் நெஞ்சில வச்ச காலை நான் கண்டி அன்னிக்கே உன் நெஞ்சில வச்சி ருத்ர தாண்டவம் ஆடிக்கினேனு வை.. இன்னைக்கு நீ என் கையப் புடிச்சி கீய மாட்ட டா! பொறுக்கி ச்சீ….. கைய வுடுறா பரதேசி! அன்னிலிருந்து இன்னிக்கு வரிக்கும் இப்டி உன்ன மெரிக்கணும்னு தான் டா டெய்லி உன்ன தேடிக்கினேன்” என்று அடிபட்ட பாம்பென அவள் சீற,சிற்பிக்கோ ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சி!

“என்னது? தினம் தினம் என்ன தேடினாளா? ஒரு ஆண் மகனான நானே அன்றைய விஷயத்த மறந்துட்ட போது இவ ஏன் மறக்காம இருக்கா? அதிலும் என் மேல இவ்வளவு வன்மத்தை வளர்த்துக் கொண்டு! இவள் இன்று சொல்லும் வரைக்குமே எனக்கு இவள் முகம் ஞாபகம் இல்லையே?” என்று மனதால் பலதையும் நினைத்தவனோ அதை எல்லாம் விடுத்து அவள் சொன்ன பொறுக்கி என்ற வார்த்தையை மட்டும் எடுத்தவனோ

“ஆமா டி.. நான் பொறுக்கி தான்! அப்போ பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டவனோ அவளை உச்சி முதல் பாதம் வரை விழுங்கும் பார்வையால் மொய்க்க, இதுவரை நெஞ்சை நிமிர்த்தி இருந்தவளோ இப்போது அவன் பார்வையில் கூனிக் குறுகிப் போய் கீழே விழுந்து இருந்தவனின் நெஞ்சிலிருந்து காலை எடுத்தவளோ

“கைய வுடுடா பொறுக்கி! நான் போறன்..” என்று கூறி தன் கையை அவனிடமிருந்து விடுவிக்க அவள் போராட, இன்னும் அவள் கையை அழுத்திப் பிடித்தவனோ

“அப்பறம் என்ன டி சொன்ன? என் நெஞ்சில காலை வைக்கணும்னு தான ?அப்படி மட்டும் நீ வச்சி இருந்தா நான் சும்மா இருப்பனு நினைக்கிறியா?” என்று அவன் ஆழ்ந்த குரலில் சொல்ல, என்ன செய்திருப்பான் என்று ரதிதேவி யோசிக்கும் போதே அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தவனோ

“உன்ன நாஸ்தி பண்ணி இருப்பன் டி!” என்றான் நிதானமாக.

அவன் குரலை விட அவன் கண்ணில் வந்து போன குரோதத்தில் தேவியின் உடல் தானாகவே நடுங்க ஆரம்பித்தது. அந்த நடுக்கத்தை அவளைப் பிடித்திருந்த கையில் உணர்ந்தவனோ மேற்கொண்டு அவளைச் சீண்ட நினைக்க, அதே நேரம் அவன் கைப்பேபேசி அழைக்கவும் எடுத்துப் பார்க்க நிரல்யா காலிங் என்று வரவும் முகத்தில் ஒரு மென்மை பரவ அதைப் பார்த்தவனோ சட்டென அவள் கையை உதறியவனோ

“ஒழுங்கா ஓடிப் போ. இனிமே எவன்கிட்டவாது நீ வம்பு பண்ணுறதைப் பார்த்தேன் பிறகு உன்னை என்ன செய்வனே தெரியாது” என்று மிரட்டி அவளை அனுப்பினான் சிற்பிவர்மன்.

இதுவரை அவனிடம் எகிறியவளோ கடைசியாக அவன் சொன்ன வார்த்தையிலும் பார்வையிலும் விதிர்விதிர்த்துப் போய் மவுனமாக விலகிச் சென்றாள் தேவி. அவள் அந்த தெருவைத் தாண்டும் வரையுமே விடாமல் அழைத்துக் கொண்டேயிருந்த போனை அவன் ஆன் செய்ய

“போன் எடுக்க இவ்வளவு நேரமா? அப்படி எங்கடா போன?” என்று எடுத்தவுடனே உரிமையாகக் கேட்டது ஒரு பெண் குரல்.

“இப்போ நீ எதுக்கு டி பண்ண? முதல்ல அத சொல்லு”

“……” அந்த பக்கம் அமைதியாக இருக்கவும்

“உன் கிட்ட தாண்டி கேட்குறன். இப்போ எதுக்கு போன் பண்ண?”

“டேய் சும்மா அடங்குடா! நீ எகிறினா நான் அடங்கறவனு நினைச்சியா? அதெல்லாம் என் கிட்ட வேலைக்கு ஆகாது தம்பி” என்றவள் “இப்போ நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு. எதுக்கு தாத்தா பாட்டி எல்லாம் வேணாம் சொல்லிட்டு அங்கே சென்னையிலேயே இருக்க போறனு சொன்னியாம் பாட்டி என் கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப் பட்டாங்க. வேணும்னா உன் மாமாவையும் இங்க கூட்டிகிட்டு வரச் சொல்றாங்க. அதனால நீ அவரையும் கூட்டிட்டு இங்கேயே வந்திடுடா…..” அவள் முடிக்க கூட இல்லை

“நான் அங்க வர மாட்டேன் டி. இனிமே என் கடைசி காலம் எல்லாம் என் மாமாவோட தான். அவரும் அங்க வரமாட்டார். அதனால இனி எங்களை எங்க இஷ்டத்துக்கு வாழ விடச் சொல்லு அந்த பெரியவர”

“டேய் அவர் உன் தாத்தா டா!”

“அதனால தான் பெரியவர்னு சொன்னேன்”

உன் அம்மா இல்லாத இடத்துல நீ ஏன் டா தனியா இருக்கணும்?”

“என் அம்மா உயிருடன் இருக்கும் போதே அவங்க கிட்ட இருந்து என்ன பிரிச்சவர் தானே இவர்? இவ்வளவு நாள் அங்க இருந்ததே அதிகம். அதனால இனி என்னை அங்க வரச் சொல்லாத” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் வர்மன்.

வர்மா இங்கிருந்து அவன் தாத்தாவுடன் ஊருக்குப் போன மறுநாளே அவன் அப்பா ஞானேந்திரன் இறந்து விட தன் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த வர்மனை அவன் தந்தைக்கு இறுதிக் காரியம் செய்யச் சொல்லி அங்கு வந்திருந்த அத்தனை பேர் சொல்லியும் எதுவும் செய்யவில்லை அவன்.

அந்த கோபத்தில் அவன் பாட்டி கங்கேஸ்வரி அவனிடம் எந்த ஒட்டுதலும் இல்லாமல் விலகியே இருக்க, திருநீலகண்டனோ அவனுக்கு வேண்டியதை எல்லாம் அவன் கேட்காமலே செய்தவர் படிக்க வைத்தவர் ‘நீ வரியா வா இருக்கியா இரு போறியா போ’ என்ற படி தன் கவுரவத்துக்காக அவனைத் தன் பேரன் என்று சொல்லிக் கொண்டார் அவர்.

அதனாலோ என்னவோ தனிமையில் இருந்த அவனுக்குத் துணையாக ஆகிப் போனாள் நிரல்யா. அவனை விடச் சிறியவள். இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படிக்க சாப்பாட்டு நேரத்தில் தனியாக அமர்ந்திருக்கும் வர்மனிடம் வந்து வள வள என பேசிய அவளை மிகவும் பிடித்தது வர்மனுக்கு.

அப்படி ஆரம்பித்த நட்பு இன்று வரை வளர்ந்து பி.எல் படித்த சிற்பியை வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு வளர்ந்தது.

மாடலிங் படித்து வரும் நிரல்யாவிற்கு கல்லூரியில் விடுமுறை கிடைக்காததால் வர்மனின் தாய் சாவுக்கு அவள் வரவில்லை. அது தான் இப்போது அவனுடைய கோபத்திற்குக் காரணம். அவன் தாத்தா பாட்டி கூட வராததை எல்லாம் அவன் நினைக்க கூட தயாராக இல்லை. ஆனால் தன் தோழியான தனக்கு இருக்கும் உறவான நிரல்யா வர வேண்டும் என்று எண்ணினான் அவன்.

அதன் பிறகு அந்தக் குப்பத்தில் கோவில் திருவிழா வர ஒரு நாள் பக்கத்துக் குப்பத்து பையன் ரதியின் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் காலையில் இருந்து அவளைச் சீண்டி வரம்பு மீறி வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.

இரவு கூத்தின் போது ஊரே அங்கு கூடியிருக்க இருட்டில் ஒதுக்குப் புறமாக அந்த பெண் ஒதுங்க அதைப் பயன்படுத்திக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்து சென்ற அந்த இளைஞன் சற்று வரம்பு மீறி நடக்க அதில் அவள் பயத்தில் கை கால் உதற அழுது கொண்டு நிற்கவும் எதிர்பாராமல் அங்கு வந்த சிற்பியோ அவனின் நோக்கம் உணர்ந்து அவனை அடித்துப் பின்னி எடுக்க ஒரு கட்டத்திற்கு மேல் அடி பொறுக்க முடியாமல் சிற்பியிடமிருந்து தப்பி ஓடி விட்டான் அந்த இளைஞன்.

அதே நேரம் அங்கு தேவி வர சிற்பி ஒரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்தவள் அந்த பெண்ணிடம் அவன் வரம்பு மீறினால் கத்தி ஊரையே கூட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அவள் சற்று மறைந்து நின்று அவர்களைக் கவனிக்க..

“இப்போ என்ன நடந்துடுச்சினு அழற? வயசுப் பொண்ணுனா இப்படி நடக்கறது எல்லாம் சகஜம் தான். நடந்தது நடந்து போச்சி. அதுக்காக ஏன் இன்னமும் இப்படியே நிற்கிற? போய் மறுபடியும் உட்கார்ந்து கூத்து பார். இல்லையா வீட்டுக்குப் போ” என்று அதட்ட, அந்த பெண்ணோ எந்த பதிலும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்கவும் அதில் கோபமுற்றவன்

“இங்க நடந்தது யாருக்கும் தெரிய வேணாம்னு நினைக்கிறேன். ஆனா விட்டா நீ அழுதே ஊரைக் கூட்டி சொல்லிடுவ போல. இதுக்கு மேல இங்க நிற்காம ஒழுங்கா வீடு போய் சேரு. ம்ம்.. போ போ..” என்று அவன் மீண்டும் விரட்ட அழுது கொண்டே அந்த பெண் நகரவும்

“ஏய் நில்லு! பிடிச்சி இழுத்ததுல பின்புற ஜாக்கெட் கிழிஞ்சிருக்கு பாரு. தாவணியால போர்த்திகிட்டு போ” என்று அவன் கட்டளை இடவும் அதன்படியே செய்தவளோ விட்டால் போதும் என்று ஓடி விட்டாள் அவள்.

இதை எல்லாம் துண்டு துண்டாகக் கேட்ட தேவியோ சிற்பி தான் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து விட்டு இப்போது மிரட்டி அனுப்பி வைக்கிறான் என்று நினைத்தவள் அந்த பெண் போனதும் மறைவில் இருந்து வெளியே வந்து

“டேய் சோமாரி! கயிதை! கஸ்மாலம்! உனுக்கு அல்லாம் ஈவு இரக்கம் மனசாட்சி கீதா இல்லையா டா?” என்று தேவி மரியாதை இல்லாமல் கத்தவும், அவள் குரலைக் கேட்டு குதூகலத்துடன் திரும்பி ஏய் குல்ஃபி என்று அழைக்க வந்தவன் அவள் கத்தலில் அதை மாற்றி

“அடச்சீ.. ஏன் டி இந்த இரவு நேரத்துல இப்படி கத்தற?” என்று அவன் கோபப் பட

“நான் அப்டி தான் கூவுவேன். அந்த பொண்ண பார்த்தா ரொம்ப சின்ன பொண்ணா கீது. அதாண்ட போய் உன் ஆம்பள திமிர காட்டினு கீற இல்ல? ரவ கூட வெக்கமே இல்லாம நீ செஞ்சிகினு என்ன கூவ வோணாம்னு அதட்டுறியா?”

“அடிங்க…. யார் டி இவ? நான் தப்பா நடந்துகிட்டத நீ பார்த்தியா டி? ஆளும் மூஞ்சியும் பாரு.. வந்துட்டா பெரிய நியாயவாதி! என்னமோ கண்ணால பார்த்த மாதிரியே கத்திட்டு இருக்கா. மறுபடியும் நீ கத்தி பாரு அடிச்சி மூஞ்ச மொகர எல்லாம் பேத்துடுவேன்” என்றவன் கண்ணில் வெறுப்புடன் அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு அவளிடம் நெருங்கினான் சிற்பி.

பின்ன? அந்த பெண் சம்பந்தப்பட்ட விஷயம் வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அவன் நினைத்திருக்க இவளோ அந்த பெண்ணுடன் தன்னை சம்மந்தப்படுத்திப் பேசியது மட்டுமில்லாமல் கூடவே ஊரைக் கூட்டுவது போல் கத்தவும் அவனுக்கு வந்ததே கோபம்..

“ஏய் நாதாரி பயலே…. அந்த பொண்ண மெரட்டி உருட்டுனா போல எனுக்கும் மெர்சல் காமிக்கிறியா? நீ குடுக்குற இந்த சவுண்டுக்கெல்லாம் இந்த ரதிதேவி அசர மாட்டா. நீ என்ன அடிச்சி கொண்ணுகினாலும் சரி நான்….”

“ப்ம்ச்....” என்ற நீண்ட நெடிய சத்தம் ஒன்று இருட்டை கிழித்துக் கொண்டு அந்த இடமெங்கும் எதிரொலிக்கவும் தான் தேவி உணர்ந்தாள் அவன் தன் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டித் தன் இதழ்ழோடு அவன் இதழ் பொருத்தி முத்தம் தந்தான் என்பதை!

அவனோ அவள் சொன்ன ரதிதேவி என்ற பெயரில் புருவம் வில் என வளைய ஆச்சரியத்துடன் உள்ளுக்குள் ரசித்தவனோ அவள் தன்னை நம்பாமல் கத்திக் கூப்பாடு போடவும் கோபத்துடன் மிரட்ட அவளிடம் நெருங்கியவனோ அவள் இருகைகளைப் பின்னால் பிடித்துக் கொண்டு ஒரு கையால் அவள் வாயை மூட நினைக்க ஆனால் அவள் அல்லி இதழ்களை நெருக்கத்தில் பார்க்க அவனையும் மீறி நடந்தது தான் இந்த இதழ் ஒற்றல்!

முதலில் அவன் தந்த முத்தத்தில் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் இருந்தவளோ பின் அவனிடமிருந்து திமிர அதை உணர்ந்தவனோ தன் முகத்தை மட்டும் விலக்கி அவள் விழிகளை அசராமல் பார்த்து

“ஏய்…. குல்ஃபி! ஒரு முத்தம் தான் டி! அதுவே மாமாவ உள்ளுக்குள்ள என்னென்னமோ செய்து டி.. அதை எப்டி சொல்ல? சும்மா நீ திமிர திமிர உன்ன என் தோள் மேல தூக்கிப் போட்டுட்டு போய் யாரும் இல்லாத இடத்துல நீ கதற கதற உன்ன முழுசா ஆளணும் டி!” என்று கண்ணில் குறும்பாய் உதட்டைக் குவித்து ஓர் பறக்கும் முத்தத்துடன் அவன் சொன்ன நேரம் என்ன நேரமோ பாவம் ஒரு நாள் அவன் சொன்னது தான் நடக்கப் போகிறது என்பதை அவன் அறியவில்லை.

அவன் கொடுத்த முத்தத்தில் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தவளோ இப்போது அவன் சொன்ன வார்த்தையில் வெளிப்படையாவே உடல் நடுங்க கண்ணில் கண்ணீர் வழிய அவள் தேம்பவும் அதை பார்த்தவனோ அவளை விட்டு விலக அடுத்த நொடியே மரத்திலிருந்து விழும் சருகென கீழே அமர்ந்தாள் தேவி. அவளுடனே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவனோ

“ஏய் குல்ஃபி! என்ன நடந்துச்சினு இப்ப அழற? கத்தி ஊரைக் கூட்டி நீ மரியாதை இல்லாமல் பேசுன. அதான் உன்னோட வாய் அடைச்சேன்...” என்று அவன் திமிராகச் சொல்ல அந்த வார்த்தைகளில் முன்பை விட அவள் தேம்பவும்

அவள் தேம்பலை நிறுத்துவாள் என்று பொபறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் அதை அவள் செய்ய மாட்டாள் என்றதும் இறுதியில் “ரதிதீதீதீ!...” என்று அவன் உரக்க அழைக்கத் தன் தேம்பலை நிறுத்தி அவள் அவன் முகம் பார்க்கவும் அவள் விழிகளைப் பார்த்தவனோ

“இங்க பார், நான் ஒன்னும் சும்மா சொல்லல. நீ இப்படியே உட்கார்ந்து அழுதுட்டு இருந்தினா நிச்சயம் நான் சொன்னத செய்வன். அது நடக்கனும்னா இங்கேயே இரு. இல்ல வேணாம்னா ஒழுங்கா எழுந்து வீட்டுக்குப் போற வழியப் பாரு” என்று அவன் கொஞ்சமும் பிசிர் இல்லாத குரலில் சொல்லவும் விறு விறுவென அங்கிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தாள் தேவி.

சிற்பிக்கோ ஆச்சரியம்! “என்னமா சண்டை போட்டா கத்தினா?! ஆனா இவ்வளவு பலவீனமா இருந்து அழறது மட்டும் இல்லாம பெட்டிப் பாம்பா அடங்கிப் போறாளே?!’ என்ற எண்ணம் தான் எழுந்தது அவனுக்குள்.

பாவம் அவனுக்குத் தெரியாதே? தன் தாயின் நடத்தைக்குப் பிறகு என்ன தான் தேவி தைரியமாக இருந்தாலும் இந்த மாதிரி பேச்சுக்கும் நடத்தைக்கும் அவள் முழுவதுமாக உள்ளுக்குள் சுருங்கிப் போய் விடுவாள் என்று!


வீட்டுக்கு வந்தவளால் எளிதில் அவன் தந்த அதிர்ச்சியிலிருந்து வெளி வர முடியவில்லை. அதிலும் ஏதோ தான் தவறு செய்தது போல் தவித்தவள் அவளுக்கு இருந்த மன உளைச்சலில் ஜுரமே வர இரண்டு நாள் படுத்த படுக்கையாய் இருந்தாள் தேவி .இந்த சம்பவத்திற்குப் பிறகு இரண்டு பேருக்கும் சந்திப்பதற்கான வாய்ப்பே அமையவில்லை.

அதன் பிறகு ஒருவாரம் கழித்து இரண்டு குப்பத்து பசங்களுக்குள்ளேயும் அடி தடி பிரச்சனை வர அதில் தன் நண்பனை அடித்தவனை சிற்பி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க அந்த சூழ்நிலையில் தான் மறுபடியும் அவனைப் பார்த்தாள் தேவி.

அடி வாங்கிய அந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்க அவனோ அந்த ஊர் கவுன்சிலர் மச்சான் என்பதால் அவனை அடித்தது யார் என்ன ஏது என்று போலீஸ் இவர்கள் குப்பத்திற்கு நேரில் வந்து விசாரிக்க குப்பமே சிற்பியைக் காட்டிக் கொடுக்காமல் அமைதி காக்க

ஆனால் தேவியோ அவன் மேல் இது நாள் வரையிருந்த கோபம் ஆத்திரம் வஞ்சம் எல்லாம் சேர்த்து சிற்பி தான் குற்றவாளி என்று போலீஸில் சொல்லி தீர்த்துக் கொண்டாள் சிற்பியின் மேலிருந்த வன்மத்தை.

அன்று ஊரார் பார்க்க அவள் மேல் கொலை வெறியுடன் ஜீப்பில் ஏறியவன் தான் சிற்பிவர்மன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN