சுவாசம் - 8

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 8

தேவதை போல
ஒரு மனைவி
கிடைக்க வேண்டும்
என்பதை தாண்டி
கிடைக்கும் மனைவியை
தேவதையாக
பார்த்துக்கொள்ள
விருப்புகிறவன் தான்
உண்மையான கணவன்…!

தேவி அமர்ந்திருந்த கோலம் பார்த்து உள்ளுக்குள் அவனுக்குப் பிசைந்தாலும் அதைத் தவிர்த்தவனோ இப்போதும் எந்த சத்தமும் இல்லாமல் இருண்டிருந்த அந்த அறையை வெளிச்சமாக்க விளக்கைப் போட அந்த சத்தத்தில் உள்ளம் பதற உடல் உதறி தேவி திடுக்கிட்டு கண் திறக்கவும் அவள் பயம் பார்த்து உள்ளுக்குள் நொந்தவனோ முதலில் அவளிடம் தன்மையாகப் பேச நினைத்து பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு

“எனக்குத் தெரியும் டி நீ இப்படி தான் பண்ணுவேனு.. தூங்காமலே சும்மா தூங்கின மாதிரி நடிச்சி எந்த சத்தமும் போடாம இருக்கியா? அதுவும் யார் கிட்ட? என் கிட்டயே உன் நடிப்ப காட்டுற? இது தான் உன் தைரியமா டி? எப்போதும் புலி மாதிரி சீறுவ. இப்போ எங்க போச்சு உன் வீரம் எல்லாம்? தடை சொல்லாமல் நீ கல்யாணத்துக்கு சம்மதித்து நம்ம கல்யாணம் நடந்த போதே நான் என்ன நினைத்தேன் தெரியுமா? தினம் தினம் நமக்குள்ள கத்தி இல்லாம வாள் இல்லாம ஒரு பெரிய போரே இருக்கும்னு நினைச்சேன்.

நீ அப்படிப் பட்ட வீர மங்கை தைரியசாலினு இல்ல நினைச்சேன்.. இது தான் உன் தைரியமா? கடைசியில இப்படி ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கியே டி! ஆஹா…. ஓரே நாளிலேயே உன்னை அடக்கிட்டேன் பார்த்தியா?” என்று அவளை நையாண்டி செய்தவன் இடது கையால் தன் தலை கோதி வாய் விட்டுச் சிரித்தவனோ இறுதியாக “அட ச்சீ….. எழுந்திரு டி அந்த இடத்தை விட்டு!” என்று அதட்ட

சிற்பி இந்த அறைக்கு வர வழியே இல்லையென்று நினைத்திருந்த அவள் முன் அவன் திடீரென வந்து நிற்கவும் அந்த அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்த ரதி என்னும் சிலைக்கு அவன் சிரிப்பும் அதட்டலும் உயிர் கொடுக்க

“ஏய்…. ஏய்… நீ எப்படி டா உள்ளே வந்த பொறுக்கி?” என்று தேவி கூச்சல் இட, அவள் போட்ட கூச்சலில் குழந்தை சிணுங்கலுடன் அழ ஆரம்பிக்கவும்

“மடச்சி மடச்சி! கொஞ்சமாவது அறிவு இருக்கா டி உனக்கு? இவ்வளவு நேரம் நான் கத்தியா பேசினேன்? ஆனா பாரு நீ கத்தி குழந்தையை எழுப்பிட்ட” என்று அவளைக் கண்டிக்க உண்மை தான் இவ்வளவு நேரம் அவன் பேசிய போது கேலி கிண்டல் இருந்ததே தவிர குரல் உயர்த்தி அதட்டி அவன் பேசவில்லை தான். அவள் மடியிலிருந்த குழந்தையைக் குனிந்து தூக்கித் தன் கையில் ஏந்தியவன்

“என் செல்லமா! இப்போ ஏன் அழறாங்க.. இதோ அப்பா வந்துட்டேன் பாருங்க.. என் சந்திராம்மா எப்போதும் அழக் கூடதாம். அது அப்பாவுக்கு பிடிக்காது இல்ல? அழாத மா” என்று அங்கிருந்த ஸோஃபாவில் அமர்ந்து குழந்தையைத் தன் மடியில் வைத்து இதமாகப் பேசி குழந்தையை அவன் தட்டிக் கொடுக்க குழந்தையோ தன் சிப்பி விழியால் தன் தகப்பனை இரண்டு முறை இமை தட்டப் பார்த்தவள் பின் கண்களை மூடி சமர்த்தாக தூங்க ஆரம்பித்தாள்.

சிற்பி உள்ளே வந்ததிலே அதிர்ச்சியாய் இருந்த ரதி பிறகு அவன் பேசியதையும் அவளிடமிருந்து குழந்தையை வாங்கியதிலேயே அதிர்ந்து இருந்தவள் இப்போது அவன் குழந்தையை சர்வசாதாரணமாக கொஞ்சி தட்டிக் கொடுத்து தூங்க வைக்கவும் ரதிக்கு அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியம்.

தூக்கத்தில் ஒரு முறை மகள் எழுந்து விட்டால் பிறகு அவளை சமாதானப் படுத்தி தூங்க வைப்பது என்பது ரதிக்கு பிரம்ம பிரயத்தனம். ஆனால் இன்று சிற்பி தூக்கி இரண்டு வார்த்தை கொஞ்சி சொன்னதில் என்னமா தூங்கி விட்டாள் இவள் என்பது தான் அது. அதில் இன்னும் அதிர்ந்து போய் அவள் அமர்ந்து விட குழந்தை தூங்கியதும் அங்கிருந்த தொட்டிலில் படுக்க வைத்தவன் இன்னும் விலகாத அதிர்ச்சியுடனே அமர்ந்திருக்கும் ரதியைப் பார்த்து

“இப்போ எதுக்கு இந்த முழி முழிச்சிட்டு இப்படியே உட்கார்ந்து இருக்க? எழுந்து போய் வேற புடவை மாத்திட்டு வா” என்று அவன் கட்டளை இட, அமர்ந்திருந்த இடத்திலிருந்தே எழுந்து நின்றவள்

“டேய் பொறுக்கி நாயே நீ எப்படி டா உள்ளே வந்த? நாய் கூட திறந்திருக்கற வீட்டுக் குள்ள தான் டா வரும். நீ அதை விட கேவலமான ஜென்மம் டா! அதான் பூட்டியிருக்கிற வீட்டுகுள்ள வந்திருக்க. என்ன சொன்ன நீ என்னை அடக்கிட்டியா? என்னை சீரழிச்ச உன்னையே நான் கல்யாணம் பண்ணவுடனே என்னையும் மத்த சராசரி பொண்ணுங்க லிஸ்ட்ல சேர்த்துட்டியா டா? நீ எப்படி இருந்தாலும் உன்னத் திருத்தி கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு உன் கால்லயே விழுந்து கெடப்பேன்னு நெனச்சியா டா?

ஆனா ஒன்று மட்டும் நடக்கும் டா அது நீ சொன்ன மாதிரி தினம் தினம் நமக்குள்ள போர் தான் டா நடக்கப் போகுது. எப்போதும் அது வெறும் பனிப் போரா இருக்கும்னு நெனைக்காத. பல சமயம் அது பகிரங்கமான போராவே இருக்கும். நான் உன்ன கல்யாணம் பண்ணதே அதுக்குத்தான.. டெய்லி என் டார்ச்சர் தாங்க முடியாம நீ துடிக்கணும் டா. உன்ன வாழவும் விட மாட்டேன் சாகவும் விடமாட்டேன். அதுதான் நான் உனக்கு குடுக்கப் போற தண்டனை டா பொம்பள பொறுக்கி..”

கோபத்தில் மேற்கொண்டு என்னவெல்லாம் பேசி இருப்பாளோ? ஆனால் அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே குழந்தையை ஒரு பார்வை பார்த்த சிற்பியோ பிறகு ஒரு முடிவுடன் அவளிடம் நெருங்க எங்கே ஆத்திரத்தில் சிற்பி தன்னை அடிக்கத்தான் வருகிறானோ என்று பயந்தவள் வார்த்தையை அத்தோடு நிறுத்தி விட்டுத் தன் இரண்டு கைகளையும் தூக்கி தடுக்க முற்பட்டு முகத்தை மறைத்த படி கதவோடு ரதி பயத்தில் ஒட்டி நிற்கவும்

உதட்டில் ஏளன வளைவுடன் அவளைப் பார்த்தவன் என்ன டி வீர மங்கை! இவ்வளவு தான் உன் வீரமா? என்னமோ ஜான்சி ராணி ரேஞ்சுக்கு கையில வாள் கொண்டு வீசாத குறையா வார்த்தை என்னும் வாளால் வீசின. அதுவும் நான் நாயாம் பொறுக்கியாம்! ம்ம்ம்…. இன்னும் என்னெல்லாமோ சொல்லி உன் புருஷனைப் புகழ்ந்து இருப்ப. எனக்கும் அந்த புகழ்ச்சிய எல்லாம் உன் வாயால கேட்க ஆசை தான்.

ஆனா இப்போ அதற்கான நேரம் தான் நமக்கு இல்லையே! நமக்கு இன்னைக்கு முதல் ராத்திரி இல்ல? அப்போ அதற்கான வேலைய இல்ல நாம பார்க்கணும்? நீ பாட்டுக்கு உணர்ச்சி வேகத்துல கொஞ்சம் சத்தமா என்ன புகழ்ந்து தள்ள அந்த சத்தத்துல மறுபடியும் என் மகள் எழுந்துட்டாள்னா பிறகு என்னால எப்படி டி இன்று இரவுக்கான வேலையைப் பார்க்க முடியும்?

அதான் அன்று மாதிரி ஒரு முத்தம் கொடுத்து உன் வாய அடைக்க உன்ன நெருங்கினன். நீ என்ன நினைச்சிட்ட? நான் உன்ன அடிப்பேன்னு பயந்துட்ட போல! ச்சே ச்சே.. நான் உன்ன அப்படி செய்வேனா? வேணும்னா நீ மறுபடியும் என்ன புகழ்ந்தோ இல்ல கத்தியோ பாரேன் நான் சொன்னத செய்றனா இல்லையானு உனக்கே தெரியும்” என்று கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவளைக் கிண்டல் செய்தவன்

இறுதியாக அவள் இதழ்களைப் பார்த்துக் கொண்டே அவள் வலது புற பக்கத்துக் கதவில் ஒரு கையை ஊன்றிய படி அவன் அவளிடம் நெருங்கவும் அதில் அவன் நோக்கம் புரிந்து பயத்தில் உடல் உதற இரு கைகளால் தன் முகத்தை மூடிய படி கதவு புறம் திரும்பி நின்றவளோ

“வேண்டாம் வேண்டாம்.. அப்படி செய்யாத!” என்று பதறித் துடித்துக் கெஞ்ச, அவள் பதட்டத்தையும் துடிப்பையும் கெஞ்சலையும் பார்த்தவனின் முகத்திலிருந்த குறும்பும் சிரிப்பும் மறைய எதையோ வாய்க்குள் முணுமுணுத்தவன்

“நான் அப்படி எதுவும் செய்யக் கூடாதுனா நான் சொல்ற படி கேட்டு நான் கொடுக்கற புடவையக் கட்டிட்டு வா” என்று அவன் அதே விஷயத்திலேயே குறியாக நிற்க, அவன் புறம் திரும்பியவளோ

“எதுக்கு நீ கொடுக்கறதை நான் கட்டனும்? மரியாதையா இந்த ரூம விட்டு வெளிய போ டா பொறுக்கி!” என்று மீண்டும் பழைய ரதியாக அவள் ஆவேசப் பட

பட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்து அவளைத் தன் மேல் சாய்த்தவனோ அவள் விலக இடம் கொடுக்காமலே அவள் முகம் நிமிர்த்தி அவள் இதழில் தன் இதழ் பொறுத்த அவன் வர அப்போது அவள் கண்ணில் பயத்தையும் மீறி ஒரு உயிர் வலியை பார்த்ததும் அதைச் செய்யாமல் விட்டவன்

“திரும்பத் திரும்ப என்ன சொல்ல வைக்காத. அதுவும் இன்று ஒரு நாள் தான் இப்படி சொல்லிட்டு இருப்பேன். என்னை மரியாதை இல்லாம நீ பேசினாலோ இல்ல நடத்தினாலோ அதே இடத்துல அத்தனை பேர் பார்க்க என் இதழோடு உன் இதழ் பொறுத்தத் தான் செய்வேன். அது தான் உனக்கு வேணும்னா தாராளமா உன் இஷ்டப் படி நடந்துக்க. நான் சொன்னா அதையே செய்றவனு உனக்கே தெரியும் இல்ல?” என்று அவனுக்கே உரிய பாணியில் நிதானமாக அவன் எடுத்துரைக்க அவளுக்கு எப்போதும் போல் அந்த வார்த்தையில் உடல் நடுங்க ஆரம்பித்தது. அதை உணர்ந்தவனோ

“ஏய்.. எதுக்கு அடிக்கடி இப்படி பயந்து சாகற? அப்படியே உனக்கு முத்தம் கொடுத்தாலும் நான் யாரு உன் புருஷன் தானே?” என்று அவன் கோபப் பட, அவன் பிடியிலிருந்து விடு டா என்னை என்ற சொல்லுடன் திமிர நினைத்தவள் அந்த டா வை விடுத்து

“ச்சீ.. என்னை விடு!” என்ற சொல்லுடன் திமிரி விலகியவள்
“ஓ… தாலினு ஒன்னு கட்டிட்டா நான் உன் பொண்டாட்டி நீ என் புருஷன்! அதனால உன் உரிமைய நிலை நாட்டவும் உனக்கு வேண்டியதை எடுத்துக்கவும் வந்திருக்க.. அப்படி தான?

சரி.. இப்போ நான் உன் மனைவி அதனால என் விருப்பம் இல்லாம உன் வெறிய தனிக்க நினைக்கிற. ஆனா அன்னைக்கு நான் யார்? அன்று உன் வெறியைத் தனிக்க பழி என்ற போர்வையில நான் உனக்குத் தேவைப்பட்டேன் இல்ல? அப்போ நீ என்னை உனக்கு உடம்பு சுகத்தைக் கொடுக்கும் வேசியா இல்ல பார்த்து இருக்…” மேற்கொண்டு தொடற விடாமல்

“ரதீஈஈஈஈஈ!…. என்ற சிற்பியின் கத்தல் அதைத் தடுத்திருந்தது.

“ஏய்….. என்ன பெரிய ஆதார்ஸ கணவன் மாதிரி இந்த வார்த்தையக் கேட்டு கோபம் எல்லாம் படற!” என்று அவன் கோபத்தையும் கத்தலையும் பார்த்துக் கேலி செய்தவள்

“என்னை முதல் முறையா பார்த்ததுல இருந்து லவ் பண்ணினேனு சொல்லப் போறியா? அந்த கரைகாணாத காதல்னால தான் முன்ன பின்ன தெரியாத எனக்கு முத்தம் கொடுக்கவும் அதே மாதிரி என்ன கடத்திட்டுப் போய் சுயநினைவை இழக்க வைத்து என்னையும் என் பெண்மையையும் நாசம் பண்ணினேனு சொல்லப் போறியா?

இதை ஏன் கேட்கறனா இப்படி ஒரு கேவலத்த செய்துட்டு இறுதியா உன் மேலிருந்த காதல்னால தான் இந்த மாதிரி நடந்துகிட்டனு தானே உங்களை மாதிரி ஆண்கள் சொல்லித் தப்பிச்சிகிட்டு வரீங்க. ஆனால் இப்படி பட்ட கேடுகெட்ட உணர்வுக்குப் பெயர் காதல் இல்ல காமம்னு நான் சொல்லுறேன்” என்று ரதி ஆணித்தரமாக சொல்ல

“அட ச்சீ போதும்.. நிறுத்து டி! ஒரு முத்தம் கொடுத்தது என்ன உலகமகா குத்தமா டி? அதுக்குப் போய் இவ்வளவு கேவலமா எல்லாம் பேசுற?” என்று சிற்பி எதிர் வாதிட

“பின்ன.. இல்லையா? இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிற ஒரு பொண்ணு கிட்ட மனசால நெருங்க ஆசைப் படாம உடம்பால நெருங்கினா அது அவளை ஆடை இல்லாமல் முச்சந்தியில ஆயிரம் பேர் பார்க்க நிற்க வைச்சதுக்கு சமம்னு உனக்குத் தெரியலையா?

நீ எனக்கு செய்த கொடுமையால இன்று தாம்பத்தியத்த கனவா நினைக்கவோ இல்ல அப்படி ஒரு வார்த்தையைக் கேட்டாலே என்னையும் மீறி பயத்தில் என் உடம்பு நடுங்குதே அதைப் பார்த்துக் கூடவா உனக்கு மனசு சுடலை? இப்படி கசாப்பு கடைக்காரன் மாதிரி என் சதை தான் வேணும்னு இன்றே வந்து நிற்கிறியே, உனக்கு ஈவு இரக்கமே இல்லையா?”

என்னைத் தொடாதே என்று அவனிடம் கெஞ்சவில்லை ரதி. அதற்கு பதில் சாட்டை என்னும் வார்த்தையால் சிற்பியை விலாசினாள் அவள். ரதி மற்றவர்களைப் போல் சாதாரண பெண் இல்லை என்பது சிற்பிக்குத் தெரியும். இவர்கள் வாழ்வு சாதாரணமான திருமண வாழ்வாக இருக்காது என்பது தெரிந்து தான் அவள் கழுத்தில் தாலியே கட்டினான் சிற்பி. ஆனால் இன்று அவள் பேசிய பேச்சில் ரதியை மாற்றுவது பிரம்மப் பிரயத்தனமாக இருக்குமோ என்று தான் அவனுக்குப் பட்டது.

‘இப்போது கூட தன்னை ஒருமையில் அழைக்கிறாளே தவிர முன்பு போல் மரியாதை இல்லாமல் தன்னை அழைக்கவில்லை. அதற்கு நான் இவளை அடித்து விடுவேனோ என்ற பயம் இல்லை அந்த அடியைக் கூட இவள் வாங்கிக் கொள்ள தயார் தான். ஆனால் நான் முத்தம் கொடுப்பேன் என்று சொன்ன அந்த வார்த்தைக்குப் பயந்து தான் அப்படி அழைப்பதை நிறுத்தி விட்டாள். அந்த அளவுக்கு என்னை வெறுப்பவளை நான் என்ன செய்து என்ன சொல்லி மாற்ற?’ என்று மனதுக்குள் நினைத்தவன் ‘ஒரே நாளில் மாறுபவள் என் மனைவி ரதி தேவி இல்லையே!’ என்று பெருமூச்சு விட்டான் அவன்.

“இப்போ என்ன தான் டி செய்யனும்னு சொல்லுற?” என்று அவன் கேட்க

“நீ முதல்ல இந்த ரூமை விட்டு வெளியே போனு சொல்றேன்” பட்டென்று பதில் வந்தது ரதியிடமிருந்து.

குழந்தை இயற்கை உபாதைக்குப் பிறகு பசியால் சிணுங்க ஒரு தாயாய் ரதி குறிப்பு உணர்ந்து குழந்தையிடம் சென்று ஈரத் துணியை மாற்றியவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று குழந்தைக்குப் பசி ஆற்ற வேண்டும் என்று சொல்ல

எந்த வித தயக்கமும் இல்லாமல் கட்டிலை நெருங்கிய சிற்பி அதன் மேல் கம்பியில் துணியால் கட்டியிருந்த முடிச்சை விலக்க அந்த ஆடை விரிந்து திரைச்சீலையாய் மாறி தரை தொட்டது.

பிறகு அந்த திரைச்சீலைக்கு முதுகு காட்டியபடி இவன் ஓர் சேரை இழுத்துப் போட்டு அதில் அமர்ந்து தன் மொபைலை அவன் பார்வையிட ஆரம்பிக்க

அதைப் பார்த்து சுரு சுரு என கோபம் ஏறியது ரதிக்கு. ‘ச்சை.. இவன் எப்படிப் பட்ட ஜென்மம் என்று தெரிந்திருந்தும் இவன் வெளியே போவான் என்று எதிர்பார்த்தது நம் முட்டாள் தனம்!’ என்று தன்னையே நொந்தவள் பசியால் இன்னும் வீரிட்டு அழுத குழந்தைக்கு வேறு வழியில்லாமல் அந்த திரைச்சீலை மறைவிற்குச் சென்று பசியாற்றினாள் ரதி. மகள் தூங்கியதும் அவளைத் தொட்டிலில் இட்டவள் நேரே அவன் முன் வந்து நின்று

“இப்போ உனக்கு என்ன தான் வேணும்?” என்று கேட்க, மிக நிதானமாக எழுந்து அங்கிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்து ஒரு புடவையையும் சில நகைகள் உள்ள டப்பாவையும் எடுத்து வந்து அவள் முன் வைத்தவன்

“இந்த புடவையைக் கட்டிகிட்டு அப்படி யே இதில் உள்ள நகைகள போட்டுட்டு வா” என்று அவன் கட்டளை இட

“அப்படி நான் செய்யலனா?”

“நானே என் கையால உனக்கு இதை எல்லாம் செய்ய வேண்டி இருக்கும். அதாவது புடவை மாற்ற வேண்டி இருக்கும்” அவன் பதில் சர்வசாதாரணமாக வர

“ச்சைக்… நான் இவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட அசிங்கமே இல்லாம என் கிட்டையே இதை எல்லாம் போட்டுட்டு வரச் சொல்றியே உனக்கு வெட்கமா இல்ல?” என்று அவன் முகத்தில் எச்சில் துப்பாத குறையாக அவள் கேட்க

“ஒரு ஆண் தன்னிடம் மனசாலையும் உடம்பாலையும் நெருங்கிய பெண்ணிடம் மட்டும் தான் இப்படி பேசுவான். பார்க்கற எல்லா பொண்ணு கிட்டையும் இப்படி பேச மாட்டான். அதனால இதுல நான் வெட்கப் பட என்ன இருக்கு? அதிலும் என் பிடிவாதத்துல நான் ஜெயிக்க எந்த அளவுக்கு வேணா நான் இறங்குவேனு உனக்குத் தெரியாது இல்ல? இனி தெரிஞ்சிப்ப!” என்று சொல்லிய படியே அவள் இடது தோல் மேல் அவன் கை வைக்கவும் சடடென்று அவன் கையைத் தட்டி விட்டவள்

“இப்போ என்ன? நான் இந்த புடவை மாற்றி இந்த நகைகளை எல்லாம் போட்டுட்டு வரனும். அவ்வளவு தானே?” என்று தொண்டை அடைக்க அவள் கேட்கவும்

“ஆமாம்…” என்று தலை ஆட்டினான் சிற்பி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN