நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

கானல் - 15

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கலைவாய் என்றே நினைக்கவில்லை
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை
தொலைந்தேன் தனியே யாருமில்லைநீ நிஜம்தானா
இல்லை நிழல்தானா
பதில் கேட்கிறேன் கிடைக்காதா
நம் ஞாபகங்கள்
அதை நினைத்திருப்பேன்
எனை தேடியே திரும்பாதா


அவள் டைரியையும் அதில் தாங்கள் இருவரும் சேர்ந்தவாறு அவள் வரைந்திருக்கும் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு "டேய் பூஷ் எனக்கு என் சஹி வேணும் டா...என்னை விட்டுட்டு அவள் எங்கேயும் போக முடியாது...
போகவும் கூடாது அவ்வளவு தான்.
வா அவளை தேடலாம் " என்றவன் மானுவிடம் சஹியின் அப்பாவிற்கு அழைப்பு விடுக்க சொல்ல


அவளோ " நான் ஏற்கனவே பண்ணிட்டேன் கிருஷ்ணா அவ அங்கே போகல...அப்பா சஹி நல்லாருக்காளா எப்போ இரண்டு பேரும் இங்கே வரீங்கனு கேட்கிறாரு " என்றவளைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்தவன் "அவளுக்கு எங்கே போக பிடிக்கும் அடிக்கடி எங்கே போவா அதெல்லாம் கொஞ்சம் சொல்லுறியா மா " என்றவனிடம் சரியென்று தலையசைத்தவள் அவர்களுடன் கிளம்பினாள்.


அவள் செல்லும் இடங்கள் பூங்கா, கோவில் , பஸ் ஸ்டாண்ட் , ஒரு மளிகைக் கடை , ப்ரவுசிங் சென்டர் அவ்வளவு தான்.


இதை தவிர எங்கேயும் போக மாட்டாளா என்றவனிடம் இல்லை என தலையசைத்த மானு எதையோ சொல்ல வருவதற்குள் அவளை தடுத்து நிறுத்தியவன் இதெல்லாம் நான் அடிக்கடி வர இடம் எனக் கூற ஆம் என்று தலையசைத்த மானு
அவளுக்கு உங்களைப் பார்த்துட்டே இருக்கணும் அதனால அவ வர இடம் இதுதான் என்று கூறியவளைப் பார்த்தவன் மனம் கனமாக இருக்க தலையைப் பிடித்தவாறு அமர்ந்து விட்டான்.


"அவ ஏன் டா என்னை இந்தளவு காதலிக்கிறா " என்றவனிடம் என்ன பதில் கூறுவார்கள் அவர்களுக்கே அதற்கு பதில் தெரியாத போது.


சாஹீயை கண்டுபிடிச்சிடலாம் டா என்றவனிடம் எப்படி டா அவ எங்கே போயிருப்பானு சுத்தமா ஐடியா இல்லை... என்றவன் நான் வீட்டுக்குப் போறேன் டா என்றவாறு கிளம்பிவிட
அமைதியாக அமர்ந்திருந்த மானுவிடம் சென்று அமர்ந்தவன் "மானு " என்றழைக்க இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளியே வர "என்னால முடியல டா " என்றவளை அணைத்துக் கொண்டவன் ஒன்னும் ஆகாது சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம் எனக் கூறி அவளைத் தேற்றுவது போல் தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.


தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட அறியாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்க மாடிக்கு சென்றான்.


எப்போது வந்தாலும் அமைதியை அளிக்கும் அந்த இடம் கூட அவனுக்கு நரகம் போல் தோன்ற தன் மேல் வந்து அமர்ந்த புறாக்களைக் கூட அவன் கண்டுகொள்ளவில்லை.


கைகளில் இருந்த டைரி மீதே கண்கள் இருக்க அதைத் திறந்தவன் கண்டது சஹி துருவ் என்ற பெயரைத் தான்.
அவள் கண்ணீர்த்துளி அதை நனைத்திருக்க சஹி என்ற பெயர் மட்டும் சிறிது அழிந்திருந்தது.


உடனே கீழே ஓடியவன் பேனாவைத் தேடி எடுத்து சஹி என்ற பெயரை எழுதி அதற்கு முத்தம் ஒன்றை கொடுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்.


" சஹி ப்ளீஸ் என்கிட்ட வந்துரு டி..நீ இல்லாத இந்த ஒரு நாள்ல நான் தெரிஞ்சுகிட்டேன் நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு...மூச்சு முட்டுது டி உன்னோட மூச்சு காற்று இல்லாத இந்த காற்றை சுவாசிக்க..." என்றவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவன் டைரியின் அடுத்த பக்கத்தைத் திறக்க அவனை முதலில் கண்ட அந்த நாளை குறிப்பிட்டுருந்தாள்.


"ப்ரவுசிங் சென்டர்ல தான் உன்னைப் பார்த்தேன் துருவ்...
அச்சோ இவ்ளோ க்யூட்டாவும் பசங்க இருப்பாங்களா...நீ அவ்வளவு க்யூட் டா உன்னை அப்படியே கடிச்சு வெக்கணும்னு தோணும் " என்ற வரிகளைப் படித்தவனுக்கு சிரிப்பு வர
கடிச்சுக்கோடி என தானாக அவன் இதழ்கள் முணுமுணுத்தது.


ஒவ்வொரு பக்கத்திலும் ஏதாவது இருக்க ஒவ்வொன்றையும் ரசித்து படித்தவனின் இதழ்கள் ஒவ்வொரு முறையும் உச்சரித்தது "ஐ லவ் யூ சஹி" என்று.


பெண்ணவள் எதிர்பார்த்த வார்த்தையை நொடிக்கரு முறை அவன் இதழ்கள் உச்சரித்தாலும் அதைக் கேட்க தான் அவள் அருகில் இல்லை.


இறுதியாக " உன் மூச்சு காற்று என்னை நெருங்காத இடத்துக்கு போகப்போகிறேன் துருவ்... நான் எப்படி டா இருப்பேன் உன் மூச்சுக்காற்றை சுவாசிக்காமல்..." என்று எழுதியிருந்ததைப் படித்தவன்
இதழ்கள் ஏனோ இன்று "ஐ மிஸ் யூ சஹி " என்று பொலம்பியது.


நாட்கள் அதன் போக்கில் செல்ல துருவின் காரிகையை தேடும் தேடுதல் பயணம் தொடர்ந்துக் கொண்டே தான் இருந்தது...
சஹியைப் பற்றி எந்த தகவலும் இல்லை...
அவள் டைரி அவனுக்கு சுப்பிரபாதம் போல...
இன்பம் துன்பம் என எல்லாம் அந்த டைரி தான்.


இதோ இன்றோடு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது.


கல்லூரிக்குள் நுழைந்தவனது முகமே அவன் எந்த நிலையில் இருக்கிறான் என புரிந்துவிட எதுவும் பேசாத பூஷன் அவனை அழைத்துக் கொண்டு செமினார் ஹாலுக்கு சென்றான்.


"பைனல் இயர் ப்ராஜெக்ட் எந்த நிலைமைல இருக்கு " என்றவரிடம் எந்த பதிலும் கூறாமல் இருக்க பூஷன் தான் அவரை சமாளித்து அனுப்பி வைத்தான்.


"உனக்கு பெர்முடா ப்ராஜெக்ட் எந்தளவு முக்கியம்னு தெரியும்...ஆனால் இப்போ அதுதான் வேணாம்னு முடிவு பண்ணியாச்சே.
சஹியை தேடுறதுலே பாதிநாள் போயிடுச்சு...ப்ராஜெக்ட் பண்ணி முடிக்கணும்டா கிருஷ்ணா...நான் அப்பா கிட்ட சொல்லி சாஹீயை தேட சொல்லியிருக்கிறேன்...சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம் " என்றவனை இடை நிறுத்தியவன்


" ஏன் பூஷ் எனக்கு பிடிச்சதெல்லாம் என் சஹிக்கு பிடிக்கும்ல " என்றவனை


" இது என்ன டா கேள்வி...உனக்கு பிடிச்சது மட்டும் தான் அவளுக்கு பிடிக்கும் " என்று கூற அவனை அணைத்துக் கொண்டவன்


"என் சஹி எங்கே இருக்கானு தெரிஞ்சிருச்சு டா " என்றவன் சந்தோஷத்துடன் புறப்பட்டான் தன் காரிகையைத் தேடி பெர்முடாவிற்கு...


பூஷன் அப்பாவின் மூலம் அமெரிக்காவிற்கு விமானத்தில் சென்றவர்களின் பெயர் பட்டியல் சாஹீ காணாமல் போன நாளிலிருந்து தேட அவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் கண்களில் சிக்கியது சாஹிதா ராமகிருஷ்ணன் என்ற துருவின் காரிகை பெயர்.


அதில் மகிழ்ந்தவன் உடனே கிளம்ப அவனோடு மானு மற்றும் பூஷனும் இணைந்து கொண்டனர்.
கதிரவன் மறையும் அந்திமாலையில் வட அமெரிக்காவை அடைந்தவர்கள் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருக்க
துருவோ கனவில் வந்தது போலவே இந்த இடம் இருப்பதைக் கண்டு கடவுளே அவளுக்கு எதுவும் ஆயிட கூடாது என எண்ணிக் கொண்டே வந்தான்.


அறைக்குள் நுழைந்ததும் உடனே தயாரானவன் சஹியைத் தேடிக் கிளம்பினான்.


கனவில் வந்தது போலவே அந்த இடம் இருக்க உள்ளுக்குள் பயந்து கொண்டே வந்தவன் எதிரில் வந்தவள் மேல் மோத அவளைப் பார்த்தவன் கண்களோ அதிர்ச்சியில் விரிந்தது...ஆம் அவன் முன் நின்றிருந்தது அவன் காரிகை சாஹி தான்.


"சஹி " என்று அழைத்தவனைக் கண்டுகொள்ளாமல் " சாரி சாரி " என்று மன்னிப்பு வேண்டுபவளை அவன் வியப்புடன் பார்த்திருக்க
"ஹாய் சாரா " என அவளருகில் வந்தான் டிம்.


"டிம் " என்று அதிர்ச்சியானவன் "டிம் " என்று கையை நீட்ட
" ஹே ஹாய் நான் டிம் எப்படி என்னைத் தெரியும் " என்றவன் இப்போதும் அந்த மதுவை தொண்டைக்குள் சரிப்பதை நிறுத்தவில்லை.


மயக்கம் வருவது போல் இருக்க தலையைப் பிடித்துக் கொண்டு நின்றவனை டிம் பிடித்துக் கொள்ள பக்கத்தில் இருக்கும் கடைக்கு அழைத்துச் சென்றனர்.


அங்கிருக்கும் மைக்கேல் மற்றும் கிம்மைப் பார்த்து அதிர்ந்தவன் அடுத்த என்ன செய்வது எனப் புரியாமல் பூஷனுக்கு அழைக்க அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தான் பூஷன்.


சாஹீயைக் கண்டு மகிழ்ந்தவன்
"சாஹீ " என அழைத்துக் கொண்டே அவன் அருகில் செல்ல " ஐ யம் சாரா " என்றவளோ பார்க்கவே வேறு விதமாக இருந்தாள்.


"டிம் இது உங்க " என்று இழுக்க என் கசின் என்றவன் சாராவைப் பார்க்க அவள் டிம்மைப் பார்த்து புன்னகைத்தாள்.


அவள் கைகளில் இருக்கும் மாதுளை பழச்சாறையும் அவள் தன் கண்களைப் பார்ப்பதை தவிர்ப்பதையும் வந்திலிருந்து பார்த்துக் கொண்டவனுக்கு ஏதோ சந்தேகம் எழ அதை பூஷனிடமும் கூறினான்.


"சாரா நீங்க இந்தியனா " என்று கேட்ட பூஷனிடம் " ஆம் " என்று தலையசைத்த டிம்மையும் "இல்லை " என்று தலையசைத்த சாஹீயையும் கண்டு கொண்டவர்கள் ஏதோ இருக்கிறது என உறுதி செய்து கொண்டனர்.


இதற்கு மேல் பொறுமை இல்லாமல் துருவ் டிம்மை அடிக்க செல்ல அதை தடுத்து நிறுத்திய பூஷனோ சாஹீயைப் பற்றிக் கூற அவளோ யாருக்கோ சொல்லுறாங்க என்பதைப் போல் வேடிக்கைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.


சாஹீ இரண்டு மாதங்களுக்கு முன் இங்கு வந்ததாகவும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல எல்லாம் மறந்துட்டாங்க எனவும் கூறியவன் நான் தான் அவங்களைப் பார்த்துக்கிறேன் அவங்களுக்கு அவங்க பெயர் கூட நியாபகம் இல்லை நான் தான் சாரானு பெயர் வெச்சேன் எனக் கூற


"ஆக்ஸிடென்ட்டா " என்று கூறி அதிர்ந்தவன் அவளருகில் சென்று "சஹி உனக்கு ஒன்னுமில்லையே " எனக் கேட்க அவன் கைகளைத் தட்டி விட்டவள் " யார் நீ " எனக் கேட்டு " டிம் வா போலாம் " எனக் கூறி அவனை அழைத்துக் கொண்டே துருவைப் பார்த்தவாறு முன்னால் செல்ல


" சஹி உனக்கு எல்லாம் மறந்திருச்சு அப்படிதானே நான் நம்பிட்டேன் டி...பரவால ஆனால் நீ என்னை காதலிச்சது உண்மை.
நானும் உன்னை காதலிக்கிறது உண்மை...முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமா ? நான் உன்னை லவ் பண்றேன் நீயும் பண்ணுவியா " என்று கத்தியவனைக் கண்டு அவள் உடல் நடுங்க உடனே காரினுள் ஏறியவள் மூச்சு வாங்க அமர்ந்திருக்க
" டிம் அண்ணா பாத்தீங்களா ? துருவ் என்னை காதலிக்கிறானாம்..." என்று மகிழ்ந்தவள் கண்கள் கலங்க
அதைத் துடைத்து விட்ட டிம்மோ
" கேட்டேனே...உங்க ஆளு ஊருக்கே கேட்கிற மாதிரி ப்ரொப்போஸ் பண்ணதை" என்று கூறிச் சிரிக்க
அவனை அடித்தவள் "நான் நடிக்கிறேனு கண்டுபிடிச்சுட்டான்" என்று கூறி சோகமாக முகம் வைத்துக் கொண்டவள் " ஆனாலும் அவன் பின்னாடியே சுத்தட்டும் " என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்...


பெர்முடா செல்ல வேண்டும் துருவிற்கு உதவி செய்ய வேண்டும் என வந்த சாஹீக்கு சிறிய விபத்து ஏற்பட அப்போது அவளுக்கு உதவிக்கரம் நீட்டியவன் தான் டிம்...இன்று தான் ஓரளவு சரியாகிருக்க கடற்கரை நோக்கி வந்தவள் கண்டது அவளின் மூச்சுக்காற்றானவனைத் தான்.


"டிம் அது துருவ் " என்றவனைக் கண்டு மகிழ்ந்தவன் வா போய் பேசலாம் என்று கூற வேண்டாம் என்று தடுத்தவள் தன் திட்டத்தைக் கூற பாவம் அவளால் அதை கடைபிடிக்க முடியவில்லை.


" எப்படி கண்டுபிடிச்ச அவன் உன்னை கண்டுபிடிச்சுட்டானு"என்று டிம் கேட்க


அங்கோ " டேய் என்னடா இப்படி பண்ணிட்ட..அவ நம்ம சாஹீ இல்லை" என்று கூறியவனைக் கண்டு சிரித்த துருவ் " அவ என் சஹி தான் " என்று கூற


"எப்படி டா கண்டுபிடிச்ச " என்று பூஷனைக் கண்டு கண்ணடித்தவன்


" அவ என் முன்னாடி நின்னாலே கையை பிசைய ஆரம்பிச்சிருவாளே " என்று கூறி சத்தமாக நகைத்தான்.


" அவன் முன்னாடி நின்னாலே என் கை என் பேச்சை கேட்காம மாவு பிசைய ஆரம்பிச்சுடுது" என்று கூறி தலையில் அடித்துக் கொண்டவளைக் கண்ட டிம்மோ வாய்விட்டு சிரிக்க அவன் தலையில் கொட்டியவளோ சன்னல் வழியே எட்டிப் பார்க்க அவளை நோக்கி பறக்கும் முத்தம் ஒன்றை தூது விட்டான் அவள் கள்வன்.


கானலாய் இருந்தவள் இன்று அவன் காரிகையாய் மாறியிருக்க அவளை நோக்கி காதல் படையெடுப்பு நடத்த தயாராய் இருந்தான் நம் நாயகன் துருவ்.


புரியாத பிரியம், பிரியும் போது புரியும் என்பது தான் இந்த கதையின் கருவே.
அவள் அன்பை புரியாமல் இருந்தவன் இப்போது புரிந்து கொண்டு தன் காதலால் திணறடிக்க காத்துக் கொண்டிருக்கிறான்.
உண்மையான காதலை நாம் சில சமயங்களில் நம் அலட்சியத்தால் தொலைத்து விடுகிறோம்...அது தொலைந்த பின்பு தான் அதன் அருமை தெரியும்...
இது சாதாரண கதைக்களம் தான்...
அவளின் காதலை அவனுக்கு உணர்த்தினேன் என் கற்பனைக்கு வடிவம் கொடுத்து...

அவங்க எப்படியோ காதல் செய்யட்டும்...
நம்ம விடைபெறுவோம்....


❤❤❤❤❤சுபம்❤❤❤❤❤
 

Author: im_dhanuu
Article Title: கானல் - 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

Sri Ram

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Wowww...super athai ma ....fanatic stry ...padikka padikka avenga koodave irruntha feel...saahi character avaloda love ellamey superbbbb...dhuruv bulb mandaiyanuku love vara vaikurathukulla ungaluku thaadi molachirkum...eeee...booshan and maanu character kooda romba ppidichirnthathu.Tim payapulla last la nallavana poitan illana ambuttu than...fantasy stry maari vanthu love stry ya promote aakitu super athai...:love::love:

But idaipatta nerathula oru pacha pullaiya ala vachitinga tooo bad athai uuuuuusmilie 64
 
OP
im_dhanuu

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Wowww...super athai ma ....fanatic stry ...padikka padikka avenga koodave irruntha feel...saahi character avaloda love ellamey superbbbb...dhuruv bulb mandaiyanuku love vara vaikurathukulla ungaluku thaadi molachirkum...eeee...booshan and maanu character kooda romba ppidichirnthathu.Tim payapulla last la nallavana poitan illana ambuttu than...fantasy stry maari vanthu love stry ya promote aakitu super athai...:love::love:

But idaipatta nerathula oru pacha pullaiya ala vachitinga tooo bad athai uuuuuusmilie 64
over ah ala vechuteno🤔🤔
Thanks da chellakutty😍😍
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top