சுவாசம் - 12

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 12

ஒவ்வொரு திருமணமான ஆணுக்கும்
பிறக்கும் பெண் குழந்தை தான்
அவனைப் பெற்றெடுக்காத
இன்னொரு தாய்…!


இப்படியே அவரவர் வாழ்க்கை வழக்கப்படி சென்று கொண்டிருக்க தனிக் குடித்தனம் வந்த பிறகு ரதி சிற்பியிடம் வெளிப்படையாக எந்த வீம்பும் சண்டையும் பிடிப்பதில்லை. அப்படியே மீறி அவள் சண்டையிடும் நேரத்தில் மகளைக் கண்ணால் காட்டி அவள் நோக்கத்தைத் தடுப்பவன் அவனுடைய வீம்பு பிடிவாதத்தை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டான். ஃபிளாட்டில் தன் மனைவிக்குத் துணையாகவும் கூடமாட மேல் வேலைக்கு என்று ஒரு பாட்டியை வைத்தான் சிற்பி.

இதோ அவர்கள் வந்து ஏழு மாதம் கடந்து விட்டது. இந்த ஏழு மாதத்தில் அக்கம் பக்கத்தார் அதிகம் பழக்கம் இல்லாமல் வெறும் ஓர் உதட்டளவு சிரிப்புடனே ஒதுங்கியிருந்தனர். அதில் ரதி கொஞ்சம் அதிகம் நெருக்கம் என்றால் அது தங்கள் எதிர் ஃபிளாட்டிலிருக்கும் ஆறு வயது சிறுமியான வர்ஷினி மட்டும் தான். வளர்ந்து விட்ட சந்திராவின் பேச்சு சிரிப்பு குறும்புக்காகவே ரதி வீடு தேடி வந்து ஆன்ட்டி பாப்பா இப்படி செய்றா ஆன்ட்டி அதை எடுக்கறா பாருங்க என்று குழந்தையோடு குழந்தையாக எப்போதும் சுற்றி வருவாள் அந்த வர்ஷினி மொட்டு.

ரதி அவளை அவளுடைய தாய் தந்தையருடன் பார்த்ததை விட அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுடன் விளையாடும் போது வர்ஷினியை பார்த்தது தான் அதிகம். ஒரு முறை ஆறாவது மாடியில் தன் தாய் தந்தையருடன் குடியிருக்கும் வங்கியில் நல்ல வேலையில் இருக்கும் வசந்த் என்ற இளைஞனின் கையை இறுகப் பிடித்த படி “அங்கிள் என் கைய விடாம பிடிச்சிக்கோங்க. ம்ம்ம்…. அப்படி தான் அப்பதான் நான் டூ டூ ஸ்டெப்பா ஜாலியா ஏற முடியும்” என்ற கெஞ்சலுடன் இரண்டிரண்டு படியாக தப் தப்பென்ற சப்தத்துடன் கிளிக்கி சிரித்த படி ஏறி அவன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள் அந்த பால் மணம் மாறாத குழந்தை வர்ஷினி.

வளர்ந்து விட்ட மகள் சந்திராவுக்கு தினமும் மாலையில் அந்த குடியிருப்புக்குள்ளேயே இருக்கிற பூங்காவில் விளையாடப் போக வேண்டும். தத்தித் தாவி மற்ற பிள்ளைகளுடன் பந்து விளையாட வேண்டும். அந்த நேரமெல்லாம் ரதி சற்றுத் தூர நின்று மகளையே கண்காணிப்பாளே தவிர அவளைத் தடுக்கவோ அடிக்கவோ மாட்டாள். அந்த நேரம் ரதிக்குப் பழக்கமானவள் தான் பதிமூன்று வயது சிறுமியான ரேஷ்மா. காது கேட்காது வாய் பேசவும் முடியாதவள். பூங்காவில் ரதியையும் சந்திராவையும் எங்கு பார்த்தாலும் உடனே ஓடி வந்து ஒட்டிக் கொள்வாள். சில நேரங்களில் சந்திரா மதியம் தூங்கி மாலை ஆறு மணிக்கு எழுந்து வந்தாலும் சரி அப்போதும் அந்த ரேஷ்மா பள்ளிச் சீருடை மற்றும் புத்தகப் பையுடன் தான் இருப்பாள்.

இதுவரை அவள் பெயரைத் தவிர அவள் அந்தக் குடியிருப்பில் எந்த மாடி எத்தனையாவது நம்பர் வீட்டில் இருக்கிறாள் என்று எதுவும் ரதிக்கு தெரியாது. ஏன் இவ்வளவு நேரம் இவள் சீருடையிலேயே இருக்கிறாள் என்று ரதி பலமுறை யோசித்ததும் உண்டு தான். இப்படியே பல சிந்தனைகளுடன் ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தது ரதிக்கு.

ஒரு நாள் ரதி காயவைத்திருந்த ஆடை சற்றுத் தள்ளி பின்புறத்தில் கட்டிக் கொண்டு வரும் குடியிருப்பில் விழுந்து விட அது அவளுடைய ஆடை என்பதால் வேறு யாரையும் எடுத்துக் கொடுக்கச் சொல்லத் தயங்கியவள் தானே அங்கு சென்று எடுத்தவளின் காதில்

“ஆ! அங்கிள் வலிக்குது…” என்ற மழலைக் குரல் ஒலிக்க அதைக் கேட்டு அவளுக்கு சர்வமும் ஆடி விட்டது. அடுத்த வினாடியே அப்படி ஒரு குரல் கேட்டது பொய்யோ என்பது போல் அங்கு மயான அமைதியும் வெறும் காற்றின் சத்தம் மட்டுமே கேட்டது. இவளும் சுற்றும் முற்றும் தேடிப் பார்க்க அங்கு ஆள் அரவமே இல்லை. அது புதிதாக கட்டப்பட்டு முடிவடைந்த அப்பார்ட்மெண்ட் என்பதால் இப்போது எல்லாம் வெறும் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் வேலை தான் அங்கு நடந்தது. அந்த வேலையும் முடிந்திருக்கும் மாலை நேரம் என்பதால் ஒருவேளை அந்த குரல் பிரம்மையோ என்று தான் ரதிக்கு முதலில் பட்டது.

ஆனால் அப்படியே விட முடியாமல் அந்த மழலைக் குரலே அவளைத் தன் வீட்டுக்கு வந்த பிறகும் இம்சிக்க பிறகு நிதானமாக யோசித்த பின் தான் அவளுக்குத் தெரிந்தது அது அவள் வீட்டிற்கு எப்போதும் விளையாட வரும் வர்ஷினியின் குரல் என்று. கூடவே ஏதோ சரியில்லை என்பதையும் உணர்ந்தவள் உடனே அடித்துப் பிடித்து அந்த இடத்திற்கே மறுபடியும் ஓடிப் போய் ஒரு இடம் பாக்கியில்லாமல் தேட அவளுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

நிராசையில் அவளால் அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. இரவு எட்டு மணிக்கு வந்த கணவன் முன் அழுது வீங்கிய முகத்துடன் வந்து நின்று விவரம் சொன்னவள் அவனை ஆடை கூட மாற்ற விடாமல் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று வர்ஷினியைத் தேடச் சொல்ல மனைவி தன்னிடம் முதன் முதலில் கேட்கும் விஷயம் என்பதால் அந்த வெளிச்சம் அதிகமில்லாத இருட்டில் வர்ஷினியைத் தேடியவன்

“இங்க பார் ரதி வர்ஷினிக்கு ஒன்னும் ஆகியிருக்காது. இவ்வளவு நேரம் தேடியும் அவ கிடைக்கலனா அவ அவங்க வீட்டுல தான் இருப்பா. அதனால எதையும் யோசிக்காம கிளம்பு”

“இல்லங்க நான் அவளோட வீட்டுக்குப் பலமுறை போய் பார்த்துட்டேன். வீடு பூட்டி தான் இருக்கு”

“அப்போ அவ அப்பா அம்மா அவளைக் கூட்டிட்டு வெளிய போய் இருப்பாங்க நீ பேசாம வா…” என்று சிற்பி அவளை இழுக்க, அதே நேரம் அங்கு வந்த இரவு நேர கேட் செக்கியூருட்டி

“என்னங்க சார் அந்த வர்ஷினி பொண்ணைத் தேடி நீங்களும் வந்தீங்களா? அப்படி யாரும் இங்கே இல்லங்க சார். இதை உங்க மேடம் கிட்ட சொன்னா அவங்க ஒத்துக்காம தேடு தேடுனு சொல்றாங்க. நானும் இந்த எடத்துல ஒரு கண்ண வச்சிகிட்டு தான் இருக்கேன். யாரும் இந்த பக்கம் வரவும் இல்ல போகவும் இல்ல” என்று அந்த காவலர் வாக்குமூலம் அளிக்க

“சரிதானுங்க.. எதுக்கும் இன்னோர் முறை தே…” ரதி முடிப்பதற்குள் அவள் கையைப் பற்றி தர தரவென்று இழுத்துச் சென்றான் சிற்பி. வீட்டிற்குள் வந்ததும் கணவனைக் கட்டி கொண்டவள்

“எனக்கு பயமா இருக்கு சிற்பி. அது வர்ஷினி குரல் தான். அவளுக்கு ஏதோனு தான் எனக்குப் படுது” என்று அவ தேம்ப

அவள் முதுகை வருடியவன் “அது வர்ஷினியா இருக்காது டா. கண்டிப்பா அது வேற யாரோ தான்” என்று இவன் சமாதானபடுத்த

“ஆனா அதுவும் குழந்தை தானே? எதுக்கும் நாம அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் கிட்ட சொல்லலாமா?”

“என்னனு சொல்ல சொல்ற நீ? எல்லாம் ஒரு யூகம் தான். எந்த சாட்சியும் இல்லாம நாம எதுவும் அவங்க கிட்ட பேச முடியாது டா”

“ம்ம்ம்… என்று ஏற்றுக் கொண்டவள் எதற்கும் இப்போ ஒரு தடவை வர்ஷினி வீட்டைப் போய் பார்க்கலாமா?”

“பைத்தியக்காரி! மணி இப்போ என்ன தெரியுமா? பத்து.. இந்த நேரம் போய் அவங்க வீட்டுக் கதவைத் தட்டுவியா? காலையில் முதல் வேலையா நாம போய் பார்க்கலாம். இப்போ போய் தூங்கு” என்று மென்மையாக அணைத்துக் கண்டிப்பு குரலில் அவன் கூற, அதே நேரம் குழந்தை சிணுங்க

“பாப்பா எழுந்துட்டா பாரு. முதல்ல அவளை சமாதானப் படுத்து” என்ற சொல்லுடன் அப்போதைக்கு அவள் எண்ணங்களுக்கும் கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைத்தான் அவள் கணவன்.

எவ்வளவு முயற்சி பண்ணியும் ரதியால் ஒரு பொட்டு கண் மூட முடியவில்லை. எப்போது டா விடியும் என்றேயிருந்தாள் அவள்.

சிற்பியாலும் இரவு முழுக்கத் தூங்க முடியவில்லை. ‘ஒரு குழந்தை ஐயோ வலிக்குதுனு சொன்னா ஒன்னு கீழே விழுந்திருக்கலாம். இல்லனா ஏதோ வயிற்று வலியால கூட சொல்லியிருக்கலாம். ஆனா இது எதையும் யோசிக்காம அந்த குழந்தையை ஏன் யாரோ வல்லுறவு செய்து இருப்பாங்கனு யோசிக்கறா இவ? அப்போ இன்னமுமே ரதி அவளுக்கு நடந்த விஷயத்துல இருந்து வெளிய வரலையா? இப்படியே இருந்தா இதுவே நாளை அவள் மனநோயாளியா மாற வாய்ப்பு இருக்கே?! இதை எப்படி சரிபண்ண?’ என்ற யோசனையுடன் காலையில் தான் கண்ணயர்ந்தான் சிற்பி.

காலையில் எழுந்த ரதி தன் காலைக் கடன்களையெல்லாம் முடித்து ஏழு மணிக்கெல்லாம் கணவனை எழுப்பி வர்ஷினி வீட்டுக்குப் போய் கேட்க அவளை நேற்றிலிருந்து காணவில்லை என்ற பதில் தான் கிடைத்தது. ரதி தான் கேட்ட குரலை அவர்களிடம் சொல்வதற்குள் மனைவியைத் தடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தவன்

“நீ யோசிக்கிற மாதிரி வர்ஷினிக்கு எதுவும் நடந்திருக்காது. அதனால தேவையில்லாததைச் சொல்லி அவளைப் பெத்தவங்களோட மனச கலவரப்படுத்தாதே. அதான் அவங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம்னு சொன்னாங்க இல்ல? சோ அஸ் எ லாயரா இது சம்மந்தமா நான் போலீஸ் கிட்ட பேசுறேன்” என்று மனைவியின் வாக்கு வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தான் அவன்.

போலீஸ் இரண்டு நாட்களாக விசாரணை நடத்திக் கொண்டிருக்க அதில் எதுவும் தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள் ரதி. மூன்றாம் நாள் ரதி வீட்டுக்கு வேலைக்கு வந்த பாட்டி

“என்ன அநியாயமா இருக்கு மா! இதத் தான் கலிகாலம்னு சொல்லுறதா?! சின்ன குழந்தை மா அந்த வர்ஷினி. அதைப் போய் சீரழிச்சி சாகடிச்சிருக்கான் அந்த படுபாவி. அதை செய்ய அவனுக்கு எப்படி மனசு வந்ததோ? அவன் கட்டையில போக.. இத இந்த ஃபிளாட்ல இருக்கிற அந்ல வசந்த் நாய் தான் செஞ்சிருக்கான். அவன் கையில புழு பூத்துத் தான் சாகணும்” என்று தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் அவர் புலம்பலாக வெளிப்படுத்த

“என்ன பாட்டி சொல்றீங்க?வர்ஷினிக்கு என்ன ஆச்சினு தெரிஞ்சிடுச்சா? எப்போ எங்க?” என்று ரதி பரபரக்க

“என்ன மா இது தெரியாதா உனக்கு? நேத்து நைட் அந்த பையனை போலீஸ் அரஸ்ட் பண்ணி அடிச்சி ஒதச்சதுல அவனே எல்லாத்தையும் சொல்லிட்டானாம். காலையிலிருந்து இந்த காம்பவுண்டே இதத் தானே பேசிட்டு இருக்கு. டிவி பேப்பர்ல கூட வந்திருக்குனு சொல்லிக்கிறாங்களே! நீங்க பார்கலையா?” என்று அவர் கேட்டது தான் தாமதம்.

ரதி ஓடிச் சென்று அன்றைய நாளிதழைப் புரட்ட காணாமல் போன ஆறு வயது சிறுமி வர்ஷினி வழக்கில் சந்தேகத்தின் பேரில் அதே ஃபிளாட்டில் குடியிருக்கும் வசந்த் என்ற இருபத்தி மூன்று வயது வங்கியில் வேலை செய்யும் இளைஞனைக் கைது செய்து விசாரித்ததில் அவன் கொடுத்த வாக்குமூலத்தில்..

‘அடிக்கடி வீட்டிற்கு வந்து விளையாடும் வர்ஷினியின் மேல் சின்ன சின்ன அத்துமீறல் செய்து வந்தேன். கடைசியாக இரண்டு நாளைக்கு முன்பு பின்புற கட்டிடத்தில் பந்து ஒன்று விழுந்து விட்டதாகப் பொய் சொல்லி அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்ததில் அந்த குழந்தை இறந்து விட்டது. அதை மறைக்க சற்றுத் தள்ளி உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவள் உடலை எரித்தேன்..’

இதையெல்லாம் விட ரதியை அதிகம் தாக்கியது அவன் ஏன் இப்படி செய்தான் என்று கூறியது தான். ‘நிறைய ஆபாச வீடியோக்கள் பார்த்து வரும் பழக்கம் எனக்கு உண்டு. அதைப் பார்த்த பிறகு என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நேரத்தில் அந்த குழந்தையிடம் அப்படி நடந்து கொள்வேன். அதுவே கடைசியாக அவளை பாலியல் வல்லுறவு செய்யும் அளவுக்குத் தூண்டியது’ என்று அவன் சொன்னது தான்.

இதையெல்லாம் படித்ததில் ரதி தான் சுத்தமாக உடைந்து போனாள். அவளுக்கு அவள் மேலேயே வெறுப்பு மற்றும் குற்ற உணர்ச்சி வர ஆரம்பிக்க

“ஐயோ! அன்று நான் கொஞ்சம் நல்லா தேடியிருந்தா இப்படி அவளுக்கு எதுவும் நடக்காமல் தடுத்து இருக்கலாமே..” என்று அழுது புலம்பியவள் அவள் இருந்த மனநிலையில் மாலை பூங்காவுக்குக் கூட போகாமல் வீட்டிலேயே அவள் முடங்கி விட

அதனால் சந்திராவைத் தேடி விளையாட ரேஷ்மா ரதி வீட்டுக்கு வர அவளைக் கட்டிக்கொண்டு தன் இயலாமையால் அழுத ரதி வர்ஷினியைப் போல் இவளுக்கும் அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்ற எண்ணத்தில் வாய் பேசாத காது கேட்காத அந்த சிறுமியிடம் கண்ணில் கண்ணீருடனே ரேஷ்மாவின் மார்பு முதுகு பின்புற மேடு அவள் தொடை அதன் உட் பகுதி என்று ஒரு தகாத ஆண் செய்வது போல் செய்து காட்டியவள் ‘இப்படி எல்லாம் எந்த ஆணையும் உன்னைத் தொட விடாதே யாராவது அத்து மீறி நடந்து கொண்டால் என்னிடம் தயங்காமல் பயப்படாமல் சொல்’ என்று அவள் செய்கையில் சொல்லிக் கொடுக்க

அங்கு அவளுக்குப் பெரிய இடியே காத்திருந்தது. இப்படி கையால் மட்டும் இல்லாமல் பல அசிங்கங்களையும் சில ஆண்கள் செய்ததாக அவள் செய்கையில் சொல்ல அது யார் என்று கேட்டால் அந்த குடியிருப்பில் வேலை செய்யும் லிப்ட் ஆப்பரேட்டர், பிளம்பர், எலக்ட்ரீஷியன், கேட் காவலர், தோட்டக்காரன் என்று பதினெட்டு பேருக்கும் மேல் ஆட்கள் நீண்டு கொண்டே போனது. அவள் சொன்ன அனைவரும் முப்பத்தி ஐந்து மற்றும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறவர்கள். அதிலும் அந்த லிப்ட் ஆப்பரேட்டரோ அறுபது வயது கிழவன். அவனிடம் தான் இவள் தாத்தா தாத்தா என்று ஆசையாக பழகுவாள். அவன் ஆரம்பித்து வைத்தது தான் மற்றவர்களுடனான இந்த பழக்கமும். வர்ஷினி விஷயத்தையே சீரணிக்க முடியாமல் இருந்த ரதிக்கு இதை கேட்டு ரத்தமே கொதித்தது.

ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையிடம் இப்படி எல்லாம் பல பேர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று நாசம் செய்ததில் கோபம் வர கடைசியில் இப்படி தன் மகளுக்கு என்ன நடந்தது என்று கூட அறியாமல் மேற்கொண்டு அவள் எங்கே போகிறாள் எங்கிருந்து வருகிறாள் என்று பார்க்காமல் இருந்த அவள் தாயின் மேல் கோபம் திரும்ப மகளைத் தூக்கி கொண்டு ரேஷ்மாவையும் அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்குப் போகிற நேரம் உள்ளே நுழைய இருந்த சிற்பியோ மனைவியின் முகத்தை வைத்தே ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவன் ரதியின் பின்னோடே சென்று அவளைத் தடுப்பதற்குள் ரேஷ்மாவின் தாயை அறைந்திருந்தாள் ரதி.

“ச்சீ…. நீ எல்லாம் ஒரு அம்மாவா? மகள் நேரத்திற்கு வீட்டுக்கு வந்தாளா சாப்பிட்டாளா என்ன செய்றா அவளிடம் என்ன மாற்றம் வந்திருக்குனு பார்க்காம ஏதோ பெத்ததோட நம்ம கடமை முடிஞ்சது என்ற மாதிரி இருந்து இருக்க.. ஊனமா பிறந்தது அவ தப்பா? அதனால அவளை வெறுத்து ஒதுக்கிடுவியா? அந்த குழந்தை என்னெவெல்லாம் அனுபவிச்சி இருக்கா தெரியுமா?” என்று அவள் சொன்ன அனைத்தையும் சொன்னவள் மறுபடியும் ஆத்திரத்தில் அடிக்கக் கை ஓங்கிய நேரம் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து வந்தான் சிற்பி.

“என்ன விடுங்க சிற்பி.. என் கைய விடுங்க.. இன்னைக்கு எனக்கு இருக்கிற வெறிக்கு எல்லாரையும் கொன்னு புதைக்கணும் போல இருக்குது” என்றவள் மகளைக் கணவனிடம் தந்து விட்டு லிப்ட்டுக்குள் நுழைந்து அந்த கிழவனின் கழுத்தை நெறிக்க நினைத்த நேரம் மனைவிக்கு ஒரு அறை விட்டு தங்கள் வீட்டிற்கு இழுத்து வந்தவன்

“ஏன் டி உனக்கு இவ்வளவு வெறித்தனமா கோபம் ஆத்திரம் வருது? இது உனக்கு நல்லது இல்ல ரதி”

“ஆமா எனக்கு வெறி தான்.. அவனுங்களை அணு அணுவா சித்திரவதை செய்து அதைப் பார்த்து ரசிக்கணும் என்ற வெறி! அவன் உடலில் இருக்கும் ஒவ்வொரு எலும்பையும் நான் எண்ணனும். அதுக்காகவாது எனக்கு பலத்தைக் கொடு இறைவானு தான் கேட்கிறேன்”

“உன்னால அப்படி எதுவும் செய்ய முடியாது. இந்த நாட்டுல நிறைய ஆண்கள் காமவெறி பிடிச்சவனுங்களா தான் இருக்கிறானுங்க. இன்னைக்கு தான் பெற்ற பெண்ணையே கூட ஒரு அப்பன்காரன் விட மாட்றான்.. அப்படி ஆகிடுச்சி சமுதாயம்”

“அது தான்.. அது தான் ஏன்னு கேட்கிறேன்? உங்களுக்கு எல்லாம் நாங்க ஒருகாலத்தில் தாசியா இருந்தோம் பின் வேசியா ஆனோம். பிறகு நீங்க உங்க ஆசைகளை எல்லாம் தீர்த்துக் கொள்ள ஒரு ஆசை நாயகியா இருந்தோம். பிறகு வீட்டு வாசற்படிய தாண்டக் கூடாதுனு பூட்டி வச்சீங்க. படிச்சா திமிர் தலைக்கனம் வந்திடும்னு அடக்கினீங்க. மீறி படிக்க வெளி உலகம் வந்தா ஓட ஓட மிருகங்கள் மாதிரி வேட்டை ஆடினிங்க. கேட்டா எங்க நடை உடை பேச்சு சரியில்லனு பழி போட்டு காரித் துப்புனீங்க.

இப்போ பிறந்த ஐந்து மாத குழந்தையிலிருந்து எழுபது வயது கிழவிய கூட விட மாட்றீங்க. அப்போ அவங்கெல்லாம் போட்ட ஆடை சரியில்லாம இருந்துச்சா? அப்போ அது இல்ல.. உங்களுக்கு எல்லாம் உங்க காம வெறிய உங்களுடைய கீழ்த்தரமான எண்ணங்களைப் போக்கிக் கொள்ள ஒரு வடிகாலா எங்களை வேரோட பிச்சிப் பிடிங்கி நாசம் செய்றீங்க. அதுக்காக எந்த வயதா இருந்தாலும் எங்களை குத்துயிரும் கொலையுயிருமா போட ஆசைப் படுறீங்க. அவ்வளவு சுயநலம் அப்படி தானே?

அந்த வாய் பேச முடியாத குழந்தை கிட்ட உன் கிட்ட யார்னா தப்பா நடந்துகிட்டா சொல்லுனு சொல்லுறன்.. அதுக்கு அந்த பொண்ணு என் கிட்ட அதுக்கு மேல கேவலமா அந்த மிருகங்கள் நடந்து இருக்கானுங்கனு டிரஸ்சைக் கழட்டி காட்டுது.. அப்போ அந்த குழந்தை உடம்புல எவ்வளவு நகக் கீறல் காயங்கள் அடிகள்னு ரத்தம் கட்டி கன்றிப் போய் இருக்கு தெரியுமா? எப்படி எல்லாம் வீடியோ எடுத்து அந்த குழந்தையை மிரட்டிப் பணிய வைத்து இருக்குங்க அந்த நாயிங்க! என்று கொதித்தவள்

உன் கிட்ட போய் சொல்லுறேன் பாரு.. உனக்கா தெரியாது? என்னை எப்படி எல்லாம் வதைச்சி சிதைச்சவன் நீ? அப்படி வதைச்ச பிறகும் என் உடம்பைப் பார்த்து ரசிக்காமலா இருந்திருப்ப? இருந்தாலும் சொல்றன் நல்லா கேட்டு ரசி...”

இதுவரை அவள் கொட்டிய வார்த்தைக்கு எல்லாம் பேசாமல் இருந்தவன் இப்போது

“வேணாம் ரதி.. எனக்கு எதுவும் தெரிய வேணாம்” என்று கணவன் அதட்ட

“ஏன் வேணாம்? அன்னைக்கு என்னை நாசம் செய்யும் போது சந்தோஷமா இருந்தது இல்ல? அப்போ அதை நான் இன்னைக்கு சொல்லுவேன் தான்.. நல்லா கேளு வெட்கத்த விட்டு சொல்லுறேன்..

ஒரு வாரம் மயக்கத்திலிருந்து தெளிந்த பிறகு இயற்கையா வர்ற உடல் உபாதைக்கெல்லாம் கூட அவ்வளவு வலி எரிச்சல் அனுபவிச்சன். ஒவ்வொரு முறையும் எப்படி துடிச்சிப் போனேன் தெரியுமா? என்னோட பெண்மையை ஒரு சம்மட்டியால் வைத்து தாக்கின மாதிரி எழுந்து நிற்கும் போது எல்லாம் வலியாலும் வேதனையாலும் துடிச்சேன் தெரியுமா?

“வேணாம் ரதி வேணாம் டா.. எதையும் சொல்லாதே.. என்னால தாங்க முடியலை” என்று சிற்பி கூக்குரலிட, அந்த குரல் எல்லாம் அவளை எட்டவே இல்லை. தொடர்ந்து அவள்

“இது எல்லாத்துக்கும் மேல என் மார்பு காம்பு முழுக்க ரத்தமும் சீழும் வந்தது”

“ஐயோ…. ரதி! போதும் டி என்னைக் கொல்லாதே..” என்ற உறுமலுடன் அவள் வாயைத் தன் கையால் மூட அவன் கையைத் தட்டி விட்டவள்

“சும்மா நல்லவன் மாதிரி நடிக்காதே. நான் துடிச்சதை அன்னைக்கு ரசிச்ச இல்ல? இதோ இப்பவும் பார்த்து ரசிக்கிறியா அந்த தழும்புகளை?” என்று சொல்லி வெறியுடன் நிதானம் இல்லாமல் தன் புடவையை அவள் உறுவப் போக அதை செய்ய விடாமல் அவள் கையைக் கெட்டியாகப் பிடித்தவனோ இவ்வளவு தான் டி உனக்கு பேச அனுமதி! இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசவோ செய்யவோ இருந்த இங்கேயே உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்! உனக்கு நடந்தது என்ன கவுரவ பாராட்டு பட்டமளிப்பு விழாவா? அதையே நினைத்து நினைத்து பெருமைப்பட.. நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு எதிர்கால வாழ்க்கையை வாழாம இப்படியே தான் ஹிஸ்டீரியா பேஷன்ட் மாதிரி கத்திட்டு இருப்பேன்னா இந்த ரூம்லையே தனியா கத்திட்டு இருந்து சாகு.. நானும் என் மகளும் வெளியே போறோம்” என்ற எச்சரிக்கையுடன் அவன் வெளியே செல்லத் திரும்ப

“ஏய்… ஏய்… எதுக்கு நீ என் மகளைத் தூக்கிட்டுப் போற?” என்று கணவனிடமிருந்து மகளைப் பிடித்து இழுக்க முயன்றவள்

“அவளை நீ தொடக் கூடாது. எனக்கும் என் மகளுக்கும் யாரும் வேணாம். ஆண்களே இல்லாத உலகத்துக்கு நாங்க போயிடுறோம். நீயும் என் மகளை எதாவது செய்தாலும் செய்துடுவ!…”

பாதி பேச்சில் அவள் கன்னம் இரண்டையும் மாறி மாறி அவன் அறையவும் அவள் தடுமாறி விழ கூடவே அவள் உதடு கிழிந்து ரத்தம் வழியவும் அதைப் பார்த்தவன்

“ஏன் டி என்னை இப்படி மிருகமா மாத்தற? உன்னைப் பேச விட்டு உன் மனக் குமுறலைக் கேட்டா என்னையும் என் பொண்ணையும் பற்றிப் பேசற.. சந்திரா என் மக மட்டும் இல்ல.. என் அம்மா! என் உயிர் என் உலகம் எல்லாமே சந்திரா தான்! புரிஞ்சிக்க.. இதுக்கு மேல இப்படி பேசின.. அடுத்து பேச உனக்கு நாக்கு இருக்காது ஜாக்கிரதை!”

இரண்டு நாட்களாக வர்ஷினி விஷயமாக இருந்த மன உளைச்சல், இன்று அவளுக்கு நடந்தது, ரேஷ்மா விஷயம், தனக்கு நடந்த அநியாயம், ஒருமுறையாவது கணவனின் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்தது இப்படி எல்லாம் சேர்ந்து அவளைக் கோபத்திலும் ஆத்திரத்திலும் தன்னிலை மறந்து வெறியாளாக மாற்ற கடைசியில் அவளையும் மீறி அன்று பிரசவத்தின் போது அவளுக்கு வந்த வலிப்பு இன்று வந்து கை கால்கள் எல்லாம் வெட்டி இழுக்கவும் எதற்கும் கலங்காத சிற்பியே அதை பார்த்து கலங்கியவனோ அடுத்த வினாடியே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு வேண்டியதைப் பார்த்தான் அவன்.

எதற்குப் பயந்தானோ இன்று அது நடந்தே போனது. வலிப்பு சரியானாலும் பேச்சு மூச்சில்லாமல் இருக்கும் மனைவியைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு நெஞ்சே பிசைந்தது. ரதிக்குப் பெரியதாக எந்த பாதிப்பும் இல்லை என்றும் இடமாற்றம் செய்தால் அவளுக்கு நல்லது என்றும் டாக்டர் சொல்லி விட அவள் கண் விழித்துப் பார்க்கும் வரை சிற்பிக்கு உயிரே அவனிடம் இல்லை. அவ்வளவு தவித்துப் போனான் அவன்.

வீட்டிற்கு வந்த பிறகு கூட மருந்து சாப்பிட அடம்பிடித்தவளை மிரட்டி உருட்ட மனம் வராமல் அவள் போக்கிலேயே போய் தான் அவளை எதையும் செய்ய வைத்தான் அவன்.

டாக்டர் சொன்ன இடமாற்றம் சிற்பயின் மனதில் ஓடிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் அதுவரை வீட்டில் அவன் இருக்கும் நேரம் போக அவள் தனியே இருப்பதை விரும்பாமல் அவன் மாமாவையும் தங்களுடனே தங்க வைத்துக் கொண்டான் சிற்பி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN