சுவாசம் - 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 17

எந்த ஒரு ஆணும்
தான் நினைத்த
வாழ்க்கையை வாழ்வதில்லை!
தன் குடும்பத்திற்காகவும்
தன்னை நேசிப்பவர்களுக்காகவும்
மட்டுமே வாழ்கிறான்!!!

ஆனால் தூக்கம் தான் அவளுக்கு வந்த பாடில்லை. பழிவாங்குவதற்காக அவனைத் திருமணம் செய்தவள் அதற்கான முயற்சியைத் தான் இன்று வரை அவளால் எடுக்க முடியவில்லை. எடுத்ததையும் தன்னுடைய பிடிவாதத்தால் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டான் அவன். இதோ இப்போது கூட தனக்கு வலியையும் வேதனையையும் கொடுத்தவனின் வலியையும் வேதனையையும் உணர்ந்து தள்ளி வந்து படுத்திருக்கிறாள்.

‘ஒருவேளை சிற்பி என்னைக் கொடுமைப் படுத்தி கஷ்டம் கொடுத்திருந்தால் நானும் வீம்புக்கு ஏதாவது செய்து இருப்பனோ?’ என்று பல எண்ணங்களுடன் சற்றே கண்ணயர்ந்தாள் ரதி.

இப்படியே நாட்கள் செல்ல இதோ ரதி சிற்பி பெற்றெடுத்த தேவதைக்கு முதல் பிறந்த நாளும் வந்தது. அன்றும் தன் தந்தையின் தோளிலேயே இருந்தவள் அவனின் கையைப் பிடித்த படி கேக்கை வெட்டி முதல் துண்டை தன் தந்தைக்கே ஊட்டி தன் பிடிவாதத்தில் ஜெயித்தாள் இன்று அந்த பிடிவாதகாரனின் மகளாக பிறந்திருக்கும் சிற்பியின் தாய் சந்திரவதனி.
விழாவிற்கு ரதியின் குடும்பத்தார் அனைவருக்கும் டிக்கெட் போட்டு அழைத்திருந்தான் சிற்பி. முதல் முறையாக கந்தசாமியைப் பார்ப்பதால் பாட்டி கங்கேஷ்வரி ஏகத்துக்கும் அவர் மகளைப் பற்றி அவரிடம் போட்டுக் கொடுக்க ஆரம்பித்தார். கணவனான சிற்பிக்கு வேண்டியதை செய்வதில்லை. அவனுக்கு உடம்பு சரியில்லை என்றால் கூட கவனிப்பது இல்லை. அவனிடம் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை என்று இப்படி ஏகப்பட்ட புகார். அப்போது தான் ரதிக்கே தெரிந்தது நாம் என்ன தான் சாதாரணமாகப் பழகினாலும் வெளியில் பார்ப்பதற்கு இவர்களுக்கு வேறுபாடு தெரிந்திருக்கிறது என்று..

பேரனுக்குப் பயந்து கங்கேஷ்வரி கந்தசாமியிடம் யாருக்கும் தெரியாமல் தனியாக சொல்லவும் அவரும் மகளிடம்
“இன்னா தேவி மா? இன்னா ஆச்சி? நான் சொன்னதுக்காண்டி தான் கல்லாணம் பண்ணிக்கினியா? அப்டி ஒண்ணியும் நீ இங்கிட்டு தான் கெடக்கனும்னு அவசியம் இல்ல மா. உன் நைனா நான் இன்னும் உசுரோட தான் கீறேன்.. என்னான்ட வந்துடுமா. ஆனா நான் செத்த அப்பால உனுக்கு யார் கீறாங்கனு தான் ஓசன பண்றேன். உன் தம்பி காபந்து பண்ணுவானு அல்லாம் தப்பு கணக்கு போட்டுக்காத. நாளைக்கு வூட்டுக்காரினு ஒருத்தி வந்தா அந்த பயபுள்ள மாறிப்பூடுவான். அதுக்காண்டி அவன தப்பு சொல்லிக்க மாட்டேன். அவன் எடத்துல அது கரீட்டு தான். உனுக்கு நான் நல்லத் தான் செஞ்சிருப்பனு உனுக்கு இன்னும் நம்பிக்கை வர்லையா தேவிமா?” என்று அவர் தொண்டை இறுகிப் போய் கேட்க, அவளுக்குமே தொண்டை அடைக்க

“இல்ல நைனா!” என்றவள் “இதுக்கப்பால பாத்து நடந்துக்கிறேன் நைனா. நீ ஒண்ணியும் ஓசன பண்ணி கஸ்டப் பட்டுக்காத” என்பதையும் சேர்த்துச் சொன்னாள் அவள்.
அங்கு தங்கியிருந்த ஒரு வாரமும் ஆட்டம் பாட்டம் ஊர் சுற்றல் தான். சின்னத் தங்கை அமுதரசிக்கும் கதிருக்கும் ஒரு நாள் பேச்சு வாக்கில் அமுதரசி தான் வெளி நாடு போய் படிக்க போவதாக சொல்ல எப்போதும் அவளுக்குப் போட்டியாக நானும் போவேன் படிப்பேன் என்று சொல்லி மல்லுக்கு நிற்கும் கதிர் இப்போது அது மாதிரி எதுவும் சொல்லாமல் இருக்கவும் அவனிடம் தேவி தனியாக என்ன ஏது என்று கேட்க.

ஷோஃபாவில் அமர்ந்திருக்கும் அக்காவின் முன் மண்டியிட்டு தரையில் அமர்ந்து அவள் மடியில் தலை வைத்தவனோ “எனுக்கு வெளியூரும் வேணாம் வெளிநாடும் வேணாம் க்கா. நான் எவ்வளவு படிச்சி வேலைக்குப் போனாலும் நான் நம்ப குப்பத்திலே இருந்து வேலை பார்க்கிறேன் க்கா. அதே மாதிரி…” என்றவன் சிறிது தயங்கி பின் “எனுக்கு கல்லாணமே வேணாம் க்கா. நான் கல்லாணமே பண்ணிக்க மாட்டேன்” என்று அவன் வயதுக்கு மீறிப் பேசவும்,

அதை கேட்டு சற்றே திடுக்கிட்டவள் எதுவும் பேசாமல் அவன் தலையை வருட, அதில் கண்கள் கலங்க அவள் கையைப் பிடித்து கன்னத்தில் வைத்தவனோ

“உனுக்கு மாமாவ சகிச்சிக்கவே முடியாதுன்ற காலம் வந்தா அதுக்காக நீ எங்க போகுறதுனு யோசிக்காத க்கா. உனுக்கு தம்பியா நான் இருக்கேன். எப்போதும் உனுக்கு நம்ப நைனா வீடு இருக்கும். நான் கல்லாணம் கூட பண்ணிக்க மாட்டேன். அக்காவுக்கு அக்காவா அம்மாவுக்கு அம்மாவா இருந்த உன்ன கடைசி காலத்துல நான் பார்த்துகிட்டேன்ற திருப்தியே போதும் க்கா எனுக்கு” என்று அவன் ஆணித்தரமாக சொல்ல, அவனின் அன்பில் உடல் சிலிர்க்க அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்து விட்டாள் ரதி.

‘என்ன மாதிரி அன்பு இது!? பிடிவாதமாக நீ சகித்துத் தான் ஆகனும் என்று சொல்லாமல் நீ வந்தால் நான் இருக்கிறேன் என்று சொல்கிறானே இவன்.. அப்பா என்னிடம் பேசினதைக் கேட்டு இருப்பானோ? அவர் கூட என்னை வற்புறுத்தவில்லை என் கூட கிளம்பி வானு தான் கூப்பிட்டார்’ என்று எல்லாம் யோசித்தவள
“டேய் கதிரு! இங்க நிமிர்ந்து அக்காவ பாரு. இன்னா இது சின்ன பையன் மாதிரி அழுகை? உன் அக்கா பொய் சொல்ல மாட்டானு தெரியும் இல்ல? இங்க சகிக்க முடியாத அளவுக்கு எனுக்கு எந்த கொடுமையும் நடக்கல டா. உன் மாமாவுக்கும் எனுக்கும் சின்ன சின்ன மனஸ்தாபம் தான் டா. அது பத்தி எல்லாம் இப்போ உனுக்கு சொன்னா புரியாது டா. இன்னும் கொஞ்சம் பெரியவனா வளர்ந்தினா நீயே புரிஞ்சிக்குவ. அத்தால எதையும் யோசிக்காம உன் படிப்புல மட்டும் கவுனமா இரு. புரிஞ்சிதா?” என்று ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் ஒத்துக் கொண்டவள் இனி கணவனுடன் சண்டையிடும் போது அக்கம்பக்கம் பார்த்து நடந்துக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தாள் அவள்.


சந்திரவதியின் பிறந்த நாளுக்காக ஊரிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு விதமாக ரதியின் மனநிலையில் மாற்றத்தைக் கொடுக்க கூடவே அங்கு வந்திருந்த அறிவுமதியும் மணிமாறனுமே வேறு விதமாய் அவளுக்கு மாற்றத்தைக் கொடுத்தார்கள்.

தன்னுடைய வேலை விஷயமாக டெல்லி வந்த மாறன் பிறந்த நாள் விழா முடிந்ததும் மனைவி மதியை ரதி வீட்டில் விட்டு அவன் வெளியே சென்றிருந்த நேரம் திடீரென மயங்கி விழுந்தாள் மதி. உடனே டாக்டரை வரவழைத்து என்ன ஏது என்று பார்க்க மதி கர்ப்பமாக இருக்கிறாள் என்றார் அவர். டாக்டர் பரிசோதிக்கும் போது ரதி கூடவே இருந்ததால் அவர் மதி மற்றும் ரதி என இருவரிடமும் இதை சொல்ல சந்தோஷத்தில் ரதிக்கு இதை உடனே தன் தந்தையிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் தடுத்தது மதியின் கெஞ்சல் குரல்.

“அக்கா பீளீஸ்! இந்த விஷயத்தை இப்போ நீ யார்கிட்டேயும் சொல்லாத க்கா. எனக்கே நாள் தள்ளிப் போகவே டவுட் தான். இருந்தாலும் உறுதியாகட்டும்னு வெயிட் பண்ணினேன். முதல்ல அவருக்கு தான் இந்த விஷயம் தெரியனும்னு நான் ஆசைப்படறேன். அதுவும் அவர்கிட்ட நானா முதன் முதலா சொல்லனும்னு நினைக்கிறன் க்கா. அதனால இப்போ யார்கிட்டையும் சொல்லாத. டாக்டர் நீங்களும் சொல்லாதிங்க” என்று தங்கை ஒரு வித சந்தோஷ எதிர்பார்ப்புடன் கேட்க, மாட்டேன் என்று மறுப்பாளா?

ரதி திருமணத்திற்கு முன்பு மதிக்கும் மாறனுக்கும் ஏதோ சில மனவருத்தங்கள் இருந்தது என்று ரதிக்குத் தெரியும். அதெல்லாம் இன்று ஒன்றுமில்லை என்று இருவருக்குள்ளும் சரி ஆனதையும் மீறி இன்று எப்படிப் பட்ட அன்னியோன்யம் இருவருக்குள்ளும் வந்திருந்தால் இப்படி ஒரு சந்தோஷமான விஷயத்தை யாரிடமும் முதலில் பகிர்ந்துக்க விரும்பாமல் தன் மூலமாக கணவனிடம் சொல்லத் துடிக்கிறாள் என்று நினைத்தவள் கூடவே

‘இப்படி ஒரு வாழ்வு தானே எனக்கு கிடைத்திருக்கும்? இப்படி இல்லையென்றாலும் சாதாரண வாழ்வையாவது வாழ்ந்து இருப்பேனே?....’ அவள் எண்ணத்தை தற்காலிகமாக இடைவெட்டியது திடிரென “மதிமா!” என்று பதட்டத்துடன் உள்ளே நுழைந்த மாறனின் குரல்.

தன் எண்ணத்திலிருந்து வெளியே வந்தவளுக்கு தங்கையின் இவ்வாழ்வைப் பார்த்து பொறாமை எல்லாம் இல்லை. தனக்கும் கிடைத்திருக்குமே என்ற ஏக்கம் தான். அந்த ஏக்கமே இதையெல்லாம் தனக்கு கிடைக்காமல் பண்ணின சிற்பி மேல் வெறுப்பை அதிகரிக்க அந்த நேரம் பார்த்து சிற்பியும் மாறனும் தனியாகப் பேசிக் கொண்டதை கேட்க வேண்டி வந்தது.

மாலை வீட்டுக்கு வந்ததும் சிற்பி அவசர வேலையாக ஆபிஸ் அறையில் இருக்க அவன் வந்தது தெரிந்து மாறன் அவனைப் பார்க்க அங்கு வரவும் இதையறிந்து இருவருக்கும் காபி வேணுமா என்று கேட்க ரதி அறைக்கு வர

“இந்தாங்க சிற்பி உங்க பணம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை” எடுத்த எடுப்பிலேயே மாறன் கூற

“என்ன பணம் சகலை இது? என் பணமா? நான் எப்ப குடுத்தேன்?” என்று சிற்பி யோசனையுடன் இடை வெட்ட

“என்ன மறந்திட்டிங்களா? பாட்டி எங்க கல்யாணத்திற்கு நிறைய சீர் செய்ய சொல்லி கேட்டப்போ என்னால முடிஞ்ச பணத்துல நான் செய்தேன். மீதிய நீங்க தானே டிரஸ்ட் என்ற பெயர்ல உங்க பணத்தை தந்தீங்க? அந்த பணம் தான் இது. இதை எப்பவோ உங்களுக்குத் தர இருந்தேன். இப்போ தான் அரேன்ஜ் பண்ண முடிந்தது” என்று அன்று நடந்ததை நினைவு கூர்ந்து மாறன் சொல்ல

“அட என்ன சகல இது.. நமக்குள்ள போய் அந்த பணத்தை நான் திரும்ப கேட்டேனா? எதுக்கு இப்போ இது?” என்று சிற்பி மறுக்க

“இல்லங்க வர்மா! இதை மறுக்காம நீங்க வாங்கித் தான் ஆகனும். என் கல்யாணத்துக்கு என் மனைவிக்கு நானே என் பணத்துல செலவு செய்ததா இருக்கட்டும். வாங்கிக்கங்க” என்று மாறன் அதே பிடியில் நிற்கவும்

“சரி வாங்கிக்கறேன் ஆனா இப்போ இல்ல. உங்களுக்கு குழந்தை பிறக்கப் போகுது. அதுக்கு உங்களுக்கு நிறைய செலவு இருக்கும். அதுக்கு இப்போ இந்த பணம் பயன்படும். குழந்தை பிறந்து கொஞ்ச நாள் ஆன பிறகு தாங்க. நான் மறுக்காம அப்போ வாங்கிக்கறேன்” என்று சிற்பியும் மறுத்து விட, இதெல்லாம் கேட்ட ரதிக்கு சகலைகளின் ஒற்றுமையையும் மீறி சிற்பி மேலிருந்த வெறுப்பு ஆத்திரமாக மாறியது. கணவன் எப்போது தனிமையில் கிடைப்பான் என்று அவள் காத்திருக்க அப்படி கிடைத்ததும் நீண்ட நாட்கள் கழித்து மறுபடியும் முருங்கை மரம் ஏற ஆரம்பித்தாள் அவள்.

“என்ன உங்க பணத்தைக் கொடுத்து எங்க வீட்டுல இருக்கிறவங்க எல்லோரையும் உங்க பக்கம் இழுக்கப் பார்க்கிறீங்களா?” என்று அவள் எரிமலை என வெடிக்க

“என்ன டி இன்னைக்கு எதையோ புதுசா தூக்கிட்டு வந்திருக்க போல! எதுவா இருந்தாலும் தெளிவா கேளு. பிறகு உனக்கான பதில நான் தரேன்” என்று கணவன் அசராமல் அவளை கேள்வி கேட்க

அவன் அசராமல் தன்னையே கேள்வி கேட்கவும் இன்னும் கோபமுற்றவள் “என் தங்கை அறிவுமதி கல்யாணத்திற்கு நீங்க பணம் தந்திங்களா?” என்று அவள் நேரடியாக விஷயத்திற்கு வரவும்

“ஆமா கொடுத்தேன். ஆனா அதற்கும் இப்போ நீ கேட்க வர்ற விஷயத்திற்கும் என்ன சம்மந்தம்?” மறுபடியும் அவனிடம் அலட்டல் இல்லாத கேள்வி

“ம்ம்ம்..” ருத்ரா தேவியாக பல்லைக் கடித்துக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ‘அப்போ..” என்று அவள் ஆரம்பிக்கும் போதே மனைவி முன் ஒரு டம்ளர் தண்ணீரை நீட்டியவன்

“இங்க பார்.. எதையாவது பேசி நீ என்ன எவ்வளவு கோபப்படுத்தி பார்க்க நினைத்தாலும் உன்னால நினைக்கத் தான் முடியுமே தவிர என்னைக் கோபப்படுத்த உன்னால் முடியாது. அதிலும் உன்னிடம் எனக்கு கோபமே வராது. போதும்.. ஒருமுறை நான் கோபப்பட்டு அதுல நீ மயங்கி விழுந்து நீ பட்ட வேதனைய என் கண்ணெதிர பார்த்தவன் நான். அது எனக்கு நரகம்! அதை மறுபடியும் பார்க்க எனக்கு உடம்புல தெம்போ இல்ல மனசுல சக்தியோ இல்ல. அதனால வீணா கத்தி உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாம இந்த தண்ணிய குடிச்சிட்டு நிதானமா கேளு. நான் கூலா உனக்கு பதில் சொல்லுகிறேன்” எனவும்

இதைக் கேட்டு மனைவி அதிர்ச்சியுடன் என்ன டா திடீர்னு நல்லவனா மாறிட்ட என்பது போல் கணவனைப் பார்த்து பேந்தப் பேந்த முழிக்கவும் அதில் முகம் கனிய தண்ணீர் டம்ளரை அவன் மனைவியின் உதட்டருகே கொண்டு செல்ல அதை அவனிடமிருந்து வாங்கிக் குடித்து முடித்தவள்

“அப்போ டிரஸ்ட் என்ற பெயர்ல என் அப்பாவுக்கு சக்கர நாற்காலி வாங்கிக் கொடுத்ததும் நீங்க தானா?” என்று தன் இன்னோர் சந்தேகத்தை அவள் கேட்க
நல்லவேளை அவளை படிக்க வைப்பது கணவன் தான் என்பது அவளுக்கு தெரியாது இதில் மைதிலி சம்பந்தபட்டு இருப்பதால் அவளுக்கு சந்தேகம் வரவில்லை ஆனால் அந்த மைதிலியிடமும் பேசி தன் மனைவி படிப்பிற்க்கு சகலமும் செய்பவன் சிற்பி தான் என்பது என்றைக்கு தெரிய வருமோ?

மனைவி கேட்ட கேள்விக்கு “ஆமாம்” என்று நேர் கொண்ட பார்வையுடன் ஒத்துக் கொண்டான் சிற்பி.

“நீங்க யார் எங்களுக்கு இதை எல்லாம் செய்ய?” என்ன தான் நிதானமாக இருக்க நினைத்தாலும் அவளையும் மீறி அவள் வெடிக்க

“மணிமாறன் எனக்கு தம்பி முறையாகுது. அதனால என் தம்பி கல்யாணத்திற்கு ஒரு அண்ணனா நான் பண உதவி பண்ணினேன். அது கூட கடனா தான். திரும்ப எப்போ வேணாலும் மணிமாறன் கொடுத்திடுவார் நானும் வாங்கிக்குவேன்.

அதே மாதிரி நான் ஒன்னும் உன் அப்பாவுக்கு செய்யல. என் மாமனாருக்கு தான் செய்தேன். நான் அவருக்கு மூத்த மருமகன் மட்டுமில்ல மூத்த மகனும் கூட தான். அதனால என்னை செய்ய வேணாம்னோ இல்ல ஏன் செய்தேனு கேட்குற உரிமையோ உனக்கு இல்ல” என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற தன் பேச்சால் தான் யார் அந்த குடும்பத்திற்கு என்பதை அவன் வார்த்தையால் வெளிப்படுத்த

உரிமை கொண்டாடி நிதானமாக பேசிய அவன் வார்த்தைகளில் இன்னும் அவளுக்கு கோபம் தலைக்கு ஏற

“ஓ…. நான் கேட்க கூடாதா? நான் கேட்பேன் தான் இன்னும் கேட்பேன். எனக்கு செய்த கொடுமைக்கு பரிகாரம் தேடுறிங்களா இல்லை என்னைத் தொட்டு அனுபவிச்சதுக்கு விலை பேசுறிங்களா? அதுவும் இல்லனா இப்படி உங்க பணத்தைக் காட்டி இன்னும் என் மற்ற தங்கைகளின் வாழ்க்கையை நாசம் பண்ண பார்க்கிறிங்களா?” என்று அவள் அவனை வார்த்தையால் கழுகென கொத்திப் பிடுங்க

இப்படிப் பட்ட வார்த்தையில் நிதானம் இழந்து தன்னை மீறி கையை ஓங்கி விட்டான் சிற்பி. ஆனால் அது மனைவியின் மேனியில் படும் முன்னே கண்ணை மூடி தன்னை சமன் செய்தவன்

‘ஒரு காலத்துல உன் நிமிர்வு தன்னம்பிக்கை தைரியம் யாரையும் வச்சிப் பார்க்காத உன் துணிச்சலான பேச்சு இதெல்லாம் தான் டி பிடிச்சிருந்தது. ஆனா அதற்கு பிறகு அதையெல்லாம் நினைத்து நினைத்து நான் வருந்தாத நாளே இல்ல டி..’ என்று எதையோ யோசித்தவன் ஒரு தலை அசைப்புடன் அந்த கசப்பான உணர்விலிருந்து வெளி வந்தவனோ

“என்ன சொன்ன? குடும்பத்தை வளைத்துப் போடறன்னா? அவங்க எல்லாம் என் குடும்பம் டி. என் குடும்பத்த வளைத்துப் போட நான் ஏன் டி பணம் தரனும்? அப்பறம் என்ன சொன்ன?”

அறிவுமதியையும் அமுதரசியையும் வைத்து அவள் சொன்ன வார்த்தையை திரும்ப சொல்லி காட்ட விரும்பாதவன் சற்று நிறுத்தி இடைவேளை விட்டு

“நீ மட்டும் இல்ல டி. இந்த உலகத்துல இருக்கிற எல்லா பெண்களும் இப்படி தான் பேசுறிங்க. அதிலும் கோபம் வன்மம் ஆத்திரம் வந்தா இந்த மாதிரி வார்த்தைகளை தான் பயன்படுத்தி அசிங்கப் படுத்துறிங்க. இதே உங்க பையனோ இல்ல கூடப் பிறந்த பிறப்புகளோ இப்படி அவன் மனைவி குடும்பத்திற்கு செய்தா நாங்க வளர்த்த வளர்ப்பு இப்படி. ஏமாளியா வளர்த்துட்டோம்.. அதான் இப்படினு பெருமைப் பட வேண்டியது. அதே உங்களுக்கு தெரிந்த உறவுக்குள்ள இருக்கிற ஆண்கள் இப்படி எல்லாம் செய்தா அசிங்கமாகப் பேச வேண்டியது. இப்போ நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லு. இதே உன் தம்பி கதிர் இப்படி அவன் மனைவி குடும்பத்துக்கு செய்தா இதே கேள்விய அவனைப் பார்த்துக் கேட்பியா?” என்று அவன் கோபக் கனலில் கேட்க

முடியுமா? அது எப்படி முடியும்? அதுவும் தம்பியைப் பார்த்து.. அவள் மவுனமாகத் தலை குனியவும் “முடியாது இல்ல?” என்றவன்

கட்டிலில் தூங்கும் மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு சட்டென அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த அறையின் உள்ளேயே இருக்கும் படுக்கையுடன் கூடிய அவனுடைய அலுவலக அறைக்குள் இழுத்துச் சென்றவன் அங்கு பழத்தட்டில் இருந்த கத்தியை எடுத்து அவள் கையில் வைத்து கூடவே அவள் கையைத் தன் கையால் அழுந்தப் பிடித்தவனோ

“நான் தானே உன் வாழ்க்கைய சீரழித்தேன்? அப்படி சீரழித்த என்னை ஏன் இன்னும் உயிரோட வெச்சிருக்க? இந்தா கத்தி.. உன் வன்மம் வெறி தீரும் வரை என்னை செதில் செதிலா கிழித்துப் போட்டுடு.

நீ அதை மறக்கனும்னு தான் நான் நினைக்கிறன். ஆனால் நீ தினம் தினம் மறக்காம இப்படி இருக்கிறதை பார்க்க முடியல. அதான் என்ன கொன்னுட சொல்றேன்” என்றவன் அவள் அந்த கத்தியைப் பிடிக்கக் கூட திறன் இல்லாமல் இருக்கவும் அவள் கையுடன் சேர்த்து அந்த கத்தியைப் பிடித்து தன் மணிக்கட்டு நரம்பில் அவன் அழுத்தி வெட்ட நினைக்க அவளோ கணவன் நோக்கம் அறிந்து கையை விலக்க அது குறி தவறி சதைப் பற்றான அவன் கையில் மெல்லியதாக கீறியது.

அதுவே அவளுக்கு நடுக்கத்தைக் கொடுக்க முகம் வெளிற அவள் கணவனைப் பார்க்கவும் என்ன குறி தவறிடுச்சேனு வருத்தமா இருக்கா? அப்போ கழுத்திலேயே இதை வைத்து ஒரு இழு இழுத்திடு” என்று சொல்லி அவன் கத்தியைக் கழுத்தில் வைக்கவும்

“ஐயோ போதும்.. ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்ற என் கையை விடு” என்றவள் அந்த கூர்மையான பகுதி அவன் கழுத்தில் படாதவாறு தன் இன்னோர் கையால் அவள் அதை அழுத்திப் பிடிக்கவும் உடனே தங்கள் கையிலிருந்த கத்தியை நழுவ விட்டவன் மறுநிமிடமே மனைவியின் கையில் ஏதாவது காயம் ஏற்பட்டு இருக்குகோ என்று பதட்டத்தில் ஆராய அவன் நினைத்தது போல் அப்படி எதுவும் இல்லை. சற்றே நிம்மதி மூச்சு விட்டவன் மனைவியை இழுத்து அணைத்து

“எனக்கு தெரியும் டி உன்னைப் பற்றி. நீ மட்டும் நினைத்திருந்தா என்னைக்கோ என்னை சாகடித்து இருக்கலாம். அதை நீ செய்ய மாட்டனு சொல்லல. என்னை அப்படி செய்ய உனக்கு தைரியம் வரலனு சொல்றேன். உன்னால என் கூட சேர்ந்தும் வாழ முடியாம என்ன பழி வாங்கவும் முடியாம என்னை விட்டு விலகியும் போக முடியாம நீ படுற பாடு எனக்கு தெரியுது டி. இப்ப கூட நான் பணம் கொடுத்தது உனக்கு கோபம் என்றாலும் அதையும் மீறி உன் மனசுல எதையோ வச்சிட்டு தான் நீ இப்படி எல்லாம் நடந்துக்கிறனு எனக்குத் தோணுது. ஏன்னா நான் அந்த அளவுக்கு உன்ன புரிஞ்சி இருக்கன்” என்று அவன் ஆதங்கப் பட

அவளுக்கு உள்ளுக்குள் சுரீர் என்றது. அவன் சொல்வது சரி தானே? தனக்கு அமையவிருந்த வாழ்வை அழித்ததற்காகத் தானே அவள் அதிகம் கோபபட்டது. இப்போதும் அவன் மார்பில் சாயவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவிப்பதும் உண்மைதானே? என்று அவ யோசிக்க

“இன்னும் என்ன டி சொன்ன? உன்னைத் தொட்டதற்கு தான் பணத்தை விலையா கொடுத்தேனா? என்று மருகியவன் “ம்ம்ம்… இது கூட நல்லா தான் இருக்கு. இதுவரை நான் யோசிக்காத ஒன்றை யோசிக்க வச்சிட்டியேடி! ஆனா..” என்று யோசித்த படி இழுத்தவன் பிறகு

“உன் மேனி அப்படி ஒன்னும் தங்கத்தாலும் வைரத்தாலும் இழைத்தது இல்லையே! இதை ஏன் சொல்றேனா நான் செய்திருக்கிற பணத்தோட மதிப்பு பல லட்சம் போகும் அதான்..

ஹாங்.. நீ சொன்னதற்கு என்ன அர்த்தம்னு இப்போ புரிந்துக்கிட்டேன். ஏன்னா உன் புருஷன் மக்கு புருஷன் பாரு? அதான் லேட்..” என்று அவளை நக்கல் அடித்தவன் “என் பணத்திற்கான மதிப்பு அன்று ஒரு நாள் மட்டும் இல்ல அதன் பிறகு தினந்தோறும் தான்னு நீ சொல்ல வர்றது எனக்குப் புரியுது” என்று கூறி தன்னவளை தலையிலிருந்து பாதம் வரை ஒரு மார்க்கமா பார்த்து கண் சிமிட்டி மனைவி சொன்னதை வேறு வழியில் அர்த்தம் கற்பித்து அவளையே சீண்ட, அவளோ அவனைக் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ இன்னைக்கே நம்ப கொடுக்கல் வாங்கல் டீலிங்கை ஆரம்பிச்சிடுவோம். ஆர் யூ ரெடி பேபி?” என்று அவன் சரசமாக அழைக்க

“ஏய்! ச்சீ..” என்ற சொல்லுடன் மனைவி திமிறி விலக

“என்ன டி ச்சீ? இதுவரைக்கும் உன்னை நான் விட்டு வைத்தது தப்பு தான். நீ மாறுவனு பார்த்தன் ஆனா நீ மாறவே மாட்டனு காண்பிச்சிட்ட” என்ற சொல்லுடன் அவள் திமிறத் திமிர மனைவியைத் தூக்கியவன் அங்கு அவனுக்காக போடப்பட்டிருந்த ஒற்றைக் கட்டிலில் இட்டு மனைவி மேல் படர அவளோ அவனை விலக்கத் தன் மூர்க்கத் தனத்தை பயன்படுத்த அதையெல்லாம் சுலபத்தில் அவன் தகர்க்கவும் மனையாளோ கத்த ஆரம்பிக்க அதையும் அவள் இதழில் தன் இதழ் கொண்டு எளிதில் அடக்கியவனோ பின் அவள் மேனியெங்கும் தன் விரல்களால் கோலமிட ஒரு கட்டத்திற்கு மேல் அவன் பாரம் தாங்காமல் அவனுள் அடங்கியவள் பின் மூச்சு விடவும் சிரமப் பட அவளுள் மூழ்கியவனோ அந்த நிலையிலும் தன்னுடைய இச்செயலில் எங்கே அவளுக்கு வலிப்பு வந்துவிடுமோ என்று பயந்தவன் அடுத்த வினாடியே மனைவியை விட்டு சற்றே விலக...

“ஐயோ! ஐயோ! வேணாம் வேணாம்.. எனக்கு அந்த வலியும் வேதனையும் திரும்ப வேணாம்.. அன்று என்ன நடந்ததுனு கூட எனக்குத் தெரியாது. ஆனா அதன் பிறகு நான் அனுபவித்த வலி வேதனை கஷ்டம்..” என்று திணறியவள் நிறுத்தி கண்ணில் நீர் வழிய “நிச்சயம் அந்த வலி வேதனையை என்னால இப்போ தாங்கிக்க முடியாது. அதற்கு என்ன நீ சாகடிச்சிரு.. என்ன சாகடிச்சிரு..” என்ற படி இதையே நிதானம் இல்லாமல் தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்த படி கணவன் விலகியது கூட தெரியாமல் தன் கைகளால் காற்றைத் துழாவிய படி அவள் கதற

“ரதீ.. ரதீ.. இங்கே பாரு மா. இப்ப ஒன்றும் நடக்கலை மா. நான் உன்னை அப்படி வருத்துவேனா?” என்று அவன் அவள் தலை கோதி முகம் வருடி குரலில் கெஞ்சலோடு மன்றாட, அவன் குரல் எதுவும் அவளை எட்டவில்லை.

மேற்கொண்டு என்ன செய்வது என்று தடுமாறியவன் மேல் கொண்டு அவள் படும் வேதனையைக் காண பொறுக்காமல் அடுத்த நொடியே மனைவியின் மார்பில் தன் முகம் புதைத்து அவளை இறுக்க அணைத்தவனோ “அம்மா நீங்க எங்க இருக்கீங்க மா? உங்க மருமக இந்த பாடுபடறாளே நீங்க கொஞ்சம் அவளைப் பார்த்துக்க மாட்டீங்களா?” என்று தெய்வமாய் இருக்கும் தன் தாயிடம் அவன் மன்றாட, அப்போதும் அவளிடமிருந்து வந்த கதறல் நிற்கவில்லை. கூடவே அவள் கை கால் உடம்பு எல்லாம் தூக்கிப் போடவும்

இவனும் அவளை இறுக்க அணைத்த படி விடாமல் இதையே உருப்போட்டவன் இறுதியாக அவனாலேயே முடியாமல் கண்ணீர் விட அது அவள் கழுத்து மார்பு என்று நனைக்க அதுவே அவளுடைய பயம் என்னும் வேள்வியைத் தணிக்க போதுமானதாய் இருந்தது. அதில் அவளின் கதறல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அவள் சுயநினைவைப் பெற்ற நேரம் கணவனின் மன்றாடல் துல்லியமாக அவள் காதில் விழுந்தது. அந்த நிலையிலும் இவனுக்குள் இப்படி ஒரு மாற்றமா என்று யோசித்தவள்

அதில் இன்னும் சுயநினைவு பெற்று அவனைத் தன்னிடமிருந்து விலக்கித் தள்ள மனைவியின் செயலில் தெளிந்தவனோ நிமிர்ந்து அவள் முகம் பார்க்க அவளோ கண்ணில் பயத்துடன் அவனை நோக்க அவள் பயம் போக்க நினைத்தவனோ அவள் முகமெங்கும் முத்தமழை பொழிய ஆரம்பித்தவன் கூடவே தன் கண்ணீர் தடங்களையும் பதித்தான் சிற்பி.

தன் அச்சாரங்களை நிறுத்தியவனோ பின் அவளைக் கட்டிக்கொண்டு தூங்க மறுபடியும் அவனிடமிருந்து திமிறினாள் அவனின் ராட்சசி.

“பேசாம தூங்கு டி. இப்போ நீ என்ன படுத்தின பாட்டுக்கு உன்னை இப்படி அணைச்சிட்டு தூங்கினா தான் எனக்கு நிம்மதி” என்று அவன் கரகரத்த குரலில் சொல்ல

“எனக்குப் பிடிக்கலை” என்றாள் ரதி பட்டென்று. உடனே அவள் விருப்பதிற்கு மதிப்புக் கொடுத்து விலகியவனோ

“சரி வா அந்த ரூம்ல பாப்பாவோட தூங்கலாம்” என்று அவன் அழைக்க

“நீங்க போங்க.. என்னால இப்போ எழுந்திரிக்க கூட முடியாது. நான் இங்கேயே தூங்குறேன்” என்றவள் அதன்படியே முகம் வரை பெட்ஷீட்டால் போர்த்திக் கொண்டு தூங்க, சற்று நேரம் அவள் முகம் மூடிய போர்வையையே பார்த்தவனோ பின் ஒரு பெருமூச்சுடன் விலகிச் சென்றான் சிற்பி.

காலையில் ரதி கண் விழிக்கும் போது கணவனின் மார்பில் தலை சாய்த்து இருப்பதை உணர்ந்தவளுக்கு பின் நேற்று இரவு நடந்தது எல்லாம் நினைவு வர

‘ஃப்ராடு! என்னமா நடித்து நைட் என்னை இங்கே தூக்கிட்டு வந்திருக்கான்’ என்று நினைத்தவள் எழுந்திரிக்க நினைக்க அதை அவளைச் செய்ய விடாமல் சட்டென இறுக்க அணைத்தான் சிற்பி. அவனிடமிருந்து திமிறிய படியே சற்றே எம்பி அவள் குழந்தையைப் பார்க்க அவளுக்கு இரு பக்கமும் தலையனையைக் கொடுத்து தூங்க வைத்திருந்தான் அவள் கணவன்.

“எல்லாம் பிளான் தான் போல” என்று முணுமுணுத்தவள் “அடேய் இடி மாடு! என்ன விடு டா..” என்று அவள் சன்னமான குரலில் கோபப்பட, அதில் சட்டென கண் விழித்து அவளை ஒரு வினோதமான பார்வை பார்த்தவனோ

“ஏய் குல்ஃபீ!..” என்று காதலோடு அழைக்க அவன் அழைப்பைத் தவிர்த்தவளோ

“என்ன சிற்பி இது குழந்தை முன்னாடி?..” என்று எரிச்சல் பட கண்ணில் ஒரு வித சுவாரஸ்யத்துடன்

“அப்போ குழந்தை இல்லாதப்போ கட்டிக்கலாம்னு சொல்லுறியா?” என்று அவள் காதில் அவன் கிசுகிசுப்பாகக் கேட்க

“அட ச்சீ எரும மாடு.. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது டா. கொஞ்சோண்டு எடத்த கொடுத்தா நீ மடத்தையே பிடிக்கற ஆளுனு எனக்குத் தெரியும். அதனால ஒழுங்கா இப்போ வழி விடு” என்று அவள் சீற..

“மடத்தையா? அட போ டி பைத்தியக்காரி! நான் நேத்தே பட்டா எல்லாம் போட்டு உன் மனசுல குடியே வந்துட்டேன். இப்போ தான் அம்மணி என்னமோ இடம் மடம்னு பேசிட்டு இருக்கா” என்று அவன் சிரிக்காமல் பொய் மூட்டையை அவிழ்த்து விட

“அடேய் கஸ்மாலம்! சும்மாவாச்சம் என்ன டபாய்க்காத டா..” என்று இவள் நம்பாமல் எகிற

“நிஐம் தான் டி என் பொண்டாட்டி இன்னேரம் சந்திராவுக்கு தங்கச்சி பாப்பாவே உருவாகி இருக்கும்!” என்று அவள் வயிற்றை வருடிய படி சொன்ன பொய்யையே அவன் உறுதிப்படுத்த ரதியோ திறந்த வாயை மூடாமல் அதிர்ச்சியோடு கணவனைப் பார்க்க அவளின் பார்வையில் தன்னை இழந்தவனோ பட்டும் படாமல் அவள் இதழுக்கு முத்தமிட்டு அவள் இதழ்களை ஒன்று சேர்த்தவனோ பின் விலகி

“போ.. போய் மாமாவுக்கு காபி எடுத்துட்டு வா” என்று கட்டளையிட

“இன்று என்ன புதுசா என்ன எடுத்துட்டு வர சொல்ற?” என்று அவள் முறைக்க

“இனிமே எல்லாமே அப்படி தான் டி” என்று சொல்லி கண்ணடித்தவன் சகஜமாக அவள் முதுகை வருட

அதில் நெளிந்தவளோ “அப்படி எடுத்திட்டு வரலனா என்ன டா செய்வ?” என்று இவள் தலையைச் சிலுப்ப

“காபி மட்டும் இல்ல மா. இனி எனக்கு வேளாவேளைக்கு சாப்பாடு கொடுக்கிறது என் துணி துவைத்து அயர்ன் பண்றது என்னை உரசினாபோல நின்று சட்டை பட்டன் போடுறது உடம்பு சரியில்லனா இதமா பதமா எனக்கு தைலம் தேய்த்து விடுறது இதெல்லாமே இனி நீ தான் செய்யனும். அப்படி செய்யலனா..” என்று அவன் நிறுத்த

“அப்படி செய்யலனா?” என்ற சொல்லுடன் கொலை வெறியுடன் இவளும் நிறுத்த

“உங்க அப்பா கிட்ட நீ என்னை சரியாவே பார்த்துக்க மாட்டேங்கறனு நான் சொல்லிடுவேன். எப்படி வசதி?” என்று அவன் மடக்க

‘ஏற்கனவே பாட்டி சொன்ன வார்த்தையில் நொந்து போய் இருப்பவருக்கு இப்போ இது வேறையா?’ என்று நினைத்தவள்

“சரி செய்து தொலைக்கிறன்” என்ற சொல்லுடன் பல்லைக் கடித்தபடி விலகிச் சென்றாள் ரதி. வெறுப்புடன் போகும் மனைவியையே பார்த்தவன்

“மாமா உங்க பெயரைச் சொல்லியே இனிமே உங்க பொண்ண என் வழிக்குக் கொண்டு வரப் பார்க்கிறேன்” என்று சிரிப்புனூடே குதூகளித்தவன் பின் எழுந்து விட்ட தன் மகளைப் பார்க்கச் சென்றான் அவன்.

மனைவியின் மனநிலையை மாற்ற நினைத்து அவளைச் சீண்டிய சிற்பி இரண்டு நாள் தான் சந்தோஷமாக இருந்தான். தன் மகளின் பிறந்த நாள் விழாவிற்கு வந்த அவனின் மாமா இன்னும் ஊருக்கு போகாமல் அங்கேயே இருந்தார். ஒரு நாள் மாலை சிற்பி அவன் ஆபிஸ் அறையில் வேலையாக இருக்க அவனைத் தேடி அவசரமாக அங்கு வந்த அவன் மாமா

“வர்மா *** இறந்துட்டான் டா” என்று சொல்ல

“என்ன மாமா இப்படி சொல்றீங்க? இன்னும் கொஞ்ச நாள் அவன காப்பாற்றி இருக்கலாமே? அவன் சித்திரவதைப் பட எவ்வளவோ இருக்கே?” என்று சிற்பி குறைபட

“டேய்! அவனை நீ கொடுத்த மாதிரி இங்கிலீஷ் மருந்து கொடுத்து வந்திருந்தா என்றைக்கோ அவன் செத்திருப்பான். இதுவே நான் அவனுக்கு நாட்டு மருந்து கொடுத்ததால் தான் இவ்வளவு நாளாவது உயிருடன் இருந்தான். அவன் என்ன சித்திரவதை மட்டுமா அனுபவிச்சான்? உயிரோட இருக்கும் போதே நரகத்தை இல்ல பார்த்தான்?” என்று அவர் எடுத்துச் சொல்ல யோசித்ததில் அவனுக்கும் அது உண்மை என்றே பட்டது.

“இருந்தாலும் எனக்கு மனசு ஆரலை மாமா..” என்று அவன் முடிக்காமல் நிறுத்தவும்

“ம்ம்ம்..” என்றவர் ஏதோ யோசனையுடன் சற்றே தயங்கித் தயங்கி “ஏன் வர்மா எதற்கும் குழந்தை சந்துமா கையால் பதினாறாம் நாள் அன்னைக்கு காரியம் பண்ணிடலாமா?..”அவர் முடிப்பதற்குள் முகம் ரவுத்திரமாய் மாற

“மாமா!” என்று கர்ஜித்தவன் “என்ன மாமா பேசுறிங்க? என் பொண்ணு எதுக்கு மாமா எவனோ செத்ததுக்கு காரியம் பண்ணனும்?” என்று அதட்ட

“டேய் சந்துமா உன் மக தான் டா. அதை யாரு இல்லைனு சொன்னா? ஆனாலும் அவ உடம்புல ஓடுறது அவனோட ரத்தம் தானே டா? அவன் தானே உண்மையான அப்பா? நாளைக்கு குழந்தைக்கு தீட்டால ஏதாவது ஆகிடப் போதுனு தான்..” என்று அவன் முகம் போன போக்கைப் பார்த்து அவர் இழுக்க

“மாமா! நீங்க என்றதால தான் இவ்வளவு நேரம் பேச விட்டு நான் அமைதியா இருக்கேன். இதே வேற யாருனா பேசியிருந்தா இந்நேரம் உயிரோட இருந்திருக்க மாட்டாங்க. என் உயிரான மனைவியை ஒருத்தன் கடத்திட்டுப் போய் அவளுக்கு சுயநினைவே இல்லாத சமயத்துல அவளை அழித்து குத்துயிரும் கொலையுயிருமா போட்டிருக்கான் . அவளுக்கே தெரியாம தங்கின குழந்தைக்கு அவன் தான் அப்பன்னு நான் விட்டுக் கொடுத்துட்டு இருக்கனுமா?” ஏதோ சொல்ல வந்தவரை தன் கை உயர்த்தி தடுத்தவன்

“நீங்க என்ன சொல்ல வர்றிங்கனு எனக்கு தெரியுது மாமா. அதற்கு நான் அன்று சொன்னதைத் தான் இன்றும் சொல்கிறேன். தாலி கட்டினா தான் ரதி என் மனைவி இல்லை. என்னைக்கு அவளை என் மனசுல நினைச்சனோ அன்றே அவ என் மனைவி தான். என் மனைவிக்கு நடந்த கொடுமைக்கு தான் அவனுக்கு நரகத்தை காட்டினேன். இது தான் மாமா நாம இதைப் பற்றி பேசுற முதலும் கடைசியும்” என்று அவன் எச்சரிக்க

“வர்மா! நான் சொன்னது தப்பு தான் டா.. வயசாகிடுச்சி இல்ல?..” என்று அவர் இழுக்க

“சரி விடுங்க மாமா” என்று அவரை சமாதானப் படுத்தியவன் அங்கிருந்த சேரில் சென்று சோர்வாக அமர அவன் முகத்தை சற்று நேரம் பார்த்தவரோ பிறகு விலகிச் சென்றார் அவர். சற்று நேரம் எதையோ யோசித்தவன் பின் தன் கைப்பேசியை எடுத்து

“டேய்.. அந்த நாயோட உருவமே தெரியாத மாதிரி கண்டந்துண்டமா வெட்டி நாய் நரிக்கு கழுகுக்குனு தூக்கிப் போடுங்க டா. அதையும் யாருக்கும் சந்தேகம் இல்லாம பண்ணுங்க டா” என்று கட்டளை இட்ட சிற்பி பின் எழுந்து தன் மகளைத் தேடி தங்கள் அறைக்குச் செல்ல அங்கு மனைவி மகள் என்று யாரும் இல்லை.

மகளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உந்த “அம்மூமா!” என்று உரக்க அழைத்த படி அவன் மகளை எங்கும் தேட

“பப்பா! அம்ம்மூமூமா தோ..” என்று டைனிங் டேபிளின் மேல் அமர்ந்து தன் கொலுசு கால்களை ஆட்டிய படி தாய் தரும் உணவுகளை அவள் சமர்த்தாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் தந்தைக்கு அவன் நீ எங்கே என்று கேட்பதற்குள் அங்கிருந்தே பதில் தர மகளிடம் நெருங்கி அவளை தன் மார்பு மீது சாய்த்தவன்

“நீங்க என் அம்மா தான டா?” என்று கேட்க தந்தையின் டீ ஷர்ட்டின் பட்டனைத் திருகி விளையாடிய படி “ம்ம்ம்” என்றாள் அம்மூமா. தான் இருக்கும் மனசஞ்சலத்தில் குழந்தையிடம் என்ன பேசுறோம் என்று தெரியாமல்

“நான் இறந்துட்டா நீங்கதான் அம்மூமா அப்பாவுக்கு இறுதி காரியம் செய்யனும்.. செய்வீயா செல்லம்?” என்று கேட்க தந்தை எது கேட்டாலும் ம்ம்ம்…. என்று சொல்லி பழக்கப் பட்டவள் இதற்கும் “ம்ம்ம்” என்று சொல்ல அதில் கண் கலங்க மகளை இறுக்க அணைத்தவன் திரும்பத் திரும்ப அதையே கேட்க அதை ரதிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் திருதிருவென்று முழிக்க பாட்டி தான்

“அடேய்.. வெள்ளிக்கிழமை அதுவும் விளக்கு ஏற்றி வைத்திருக்கிற நேரத்தில் இப்படி அபசகுணமா பேசிட்டு இருக்க.. என்ன டா ஆச்சி உனக்கு?” என்று அதட்ட அப்போது தான் அந்த வார்த்தையை விட்டான் சிற்பி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN