சுவாசம் - 19

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் - 19

ஆணின் அன்பில்
மென்மை
இல்லாமலிருக்கலாம்..
ஆனால் உண்மை இருக்கும்!!..

கண்ணீருடன் இருவரும் டைரியைப் படித்தவர்கள் அந்த நேரத்திலும் நந்தினி சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களை சரி பார்த்தவர்கள் இன்னும் வலுவான ஆதாரத்திற்காக தற்போது குழந்தையின் உடல்நிலையையும் முறையாக பரிசோதித்து அந்த சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொண்டாள் ரதி. ஆனால் என்ன பிரயோஜனம்? நந்தினியுடைய குழந்தையும் இறந்து விட்டது. பிரதாப் ஊரில் இல்லாததாலும் பிரதாப்பின் அப்பாவுக்கு வேறு ஊரில் மாற்றம் கிடைக்க குடும்பத்தை மட்டும் இங்கு விட்டு விட்டு அவர் மட்டுமாக அந்த இடத்திற்குச் சென்று விட ரதிக்கு யாரிடம் இதை சொல்லி எப்படி ஆலோசனை கேட்பது என்று தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் மேல் நந்தினியின் தாய். நமக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு என்று வாழ்பவர்கள். இப்போது நந்தினி விஷயத்தை வெளியில் சொல்லாமல் இதற்கு தீர்வு காண முடியாது. அதற்கு என்ன செய்வது என்று யோசித்தவள் எப்போதும் கலெக்டர் வீட்டுக்கு வரும் அரசாங்க வக்கீலிடம் நம்பிக்கை பெயரில் இதை எப்படி கையாளலாம் என்று விசாரிக்க அவனோ ரத்தினவேலுவிடம் இவை அனைத்தையும் போட்டுக் கொடுத்து விட்டான்.

ரத்தினவேலுக்கு அனைத்தும் தெரிந்த பிறகு அதை ரதியிடமிருந்து எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று திட்டம் தீட்டியவர் அதை உடனடியாக செயல்படுத்தவும் செய்தார்.

அவன் கல்லூரியில் லெக்சரராக ரதியின் மூன்றாம் ஆண்டில் வந்து சேர்ந்தவனான முரளி மீது ரதிக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதால் அவனை வைத்தே காரியம் சாதிக்க நினைத்தார் ரத்தினவேல்.

ஒரு நாள் திடீர் என அந்த முரளி ரதிக்கு போன் செய்தவன் “உன்னிடம் கொஞ்சம் அவசரமா பேச வேண்டும்” என்று அழைக்க என்னவாக இருக்கும் என்று யோசித்து ரதி சென்று கேட்டதில்

“நம்ப காலேஜ் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லாம ஏதேதோ அவர்களுக்கு நடக்குதாமே? உனக்கு தெரியுமா?” என்று எடுத்த வாக்கிலேயே அவன் கேட்க, அவனுக்கு நேரடையாக பதில் சொல்லாமல்

“நாங்க எல்லாம் பழைய மாணவிகள் ஸார். இப்போ அந்த காலேஜ்க்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?” என்று இவள் கேட்க

“இதை ஏன் தேவி என் கிட்ட நீ முதல்லேயே சொல்லலை?”

“அவங்க எல்லாம் பெரிய ஆளுங்க ஸார். சொன்னா மட்டும் என்ன பண்ண முடியும்?”

“என்னால எதுவும் செய்ய முடியாது. ஆனா மாணவிகளான நீங்க எல்லோரும் ஒன்று கூடினா நிச்சயம் ஏதாவது செய்திருக்கலாம்”

அவனை ஒரு ஆழப் பார்வை பார்த்தவள் “தெரியும் ஸார். ஆனா அவரை எதிர்த்து நிற்க எங்களால முடியாது ஸார்”

“நான் நின்றால்?”

“நிஜமாவா ஸார்? இந்த ரத்தினவேலை விட பெரிய ஆள் யாராவது உங்களுக்கு தெரியுமா? அப்போ என்கிட்ட அவருக்கு எதிரா சில ஆதாரங்கள் இருக்கு. அதை கொடுத்தா உங்களால் எங்களுக்கு நியாயம் வாங்கித் தர முடியுமா?” என்று கண்ணில் ஒளியுடன் ரதி கேட்க..

“சத்தியமா தேவி! என் உடன் பிறவா சகோதரிங்க நீங்க எல்லோரும். அப்படி பட்ட உங்களுக்கு ஏதாவது ஒன்றுனா நான் விடுவேனா? நீ கொடு நாம ஒரு கை பார்ப்போம்”

“உங்களால் மட்டும் என்ன செய்திட முடியும்?”

“அப்படி சொல்லாத தேவி! அங்க நடக்கிற அநியாயத்தை கேட்கும் போதே எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? ஐயோ! ஒரு ஆதாரம்.. ஒரே ஒரு ஆதாரம் மட்டும் எனக்கு கிடைத்தா அந்த ரத்தினவேலுவை எப்படி உள்ள வைக்கனுமோ அப்படி வைப்பேன். நீ வேணா பாரு.. ஆனா எனக்கு எதுவும் கிடைக்கலையே?” என்று அவன் கோபத்துடன் ஆதங்கத்தையும் கலந்து பட

“அப்ப சரி ஸார். இதே நேரம் நாளைக்கு இங்க வாங்க நான் என்கிட்ட இருக்கிற ஆதாரத்தைத் தரேன்” என்று சொல்லிச் சென்றவள் அவனிடம் கொடுத்த வாக்கு படியே மறுநாள் அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்தாள் ரதி.

“நீங்க என்ன செய்தாலும் மாணவிகளான நாங்கள் உங்களுக்குத் துணையா இருப்போம்” என்ற உறுதிச் சொல்லையும் தந்தாள் அவள்.

அதன் பிறகு அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இவளும் அவனிடம் எதையும் கேட்க வில்லை. அந்த ஆதாரங்கள் அப்படியே ரத்தினவேல் கைக்குச் சென்று விட, ஒரு நாள் ரதிக்கு அதே கல்லூரியில் வேலை தருவதாக சொல்லி ரத்தினவேல் அவளை கல்லூரிக்கு வர சொல்ல அதை நம்பி வந்தவளிடம் தன் கையில் அவள் சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களைக் காட்டியவன்

‘உன்னால இனி என்ன செய்ய முடியும்?’ என்ற ரீதியில் தன் வெற்றியைச் சொல்லி சிரிக்க அவ்வளவு பெரிய அரசியல்வாதியைச் சுற்றி அவன் ஆட்கள் இருக்கும் போதே அவனை ஒரு தீர்க்க பார்வை பார்த்தவள்

“ஏழையா பிறந்து குப்பத்திலிருந்து வந்து படிச்சதால என்னை முட்டாளுனு நினைச்சிட்டியா? ஒரு அரசியல்வாதியான நீ எங்க எப்படி காய் நகர்த்துவனு எனக்குத் தெரியாது? உன் எடுப்பு அந்த முரளி வந்து நல்லவன் மாதிரி நடிச்ச உடனே நான் நம்பி என்கிட்ட இருந்த ஆதாரங்களைக் கொடுப்பேனு நீ எப்படி நம்பின? அவ்வளவு பெரிய முட்டாள் அரசியல்வாதியா நீ? நிச்சயம் நீ முட்டாள் அரசியல்வாதி தான்! உன் நல்ல நேரம் நீ இதுவரை செய்து வந்த அநியாயங்கள் வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனா எப்போ நந்தினி அக்கா குழந்தைக்கு நீ அநியாயம் பண்ணியோ அன்றே உனக்கு கெட்ட காலம் தான்”

“என்ன டி? என் இடத்திலே வந்து வாய் நீளுது..” என்று ரத்தினவேல் கர்ஜிக்க

“முதல்ல நீ அடங்குடா” என்றாள் ரதி. அதை கேட்டு அவனை சுற்றி உள்ள அவன் ஆட்கள் எகிற

“டேய்! நீ மட்டும் இல்ல உன்னை சுற்றி இருக்கிற அள்ளக்கை நொள்ளக்கை உன் சொம்பு தூக்கிங்க எல்லோரையும் அடங்க சொல்லு. உன்னை பற்றி தெரிந்திருந்தும் இவ்வளவு தில்லா நீ கூப்ட உடனே தனியா உன் இடத்திலேயே வந்து பேசுறேனா அப்போ அந்த ஆதாரங்களை எல்லாம் நான் கொடுத்திருப்பேனு நீ நினைக்கிறியா? அது இன்னும் என்கிட்ட தான் டா இருக்கு முட்டாள்! அந்த நாய் முரளி மூலமா உன் கைக்கு வந்த ஆதாரங்கள் எல்லாம் கலர் ஜெராக்ஸ் காப்பிகள். ஒரிஜினல் எல்லாம் என்கிட்ட பத்திரமா இருக்கு.

உடனே நீ இங்கயிருந்து உயிருடன் போனா தானேனு சும்மா சினிமா டையலாக் எல்லாம் விடாத.

ஆனா நான் இங்கேயிருந்து உன் கண்ணெதிரே வெளியே போக தான் போறேன். உன்னால என்னை ஒன்றும் செய்ய முடியாது பார்க்குறியா?

ஏன்னா நான் கல் தடுக்கி கீழே விழுந்து செத்தாலும் அந்த பழி உன் மேல தான் வந்து சேரும். நான் மட்டும் இல்ல என் குடும்பம் நந்தினி அக்கா குடும்பம்னு யாருக்கு எது நடந்தாலும் அதுக்கு நீ தான் பொறுப்பு. அப்படி எங்க சாவுக்கு நீ தான் காரணம்னு கடிதம் எழுதி ஒருத்தர் கிட்ட கொடுத்திட்டு தான் வந்திருக்கேன். என்ன பயமுறுத்திப் பார்க்க நினைத்திருப்ப. ஆனா நீயே இப்படி என் கிட்ட மூக்கு அறுபட்டு நிற்பேனு நினைத்திருக்க மாட்ட இல்ல? என்னை எல்லோரையும் மாதிரி சாதாரணப் பெண்ணா நினைக்காத மிஸ்டர் ரத்தினவேல்!” என்று மதம் கொண்ட யானைகள் உலாவும் அதன் காட்டுக்குள்ளேயே ஒற்றைப் பெண் புலியாக தன் வீரத்தைக் காட்டினாள் ரதி.

“இதற்கு மேலேயும் நான் இங்க இருக்கனு மா?..” என்று இறுதியாக அவனைக் கேலி செய்ய செத்த பாம்பென தலை குனிந்தான் ரத்தினவேல்.

போகும் போது அங்கு வழியில் நின்றிருந்த முரளியைப் பார்த்தவள் படார் என்று அவன் கன்னத்தை அறைந்து காறி அவன் முகத்தில் துப்பி விட்டு புயலெனே அங்கிருந்து சென்றாள் ரதி.

இதையெல்லாம் அந்த கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கிஷோருக்கு “வாவ்!..” என்ற வார்த்தை தான் அவன் வாயிலிருந்து வந்தது.

‘தாங்கள் எப்படிப் பட்ட சாம்ராஜ்யத்தை நடத்துகிறோம்? அப்படிப் பட்ட எங்களை ஒரு சிறு எலி என்னமா பிராண்டிட்டு போகுது!’ என்று வியந்தவன் மனதில் கூடவே ‘அவளிடம் இருக்கும் திமிரையும் நிமிர்வையும் பிய்த்து எறிந்தால் எப்படி இருக்கும்?’ என்ற வன்மமும் அவன் மனதில் எழுந்தது.

ரத்தினவேல் மகன் கிஷோர் அங்கிருந்தான் என்பது ரதிக்குத் தெரியாது. இதுவரை அவனை அவள் பார்த்தது கூட இல்லை. அதே மாதிரி சும்மா என்று மிரட்ட கூட ரதி அங்கு பொய் சொல்லி விட்டு வரவில்லை. உண்மையாகவே அப்படிப் பட்ட கடிதங்களை எழுதி நந்தினியின் தங்கையிடம் கொடுத்து விட்டுத் தான் வந்தாள்.

ரத்தினவேலுக்கு முடிவு கட்ட அவள் காத்திருக்க அவளுடைய போறாத காலமோ என்னமோ அடுத்த மூன்று மாதத்தில் மாரடைப்பில் உயிரிழந்து விட்டான் ரத்தினவேல். அந்த காலேஜ் ரத்தினவேலுவின் பினாமி பெயருக்கு கை மாறி விட இதன் பிறகு அந்த ஆதாரத்தில் இருப்பது எல்லாம் வீண் என்று நினைத்தவள் மேற்கொண்டு அதை பற்றி யோசிப்பதை விட்டாள் அவள்.

ஆனால் கிஷோர் மட்டும் அவளை மறக்கவில்லை. எத்தனை நாடுகள் எப்படி எல்லாம் சுற்றினாலும் அவள் மேலிருந்த வன்மம் மட்டும் குறையவில்லை. ஒன்றறை வருடம் கழித்து அவளுக்கான நேரம் காலத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் ரதியை கடத்திக் கொண்டு போய் அவளுக்கு போதை மருந்து கொடுத்து தன் முகம் தெரியாமல் அவளை சித்திரவதை செய்து அவள் பெண்மையை அழித்தவன் அவள் மயக்கத்தில் இருக்கும் போதே அவளைத் தூக்கி வந்து குப்ப மேட்டில் போட்டு விட்டு சென்றவன் பின் அந்த நந்தினியின் தாயையும் தங்கையையும் விபத்தில் இறந்தது போல் அவர்கள் கதைகளையும் முடித்தவன் அந்த ஆதாரங்களை அனைத்தையும் எடுத்து எறித்து சாம்பல் ஆக்கினான் அவன்.இவை எல்லாம் தன் மாமாவின் ஆட்கள் மூலமும் தனக்குத் தெரிந்த போலீஸ் மற்றும் வக்கீல் நண்பர்களால் அறியத் தான் சிற்பியால் முடிந்ததே தவிர தகுந்த ஆதாரம் சாட்சியங்களோடு கிஷோரை எதுவும் செய்ய முடியவில்லை. ரேணுகாதேவியை கைது செய்தாலும் பினாமியை மாட்டி விட்டு இவன் தப்பி விடுவான் என்று அவனுக்குத் தெரிந்து தான் இருந்தது.

அதனால் ரதி விஷயமாக களத்தில் இறங்கியவன் இத்தனை வருடம் தன் தாத்தா இருக்கும் கட்சியில் இளைஞர் அணி தலைவனாக இருப்பதை பயன்படுத்தி காத்திருந்திருந்து கிஷோர் வெளிநாடு செல்லும் நேரம் அவனை சிற்பி கடத்த கிஷோரின் கெட்ட நேரம் அவன் செல்லவிருந்த விமானம் வெடித்துச் சிதற அதில் இருந்த அனைவரும் இறக்க அதில் கிஷோரும் இறந்து விட்டான் என்றே உலகம் நம்பியது. சிற்பிக்கும் அது தானே வேண்டும்? பிறகு அவனை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததில் அவன் சொன்னதை தான் அன்று போலீஸில் ரதி முன்பு சிற்பி வாக்குமூலமாகக் கொடுத்தான்.

இவனை ரதி குடும்பத்தின் முன் நிறுத்தி இவன் தான் அந்த கேடுகெட்ட நாய் என்று ரதியிடம் சொல்லத் தான் முதலில் சிற்பி நினைக்க. ஆனால் அப்படி செய்த பிறகு அவளுடைய வாழ்வைப் பற்றி யோசித்து பார்த்தவன் ‘நிச்சயம் இந்த நாயை அவளுக்குக் கட்டி வைக்க முடியாது. பிறகு அவளும் அந்த குழந்தையோட வாழ்வும் என்னாவது?’ என்று யோசிக்க ‘வேணாம்.. எப்படியாவது அவளை ஏதாவது ஒரு இக்கட்டில் வைத்து நிச்சயம் எங்கள் திருமணத்தை நான் முடிப்பேன் உறுதி எடுத்தான்.

என்ன? அவள் செய்யாத தப்புக்கு என்னை பார்க்கும் போது எல்லாம் அழுவாள். நான் ஏதோ தியாகம் செய்தவன் போல் கூனிக் குறுகி என்னிடமிருந்து விலகுவாள். அவளுக்கே தெரியாமல் நடந்த நிகழ்வுக்கு ஒவ்வொரு நாளும் குற்ற உணர்ச்சியில் சாவாள்? ஆனால் எனக்கு அப்படிப் பட்ட ரதி வேண்டாம். என்னை கெட்டவனாய் பார்த்து நினைத்து எதிர்த்துப் பேசி என் மேல் கோபமாய் இருக்கும் ரதி தான் வேண்டும். என்னை வெறுக்கிற கடைசி வரை என்னை வில்லனாவே நினைக்கிற ரதி தான்..’ இப்படி நினைத்தவனின் எண்ணப் போக்கு ஒரு நிமிடம் அப்படியே நின்றது.

‘இப்போ என்ன நினைத்தேன்? ரதி என்னை கெட்டவனா வில்லனா பார்க்கறானுதானே? அப்போ நான் தான் இதை செய்தனு அவ முன்னாடி போய் நின்னா அவ நம்புவா தானே? அந்த நாய் கூட தன்னை இப்படி செய்தது ரதிக்கு யாருனே தெரியாதுனு தானே சொன்னான்? இப்போ அவனும் நம்ப கஸ்டடில இருக்கான். அவன் எப்படி செய்தானோ அதெல்லாம் நான் செய்ததா சொன்னா நிச்சயம் எல்லோரும் நம்புவார்கள் நம்புவார்கள்.. ஆனால் ரதியை திருமணம் செய்து கொடுப்பார்களா? எண்ணம் தான் அவன் மனதில் முதலில் ஓடியது.

நான் எந்த காலத்தில் இருக்கேன்? கெடுத்தவனுக்கே அந்த பெண்ணைக் கட்டி கொடுப்பார்கள் என்ற எண்ணத்திலா! எதுவாக இருந்தாலும் துணிந்து இறங்கி பார்ப்போம். அப்படி நான் நினைத்தது நடக்காத பட்சத்தில் ரதி அப்பாவிடமாவது உண்மையைச் சொல்லி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தான் சிற்பி.

தான் வாய் ஓயாமல் ரதி என் மனைவி என்று சொல்லவும் நினைக்கும் பட்சத்தில் ‘உண்மையிலேயே என் மனைவியாக ஆன பிறகு இப்படி நடந்திருந்தால் அவளிடம் இதெல்லாம் சொல்லி தான் இருப்பேனா இல்லை விட்டு விலகித் தான் இருப்பேனா?’ என்ற எண்ணமே இப்படி ஒரு செயலில் அவன் இறங்க அடித்தளமாய் ஆனது.
அதுவும் இல்லாமல் கிஷோர் தான் என்று தெரிந்த பிறகு அவள் வேறு ஒரு வாழ்வுக்கு ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று நினைத்தான்.

பிறகு அதற்கானதை அவன் செய்ய, அவன் நினைத்தது போலவே ரதி இவன் தான் இப்படி ஒரு அநியாயத்தை தனக்கு செய்ததாக நம்பினாள். இதன் பிறகு எப்படி திருமணத்தை நடத்துவது என்று அவன் யோசிக்க அதற்கு தானே வந்து வழி செய்தவர்கள் அவன் மாமாவும் ரதியின் அப்பாவும்.

என்ன தான் தான் நினைத்த படி திருமணம் முடிந்தாலும் ரதி சம்பந்தப்பட்ட யாரையும் சிற்பி விடவில்லை. ரதிக்கு ஜூஸில் போதை மருந்து கலந்து கொடுத்த கேன்டீன் ஆளை மாறுகை மாறுகால் வாங்கியவன் அதை விபத்தில் இழப்பது போல் எடுக்க வைத்தவன் கூடவே அவன் நாக்கைத் துண்டித்து வட நாட்டில் அவனை பிச்சை எடுக்க வைத்து விட்டான். இவனை செய்தது போல் ரேணுகாவை அவனால் எளிதில் நெருங்க முடியவில்லை. பெரிய இடம் இல்லையா?

ரத்தினவேல் இறந்த பிறகு தனியாக இருந்த அவளுக்கு பெரிய வெளிநாட்டு பணக்காரனை அறிமுகப்படுத்தி அவனுடன் அவளையும் வெளிநாடு போகும் படி பின்னாலிருந்து அனைத்தும் சிற்பி செய்ய இன்று அந்த பணக்காரன் அவளை பல வெளிநாட்டு பணக்காரர்களான பெண் உடல்களைக் கொத்தித் திண்ணும் மாமிச மலைகளிடம் அவளை அனுப்பி பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறான்.

கிஷோரின் வெளிநாட்டு டாக்டர் நண்பனை அவன் நாட்டு அரசாங்கமே அவனை தேசத் துரோகி என்று கண்டுபிடித்து அவன் ஆய்வுக் கூடங்களுக்கு சீல் வைத்து அவனையும் சிறையில் அடைத்து விட்டார்கள்.

இப்படி அனைவருக்கும் தூரமாயிருந்து தண்டனை கொடுத்தாலும் கிஷோரை மட்டும் தன் கண்ணெதிரிலேயே வைத்து தன் கையாலேயே தினம் தினம் தண்டனை கொடுப்பான். உடலில் நமக்கு எங்கெல்லாம் அடிபட்டால் உயிர் பிரியுமோ அந்த இடங்களை மட்டும் விட்டுவிட்டு மீதி இடங்களில் துருப்பிடித்த இரும்புக் கம்பிகளால் குத்திக் கிழிப்பான். வலியையும் ரணத்தையும் வேதனைகளையும் அவனுக்கு தினம் தினம் காட்டிக் கொண்டே இருந்தான். அதிலும் ரதியின் கண்ணில் பயத்தை பார்த்து விட்டாலோ இல்லை அவள் தன்னம்பிக்கை இழந்து அழுதாலோ அன்று இவனை ஒரு வழி பண்ணி விடுவான் சிற்பி. அவனுக்கு உடல் நிலை தேறும் வரை பொறுப்பவன் பிறகு மீண்டும் தன் சித்ரவதைகளைத் தொடர்வான்.

ஒருமுறை ரேஷ்மா விஷயத்தன்று ரதி தன் மனக்குமுறலை கொட்டிய அன்று நெருப்பில் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் அவன் உடல் முழுக்கத் துளை போட்டு எடுத்து விட்டான். அந்த நேரத்தில் தான் சிற்பியின் மாமாவுக்கு இந்த விஷயம் தெரிய வர அதற்கு அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நேர் கொண்ட பார்வையுடன் சலிக்காமல் பதில் தந்தவன்

“இப்போ இருக்கிற மாதிரியே நான் சாகறவரை ரதி என்னை வெறுத்து ஒதுக்கி ஒதுங்கியே இருந்தாலும் சரி எக்காரணத்தை கொண்டும் அவளுக்கு நடந்ததை அவ கிட்ட நான் சொல்ல மாட்டேன் மாமா. அவ கண்ணுக்கு நான் தப்பு செய்தவனாவே இருக்கேன். ஏதோ நான் அவள் கண்ணெதிரே இருப்பதால என்னைக் குத்திக் கிழித்தாவது அவ மன ஆறுதல் பட்டு நிம்மதியா இருக்கா. எனக்கு அது போதும் மாமா. அவ நிம்மதி மட்டும் போதும் மாமா” என்று தன் மனைவி மேலுள்ள காதலை அவன் பட்ட வெளிச்சமாய் வார்த்தையில் கொட்ட, தன் வளர்ப்பு சோரம் போகவில்லை என்பதில் அவனை இழுத்து அணைத்துக் கண்ணீர் விட்டார் அவர்.

“அப்போ உனக்கான வாழ்க்கை டா?” என்று அவர் கேட்க

“என் வாழ்க்கையே ரதியும் சந்திரவதனியும் தான் மாமா?” என்று அவன் எடுத்துச் சொல்ல, இருந்தாலும் அவனை வளர்த்தவர் மனசு தாங்குமா?

“சீக்கிரமே ஒரு பெண்ணையோ பையனையோ பெத்துக் கொடுத்துடு ராசா!” என்று அவர் ஆசையைச் சொல்ல, அவர் மனதிருப்திக்காக

“நிச்சயமா மாமா” என்றான் சிற்பி.

இவ்வளவும் நடந்த பிறகு இன்று தான் அந்த கிஷோர் இறந்துவிட்டான் என்ற செய்தி வரவே அவனுடைய எண்ணங்கள் எல்லாம் பழைய நினைவை நோக்கிப் போய் மீண்டும் இன்று நிகழ்வுக்கு வந்தது. இப்போதும் தன்னுடைய குழந்தையைப் போல் தன் தோள் மேல் தூங்கும் மனைவியைப் பார்த்தவன்

“நீ என்னை விட்டே போகணும்னு நினைத்தாலும் சரி சாகற வரை அந்த உண்மையை நான் உன்கிட்ட சொல்லவே மாட்டேன் டி” என்று முணுமுணுத்தவன் மனைவிக்கும் மகளுக்கும் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவர்கள் இருவரையும் அணைத்த படி தூங்கிப் போனான் சிற்பி.

காலையில் எழும் போது ரதி கணவனின் கை அணைப்பில் தான் இருப்பதை உணர்ந்தவள் சற்று நேரம் கணவனின் முகத்தையே பார்த்தவள்

‘நேற்று ஏன் சிற்பி குழந்தை கிட்ட அப்படி கேட்ட?’ என்று கணவனிடம் கேட்க எண்ணம் வந்தாலும் அதை கேட்க விடாமல் ஏதோ அவளைத் தடுத்தது. பின் எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தவள் கண்ணாடி முன் நின்று புடவையைச் சரி செய்ய அவளுடைய மணாளனோ எழுந்து விட்டான் என்பதற்கு சாட்சியாக அவனுடைய வருடும் பார்வையை தன் எதிரில் இருக்கும் பிம்பத்தில் கண்டவளுக்கு முதல் முறையாக அவளுள் அவன் பார்வை ஏதோ செய்தது.

அதை தவிர்க்க நினைத்து தன் ஈர முடியை விரித்து உதறி கிளிப் இட்டு நுனி முடியில் அவள் முடித்திட ஆனால் அவளால் ஏனோ அதை சாதாரணமாக செய்ய முடியவில்லை. அவள் பார்த்தது தெரிந்தும் கணவன் வைத்த கண் எடுக்காமல் இப்படியே பார்த்து கொண்டிருந்தால் அவளால் என்ன தான் செய்ய முடியும்? அப்படியும் விடாமல் டேபிள் மேலிருந்த குங்குமச் சிமிழை அவள் நடுங்கும் விரளால் எடுக்க, மனைவியின் பதட்டத்தை உணர்ந்தவனோ

“ரதீ!..” என்று அவன் அழைக்க, கண்ணாடியில் உள்ள கணவனின் பிம்பத்திடமே அவள் விழியாளே என்ன என்பது போல் கேட்க அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்ட படி எழுந்து மனைவியிடம் வந்தவன் அவள் கையிலிருந்த குங்குமச் சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்து மனைவியின் வகிட்டில் வைத்தவனோ குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளைத் தன் மார்பு மீது சாய்த்து அணைத்துக் கொள்ளவும் நேற்று அப்படி பேசிவிட்டு இன்று குங்குமம் வைக்கவும் ரதியின் மனதிற்குள் என்னென்னமோ செய்தது. ஆனாலும் கணவனை விட்டு விலகாமலும் எதுவும் கேட்காமலும் அவள் நிற்க குழந்தையின் அசைவு தான் அவர்கள் இருவரையும் பிரித்தது.

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN