நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

13.கனவே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
13.கனவே

மைவிழியை அவளது அறையிலிருந்த கட்டிலில் அமர வைத்தான் செழியன்.

"ஸாரி விழி.. அந்த படத்துல இப்படி ஒரு சீன் இருக்கும்ன்னு எனக்கு தெரியாது.."

அவள் புரிந்துக் கொண்டவளாக தலையசைத்தாள். அவளது கேசத்தை வருடி விட்டவன் தன் பாக்கெட்டிலிருந்த ஆரஞ்சு மிட்டாயை எடுத்து தந்தான். நடுங்கும் விரல்களோடு அதை எடுத்து கொண்டாள் மைவிழி.

"நீ போ செழியா.. நான் கொஞ்சம் நேரம் கழிச்சி வரேன்.."

"பரவாயில்ல.. கூட இருக்கேன் விழி.."

"நீ போ செழியா.. என்னால என் பிரச்சனையை சமாளிச்சிக்க தெரியும்.." அவன் அவளை கவலையோடு பார்த்துக் கொண்டே வெளியேறினான்.

கதிர் இவனது வருகையை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். இவன் வந்து அமர்ந்து டிவியை பார்க்க ஆரம்பித்தான்.

"அவளுக்கு என்ன ஆச்சி..?" செழியன் கேள்வி கேட்ட கதிரை ஆச்சரியமாக பார்த்தான்.

"விழியை பத்தியா கேட்கற..?"

"ம்.. அவளைத்தான் கேட்பேன்.. வேறு யாரை கேட்க முடியும்..?"

"அவளுக்கு இந்த கொலை சீனெல்லாம் பார்த்தால் ஆகாது.." என்றவன் பார்வையை டிவிக்கு திருப்பி கொண்டான். அவனால் சொல்ல முடியவில்லை மைவிழியின் பயத்திற்கான காரணத்தை.

அரை மணி நேரம் கடந்த பிறகு மைவிழி தன் அறையிலிருந்து வெளியே வந்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடி இருந்தான் கதிர். மைவிழி வீட்டின் வெளி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள். சிறிது நேரத்தில் சன்னல் வழியே கதிரின் கண்களுக்கு தெரிந்தாள். புதிதாக உருவாக்கிய தோட்டத்தில் நுழைந்து அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்தாள். வானத்தை பார்க்க ஆரம்பித்தவள் அந்த வானத்து மேகங்களிடம் தன்னையே தொலைத்து விடும் முயற்சியில் இருந்தாள். கதிர் இமைக்கவும் மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவளது மூச்சுகாற்றை கூட இங்கிருந்தபடியே கவனித்தான். தரையில் ஆடும் அவளது பாதங்கள் அவனுக்கு பிடித்திருந்தது. காற்றில் அசைந்த துப்பட்டா அவன் இதயம் பறித்தது.
வானம் மெல்ல மெல்ல செவ்வண்ணம் பூசியது. மைவிழி தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதை போல் உணர்ந்து திரும்பினாள். கதிர் அவள் தன் திசையில் பார்ப்பது தெரிந்து சட்டென தன் கண்களை டிவியை நோக்கி திரும்பினான். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் முடிவு பெற்றிருந்தது.

"படம் செமையா இருந்தது இல்ல..?" என கேட்டான் விஷ்வா இவனை பார்த்து. மொத்தமாக தலையசைத்தான் கதிர்.

மைவிழி வீட்டிற்குள் வந்தாள். "வெளியே எங்கேயாவது போகலாமா..?" என கேட்டான் செழியன்.‌

"நீங்க போங்க.. நான் வரல.." என்றாள் மைவிழி.

"நீயில்லாம நான் எங்கேயும் போனதில்ல விழி.." என செல்ல குரலில் சிணுங்கியவனை வியப்பாக பார்த்தான் கதிர்.

"இந்த கேவலமான குரல்ல சிணுங்குவதை நிறுத்து செழியா.." என திட்டினாள் மைவிழி. அவளது குரலில் இருந்த உறுதியை கண்டதும் அவள் பழையபடி திரும்பி விட்டாள் என உணர்ந்துக் கொண்டான் செழியன்.

"என் சிணுங்கல் அனைத்தும் உனக்கே சொந்தம்.." என அவன் பாட ஆரம்பிக்க.. "நான் கையிலெடுக்கும் கற்கள் அனைத்தும் உனக்கே சொந்தம்.." என்றாள் மைவிழி சட்டென.

விஷ்வா விழுந்து விழுந்து சிரித்துவிட்டு‌ "வெளியே போகலாம்.. வா விழி.. வாழ்க்கையில் கொஞ்சம் கூட டைம் பாஸ் இல்லாட்டி எப்படி..?" என்றான். மைவிழி யோசனை செய்தபிறகு சரியென தலையாட்டினாள்.

"பக்கத்துல ஒரு பூங்கா இருக்கு.. சும்மா ஒரு நடைபயணம் மாதிரி வேணா நான் வரேன்.." என்றபடி எழுந்தான் கதிர். "எனக்கும் இது ஓகே.." என்றாள் மைவிழி.

நால்வரும் பூங்காவை நோக்கி நடந்தனர். அவர்களின் நடைபயணத்தின் ஆரம்பத்திலேயே ஒரு ஐஸ்கிரீம் கடை தெரிந்தது. ஐஸ்கிரீம்களை சுவைத்தபடியே நடையை தொடர்ந்தனர் நால்வரும்.

செழியனும் விஷ்வாவும் புது தம்பதிக்கு சலுகை தருவதாக நினைத்து நான்கடி முன்னால் நடந்தனர். கதிருக்கு மைவிழியோடு பேச்சு தர தோன்றியது. ஆனால் ஆரம்பிப்பது எப்படி என தெரியவில்லை.

"உனக்கு ஏன் என்னை பிடிக்கல..?" உரையாடலை மைவிழியே துவங்கினாள்.

"உன்னை மட்டும் பிடிக்காம இல்ல.. எனக்கு பொதுவாகவே பொண்ணுங்களை பிடிக்காது.."

அம்மாவையும் பிடிக்காதா என கேட்க நினைத்தவள் திருமணத்தன்று அவன் தன் தாய் தந்த திருமண பரிசை வாங்க மறுத்தது நினைவுக்கு வரவும் அந்த கேள்வியை தவிர்த்து விட்டாள்.

"உனக்கு ஏன் என்னை பிடிக்கல..?" கதிர் கேட்டான் இம்முறை.

"எனக்கு கல்யாணத்தை பிடிக்கல.. காதல் செய்ய பிடிக்கல.."

"லவ் பெயிலியரா..?"

'ஆமாம்.. அம்மாவோட லவ்வை எதிர்பார்த்து பெயிலியர்.. அண்ணன் தங்கச்சி இவங்க லவ்வை எதிர்பார்த்து பெயிலியர்..' என நினைத்தவள் அதை வெளியே சொல்ல விரும்பவில்லை.

"லவ் பெயிலரானாதான் லவ்வை வெறுக்கணுமா..? காதலிச்ச பிறகு காதலர்களோட அன்புக்கு காத்து கிடக்க பிடிக்காம கூட அதை வெறுக்கலாம்.." என்றவளை சட்டென தன்புறம் இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான் கதிர். அவளது சுவாசம் தடைபட்டது அவனுடைய அருகாமையின் காரணமாக. அவள் அவனிடமிருந்து விலகி நின்று சாலையை பார்க்க.. அவள் நடந்து வந்துக் கொண்டிருந்த இடத்தில் ஒரு இரு சக்கர வாகனம் வேகமாக கடந்து சென்றுக் கொண்டிருந்தது.

"பைக் வந்ததை நீ கவனிக்கல.." என்றான் தன் பின்னங்கழுத்தை நீவியபடி.

"தே.. தேங்க்ஸ்.." என்றாள் தன் கவனமின்மையை நொந்துக்கொண்டே.

அவளது முகம் மறைத்த கேசங்களை ஒதுக்கி விட்டவன் "பரவாயில்ல.. மறுபடி நீ ஏதாவது உதவி செஞ்சா கணக்கு சரியா போயிடும்.." என்றான். அவள் தலையசைத்து விட்டு விலகி நடந்தாள்.

அவர்கள் பூங்காவிற்கு சென்றபோது பூங்காவிற்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சிறுவர்கள் கூட்டத்திலிருந்த மிதுன் மைவிழியை கண்டதும் ஓடி வந்தான். அவனை பார்த்தவுடன் மைவிழியின் கண்களும் ஒளிர்ந்தன. ஓடி வந்ததும் அவளின் காலை கட்டிக் கொண்டவன் "என்னை தேடிதான் வந்திங்களா..?" என்றான் ஆவலாக. அவளும் அவனது ஆசையை கெடுக்க மனமில்லாமல் ஆமாமென தலையசைத்தாள்.

மிதுனை தொடர்ந்து வந்த அவனது நண்பர்கள் "யார் இது மிதுன்..? ரொம்ப அழகா இருக்காங்க..!" என்றனர். மைவிழியின் கன்னம் சிவக்க.. அவள் கதிரின் கண்களுக்கும் அழகாக தெரிந்தாள்.

"என் கேர்ள் பிரெண்ட்.." என்ற மிதுனின் காதை பிடித்து திருகிய கதிர் "கேர்ள் பிரெண்டுக்கு அர்த்தம் கூட தெரியாத வயசுல உனக்கு கேர்ள் பிரெண்ட் வேணுமா..?" என்றான்.

மிதுனின் முகம் கதிரை கண்டதும் மாற தொடங்கியது. மிதுனின் கரத்தை பிடித்து அவனை தன்புறம் திருப்பினாள் மைவிழி. "அவர் சும்மா மிரட்டுராரு.. நீ பயப்படாத.. ஆனா நான் ஒன்னும் உன் கேர்ள் பிரெண்ட் இல்ல.." என்றாள்.

"பொய் சொல்லாதிங்க.. கேர்ள் பிரெண்ட் பூ தரும்போது வாங்கிப்பாங்கன்னு எங்கண்ணா சொல்லியிருக்கான்.. நீங்க அன்னைக்கு என்கிட்டயிருந்து ரோஜாவை வாங்கிகிட்டிங்க.. நீங்க என் கேர்ள் பிரெண்ட்தான்.."

அவனது குட்டி கைகளை தனது கைக்குள் வைத்துக் கொண்ட மைவிழி "பிரெண்டுக்கு கூட பூ தருவாங்க.. பிடிச்சவங்களுக்கு கூட பூ தருவாங்க.. நீ என்னோட குட்டி பிரெண்ட்.. ஓகேவா..? இப்போ நீ போய் உன் பிரெண்ட்ஸோடு விளையாடு.." என கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

"எதுக்காக அவனுக்கு நீ செல்லம் தர..? இதெல்லாம் தப்பு தெரியுமா‌‌..? இந்த வயசுல கேர்ள் பிரெண்ட் கேட்குதா அவனுக்கு..?" என கோபமாக கேட்டான் கதிர்.

"இதுல தப்பு என்ன இருக்கு.. நீ ஸ்கூல்ல உன் டீச்சரை லவ் பண்ணணும்ன்னு நினைச்சதில்லையா..? பக்கத்து வீட்டு அக்கா.. டியூசன் டீச்சர்.. நம் அக்காவோட தோழிங்க.. இவங்களில் யாராவதுதான் ஆண்களுக்கு முதல் க்ரஷா இருப்பாங்க.. இவனுக்கு முத க்ரஷ் நான்.." என்றவளுக்கு சிறு புன்னகை மலர்ந்தது. "இதெல்லாம் பெரிசு பண்ணாம போயிடணும்.. அவங்களே பெரியவங்களான பிறகு இதை நினைச்சிட்டு சிரிப்பாங்க.."
அவனுக்கு அப்படி எந்த பொருந்தாத முதல் காதலும் இல்லை. அவனின் முதல் காதல் ஒரு குட்டி தேவதையுடன். அவனது கை அனிச்சையாக தன் சட்டை பாக்கெட்டிற்கு சென்றது. செல்லாகாசு விரல்களில் உரசியது. இந்த பல வருடங்களில் சட்டைகள் எத்தனையோ மாற்றிவிட்டான். ஆனால் அந்த செல்லாகாசு இல்லாமல் ஒருநாள் கூட இருந்தது இல்லை.

அவன் முகத்தில் தெரிந்த சந்தோசம் கண்ட மைவிழி "உன்னோட பர்ஸ்ட் க்ரஷ் ஞாபகம் வந்துடுச்சா..?" என்றாள்.

"உனக்கெப்படி தெரியும்..?"

"இங்கே டாப்பிக்கே இதுதானே..?" என்றவள் அவனை கேள்வியாக பார்க்க.. "க்ரஷ் இல்ல.. பர்ஸ்ட் பிரெண்ட்.."என்றான் அவன் அவளிடம் உண்மையை சொல்ல மனமில்லாமல்.

விஷ்வாவும் செழியனும் இவர்களை பார்த்தபடியே அருகிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தனர்.

"இவங்க எல்லா விசயத்துலயும் ஒத்து போறாங்க இல்ல..?" என்றான் செழியன் விஷ்வாவிடம்.

"பிரச்சினை அவங்க விவாகரத்து வாங்க நினைக்கறதுலயும் ஒத்துப் போறாங்கங்கறதுதான்.."

"அவங்க ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும் இல்ல..?"

"நல்லாதான் இருக்கும்... ஆனா எப்படி..?" இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.‌ இருவர் முகத்திலும் விஷம சிரிப்பு உதித்தது.

"ப்ளான் ஏ.." என்றபடி எழுந்த செழியன் நேராக மைவிழியிடம் சென்றான். போன வேகத்தில் அவளை கதிரின் பக்கம் தள்ளி விட்டான். அவள் தடுமாறி விழ சமயத்தில் அவளை தாங்கி பிடித்து நிறுத்தினான் கதிர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சட்டென்று விலகி நின்றனர். மைவிழி செழியனை முறைப்போடு பார்த்தாள். அவனை இழுத்துக் கொண்டு ஓரமாக சென்றாள்.

"ஏதாவது ப்ளான் பண்ணியிருக்கியா..?" என்றாள்.

"எ..என்ன ப்ளான்..?" என்றவனின் தோள்பட்டையில் ஓர் அறை விட்டவள் "உன் கிறுக்குதனம் பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்காத.. நீ யோசிக்கிற விசயத்தை படமா காட்டுவேன் நான்.. ஏனா இத்தனை வருச நட்பு அப்படி.." என்றாள்.

"நீ நினைக்கற மாதிரி எதுவும் இல்ல.." என்றவன் அவள் அறை விட்ட இடத்தை தேய்த்து கொண்டே அவளிடமிருந்து விலகி ஓடினான்.

"செழியா நில்லு.." என்றவள் அவனை துரத்த அவன் நேராக கதிரை நோக்கி ஓடினான். "மறுபடியும் ஏதோ ப்ளான் பண்றான் இந்த பக்கிபையன்.." என தனக்குத்தானே சொல்லியவள் அவனை துரத்துவதை விட்டு விஷ்வாவின் அருகே காலியாக இருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள்.

"உனக்கு ஏன் கதிரை பிடிக்கல..?" என்ற விஷ்வாவை வியப்போடு பார்த்தாள். "உங்களுக்கும் ஏன் இந்த சந்தேகம் அண்ணா..?"

"நீ கதிரை வெறுக்க ஏதாவது காரணம் இருக்கும் இல்லையா..?"

"ஒரு காரணமும் இல்ல.. நான் யாரையும் வெறுக்கல.. எனக்கு யாரையும் பிடிக்கல..‌ இதுதான் உண்மை.. காதல் பண்ணி பிறகு அது எதிர்பார்ப்புல நிற்கும்போது அவங்க அன்பு செலுத்துவதை நிறுத்திட்டா அந்த ஏமாற்றம் தர வலியெல்லாம் எதுக்கு..? எதிர்பார்ப்பு இல்லாத இடத்துல ஏமாற்றம் இல்லை.."

"கதிர் உன்னை ஏமாத்திடுவான்னு நினைக்கிறியா..?" அவனது கேள்விக்கு மைவிழியால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை. தூரத்தில் செழியனோடு பேசிக் கொண்டிருந்த கதிரை பார்த்தாள். அவனுக்கும் தனக்கும் நிறைய விசயங்கள் ஒத்துப் போவதை அவளும் அறிவாள். ஆனால் அவனை நம்பிக்கையோடு பார்க்கவும் முடியவில்லை. நம்பிக்கை இல்லாமல் நினைக்கவும் முடியவில்லை..

"தெரியல அண்ணா.."

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top