என் நெஞ்சுநேர்பவளே -1

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
1


"ரதிம்மா..... கிளம்பியாச்சா..."என்று மூன்றாவது தடவையாய் அழைத்திருந்தார் திரு....

"நீங்க கத்தி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதீங்கப்பா.... அவ இப்போ தான் அம்மா கிட்ட பெட்காபி கேட்டு சண்டை போட்டுட்டு இருக்கா.... "

"இந்நேரத்துலையா.. "

"உங்க ரதிம்மா தான் எதுலயும் வித்தியாசமாச்சே... "

"ஹாஹாஹா.... சரி விடு சுபிம்மா.... சின்ன புள்ள தான... நீ வா... நாம கார்ல் இந்த சாமானத்தை எல்லாம் எடுத்து வைக்கலாம்.. அதுக்குள்ள அவளும் கிளம்பி வந்துருவா... "

என்றவாறு அங்கிருந்த பொருட்களை காரில் எடுத்துவைத்தவர் திருமுருகன்... தெற்கு ரயில்வேயில் வேலை.... ஈரோட்டில் சொந்தமாக வீடு கட்டி தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்...

இவர் மனைவி மீனாள்...இல்லத்தரசி.... இவர்களுக்கு இரு மகள்கள்..... மூத்தவள் சுரபி.. இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவி...இளையவள் நம் கதையின் நாயகி ஆரதி.... பன்னிரண்டாம் வகுப்பு போது தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறாள்....


"ஏய் லேட்டாகுதுடி... உங்க அம்மாச்சி வேற இதோட பத்துவாட்டி போன் பண்ணிட்டாங்க... போய் குளிச்சு ரெடி ஆகு..."

"அதெல்லாம் முடியாது... எனக்கு காபி வேணும்.... "

"ஏண்டி அநியாயம் பண்ற.... எல்லாரும் காலையில் எழுந்ததும் காபி கேப்பாங்க.. நீ என்னடான்னா இப்படி மதிய தூக்கம் தூங்கி எழுந்து காபி கேட்டு என் உயிரை வாங்குற.... "

"எப்ப கேட்டா என்ன..... உனக்கு காபி போட சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு சாக்கு சொல்லாதம்மா.... "

"யாரு நான் சோம்பேறியா... காலைல இருந்து எவ்ளோ வேலை செய்யறேன்....நீங்க யாராவது கொஞ்சமாச்சும் ஒத்தாசை பண்ணுனீங்களா... அவ என்னடான்னா அசைன்மென்ட் எழுதணும்னு ஒரு வேலையும் செய்யல... நீ எட்டு மணிக்கு எழுந்துட்டு சாப்பிட்டு, டிவி பார்த்துட்டு, ஊருக்கு கொண்டு போக வச்சிருந்த தீனியெல்லாம் தின்னு தூங்கிட்டு இப்ப எழுந்து பெட்காபி கேக்குற கழுதை.... என்ன பார்த்து சோம்பேறிங்கற.... அடி வெழுத்துருவேன்... எந்திரிடி... "

என்று அவள் முதுகில் அடி வைக்க, அவள் "அப்பா "என்று கத்தலில் அங்கு நின்றிருந்தார் திரு.... அவரை கண்டதும் வராத கண்ணீரை துடைத்தவள்"அப்பா அம்மா என்னை அடிச்சுட்டாங்க.... "என்று புகார் பத்திரம் வாசித்தாள்...

"மீனா புள்ளைங்கள அடிக்காதன்னு எத்தனை தடவ சொல்றது.... "

"இந்தாங்க செம்ம டென்ஷன்ல இருக்கேன்.. அப்புறம் உங்களுக்கும் அதே அடி விழுகும்......இவளோட கத்தி கத்தி எனக்கு நெஞ்சு வலியே வந்துரும் போல இருக்கு... இதுல அடிச்சுட்டேன்னு பஞ்சாயத்து வேற... அப்பாவும் மகளும் என்னவோ பண்ணி தொலைங்க.. இன்னும் அரைமணி நேரம் தான் பார்ப்பேன்... இவ ரெடியா வெளிய வரல நானே பஸ் பிடிச்சு எங்கம்மா வீட்டுக்கு போயிருவேன்.... "என்று அவர்களை திட்டிவிட்டு வெளியே சென்று விட்டார் மீனா...

"என்னடா ரதிம்மா.... அம்மாவை ஏன் டிஸ்டர்ப் பண்ற... நாலு வருஷம் கழிச்சு திருவிழாக்கு ஊருக்கு போறோம்ன்னு உங்கம்மா காலையில் இருந்தே பலகாரம் அது இதுன்னு நிறைய செஞ்சுட்டு இருந்தா... இப்ப தான் எல்லா பாத்திரத்தையும் கழுவி சுத்தம் பண்ணிட்டு ரெடியானா...இப்ப காபி போட்ட லேட்டாகும்... அம்மாச்சிலாம் நாம எப்ப வருவோம்னு சாப்பிடாம கூட வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க... இப்போ கிளம்பினா தான் மூணு மணிக்காச்சும் அங்க போக முடியும்.... போய் சீக்கிரம் ரெடியாகுடா..... "

"சரிப்பா.... "என்றவள் எதுவும் பேசாமல் துணிகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு சென்றவள் திரு புறம் திரும்பி
"இவ்ளோ பெரிய லெக்ச்சர் குடுத்த நேரத்துல காபியே குடிச்சுருக்கலாம் ப்பா... "என்று சொல்லி சிரித்து விட்டு உள்ளே புகுந்து கொண்டாள்....

"வாயாடி..... "என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர் ஆரதி தயாராக வைத்திருந்த பைகளையும் எடுத்துச் சென்றார் காரில் வைக்க....

அரைமணி நேரம் கழித்து தயாராகி வந்தவளை மூவரும் அதிசயத்தை பார்ப்பதை போல பார்த்துக் கொண்டிருந்தனர்.... இருக்காதா பின்னே... வெளியில் சென்றால் ஜீன்ஸ் டாப் வீட்டில் இருந்தால் நைட் டிரஸ் போட்டுக் கொண்டு, தலைமுடி எப்ப எண்ணை கண்டதோ என்பதைப் போல அதை விரித்து போட்டுக் கொண்டே சுற்றுபவள் இன்று மஞ்சளும் பச்சையுமாய் பாவாடை தாவணி அணிந்து இரட்டை பின்னல் போட்டு கல் வைத்த ஜிமிக்கி கழுத்தில் கொஞ்சம் பெரிய டாலர் வைத்த செயின் நெற்றியில் கொஞ்சம் பெரியதாய் போட்டு வைத்து தங்கள் முன் வந்து நின்றது தங்கள் பெண் தானா என்ற சந்தேகத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர்..

சுரபி ஆராதியிடம் "என்னடி கோலம் இது...... பாத்ரூம்ல எங்கயாச்சும் வழுக்கி விழுந்து மெண்டல் ஆகிட்டயா..... இப்படி ஒரு கெட்அப்புல வந்து நிக்கிற..... "

"ஓய் சுறாபுட்டு... யார பாத்து மெண்டல்ங்கற.... உன்னை அப்பிடியே அவிச்சு தின்னுபுடுவேன்... ஓடி போயிரு.... "

"உன்னை தான் பாட்டி தாத்தா வீட்டுல பெரிய சோளக் கருதுன்னு நெனச்சு சுட்டு திங்க போறாங்க பாரு... "

"என்னை தானே தின்னா தின்னுட்டு போறாங்க.... ஆமா அதென்னடி புதுசா அம்மாச்சியை பாட்டிங்கற அப்புச்சியை தாத்தாங்குற.... "

"பின்ன என்ன உன்னை மாதிரியே பட்டிக்காட்டு பாஷை பேசிட்டு திரிய சொல்றியா... "

"அம்மாச்சி அப்புச்சின்னு உறவு முறை சொல்லி கூப்பிடறதுல என்ன நாகரிகம் வேண்டி கிடக்கு.. நீ ரோட்டில போறவங்களயும் தாத்தா பாட்டின்னு கூப்பிடுவ....நம்ம அம்மாவை பெத்தவங்களையும் அப்பிடியே கூப்புடுவியா.... நாகரிகம் நாம நடந்துக்கற முறைல இருக்கு... பேசற மொழில இல்ல புரியுதா....அதோட முதலில் இடத்துக்கு தகுந்த மாதிரி துணி போட்டு பழகலாம்... பொறவு நாகரிகம் பத்தி பேசலாம்.... வந்துட்டா பேண்டு சட்டை போட்டுட்டு நாகரிகம் பேச..... "என்று ஒரு சொற்பொழிவே ஆற்றி விட்டு காருக்கு சென்று விட்டாள் ஆரதி....

அவள் பேசியதின் உண்மை உரைக்க சுரபி உள்ளே சென்று சுடிதாருக்கு மாறியவள் காரில் ஆராதிக்கு அருகில் உம்மென்று அமர்ந்தாள்.....

இவர்களை கவனித்திருந்த மீனா திருவிடம் "நம்ம பொண்ணு எப்ப இருந்துங்க இப்படி பேச ஆரம்பிச்சா.. "
என்று வியப்பாய் கேட்க

"ரதிம்மா இன்னும் நாம நினைக்கற மாதிரி சின்ன பொண்ணு இல்ல மீனு... வளர்ந்துட்டா... "

பிறகு அனைவரும் கிளம்பினர்... கார் சிறிது தூரம் சென்றிருக்கும் ஆரதி சுரபி அருகில் நெருங்கி அமர்ந்தாள்... சுரபி அவள் புறம் திரும்பாமல் ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்....

"சுபி செல்லத்துக்கு என் மேல கோவமா.... "

"போடி பேசாத..... "

"சாரி சுபி...."

"உன்னை பேசாதன்னு சொன்னேன்.."

"என் பட்டு அக்கால்ல.. என்னை பத்தி தான் தெரியுமில்ல...மனசுல படறதா டக்குனு சொல்லிருவேன்.... தண்டனையா வேண்ணா என்னை சுட்டு கூட திண்ணுக்கோ செல்லம்... "என்ற ஆரதியின் பதிலில் சிரித்துவிட்டாள் சுரபி.....

"நீ இருக்கியேடி... உன்மேல மட்டும் கோவத்தை பிடிச்சு வச்சுக்கவே முடில... "

"அதெல்லாம் அப்பிடி தான்டி செல்லம் எல்லாம் தயாரிப்பு கோளாறு...."

இவர்களின் பேச்சை ரசித்தவாறே வந்தனர் திருவும் மீனாவும்..... கார் திருப்பூர் மாவட்டத்தில் இருந்த குக்கிராமமான செவ்வந்தி புதூரில் நுழைந்தது... திருவிழாவுக்கே உரிய வேப்பிலை தோரணங்கள் வரவேற்க ஒலிபெருக்கியில் பாடல் ஒலித்து கொண்டிருந்தது....

ஆர்வமாய் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த ஆரதி வெளியில் ஒரு காட்சியை கண்டவள்
"அப்பா நாம திரும்பி வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வரலாம்ப்பா "என்று சொல்லியிருந்தாள்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN