நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 11

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சத்யனும் நிலாவும்..., லிப்ட்டில் ஒன்றாக பயணிக்கும் போது நிலாவுக்கு தான் இதயம் படபடப்பாக இருந்தது. அதுக்கு ஏற்றார் போல சிவா இறங்கவும், இவர்கள் இருவர் மட்டுமே, தனியாக தங்களுடைய இரண்டு நிமிட லிப்ட் பயணத்தை தொடரனும் என்றதும்..., நிலாவின் இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது. தண்ணீருக்குள் நீந்தும் மீனை தரையில் தூக்கி போட்டால், எப்படி துடிக்கும் அதே போல நிலாவின் இதயம் துடிப்பது அப்பட்டமாக வெளியே தெரிந்தது. இதையெல்லாம் பார்த்து சத்யன் மென்மையாக சிரித்துக் கொண்டான். நிலாவு அவனின் முகத்தை கவனிக்கவில்லை, அவன் தன்னுடைய இமேஜ் டேமேஜாகமல் இருப்பதற்காக தன்னுடைய கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு, அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான்.

நிலாவின் பார்வை அவனிடம் போகாமல் இருப்பதற்கு காரணமும் அந்த கண்ணாடி தான், அதன் வழியே அவனின் விழி எங்கு பார்வையை வீசுகிறது என்று தெரியாத குழப்பமும் அவளை மேலும் பயமுறுத்தியது, இவள் பயத்தை அதிகரிப்பதற்காகவே லிப்ட்டும், அதற்கான வேலையை செய்தது. சிவா இறங்கியவுடன், லிப்டின் டோர் மூடி சிறிது அடி மேலே எழும்பவும், கரன்ட் கட்டாகி லிப்ட் ஒரு பெரிய குலுக்கலுடன் இரு தளங்களுக்கும் இடையில் நின்று விட்டது.

நிலா..., தன்னுடைய இதயம் பயத்தால் துடிப்பதை மறைக்க தன்னுடைய கையை எடுத்து இதயத்தின் மீது தடவி அதை அமைதி படுத்தினாள், அதில் எந்த பலனும் இல்லாமல் இருந்தது, ஆனால் அந்த இதயத்திற்கு சொந்தமானவன். லிப்ட் நின்றதும், தன் பின்னால் இருந்த கம்பியை பிடித்து பேலன்ஸ் செய்து நின்று கொண்டு இருக்கவும், நிலா இதைப்பற்றி அறியாததால், உடும்பு போல அவனின் மீது பயந்து போய் ஒட்டிக் கொண்டாள்.

சத்யனும் அவளின் பயத்தை புரிந்துக் கொண்டே, அவளை சீண்டிப் பார்ப்பதற்காக தன் மேலே ஒட்டி இருப்பவளை, தன்னிடமிருந்து பிரித்து நிறுத்துவதற்காக அவளிடம் தன் கையை கொண்டு சென்றவனுக்கு, அவளை அள்ளி அணைக்க வேண்டும் போல இருந்தது, இருந்தாலும் அவளே ஒரு பிடிவாத்துடன் இருக்கும் போது..., நான் சத்யன் எப்படி அவளிடம் வழிய போவேன் என்று அவனது மனசாட்சியுடன் சண்டையிட்டு கொண்டு இருந்தாலும், அவனின் கைகள் அவளின் இடையில் பதிந்தது.

நிலா லிப்டில் ஏற்பட்ட குலுக்கலால், பயத்தில் சத்யனை இறுகி அணைத்தவாறு நின்று இருந்தவளின், இடையில் ஒரு அழுத்தத்தை உணரவும், அதை குனிந்து பார்த்தவள், அவனை முறைத்துக் கொண்டே, அவனிடம் இருந்து விலக முயற்சிக்கவும், சத்யனின் சட்டை பட்டனில் அவளின் தலைமுடி சிக்கி கொண்டு விடுபட முடியாமல் தடுத்தது. அவனும் அவளின் இடையில் இருந்த கையை மீண்டும் ஒருமுறை அழுத்தவும், இவள் கோவத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள். "மிஸ்டர் உங்க கையை கொஞ்சம் எடுக்கிறீங்களா."

சத்யன்..., மிஸ் முதல்ல என்னை விட்டு நீங்க தள்ளி நிக்குறீங்களா?? அப்புறம் என்று சொன்னவன். அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வையிலே பெண்ணவளுக்கு வெட்கம் வந்து கன்னம் சிவப்புற்றது. அதை மறைத்துக் கொண்டு, தன்னுடைய முடியை அவனின் சட்டை பட்டனில் இருந்து எடுக்க முயற்சிக்கவும், அவனின் பார்வைக்கு அருகில் தெரிந்த முகத்தை அவளுக்கு தெரியாமலே அங்குலம் அங்குலமா அளந்தான். ஆனால் பெண்ணவளுக்கு தன்னை யாரோ கண்களால் களவாடுவது தெரியவும், சத்யன் லிப்ட்டில் இருக்கும் ஃபேனை பார்ப்பது போல மேலே பார்த்து விசிலடித்துக் கொண்டு இருந்தான். நிலாவுக்கு அவனின் இந்த செயல் கோவத்தை அதிகரித்தது. "ஹலோ மிஸ்டர் சும்மா நிற்கிறதுக்கு, எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல, என்று கேட்டாள்.

சத்யன்..., ஏன் நான் சும்மா இருந்தாலும் நீங்க என்னை இருக்க விடமாட்டீங்க போல என்றவன். அவளின் முகத்தை ஒரு முறை கூர்ந்து பார்க்கவும். அவளின் உதட்டுக்கு மேலே இருக்கும் மச்சம்..., "வா வந்து என்னை முத்தமிடு" என்று அழைப்பது போல இருந்தது. அதனால் அவளின் முகத்தில் இருந்து பார்வையை விலகியவன். ஏன் ஹெல்ப் என்று சொல்லி நான் தொடும் போது, கை எங்கையாவது தெரியாமல் பட்டால் கூட, நீங்க என்னை திட்டுவீங்க, அதனால அந்த வேலையே வேண்டாம். உங்க முடிவை நீங்க தான் எடுக்கனும் என்றவன். தன் கைகள் இரண்டையும் பின்னாடி கட்டிக் கொண்டு நின்றான்.

நிலாவுக்கு..., சத்யனின் மீது இன்னும் கோவம் அதிகரித்தது. என் அத்தானா இருந்தா இப்படி என்னை கஷ்டப்பட..., இல்லை இல்லை யாரையுமே கஷ்டப்பட விடமாட்டாங்க. ஆனால் இவர் நான் படும் கஷ்டத்தை கை கட்டி வேடிக்கை பார்க்கிறார் என்று புலம்பியவள். சத்யனின் மீது இருந்த கோவத்தில் தன் முடியை வேகமாக பிடித்து இழுக்கவும், அதில் ஏற்பட்ட வலியால், அவளின் முகத்தில் சுழிப்பதை பார்த்தவனுக்கு பரிதாபமாக இருந்தாலும், உனக்கு இவ்வளவு திமிரா..., என்று மனதினுள் எண்ணிக் கொண்டான். அவள் இழுத்த வேகத்தில் பாதி முடி அவனின் சட்டைப் பட்டனில் மாட்டி பிய்ந்துக் கொண்டு வந்தது.

சத்யனுக்கும்.., அவள் இழுத்த வேகத்தில் கழுத்தில் சட்டை லேசாக இறுக்கியது, அதனால் அவளின் பக்கத்தில் சென்று நின்றவன். அவள் மேனியின் வாசத்தை நுகர்ந்து கொண்டு இருந்தான். அவள் கோவத்தில் இருப்பது தெரிந்ததும், தன்னுடைய மொபைலை எடுத்து மெயின்டனஸ் டிப்பார்ட்மென்ட் மேமேஜருக்கு அழைத்து விவரத்தை சொல்லவும்., அடுத்த ஐந்து நிமிடத்தில் கரன்ட் வந்தது.

நிலா..., தன்னுடைய முடியை பிடித்து தலையை தடவியவள், கரன்ட் வரவும், லிப்ட் மூன்றாவது தளத்துக்கு வந்து சேர்ந்தது. நிலா கோவத்தில் மூன்றாவது தளத்திலிருந்து வெளியேறி போகும் போது, இவனை பார்த்து முறைத்துக் கொண்டும், அதே சமயம் உதட்டை சுழித்து அவனுக்கு பழிப்பு காட்டி சென்றாள்.

சத்யன்..., "ஏய்.. என்று கத்தியவன். தன்னை மற்றவர்கள் பார்ப்பதை உணர்ந்து அமைதியாக இருக்கவும். லிப்ட் நாலாவது தளத்துக்கு சென்றது. ஹோட்டலில் வேலை பார்க்கும் பெண்கள் எல்லாரும் கூட்டமாக நின்று "சத்யனும் அந்த பெண்ணும்" மட்டும் லிப்டில் இருந்ததை வைத்து ரகசியமாக "கிசு கிசு" பேசவும், அங்கு வந்த பெண் ஒருத்தி "ஏய் என்னடி" நம்ம ஸாரை பற்றி நமக்கு தெரியாதா., அவர் நம்மகிட்ட பேசும் போதே கண்ணை தவிர வேறு எங்கும் பார்த்து பேசாதவர். அவரை போய் இப்படி பேசுறீங்களே என்று எல்லாரையும் அதட்டி கூட்டத்தை கலைத்து அனுப்பினாள். இதையெல்லாம் சத்யனும் கேட்கதான் செய்தான் இருந்தாலும் கண்டு கொள்ளலாமல், உதட்டளவில் புன்னகையை சிந்திவிட்டு சென்று விட்டான்.

நிலா..., கோவத்தோடு போனாலும், "இருடா" ஊருக்கு வருவ இல்லை, அப்ப இது எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சி உன்னை கவனிக்கிறேன் என்று தன் மனதில் சபதம் எடுத்துக் கொண்டவள். அவள் தேடி வந்த நபரை பார்க்கவும், அவரிடம் "ஸார் எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்களுக்கு, இந்த ஹோட்டல் ஓனர் திருமணத்திற்கு செய்த ஸ்டேஜ் அலங்காரம் பிடித்து இருக்கிறதாம். அதான் ஒரு போட்டோ கொடுத்தால் அவளுடைய கல்யாணத்துக்கும் இப்படி அலங்காரம் செய்து கொள்ள உதவியாக இருக்கும் என்று ஆங்கிலத்தில் அவனிடம் கேட்டாள்.

முதலில் கேட்டவுடன். சரிமா நீ ரொம்ப ஆசைப்பட்டு கேட்கிறதுனால நான் தரேன், எந்த போட்டோ காட்டு என்று, கம்ப்யூட்டர் மானிட்டரின் ஸ்கீரினில் ஒவ்வொரு விதமாக எடுத்த ஸ்டேஜ் போட்டோவை காட்டவும்., "ஸார் இன்னும் கொஞ்சம் க்ளோஸா, பொண்ணு, மாப்பிள்ளை நிற்கும் போது எடுத்த போட்டாவா இருந்தா கொஞ்சம் பெஸ்டா இருக்கும்" என்றவளை. அந்த போட்டோகிராபர் ஒரு மாதிரியாக பார்த்தார்.

நிலா..., இல்லை ஸார் இந்த மாதிரி ஒரு பிஸினஸ்மேன் கல்யாணத்துக்கு நான் போனேன் என்று எல்லார்கிட்டேயும் சொல்லி பெருமைபட்டுக் கொள்வேன், என்று அண்டபுழுகு ஆகாசபுழுகு புழுகவும். அவரும் இவள் வேறு எதுக்கோ கேட்கிறாள் என்று புரிந்துக் கொண்டு..., ஒரு நிமிஷம் இருமா.., நான் இப்ப வரேன் என்றவர். உள்ளே சென்று போனை யாரிடமோ பேசியவர். நிலா போட்டோ கேட்ட விவரத்தை பற்றி அவரிடம் சொன்னான்.

எதிர்முனையில் பேசியவர்., முதலில் கொடுங்க என்று சொன்னவர். அதன் பிறகு என்ன யோசித்தாரோ, அந்த பெண்ணை கொஞ்ச நேரம் அங்கேயே காத்திருக்க சொல்லுங்க. நான் இப்ப அங்கே வருகிறேன் என்ற மறுநொடி போன் லைன் துண்டிக்கப்பட்டது. இதையெல்லாமே கதவுக்கு அருகில் நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.., "நிலா"
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN