என் நெஞ்சுநேர்பவளே -2

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
2


"வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வரலாம்ப்பா"என்று கூறிய ஆரதி
மீனா திரும்பி ஒரு முறை முறைத்ததில் அமைதியானாள்.....

"என்னாச்சு ரதிம்மா... ஏன் வீட்டுக்கு போலாம்னு சொல்ற என்று கேட்டவாறு கோவிலின் அருகில் கரை நிறுத்த இடம் பார்த்தார் திரு...

"அங்க பாருங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு... "என்று ஓரிடத்தை சுட்டி காட்ட, அங்கு மஞ்சள் மற்றும் சந்தனத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் கரைத்து அதில் கொஞ்சம் பன்னீரை சேர்த்துக் கொண்டிருந்தனர்...

இது வருஷ வருஷம் நடக்கிறது தானேடா... எல்லோர் வீட்டுக்கும் உற்சவரை கொண்டு வரும் போது எல்லோர் மேலையும் மஞ்ச தண்ணி ஊத்தி மஞ்சள் சந்தனத்தை பூசி விசுவாங்க.... "

"அது தான்ப்பா எனக்கு பிடிக்கல... அவங்க முன்னாடி நனைஞ்ச துணியோட எப்படி இருக்க.. அதோட இன்னொருத்தர் பூசி விடறதுலாம் பிடிக்கல... அதும் எல்லாரும் பசங்க..... "என்று முகம் சுளித்து சொல்ல

"அப்பிடிலாம் சொல்ல கூடாது ரதி....இது காலம் காலமா நமக்குள்ள இருக்க பாரம்பரியம்.... அதோட தொற்று கிருமிகள் அதிகம் இருக்கற சீசன் இது... வேப்பிலை மஞ்சள் சந்தனம் எல்லாம் கிருமி நாசினி... நம்ம மக்கள் பொதுவா நல்லதுன்னா சொன்னா பாலோ பண்ண மாட்டாங்க... அதே இப்படி கடவுள் பேரை சொல்லி செஞ்சா கண்டிப்பா அதை மறக்கவும் மாட்டாங்க...

அம்மை நோய் வந்தா கூட அம்மன் பேரை சொல்லி கழுத்தில் வெங்காயம் கோர்த்து கட்டறது உப்பில்லாம சாப்பிடறது அஞ்சு நாள் வேப்பிலை கலந்த தண்ணியை வெய்யிலில் வச்சு குளிக்கறது.... மத்த வீட்டு மக்களோட புளங்காம தங்களை தனிமை படுத்திக்கறது... இது மாதிரி சொல்லிட்டே போகலாம்...

அதனால் இந்த மாதிரி பழக்கங்களை தப்பா சொல்ல கூடாது ரதி... "என்று சுபி சொல்ல

"நீ சொல்றதும் சரிதான் சுபிக்கா..இன்னைக்கு அவனுங்க வரட்டும் மஞ்சள்ல குளிப்பாட்டுரேன் அவுங்கள.... சரி வா சுபி நாம போய் சாமிய சைட் அடிச்சுட்டு வரலாம்" என்று சுரபியை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் ஆரதி....

"என்னங்க வீட்ல சின்னவ லெக்ச்சர் எடுத்தா.. இங்க பெரியவ லெக்ச்சர் எடுக்கறா... ரெண்டு பேரையும் புரிஞ்சுக்கவே முடிலயே.... "

"நான் தான் சொன்னேனே மீனும்மா.. நம்ம புள்ளைங்க வளர்ந்துட்டாங்க... உனக்கும் சேர்த்து லெக்ச்சர் எடுப்பாங்க பார்த்துக்கோ..... "

"யாரு அவளுங்க.... ஒரு டீ போடுடின்னா பச்ச தண்ணிலயா சுடு தண்ணிலையான்னு கேப்பாளுக.. இதுல எனக்கு லெக்ச்சர் வேறயா...."என்று முகம் சுளித்து சொல்ல, மீனாவின் முகத்தையே பார்த்திருந்தார் திரு...

"ஹலோ.... என்ன.. பதில் சொல்லாம பார்த்துட்டே இருந்தா எப்படி.... "

"ம்ம் இருபத்தி அஞ்சு வருஷம் முன்னாடி இருந்த மாதிரியே உன் முகம் இப்பவும் இருக்கா... அதான் கண்ண நகர்த்த முடியல.... "

அதில் தன் முகத்தை திருப்பிக் கொண்ட மீனா 'லூசு லூசு.. கோவில்ல வந்து பேச்சை பாரு 'என்று மனதிற்குள் தலையில் அடித்து கொண்டாலும் முகம் செம்மையுறவே செய்தது....

அதைக் கண்ட திரு மெலிதாய் விசில் அடிக்க "அடி வாங்க போறீங்க... இதென்ன வயசு பையனாட்டம் "

"அதென்னவோ தெரியல மீனு இங்க வந்தா மட்டும் இப்படி மைண்ட் சேன்ஜ் ஆகிருது "

'ஆமா வீட்ல மட்டும் ரொம்ப ஒழுங்கு 'என்று முணுமுணுத்தவள் "வாங்க புஜை தட்டு வாங்கிட்டு போய் சாமி கும்பிட்டு வரலாம்.... "என்றவாறு கடையை நோக்கி சென்றனர்..

பிறகு அனைவரும் அம்மனை சைட்டடித்து அச்சோ தப்பு தப்பு.. கன்னத்துல போட்டுக்குங்க... அம்மனை கும்பிட்டு விட்டு பிரகாரத்தில் அமர்ந்தனர்.... அப்போது ஆரதியின் உடையில் கோவிலில் இருந்த புறாவின் எச்சம் பட்டுவிட அதை கழுவ கோவிலின் வெளியில் இருந்த தண்ணீர் தொட்டி அருகில் வந்தாள்... தண்ணீரில் உடையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்....அவளுக்கு சற்று தள்ளி இளைஞர் இருவர் பேசிக்கொண்டிருந்தது இவள் காதில் விழுந்தது...

"ப்ச்... என்னடா பழக்கம் இது..அடுத்தவங்க மேல தண்ணி ஊத்தறது அவங்க முகத்துல மஞ்சள் பூசறது.... "

"ஆதி இதல்லாம் திருவிழால சகஜம்டா.. இங்க யாரு மனசிலும் கள்ளம் இருக்காது... ஜஸ்ட் இது ஒரு திருவிழா கொண்டாட்டம் அவ்வளவு தான்.. இதுக்கு ஏன் நீ ஓவர் ரியாக்ட் பண்ற..... "

"பெரியவங்க கொழந்தைங்க ஓகே.. வயசு புள்ளைங்களுக்குலாம் எதுக்கு பூசணும்.. என்ன பொறுத்த வரைக்கும் எனக்கு வர போற வைப் தவிர யாரையும் டச் பண்ண கூடாது.... அது பிரண்டா இருந்தாலுமே தான்.. "

"இம்புட்டு நல்லவனாடா நீ....சரி சரி முறைக்காத.. நீ யாரு மேலயும் பூச வேண்டாம்.... சந்தனம் மஞ்சள் பன்னீர் கலந்ததை மட்டும் எல்லோருக்கும் பொட்டு மாதிரி வை போதும்.... "

"நான் கேர்ள்ஸ்க்கெல்லாம் வைக்க மாட்டேன்... "

"நீ ஒண்ணுமே பண்ண வேண்டாம்... அந்த குண்டாவை மட்டும் வச்சிரு போதும்.. "

"இது ஓகே..... "என்றவாறு இருவரும் நகர்ந்துவிட இவளோ வியப்பாய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்....

"ஏய் என்னடி இப்படி ஆன்னு பார்த்துட்டு நிக்கிற... "என்று சுரபி அவளை உசுப்பினாள்...

"ஒரு உலக அதிசயத்தை பார்த்துட்டு இருந்தேன் சுபி.... "

"என்னடி உளர்ர.... "என்ற சுரபியிடம் சற்று முன் தான் கண்டதை விவரிக்க

"நீயே ஒரு அதிசயம்.. உனக்கும் மேல இருக்கான் போலயே... எங்கிருந்து தான் இப்படி கிளம்பறீங்களோ தெரியல.... சரி வா அம்மாவும் அப்பாவும் வெயிட் பன்றாங்க.... "என்று ஆரதியை இழுத்து சென்றாள் சுரபி.....

பிறகு நால்வரும் மீனாவின் அம்மாவீட்டிற்கு சென்றனர்..... இவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்தனர் சிவகாமியும் முத்துச்சாமியும்.....

காரில் இருந்து இறங்கிய ஆரதி ஓடிசென்று சிவகாமியை"மிஸ் யூ அம்மாச்சி.. " கட்டிக்கொண்டாள்....

"வாடி என் தங்கம்... இப்ப தான் அம்மாச்சி ஞாபகம் வந்துச்சா... "

"எப்பயும் உன் நியாபகம் தான்..... இந்த பரிச்சை எல்லாம் இல்லைனு வை எப்பயோ வந்துருப்பேன்.... இங்க பாரு உன்னை பாக்காம எப்படி எளச்சு போய்ட்டேனு.... "

என்றவளை தள்ளி நிறுத்தி ஆசை தீர பார்த்தவர் "இந்த பாவாடை தாவணில அழகா இருக்கடா.. என் கண்ணே பட்டுடும் போல தங்கம் "என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்...

அவர்களை முறைத்து கொண்டு நின்ற சுரபி "ஏன் அம்மாச்சி என்னை கண்டுக்கவே இல்லைல நீ.. போ நான் கோவமா போறேன்... "என்றவளின் அருகில் சென்றவர் அவளை சமாதானம் செய்ய ஆரதி முத்துசாமியை தேடி சென்றாள்...

அவர்கள் காரில் இருந்த பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவர் ஆரதியை பார்த்தும் பார்க்காமல் செல்ல
"ஓய் மீசைக்காரரே.... என்ன என்னை பார்த்தும் பாக்காம போற... "என்று அவரை வழி மறித்து கேட்க "நீ போய் உங்க அம்மாச்சியவே கொஞ்சு... என்னை ஏன் வழி மறிச்சு நிக்கறவ..."என்று சிலுப்பி கொண்டு நிற்க,

"ஓ மீசைக்கு வந்த ஒடனே கொஞ்சலைன்னு ரோசம் வந்துருச்சாக்கும்... என் செல்ல மீசைல உன் பாப்புவை மன்னிக்க மாட்டியா... "

"அதெல்லாம் முடியாது போ.. "

"சரி மன்னிக்காத.. இந்த டிரஸ் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லை.. "என்று பாவாடையை பிடித்து முன்னும் பின்னும் சுற்றி காமிக்க அதை ரசித்தவர் அவள் பார்க்கும் போது வீம்பாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு
"சோளக்கொல்லை பொம்ம மாதிரி இருக்க "

"யூ.... யூ.... மீசை..... என்னை பார்த்து சோளக்கொல்லை பொம்மைன்னா சொல்ற... போ இனி ஊருக்கு போற வரை உன்கூட பேச மாட்டேன்.. உங்கூட டூ... "

"ஹப்பா... அப்போ நான் வாங்கி வச்ச பஞ்சுக்கு வேலை இருக்காது.... "

"அப்புச்சிஇஇஇஇஇ..... "என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவரை முறைத்து நின்றவளை பார்த்து வாய் விட்டு சிரித்தார்.... ஆரதியும் பொய்க்கோபத்தை இழுத்து வைக்க முடியாமல் சிரித்து விட்டாள்..

"சரிடா பாப்பு..பரிட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்க... "

"பாஸ் பண்ணிருவேன் அப்புச்சி... "

"ஹாஹா... அப்ப மார்க்கு....."

"அது போடுற புண்ணியவான் பொறுத்து.... "

"அதுசரி..... சரி வா சாமி வர நேரம்.. வாசப்பக்கம் போலாம்... "

"அப்புச்சி... இந்த டிரஸ் எப்படி இருக்குன்னு இன்னும் நீ சொல்லவே இல்லை... "

"உனக்கென்ன பாப்பு.. ரதி தேவியாட்டம் இருக்க... "என்று அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினார்....

"நீயும் தான் இன்னும் அந்த மதுரை வீரன் கணக்கா மீசைய முறிக்கிகிட்டு செமயா இருக்க..... "

"அதான் பாப்பும்மா இன்னும் பத்து கிழவிங்க எப்பயும் என்னை சுத்திக்கிட்டே திரியுது.... "

"ஆமா பல்லு போன கிழவன் பின்னாடி பத்து கிழவிங்க திரியாம குமரியா திரிவா... பேத்தி கிட்ட பேச்சை பாரு.. போய் சாமி எங்குட்டு வந்துட்டு இருக்குன்னு பாருங்க.... "என்று அவரை விரட்டிய சிவகாமி "நீ வா தங்கம் அம்மாச்சி பூ வச்சி விடறேன்.. "என்று ஆரதியை அழைத்துக் கொண்டு சென்றார்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN