நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

என்னுள் மாயம் செய்தாயோ -1

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 01

பலத்த காற்றுடன் மழை வருவதற்கான அறிகுறியுடன் காற்று வீசிட , மரங்கள் யாவும் காற்றின் வீச்சு தாங்க முடியாமல் அலைபாய தொடங்கியது.

சூரியன் மெது மெதுவாக இருளான மேகத்தின் நடுவே தன்னை மறைத்துக் கொண்டிருக்க ,தொடர் காற்றினால் மணலெல்லாம் பறக்க தொடங்கியது. வானம் இருட்டுடடைய தொடங்கி இருக்க ஒருவளின் மனமும் கூட வெளிச்சத்திலிருந்து இருள தொடங்கி இருந்தது.

காற்றின் வேகத்தை விட அவள் மனதின் வலி அவளை சுக்கு நூறாக கிழிக்க வெளியே ஏதும் அறியாத பாவை போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தாள் பாவையவள்.

என்றும் அவனின் முன் புன்னகை சிந்தியவள் , இன்றும் அதே புன்னகையுடன் அவனிடமிருந்து விடை பெற்றிருந்தாள்.

காலத்தின் விதியோ சதியோ அவனுடனேயே சிறு வயதில் இருந்து காலத்தை தாழ்த்தியவளால் அவனின் வாழ்க்கையில் முழுமையாக இருக்க முடிய வில்லை. அவனின் மகிழ்ச்சியே தனக்கான மகிழ்ச்சி என்று எண்ணியவள் அவன் வாழ்வின் முக்கியமான நாளான இன்று அவனை விட்டு பிரிந்து வந்ததை எண்ணி கவலையுற்றவள் மனதில் அவனின் கலங்கிய முகம் நினைவில் வந்து கலங்கடித்தது.

மாலை நேரம் மலைகளின் இளவரசியாக விளங்கும் ஊட்டி.

ஏரிகள், அடர்ந்த காடுகள், பசும் புல்வெளிகள், வித்தியாசமான தாவரங்கள்,தூய்மையான காற்று என்று மக்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் இருந்தது. சுற்றிலும் டீ தோட்டம் வலைந்து வலைந்து செல்லும் பாதைகள் அதில் தெரியும் இயற்கையின் அழகு என ஊட்டியை பற்றி கூறிக் கொண்டே போகலாம் .

அங்கே மிகப்பெரிய தொழிலதிபரின் மகனுக்கு இன்று நிச்சயதார்த்தம் மற்றும் ரிசப்ஷன்.

ஊட்டியில் இருக்கும் பல தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தை கொடுத்து அவர்கள் வாழ்வை இன்று வரை நல் வழி படுத்தி வருபவறே அமுதவேல் . அமுதவேல் இன்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி நடத்தி வருபவர். அவரின் வாழ்க்கை முறை எளிமையாக இருந்ததினால் அவரின் புதல்வனையும் பணத்தை காட்டி வளர்க்காமல் பாசத்தையும் பண்பையும் காட்டி வளர்த்தவர். ஆனால் இவர் மனைவி வடிவுக்கரசியோ அவருக்கு எதிர்மறையாக வாழ்பவர். திருமணத்திற்கு முன்பு எளிமையின் பிடியில் வளர்ந்ததாலோ என்னவோ திருமணத்திற்கு பின் வறுமையையும் எளிமையையும் முற்றிலுமாக வெறுத்தார்.

தன் மகனின் வளர்ப்பு பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக வாழ்ந்து வந்தார்.தன் கணவனுக்கு பயந்து அவரால் அவனை மாற்ற முடியவில்லை.

இன்று தன் ஒரே மகனுக்கு ஆசை ஆசையாக திருமணம் செய்து பார்க்க எண்ணிய வடிவுக்கரசி கோயம்புத்தூரிலே வசதியான குடும்ப பெண்ணை பிடித்திருப்பதாக கூறி வந்த மகனை வேக வேக திருமணத்தை நடத்த முயன்று நிச்சயம் வரை கொண்டு வந்து விட்டார்.இதில் அமுதவேலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனோ மகனுக்கு இவள் சரியான ஜோடி இல்லை என்று மட்டும் தோன்றியது.

ஊரே திரண்டிருந்தது அந்த பெரிய மண்டபத்தில் , அது அமுதவேலின் மண்டபம் என்பதால் அவருக்கு தெரிந்த பழகிய தொழிலாளி என அனைவரும் வருகை தந்திருந்தனர். அதில் அவருக்கு மிகவும் பிடித்த தொழிலாளி தங்கராஜ். மண்டபத்தில் இருந்த அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தார்.

இங்கோ மணமகனின் அறையில் இருந்த அவன் , அவனது உடையை சரி பார்த்து கொண்டு இருந்தான்.

ப்லக் பேண்ட் அண்ட் ப்லக் கோர்ட் வித் ஒயிட் சேர்ட் அணிந்திருந்தான். பார்க்கவே அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது . ஏனெனில் அது செல்லட் செய்து கொடுத்தது அவனின் உயிர் தோழியே.

ஆண்மைக்கே உரிய கம்பீரத்துடன் ஆறடிக்கு சரியாக உடற்கட்டையுடன் பார்க்கும் அனைவரையும் காந்த விசை போல் ஈர்க்கும் விதமாக தோற்றம் அளித்தான் நம் நாயகன்.

தன் நண்பர்கள் பட்டாளத்துடன் இருந்தவன் தன் தோழியினை தேடி வெளியே வந்து கண்களாலேயே தேடுதல் வேட்டையை தொடங்க அவன் கண்ணுக்கு மட்டுபடாமல் இருந்தாள் அவள்.

அப்போது , அவருடனானே வெளியே அவன் தோழன் ஆதித்யா " என்ன மச்சி உன் ஆள தேடுற போல " என்று கிண்டலடித்து பேச

" நான் ஏன் டா சந்தியாவ தேட போறேன் சொல்லு. நான் தேடுறது எல்லாம் என்னோட நீருவ தான்.அவள நான் காலைல இருந்து பாக்கவே இல்ல டா அதான் அவள தேடிட்டு இருக்கேன் " என்று கவலை தேய்ந்த குரலில் சொல்ல அவனையே ஒரு மார்க்கமாக பார்த்தான் ஆதித்யா.

" என்னடா அப்படி பார்க்கிற " என்று அவனின் பார்வை அறியாது அவன் கேட்டிட

" இல்ல டா இந்த நேரத்துல பொதுவா எல்லா மாப்பிள்ளையும் கல்யாண பொண்ணை தான டா தேடுவாங்க ஆனா நீ என்ன நீராவ இந்த நேரத்துல தேடுற " என்று கேள்வியாய் தன் நண்பனை நோக்க

ஆதித்யா கேட்ட நேரமோ என்னவோ அவனுக்குள் அந்த கேள்வி ஒரு விதையாய் மனதினுள் நுழைந்து வேகமாக உருவெடுக்க தொடங்கியது.

பதில் கூறமுடியாமல் தவிக்க , அவனுக்குள் அந்த கேள்வி பேரிடியாக இருந்தது. ஆனாலும் அவன் தேடுதல் நின்றபாடில்லை.

அவனது விழிகள் சுழன்று கொண்டே இருக்க , ஒரு சமயத்தில் "நரேன் " என்ற குரலும் " திரா " என்ற குரலும் ஒரு சேர வெவ்வேறு திசையில் இருந்து வர

இருவரின் அழைப்பு அவன் செவிகளுக்கு எட்டினாலும் ஒருவளின் அழைப்பே அவன் இதயத்தை தொட்டு மீண்டது.

திரா என்ற அழைப்பு திசையை நோக்கி திரும்ப முயன்ற அவனை இழுத்து தன் முன் நிறுத்தினாள் சந்தியா.

அவனின் நீரு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

" ஹே நரேன் இந்த ட்ரெஸ் எப்படி இருக்கு " என்று ஆசையாய் தான் காதலினவனிடம் வந்து கேட்டாள்.

சந்தியா அழகின் மற்றொரு உருவமாக இருந்தாள். சுண்டி விட்டாள் இரத்தம் வரும் அளவிற்கு அவள் நிறம் இருந்தது. பார்ப்போரின் கண்ணை பறிக்கும் விதமாக பேரழகியாய் அவள் முன் ஊதா வெள்ளை மற்றும் சந்தன நிறம் கலந்த வண்ண கற்க்களால் வேலைபாடுகள் கொண்ட விலை உயர்ந்த லெஹங்காவய் உடுத்தி இருந்தாள்.

அவள் கேள்வியில் எரிச்சல்லுற்ற நரேந்திரன் அவளை கிளப்பும் எண்ணத்தில் , " நல்லா இருக்கு சந்தியா " என்று கடுகடுத்தான்.

" வாட் ஹேப்பண்ட் மேன் எனி ப்ராப்ளம் " என்று அவனின் இரு கண்ணத்தை தாங்கி சந்தியா கேட்டாலும் அவனின் பார்வை இம்மியளவும் அவளின் மேல் இல்லை. அவன் பார்வைக்குரியவளோ அவனை விட்டு தள்ளி சென்று மாயமாக மறைந்தாள்.

அவள் மறையும் வரை நரேந்திரன் அவளையே பார்த்திருந்தவன் அவள் மாயமாக மறைந்ததும் சந்தியாவிடமிருந்து பிரிந்து ஓட்டமும் நடையுமாக நீருவை காணச் சென்றான்.

அவனின் செய்கையில் சந்தியா குழம்பி போய் நிற்க அதுவரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆதித்யா சந்தியா அருகில் வந்து " நீ உள்ள போ மா அவன் கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கான் " என்று சமாதான படுத்தி அனுப்பி வைத்தான்.

வேக நடையுடன் மூச்சிரைக்க வந்தவன் மொட்டை மாடிக்கே .அங்கு அவனின் உயிர் தோழி நீரு நிலவை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க அவளை நோக்கி மெதுவாக அடி எடுத்து வைத்தவன் " நீர்த்திகா " என்றழைத்தான்.

அவனின் அழைப்பில் மனம் சுக்கு நூறாக உடைந்து போனாலும் வழிந்த கண்ணீரை துடைத்தவள் மீண்டும் விழி நீர் வரவிடாமல் தடுத்து தடை போட்டு விட்டு திரும்பி " சொல்லு திரா இங்க என்ன பண்ணுற இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு நிச்சயம் நடக்க போகுது நீ இப்போ கீழ இருக்கிறது தான் சரி " என்று தன் வலியினை மறைத்து போலியாக அவன் முன் சிரிப்பை வரவழைத்து கொண்டு சொன்னாள்.

" நீ எதுக்கு இப்போ நான் கொடுத்த ட்ரெஸ் போடாம இவ்வளோ சிம்பிளான ட்ரெஸ் வியர் பண்ணி இருக்க சொல்லு " என்று சம்பந்தமே இல்லாமல் நரேந்திரன் கண்களில் கொதிப்புடன் கேட்டான்.

" அ...அது..அது வந்து " என்று நீர்த்திகா திக்கி திணற

" எதுக்கு இப்ப திக்குற நீரு நீ ஏதோ என்கிட்ட இருந்து மறைக்கிற அதுனால தான் நீ சொல்ல முடியாம திக்குறல சொல்லு " என்று அவள் தோள் பட்டையை பிடித்து வேதனையுடன் கேட்க , அவள் மனமோ உள்ளுக்குள்ளே குமறியது.

" என்னால எப்படி திரா உண்மைய சொல்ல முடியும் சொல்லு நான் உண்மைய என்னோட காதலுக்காக நீ உன்னோட காதல இழக்க தயாராயிடுவ என்ன மன்னிச்சிடு திரா " என்று உள்ளுக்குள்ளே அழுதவள் வெளியில் திடமாக அவனை பார்த்து " நான் ஊருக்கு போறேன் திரா இனி என்னால இங்க இருக்க முடியாது " என்றாள்.

" ஏன்..??" என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி எழுப்ப

" எனக்கு சென்னையில வேலை கிடைச்சிருக்கு . நான் நாளைக்கே அங்க போய் ஜாயின் பண்ணி ஆகனும் " என்றாள் திடமான குரலில்.

" இல்ல நீ எங்கேயும் போக கூடாது என்கூட தான் இருக்கனும் " என்று அவள் கரத்தினை கெட்டியாக பிடித்துக் கொண்டான்‌ நரேந்திரன்.

" முடியாது .அது எப்போதும் முடியாத ஒரு விஷயம் திரா " என்று மறுப்பாய் கூறியவள் தன் கரத்தினை விடுவித்துக் முயல அவனின் பிடி இறுகியது.

" உனக்கு ஞாபகம் இருக்கா திரா நீயும் நானும் பேசிக்கிட்டதுல அதிகமா பேசின‌ விஷயம் நம்மளோட பேரு தான் . நம்மக்குள்ள நீ என்னோட பெயரையோ இல்ல நான் உன்னோட பெயரையோ முழுசா கூறக்கூடாதுன்னு சேலென்ஞ் வச்சிருந்தோம் .அப்படி கூப்பிட்டா நாம நமக்குள்ள ஒரு நாளைக்கு பாத்துக்க கூடாது பேசிக்க கூடாதுன்னு வச்சிருந்தோம். அது உனக்கு ஞாபகத்துல இருக்கா இல்லையான்னு தெரியல .ஆனா நான் அத ஞாபகத்துல வச்சிருக்கேன் திரா " என்று கூறி அவனை வெற்று பார்வையை வீசினாள்.

"இன்னைக்கு நாம போட்ட சேலென்ஞ்ல நான் வின் பண்ணிட்டேன். என்னைக்குமே என்னோட முழுபெயர சொல்லி கூப்பிடாத நீ இன்னைக்கு கூப்பிட்டுருக்க .அந்த ஒரு நாள் பிரிவின்ற டேர் இனி வாழ்நாள் முழுவதும் தொடர போகுது " என்றாள் விட்டேத்தியாக அவளின் பார்வையில் அவ்வளவு வலி இருந்தது.

அனிச்சையாக அவளின் பேச்சில் அவன் பிடி விலகியது.

அதில் கையை உருவிக் கொண்டவள் , பக்கத்தில் இருந்த ஒரு கிஃப்ட் பாக்ஸை திறந்து அவனிடம் நீட்டி " Best Wishes on this wonderful journey,as you build a new lives with Sandhya dhira. உன்னோட வாழ்க்கையில எப்போதும் சந்தியாவோட கைய இப்படி விட்டுட்டாத டா அவளால தாங்கிக்க முடியாது. இனி உன்னோட வாழ்க்கை முழுசும் கைக் கோர்த்து வர போறவ சந்தியா தான். அவள நல்ல படியா பார்த்துக்கோ சரியா " என்று விட்டு தன் தந்தை தங்கராஜை அழைத்து கேப் வந்துவிட்டதாக கேட்டுக்கொண்டே வேதனையுடன் அவனை கடந்து மாயமாக மறைந்தாள்.

நரேந்திரன் திகைத்து போய் அப்படியே சிலையென கண்கள் கலங்கி போய் நின்றான்.

கீழே வந்தவள் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு அமுதவேல் வடிவுக்கரசியிடம் கூறிவிட்டு கேப் ஏறி மேட்டுப்பாளையம் நோக்கி சென்றாள். நரேனை விட்டு பிரிந்து நீரு தொலை தூரம் செல்ல தொடங்கி இருந்தாள்.

அதனை நினைத்து யோசித்தவளின் கண்களிலும் கண்ணீர் நீருற்ற , அதனை கடினப் பட்டு அடக்கிக் கொண்டாள் நீர்த்திகா.

தனக்குள் ஏற்பட்டது போல் ஏன் அவனுக்குள் ஏற்பட வில்லை..?? காரணம் ஏனோ..???எனக்குள் மட்டும் அவனுக்கான பாசத்தையும் நேசத்தையும் நிறைத்த கடவுள் அவனுள் நிறைக்க மறந்தது ஏன்..??என் வாழ்வின் அத்தியாயமாக இருந்தவனே அவனின் வாழ்வில் அத்தியாயமாக்க வேறொரு பெண்ணை நியமித்தது ஏனோ..???

அவளின் யோசனை சுழற்சியில் கேள்விகள் அடுக்கிக்கொண்டே செல்ல அதை தடை செய்யும் பொருட்டு மழை பெய்ய ஆரம்பித்தது.

அதேசமயம் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இருந்து பாடல் ஒலித்தது. அதுவும் நேரத்திற்கு அவளின் நிலைக்கும் சரியாக ஒழித்தது.

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைகிரதே
உன் செவியில் விழா வில்லையா உள்ளம் கொஞ்சம் வழிகிறதே
உன்னரகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இறந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்

என்ற பாடல் ஒழிக்க பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்ததால் சாரலில் இருந்து தப்பித்திடவே மறைவாக நிற்க தொடங்கினாள்.

அதற்குள் மேட்டுப்பாளைத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் வந்துவிட , அவளுக்கான கம்பார்ட்மெண்ட் தேடி சென்றவள் அவளுக்கான இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

இங்கே இருளில் வெறித்த படி அவள் சென்ற போது இருந்த நிலையிலேயே நின்றிருந்தவனை தேடி பிடித்து அழைத்து வந்தான் ஆதித்யா.

உணர்ச்சியே இல்லாத உருவமாய் தான் ஆதித்யாவுடன் சென்று அறையில் புகுந்துக் கொண்டான்.

அதற்குள் அவன் அன்னை வடிவுக்கரசி வந்து ," என்னோட பையன் அதுவும் அமுதவேல் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி ஓனரோட பையன் மாதிரியா இருக்க என்ன ட்ரெஸ் இது நல்லாவே இல்ல .இந்த ப்லேசர் போட்டுக்கோ உனக்காக இந்த அம்மா ஒரு பெரிய ஃபேமஸ் டிசைனர் கிட்ட சொல்லி உனக்காக ஸ்ட்ச் பண்ணது " என்று பெருமையாக கூற நரேந்திரனோ வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தான்.

" நரேன்" என்று தோலை தொட்டு வடிவுக்கரசி உலுக்க

சுயநினைவு அடைந்தவன் " என்ன மா " என்றான் அவரின் பார்வையில்...

" என்ன டா ஆச்சி இப்படி பித்து புடிச்சவன் போல் அமர்ந்திருக்க " என்று ஒரு தாயாய் பதறிப்போய் கேட்க

" அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆண்டி எல்லாம் சந்தியா நினைப்பு தான் இல்லையா மச்சி" என்று தன் நண்பனுக்கு பேச்சை மாற்றினான் ஆதித்யா..

" ஹோ நான் கூட பயந்து பொய்ட்டேன் ஏதோ பேய் தான் பிடிச்சி கிடுச்சோ என்று " என்று நக்கலாக நீருவை எண்ணி கூறியவர் ஆதித்யாவிடம் அந்த ப்லேசரை கொடுத்து விட்டு சென்றார்.

அதன் பின் ஆதித்யா அவனிடம் கொடுத்து உடை மாற்றி விட்டு வர சொல்ல , முதலில் மறுத்தவன் அதன் பின் ஆதித்யாவின் வற்புறுத்தலில் உடை மாற்றி வந்தான்.

நல்ல நேரம் தொடங்கிட நிச்சய விழா அமோகமாக தொடங்கியது.

அவளின் பயணம் நரேந்திரனிடமிருந்து மாயமாக மறைவது தான் எனினும் அது அவ்வளவு எளிதாக இருக்குமா என்று மட்டும் அவளுக்கு தெரியவில்லை.

இதே மழையில் இருவரும் ஜோடியாக விளையாடியது எல்லாம் அவள் நினைவில் வந்து போக , நீருவின் விழியில் நீர் கோர்க்க தொடங்கியது.

அவனுக்கும் தனக்குமா உறவை உயிர்ப்பித்த நாளிலிருந்து யோசித்து நேரத்தை கடத்த தொடங்கினாள்.

________________________________

வணக்கம் நட்புறவுகளே

நான் உங்கள் அஷ்வதி...

இது ஒரு குட்டி கதை ஆறு அத்தியாங்களே கொண்டது..

படிச்சு பாத்துட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க...


என்னுள் மாயம் செய்தாயோ... 02
 

Author: Ashwathi
Article Title: என்னுள் மாயம் செய்தாயோ -1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN