நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 12

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிலா..., போட்டோ கேட்ட விவரத்தை அந்த போட்டோகிராபர் போனில் யாரிடமோ சொல்லி கொண்டு இருப்பதை... கதவருகில் நின்று கேட்டுக் கொண்டு இருந்தவள்.

நிலா..., "ஐய்யோ, இந்த ஆளு யார்க்கிட்ட என்னை மாட்டி விட்டானோ தெரியலையே!! ஒருவேளை நம்ம கருப்பட்டிக்கிட்டயே நம்ம போட்டோ கேட்டதை சொல்லி இருப்பாரோ., அப்படி இந்தாளு சொல்லி இருந்தா.?? அவர் வேற வந்து, நம்மளை இன்னும் கிராஸ் கொஸ்டின் கேட்பாரே., கடவுளே இந்த அத்தானுக்கு ஏன் தான் இம்பூட்டு அறிவை கொடுத்தீயோ என்று தன்னுள் புலம்பிக் கொண்டிருந்தாள். நிலா இருக்கும் ஃப்ளோரில், அவள் இருக்கும் அறையின் என்டரன்சில் அழுத்தமான காலடி சத்தம் கேட்டது. அதை வைத்தே ஐய்யோ இந்த அத்தான் தான் வர்றாரா..??, கடவுளே அவர் கேள்வி கேட்டா, இப்ப என்ன பதில் சொல்லுவேன். கடவுளே!! கடவுளே!! கடவுளே !!! என்று கண்ணை மூடி வேண்டிக் கொண்டு இருந்தவளின் முன்பு சொடுக்கிடும் சத்தம் கேட்டது, அதில் பயந்து இருந்தாலும், தன் பயத்தை வெளிக்காட்டக் கூடாது என்று எண்ணிக் கொண்டவள். ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண்ணை திறக்க விடாமல் பல சிந்தனை செய்ய தூண்டியது, கடுகு தான் எண்ணெயில் போட்டால் பொரியும். இந்த கருப்பட்டி என் அன்பால் கருப்பட்டி பாணி போல் உருகும் பார்த்தால். இது பெரிய ஆட்டோஃபாம் மாதிரி இல்ல இருக்குது, சரி என்ன நடந்தாலும் சமாளிப்போம் என்று கண்ணை திறக்கவும்"

எதிரில் கனீர் குரலில் என்ன மேடம் நின்று கொண்டே தூங்குறீங்களா..?? தூங்குறதா இருந்தா உங்களுக்கு கொடுத்த ரூம்ல தூங்க வேண்டியது தானே.??, இங்க என்ன செய்யிறீங்க..?? என்று கேட்கவும்.

நிலாவும்..., அவனை லிப்டில் வரும் போது பார்த்தது மறந்து போயிருந்ததால், அவனிடம் என்னை கேள்வி கேட்கிறதுக்கு நீங்க யாரு.??, என்று அவனிடமே கேள்வியை திருப்பவும், சிவா பற்களை கடித்து கோவத்தை வெளிப்படுத்தினான்.

போட்டோகிராபர் "மேடம் கொஞ்சம் மரியாதையா பேசுங்க, அவரையே எதிரித்து பேசுறீங்க. உங்களுக்கு எவ்வளவு தைரியம், எங்க ஸார்கிட்டேயே இப்படி பேசுறீங்க, அவர் யாருன்னு தெரியுமா.?? என்று கேட்டகவும்., சிவா தன்னுடைய வாயில் விரலை வைத்து அமைதியா இருடா என்றவன். தன் போன் வைப்ரேட்டாவதை எடுத்து, அவனிடம் காட்டினான். அதில் தெரிந்த நம்பரைப் பார்த்ததும், அவனும் அமைதியாகவே நின்றான்.

"ஒன்னுமில்லைடா சத்யா.." இங்க சும்மா பேசிட்டு இருந்தேன். அவனுக்கு ஏதோ சந்தேகமா அதான் அவனுக்கு தெளிவுப்படுத்திக் கொண்டு இருந்தேன் என்று விளக்கம் சொன்னாலும். எதிரில் நின்ற நிலாவைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான். அவளும் இவன் எதுக்கு நம்மளை இப்படி எரிக்கிற மாதிரி பார்க்கிறான் என்று அவனை மனதில் திட்டிக் கொண்டு இருந்தாள்.

போனில் சத்யன் என்னடா அந்த பொண்ணுக்கிட்ட என்ன பிரச்சனை என்றதும். சிவா தான் இருக்கும் இடத்தை சுற்றி ஒருமுறை பார்த்தவன். இவன் எங்க இருந்து இதை எல்லாம் பார்க்கிறான். எங்கேயும் ஒழிந்து இருக்கானோ. எப்படி இவ்வளவு கரைக்ட்டா சொல்லுறான், என்று யோசித்தவன் தங்கள் ஹோட்டல் முழுவதும் கேமரா வைத்திருப்பதை மறந்து விட்டான். இவனின் உலறல் தாங்க முடியாத சத்யன். டேய் உன் தலைக்கு மேலே பாருடா என்றதும்.

அந்தரத்தில் தொங்குகிறானா என்றவன், மேலே பார்த்தும் தன் தலையில் அடித்துக் கொண்டு, "ஐய்யோ இந்த கேமரா மறந்து போச்சே" என்று சத்யனிடமே புலம்பினான். அவனும் நீ அங்கயே வெயிட் பண்ணு நான் வரேன் என்று "நிலா.., சிவா" இருந்த இடத்திற்கு "சத்யன்" வந்து சேர்ந்தான்.

ஐய்யோ ஒருத்தனுக்கே பதில் சொல்ல முடியலை, இதில இரண்டு பேரும் என்னை கேள்விக்கேட்டா எப்படி சமாளிக்கிறது என்று யோசனையில் இருந்தாலும், அத்தானின் அருகாமை சுகமாக தான் இருக்கிறது, சரி சமாளிப்போம். உன்னால் முடியாத எதுவும் உண்டோ..., என்று தன் மனதை தைரியப்படுத்திக் கொண்டாள்.

இங்க என்னடா பண்ணணுற என்று சிவாவிடம் கேட்டாலும், பார்வை முழுக்க நிலாவிடம் இருந்தது. இவள் என்ன தான் பண்ணுறா.., என்று கேள்வியோடு அவளை பார்த்தான். அப்போது சிவா..., இங்கு என்ன பிரச்சனை எதற்காக இந்த சலசலப்பு என்ற காரணத்தை விளக்கமாக சத்யனிடம் கூறினான். அதன் பிறகு சத்யன் என்ன மிஸ் உங்களுக்கு எதுக்கு இந்த போட்டோஸ் என்று நேராகவே அவளிடம் கேட்கவும்.

நிலா..., ஐய்யோ இவர்கிட்ட இப்ப என்ன பதில் சொல்லுறது, என்று பலவழியில் யோசித்தும் அவளுக்கு விடைக் கிடைக்காமல். ஸார் நான் உங்கூட தனியா பேசலாமா என்று துணிந்து கேட்டு விட்டாள். அதற்கு சத்யன் பதில் சொல்லும் முன்பே...,

சிவா..., பொங்கி எழுந்து விட்டான். ஹலோ மேடம் உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.??, போட்டோ கேட்டீங்க. இப்ப தனியா பேசனும் சொல்லுறீங்க. உங்களுக்கு அவனை பற்றி என்ன தெரியும் அவன் எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் தெரியுமா.??? என்று கோவத்தோடே கேட்கவும்.

சத்யன்..., தவளைக்கு தன் வாய் தான் கேடு, அதே மாதிரி எனக்கு இவன் தான் வில்லன் போல, அவளே தனியா பேசனும் சொல்லுறா!! இவன் அதை கெடுத்துருவான் போலையே..., என்று ஆதங்கப்பட்டவன். சிவாவிடம் கைக்காட்டி அவனை அமைதி படுத்தியவன். என் கேபின்ல பேசலாம் வாங்க என நிலாவை தன்னுடன் அழைத்துச் சென்றான். சத்யனின் செயலால் போட்டோகிராபரும், சிவாவும் தான் ஷாக்காகி நின்றனர். ஏனென்றால் சத்யன் பெண்களிடம் அதிகம் பேசவே மாட்டான். அப்படியே பேச வேண்டியது இருந்தாலும், சிவா தான் கேன்டில் பண்ணுவான். அப்படி இருக்கும் போது , இன்று யாரென்றே தெரியாத பெண்ணிடம் பேச, தன்னுடைய பொன்னான நேரத்தை செலவழித்து பேச அழைத்துச் செல்லுகிறான்.

இவர்களுக்கு என்ன தெரியும் அவள் தான் இவனின் முழுநேரத்திற்கும் சொந்தக்காரி என்று..., சத்யனின் கேபினுக்குள் சென்றதும், சத்யன் நிலாவின் கைகளை பிடித்தவன். "ஸாரி" (நீங்க என்ன தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு இதுவரைக்கும் யாரையும் பார்த்து இப்படி டிஸ்டர்ப்பா இருந்ததே இல்லை..., ஆனால் உங்களை பார்த்த நாளில் இருந்தே உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷமாகவும், ஏதோ நெருங்கிய உறவு மாதிரி தோனுது இதெல்லாம் ஏன்னு எனக்கு தெரியலை..., உங்களுக்கு இதே மாதிரி எதுவும் தோனுதா... என்று கேட்டவன், பதிலுக்காக அவளின் முகத்தில் இருந்த இதழை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான். )

அவரோட கேபினுக்கு கூட்டிட்டு வந்து இப்படி கனவுலகத்தில் மிதக்கிறாரே, "ஐய்யோ இவருடைய பார்வையே சரியில்லையே என்று யோசித்தவள், அவனின் யோசனையை கலைப்பதற்காக அவனின் முகத்துக்கு நேராக கைகளை அசைக்கவும்,

அதில் தெளிவுற்ற "சத்யன்" "நிலா"வின் இயல்பு நிலையை பார்த்து ஐய்யோ நம்ம இவ்வளவு நேரம் கனுவுல தான் பேசிட்டு இருந்தோமா, நல்லவேளை இவக்கிட்ட எதுவும் உலறி வைக்காமா விட்டோம்.
"தேங் காட்" என்றதுடன். "ஸாரி ம்..ம்..மி.. மிஸ்..." என்று தடுமாறியவனிடம்.

"ஸார்" என் பெயர் நிலா.., இனி மிஸ், மிஸ்னு கூப்பிட்டு உயிரை வாங்காதீங்க, எனக்கு உங்க கல்யாணத்தில் செய்து இருந்த ஸ்டேஜ் டெக்கரேஷன், மண்டப டெக்கரேஷன் எல்லாமே ரொம்ப பிடிச்சி இருந்தது. அதான் அப்படியே உ... உங்க போட்டோவையும் சேர்த்து கேட்டேன். அதுக்கு தான் அவர் என்கிட்ட அவ்வளவு கேள்வி கேட்டார். "ப்ளீஸ் ஸார் எனக்கு போட்டோஸ் தர முடியுமா..??, என்று தான் கேட்க வேண்டிய எல்லாத்தையும் ஒரே முழுமூச்சில் கேட்டு விட்டு காத்திருந்தாள்.

சத்யனும்.., "ஓகே நிலா.., நீங்க கேட்டதை நான் உங்களுக்கு தரேன். ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு உங்களை பற்றிய முழுதகவல் வேனும். அதை நீங்க தர்றதா இருந்தா நானும்.. நீங்க கேட்டதை விட எக்ஸ்ட்ரா போட்டோஸ் கூட தருகிறேன் என்றான்.

நிலா..., இவர் நம்மளை பற்றிய டிடெயில்ஸ் எதுக்கு கேட்கிறார், ஒருவேளை அத்தான் நம்ம வாயாலே உண்மை தெரிஞ்சிக்க பார்க்கிறாங்களோ என்ற நினைத்தவள். "ஸார் ஒரு போட்டோ கேட்டால் , அதுக்கு பணம் வேனும்னா கேளுங்க..., அதை விட்டுட்டா என்னை பற்றிய விவரம் எதுக்கு கேட்குறீங்க. இதுக்கு நீங்க போட்டோ தர மாட்டனே சொல்லி இருக்கலாம்... எனிவே எனக்காக டைம் ஸ்பென்ட் ஒதுக்கியதுக்கு மிக்க நன்றி. "நான் வரேன் பை.." என்று அங்கிருந்து சென்று விட்டாள்.

சத்யன்..., ஹப்பாடி "பஞ்சுமுட்டாய்க்கு" என்னா கோவம் வருது., சின்னதா டிடெயில் கேட்டதுக்கே இவ்வளவு கோவப்படுறாளே. இந்த விஷயம் எல்லாத்தையும் நானே தெரிஞ்சுக்கிட்டா, அதுக்கு என்ன பண்ணுவாளோ தெரியலையே என்று எண்ணியவனுக்கு, நேற்று நடந்த பிரச்சனை நினைவு வரவும். சிவாவிடம் பெண்ணின் போட்டோவைக் கொடுத்து இவள் இப்ப எங்க இருக்கிறா, என்ன பண்ணுறா, எல்லா டிடெயிலும் எனக்கு வேனும். "கம் பாஸ்ட்" என்று சிவாவை அனுப்பி வைத்தவன். தன்னுடைய வேலையே கவனிக்க சென்றான்.

சிவாவும்..., சத்யன் கொடுத்த வேலையை சரியாக செய்து முடித்தான். அதே நேரம் இன்று தான் "நிலாவின் பெஸ்ட் ரேடியோ ஜாக்கியின் நிறைவு விழா..." அதனால் நிலாவும் இங்கு வந்து சென்ற பிறகு அவளும் அன்றைய பங்ஷனுக்காக ரொம்பவும் பிஸியாகி விட்டாள்.

எழில்..., மற்றும் நிலா அடுத்த நாள் மதியம் ஊருக்கு கிளம்புவதற்கு, டிரெயின் டிக்கெட் புக் பண்ணியிருந்ததால், கிளம்புவதற்கு முன்பு தங்களின் வீட்டில் இருப்பவர்களுக்காக சில பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றனர். அங்கு தன் "பாட்டிக்கு தேவையான வாக்கிங் ஸ்ட்டிக்," தாத்தாவுக்கு தேவையான "ஹெட் லைட்.." காலையில் வயலுக்கு செல்ல உதவியாக இருக்கும். "அம்மாவுக்கு அழகான புடவை", "அப்பாவுக்கு ஒரு வாட்ச்" இப்படி எல்லாருக்கும் ஒரு கிப்ட் வாங்கியவள். தன் அத்தை மாமாவுக்கும் ஒரு கிப்ட் வாங்கினாள். கையோடு சத்யனுக்கும் ஒரு கூலர்ஸ் வாங்கினாள். எல்லா பர்சேஸையும் முடித்தவர்கள். மதிய லன்ஜ் ஹோட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்து இருந்ததால். அவர்கள் ஒரு ஜீஸ் மட்டும் குடித்துக் கொண்டு கேப்பில் ஹோட்டல் வந்து சேர்ந்தனர்.

ஹோட்டலில் வாசலில் அலங்காரம் எல்லாம் பிரமாதமாக இருந்தது. அப்போது தான் நிலாவுக்காக மற்ற மாநில நண்பர்கள் காத்திருப்பது தெரியவும், இவள்
"ஜஸ்ட் டூ மினிட்ஸ்" என்று தன்னுடைய பொருட்களை எழிலின் உதவியோடு, தன்னுடைய ரூம்க்கு கொண்டு சென்றாள். சொன்னது போலவே இரண்டு நிமிடத்தில் சாப்பாடு நடைபெறும் இடத்திற்கு வந்தவள், எல்லாருடன் சேர்ந்து அன்றைய விருந்தில் கலந்துக் கொண்டாள். அன்றைய பகல் அழகாக முறையில் கடந்தது.

ஈவ்னிங்..., விழா ஆரம்பிக்க சிறிது நேரம் முன்பு வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் பாதாம் பால் கொடுக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த பெண்... (அதாங்க சத்யன் பாலோ பண்ணினானே அந்த பொண்ணு...) எல்லாருக்கும் எடுத்துக் கொடுத்தாள். அப்போது அங்கு நின்ற நிலாவும் கேரளாவை ரேடியோ ஜாக்கியும் மட்டும் தனியே நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். எழில் மற்ற ஆண்களுடன் சேர்ந்து டீரிங்ஸ் பார்ட்டியில் இருந்தான். ஆனால் குடிக்கவில்லை. ஜஸ்ட் ப்ரென்ட்ஸ் கூடவே நின்றான். அவனுக்கும் குடிக்கும் பழக்கம் இல்லை.

அந்த பெண்களிடம் பாதாம் பாலை எடுத்து கொடுக்கவும்..., அப்போது இருந்தே சிவா அந்த பொண்ணை மறைவாக இடத்தில் இருந்து கண்காணிக்க தொடங்கினான். அந்த பெண்ணும் இவர்களுக்கு கொடுத்தவுடன், அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள். என்னால் இப்ப தான் கொடுக்க முடிந்தது. பங்ஷனும் ஆரம்பித்து விட்டது என்றாள். சிவா அவள் போனில் எதையோ அனுப்புவதை பார்த்தவன். அவளை வேறு ஒரு பெண்ணிடம் சொல்லி ஒரு அறைக்கு வர வைத்து இருந்தான்.

அதே நேரம் வேறு ஒரு ஆணின் கண்களும் நிலாவை கண்கானித்தது.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top