நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 13

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிலாவும்..., அந்த கேரளா பெண்ணும் ரெஸ்ட் ரூம் செல்வதற்காக எழுந்து செல்லவும்..., அந்த பெண்ணின் பாய் ப்ரென்ட் “ஏய் எங்கடீ" போற, என்றான். அவளும் "டேய் ஏன்டா மானத்தை இப்படி வாங்குற.??, எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு தான் செய்யனுமா.., “போ டா இடியட்” என்றவள். தன் தலையை பிடித்துக் கொண்டே, அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.

அவளுடன் சேர்ந்து இருந்த நிலாவுக்கும் தலை சுற்றவும்.., அவளும் மயக்கத்திற்கு செல்ல ஆரம்பிக்கவும்..., அவர்களை தொடர்ந்து காண்கானிக்க சிவா வேலுவை வரச் சொல்லி இருந்தான். வேலுவை நிறைய நபர்களுக்கு தெரியாததால், அவன் பொது மக்களை போல அந்த பெண்களை தொடர்ந்து செல்லவும். அவர்கள் பெண்களுக்கான ஓய்வறைக்குள் நுழையவும், முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு ஆண் உருவம் பெண்களை நெருங்கியது.

அந்த ஆண் உருவம் அறைக்குள் நுழையும் போதே வேலு..., சிவாவுக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இருந்தான். அந்த ஆணின் உருவத்திற்கு பின்பே இன்னொரு ஆணும் உள்ளே நுழையவும். வேலுவுக்கு பயம் வந்து விட்டது. அண்ணா எங்க இருக்கீங்க சீக்கிரம் வாங்க என்று சிவாவை அழைக்கவும். அவனும் தனக்கு வந்த தகவலை சத்யனுக்கு தெரியப்படுத்தி கொண்டு இருந்தான்.

சத்யன் தன்னுடைய பணபலத்தால் அங்குள்ள போலீஸ் ஆபிஸருக்கு தகவல் தெரிவித்தான். அதை விசாரிக்க ரஞ்சனே வந்து சேர்ந்தான். அங்கு சிவா தந்த தகவலின் படி அந்த ஆண்களை பிடித்தவன். நேராக சத்யனுக்கு தகவலை அனுப்பி விட்டு தன்னுடைய ஸ்டேஷனுக்கு சென்று விட்டான்.

சத்யனின் முன்னேற்பாட்டின் படி இரண்டு பெண் மருத்துவர்கள் நிலாவுக்கும், அந்த கேரளா பெண்ணுக்கும் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். சத்யனும் "நிலாவின் ரேடியோ ஜாக்கி நிறைவு விழா பங்ஷனுக்கு கெஸ்ட்டாக அழைத்து இருந்ததால். அவளை அப்போது சென்று பார்க்காமல் பங்ஷன் நடக்கும் இடத்திற்கு சென்றான். நிலாவும்... அந்த பெண்ணும் ஆரம்பத்திலே சிகிச்சை அளிக்கப்பட்டதால் எளிதில் மயக்கம் தெளிந்தனர். பங்ஷனில் "நிலாவுக்கு தான் பெஸ்ட் ரேடியோ ஜாக்கி அவார்ட்" என்பதால், அவளும் ப்ரெஷாகி பங்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்தாள்.

சிவா..., நிலாவுக்கு மயக்க மருந்து கொடுத்த பெண்ணையும், ரஞ்சனிடம் ஒப்படைத்து விட்டு சத்யன் இருக்கும் இடத்திற்கு சென்றான். அங்கு சத்யனிடம் ஸ்டேஷனில் நடக்கும் விசாரணை பற்றியும் சொல்லி இருந்தான். அதே நேரத்தில் நிலாவும் பங்ஷனுக்கு கிளம்பி வருவதைப் பார்த்தவன், அவளின் அழகில் மயங்கி தான் போனான். ஆனாலும் அவளின் முகத்தில் களைப்பு அதிகமாகவே தெரிந்தது. அவனின் கோவம் முழுவதும் யாரை கடத்த வந்திருப்பார்கள். கடத்தல் செய்தவர்கள் யார் என்ற குழப்பத்தில் இருந்தனர். பங்ஷனில் சத்யனின் பார்வை முழுவதும் நிலாவின் மீதே இருந்தது. அப்போது தான் அந்த பெஸ்ட் அவார்ட்டும் அறிவிக்கப்பட்டது.

அப்போது நிலா..., தன்னுடைய ஸ்ட்ரென்த் எல்லாத்தையும் சேர்த்து கஷ்டப்பட்டு ஸ்டேஜை நோக்கி சென்றாள். ஆனாலும் அவளால் நல்ல தெளிவாக நடக்க முடியவில்லை. தட்டுதடுமாறி ஸ்டேஜ்க்கு வந்தடைந்தவள். சத்யனின் கையால் அவார்ட் வாங்கவும், மிகவும் சந்தோஷப்பட்டாள். சத்யனும், நிலாவுக்கு பெஸ்ட் ஜாக்கி அவார்ட் கிடைப்பதில் உள்ளுக்குள் மிகுந்த சந்தோஷம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவளிடம் பரிசை கொடுத்துவிட்டு, கைகலுக்குவதற்காக கையை நீட்டினான்.

அவளும் தயங்கியப்படியே கையை நீட்டினாள். அவளும் அந்த நேரத்தில் மேடை நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தால், அவனுடன் கையை குலுக்கினாள். அப்போது இருவரின் உடலிலும் ஒரு புதுவிதமான பரவசம் பரவியது, அதை முதலில் உணர்ந்த நிலா அவசரமாக கையை உருவவும்., அவளின் விரலோடு சத்யனின் விரல் இறுக்கி பிணைந்தது, அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளின் பயம் இப்போதைய உடல்நிலையால் உடனே மயக்கமடைய செய்யவும். அவளை தன் கைகளிலே தாங்கி பிடித்தான் சத்யன். நிலாவின் மயக்கத்தை பார்த்தவுடன் அங்கிருந்த அனைவரும் பதறினர்.

எழிலும் பயந்து மேடையை நோக்கி ஓடினான். அவனுக்கு இதுக்கு முன்னாடி நடந்த கடத்தல் சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என்பதால், அவளின் ஓய்வில்லா அலைச்சலினால் ஏற்பட்ட மயக்கம் என்றே கருதினான் “எழில்." ஆனாலும் அவனுக்குள்ளும் ஒரு பதற்றம் இருந்துக் கொண்டே இருந்தது. அதனால் நிலா மயங்கி கீழே விழுந்து விடுவாளோ என்ற பயத்தில் அவளுக்கு அருகில் ஓடி வந்தான். ஆனால் அதுக்கு முன்னவே அவளை தன் கைகளால் தாங்கி பிடித்த சத்யன். விழாவின் நிறைவு பகுதி வந்ததால் சத்யன் அங்கிருந்த பெண் உதவியாளரை அழைத்து நிலாவை ரூம்க்கு கூட்டிச் செல்ல சொன்னவன்.

சிவாவை அந்த மயக்க மருந்து கொடுத்த பெண்ணையும், அவளை மிரட்டிய ஆளையும் சேர்த்து விசாரிக்க அனுப்பி இருந்ததால், இப்போதைக்கு சத்யன் எழிலிடம், லேடி டாக்டரின் நம்பரை கொடுத்து நிலாவை செக் செய்ய சொல்லி அனுப்பி வைத்தான். சத்யன் விழாவில் கலந்துக்கொண்டு இருந்தாலும் நினைவு எல்லாம் நிலாவின் மீது தான் இருந்தது. அதனால் விழா நடத்துபவரிடம் எதேதோ காரணங்களை சொல்லி விரைவில் முடிக்க வைத்தவன். அன்று தன்னுடைய செலவிலே எல்லாருக்கும் டின்னர் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு, நிலாவை காண வேகமாக சென்றான். நிலாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அப்போது தான் வெளியே வந்தார். அவரிடம் எழில் கேட்டறியும் முன்பே, அவனை முந்திக்கொண்டு சத்யன் டாக்டரிடம் நிலாவை பற்றி விசாரிப்பது எழிலுக்கு இவர் ஏன் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்று சந்தேகத்தோடு சேர்ந்து கோவமும் வந்தது. இப்ப நிலாவின் உடல்நிலை மட்டுமே முக்கியம் என்பதால் கோவத்தை விட்டு, டாக்டர் சொல்லுவதை கவனிக்க ஆரம்பித்தான். டாக்டர், “மிஸ்டர் எஸ். ஆர். பி ”இந்த பேஷன்ட்டுக்கு கொடுத்து இருக்கிற மயக்க மருந்து ஸ்லோவாதான் வேலை செய்யும், அதாவது முதல்ல கொஞ்சம் வேகமாக செயல் பட்டாலும், சிறிது நேரம் கழித்து அது கொஞ்சம் தெளிவு கொடுக்கும், அப்புறம் மீண்டும் மயக்கத்தை ஏற்படுத்தும், மீண்டும் தெளிவு கொடுக்கும்..., இறுதியில் ஒரு மணி நேரம் கழித்து மட்டுமே ஆழ்ந்த மயக்கத்திற்கு மனிதனை இழுத்து செல்லும், இது பொதுவா விலங்குகளுக்கு பயன்படுத்துவது , இவுங்களுக்கு ஏன் கொடுத்தாங்க, என்ன? ஏதுன்னு?? விசாரிங்க..., அப்புறம் அவுங்களுக்கு எனிமீஸ் யாரும் இருக்காங்களா கொஞ்சம் பாருங்க, அவுங்க யார் மூலமாவது கூட இந்த மருந்தை இவுங்களுக்கு கொடுத்து, விட்டு அதுக்கு பிறகு எதுவும் செய்ய முடிவு எடுத்து இருப்பாங்க. சத்யனுக்கு, டாக்டரின் பதில் மேலும் சந்தேகத்தை வலுக்க செய்தது, அவனின் கோவம் எல்லாம் அந்த பெண்ணின் மீது திரும்பவும், எழில் நீங்க இங்கயே இருங்க, எனக்கு ஒரு அர்ஜென்ட் வொர்க் போயிட்டு வந்துருவேன் என்றவன் எழிலின் பதிலுக்கு காத்திருக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்.

சத்யன் அதன்பிறகு நேரே சென்ற இடம் சிவா இருந்த அறை தான். அங்கு சத்யன் உள்ளே நுழையவும் உள்ளே இருந்த ஆண் பாஸ் நான் சொன்னேன் நீங்க கேட்டிங்களா..? இப்படி நம்ம இவுங்ககிட்ட மாட்டிக்கிட்டோமே என்று புலம்பினான். சத்யனுக்கு ஒரே குழப்பம். என்னடா இவன் நம்மளை பாஸ் சொல்லுறான். அப்புறம் இவன் கூட சேர்ந்து நம்ம என்ன பண்ணினோம், என்று யோசித்தவனுக்கு அவனிடமிருந்து உண்மையை கண்டுபிடிக்க வேற என்ன வழி என்று யோசித்தவன், சிவாவின் காதில் எதையோ மெதுவாக கூறினான். சிவாவும் என்ன நடக்குது என்பது புரியாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தான். அதன் பிறகும் சத்யனின் முகம் யோசனையோடு இருந்தான்.

சத்யன் சிவா எப்படியும் தன் வேலையை முடித்து விடுவான் என்ற நம்பிக்கையில், அங்கிருந்து நிலாவை கவனிக்க சென்றான். நிலாவும் அப்பதான் மயக்கம் தெளிந்து நல்ல தெளிவுடன் இருந்தாள்.

நிலாவுக்கு..., சத்யனின் வரவு கோவமாக இருந்தாலும், இப்ப எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தவள், முகத்தை மட்டும் சோகமாக வைத்து கொண்டு நான் நாளை காலை ஊருக்கு கிளம்பனும், என்னை டிஸ்ஜார்ஜ் பண்ண சொல்லுங்க என்றாள். இவளின் பேச்சு எதையும் காதில் வாங்காமல், அவளின் உடல்நலனின் மட்டுமே அக்கறையாக இருந்தவன், நிலாவின் பக்கத்தில் இருந்த கேரளா பெண்ணின் நலனையும் விசாரித்து விட்டு, மீண்டும் டாக்டரை சந்திக்க எழிலையையும் தன்னுடன் வம்படியாக இழுத்து சென்றான்.


எழிலும்..., ஸார் என்னை எதுக்கு கூட்டிட்டு போறீங்க??? நான் உங்ககூட வந்து என்ன செய்ய போறேன். நீங்களே போயிட்டு வாங்களேன் என்று அறிவுறுத்தவும், சத்யனும் தன்னுடைய நிலையை விளக்கும் விதமாக, ப்ரோ நீங்க எங்கூட வந்தா தான், டாக்டர் என்ன சொல்லுறாங்க என்பதை நீங்களும் தெரிஞ்சிக்கலாம். நான் மட்டும் கேட்டுட்டு வந்து சொன்னா நிச்சயமா, உங்க ப்ரென்ட் என்னை நம்ப மாட்டாங்க, போதுமா விளக்கம், இப்பவாவது எங்கூட வாரீங்களா, என்றவன். டாக்டரின் அறையை நோக்கி நடக்கலானான்.


டாக்டரும்..., சத்யனை பார்த்ததும்.., வாங்க "மிஸ்டர். எஸ் ஆர் பி" உட்காருங்க என்றதும், சத்யன் தன்னுடன் வந்த எழிலையும் பக்கத்திலிருந்த இருக்கையில் உட்கார செய்தவன், அவனை பற்றி டாக்டரிம் சொல்லி விட்டு, டாக்டர் மிஸ் நிலாவின் ஹெல்த் இப்ப எப்படி இருக்கு..., அவுங்க நார்மலாகிட்டாங்களா.., அவுங்க இப்பவே ஊருக்கு போகனும்னு ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறாங்க என்று அவளின் பிடிவாதத்தை பற்றி சொல்லவும். "டாக்டர்" என்ன மிஸ்டர் விளையாடுறீங்களா, இங்க யாரு டாக்டர், எனக்கு பேஷன்ட்டோட ஹெல்த் ரொம்ப முக்கியம். அவுங்களுக்கு கொடுத்து இருக்கிற மருந்து கொஞ்சம் டோஸ் கூடினாலும், அவுங்க கோமா ஸ்டேஜ்க்கு போயிருப்பாங்க. அதிலிருந்து அவுங்களை காப்பாற்றினதே பெரிய விஷயம், அப்படியிருக்கும் போது இவுங்க எப்படி டிஸ்ஜார்ஜ் பற்றி பேசலாம் என சத்யனிடம் கோவமாக பேசியவர், பக்கத்திலிருந்த எழிலையும் ஒரு கோவப் பார்வை பார்த்தவர், இந்த தம்பிக்காக வேனும்னா இன்னைக்கு ஒரு நாள் மட்டுமாவது ஹாஸ்ப்பிட்டல் இருக்க வைச்சி தான் அனுப்புவேன். அதுக்கு பிறகு உங்க வீட்டில் வைச்சி பார்த்தாலும் சரி வேற ஹாஸ்பிட்டலில் வைச்சி பார்த்தாலும் சரி அது உங்க விருப்பம் என்ற சொல்லி முடித்தவர். நீங்க கிளம்பலாம் என்று சொல்லாமல் சொல்லுவது போல, சிஸ்டர் நெக்ஸ்ட் அனுப்புங்க என்றவர். சத்யனை பார்க்காமல் தன்னுடைய கையிலிருந்து புத்தகத்தில் தலையை புகுந்துக் கொண்டார்.

சத்யனும் வேற எதுவும் பேசாமல் எழிலின் முகத்தை பார்த்து வா கிளம்பலாம் என்று கண்களால் ஜாடை செய்தவன், வெளிய வந்ததும் என்ன செய்வீயோ எனக்கு தெரியாது இன்னைக்கு ஒரு நாள் நீ சமாளிச்சிக்கோ, நாளைக்கு காலையிலே நான் வரேன். இல்லைனா வண்டி அனுப்பி வைக்கிறேன். வீட்டுக்கு வந்து சேருங்க என்று, அங்கிருந்து கிளம்பி சென்றான்.

எழிலும்..., இவர் சொல்லிட்டு போயிட்டாரு உள்ளே போய், அந்த பிசாசை எப்படி சமாளிக்க போறமோ, என்ற பயத்தில் தனக்கு தெரிந்த எல்லா தெய்வங்களின் பெயரை சொல்லி நிலாவிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு வேண்டுதல் வைத்து விட்டு, சற்று துணிச்சலோடு உள்ளே நுழைந்தும் விட்டான்.

அங்கு நிலா எழிலுக்காக காத்திருந்தவள், அவன் உள்ளே வரவும், எப்ப நம்ம ஊருக்கு போகலாம் என்று முதல் கேள்வியை கேட்டு வைக்கவும், அப்போதைய நிலமையை சமாளிக்கும் விதமாக நாளை காலையில் கிளம்பி விடலாம் என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தியவன். அவளுக்கு உணவை கொடுத்து, மருத்துகளையும் எடுத்துக் கொடுத்து அவள் உறங்கியதும், தனக்கென்று ஒரு சேரை தேர்ந்தெடுந்து உட்கார்ந்தவன், மொபைலில் முழ்கி போனான்.

நிலாவை பார்த்து விட்டு எழிலிடம் சொல்லி சென்றவன், நேராக சென்றது சிவாவிடம் பேச தான். ஆனால் சிவா வேலை முடித்துவிட்டு போன் செய்கிறேன் என்று சொல்லி சென்றதால், அவனின் அழைப்புக்கு காத்திருந்தான்.

அங்கு சிவாவோ..., சத்யன் கொடுத்த வேலையை துல்லியமாக செய்து கொண்டு இருந்தான். அவனுக்கு சத்யன் கொடுத்த வேலை அந்த கடத்தல்காரனை மாற்றி அழைத்து வந்ததாகவும், ஆள் மாறி போய் விட்டது என்று ரஞ்சனால் வெளியே அனுப்பி வைக்கபட்டவனை, பின் தொடர்ந்து சென்று அவன் யாரை சந்திக்கிறான். என்ன பேசுகிறான் என்று அறிந்து கொண்டு விவரம் தெரிவிப்பது. சிவாவும் அந்த வேலையை சரியாக செய்துக் கொண்டு இருந்தவன். அந்த கடத்தல்காரன் யாராடனோ போனில் பேசுவதை கவனித்தவன். எதிர்முனையில் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாததால், அவனை மேலும் தொடர்ந்து சென்றான். அது ஒரு பழமையான வீடாக இருந்தது. அங்கு மற்றவர்கள் கண்களில் படாமல் ஒளிந்து நின்று பார்த்தவன். அந்த கடத்தல்காரன் சந்தித்த நபரை பார்த்தவுடன் ஷாக்காகி நின்றான்.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top