நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 15

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிலாவின் தோளில் ஆதரவாக ஒரு பெண்ணின் கைப் படவும், மெதுவாக தன்னுடைய பேச்சின் சத்தத்தை குறைத்து திரும்பி பார்த்தாள். அங்கு தன்னுடைய அத்தை பிரபா, (அதாங்க சத்யனோட அம்மா தான் நிலாவின் அத்தை) நிற்பதை பார்க்கவும், சாந்த சொரூபியாகவே மாறி விட்டாள். அவளின் அமைதியை பார்த்து தனக்குள்ளே சத்யனும் சிரித்துக் கொண்டான்.

பிரபா...," என்னமா ரொம்ப கோவமா இருக்கீயா..???, உன் நிலைமை என்னனு எனக்கு புரியுதுமா, ஆனாலும் ஹெல்த்தும் ரொம்ப முக்கியமில்லையா, உனக்கு நடந்த எல்லாத்தையும் சத்யா நேற்று நைட்டு சொன்னான். நானும் உடனே உன்னை பார்க்கனும், அவனை நச்சரிச்சேன். அப்பதான் டாக்டர் நைட் உன்னை நல்லா தூங்க சொல்லி இருக்காங்க..., அப்படி தூங்கினா சீக்கிரமே அந்த மயக்கம் தெளிவாகிரும் சொல்லி இருந்ததால, உன்னை தொந்தரவு பண்ணலை." ஆனால் விடியிற வரைக்கும் உன்னை பார்க்காம ரொம்ப கஷ்டப்பட்டேன்.

சத்யா எழுந்ததும் முதல் வேலையா அவனை பிடிச்சி இழுத்துட்டு இங்க வந்தேன். "நீ என்னனா அவனுக்கு செம டோஸ் கொடுக்கிற..." அவன் பாவம்மா உனக்கு ஹெல்த் சரியில்லை என்றதும், நேற்று நைட் முழுக்க தூங்கவில்லை. நம்ம ஹோட்டலில் இப்படி நடந்துட்டே என்று ஒரே புலம்பல். அந்த பொண்ணுங்களுக்கு எதாவது ஒரு கெட்டது நடந்தாலும், நம்ம அந்த பெண்ணுங்க குடும்பத்துக்கு என்ன பதில் சொல்ல முடியும். இனியும் இப்படி எந்த சம்பவமும் நடக்க கூடாது மா, அதுக்கான வழியை நாளைக்கே செய்யனும் என்று முடிவும் எடுத்ததைப் பற்றியும் நிலாவுக்கு கூறினாள் "பிரபா".

நிலா..., "அதானே பார்த்தேன் இந்த கருப்பட்டி அத்தான், எப்படி நமக்கு மட்டும் நல்லது நினைக்க போகுது." நம்ம தான் கற்பனை குதிரை ஓட விட்டுடோம். இவர் நமக்கு நல்லது செய்யிறதாவது. அப்படியே "மாமா மாதிரி குடும்பத்தை விட தொழில் தான் முக்கியம் இருக்கிறார்". எங்க நேற்று எதாவது நடந்து இருந்தா..., தன்னுடைய தொழில் சாம்ராஜியமே கவுந்துரும் பயந்து தூங்காம இருந்து இருப்பார். இதுக்காகவே இவர்கிட்ட இருந்து தள்ளியே இருக்கனும்... இதுவரை நடந்தது போகட்டும், இனி நான் கவனமா இருக்குனும் என்று தனக்குள்ளே சபதம் எடுத்துக் கொண்டாள். இவள் இப்படி மனதிற்குள் பேசிக் கொண்டே இருக்க.."

அங்கு சத்யனுக்கோ ஆச்சரியம் நம்ம "அம்மா இவ்வளவு தெளிவா பேசுறாங்க. அதுவும் அக்கறையா வேற பேசுறாங்க." அப்படினா "இவுங்க இரண்டு பேருக்கும் அவ்வளவு அன்டரஸ்டன்டிங்கா...", என்று ஆச்சரியப்பட்டான். இந்த நிலாவைப் பற்றி முழு விவரமும் தெரிஞ்சிக்கனுமே, என்ன செய்யலாம். எப்படியாவது இந்த எழிலை காக்கா பிடிக்க வேண்டியது தான் என்று அவன் ஒரு கனவுலகில் இருந்தான்.

பிரபா..., இருவரையும் பார்த்துவிட்டு என்னம்மா "இரண்டு பேரும் அப்படியே பகல் கனவு காணப்போயிட்டீங்க போலையே...," இங்க இந்த அம்மா நிற்கிறது இரண்டு பேருக்கும் கண்ணு தெரியுதா.?? என்ன என்று இருவரையும் ஒரே நேரத்தில் தோளைத் தொட்டு உலுக்கினாள். இருவரும் சுய உணர்வுக்கு வரவும்..., நிலா நம்ம இப்ப நம்ம வீட்டுக்கு போகலாமா ???

நிலா..., "அத்தை என்றதும்..." சத்யன் அவளை திரும்பி பார்த்தவன். கண்களால் என்ன சொன்ன என்று கேட்டான். அவனின் கேள்வி பிரபாவுக்கும் புரிந்ததால், ஏன்டா "நீ வேற அவளை சும்மா வம்பிழுத்துட்டே இருப்பீயா..." அவ ஆன்டி தான் கூப்பிட்டா நான் தான் அத்தைனு கூப்பிட சொல்லி மாற்றி இருக்கிறேன். "நீ கேள்வி கேட்டே, அவளை மாத்திருவ போல போ... டா.." போய் காரை ஸ்டார்ட் பண்ணு, என்று அவனை அனுப்பி வைக்கவும்..., எழில் அங்கு வந்து சேர்ந்தான்.

எழில்..., "ஏய் நிலா, நீ எப்ப எழுந்த உன்னை யாரு, இங்கெல்லாம் வர சொன்னது என்று, அக்கறையுடன் கேட்டவன். அருகில் நின்ற பிரபாவை கவனிக்கவில்லை. பிரபா.., "தம்பி உங்க ப்ரென்டை பத்திரமா தான் கூட்டிட்டு வந்தேன்" நீங்க கவலைப்படாதீங்க
அப்புறம் தம்பி மற்ற எல்லா விவரமும் சத்யன் சொல்லுவான் அவன்கிட்ட கேட்டுக்கோங்க.., கார் பார்க்கிங்கில் தான் இருப்பான். நீங்க போய் அவனை பாருங்க நான் நிலாவை கூட்டிட்டு வரேன் என்று எழிலையும் அனுப்ப முயற்சித்தாள். ஆனால் "எழில் இல்லமா...," எல்லாம் "ஸாரே பார்த்துப்பாங்க," நான் மெடிக்கல் போய்ட்டு என்ன பார்மாலிட்டிஸ் கேட்டு முடிச்சிட்டு வரேன். நீங்க நிலா கூடவே போங்கமா என்று அவர்களை விட்டு விலக ப்ளான் போட்டான். ஏன்னா சத்யன் வீட்டுக்கு போற விஷயம் தெரிஞ்சா இந்த நிலாவை சமாளிக்கிறது, அவ்வளவு கஷ்டம் அதான் பையன் நழுவப் பார்க்கிறான்.

பிரபா..., தம்பி அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம் எல்லாத்தையும் சத்யன் முடித்து விட்டான். இப்ப நம்ம காரில் மட்டும் தான் ஏறனும். அப்புறம் உங்க திங்ஸ் பற்றி பேச தான் சத்யனை பார்க்க சொன்னேன். இதுக்கு மேல உங்க விருப்பம் என்று சொல்லவும்.

எழில்.., "ஐய்யோ அம்மா நான் உங்க பையன் மாதிரி மா..," நான் என்ன செய்யனும் கட்டளையிடுங்கள், அதை உடனே நிறைவேற்றி வைக்கிறேன். அத விட்டுட்டு என் விருப்பம், இங்க எதுக்கு வரப் போகுது, நிலாவை நீங்களே பார்த்துக்கோங்க. நான் போய் "ஸாரை பார்க்கிறேன்" என்று பிரபாவின் நிழலில் தஞ்சம் புகுந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு, அங்கிருந்து நேராக சத்யனை காண சென்றான்.

கார் பார்க்கில் சத்யன் கார் கதவில் சாய்ந்து விசிலடித்த வண்ணம், கையில் கார் கீயை சுற்றிக் கொண்டு இருந்தான். அவனின் மகிழ்ச்சி, முகத்திலே அப்பட்டமாக தெரிந்தது. இதையெல்லாம் பார்த்த எழில், இவருக்கு என்ன கவலை நான் தான் அந்த பிசாசை எப்படி சமாளிக்க போறேனோ கவலை, ஆனால் இவருக்கு என்ன வந்தது என்று யோசித்துக் கொண்டே அவனுக்கு அருகில் வந்தான்.

சத்யன்..., தன் பக்கத்தில் எதோ ஒரு அசைவு தெரியவும் திரும்பி பார்த்தவன். அங்கு எழில் நிற்பதை பார்த்து "ஹாய் எழில்.., "குட்மார்னிங் மேன்" என்று சொல்லவும், எழில் அவனுக்கு பதில் சொல்லாமல் கவலையாக நின்றான். சத்யன் அவனின் காதுக்கு அருகில் எழில் என்று கத்தவும். அவனும் "ஐய்யோ ப்ரோ, ஏன் இப்படி பண்ணுறீங்க". நானே என்ன நடக்கப் போகுதோனு கவலையில் இருக்கேன். சத்யன் எதுவும் விபரிதமா நடக்காமல், நான் உங்களை காப்பாற்றுகிறேன். ஆனால் பதிலுக்கு நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனுமே??? செய்வீங்களா என கேள்வியோடு அவனை பார்த்தான்",

எழில்..., "ஸார் நான் ரொம்ப ஏழை ஸார் என்னால உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் அதுவும்..., இந்த சூழ்நிலையில் என்னால சுத்தமா முடியாது, கையில் ஒரு பைசா இல்லை.., எடுத்த டிக்கெட் கேன்ஷல் செய்தால். அடுத்து டிக்கெட் எடுக்கவே நிலா தான் உதவனும். அப்படியிருக்கும் போது நான் உங்களுக்கு என்று தயங்கவும்.

சத்யன்..., "ஹலோ ப்ரதர் ஸ்டாப், திஸ் நான சென்ஷஸ்." நான் என்ன சொல்ல வரேனு தெரிஞ்சிக்காமலே, நீங்களாவே எதாவது யோசிச்சி பேசாதீங்க., ஆமாம் "அது என்ன உதவினு கேட்டவுடனே, பண உதவி மட்டும் தான் யோசிப்பீங்களா.., என்ன தான் உலகமோ" என்றவன். பின்பக்கமாக நிலாவை, பிரபா அழைத்து வருவதைப் பார்த்தவுடன், "சத்யன்.., எழிலிடம் ப்ரோ, நிலா வந்துட்டா.

நம்ம அப்புறமா இதைப் பற்றி பேசலாம். இப்ப நீங்க அமைதியா இருந்தாவே போதும் என்றதும். இருவரும் அமைதியாக இருந்தனர். சத்யன் காரில் ஏறி உட்காரவும். எழில், நிலாவுக்காக கார் கதவை திறந்து விட்டுட்டு, பிரபாவுடன் சேர்ந்து நிலா உட்காருவதற்கு உதவி செய்தவன். சத்யனின் அருகில் சென்று அமைதியாக உட்கார்ந்தான்.

எல்லாரும் காரில் ஏறி உட்கார்ந்தவுடன் கார் சீறிப் பாய்ந்தது. அது செல்லும் வேகத்தில் பிரபா "டேய் சத்யா..., நம்ம என்னவோ பிக்னிக் போற மாதிரி வேகமாக போறே.." நிலாவை பாரு பயந்து போய் உட்கார்ந்து இருக்கா..., நிலாவின் முகத்தை கண்ணாடி வழியே பார்த்தவன். காரை மறுநொடியே ஸ்லோ செய்தான். அதன் பிறகு கார் மாப்பிள்ளை ஊர்வலம் செல்லவது போல மெதுவாக சென்றது.

நிலாவின் மனநிலை எல்லாம் என்னடா கார் ஹோட்டலை தான்டி வேற எங்கையோ போகுது என்று யோசித்துக் கொண்டு இருந்தவள். காரின் வேகத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. கார் எங்கு செல்கிறது என்று பக்கத்திலிருக்கும் பிரபாவிடம் கேட்க முடியாமல் உட்கார்ந்து இருந்தவள். காரின் முன் பக்கமாக ஏதேச்சையாக பார்க்கவும், கண்ணாடியில் சத்யனும் அவளை பார்த்து புருவத்தை தூக்கி என்ன என்று கேட்கவும்., இவள் அவனை பார்ப்பதை தவிர்த்து தலை கவிழ்ந்துக் கொண்டாள்.

கார்..., அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு பெரிய பங்களாவின் முன் நின்றது. அத்தை என்று அவளுக்கே கேட்காத சத்ததில் கூப்பிடவும், பிரபா அசையாமல் இருந்தாள். ஆனால் சத்யன் அம்மா உங்களை தான் கூப்பிடுறாங்க.., கவனிக்கலையா என்றதும், எழிலுக்கும் பிரபாவுக்கும் ஆச்சரியம் நமக்கு கேட்காத குரல் இவனுக்கு எப்படி கேட்டு இருக்கும் என்று யோசித்தனர். நிலா இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அத்தை நம்ம இப்ப எங்க வந்து இருக்கோம். நாங்க ஹோட்டலுக்கு போகனும். அங்க எல்லாம் பேக் பண்ணினா தான் ஈவ்னிங் டிரெயினை பிடிக்க முடியும் என்று சொன்னவளை பார்த்து சத்யனும், பிரபாவும் சிரித்தனர்.

எழிலுக்கு தான் உயிர் பயம் வந்தது. "ஐய்யோ நம்ம நிலமை இன்னைக்கு அரோகரா தான் என்றவனை நிலாவின் பக்கம் இருக்கும் கதவை திறந்து, அவள் இறங்க உதவி செய்ய சொன்னான் சத்யன். பிரபாவும் "அம்மாடி எல்லாத்தையும் உள்ளே போய் பேசலாம்." நான் இருக்கும் போது "நீ ஏன் இப்படி பயப்படுகிறே வா மா.." என்று அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றாள்.

சத்யன் வாசலில் நின்ற வேலையாள் ஒருவரிடம் மற்ற பொருட்களை எடுத்துச் செல்ல சொன்னவன். பிரபாவிடம் அம்மா நான் எழில் கூட கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துரேன். நீங்க உங்க மருமகளை கவனிச்சிக்கோங்க என்றவன் கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான். கார் ஸ்டார் ஆன அடுத்த நிமிடம் எழில் வேக வேகமாக காரில் ஏறியவன். உள்ளே உட்கார்ந்து கார் காம்பவுன்ட்டை தாண்டவும் தான் நிம்மதியாக மூச்சை விட்டான்.

இருவரும் காரில் ஹோட்டலுக்கு வந்தனர். அங்கு நேராக அவர்களின் அறைக்கு சென்று பொருட்களை பேக் செய்தவர்கள். சத்யனின் ஹெஸ்ட் ரூம்க்கு வந்து, அங்கு எழிலை உட்கார சொன்னவன். ரிலாக்ஸ் எழில் நம்ம வீட்டுக்கு போறதுக்கு முன்னாடியே அம்மா உன் ப்ரென்ட்டை சமாதானம் செஞ்சிருவாங்க. அதனால நீங்க கவலைப்படாம ஃபீரியா இருங்க என்றவன். தனக்கான சாய்வு சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருவருக்கும் ப்ரஷ் ப்ரூட் ஜீஸ் கொண்டு வரச் சொல்லி விட்டு, "எழில் என்று அழைத்தவன், நம்ம இப்ப அக்ரீமென்ட் விஷயத்துக்கு வருவோமா..."

எழில் அக்ரீமென்ட் என்றதும் ஷாக்காகி சத்யனை பார்த்தான். சத்யன் அதுக்கு சிரித்தக் கொண்டே "என்ன ப்ரோ..., எந்த விஷயமானாலும் அக்ரீமென்ட் படி நடந்துக்கனும் என்றான். அப்போது அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top