நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 16

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சத்யன்..., அக்ரீமென்ட் பற்றி பேசவும் எழில் மனதிற்குள் "ச்ச" இவர் பக்கா பிஸினஸ்மேன் அப்படியிங்கிறதை மறந்தே போயிட்டேன். எனக்கு யோசிக்கிற மூளையே இல்லைனு நிலா சொல்லுறது சரியா போச்சி..., இவர்கிட்ட நம்ம அக்ரீமென்ட்ங்கிற பெயர்ல மாட்டிட்டு முழுக்க போறோமோ தெரியலையே என்று யோசித்தவாறு நின்றவனை சத்யன் அழைத்தான்.

எழில்..., "இந்த வரேன் ப்ரோ" என்று சத்யனுக்கு அருகில் வந்து நின்றவனை, உட்காருங்க எழில் ஏன் இப்படி நின்னுட்டே இருக்கீங்க...!! நம்ம பேச வேண்டியது நிறைய இருக்கு என்றதும். எழில் எல்லாமே உங்களால தான், நான் இப்படி புலம்பிட்டு இருக்கிறேன் என்று மனதிற்குள் நினைத்தவன், ஒன்னுமில்லை ப்ரோ என்று வெளியில் சொல்லிக் கொண்டு அவனுக்கு அருகில் உட்கார்ந்தான்.

சத்யன்..., சிறிது நேரம் யோசித்து விட்டு, எழிலிடம் "ப்ரோ நான் இதுவரைக்கும் யாரிடமும் இப்படி என் குடும்பம் பற்றி பேசியது இல்லை. ஆனால் இப்ப என் அம்மாவின் மாற்றங்களை வைத்தே, நான் இதைப் பற்றி கேட்கிறேன் என்றாலும் என்னுடைய சுயநலமும் இருக்கு ப்ரோ.." என்றவன், உணர்ச்சியின் பிடியில் பேச தொடங்கினான்.

சத்யன் தன்னுடைய சிறுவயது முதல் நடந்த அனைத்து விஷயத்தையும், வெளிநாட்டில் தான் சந்தித்த தோழி மற்றும் தொழில், அங்கு பிரபாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை எல்லாவற்றையும் சொன்னவன். அதன் பிறகு இன்று வரை என் அம்மா என்னை தவிர யாருடன் இப்படி ஒன்றியதே கிடையாது. ஏன் என் அப்பாவிடம் கூட ஒரு கோவம் இருந்துக் கொண்டே தான் இருந்தது. என் அம்மாவை குடும்பத்தை விட்டு பிரித்தது. தனிமையான வாழ்க்கை, அவுங்களுடைய இழப்பு எல்லாம் சேர்ந்து அவுங்க மூளை யோசிக்கிற திறனையே இழந்துட்டு..., அன்றையில் இருந்து இன்று வரை அம்மா வீட்டை விட்டு வெளியுலகம் பார்த்து கூட இல்லை. ஒருமுறை வெளியே வந்ததால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் என் கல்யாணம் வரை வந்தது கடைசியில் யார் செய்த புண்ணியமே அது அப்படியே நின்று விட்டது. நல்லவேளை இல்லையென்றால் என் பஞ்சுமுட்டாய்க்கு நான் என்ன பதில் சொல்லுவேன் என்று தன் கதையை சொன்னவன். இறுதியில் "நான் ஏன் இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லுறேன்னா, இப்ப கொஞ்ச நாளா, அதாவது என் கல்யாணம் நடக்க இருந்த அன்றைக்கு தான் "என் அம்மா முதல் முறையா "மிஸ். நிலாவை" பார்த்து இருக்காங்க..., அன்றையிலிருந்து அம்மாக்குள்ள நிறைய மாற்றம். அம்மா இப்பெல்லாம் எவ்வளவோ மாறிட்டாங்க, ரொம்ப தெளிவா பேசுறாங்க, என்னை எப்பவும் விட அதிக அக்கறையா கவனிச்சிக்கிறாங்க, அதோட நிலாக்கு எதாவது ஒன்னுனா துடிச்சி போயிறாங்க. அவுங்க இரண்டு பேருக்கும் என்ன அப்படியொரு புரிதல்னு எனக்கு தெரிஞ்சே ஆகனும். அதுக்கு நீங்க தான் உதவி செய்யனும் செய்வீங்களா என்று கேட்கும் போது எழிலில் கரத்தை தன் கைக்குள் அடக்கி பிடித்துக் கொண்டு கெஞ்சி கேட்பது போல கேட்டான்.

எழிலுக்கே..., பரிதாபமாக இருந்தது. "என்ன ப்ரோ இப்படி சொல்லிட்டீங்க, உங்களுக்கு என்னால முடிஞ்ச என்ன உதவினாலும் செய்றேன்." இப்ப "என்ன செய்யனும் மட்டும் சொல்லுங்க.." என்றான்.

சத்யனும் இது தான் சந்தர்ப்பம் என்று, அது வந்து "ப்ரோ... நீ... நீ..., நி.. நிலா பற்றிய விவரம் வேனும். நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க அம்மா ஹெல்த்துக்காக மட்டும் தான். மற்றபடி வேற எந்த எண்ணமும் இல்லை என்று நொடிக்கு ஒரு முறை சொல்லிக் கொண்டே இருந்தான்.

எழிலும்..., "என்ன ப்ரோ இவ்வளவு தானா இதுக்கு இப்படி தயங்குறீங்க." நிலா பற்றிய விவரம் சொல்லுறேன். அதுக்கு முன்னாடி அவ அம்மா, அப்பா, தம்பி கூட எடுத்த போட்டோ பாருங்க என்றவன், தன்னுடைய மொபைலை காட்டினான். அதை பார்த்தவன் கரன்ட் ஷாக்கடித்தது போல கண்ணை சிமிட்டாமல் மொபைலை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தனர் சிவாவும், வேலுவும்..., சத்யனின் இந்த ரியாக்ஷன் எதுக்கு என்று தெரியாததால் சிவாவும் முதலில் அமைதியாக தனக்கு ஒரு இடம் தேடி உட்கார்ந்து கொண்டவன். பக்கத்தில் நின்ற வேலுவை பார்த்து என்னடா இப்ப ரொம்ப மரியாதை தர்ற மாதிரி நடிக்காத..., உன் மரியாதை எல்லாம் எந்தளவுக்கு நேற்றே பார்த்தேன் என்று, சத்யனை அழைத்து நேற்றைய விவரம் சொல்லுவதற்காக..., சத்யனும் சிவா ஒரு ஐந்து நிமிடம், நான் எழில் கூட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன். அதை முடிச்சிட்டு உன்கிட்ட நேற்றைய விவரம் கேட்கிறேன் என்றவன். எழிலை அழைத்து கொண்டு தனியாக சென்று விட்டான்.

இங்கு சிவாவுக்கும் வேலுவுக்கும் பயங்கர வாக்குவாதம். வேலுவின் மீது கோவத்தில் இருக்கும் சிவாவை மேலும் கோவத்தை தூண்டும் விதமாக அவனின் பேச்சும் இருந்தது. பொறுத்து பார்த்தவன் என்னடா போனு போகுதுன்னு பார்த்தா ரொம்ப பண்ணுற..., நேற்றே உனக்கு நாலு அறை வைச்சி இருக்கனும். ஒரு இடத்துக்கு வர்றவன் வண்டியை செக் பண்ணி எடுத்துட்டு வராம வந்துட்டு..., எனக்கு பின்னாடியே பாட்டு வேற பாடுறீயாக்கும். அதுவும் என்ன பாட்டு பாடுன.

வேலு..., சிவா கோவத்தில் பேசுகிறான் என்று தெரியாமல் , அண்ணே அதுக்குள்ளவா அந்த பாட்டை மறந்துட்டீங்க. சரி மறந்தாலும் பரவாயில்லை. இப்ப நான் பாடி காட்டுறேன் என்று மீண்டும் அந்த பாடலை பாடிக் காட்டினான்.

"போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
அட கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப என்னால மனக்கணக்கு
அட கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப என்னால மனக்கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
ம்…… ம்……. ம்……..
எப்படி இருக்குனே நம்ம பாட்டு,

உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா திரும்பவும் அந்த பாட்டை பாடுவ., உன்னை என்றவன். வேலுவை தன் கையில் பிடித்து வைத்து, பல நாள் கோவத்தை தீர்த்து கொள்வது போல கும்மி எடுத்தான். அவனின் அருகில் வந்து யாரும் அவர்களை தடுக்கவில்லை. இப்படி பல நேரங்களில் வேலுவின் விளையாட்டு அவனுக்கே வெடியாகி போகிறது. அதன் பிறகு அடி வாங்கியவன். அண்ணே நான் ரொம்ப நல்லவனே..., ஏன்னா நீ எவ்வளவு அடிச்சாலும் நான் தாங்குவேன் என்று வடிவேலு டயலாக்கை பேச முயற்சி செய்து மேலும் இரண்டு அடிகளை போனஸாக பெற்று கொண்டவன். அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக சென்று மறைந்துக் கொண்டான்.

சத்யனும் இவர்களின் பாசமிகு விளையாட்டில் கவனமில்லாமல் எழிலின் பேச்சில் மட்டுமே முழு கவனமாக இருக்கவும். எழிலும் நிலாவைப் பற்றி தனக்கு தெரிந்த எல்லா விவரத்தையும் சத்யனிடம் சொல்லி முடித்தான். சத்யனுக்கு ஒரே சந்தோஷம் நீதான் என் பஞ்சுமுட்டாய், உன்னை பார்க்கும் போதே எனக்குள் ஒரு உணர்வுகள் தோன்றி மறைந்தது. எங்கு நம்ம பஞ்சுக்கு துரோகம் பண்ணிருவேனோனு ஒரு பயத்துல ஒதுங்கியே இருந்துட்டேன். இப்ப எல்லா டவுட்டும் கிளீயராகிட்டு "ஸோ நம்ம ரூட் பக்கா "ஐ ஜாலி" என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு சத்யன் ஜாலி மூடில் இருக்க.

சிவா மற்றும் வேலுவின் செல்ல சண்டை சிறிது நேரத்தில் முடிவுற்றது. சிவா நேற்று அலைச்சலில் சோர்ந்து போனவன். இன்றாவது சத்யனிடம் விஷயத்தை சொல்லலாம் என்று காலையிலே அவனை பார்க்க வந்தான். ஆனால் அவன் தனக்கு முக்கியத்துவம் தராமல் யார் என்று தெரியாத ஒருத்தனுக்கு நேரத்தை செலவழிக்கிறானே என்று சத்யனின் மீது சிவாவின் கோவம் திரும்பியது.

அந்த நேரத்தில் எழிலிடம் போதிய விவரம் கேட்டு பெற்றுக் கொண்ட சத்யன்..., வா எழில் என்று அவனிடம் உரிமையோடு பேசியவன். மீதியை வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம் என்று தன்னுடைய கையிலும் ஒரு லக்கேஜை தூக்கினான். அதுவும் அவனுக்கே தெரியாமல் அது நிலாவின் லக்கேஜாக இருந்தது. சத்யனும் எழிலும்..., சிவா இருக்கும் இடம் வந்தவர்கள். சத்யன் வா சிவா வீட்டுக்கு போகலாம் என்றதும்.

சிவா..., சத்யனை கோவமாக முறைத்து பார்த்தான். அதை புரிந்து கொண்ட சத்யன் டேய் நான் இப்ப ரொம்ப ஹேப்பி மூடில் இருக்கேன். நீ கோவத்தை காட்டுறதா இருந்தாலும், உன் வீரத்தை காட்டுறதா இருந்தாலும் வீட்டுக்கு வந்து காட்டு அங்கு உனக்கு ஒரு சஸ்பென்ஸ் காத்திட்டு இருக்கு என்று சொன்னதோடு இல்லாமல் கையை பிடித்து தன்னுடன் இழுத்துக் கொண்டு சென்றான்.

முவரின் பயணமும் வீட்டை நோக்கி இருந்தது.

விக்ரமின் பயணம் சத்யனின் ஹோட்டலை நோக்கி இருந்தது
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top