நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 18

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சத்யனிடம்..., நேற்று நடந்த விஷயம் எல்லாவற்றையும் சொல்லி முடித்தவன். தன் எனர்ஜீயை ஏற்றிக் கொள்ள பக்கத்தில் இருந்த தண்ணீரை ஒரே மூச்சாக குடித்து முடித்தான். சத்யனுக்கு முதலிலே ஒரு யோசனையாக இருந்தது. தான் நினைப்பது போல இவன் அவனாகவும் இருக்கலாம். அதனால் தான் தன்னை போலவே இருக்கிறான் என்று தன்னுள் மட்டும் யோசித்தவன், சிவாவிடம் இதைப் பற்றி பகிர்ந்து கொள்ளாமல், சரிடா நானே இதைப் பார்த்துக்கிறேன்..., உன்னால முடிஞ்சா ஒரு ஹெல்ப் பண்ணு அவனுடைய மொபைல் நம்பர் மட்டும் கிடைக்குமா பாரு மற்ற எல்லா பிரச்சனைகளை நானே பார்த்துக்கிறேன். எனக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிற, ரொம்ப தேங்க்ஸ்டா என்றான்.

சிவாவுக்கு..., சத்யனின் தேங்க்ஸ் கோவத்தை தூண்டியது. அதை நேரடியாக அவனிடம் கேட்கவும் செய்து விட்டான். டேய் உன் தேங்க்ஸ்காகவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன். கடைசியில் எனக்கு நன்றினு ஒரு வார்த்தையை சொல்லி நான் மூன்றாவது மனுஷன் போல என்னை தள்ளி நிறுத்திட்ட என்று அவனை தள்ளி விட்டுட்டு வெளியே செல்ல முயன்றான்.

சத்யனும்..., வேண்டுமென்றே நன்றி சொல்லாவிடினும், சிவா பட்ட கஷ்டத்தை புரிந்து கொண்டதால், உணர்ச்சி வேகத்தில் நன்றி கூறிவிட்டான். அதை அவனுக்கு புரிய வைக்கும் நோக்கத்துடன், அவனை பிடித்து நிறுத்தியவன். டேய் நான் தான் ஏதோ அவசரத்துல உளறிட்டா, நீயும் இதான் சமயம்னு என்னை விட்டு ஓடிரலாம் நினைச்சியா..., நான் நீ எனக்காக பட்ட கஷ்டத்தை நினைச்சி தான் அப்படி சொல்லிட்டேன் டா..., "தப்பா எடுத்துக்காத," நான் உனக்கு கொடுத்த வேலையை செய் என்றவன். "வா டா இப்பவாவது போய் சாப்பிடலாம்." சாப்பாடு இன்னைக்கு ரொம்ப ருசியா இருந்தது. அதை சாப்பிடவிடாம பண்ணிட்டியே டா..., நீ ரொம்ப நல்லா இருப்படா.."

சிவா..., நான் நல்லா இருக்கிறது எல்லாம் இருக்கட்டும். "ஸார் இப்ப எல்லாம் பிஸினஸ் தவிர, வேற எதையோ ரொம்ப தீவிரமா யோசிக்கிற மாதிரி இருக்கு...", என்ன விஷயம் டா, உன் பார்வையே சரியில்லை, பக்கத்தில் யார் இருக்கிறார் என்று எல்லாம் பார்க்காம, அந்த பொண்ணையே ரொம்ப ரசிக்கிற..., என்னடா நான் வேனும்னா அம்மாகிட்ட பேசவா..., உனக்கு காதல் வந்துட்டு என்று சொல்லவா..., என்று கேட்டவனை ஆச்சரியமாக பார்த்தான் சத்யன். "என்னடா இப்படி முழிக்கிற நீ டெல்லி வந்த புதுசுல இருந்தே உங்கூட இருக்கிறேன். உன்னை பற்றி எனக்கு தெரியாதா..., உன் கண்ணிலே உன் கவனம் எங்க இருக்கு என்று எல்லாமே எனக்கு தெரியும். ஆனால் இன்றைக்கு உன் பார்வையில் ஒரே தடுமாற்றம் இருந்தது. எங்க போனாலும் அவளை தேடுது உன் கண்கள் என்று சத்யனின் மனதை அப்படியே படம் பிடித்தது போல சொல்லி விட்டான்.

சத்யனும்..., இதுக்கு மேல் மறைத்தால் சரி வராது என்று நிலா பற்றிய விவரம் அதாவது தன்னுடைய சொந்த அத்தை மகள் என்பதை மறைத்து, அவளை பிடித்து இருப்பதை மட்டுமே கூறினான். எங்கே இவனிடம் உண்மையை சொன்னால் இவன் அம்மா, இல்லைனா அப்பாவிடம் எந்த சூழ்நிலையிலாவது உளறி விடுவான் என்ற பயத்தில் தனக்கும் நிலாவுக்குமான உறவுமுறையை மறைத்தான். அதே நேரம் அவளும் தன்னை விரும்ப வைத்து இருவருக்குள்ளும் முழுக்க முழுக்க காதல் வந்த பிறகே திருமணம் பற்றி வீட்டில் பேசனும், அதுவரை நீ யாரிடமும் இதைப் பற்றி சொல்லாதே..., "ப்ளீஸ் டா" என்று கெஞ்சினான்.

சிவா..., சரி டா, உன் லெவலுக்கு இப்படியெல்லாம் கெஞ்சிறது உனக்கு செட்டாகவே இல்லை, நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு சந்தோஷம் தான், ரொம்ப லேட் பண்ணாம சீக்கிரம் சொல்லிருடா..., என்று சத்யனிடம் சொல்லி விட்டு, நீ போய் சாப்பிடு டா, நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். நேற்றைய டயர்ட்டு என்னை விட்டு இன்னும் போகலைடா.
"ஸோ நானா எழும்புற வரைக்கும் என்னை யாரும் எழுப்ப வேண்டாம் என்று மாடியிலிருந்த ஹெஸ்ட் ரூமுக்குள் கதவை அடைத்து படுத்து விட்டான்.

சத்யனும்..., "இனி நமக்கு தொந்தரவு தர மாட்டான்" என்ற நிம்மதியில் கீழே இறங்கி வந்தான். அங்கு நிலா பூஜைக்கு வேண்டிய பொருட்களை தட்டில் அடுக்கி கொண்டு இருந்தாள். சத்யனும் "ஐய்யோ அம்மா ஏன் இப்படி என் ப்ளானை சொதப்புறாங்க" என்ற யோசனையில் வந்தவன். அவள் செய்யும் வேலையை கண்டுக்கொள்ளாமல், அம்மா எனக்கு ரொம்ப பசிக்குது மா..., சீக்கிரம் சாப்பாடு தாங்க. இன்னைக்கு தான் சாப்பாட்டை ருசிச்சி சாப்பிட்டேன். அதையும் இந்த சிவா கெடுத்துட்டான். இப்பவாவது சாப்பாடு தாங்கம்மா. நானும் சீக்கிரம் ஆபிஸ் போகனும்.., என்றான்.

பிரபா..., சத்யா உனக்கு சாப்பாடு நிலா எடுத்து தரச் சொல்லுறேன் பா. இன்னைக்கு கோவில்ல நிலா பெயர்ல பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருந்தேன். நீ வேற ஆபிஸ் போகனும் சொல்லுற..., நான் வேனும்னா எழில் தம்பியை துணைக்கு கூப்பிட்டுக்கவா..., நிலாவுக்கு இன்னும் கொஞ்சம் உடம்பு சரியா வரலை, அதனால அவள் வீட்டில் ரெஸ்ட் எடுக்கட்டும். உனக்கு எதுவும் வேனும்னா அவளை கேளுடா செய்து தருவா.."

சத்யன்..., அம்மா அதை நீங்களே கூப்பிட்டு சொல்லிருங்க..., நான் எதாவது கேட்டு அவுங்க என்னை தப்பா எடுத்துக்க கூடாது இல்ல.., பிரபா என்னடா சத்யா நேரம் காலம் தெரியாம பேசிட்டு இருக்க, பூஜைக்கு வேற நேரமாகுது..., சத்யன் "அம்மா ப்ளீஸ் மா" என்று சொல்லவும், பிரபாவும் "சரி டா நீ இப்படியெல்லாம் பண்ண மாட்டியே..., வர வர சரியேயில்லை., போனா போகுது.., உன்னையும் பார்க்க பாவமா இருக்கு என்று நிலாவை அழைத்தாள்...,

நிலா..., பிரபாவின் குரல் கேட்கவும், வெளியே வந்தவள், "என்ன அத்தை எதுவும் செய்யனுமா...," சொல்லுங்க என்றவளின் பார்வை டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த சத்யனை பார்த்ததும் மிரண்டது, ஆனால் அதை வெளியே தெரியாத மாதிரி தன் முகபாவனை மாற்றி இருந்தாள்.

பிரபா..., "அம்மாடி நீ எனக்கு இந்த சின்ன உதவியை மட்டும் செய். நான் கோவிலுக்கு போக நேரமாயிட்டு, ஆனால் இவன் இப்பவே சாப்பாடு தாங்க என்று நச்சரிக்கிறான். இவனுக்கு இருக்கிற கெட்ட பழக்கம், அவன் எப்ப சாப்பிட்டாலும் சாப்பாடு சூடா இருக்கனும், இது நான் இவனை சின்ன வயசில் இருந்தே இப்படி கெடுத்து வைச்சிருக்கேன்..., அவனும் சூடா இல்லைனா சாப்பிடாமலே போவானே தவிர ஆறியதை ஒரு நாளும் சாப்பிட மாட்டான். அதனால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவனுக்கு டிபன் செய்து கொடுத்துருவீயா என்றாள்.

நிலாவும்..., பிரபாவின் பேச்சை தட்டாமல் "சரி அத்தை இதுக்காகவா இவ்வளவு தயங்குறீங்க...," நீங்க கோவிலுக்கு கிளம்புங்க. நான் பார்த்துக்கிறேன் என்று, வாசல் வரை சென்று இருவரையும் வழியனுப்பி விட்டு உள்ளே நுழைந்தவள் நேராக சென்றது கிச்சனுக்குள் தான்.

சத்யனும்..., அவள் பின்னாலேயே கிச்சனுக்குள் சென்றான். அவள் இட்லி குக்கரில் இருந்த இட்லியை சூடு செய்வதற்காக அடுப்பில் எடுத்து வைக்கவும், ஒன்றும் சொல்லாமல் பொறுமையாக இருந்தவன். அவளை கண்டுக்கொள்ளாமல், ஹாலுக்கு வந்து டிவியை ஆன் செய்து விட்டு ஷோபாவில் அமர்ந்து விட்டான்.

ஐந்து நிமிடம் கழித்து கிச்சனில் இருந்து வெளியே வந்தவள். டைனிங் டேபிளின் அருகில் நின்றுக் கொண்டு "சாப்பாடு எடுத்து வைக்கவா" என்று "எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டாள்." அவளின் செயலில் சத்யனுக்கு சிரிப்பு வந்தது இருந்தாலும், அவள் தன்னிடம் நேராக வந்து சொல்லாத வரைக்கும் அவளுக்கு பதில் சொல்லக் கூடாது என்று இருந்தவன். தன்னுடைய முழு கவனத்தையும் டிவியில் செலுத்தினான்.

நிலாவின்..., பாடுதான் பெரிதாக இருந்தது. இந்த அத்தானுக்கு ரொம்ப கொழுப்பு கூடிப்போச்சி. அதான் நம்மளை இந்த கொடுமை செய்கிறார் இருக்கட்டும் அப்புறம் இதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சி இவரை கவனிச்சிக்கலாம் என்று நினைத்தவள். மெதுவாக நகர்ந்து அவனுக்கு காது கேட்கும் தூரத்தில் நின்று "சாப்பிட எடுத்து வைக்க வா...," என்றாள் இந்த முறை அவன் பதிலுக்காக அவனின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவன் எந்த வித பதிலும் சொல்லாமல் இருந்தான். நிலா அதுக்கு மேல் பொறுமையில்லாமல் மனசுக்குள் திட்டுவதாக நினைத்து கொண்டு "யோவ் கருப்பட்டி உனக்கு எவ்வளவு தீமிர், நானும் போனா போகுதுன்னு பார்த்தா, நீ என்னையே இந்த பாடுபடுத்துற..." இருடா அத்தான் உனக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன் என்றவளின் பேச்சு முடியவும்.

சத்யன் அவளின் அருகில் வந்து நெருங்கி நின்றான். அதுவும் சும்மா இல்லாமல் அவளை அங்கே இங்கே அசையாதவாரு இருபக்கமும் தன் கைகளால் அணைப்போட்டவாரு நின்று இருந்தான். நிலாவுக்கு உடல் முழுவதும் ஜில்லிட்டது. முகத்தில் வியர்வை துளிகள் ஆங்காங்கே தென்படவும் ஆரம்பித்தது. சத்யன் அவளை பார்த்து இதழின் ஒருத்தில் புன்னகையை படர விட்டான். அவளுக்கு அந்த சிரிப்பு மேலும் பயத்தை உருவாக்கியது.

நிலாவின்..., பேச்சு தந்தியடிக்க ஆரம்பித்தது. "ச.. ச..சா...சா..ப்பாடு என்று இழுக்கவும், சத்யன் சாப்பாடு எல்லாம் இருக்கட்டும் என்ன சொன்ன, அதுவும் எப்படியெல்லாம் பேசின, என்றவன். அவளின் இதழை தன் விரலால் பட்டும் படாமலும் தடவியவன். "யாரு அந்த கருப்பட்டி". அப்புறம் என்ன சொன்ன "அத்தானா..." அது யாருமா பகலிலேயே கனவா, அதுவும் நின்னுட்டே..., உன்னை மாதிரி யாரையும் பார்த்து இல்லை என்றவனின் கை அவளின் இடையின் அருகே செல்லவும்..., நிலா அவனின் விரல் படக்கூடாது என்று மேலும் சுவரோடு ஒட்டினாள். அவனும் விடாது இன்னும் நெருங்கினான். அவள் தன் காலின் பெருவிரலை மட்டும் தரையில் ஊன்றி மேலும் பின்பக்கமாக நகர்ந்தாள். அட என்னம்மா இன்னும் எவ்வளவு தான் போவே என்றவன். அவளின் காலின் அடிப்பகுதியில் தன் கால் விரலால் கிச்சுகிச்சுக் காட்டவும், அவளின் காலில் கூச்சம் ஏற்பட்டதும், சட்டென காலை தரையில் ஊன்றியவளின் காலுக்கு அடியில் தன் கால்களை சரியாக வைக்கவும், அவளுக்கு பேலன்ஸ் தடுமாறி அவனின் கழுத்தில் மாலையாக தன் கைகளை கோர்த்தவள். பேலன்ஸ்காக அவனின் சட்டையின் காலர் பகுதியை இறுகப் பற்றினாள்.

சத்யன்..., இப்போது அவளுக்கும் அவனுக்கும் இடையில் காற்று புகாதவாறு நின்றவனின். சத்யனின் மூச்சிக்காற்று அவளை பல சித்திரவதைக்கு ஆளாக்கியது அவளின் உடல் மேலும் குளிர்ந்து நடுங்க ஆரம்பித்தது. முகத்தில் தோன்றிய வியர்வை நெற்றியின் நடுவே வழிந்து மூக்கின் வழியாக இதழை வந்தடைந்தது. அதை துடைக்கும் எண்ணத்தில் தன் விரலை கொண்டு சென்றவன். அதை விடுத்து அவளின் இடையில் சொருகி இருந்த தாவணியை உருவினான். இடையருகே அவனின் கை வரவும், அவளின் இதயத்துடிப்பு பல மடங்கு அதிகரித்தது, அது அவனுக்கே கேட்கவும் செய்தது. கை எங்கே செல்கிறது என்று குனிந்து பார்க்க கூட தைரியமில்லாதவளா நின்று இருந்தாள். ஒரு ஆணின் நெருக்கம் பெண்ணை மெளனமாக மாற்றி விடுகிறது. அதுவும் மனதுக்கு பிடித்த ஆணாக இருந்தாள். அவளின் அத்தனை உணர்வுகளையும், முகமே படம் போட்டு காட்டி விடுகிறது. சத்யனுக்கும் அவளின் உணர்வை தூண்டிப் பார்க்க மிகவும் ஆசை அதனால் தான் அவளை சீண்டிக் கொண்டே இருந்தான். இறுதியில் தாவணியில் கை வைக்கவும். தன் உடலை பயத்தில் எக்க செய்தாள். அதாவது அவள் உடம்பை தன்னுள் சுருக்கி கொள்ளவும், தாவணி எந்த இடஞ்சலும் இல்லாமல் ஃபீரியா அவனின் கைக்கு கிடைத்து விட்டது. ஆனால் தாவணி இருந்த இடத்தில் இப்போது வெற்றிடை மட்டுமே சத்யனின் கண்ணுக்கு காட்சியளித்து. அதை ரசித்தவனின் கண்கள் மேலும் முன்னேறவும், மூஞ்சை பிடித்து வைத்து இருந்ததால், வயிறும் உடலோடு ஒட்டிப் போய் இருப்பது சத்யனின் கண்ணுக்கு, போனஸாக காட்சியளித்தது. அதை பார்த்தவனின் மூளை தடுமாற்றம் அடையும் முன்பே தன் தலைகோதி தடுமாற்றத்தை சரி செய்தவன். அவளின் தாவணி முந்தியை தூக்கி அவளின் முகத்தில் இருந்த வியர்வையை துடைத்தான். அவளும் நிம்மதியாக மூச்சை விடவும். அவளே எதிர்ப்பார்க்காத சமயத்தில் அவளின் பாவடையைப் இழுத்துப் பிடித்தவன், தாவணியை தன் கையாலேயே மீண்டும் அதே இடத்தில் சொருகி விட்டான்.

நிலா..., சத்யனின் செயலில் அதிர்ச்சியாகி நின்றாள். அவனின் செய்கை அதாவது எந்த ஆணின் ஸ்பரிசமும் தீண்டாத உடல் என்பதால் அவனின் ஸ்பரிஸமும், தன் ஆசை அத்தான் என்ற எண்ணத்தில் அவனின் உணர்வுகளை உடலால் உணர்ந்தவள். அவனை இறுகிக் கட்டிக் கொண்டாள். மறுநிமிடமே என்ன நினைத்தாளே சட்டென பிரிந்து கிச்சனுக்குள் நுழைந்து விட்டாள்.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top