நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 20

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விக்ரம்..., சத்யன் இல்லாத நேரம் பார்த்து அவனது ஹோட்டலுக்குள் நுழைந்து இருந்தான். ஹோட்டல் ஊழியர்கள் எல்லாரும் அவனை சத்யன் என்றே கருதினார்கள். விக்ரமுக்கு சத்யனின் ரூம்க்கு செல்லும் வழி தெரியாததால், அங்கிருந்த சர்வீஸ் பையன் ஒருவனை அழைத்து என் ரூம் கிளீனா இருக்கா பார்த்துட்டு வா என்று அனுப்பி வைத்தான். அவனும் முதலாளியின் பேச்சை எதிர்த்து பேசாமல் சொன்ன வேலையை செய்வதற்காக, சத்யனின் ரூமை நோக்கி நடந்தான். இவனும் தன் மொபைலை நோண்டிக் கொண்டே அவனின் பின்னால் யாருமறியாத வண்ணம் ரூமின் வாசலுக்கு வந்து சேர்ந்தான். தீடிரென அந்த சர்வீஸ் பாய் திரும்பி பார்க்கவும், விக்ரம் வாசலில் இருப்பதை பார்த்தவன். "ஜஸ்ட் டூ மினிட்ஸ் ரெடி பண்ணிட்டு, கூப்பிடுறேன் ப்ளீஸ் வெயிட் ஸார்" என்றவன் சத்யனின் ரூம்க்குள் நுழைந்து கிளீனிங் வேலையை தொடர்ந்தான்.

விக்ரம்..., மொபைலை பார்த்த படியே தனக்குள் சிரித்துக் கொண்டான். என்னடா சத்யா உன் வேலைக்காரங்க வர்றது யார்னு கண்டுபிடிக்கிற அளவுக்கு சரியா இல்லை போலையே, இவுங்களை நம்பி இவன் இவ்வளவு பெரிய ஹோட்டலை விட்டுட்டு போயிருக்கான். இவனுங்க இத்தனை நாட்களா தன் முதலாளியுடன் இருந்தும். முதலாளிக்கும் அவனை போல இருக்கும் இன்னொருத்தனுக்கும் கொஞ்சம் கூடவா வித்தியாசம் தெரியாம இருப்பாங்க.

சர்வீஸ் பாய்..., "ஸார் கிளீனிங் வேலை எல்லாம் முடிந்தது. நான் கிளம்புறேன் என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். "விக்ரமும், சத்யனின் கேபினுக்குள் சென்றவன்" அறை முழுவதும் சுற்றிப் பார்த்து, தன் கண்களாலேயே ரூமை ஸ்கேன் செய்தான். அப்போது அங்கிருந்து ஒரு இரும்பு லாக்கர் விக்ரமின் கண்ணில் பட்டு, அதை திறக்க சொல்லி உறுத்தியதும், உடனே அதன் அருகில் சென்று, அதை திறக்க முயற்சி செய்தான். அது பாஸ்வேர்ட் என்று கேட்டது. விக்ரம் தனக்கு தெரிந்த நம்பர்களை எல்லாம் அழுத்தினான். அது இன் கரைக்ட் என்றே அவனுக்கு காட்டியது. ஆனால் அதனுடைய பாஸ்வேர்ட் சத்யனின் விரல் ரேகை அது தெரியாமல் மாற்றி மாற்றி அழுத்தினான்.

விக்ரமுக்கே தெரியாதது. அந்த லாக்கரை யார் தொட்டாலும், அதன் பாதுகாப்புக்காக, அவனின் மொபைலில் அலார்ட் டோன் செட் செய்து வைத்து இருந்தான். அதனால் விக்ரம் ஒவ்வொரு முறை திறக்க முயற்சிக்கவும், அந்த அலர்ட் டோன் மெஸேஜ் மாறி மாறி சத்யனுக்கு வந்தது. அதை வைத்தே அங்கு நிலவரம் சரியில்லை என்று தோன்றவும். அவசரமாக யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், அங்கிருந்து வேகமாக வெளியேறி இருந்தான்.

சத்யனின் வேகத்தையும், அவசரத்தையும் பார்த்து எல்லாருக்கும் குழப்பமாகவே இருந்தது. அந்த நேரத்தில் அவனை வழிமறித்து யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. எதுவாக இருந்தாலும் வந்து சொல்லுவான் என்று அமைதியாக இருந்தனர்.

விக்ரம்..., அந்த லாக்கரை ஓபன் செய்வதற்காக அழுத்தவும், அது ஓபனாக மாட்டேன் என்று போராட்டமே நடத்தியது, அவனின் ஒவ்வொரு முயற்சியும் சத்யனுக்கு தெரியவும். அவனும் இதைப் பற்றி ஹோட்டலில் உள்ள வேறு யாருக்கும் சொன்னாள். ஆபத்து எதுவும் ஏற்படுமோ என்ற பயத்தில் அவனே நேரடியாக செயல்பட ஆரம்பித்தான்.

சத்யன்..., காரில் கிளம்பிய வேகத்தில் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ஹோட்டல் கார் பார்க்கிங்கில் கார் "க்..க்ரீச்" என்ற சத்தத்துடன் வந்து நின்றது. சத்யனின் அறையில் இருந்த மானிட்டரில் கேமரா மூலம் சத்யன் கார் பார்கிங்கில் இருப்பதை காட்டவும், விக்ரம் "ஐய்யோ இவன் வேற வந்துட்டானே" இவனுக்கு இவ்வளவு மூளையா, இவனுடைய அறிவுக்கு தான் தொழில் இப்படி முன்னேறி இருக்கிறான் என்று நினைத்தவன். இன்னும் கொஞ்ச நேரம் நம்ம இங்க இருந்தால் மாட்டிக் கொள்வோமே என்ற பயத்தில் அவசரமாக ரூமில் இருந்து வெளியே வந்தவன். லிப்டின் வழியே ரிஷப்ஷனுக்கு இருக்கும் தரை தளத்துக்கு செல்லும் பட்டனை அழுத்தினான். அதே நேரத்தில் காரில் இருந்து இறங்கிய சத்யன் அப்போது அங்கு ஒருவர் லிப்டின் வழியே கார் பார்க்கிங் வந்ததால். அந்த லிப்டைப் பயன்படுத்தி,அவனுடைய அலுவலகம் இருக்கும் தளத்திற்கு வந்தான்.

சத்யன்..., விக்ரம்... இருவரும் ஒரே நேரத்தில் வேற லிப்டில் பயணம் செய்ததால் ஒருவர் மற்றொருவரை பார்த்துக் கொள்ளவில்லை. சத்யன் கார் பார்க்கிங்கில் இருக்கும் லிப்டை பயன்படுத்தாமல், உள்ளே தரை தளத்திற்கு வந்து இருந்தால் விக்ரமை பிடித்து இருக்கலாம். விக்ரமின் நல்ல நேரம் சத்யனின் கையில் சிக்காமல் சென்று விட்டான். விக்ரம் வெளியே சென்றது தெரியாததால் சத்யன் தன்னிடம் பேச வந்த எல்லாரையும் தவிர்த்து தன்னுடைய அறைக்கு வேகமாக சென்றான்.

ஆனால் அங்கு அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. அதன் பிறகு தான் கேமராவை செக் செய்து பார்த்தான். வேகமாக ஒரு கார் தன்னுடைய ஹோட்டலின் மெயின் வாசலில் இருந்து வெளியே சென்றது. அதை பார்த்தவன் தன்னுடைய கால்களை தரையில் உதைத்து "ச்ச" தப்பிச்சிட்டானே என்று நினைத்தவன். தன்னுடைய மேனேஜர் மற்றும் ஊழியர்களை அழைத்து என்ன நடந்தது என்று விசாரிக்கவும், அவர்கள் "ஸார் நீங்க காலையில் வரும் போது வேற சர்ட் போட்டு இருந்தீங்க, இப்ப வேற போட்டு இருக்கீங்க அதுக்குள்ள வேற டிரஸ் எப்படி என்று ஹிந்தியில் விசாரித்தனர்.

சத்யன்..., கோவத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கலந்து பேசி எல்லாரையும் திட்ட ஆரம்பித்தான். "டேமிட் என்ன பேசுறீங்க, நான் இப்ப தானே ஹோட்டலுக்கே வரேன். அப்புறம் எப்படி நான் வேற டிரஸ் மாற்ற முடியும். யார் வந்தாலும் என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டீங்களா..., என்னை மாதிரி யார் வந்தாலும், உள்ளே விட்டுறுவீங்களா என்று திட்டியவன். எல்லா இடத்திலும் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தினான். ஊழியர்கள் யாரும் அடையாள அட்டை இல்லாமல் ஹோட்டலுக்குள் நுழையவும் பணி செய்யவும் முடியாத மாதிரி மாற்றி அமைத்தான். அவன் பயன்படுத்தக் கூடிய இடங்களில் எல்லாம் ஸ்கேனிங்க் மெஸின் பொருத்தினான். அதில் தன்னுடைய ஒரு அடையாளம் மூலம் லாக் செய்தான். சத்யன் இல்லாமல் வேற யாராலும் அதை பயன்படுத்தவோ, ஏன் உள்ளையே நுழைய முடியாத மாதிரி உடனே ஆட்களை வரச் செய்து அன்றே செய்து முடித்து விட்டான். எல்லா வேளையையும் முடித்து விட்டு சத்யன் வீடு வருவதற்கு இரவு பனிரென்டு மணியை தாண்டி விட்டது.

மறுநாள் காலையில் பிரபா எழுந்து இரு நாட்களாக, அவள் செய்யும் வேலைகளை தொடர்ந்தால், இன்று காலையில் தான் வெளியூர் சென்ற கேசவனும் வருவதாக சொல்லி இருந்தார். இரவு சத்யன் தன்னுடைய கீயை பயன்படுத்தி வீட்டுக்குள் வந்ததால், அவன் வந்தது பிரபாவுக்கு தெரியாது. நேற்று மாலையில் எழுந்த சிவா தனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி விட்டு சென்றவன். நாளை வருகிறேன். இல்லையென்றால் முடிந்தால் ஈவ்னிங் சத்யனை ஹோட்டலில் சென்று பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றவன். அதன் பிறகு சத்யனை தொடர்பு கொள்ளவும் இல்லை. சந்திக்கவும் இல்லை. எழில் எழுந்து வெளியே வந்தான். அப்போது வாசலில் காரின் ஹாரன் சவுன்ட் கேட்கவும், பிரபா ஆவலாக வெளியே வந்து பார்த்தாள். அங்கு காரிலிருந்து டயர்டாக இறங்கி கேசவனை பார்த்ததும். அவருக்கு அருகில் சென்று நலனை விசாரித்தவள். அவருடன் சேர்ந்தே வீட்டுக்குள் வந்தாள். அப்போது தான் நிலாவும் எழுந்து வெளியே வந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷப்பட்டாலும் அதிர்ச்சியுமாகிக் கொண்டனர்.

பிரபா..., நிலாவுக்கு வர இருந்த ஆபத்து மற்றும் அதிலிருந்து சத்யன் காப்பாற்றியது, நம்ம வீட்டில் தங்க வைத்தது வரை சொல்லி முடித்தாள். அவரும் என்னம்மா கவனமா இருக்க கூடாதா என்று கேட்டுக் கொண்டவர். சத்யா எங்க மா என்று பிரபாவிடம் கேட்டார். அவளும் நேற்று ஏதோ ஒரு அவசரமா போனான். அதன் பிறகு அவனை பார்க்கவில்லை என்று சொல்லவும்.

கேசவனுக்கு...., கோவம் வந்தது. என்ன பிரபா இப்படி பதில் சொல்லுற. நீ அதைப்பற்றி என்னிடமாவது சொல்லி இருக்கலாம் இல்லையா, நானாவது விசாரித்து இருப்பேனே... இப்படி பையன் மேலே அக்கறையே இல்லாமல் இருக்கீயே என்று கோவப்பட்டவரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக வெளியே வரவும்.. அந்த சத்தம் தன்னுடைய அறையில் தூங்கிக் கொண்டு இருந்த சத்யனின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக அவனின் காதில் சென்று விழுந்தது. அதில் அவசரமாக எழுந்தவன் என்ன பிரச்சனை யார் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இந்த பஞ்சுமூட்டை யார்கிட்டையாவது வம்பிழுத்துட்டாளா. அடக் கடவுளே இவளை கல்யாணம் பண்ணி என்ன பாடுபடப் போகிறோனோ என்று எழுந்தவன். வெறும் ஷார்ட்ஸ், மற்றும் ஸ்லீவ்லெஸ் பனியன் மட்டுமே போட்டு இருந்தான். தன் கண்களை கைகளால் கசக்கி கொண்டே வெளியே வந்தவன். ஹாலில் இருப்பவர்களை பார்க்காமல்... "அம்மா அம்மா" என்று மட்டுமே கத்தினான்.

பிரபாவுக்கு "அம்மா என்ற அழைத்த சத்யனின் குரல் கேட்கவும். என்னங்க நம்ம சத்யா குரல் தாங்க..." அவன் தான் இப்ப கூப்பிட்டான். உங்களுக்கு கேட்டதா என்று ஒவ்வொருவரிடமும் கேட்கவும். சத்யனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. நேற்று இரவு வருவதற்கு தாமதமாகவும், தன்னுடைய சாவியின் உதவியால் வீட்டுக்குள் வந்தவன். பிரபாவை பார்க்கவும் இல்லை. தான் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று செய்தியையும் பகிர வில்லை. அதனால் தான் அவள் கேசவனின் கேள்வியில் இவ்வளவு பதறி போய், சத்யனின் குரல் கேட்கவும், பிணத்த தொடங்கி விட்டாள்.

சத்யன்..., இப்போது தான் இரண்டு நாளா தாய் நல்ல முறையில் நடந்துக் கொள்வது சந்தோஷத்தை ஏற்படுத்தியது. அதை நானே கெடுத்து விடுவேனோ என்ற பயத்தில் அவசரமாக படிகளில் இறங்கி வந்தவன். பிரபாவின் அருகில் வந்து நின்றுக் கொண்டு "ஸாரிமா..., நைட் வர ரொம்ப லேட்டாகிட்டு, உங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும் நினைச்சி நான் என் சாவியை யூஸ் பண்ணிக்கிட்டேன். என் தப்புதான் அட்லீட்ஸ் முன்னாடியே உங்ககிட்ட சொல்லி இருக்கனும், "ஸாரிமா ஸாரிமா" என்று அவளின் நாடியை பிடித்து கெஞ்சினான்.

கேசவன்..., டேய் போதும் டா, உங்க பாசம் மழையை நிறுத்துங்க..., நானே இப்பதான் வந்தேன். என்னை யாராவது கண்டுக்கொள்கிறீர்களா..., பக்கத்திலே இருக்கும் உன் அம்மாவை இப்படி தாங்கிற என்றார். இவர்களின் பாசமான சண்டை நிலாவுக்கும் ரொம்ப பிடித்து இருந்தது. இருந்தாலும் தன்னை ஊருக்கு அனுப்பவில்லை என்ற கோவத்தில் அவள் நேற்று முழுவதும் யாரிடமும் பேசவில்லை. அதோடு இரவு உணவும் வேண்டாம் என்று மறுத்து தனக்கென்று கொடுத்த அறையில் முடங்கி விட்டாள். அதுவும் பிரபாவுக்கு வருத்தமாக தான் இருந்தது. சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக சத்யனே அம்ம எல்லாருக்கும் சூடா டீ எடுத்துட்டு வாங்க என்று அன்புக் கட்டளையாக சொல்லவும்.

கேசவன்..., என்ன சத்யா புது பழக்கம் பிரபாவை எதுக்கு வேலை வாங்குற, அவளே உடல்நிலை சரியில்லாத, அவளை கஷ்டப்படுத்தி பார்க்கிறதுல, உனக்கு என்ன அப்படியொரு சந்தோஷம் என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கவும்,


சத்யன்...., அப்பா "கூல் கூல்" "ஜஸ்ட் ரிலாக்ஸ்" ஏன் இவ்வளவு டென்ஷன். ரொம்ப உணர்ச்சி வேகத்தில் பேசுறீங்க. அது உங்க ஹெல்த்துக்கும் ஒத்துக்காது பா..., நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினா, அம்மாவுடைய ஹெல்த் கன்டீஷன் பற்றி நீங்களே தெரிஞ்சிக்கலாம். முதல்ல உட்காருங்க என்றவன் ஒரு கிளாஸில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து குடிக்க செய்தான். இதுவரை நடந்த அனைத்து டயலாக்குகளையும் "நிலாவும், எழிலும்" வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றனர். சத்யன் என்னடா இந்த இரண்டு ஜீவனும் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கு என்று அவர்களை திரும்பி பார்த்தவனுக்கு காலை விருந்தாக அவனின் ஆசை பஞ்சுமுட்டாய் காட்சி அளித்தாள்.

எழில் சற்று நேரம் தோட்டத்தில் நடந்துட்டு வரலாம் என்று சத்யனை பார்க்கவும், சத்யனின் சிறு தலையசைப்பால் வெளியே நடக்க ஆரம்பித்து விட்டான். சத்யன் முதலில் எழிலை பார்த்ததால், எழிலும் வேறு எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டான். சத்யனின் பார்வை அடுத்து நிலாவின் மீது பதிவதை யாரும் கவனிக்கவில்லை.

சத்யன் பார்க்கும் போது நிலாவும் சத்யனின் உடற்கட்டுகளை பார்த்து, பிரமித்து போய், கண்களாலையே அவனை பருகிக் கொண்டு இருந்தாள். அவனும் தொடர்ந்து சிறிது நொடி அவளை மட்டும் பார்க்கவும், அந்த பார்வை வீச்சி தாங்காமல் நிலாவின் பார்வையில் ஒரு தடுமாற்றம் வந்து அவளை தலை குனியச் செய்தது. மெதுவாக அவளுக்கு தன்னருகில் வருமாறு கைகளால் செய்கை செய்தான். அவள் தான் வெட்கத்தால் தலை கவிழ்ந்து இருக்கும் போது எப்படி அவனின் சைகை பாஷைகள் வெளியே தெரியும் என்று தோன்றாமல்... தொடர்ந்து அழைத்தவனை கிச்சனில் இருந்து வெளியே வந்த பிரபா பார்த்து விட்டாள்.

பிரபா..., என்ன சத்யா கொசு தொல்லை ஜாஸ்தியா இருக்கா. பகலிலே கொசு விரட்டிட்டு இருக்க... என்று கிண்டல் செய்யவும், அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிலா. அதில் தன் தலையில் அடித்துக் கொண்டவன். பிரபாவிடம் இருந்து டீயை வாங்கிக் கொண்டு கார்டனின் பக்கமாக சென்று விட்டான்.

கேசவனும்..., பிரபாவின் டீ வாசம் வைத்தே என்னம்மா ரொம்ப நாள் கழிச்சி உன் சமையல் களை கட்ட ஆரம்பிச்சிட்டு போலையே..., என்று வர்ணித்துக் கொண்டே டீ யை கையில் எடுத்துக் கொண்டான். பிரபா... உங்களுக்கு வேற வேலையே இல்லை, "எப்ப பாரு என்னை கிண்டல் பண்ணுறதே உங்களுக்கு முக்கியமான வேலையா மாத்திட்டே வரீங்க..., முதல்ல டீயை குடிச்சி பாருங்க என்றவள். நிலாவின் அருகில் வந்து டீ டிரேயை நீண்டவும், நிலா தனக்கென்று ஒரு கப்பை எடுத்தாள். அதைப் பார்த்தா பிரபா என்னம்மா எழிலுக்கு டீ வேண்டாமா..., நான் இதில் இருக்கிற ஒரு கப் எடுத்துக்கிறேன். நீ டிரேயோடு கொண்டு போ அப்ப தான் கொண்டா போக உதவியா இருக்கும் என்றவள். சொன்னது போலவே தனக்கு மட்டும் எடுத்துக் கொண்டு கேசவனின் அருகில் சென்று உட்கார்ந்தவள். அவர்களின் இந்த இரண்டு நாள் கதைகளை பேச ஆரம்பித்தனர். அவர்களுக்கு தொந்தரவு தராமல் தனியா செல்லலாம் என்றவளின் கையில் எழிலுக்கான டீ இருக்கவும். அதை எடுத்துக் கொண்டு கார்டன் ஏரியா நோக்கி சென்றாள்.

சத்யன்..., அம்மாவிடம் இருந்து தப்பினால் போதும் என்று கார்டன் செல்ல திரும்பியவன். நிலாவும் எப்படியும் அங்கு வருவாள் என்று வாசலின் மறுபக்கம் இருக்கும் மல்லிக்கை பந்தலுக்கு சென்று, மறைந்து நின்றான். வாசல் பக்கம் வந்த நிலா, " எழிலை கண்களால் தேடவும். அவன் தோட்டத்தின் கடைசியில், நின்று யாரிடமோ போனில் பேசிக் கொண்டு இருந்தான். அதை பார்த்தவள் அவன் வரட்டும் என்று மல்லிகை பந்தலின் கால் கம்பில் சாய்ந்து ஒரு கையில் டிரேயும், மறுகையில் தனக்கான டீயை எடுத்து வாயில் வைக்கவும். அவளின் இடையில் கைக் கொடுத்து பந்தலுக்கு பின்பக்கமாக அதாவது யாரும் பார்த்தால் தெரியாத மாதிரி இருக்கும் மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்றது.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top