நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

என்னுள் மாயம் செய்தாயோ... 02

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

அத்தியாயம் 02


அமுதவேல் பிறப்பிலிருந்தே பெரிய பணக்காரன் இல்லை என்றாலும் நாலு பேருக்கு சம்பளம் தரும் அளவிற்கு பணமிருந்தது.

அவரின் பருவக் கால முயற்சியில் தான் அவரின் கம்பெனி மேலும் மேலும் வளர்த்தொடங்கிருந்தது.

இதற்கு உறுதுணையாக இருந்தது அவனின் நண்பன் மற்றும் தொழிலாளியான தங்கராஜ் தான்.

வடிவுக்கரசியை அமுதவேலுக்காக பெண் பார்த்ததே தங்கராஜ் தான். அவனுக்கு ஒன்னு விட்ட தங்கையே வடிவுக்கரசி.

இருவருக்கும் திருமணம் ஆன புதிதில் இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பை கண்டு மகிழ்வுற்றார் தங்கராஜ்.

ஒரு மாத காலத்திலே வடிவுக்கரசி கருவுற்று விட , அமுதவேல் ஒரு அன்னையாய் இருந்து அவளை கவனித்து கொண்டான்.

மாதங்கள் போக போக வடிவுக்கரசியை பத்திரமாக பார்த்துக் கொள்ள அந்த நேரத்தில் தங்கராஜிற்கு மலர்விழியுடன் திருமணம் நடந்தேறியது.

ஒன்பது மாதம் ஆகயில் ,வடிவுக்கரசிக்கு வலைக்காப்பு வைத்தனர்.

சிறிது நாளிலேயே வடிவுக்கு வலி எடுக்கவே ,அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

மலர்விழி வடிவுக் கூடவே இருந்து கவனித்து கொண்டார்.

சிறிது நேரத்திலேயே அழுகையுடன் ஆண் குழந்தை பிறந்திட , அக்குழந்தையை தூக்கி கொண்டு வந்து அமுதவேலிடம் ஒப்படைத்தார்.

மூன்று நாளிலே வடிவு வீட்டிற்கு வந்து விட குழந்தையையும் தாயையும் நன்றாக கவனித்து கொண்டார் மலர்.

ஆண் பிள்ளை பிறந்த பதினாறு நாளிலேயே அனைவரும் சேர்ந்து நரேந்திரன் என்று பெயர் சூட்டினர்.

நாட்கள் நகர நகர வடிவுக்கரசி சோசியல் ஆக்ட்டிவிட்டிஸ் க்ளப் என்று செல்ல தொடங்கினார்.

அதனால் குழந்தையின் பொறுப்பு முழுவதும் மலரின் கைக்கு கிடைக்கவே , ஆசையாய் வளர்க்க தொடங்கினார்.

அமுதவேல் ஆசைப்பட்ட படியே நரேந்திரன் எளிமையாக வளர அப்படியே இரண்டு வருடங்கள் சென்று விட்டது.

அமுதவேல் ஏதோ வேலை விஷயமாக ஃபாரின் சென்று வந்தார்.

வந்தவர் தன் மகனுக்காக சில விளையாட்டு பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தார்.

" நரேன் இங்க வாங்க அப்பா உங்களுக்கு என்ன எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க " என்று அவர் கையில் வைத்திருந்த விளையாட்டு பொம்மை எல்லாத்தையும் நீட்ட ,

" அய்..!! பொம்ம " என்று தன் பிஞ்சு விரலால் வாங்கியவன் குதுகலித்தான்.

" அப்பா அப்பா சூப்பரா இதுக்கு பா " என்று மழலை மொழியில் கூறியவன் ," இத போய் நான் அத்த கிட்ட காத்திட்டு வரேன் " என்று சந்தோஷமாக ஓட்டம் பிடித்தான்.

அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த வடிவு " நரேன் கண்ணா அம்மா கிட்ட வாங்க பாப்போம் " என்று கையை நீட்டி பாசமாக அழைக்க ,

" போ மா மீ அத்து மா வீட்டுக்கு போய் இத காத்திட்டு வத போது " என்று விட்டு ஓட்டம் பிடித்தான் தங்கராஜின் வீட்டிற்கு.

இதனை கண்ட வடிவுக்கு முதல் முறை அந்த வீட்டின் மீது கோபம் வந்தது. ஆனால் தான் அவனுடன் இல்லாததால் தான் அவன் இப்படி செய்கிறான் என்று அறியாமல் அந்த குடும்பத்தின் மீது கோபம் கொண்டாள்.

வேகமாக மலரின் வீட்டிற்க்கு வந்த நரேன் , " அத்த அத்த " என்று வீடே அதிரும் படி கத்திக் கொண்டே உள்ளே வந்தான்.

" நரேன் கண்ணா இங்க வாங்க நான் இங்க தான் இருக்கேன் " என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள் மலர்விழி.

" அத்த " என்று தன் பிஞ்சு கைகளில் இருந்த விளையாட்டு பொம்மையை காட்டினான்.

" அப்பா வந்துட்டாறா கண்ணா " என்று மலர் கேட்க

" ஆமா அத்த இதுலாம் அப்பா தான் வாங்கி தந்தாரு " என்று பெருமையாக கூறிட " சரி டா கண்ணா நீ போய் இத வச்சி விளையாடுவியாம் நான் சமையல் வேலை முடிச்சிட்டு வருவேனாம் " என்றாள்.

" இல்ல அத்த நீயும் வா நாம சேந்து விதையாடலாம் " என்று அவளின் முந்தானையை பிடித்து இழுத்து அடம்பிடிக்க

" இல்லடா கண்ணா அத்தைக்கு கொஞ்சம் வேலை இருக்காம் நீங்க போய் அமைதியா விளையாடுவீங்களாம் " என்று சமாதான படுத்த முயல அவனோ மேலும் அடம்பிடிக்க தீடிரென மலர்விழி மயங்கி விழுந்தாள்.

தன் அத்தை மயங்கி விழுந்ததை கண்ட நரேன் பயந்து போய் வெளியில் இருந்த தன் மாமாவை அழைத்தான் அழுத்துக் கொண்டே..

அவரும் வேகத்துடன் வந்து தன் மனைவியை தூக்கியவர் , அறையை திறந்து படுக்கையில் படுக்க வைத்து வேகமாக அழைப்பேசியில் மருத்துவரை அழைத்து வர சொன்னார்.

நரேன் பயந்த படியே தன் அத்தையின் முகத்தினை பார்த்த படியே நின்றிருந்தான்.

சிறிது நேரத்திலே மருத்துவர் வந்து பரிசோதனை செய்து பார்த்தவர் , வெளியே வந்து நற்செய்தியை கூறினார்.

மலரின் கர்பத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியுற்றவர் நரேனை தூக்கி தட்டாமாலை சுற்றினார்.

மருத்துவர் கூறிச் சென்றது அவனுக்கு புரியவில்லை எனினும் தங்கராஜின் மகிழ்ச்சியை எண்ணி தன் அத்தைக்கு ஒன்றுமில்லை என்று எண்ணிக் கொண்டான்.

அமுதவேலுக்கும் வடிவுக்கரசிக்கும் விஷயம் தெரிவிக்க பட அதில் மிகுந்த மகிழ்ச்சியுற்றது அமுதவேலே..

நரேனுக்கு தன்னுடன் விளையாட இன்னும் பத்து மாதத்தில் ஒரு குழந்தை வர போகுது என்று அவனுக்கு புரியும் படி கூறினார் தங்கராஜ்.

தங்கராஜ் கூறிய நாளில் இருந்து அந்த குழந்தையின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினான்.

தினமும் வந்து மலர்விழியின் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் ஆயிரம் பேசுவான்.

அவனால் ஒரு நாள் கூட அந்த பிறக்காத குழந்தையிடம் பேசாமல் இருக்க முடியாது.

நாட்கள் மாதங்களாகி நகரத் தொடங்க , மலர்விழியின் வயிரும் பெரிதாக தொடங்கி இருந்தது.

ஏழாம் மாதத்திலே மலர்விழிக்கு வலைக்காப்பு நடத்தி அவளின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட , அன்றைய நாளில் நரேன் அனைவரையும் படுத்தி எடுத்து விட்டான் மலர்விழியை கேட்டு.

அவர்கள் அவனை எவ்வளவு சமாளித்து பார்த்து முடியாமல் போனது.

அவனின் அலிச்ட்சாட்டியம் தாங்கி கொள்ள முடியாமல் அடுத்து வந்த ஒரு வாரத்திலேயே மலர்விழியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.

அன்றைய நாளிலே மலர்விழியின் வயிற்றில் மெதுவாக பிஞ்சு கைகளால் தொட்டு பார்த்திட உள்ளிருந்த குழந்தை தன் தாயை எட்டி உதைத்தது.

" உனக்கு தெரியுமா பேபி நான் உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன்னு. நீ வெளிய வந்ததும் என் கூடவே தான் இருக்கனும் சரியா . நான் உன்ன எங்கையும் தனியா அனுப்பவே மாட்டேன் " என்று அந்த குழந்தையிடம் பேச மீண்டும் ஒரு உதை.

தன் ரோஜா பாதத்தால்

உதைத்து அவனின் செவிகளுக்கு

இசைந்து கொடுத்தது..!!!

மலர்விழிக்கு ஆச்சரியம் தன்னுடைய பேச்சிற்கு மட்டுமே இசைந்து கொடுப்பவள், ஏன் தந்தையின் பேச்சிற்கு கூட அசையாது வயிற்றினுள் இருப்பவள் நரேனின் பேச்சிற்கு குழந்தையின் செவி சாய்ப்பு அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இரண்டு மாதங்களில் நரேன் பாதி நேரம் மலருடனே செலவழித்து குழந்தையின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினான்.

அவனின் காத்திருப்புக்கு , மலரின் அலறலுடன் குழந்தையின் அழுகையுடன் பிறந்தாள் அவனின் தேவதை..

செவிலியர் குழந்தையை கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்ல நரேன் அமைதியாக அந்த பிஞ்சுவின் முகத்தையே பார்த்திருந்தான்.

மூன்று நாட்களிலே மலரையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

குழந்தைக்கு பெயர் சூட்டு விழா வைக்க நினைக்க , என்ன பெயர் வைக்கலாம் என்று பொதுவாக பேசிக் கொண்டு இருக்கும்போது " நான் தான் குழந்தைக்கு நேம் வைப்பேன்.‌ இவ என்னோட டாலி இவளுக்கு நான் மட்டும் தான் பெயர் வைப்பேன் " என்று இருகைகளையும் இடுப்பில் வைத்த படியே கூறிட அவனின் குணம் அறிந்த மலர் " சரி நீயே உன் டாலிக்கு நேம் வை " என்றாள்.

" ஓகே " என்றவன் குழந்தையை காண உள்ளே சென்று விட்டான்.

பெயர் சூட்டும் விழா தொடங்கிட , குழந்தையின் பெற்றோராக மலர்விழி தங்கராஜ் அமர்ந்திருக்க ..

" என்னோட மடியில தான் என்னோட டாலிய அமர வைக்கனும் " என்று சண்டை பிடித்து அவர்களுக்கு நடுவில் அமர்ந்து குழந்தையை மடியில் தாங்கினான்.

" சரி பிள்ளையாண்ட காதில மூணு தடவா பெயர ஓதுங்கோ " என்று ஐயர் சொல்ல

" நரேன் கண்ணா உன்னோட டாலிக்கு என்ன நேம் சூஸ் பண்ணி இருக்கீங்க சொல்லுங்க " என்று மலர் ஆசையாக கேட்டிட

" அது வந்து " என்றவன் யோசிப்பது போல் பாவனை செய்ய , அனைவரும் அவனையே பார்த்திருந்தனர்.

" என்னோட நேம் ஸ்டார்ட் ஆகுற லெட்டர் ந (N) சோ என்னோட டாலியோட நேமும் அதே லெட்டர்ல தான் இருக்கனும் " என்று சொல்லி குழந்தையின் செவி அருகே சென்று நீர்த்திகா நீர்த்திகா நீர்த்திகா என்றான்.

அனைவருக்கும் அவனின் செயல் ஆச்சரியத்தை வெளிபடுத்த வைத்தது.

" எல்லாருக்கும் என்னோட டாலி இனிமேல் ஆனா எனக்கு மட்டும் இனி இவ நீரு யாரும் இவள நீருன்னு சொல்லி கூப்பிட கூடாது " என்று எச்சரித்தான்.

அனைவரும் சிரித்து விட்டு" சரி பா யாரும் உங்க நீருவ நீருன்னு சொல்ல மாட்டோம் போதுமா " என்றார் அமுதவேல்.

" டன் " என்று கட்டை விரலை தூக்கி காட்டினான். அங்கு சிரிப்பொலியாக இருந்தது.

காலம் செல்ல செல்ல நரேன் நீருவுடனே தன் நேரத்தை செலவழிக்க தொடங்கினான்.

அவளை விட்டு அகலாது அவளுடனே ஒவ்வொரு நேரத்தையும் தன் பொக்கிஷமாக கழித்து வந்தவனை வழுக்கட்டாயமாக பள்ளியில் சேர்த்தனர் வடிவுக்கரசியும் அமுதவேலும்.

நரேனை விட அதிகமாக அழுதது இரண்டரை வயதுடைய நீருவே. அவளின் அழுகையை பார்த்தவாறே பள்ளிக்கு சென்றான்.

வகுப்பில் விட்டுவிட்டு வந்துவிட்டனர் அவனது பெற்றோர்கள்.

" எப்படியாவது இங்கிருந்து தப்பிக்கனுமே பாவம் என் நீரு " என்று மனதில் நினைத்தவன் அதற்காக பலமாக யோசிக்க தொடங்கினான்.

எப்படி தப்பிப்பது எப்படி தப்பிப்பது என்று சிந்தித்தவனுக்கு யோசனை வந்து போனது..

நேராக அவனின் மிஸ்ஸை காணச் சென்றவன் , அவரது கையில் நறுக்கென்று கடித்து வைத்து விட்டு ஓடிவிட்டான்.

இவனின் செய்கையில் கோபம் கொண்ட ஆசிரியர் உடனே அவரின் தந்தை அழைத்து உடனடியாக பள்ளிக்கு வரும்மாறு அழைத்து சொல்ல , அமுதவேல் பயந்த படியே வேகமாக பள்ளிக்கு விரைந்தார்.

அவனின் க்லாஸிற்கு வந்து நின்றவுடன் , நரேன் அழுகையுடன் அப்பா என்றவாறு அவரின் கால்லை கட்டிக் கொண்டான்.

" அப்பா அப்பா என்ன இந்த மிஸ் அடிக்கிறாங்க பா " என்று கதறி அழுது பெர்ஃபான் செய்திட

அவனை தூக்கியவர் சமாதானம் செய்தபடியே ஆசிரியரிடம் வந்து என்னவென்று கேட்க , அவரோ ஒரு பெரிய லிஸ்டே அடுக்கிக்கொண்டே சென்றார்.

" வந்த ஒரே நாள்ளையே உங்க மகனோட சேட்டைய தாங்க முடியல சார் பசங்க கொண்டு வந்த நோட் எல்லாத்தையும் கிழிச்சு போட்டு பேக்ல தண்ணிய ஊத்தி வச்சி க்ளாஸையே ஒரு வழி பண்ணிட்டான். ப்ளிஸ் உங்க பையன‌ இன்னைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க " என்று கை எடுத்து கும்பிடாத குறையாக சொல்லி அனுப்பி வைத்தார் அந்த ஆசிரியர்.

அதுவரை அவன் முகத்தில் இருந்த சோகம் மறைந்து ஒரு மந்தாக புன்னகை வெளிப்பட்டது.

அமுதவேல் அவனை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

அந்த நேரம் வடிவுக்கரசி வீட்டில் இல்லை என்றும் , நரேன் நேராக நீருவின் வீட்டிற்கு ஓடி விட்டான்.

மலர்விழி தான் அவனுக்கு பல பல அறிவுரைகளை கூறி அவனை பள்ளிக்கு சென்று வர வைத்தாள்.

பள்ளியை விட்டு வந்தவுடன் நேராக அவன் சென்று பார்ப்பது நீருவை மட்டுமே.

வருடங்கள் செல்ல செல்ல நரேன் நீருவின் பிணைப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.

காலத்தின் ஓட்டத்தில் நரேனின் ஆறாவது வயதில் அவன் படிக்கும் பள்ளியிலேயே நீருவையும் சேர்த்து விட்டனர்.

நரேனுக்கு ஏக குஷியாக இருந்தது. அவளை பிரிந்து இரண்டு வருடங்களில் எட்டு மணி நேரத்தை தினந்தோறும் கடத்தி சிரம பட்டவனுக்கு அந்த குளிரிலும் மேலும் சிலிர்த்து உஷ்ணத்தை ஏற்படுத்தியது.

பின் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சென்று வருவது உண்டு.

தினமும் மலரின் வீட்டிற்க்கு தான் பள்ளி முடித்து வருவான்.

அவளோடு சேர்ந்து விளையாடுவது , படிப்பது , டிவி பார்ப்பது , மலர்விழியிடம் கதை கேட்பது என்று அவனுடைய நேரத்தை எல்லாம் நீருவுடனே கழிப்பான்.

இதுமட்டுமின்றி தினமும் இரவு உணவும் அவனுக்கு மலர் வீட்டில் நீருவின் கையில் தான் உண்டு முடிப்பான்.

பிறப்பதற்கு முன்பே அவனின் பேச்சை கேட்டவள் பிறந்த பின்பா அவனை மதியாமல் சென்று விடுவாள்.

நரேன் மட்டுமே அவளின் உலகாய் மாறி போனான். அவனை கண்ட பின்பே அந்த பிஞ்சு முகத்தில் புன்னகை அரும்பும்.

அன்றும் எப்போதும் போல் இருவரும் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டார் தங்கராஜ்.

பள்ளிக்குள் நுழைந்த நீருவிற்கு " குச் ஐஸ் பால் ஐஸ் " என்று குரல் ஒழிப்பது அவள் காதில் கேட்டுவிட

நரேன் முன்பு சென்று கொண்டிருக்க , " திரா இங்க வா " என்று சொல்லிட்டு விட்டு சிட்டு குருவி போல் ஓடிச் சென்று அந்த ஐஸ் கிரீம் காரரின் முன்பு நின்றாள்.

" அங்கில் 2 ஐஸ்கிரீம் கொடுங்க " என்று அந்த பிஞ்சு இரண்டு விரல்கள் என்று இருக்கையிலும் இரண்டு விரல்களை காட்டினாள்.

" காசு வச்சிருக்கியா " என்று நீருவிடம் கேட்க

" காசுன்னா என்ன அங்கில் " என்று அவர் சொல்லியது புரியாமல் நீரு கேட்க

அவர் பேக்கட்டில் இருந்து எடுத்து " இது தான் காசு" என்று காட்டி " இந்த மாதிரி உன்கிட்ட இருந்தா எடுத்து கொடு " என்றார்.

பள்ளி முன் இருந்து இதனை பார்த்த நரேனிற்கு கோபம் வந்து விட , சாலையை கடந்து வந்தவன் நீருவின் கை பிடித்து இழுத்து வந்தான்.

" திரா திரா " என்று நீரு அழைத்திட

" என்கிட்ட சொன்னா நான் வாங்கி தர மாட்டேன்னா நீரு .எதுக்கு நீ தனியா போய் கேட்ட " என்று தன்னை தவிர்த்து வேறொருவரிடம் பேசியதை எண்ணி கோபம் கொண்டே அவளிடம் கோபமாக கேட்டான்.

" திரா ஐஸ் போகுது ஐஸ் போகுது " என்று அழுகும் குரலில் கூற

அவளின் அழுகை அந்த ஊட்டி குளிரில் அவனுக்கு வெப்பத்தை ஊட்டியது அவளின் ஒரு துளி கண்ணீர் அவனின் கையில் பட்டவுடன்..

அவளின் கண்ணீரை தாங்காது அதனை துடைத்து விட்டவன் , " அழக்கூடாது நீரு குட்டி நீ என்னோட டால் தான நீ அழுதா என்னால தாங்க முடியாது. இப்போ நீ க்ளாஸ்க்கு போ நான் உன்ன அப்புறமா வந்து பாக்குறேன் " என்று கவலையான குரலில் சொல்லிவிட்டு அவளை அவளின் வகுப்பான இரண்டாம் வகுப்பில் சென்று விட்டு வந்தான்.

வெளியே வந்தவன் யாருக்கும் தெரியாமல் கேட்டின் வழியாக வெளியே வந்து அந்த ஐஸ்கிரீம் காரரை தேடிச் சென்று அவளுக்காக அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி வந்து வந்தான்.

அதேபோல் செக்யூரிடிக்கு தெரியாமல் உள்ளே வந்தவன் , நேராக போய் நின்றது நீருவின் வகுப்பின் முன்பே...

அவனை கண்ட நீரு வகுப்பு என்றும் பாராமல் ஓடிச் சென்று அவனுடன் ஒன்றி கொண்டாள்.

இதனை கண்ட ஆசிரியர் கோபம் வெளி வர , அங்கே பார்த்தவர் அவர்களின் பிணைப்பை கண்டு ஆச்சரியபட்டார்.

அங்கே நரேன் நீருவை அமர வைத்து ஐஸ்க்ரீமை ஊட்டிக்கு கொண்டு இருந்தான்.

இருவரும் மாறி மாறி ஊட்டிக்கு கொண்டு இருந்தனர்.

உண்டு முடித்த நரேன் " இங்க பாரு நீரு மா உனக்கு என்ன வேணும்னாலும் முதல என்கிட்ட தான் கேக்கணும் சரியா .உனக்கு தேவையானத செய்ய தான் நான் இருக்கேன். நீயா போய் எதுவும் செய்ய கூடாது சரியா " என்று அறிவுரை கூறிவயன் அவளை வகுப்பிற்குள் அனுப்பி வைத்தான்.

இவர்களின் பந்தத்தை கண்டு அந்த ஆசிரியரே வியந்து போய் நின்றார்.

அவருக்கு இதை அவர்களின் பெற்றோரிடம் கூற தோன்றா விட்டாலும் வகுப்பு ஆசிரியராக இருப்பினும் சொல்லி ஆக வேண்டும் என்ற கடமையினாலே இரு குடும்பத்தாரிடமும் இதை கூறினார்.

அவர்களுக்கு இருவரின் பிணைப்பை பற்றி அறியும் என்பதால் சிரிக்க மட்டுமே செய்தனர்.

இருவரின் வளர்ச்சி வளர வளர இவர்கள் ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருந்த நேசமும் வளரத் தொடங்கியது.

பிரித்தறிய முடியாத வயதில் இருவருக்குள்ளும் இருக்கும் பந்தம் அந்த கதிரவனும் கதிர்வீச்சுகள் போன்றும் இருந்தது.

சூரியன் இல்லை எனில் வெளிச்சம் இல்லையோ அதேபோல் தான் நரேன் இல்லை எனில் இந்த நீருவும் இல்லை. நீரு இல்லை எனில் நரேனும் இல்லை.

காலங்கள் அவர்களுடன் சேர்ந்து நேரத்தை கழித்திட இருவரும் பருவ நிலையை அடைந்திருந்தனர்.

நீரு இப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நரேன் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தான்.

நரேன் நீருவிற்கு கம்ப்யூட்டர் பிடிக்கும் என்பதால் நரேன் பதினோராம் வகுப்பில் கணினி பாட பிரிவை தேர்ந்தெடுத்தான்.

பள்ளி முடிந்த பின்பும் நரேன் பள்ளியிலே இருந்து பேஸ்கெட் பால் விளையாடி கொண்டு இருக்க நீரு வேடிக்கை பார்த்த படியே வீட்டு பாடத்தை செய்து கொண்டு இருந்தாள்.

விளையாட்டில் கவனமாக இருந்தாலும் நீருவின் மீதும் ஒரு பார்வை வைத்தே இருந்தான்.

கோல் போஸ்ட் கிட்டே வந்தவுடன் அவனின் கவனம் முழுதும் பந்தை கூடையில் போடுவதில் இருக்க நீருவின் பார்வை முழுவதும் அவனின் மேலே இருந்தது.

அவளுக்கு அவன் மீது முழு நம்பிக்கை இருந்தது அவன் அதனுள் போட்டு விடுவான் என்று..

ஆனாலும் அமர்ந்திருந்த சில பெண்கள்" நரேன் யூ கேன் டூ இட் " என்று உற்சாகம் படுத்த நீரு அவர்களை கண்டு முறைத்து விட்டு நரேனின் மீது பார்வையை திருப்பினாள்.

நீருவை ஒர் பார்வை பார்த்தவன் புன்னகையுடன் கூடையில் பந்தை சரி பார்த்து ஏவினான். அதுவும் சரியாக கூடைக்குள் விழுந்திட நீரு " ஹோ " என்று கத்தினாள்.

அப்போது ஒரு இளைஞன் அவனுக்கும் நரேனின் வயதே இருக்கும் நீருவை நெருங்கியவன் " நீர்த்திகா " என்று மென்மையாக அழைத்திட,

நீருவும் நரேனின் மேல் இருந்த பார்வையை திருப்பி வந்தவன் மீது பதித்தாள்.

" யார் நீங்க " என்று அவனை கண்டு கேட்க

" நான் யாதவ் இந்த ஸ்கூல தான் 12 th படிக்கிறேன் .பையாலஜி குருப் " என்றான்.

" சரி அதுக்கு எதுக்கு இப்போ என்ன கூப்பிட்டிங்க " என்று அவன் அழைத்தற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்டாள்.

இதனை தூரத்தில் இருந்து நரேன் பார்த்திட , அவனுக்குள் எள்ளும் கொல்லும் வெடித்தது.

வேகமாக அவர்களை நோக்கி நடக்க தொடங்கினான்.

" நான் எதுக்கு உங்கள கூப்பிட்டேன்னா... " என்று
பேசத் தொடங்கிய நேரம் நரேன் நீருவை நெருங்கி அவளுக்கு முன் நின்று " எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு .அவ கிட்ட பேச தேவையில்லை " என்று வெடித்தான்.

" அத நான் உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல நரேன்.நான் அத நீரா கிட்டயே சொல்லிக்கிறேன் " என்றான்.

" அவ வேற நான் வேற கிடையாது .இரண்டு பேருமே ஒன்னும் தான் .அதுனால நீ என்கிட்டயே சொல்லலாம்.சொல்ல விருப்பம் இல்லன்னா .." என்றவன் அவனுக்கு பின்புற வழியை கையால் காண்பித்தான்.

அதனை பார்த்தவன் " நீரா " என்று அழைத்திட‌ , அவளின் பார்வையோ நரேனின் மீதே இருந்தது. இனி இங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் யாதவ்.

" அவ வேற நான் வேற கிடையாது .இரண்டு பேருமே ஒன்னும் தான்" என்ற வாக்கியமே அவள் மனதினுள் ஓட இதுவரை இல்லாத கண்ணோட்டத்தில் அவனை முதல் முறை கண்டாள்.

ஐந்தடி உயரம் பார்க்கும் பார்வையில் ஒரு கரிசனை. பார்ப்போரை வசிகரிக்கும் முகம் .அனைவரையும் தள்ளி நின்றே பேசும் குணம். தன்னிடம் மட்டும் நெருங்கி பழகும் குணம். தன்னை ஒருவரிடத்தில் விட்டுக்கொடுக்காத தன்மை என ஒவ்வொன்றாக அவனை பற்றி சிந்திக்கும் கண்ணோட்டத்தை மாற்றி இருந்தது.

" நீரு வா போலாம் " என்று அவளின் கையை பிடித்து பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து
கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே…
ஐயோ தடுமாறுதே…

என்ற பாடல் நீருவின் பிண்ணனியில் பாடிக்கொண்டே இருந்தது..

விளையாடியதின் தாக்கமாக அவனின் வேர்வை துளிகள் அவன் கண்ணத்தில் பட்டு தெறிக்க அதனை ஆசையுடன் பார்த்தவளுக்கு அடுத்த வரிகள் பிண்ணனியாக பாடியது.

உன் கண்ணம் மேலே
மழை நீரை போலே
முத்தக்கோலம் போட
ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு
நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே....

பருவ நிலையை அடையும் அந்த வயதில் அவளுக்குள் பல்வேறு வகையான எண்ணங்கள் தோன்றியது.

அவனை கண்டவாறே வீட்டிற்கு சென்றாள். அவனுடன் சேர்ந்து காப்பி அருந்தினாள். எப்போதும் போல் அவனுடனே படித்தாள். அவன் சொல்லிக் கொடுத்தும் தான் தப்பு செய்தால் செல்லமாக மண்டையில் கொட்டியது அவளுக்கு வலியை உண்டாக்காமல் புதிதாக தோன்றிய உணர்வை வலுப்படுத்த வைத்தது.

நாள்தோறும் சாதாரணமாக ஊட்டி விட்டவள் , இன்றைய நாளில் இருந்து ஆசையாக ஊட்டி விட தொடங்கினாள்.

அவன் வீட்டிற்கு செல்லும் நேரம் அவளை அறியாமலே கண்களை கரிக்க தொடங்கியது அவளது விழி நீர்.

இப்படியே ஒவ்வொரு நாளும் கழிந்தது. இதற்கிடையில் நீரு பூப் பெயர்த்து இருந்தாள்.

அதனால் நீருவை ஒரு குடிசை அமைத்து அதில் தங்க வைத்தனர்.

நரேன் தான் அவளை காணாமல் மிகவும் சிரமப்பட்டு விட்டான். ஆனால் அவளை நினைத்த படியே நீரு வீட்டில் தங்கராஜ் மாமாவுடன் சுற்றி திரிந்தான்.

இதனை குடிசையுள் இருந்த படியே இரசித்து கொண்டு இருந்தாள் நீர்த்திகா.

பதினாறு நாள் கழித்து நரேனை தாய் மாமா என்ற முறையில் மாலையை நீருவின் கழுத்தில் பொட்டு சீர் செய்து முடித்தனர்.

மாமா முறை நரேன் மாலையிட்டது என்னமோ வடிவுக்கரசிக்கு பிடிக்காமல் போய்விட , அதனை பற்றி பேசுவதற்காக மலரை தனியே அழைத்திருந்தாள்.

வடிவுக்கரசி சொன்னது போலவே மலர்விழி அந்த இடத்திற்கு வந்து விட , சிறிது நேரத்திலே வடிவும் வந்து விட்டாள்.

" வாங்க அண்ணி நல்லா இருக்கீங்களா..?? எதுக்கு வர சொன்னீங்க அண்ணி அதுவும் இந்த இடத்திற்கு " என்று கேள்வியாக வடிவை பார்த்தாள்.

" நான் நேராவே கேக்குறேன் நீ என்ன என் புருஷன் கூட பிறந்தவளா என்ன..?? இல்ல நான் தான் உன் புருஷன் கூட பிறந்தவளா ..??" என்று கோபத்தில் வார்த்தையை விட ,

அதில் நொறுங்கிய மலர் ," என்ன அண்ணி பேசுறீங்க ..??" என்று கனத்த மனதுடன் கேட்க

" வேற எப்படி பேச சொல்ற சொல்லு ..என்னோட மகன எப்படி நீ மாலை போட சொல்லலாம். உன் பொண்ணும் என்னோட பையன் பின்னாடியே சுத்துறா சொல்லி வை. என்னோட பையன வலச்சி போட்டு சொத்த அடையலாம்னு ஆசையா .அப்படி எதாவது ஆசை இருந்தா அத இப்பவே பொதச்சிடு " என்று மிரட்டும் தோனியில் வடிவு கூற அதில் முழுதாய் நொறுங்கி போனாள் மலர்.

தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டதால் கிளம்பி சென்று விட்டாள் வடிவுக்கரசி.

வெகு நேரம் அங்கேயே இருந்தவள் , குளிர் தாங்க முடியாமல் போனதால் எழுந்து நடக்க தொடங்கினாள்.

நடந்து போகும்போது எல்லாம் வடிவு கூறிய வார்த்தைகளே மனதில் ஓடியது.

" உன் பொண்ணு உயிரோட இருக்கனும்னா என் பையன் கிட்ட இருந்து தள்ளி இருக்க சொல்ல இல்லன்னா அவள பாக்க முடியாத படி பண்ணிடுவேன் பாத்துக்கோ " என்று போகும் போது வடிவு மிரட்டி விட்டு சென்றது நினைவினிலே ஓட மலரின் விழிகளில் கண்ணீர் ஒடமாய் வழிந்து கொண்டு இருந்தது..

வலைந்து வலைந்து போகும் பாதை என்பதால் மலருக்கு எதிர் புறத்திலிருந்து வந்த லாரி கண்ணில் படாமல் போக வேகமாக வந்த லாரி வலைவில் ஒரு பெண் வருவதை கண்டு நிறுத்த முயன்றிட அதுவே வினையாக வந்து அவளின் மீது மோதியது....


_தொடரும்.....

என்னுள் மாயம் செய்தாயோ -1
 

Author: Ashwathi
Article Title: என்னுள் மாயம் செய்தாயோ... 02
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

Bhagya sivakumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Nice episode... Romba nalla feel kudukudhu intha story. Neeru and narendhiran pair is good
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top