நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே...06

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம்...06

நாட்கள் அதன் போக்கில் செல்ல இதழியனி ஆசைப் பட்டது போல் அரசு பள்ளியில் சேர்ந்து அவளது உயர்கல்வியை படிக்க தொடங்கி இருந்தாள்..

அக்னிகாவும் இதழியனிடம் அடம் பிடித்து அவள் படிக்கும் பள்ளியிலே சேர்ந்துக் கொண்டாள்...

யாரிடமும் அண்டாமல் அனைவரிடமும் தள்ளி இருந்து வந்தாள் அக்னிகா.

அனலனே இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு அவனது கல்லூரிக்கு சென்று விடுவான். அதேபோல் மாலையிலும் அவனே வந்து இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வான்.

வீட்டிற்கு வந்தவுடன் அக்னிகா அவளது அறையில் முடங்கி விட அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வந்தாள் இதழியனி...

அக்னிகாவை பார்க்க பார்க்க துடித்து போனார்கள் செழியனும் அனலனும். இவளின் நிலமைக்கு காரணமான அவர்கள் மீது கோபம் கொல்வதா இல்லை இவர்கள் பெற்று இப்படி வளர்த்து விட்டிருக்கிறார்களே என்று அவர்களை குத்தம் சொல்வதா என்று புரியாமல் தினந்தோறும் அக்னிகாவின் ஒதுக்கலில் செத்து கொண்டு இருந்தனர்.

அக்னிகா இப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இதழியனி அவளுக்கு வேறெதுவிலும் கவனம் சிதறாமல் இருப்பதற்காக அவளிற்கு படிப்பு என்னும் சித்திரை மட்டும் அல்லாமல் அவளுக்கு பிடித்தமான ட்ராயிங் க்ளாஸிலும் சேர்த்து விட்டாள்.

அவளை அவளுக்குளே சுருக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டாள். ஆயினும் அவளின் நடவடிக்கையில் மாற்றம் ஏதும் இல்லை.

இதழியனி‌ தன் வாழ்க்கை குறை கூறின தன் தந்தையின் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்தாள்.

நாட்கள் வேகமாக ஓட அதற்கு ஈடு கொடுப்பதற்கு இவர்களும் ஓட தொடங்கினர்.

இவளது படிப்பையும் அக்னியின் நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களை விட்டு தனித்து இருந்தான் அனலன்.

விதுஷாவும் செழியனும் ஒரே பள்ளி என்பதால் முன்பை விட விதுவை அதிகமாக பார்த்துக் கொண்டான். தான் இருக்கும் போதே தன்னவளுக்கு இந்த நிலைமை வந்துவிட்டது. அதே போல் தன்னை சுற்றி உள்ள எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரியான நிலைமை வர கூடாது என்று இப்போது விதுவை நன்கு கவனித்து கொண்டான்.

மாதவி அவரது நல பனித்துரையை நல்ல படியாக செய்து வந்தார்.‌ இதெல்லாம் அவரின் மகளுக்கு செய்த பாவத்திற்கான புன்னியத்தை செய்து வந்தார்.

அன்று ஒருநாள் இதழியனிக்கு உடம்பு சரியில்லாமல் போனது . அவர்களை காணுவதற்காக செழியன் வந்திருந்தான்.

செழியனை கண்ட அக்னிகா முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல அவன் மனதிற்கு கஷ்டமாக போனது.

அனலனிற்கு இதழியனியை தனியே விட்டு செல்ல மனமில்லாதவன் அக்னிகாவை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என்று யோசிக்கலானான்.

அப்போது விசில் அடித்த படியே பைக் கீயை சுழற்றிக் கொண்டு வர அதனை கண்டவனின் முகம் பளிச்சென்று எறிந்தது.

"செழியா இங்க கொஞ்சம் வாயேன் " என்று அனலன் அழைக்க

"சொல்லு அனல் " என்றவாறே அவன் பக்கத்தில் வந்து நின்றான்.

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா செழியா " என்றே தயங்கி கேட்க

" உதை விடுவேன் பார்த்துக்க டா .எதுக்கு இப்படி தயங்கி கேக்குற ,நீ இப்படி கேட்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எதுவா இருந்தாலும் கேளு " என்று அவன் தோளில் கை போட்டுக்கொள்ள

அனலும் புன்னகையுடனே சொல்லத் தொடங்கினான்.

" நான் இதழிய கூட்டிட்டு ஹாஸ்பிடல் போகனும் டா. அவளுக்கு வேற உடம்பு சரியில்லை. ஆனா அக்னிகா இதழிய விட்டு நகர மாட்டேங்கிறா .அவள வேற ஸ்கூல்ல கொண்டு போய் விடனும். அதான் நீ கொஞ்சம் அவளை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு வரியா " என்று சொல்ல அவனின் மனதோ " கண்ணா லட்டு தின்ன ஆசையா " என்று கேட்டது.

" இதுக்கு தான் நீ இவளோ தயங்குனியாக்கும் சொல்லு " என்று முறைத்தவன் " நானே கொண்டு போய் அவள விட்டுட்டு வந்தறேன் டோண்ட் வொரி டா. ஆனா அவ வருவாளா அனல " என்க

" நான் இனிகிட்ட சொல்லி அவளை அனுப்பி விடுறேன் .நீ கொஞ்சம் போய் விட்டுட்டு வந்துடு " என்க

" சரி நான் வெளிய இருக்கேன் ,நீ அவளை அனுப்பி விடு " என்று சென்றுவிட்டான்.

உள்ளே வந்த அக்னிகா கிளம்பாமல் இருப்பதை கண்டு இதழியிடம் திரும்பியவன் ," நீ சொன்னா மட்டும் தான் ஸ்கூலுக்கு போவா.அவளுக்காக வெளிய செழியன் வெயிட் பண்ணிட்டு இருக்கான். நீ கொஞ்சம் அவ கிட்ட சொல்லி அவளை அனுப்பி விடு " என்று கோரிக்கை வைக்க

அவன் தங்கைக்காக கவலைப்படுவதை பார்த்து கலங்கிய அவள் ," சரி நான் பேசி அவளை கிளப்புறேன் " என்றவள் இமை மூடி திறந்தாள்.

" அக்னி மா இங்க வா டா " என்றழைக்க

" சொல்லுங்க கா " என்று பக்கத்தில் வந்தாள்.

" நீ ஏன் இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பாம இருக்க சொல்லு " என்றே நேர்பட கேட்க

" ஹான் அது வந்து நீ வரலல அதான் நானும் கிளம்பல அக்கா. நீ இல்லாம அங்க போய் நான் என்ன பண்ண போறேன் சொல்லு " என்றிட

என்ன பேசுகிறாள் இவள் என்றே இருவருக்கும் தோன்றியது.

"நீ என்ன பேசுற அக்னி மா ,ஒருத்தருக்கு படிப்பு ரொம்ப முக்கியம் மா. அது இருந்தா நம்ம இந்த உலகத்துல யாரையும் எதிர்ப்பார்த்தோ இல்லை சார்ந்தோ வாழனும்னு அவசியம் இல்லை. நம்ம கிட்ட இருந்து எதுவேன்னாலும் எடுத்துக்க முடியும். ஆனா எடுத்துக்க முடியாத ஓரே சொத்து நம்ம படிப்பு தான் அக்னி. நான் இருந்தாலும் இல்லைன்னாலும் என்னைக்குமே படிப்ப விட்டுடவே கூடாது புரியுதா " என்று பொறுமையாக அவளுக்கு சொல்ல

"புரியுது அக்கா " என்றவள் மண்டையை ஆட்டி வைத்தாள்.

"சரி போ போய் நீ கிளம்பு உன்ன கொண்டு செழியன் விட்டுட்டு வருவான் " என்று சொல்லி அனுப்பினாள் இதழியனி.

இவை அனைத்தையும் அனலனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது , வேறெதுவும் அவனால் செய்ய இயலவில்லை.

பத்து நிமிடத்திலே கிளம்பி வந்த அக்னியை ,அனலன் வாசல் வரை அழைத்து வந்து அவர்களை அனுப்பி வைத்தான்.

பைக்கில் அவனுக்கு பின்னே ஏறிய அக்னி ,இருவரின் இடைவேளிக்காக அவளது பள்ளி பையை நடுவில் வைத்தாள்.

அதனை முறுவலோடு கண்ணாடி வழியே பார்த்த செழியன் வண்டியை கிளப்பினான்.

உள்ளே வந்த அனலன் ,"சரி இதழி நீ கிளம்பி இரு நான் ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பி வந்தறேன். ரெண்டு பேரும் சேர்ந்து ஹாஸ்பிடல் பொய்ட்டு வந்தர்லாம் " என்று சொல்ல

" எனது ஹாஸ்பிடலா நான் வரல பா " என்று அடம் பிடிக்க

" ஏன் வர முடியாது ஹாஸ்பிடல் போகலைன்னா எப்படி உடம்பு சரியாகும் சொல்லு " என்று அக்கறையாக கேட்க

" ஹான் ஊசி போடுவாங்க நான் வரமாட்டேன் போ " என்று குழந்தை போல் அடம்பிடிக்க

" அதெல்லாம் ஊசி போட மாட்டாங்க . நான் ஊசி போட வேண்டாம்னு அவுங்க கிட்ட சொல்றேன் சரியா இப்போ கொஞ்சம் கிளம்பு டா " என்று கெஞ்சி அவளை கிளம்ப சொல்லி வெளியேறினான்.

சரியாக பத்து நிமிடத்தில் வந்தவன் ,அவள் தலை சீவ சிரமப்படுவது அறிந்து உள்ளே நுழைந்தவன் ," விடு நான் பின்னி விடுறேன் " என்று அழகாக பின்னலிட்டான். அதன் அவளை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு மாதவியிடம் சொல்லிட்டு கிளம்பினர்.

முதலிலே அப்பாய்ன்மண்ட் வாங்கியதால் ,மருத்துவர் அழைப்பிற்காக காத்திருந்தனர்.

இங்கே செழியன் அக்னியை பள்ளியின் முன்பு இறக்கிவிட்டவன் ," நல்லா படிக்கனும் சரியா ,நானே உன்னே சாய்ங்காலம் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் " என்று சொல்ல அவளோ வெறும் தலையை மட்டும் ஆட்டி வைத்து உள்ளே சென்றாள்.

அவள் மறையும் வரை பார்வையிடவன் ,அவள் மறைந்ததும் விசில் அடித்தப்படியே இடத்தை காலி செய்தான்.

செவிலியர் வந்து இருவரையும் உள்ளே போக சொல்ல ,அனலன் இழியனியை கைத்தாங்கலாக அழைத்து உள்ளே சென்றான்.

அந்த மருத்துவருக்கு இதழியனியையும் அனலனையும் நன்கு தெரிந்திருந்தால் , புன்னகையோடு வரவேற்றார்.

"டாக்டர் நேத்து நைட்டுல இருந்து ஃபீவர் " என்று அனலன் சொல்ல

அவரோ தெர்மாமீட்டர் (thermometer) எடுத்து அவளின் வாயில் வைத்து ,அதன் சத்தம் வரும்வரை காத்திருக்க , சத்தம் வந்ததும் வெளியே எடுத்து பார்த்து "103 °C இருக்கு கொஞ்சம் ஹை ஃபீவர் தான் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கலாம் " என்று சொல்ல

அவர் கூறியதை கேட்ட இதழி உடனே அனலனை பார்க்க ,அவனோ நான் இருக்கேன் என்பது இமை மூடி திறந்தான்.

அவன் அளித்த நம்பிக்கையில் அமைதியாக ," டாக்டர் இன்ஜெக்ஷனா அவளுக்கு கொஞ்சம் பயம் வலிக்காம ஊசி போடுங்க டாக்டர்" என்று அமைதியாய் கூறினான்.

அவனை கோவமாக ஏறிட்டவள் ," என்னைய ஏமாத்திட்டள நீ ,இனி நான் உன்கூட பேச மாட்டேன் போ "என்று விழி வழியே சொல்லி கோபத்தை காட்டினாள்.

அதற்கு இதழ் வழியே சிரித்து விட்டு ," நீங்க ஊசி போட்டு விடுங்க‌ டாக்டர் நான் வெளியே இருக்கேன்" என்று அவன் நகர பார்க்க ,அவனை நகர விடாமல் அவனின் இடக்கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு " ப்ளிஸ் போகாதே" என்று கெஞ்சினாள் .

அதனை கண்ட மருத்துவரும்" நீயும் இரு பா " என்று சொல்லி இடுப்பில் அவளுக்கு ஊசி போட ,இதழியனி அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.

"பாரு இனி மா டாக்டர் ஊசி போட்டாங்க " என்று சொல்ல உடனே அவனின் கையை விட்டாள்.

அதன் பின் மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

மாதவி வந்து " டாக்டர் என்ன சொன்னாங்க " என்று கேட்க

" இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு சொன்னாங்க மா , அப்புறம் கஞ்சி ரச சாதம் மட்டும் கொடுத்தா போதும் காரம் சேர்த்திக்க வேணாம்னு சொல்லிருக்காங்க " என்றவன் " அவளுக்கு ரச சாதம் கொடுத்து சாப்பிட சொல்லுங்க மா அப்போ தான் மாத்திரை போட முடியும் " என்று கூறி அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவனிற்கு சிறிது நேர தனிமை தேவைப்பட்டது . அதற்காக தான் மாதவியிடம் சொல்லிட்டு உடனே அறைக்குள் வந்துவிட்டான்.

மாதவி அவளுக்காக ரச சாதத்தை பிசைந்து கொண்டு வந்து சாப்பிட சொல்ல ,

"உவக் எனக்கு வேணாம் ஆண்டி எனக்கு ரச சாதம் வேணாம் " என்று அடம்பிடிக்க

" கொஞ்சம் மட்டும் சாப்பிடு மா ,அப்போ தானே மாத்திரை போட முடியும்" என்று கெஞ்ச

" மாட்டேன் மாட்டேன் சாப்பிட மாட்டேன் " என்று தலையை சிலுப்பிக் கொள்ள

" கொஞ்சமே கொஞ்சம் " என்று கெஞ்ச

இவளின் சத்தம் பக்கத்து அறையில் இருந்த அனலிற்கு கேட்க வேகமாக அவளது அறைக்குள் நுழைந்தான்.

அவனை கண்டதும் உதட்டை பிதுக்கி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இவளின் செய்கையை கண்டு புன்னகைத்தவன் , அறைக்குள் வந்து " கொடுங்க மா நான் கொடுக்கிறேன் " என்க

அவரும் அதை கொடுத்து விட்டு ," நீயே கொடு டா " என்று விட்டு வெளியேறிவிட்டார்.

"இங்க பாரு இதழி ஒழுங்கு மரியாதையா ஆ காட்டிடு " என்று மிரட்ட

இதழியனி இடவலாக தலையை ஆட்டி சாப்பிட மாட்டேன் என்றாள்.

" இங்க பாரு இப்போ நீ வாய திறக்க போறியா இல்லை திரும்பவும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இன்னொரு ஊசி போட சொல்லட்டுமா " என்று மிரட்ட

அவன் மிரட்டுவதை பார்த்து " செஞ்சாலும் செய்வான் போலையே " என்று மனதிற்குள்ளே வசைப் பாடியே படியே வாயை திறந்து ஆ காட்டினாள்.

ஒவ்வொரு முறையும் மிரட்டி மிரட்டியே சாப்பிட வைத்த அனலன் ,அவள் வாயை துடைக்க சொல்ல ,அவளோ அவனின் சட்டையை பிடித்து இழுத்து அவனின் காலரில் துடைத்து "பழிக்கு பழி " என்று பழிப்பு காட்டினாள்.

அவளின் செயலில் ஒரு அதிர்ந்தாலும் , அவளின் குழந்தை தனத்தை எண்ணி எதுவும் சொல்ல முடியாமல் தன்னையே திட்டிக் கொண்டவன் மாத்திரைகளை வேகமாக போட வைத்துவிட்டு வெளியேறிவிட்டான்.


மாலையே அக்னிக்காக பள்ளி முன்பு காத்திருக்க தொடங்கினான். அவன் நிற்கிறதை பார்த்த அக்னி ,வேண்டும் என்ற தாமதமாக வெளியே வந்தாள்.

" ஏன் அக்னி லேட்..??" என்று சாதாரணமாக கேட்க

அவளோ அதையை பிடித்துக் கொண்டு ," நீங்க எதுக்கு இதையெல்லாம் கேக்குறீங்க..?நீங்க யாரு என்னைய பார்த்து கேள்வி கேக்குறது.தேவை இல்லாத வேலை எல்லாம் பார்த்தீங்கன்னா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். டோண்ட் டேக் அட்வான்ட்டேஜ் , அப்புறம் என்னைய மனுசியா பார்க்க முடியாது பார்த்துக்கோங்க " என்று எச்சரிக்கை விடுத்தாள்.

அவள் பேச பேச செழியன் உள்ளுக்குள் உடைந்தாலும் ,வெளியில் சிரிப்பையே பதிலாக அளித்து ,அவளை வீட்டில் விட்டுவிட்டு வேகமாக வண்டியை எடுத்து வீட்டிற்கு சென்றுவிட்டான்.

அவனுக்கு எப்படி அக்னியின் மனநிலையை மாற்றுவது என்று தெரியவில்லை.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top