நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே 21

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விக்ரம்...., சத்யனின் ஹோட்டலில் இருந்து வந்த பிறகு தன்னை தானே திட்டிக் கொண்டான். கொஞ்சமாவது அறிவோட வேலை பார்த்து இருப்பேன். நான் சுத்த அறிவு கெட்டதனமான வேலை எல்லாம் பார்க்கிறேன். அதனால் நான் இந்த நிலைமையிலும், அவன் அவ்வளவு பெரிய இடத்தில் மதிப்பு மரியாதையோட இருக்கிறான். நான் என் அப்பாவை மாதிரி யாரை ஏமாற்றி பிழைக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று தன்னை தாழ்த்தி நினைக்கவும்..., அவனின் போன் அலறியது அதில் அம்மா காலிங் என்று வந்தது. அதைப் பார்த்ததும் நீயாவது என்னை கண்டிச்சி வளர்த்து இருக்கலாம் இல்லை. நீயும் எப்படியும் போனு விட போய் தானே நான் இப்படி கஷ்டப்படுறேன். இதுக்காகவே இன்னைக்கு முழுக்க உங்கூட பேசமாட்டேன் மா. அப்பதான் என் கஷ்டம் கொஞ்சமாவது, உனக்கு புரியும் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டான்.

இரவு வெகுநேரத்திற்கு பிறகும் விக்ரமின் போன் அடித்துக் கொண்டே இருந்தது. அது அவனுடைய தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கவும். அதை சைலன்ட் மோடில் போட்டவன், தன் தலையணைக்கு அடியில் தூக்கி மறைத்து வைத்தான். அவனின் அலட்சியதால் ஏற்பட போகும் இழப்பு எவ்வளவு பெரிசு என்பதை அறியாமலே விக்ரம் செயல்பட்டுக் கொண்டு இருந்தான். அதையும் அவன் அட்டன் செய்யாததால், பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணை வைத்து, அவனின் மொபைல் நம்பருக்கு மெஸேஜ் அனுப்பினாள். எப்பவாவது பார்ப்பான் அப்ப அவன் வந்தால் போதும் என்று சலித்துக் கொண்டவர். தன் கணவருடன் தன் பிறந்த வீட்டுக்கு சென்று விட்டாள்.

விக்ரம்..., நம்ம நிலைமை இப்படி இருந்தா, அந்த சிட்டு நமக்கு கிடைக்க மாட்டாளே..., பேசாம இப்பவே ஊருக்கு கிளம்பி போவோம். தாத்தாவை மிரட்டியாவது அந்த நிலாவை கல்யாணம் பண்ணிட்டா தான் உண்டு. இல்லைனா அதுவும் நம்ம கையை விட்டு நழுவி போயிரும் என்றவன். மணியை பார்ப்பதற்காக போனை எடுத்து பார்த்தான்.

*************

சத்யன் தன் அன்னையை சமாளிக்க முடியாமல் காபி கப்புடன், கார்டன் பக்கமாக சென்றவன். பிரபாவும் எதேச்சையாக எழிலுக்கு காபி கொடுப்பதற்காக நிலாவை தோட்டத்துக்கு அனுப்பினாள். ஆனால் அவள் சென்று பார்க்கும் போது எழில் தோட்டத்தின் கடைசி பகுதியில் நின்று போனில் பேசிக் கொண்டு இருந்தான். அதை பார்த்த நிலா, அவன் வரட்டும் என்று இருந்தவள். தனக்கான காபியை தன்னுடைய வலதுக்கையில் எடுத்துக் கொண்டு, காபியை குடிப்போம். அவன் வரும் போது கூல் காபியை குடிக்கட்டும் என்றவள். இடதுக்கையில் டிரேயும், மறுகையில் தனக்கான காபியை வாயில் வைத்து ருசி பார்க்க போகும் நேரம் வரை நிலா மல்லிகை செடியின் மறைவில் நின்ற சத்யனை கவனிக்கவில்லை. அவனும் இது தான் சமயம் என்று அவளின் இடையில் கைகொடுத்து தன்னோடு சேர்த்து இழுத்துக் கொண்டு, மீண்டும் செடியின் மறைவில் மறைந்து விட்டான். அவளும் முதலில் பயந்தவள். அதன் பிறகு இது சத்யனின் வேலை தான் என்று தெரியவும் அமைதியாகவே நின்றவள். மீண்டும் தன் காபி கப்பை வாயில் வைக்கவும், சத்யன் அவளை முறைத்து பார்த்தான்.

நிலாவும்..., எதற்கும் பயப்படாமல் தன் காபியை ருசித்து பருகியவாரு அவனை ஏளனமான ஒரு பார்வை பார்க்கவும், சத்யனுக்கு கோவம் வந்தது. ஏய் "என்னடி நினைச்சிட்டு இருக்க..." கொஞ்சமாவது இந்த "அத்தான் மேல உனக்கு பயம் இருக்கா...," நானும் இழுக்கும் போது பயந்து கத்துவா. அது சமயம்னு உன் வாயை மூடலாம் பார்த்தா, இவ்வளவு தெனாவெட்டா நிக்கிறீயே டீ, உன்னையெல்லாம் என்ன செய்யலாம் என்று அவளின் முகத்திற்கு அருகில் நெருங்கவும், அவளும் மேலும் மிடுக்குடன் அவனின் அருகில் சென்றாள்.

சத்யன்..., அடியேய் நான் தான் உன்னை நெருங்கனும். இங்க நடக்கிறதைப் பார்த்தா, நீ என்னை ரேப் பண்ணிருவ போலையே என்றவன் திருதிருவென முழிக்கவும், நிலா சத்தமில்லாமல் மெளனமாக தன் கையாலே வாயை மூடி சிரித்தாள். சத்யன் நீ திருந்தவே மாட்ட உன்னையெல்லாம் கவனிக்கிற விதத்தில் கவனிக்கனும் என்று, அவளின் இதழை தன் இதழால் மென்மையாக உரசினான். அதில் நிலாவின் மொத்த உடலும் கூச்சத்தில் துடித்து ஜில்லிட்டு விட்டது. "என்னடி உன் தைரியம் எல்லாம் அவ்வளவு தானா, இந்த முத்தத்துக்கே இப்படியாகிட்ட, இன்னும் இருக்கே அதுக்கெல்லாம் என்றவன், அவளின் இடையில் தன் கைவிரலை படர விடவும், நிலா உலகத்தில் உள்ள மொத்த நாணத்தையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி செவ்வானமாகவே மாறிவிட்டாள். அதை பார்த்த சத்யனுக்கு மேலும் அவளை நெருங்கும் ஆவல் கூடியது. ஆனால் அதை கெடுக்கும் விதமாக அங்கு வந்து சேர்ந்தான்.

எழில்..., போன் பேசி முடிச்சிட்டு வரும் போது, தோட்டத்தில் நிற்பதில் சத்யன் மட்டும் எழிலுக்கு தெரிந்தான். அதே போல இவர்கள் இருவரில் சத்யன் தான் முதலில் எழிலை பார்த்தான். நிலா எழிலை கவனிக்காமல் வெட்கத்தில் நின்றுக் கொண்டு இருந்தாள். எழிலின் கண்ணில் படாமல் நிலாவை உள்ளே அனுப்பும் விதமாக சத்யன் எழிலுக்கு கேட்காதவாறு இப்படியே நின்னுட்டு இருந்தேனு வை..., அப்புறம் இப்ப லைட்டா கொடுத்த முத்தத்தை டீப்பா கொடுக்க வேண்டிய வரும். "மேடம் விருப்பம் எப்படி??? நீ எப்படி ஆசைப்பட்டாலும் தர்றதுக்கு, நான் ஓகே தான். ஆனால் உனக்கு என்று இழுக்கவும், அவளும் வீட்டுக்குள் செல்லுவதற்காக திரும்பவும், அவளது கையிலிருந்த காபி கப்பை எடுத்து விட்டு அவளை பார்த்தான். அவளும் எதுக்கு என்று அவனை பார்க்கவும், எழிலை சமாளிக்கனும்ல, அதான் என்றவன். அவளை பார்த்து கண்ணை சிமிட்டினான். அவளும் வெட்க சிரிப்போடு அங்கிருந்து சென்று விட்டாள்.
ஆனால் அப்போது அங்கு வந்த எழிலுக்கு நிலாவுக்கு இன்னும் கோவம் சரியாகவில்லை என்று தனக்குள் நினைத்து கொண்டான். ஏனென்றால் அவன் உள்ளே வரும் போது அவளின் முதுகு பக்கம் தான் அவனுக்கு தெரிந்தது. முன்பக்கமாக பார்த்து இருந்தால் அவளின் வெட்கத்தை பார்த்து இருப்பான். தன் முடிவு தப்பு என்று முடிவு செய்து இருப்பான்.

இப்படியே இவர்களின் இரண்டு நாள் டெல்லி வாழ்க்கை நிறைவுக்கு வந்தது. மறுநாள் எழில் மற்றும் நிலா ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. பிரபா மிகவும் கஷ்டப்பட்டாள். நிலா கிளம்ப போகிறாள் என்று தெரியவும். அவளின் முகத்தில் இருந்த சந்தோஷம் எல்லாம் சுத்தமாக காணமல் போனது.

நிலாவை வழியனுப்ப கேசவன், பிரபா சத்யன் எல்லாருமே ஏர்போர்ட் வந்திருந்தனர். சத்யனுக்கும் தன்னவள் என்று தெரிந்த பிறகு பிரிவதில் சற்று கவலையாக தான் இருந்தது. நிலாவும் தன்னுடைய சந்தோஷம் எல்லாவற்றை பறிகொடுத்தது போல இருந்தாள். அப்போது அவர்கள் இருவருக்கு மட்டுமே அந்த பாடல் காதில் கேட்டது...

பிரிவொன்றை சந்தித்தேன் முதல்
முதல் நேற்று...
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ
எந்தன் குடை...
நான் என்ற நேரம் வரை தூவதோ
உந்தன் மழை...
ஓடோடி வாராயோ அன்பே... அன்பே... அன்பே... அன்பே...அன்பே... அன்பே... அன்பே... அன்பே...பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

உன் கைகள் என்று நான் துடைக்கின்ற கை குட்டை நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போனேன்
பிரிவினாலே நீயாய் ஆனேன்
பிரிவொன்றை சந்தித்தேன் முதல்
முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
கீழ் இமை நான்... மேல் இமை நீ...பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்து கொண்டேன் காதல் என்றே
நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் திறந்தேனே உள்ளம் எங்கும் நீயே நீயே உயிரின் தாகம் காதல் தானே
பிரிவொன்றை சந்தித்தேன்
முதல் முதல் நேற்று
அன்பே... அன்பே... அன்பே... அன்பே...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN