நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்திக்கு கண்கள் இருண்டுக்கொண்டு வந்தது. ரத்தம் அதிகபடியாக வெளியேறி விட்டதால் பலம் குறைந்து தலை சுற்ற ஆரம்பித்தது. அவள் கண்களை மூடி சாய்கையில் ஓடி வந்து அவளை தாங்கினான் மகேஷ்.

சக்தி அவனிடமிருந்து விலக முயற்சித்தாள். ஆனால் அவன் கை இரும்பென அவளை பிடித்திருந்தது.

"உனக்கென்ன அவ்வளவு திமிர்..? கழுத்துல தொங்கிட்டு இருக்கற இந்த விசிலை ஊதியிருந்தா அப்பவே எல்லோரும் உனக்கு உதவி செய்ய வந்திருக்க மாட்டாங்களா..? எதெதுல ஈகோ பார்க்கனும்ன்னு விவஸ்தை இல்லையா..? உனக்கு அறிவு கொஞ்சம் கூட இல்லங்கறதை இப்படிதான் நிருப்பிக்கணுமா..? முட்டாள்.." அவன் மேலும் திட்டும் முன் அவனது தோளில் கை வைத்தான் மணிமாறன்.

"இப்படி திட்டுறதுக்கு பதிலா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா அவங்களுக்கு ரொம்ப நல்லது.. ரத்தம் நிறைய போய்விட்டால் அவங்களுக்குதான் சிரமம்.."

"எனக்கு ஒன்னும் இல்ல.." என்றபடி நேராக நிற்க முயன்றாள் சக்தி.

"யார் இப்படி பண்ணது..?" கோபமாக கேட்டான் மகேஷ்.

"தெரியல..‌ சத்தம் வந்துச்சேன்னு பார்க்க போனேன்.. அங்கே போனா ஒருத்தன் முகத்தை மூடிக்கிட்டு கத்தியோடு வந்துட்டான்.. கழுத்துக்கு குறி வச்சி கத்தியை எறிஞ்சான்.. ஆனா நான் கையால் தடுத்துட்டேன்.. அதனால் சின்ன காயமாகிடுச்சி‌‌.."

மகேஷ் மணிமாறனை பார்த்தான். "இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.. நான் கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்.." என மணிமாறனிடம் சொல்லிய மகேஷின் கண்கள் சக்தியை கவலையோடு பார்த்தது.

"உன்னை திருத்த ஆண்டவனால் கூட முடியாது.." என்றவன் அங்கிருந்த அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை கூட அறியாமல் அவளது தலையை வருடியபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அவனது செய்கை கண்டு முத்துவிற்கு ஆத்திரம் வந்தது. 'இப்படி என் குடும்ப மானத்தையே வாங்குறானே..'

"எனக்கு ஒன்னுமில்ல.." என்றாள் அவனது கவலை நிறைந்த முகத்தை கண்டு. அவன் பெருமூச்சோடு அவளிடமிருந்து விலகினான்.

மணிமாறன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். சில வீரர்கள் அந்த கூலிபடை ஆட்களை தங்களோடு இழுத்து சென்றனர்.

மகேஷ் வீட்டிலிருந்த அனைவரையும் தூங்க போக சொன்னான்.

வீரய்யா மட்டும் அவனது கோபம் கண்டு பயந்தபடி அவனருகே வந்தார்.

"தம்பி இவங்க இரண்டு பேருக்கு மட்டும்தான் நான் வீட்டுல இடம் தந்தேன்.. அந்த மூன்றாவது ஆள் யாருன்னு எனக்கு தெரியாதுப்பா.." என்றார் பயத்தோடு.

"அவன் இவங்களோடு வந்தவன் இல்ல வீரய்யா.. நீங்க போய் தூங்குங்க.." என்றவன் வீட்டை விட்டு வெளியே நடந்தான்.

பாதுகாப்பு படைவீரர்கள் பழையபடி காவலுக்கு நின்றுக் கொண்டிருந்தனர். மகேஷ் வீட்டிற்கு பின்னால் சென்றான். அங்கேயும் ஒரு வீரர் புதிதாக நின்றுக் கொண்டிருந்தார்.

"நீங்க முன்னாடி போய் நில்லுங்க.. இங்கே நான் காவலுக்கு இருக்கேன்.." அவர் தலையசைத்து விட்டு புறப்பட்டார்.

அவர் சென்ற பிறகு மகேஷ் தனது கைபேசியிலிருந்த டார்ச் லைட்டை ஒளிர விட்டான். அங்கிருந்த இடத்தை முழுக்க முழுக்க கவனமாக ஆராய்ந்தான். சக்தியின் காயத்திலிருந்து கொட்டிய ரத்தம் ஆங்காங்கே தெரிந்தது. அதை காணும் போது அவனுக்கு கோபம் எரிமலையாக கொதித்தது. அவனது வீட்டிற்குள்ளேயே அவனது காதலிக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மகேஷ் கோபத்தோடு அருகில் இருந்த சுவற்றில் தன் கையை குத்தினான். கை முட்டிகள் காயமாகி சின்ன சின்ன ரத்த துளிகள் தெறித்தன. ஆனால் அவனுக்குத்தான் அது வலிக்கவே இல்லை. கோபத்தோடு அவன் மறுபடியும் கையை குத்திக் கொள்ள செல்லும்போது அவனது மற்றொரு கையிலிருந்த கைபேசி கீழே விழுந்தது.

கைபேசியை எடுக்க குனிந்தவன் கைபேசியின் அருகே இருந்த கல் மோதிரம் ஒன்றையும் சேர்த்து எடுத்தான்.
அந்த மோதிரத்தை பார்த்தவுடன் அவனுக்கு புரிந்துவிட்டது இது மூர்த்தியின் வேலை என்று. அந்த மோதிரம் அவனின் அக்காவின் நிச்சயத்திற்காக மகேஷ் தேர்ந்தெடுத்தது.

மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து அழுத்தியவன் கொஞ்சம் அதிக பலத்தை பயன்படுத்தியிருந்தால் அந்த மோதிரம் சுக்கல் சுக்கலாக நொருங்கியிருக்கும்.

மூர்த்தி கறையாகி கிடந்த தனது சட்டையை கழட்டி தூர எறிந்தான். கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்தான். சக்தியிடம் அவன் வாங்கியிருந்த உதைகளால் வயிற்று பகுதிகளில் கன்னி போயிருந்தது.
மூர்த்திக்கு ஆத்திரமாக வந்தது. முத்து தந்த வேலை இது. இதை தான் சரியாக செய்யவில்லையென்றால் அவர் எந்த அளவிற்கு தன்னை கீழ்த்தரமாக பார்ப்பார் என மூர்த்திக்கே தெரியும். "ஒரு பொட்டச்சியை சாய்க்க முடியல.. நீயெல்லாம் என்ன ஆம்பள..?" கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து கேட்டான்.

அவன் வேறு சட்டையை அணிந்து சட்டை பட்டன்களை போடுகையில் அவன் அறை கதவு படாரென திறந்துக்கொண்டது. திடுக்கிட்டு திரும்பினான் மூர்த்தி. அறை வாயிலில்‌ மகேஷ் ருத்ர தாண்டவம் ஆடுபவனை போல நின்றுக் கொண்டிருந்தான்.

மூர்த்திக்கு எவ்வித அவகாசமும் தராமல் நொடி நேரத்தில் அவனது கழுத்தை பிடித்து இறுக்கினான் மகேஷ்.
அவன் இறுக்கியதில் மூர்த்தியின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்தது. மகேஷின் கையை தனது கழுத்திலிருந்து விடுவிக்க போராடினான் மூர்த்தி. ஆனால் மகேஷ் சிறிது வாய்ப்பளிக்காமல் அருகிலிருந்த சுவரில் அவனை ஓங்கி அடித்தான். மூர்த்தி அரை உயிரோடு தட்டு தடுமாறி எழுந்து அமர்ந்தான்.

"எதுக்காக நீ சக்தியை கொல்ல பாத்த..?"

"நீ சொல்லுறது எனக்கு புரியல மகேஷ்.. சக்திக்கு ஏதாவது ஆயிருந்தா அது அந்த மந்திரியை கொல்ல வந்தவங்க செஞ்ச வேலையாதான் இருக்கும்.." இரும்பிக் கொண்டே சொன்னான் மூர்த்தி.

"அவளை கொல்ல வந்தவன் மேகரீஸை கொல்ல வந்தவங்களை போல துப்பாக்கி வச்சிருக்கல.. இதுலயே தெரியல அவன் ஸ்பெஷலா என் சக்திக்கு குறி வச்சிருக்கானு.." என்றவன் நெருங்க.. அவனை கை நீட்டி தடுத்தான் மூர்த்தி.

"இதுக்கும் எனக்கும் சம்மதம் இல்ல.." அவன் முடிக்கும் முன்பே அவன் முன்னால் அவனது மோதிரத்தை வீசினான் மகேஷ்.

மூர்த்தி அதை அவசரமாக எடுத்தான். அது அவன் மனைவிக்கும் அவனுக்கும் உள்ள அழியா காதலை பிரதிபலிக்கும் ஒரு ஞாபக சின்னம்.

"உங்களுக்கு எதுக்கு சக்தி மேல இவ்வளவு வெறுப்பு.. நீங்க என் அக்கா இல்லாம எவ்வளவு கஷ்டபடுறிங்கன்னு எனக்கு தெரியும்.. உங்க காதலை விட எங்க நேசம் எவ்விதத்துல குறைஞ்சி போச்சி.. எங்க அக்கா செத்து போயிட்டா.. அதனால் உங்களால் அவளோடு வாழ முடியல.. என் காதலி.. என் பொண்டாட்டி.. உயிரோடு என் கண் முன்னாடி இருக்கா.. இருந்தாலும் அவளோடு என்னால் ஒரு வார்த்தை ஆசையா பேச முடியல.. இது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? என் வலியை உங்களாலயே புரிஞ்சிக்க முடியலன்னா வேற யாரல புரிஞ்சிக்க முடியும்.." அவன் வேதனையோடு கேட்டு விட்டு மூர்த்தியை விட்டு நகர்ந்தான்.

மூர்த்தி தன் கையிலிருந்த மோதிரத்தை பார்த்தபடியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தான். மகேஷ் கேட்ட கேள்வி அவனை இப்போதுதான் சிந்திக்க செய்தது. மகேஷிடமிருந்து சக்தியை பிரித்த பாவம்தான் தன் மனைவியை தன்னிடமிருந்து பிரித்து விட்டதோ என நினைத்தான். மோதிரத்தை நெஞ்சோடு அணைத்தபடி கண்களை மூடினான். மூடப்பட்ட கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக கொட்டியது.

சக்தி கண் விழித்தபோது பொழுது விடிந்து விட்டிருந்தது. தான் மருத்துவமனையில் உள்ளதை புரிந்துக் கொண்டவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள். அவளது காயம்பட்ட கை கட்டுப்போடப்பட்டிருந்தது. எழுந்து அமர்ந்தவுடன் அவள் கண்கள் தன் படுக்கையோரம் உறங்கி கொண்டிருந்த மகேஷிடம்தான் சென்றன.
மகேஷ் நாற்காலியில் அமர்ந்தபடி இவள் படுத்திருந்த கட்டிலில் தலை சாய்த்து உறங்கி கொண்டிருந்தான்.
அவனது தலையை வருட தோன்றியது அவளுக்கு. ஆனால் அதை செய்யத்தான் தைரியம் வரவில்லை.

மகேஷ் அவள் எழுந்த சில நிமிடங்களிலேயே எழுந்து அமர்ந்தான்.

"கை வலி இப்போ எப்படி இருக்கு..?"

"பரவாயில்ல.."

"இது என் தப்புதான்.. மூர்த்தி மாமாதான் உன்னை கொல்ல வந்திருக்காரு.. ஸாரி..." என்றான் குற்ற உணர்வோடு.

"பரவாயில்ல விடு.. மேகரீஸ் ஸார் பாதுக்காப்பா இருந்தாலே போதும்.. அவர் இப்போ எங்கே இருக்காரு..?"

மகேஷ் தன் கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தான். "இன்னேரம் ஃப்ளைட் ஏறியிருப்பாரு.."

"அப்படின்னா நீ ஏன் இங்கே இருக்க..? அவரை வழி அனுப்பி வைக்க போகலியா..?"

"நீ இங்கே அடிப்பட்டு கிடக்க.. நான் எப்படி அங்கே போவேன்..? எனக்கு மந்திரியை விட என் மகாராணிதான் முக்கியம்.." இதை கேட்டதும் சக்திக்கு மனம் மகிழ்ந்தது.

"மேகரீஸ் எப்படி உனக்கு பிரெண்டானாரு..?"

"சில விசயம் உனக்கு சொன்னாலும் புரியாது.. சில விசயம் நீ புரிஞ்சிக்காம இருந்தாதான் நல்லதும்.."
அவனை குழப்பமாக பார்த்தாள் சக்தி.

"நீ பிரஷ் பண்ணு.. நான் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன்.."

மகேஷ் அந்த மருத்துவமனை அறையை விட்டு வெளியே வந்த போது குமரன் அங்கு வந்துக் கொண்டிருப்பதை கண்டான். இவனே பாதி வழியில் சென்று சந்தித்தான்.

"மாமா.. இங்கே என்ன பண்றிங்க..?"

"நான் செம கோபத்துல இருக்கேன்.. என் கண் முன்னாடி நிற்காம தூரமா போயிடு மகேஷ்.."

"ஸாரி மாமா.. சக்திக்கு இப்படி ஆக நான்தான் காரணம்.. ஆனால் இதுக்கு மூர்த்தி மாமாதான் முக்கிய காரணம்.." என்றவனை முறைத்தார் அவர்.

"அந்த நாயை பத்தி என்கிட்ட பேசாத.. சக்திக்கு உன் வீட்டுக்கு வர துளியும் விருப்பமில்லை. ஆனா நான் கட்டாயபடுத்தி அனுப்பி வச்சேன்.. நான் பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போதான் புரியுது.. உன்னால அவளை ஒருநாள்.. ஒரே ஒரு பாதுகாக்க முடியல.. இல்ல தப்பு.. உன் வீட்டுல அவளுக்கு ஒரே ஒருநாள் கூட பாதுகாப்பு இல்ல.. அவ உன்னை விட்டுட்டு வந்து வாழுறது தப்புன்னு இவ்வளவு நாள் நினைச்சேன்.. ஆனா இன்னைக்குதான் தெரியுது அவ எடுத்த முடிவு ரொம்ப சரின்னு.."

அவர் சொல்வதை கேட்க கேட்க மகேஷிற்கு மனது கஷ்டமாக இருந்தது.

"மாமா.. எனக்கு தெரியாது இப்படி நடக்கும்ன்னு.."

"சரியா சொன்ன.. உனக்கு எதுவும் தெரியாது.." என்றவர் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சக்தி இருந்த அறை நோக்கி சென்றார். மகேஷிற்கு அவரோடு செல்ல மனம் வரவில்லை. அவனுடைய குற்ற உணர்வு அவனை உள்ளுக்குள் கொன்றுக் கொண்டிருந்தது.

குமரன் சக்தி இருந்த அறைக்குள் நுழைந்த போது அவள் அருகிருந்த பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். இவரை கண்டதும் புன்னகை புரிய முயன்றாள் அவள். ஆனால் அவர் கடுங்கோபத்தில்தான் வந்திருந்தார்.

"நீயெல்லாம் போலிஸ் டிபார்ட்மெண்ட்ல இல்லன்னு யார் அழுதாங்க..? கத்தியோடு வந்த ஒருத்தன்கிட்டயே உன்னால ஜெயிக்க முடியலையே எப்படி நீ துப்பாக்கியோடு வருபவன்கிட்டயிருந்து தப்பிப்ப..? போலிஸ் டிரெயின்ங்ல நீ என்னத்த கத்துக்கிட்ட..? உன்னால உருப்படியா ஒரு வேலை பண்ண முடியலன்னா வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிட்டே இரு.. உன்னை போல ஒருத்தியால எங்க எல்லோருடைய திறமையும் சந்தேகத்துக்கு உள்ளாகுது.." அவர் காட்டுகத்து கத்தினார். சக்திக்கு அவர் திட்ட திட்ட கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

மீதியை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் நண்பர்களே.. சக்தி பாவம்ன்னு நினைச்சா எனக்கும் அதை மறக்காம சொல்லிட்டு போங்க..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..

கதையோடு இணைந்திருந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றிகள்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN