நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

கானல் - 2

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மித்திரன் தன் புணரிக்காதலியை விட்டு பிரிந்த துயரில் தங்களை பிரித்த அகிலத்தை கோபக்கனல்களால் தாக்க
அந்த மஞ்சள் வெயிலும் ஏனோ அவனுக்கு மட்டும் பளிச்சிடும் விளக்குகள் கொண்ட அந்தி சாயும் மாலைப் பொழுதாக இருந்தது.

சுற்றி இருக்கும் நண்பர்கள் , பொருட்கள் யாவும் இல்லாமல் அவர்கள் பேசுவது கூட கேட்காமல் ஒரு மாய உலகில் அவன் மட்டுமே தனித்திருப்பது போன்ற உணர்வில் இருந்தவன் ஏதோ ஓசை கேட்டு அதனருகில் சென்றான்.

"க்கீ க்கீ " என்ற குருவியின் குரலில் தன்னை மறந்து அதை பார்த்துக் கொண்டிருந்தவன் மறுபடியும் ஏதோ சத்தம் எழ சுற்றும் முற்றும் தேடினான்.

குகை போன்ற ஏதோ ஒன்றிலிருந்து சத்தம் எழ அதை நோக்கி சென்றவன் இருள் சூழ்ந்து இருப்பதால் சிறிது கலவரத்துடனே உள்ளே சென்றான்.

உள்ளே சென்றவன் சத்தம் வந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்க குகையின் மறுபக்க வாயிலை அடைந்தான்.

அதை பார்த்தவன் தான் ஏதோ புது உலகத்திற்கு வந்தது போல் கண்கள் ஆச்சரியமானது ஒவ்வொரு இடத்தையும் கண்டு.

சிறிய பாறை ஒன்றின் பின் இருந்து அந்த சத்தம் கேட்க அங்கு சென்று எட்டிப்பார்த்தவனின் கண்கள் விரிந்தது..

தண்ணீர் தான் சொட்டு சொட்டாக நிலத்தில் விழுந்து கொண்டிருந்தது.
விழும் நீரின் சத்தமே இந்த அளவுக்கு கேட்குமா என வியந்தான்.
எத்தனை அமைதியான இடம் இது
ஏதோ பரவச நிலையில் இருப்பது போல் இருந்தது அவனுக்கு.

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் கைகளுக்கு எட்டும் தொலைவில் இருக்க அதை தொட்டு பார்த்தவனுக்கு மெய் சிலிர்த்தது.

சுற்றிலும் பார்வையை சுழல விட்டவனின் கண்களில் பட்டது ஒரு அழகிய புறா.

புறா என்றாலே வெண்மை தான் என்பதற்கு மாறாக அது தங்க நிறத்தில் மினுமினுத்தது.
ஒருவேளை இது புது வகை பறவையோ என எண்ணினாலும் அதை அவனால் நம்ப முடியவில்லை
அவன் தான் வீடெங்கும் புறாக்களை வளர்ப்பவன் ஆயிற்றே.

அந்த அழகிய புறா தன் குஞ்சுகளுக்கு இரை கொண்டு வர மரக்கிளையில் சிக்கி அதன் இரை கீழே விழுந்து விட்டது.

அச்சோ என பதறியவன் அருகில் செல்வதற்கு முன் ஒரு கை அந்த இரையை எடுத்து புறாவின் கூட்டில் வைத்தது.

அந்த கைக்கு உரிமையானவளைப் பார்க்கும் அவா எழ அவளைப் பார்த்தவனின் கண்கள் கூசியது.

நட்சத்திரங்களுக்கு ஈடுகொடுத்தது அவளின் கண்கள்.

என்ன கண்ணு டா என்றவன் முகத்தைப் பார்ப்பதற்குள் ஏதோ ஒன்று தன் மீது விழ, தன்னை யாரோ உலுக்குவது போல தோன்ற கண்களை விரித்தவனுக்கு அப்போது தான் உரைத்தது இதுவரை தான் கண்டது கனவு என்று.

மறுபடியும் கனவா என கேட்ட தோழனுக்கு அவன் புன்னகையே உணர்த்தியது ஆம் என்று.

"அப்புறம் உன் பல்லை காட்டு அங்க பாரு அந்த ஹிட்லர் உன்னை தன் நெற்றிகண் கொண்டு எரிச்சுட்டு இருக்காங்க" என்றவனைக் கண்டு முறைத்தவன் " ஏன் டா என்னை எழுப்பி விடல" எனத் திட்டிக் கொண்டே எழுந்து நிற்க

" கிருஷ்ணா நீங்க எப்பவுமே என் செமினார் அப்போ தூங்கிடுறீங்க உங்க மேல கம்ப்ளைன் பண்ணாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கிறது இல்லை ஏன்னு கேட்டா நீங்க நல்லா படிக்கிற பையன், ரேங்க் ஹோல்டர்னு சொல்லிடுறாங்க இதுதான் மை லாஸ்ட் வார்னிங் இதையே நீங்க தொடர்ந்தா அவ்வளவு தான் " என்று மிரட்டியவரை கண்டு சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்
"எனக்கு செமினார்னு சொன்னாலே தூக்கம் வருது நான் என்னடா பண்ண" என்று புலம்பியவன் தன் நண்பனை நோக்கி கோபக் கனல்களைத் தொடுத்தான்.

" போதும் போதும் நிறுத்து உன்னை எழுப்பினா மட்டும் சும்மா இருந்துடுவியா உன் கனவு காரிகையை பார்க்க முடியலைனு திட்டுவ போடா போடா " என்றவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள

அதைக் கண்டு புன்னைகைத்தவன் " சரி சரி விடு டா" எனக் கூறி அணைத்துக் கொள்ள " அய்யோ விடு டா நான் அந்த மாதிரி பையன் இல்ல" என்று அலறியவனைக் கண்டு சத்தமாக நகைத்தவன் " நல்லா கொழுக்கு மொழுக்குனு டெடி பியர் மாதிரி இருக்க டா புருஷா " எனக் கூற

அதில் முறைத்தவன் " ஐ யம் நாட் புருஷா ஐ யம் பூஷன் பி ஓஓ எஸ் ஹெட்ச் ஏ என்( booshan) " எனக் கூற

இன்னும் சத்தமாக நகைத்தான் சாஹீயின் காதல் கள்வன் கிருஷ்ணா....துருவ் கிருஷ்ணா.

அவனுக்கு அந்த பெயர் தான் சரியா இருக்கும் அழகான பெயர் தெரியுமா அவன் சிரிக்கவே மாட்டான் ஆனால் சிரிச்சா நட்சத்திரக் கூட்டம் சேர்ந்து மினுமினுக்கிற மாதிரி இருக்கும் அவ்வளவு அழகு அவன் சிரிப்பு என சாஹீயின் வார்த்தைகள் தான் மனதினுள் ஓடியது பூஷனுக்கு.

" அழகா சிரிக்கிறடா " என்றவனைக் கண்டுக் கொள்ளாமல் கன்னத்தில் கை வைத்து மேசையில் மேல் தலையை வைத்தவன் திரும்பி பூஷனைப் பார்த்து இன்னைக்கும் நான் அவ முகத்தை முழுசா பார்க்கல டா" என்றவனின் குரலே கூறியது அவனது மனதை.

வளர்ந்த ஆண்மகனுக்கும் எப்படி தான் இந்த மாதிரி சூழ்நிலையில் குழந்தை முகம் தோன்றுதோ தெரியவில்லை.
"நான் மட்டும் பொண்ணா இருந்தா கண்டிப்பா உன்னை துறத்தி துறத்தி கல்யாணம் பண்ணிருப்பேன் டா " என்ற பூஷனை கண்டு சிரித்து
" இப்போவும் நான் ரெடி தான் சட்டம் கூட நமக்கு சாதகம் தான் யாரு தான் வேணாம் சொல்லுவா இப்படி ஒரு டெடி பியரை " என்றவன் மறுபடியும் பூஷனை அணைக்கச் செல்ல

" நோ நோ தப்பு மிஸ்டர் கிருஷ்ணா ரொம்ப ரொம்ப தப்பு இந்த டெடி பியர் எப்போவும் என் டார்லிங் மானுவுக்கு தான்" என கண்களில் காதலோடு கூற

" ஹாஹா யாரு அந்த இரட்டைக் கிளவியா ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கே காணோம்அது சிலைனு நினைச்சேன் டா பாரேன் இன்றைக்கு செமினார்க்கு முன்னாடி ஒரு கால் வந்துச்சு பாத்தா நம்ம சிலை அப்போதான் தெரிஞ்சது சிலைக்கு பேசத் தெரியும்னு" எனக் கூறிச் சிரிக்க

" சாஹீயவா சொல்லுற" எனக் கேட்டவனின் குரலில் சிறிது கோபம்.

அதைக் கண்டு கொண்டாலும் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் " அந்த போகிய தான் சொல்லுறேன் " என்றவனின் குரலில் ஏகத்தும் நக்கல்.

சாஹீ மட்டுமில்லை இவனுக்கு எந்த பெண்ணைக் கண்டாலும் ஆகாது.
பெண்களைப் பிடிக்காது ஆனால் வெறுப்பு இல்லை
ஒரே ஒரு நண்பன் தான் நண்பர்கள் கூட இல்லை
படிப்பு , புறாக்கள், பூஷன் தான் இவன் உலகம்.
இப்போது புதிதாக அவன் கனவுக் காரிகை.

ஏனோ சாஹீயை பிடிக்கவே பிடிக்காது
அவள் அமைதியா, அழகா எது என்று தெரியவில்லை.
யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைப்பவன் அவளைக் கண்டாலே எரிந்து விழுவான், முகத்துக்கு நேரே சொல்லிவிடுவான் அவளை பிடிக்கவில்லையென்று.

அதை கேட்கும் ஒவ்வொரு நொடியும் மனதினில் நொறுங்கிப் போவாள் சாஹீ... அனைவருக்கும் சாஹீ என்றால் அவனுக்கு சஹி சாஹீலாம் நல்லாவே இல்லை என்பான்.
ஒருமுறை கூட அவளை பெயர் சொல்லி அழைத்ததில்லை.

மானு மற்றும் சாஹீ எப்போதும் ஒன்றாக சுத்துவதால் இரட்டைக் கிளவி என்று பெயர் வைத்தான்.
அவங்க இரண்டு பேரும் கிழவிகள் டா பாத்தாலே தெரியுது அதுமட்டுமில்லாமல் அவர்களை
ஆன்டிஸ்(Aunty's) என்பான் எந்த அளவு ஒருவரை மனதால் நோகடிக்க முடியுமோ அந்தளவு செய்வான்.
இப்போது மானு பூஷனின் காதலி என்று ஆகி விட்டதால் மானுவை அவ்வளவாக கலாய்க்க மாட்டான்.
சாஹீ மட்டுமே இப்போது அவனுக்கு சிக்கியிருக்கும் அடிமை.
அனைத்திற்கும் சாஹீயிடம் இருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக கிடைக்கும் அது அவனுள் ஒரு போரையே தோற்றுவிக்கும் அடுத்த முறை இன்னும் அவளை நோகடிக்க வேண்டுமென்று.

எல்லாம் வீண் தான்
அவளுக்கு அவன் தன்னிடம் பேசினால் போதும் அது என்னவென்றாலும் சரி.

பொழுது விடியத் தொடங்கும் நேரம் தன்னவளைப் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற துக்கம் தொண்டையை அடைக்க ஆர்கலியை அணைத்து அது போதாமல் இருக்க
அவளை முத்தமிட்டு பிரிந்து தரணிக்கு தன் ஒளியைக் கொடுத்தான் அருணன்.

காலை எழுந்ததில் இருந்தே ஏனோ அவனைப் பார்க்க வேண்டும் அவனுடன் பேச வேண்டும் என மனதில் தோன்ற அவனுக்கு கால் செய்ய கூடாது என்ற மூளையின் கட்டளையை என்று தான் அவள் மனது கேட்டிருக்கிறது.

அவள் கை அவளறியாமல் அவன் நம்பரை டையல் செய்து விட்டது.
தன் இதயத்துடிப்பு வெளியே இருப்பவருக்கு கேட்டு விடுவோ என்ற உணர்வில் இருந்தாள் அவள்.

அவனின் திமிர் கலந்த ஹலோவே அதற்கு மேல் அவளை பேச விட வில்லை மயக்கம் வராத குறை தான்.
என்று தான் அவன் அவள் அழைப்பை ஏற்றிருக்கிறான்?
பாரபட்சம் பார்க்காமல் கட் செய்து விடுவான்.

"ஒருவேளை என் பெயரைப் பார்க்கலையோ" என்றவளின் யோசனையை கலைத்தது அவனின் குரல்.

" ஹலோ யார் நீங்க " என்று ஆங்கிலத்தில் கேட்க யாரோ ஊசி கொண்டு இதயத்தை தைப்பது போல் உணர்ந்தாள்.

" சாஹீ" என்றவள் குரல் அவனுக்கு கேட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்.

" எந்த சாஹீ " என்றவனின் குரல் இன்னும் எரிச்சலைக் காட்டியது.

கண்களில் தேங்கி நின்ற கண்ணீரை கட்டுப்படுத்தியவள் " சாஹீதா" என திக்கித் திணறிக் கூறி முடிக்க

" நீயா" எத்தனை எகத்தாளம் அவன் குரலில்...
" உன் நம்பரை நான் சேவ் பண்ணல அதுனால தான் நீ யாருனு தெரியல சேவ் பண்ணா மட்டும் ஒழுங்கா ரெஸ்பான்ஸ் பண்ணுவ அவளுக்கு" என்ற மனசாட்சியை அடக்கியவன்

" ம்ம்ம் எதுக்கு கால் பண்ண" என்றவன் எப்போதான் கட் பண்ணுவாளோ என நினைத்துக் கொண்டிருந்தான்.( டேய் அவ பேசவே இல்லடா )

" எங் எங்க இருக்கீங்க?"

"நான் எங்கேயோ இருக்கேன் உனக்கு ஏன் வேற வேலையே இல்லையா காலங்காத்தால கால் பண்ணி மனுசன கடுப்பேத்திக்கிட்டு" அவன் குரலின் கோபம் இவளுக்கு அச்சத்தை ஏற்படுத்த

"ப்ளீஸ் " என்று கெஞ்சியவளை கண்டு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் கட் செய்து விட்டான்.

அழக்கூடாது என்று தன்னைத்தானே கட்டுப்படுத்தியவள் பூஷனுக்கு அழைத்தாள்.

அவனுக்குத் தெரியும் அவள் எதற்கு அழைக்கிறாள் என்று.

அட்டெண்ட் செய்தவுடன் "காலேஜ்ல இருக்கோம் " எனக் கூறியவனுக்கு மனதாலே நன்றியை செலுத்தினாள்.

அதற்கு மேல் கேட்க அவளுக்கு ஒன்றுமில்லாமல் அமைதியாக இருக்க

" கேட்க வேண்டியது கேட்டாச்சா?"

"ம்ம்"

" இப்போ சந்தோஷமா?"

"ம்ம்"

" காலேஜ்க்கு கிளம்பிட்டியா?"

"ம்ம்"

" கிருஷ்ணா லூசு தானே"

" ம்ம்" என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டு முறைத்தாள்.

" நீ அங்க முறைச்சா எனக்கு எப்படித் தெரியும் இங்க வந்து முறை சாப்பிட்டுட்டு வா " என்றவன் சிரித்துக் கொண்டே அழைப்பைத் துண்டித்தான் .

உடனே துருவை காணவேண்டும் என மனம் துடிக்க கிளம்பிவிட்டாள்.

மஞ்சள் வெயில் முகத்தில் பளீரென்று அடிக்க அதை விட அவள் முகத்தில் வழியும் வேர்வைத்துளிகள் பளபளத்தது.
மஞ்சள் வண்ண அனார்கலியில் துருவைக் காண ஓடி வந்தவள் வகுப்பறையில் தேடி அங்கு இல்லாமல் போக செமினார் ஹாலுக்கு சென்றாள்..
அவன் குரலைக் கேட்டவள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல அங்கேயே நின்றாள்.

அவனிடம் என்ன பிடிக்கும் என்று கேட்டால் அவளுக்கு எல்லாமே பிடிக்கும் என்று தான் கூறுவாள்.
குறிப்பாக என்ன என்ன என்று நச்சரிக்கும் மானுவிடம் இருந்து தப்பிக்க குரல் என்று கூறி வைத்தாள்.
அது எவ்வளவு உண்மை!!

உணர்ச்சிகளை அப்படியே பிரிதிபலிக்கும் குரல்.

அந்த குரலே உணர்த்தியது கனவில் வரும் காரிகையின் மீதான அவனது காதலை.
அவனுக்குத்தான் இன்னும் புரியவில்லை போல்.

அவளின் வருத்தம் கூட இப்போது பெரிதாக தோன்றாமல் அவனின் சந்தோஷத்தைக் கண்டு அவளும் மகிழ்ந்தாள்.

காரிகை வருவாள்

மித்திரன், அருணன் - சூரியன்
புணரி,ஆர்கலி - கடல்
தரணி - உலகம்

உங்களை ஆதரவை எதிர்ப்பார்க்கும் உங்கள் அன்புத் தோழி
 

Author: im_dhanuu
Article Title: கானல் - 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top