நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தியும் முத்துவும் மகேஷை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களது அதிர்ச்சியை விட மகேஷ்குதான் அதிக அதிர்ச்சியாக இருந்தது.

அவன் தன் கையிலிருந்து கீழே விழுந்த கைபேசியை எடுத்துக் கொண்டு சக்தியின் அருகே வந்தான்.
"சந்தியா இங்கேயிருந்து போகும்போது நேரம் என்னன்னு தெரியுமா..?"

முத்து அவனை நெருங்கி அவனது கையை பிடித்தார். "அவ பொய் சொல்றா.. நீ வந்ததை பார்த்துட்டு உனக்கும் எனக்கும் நடுவுல சண்டை வரணும்ங்கற ஒரே காரணத்துக்காக ‌இப்படி சொல்லியிருக்கா.."

மகேஷ் அவரை சாந்தமாக பார்த்தான். அவனது பார்வை கண்டு சக்திக்கே பயமாக இருந்தது. "சந்தியா கிடைக்கட்டும்.. அப்புறம் இதை பத்தி பேசிக்கலாம்.." என்றவன் சக்தியின் பக்கம் திரும்பினான்.

"ஒரு சின்ன பொண்ணை ராத்திரி நேரத்துல தனியா அனுப்பியிருக்கியே.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..?"

"அவ இப்படி தொலைஞ்சி போவான்னு எனக்கெப்படி தெரியும்..?" அவளும் பதிலுக்கு கேட்டாள்.

"உன் மேல செம கடுப்புல இருக்கேன்.. இருந்தாலும் இப்போதைக்கு சந்தியாவை கண்டுபிடிக்கறது எனக்கு ரொம்ப முக்கியம்.. அவ எந்த டைம்முக்கு இங்கிருந்து கிளம்பினான்னு சொல்லு.."

அவள் நேரத்தை யோசித்து சொன்னாள்.‌ "உன்னை அப்புறம் வந்து கவனிக்கிறேன்.. இரு.." என்றவன் தன் வாகனத்தை நோக்கி நடந்தான்.

சக்தியும் மகேஷின் பின்னால் ஓடினாள். "நானும் உதவிக்கு வரேன்.." மகேஷ் வாகனத்தின் அருகே நின்றான். அவளை பார்த்தான். அவனது பார்வை கூறும் செய்தியை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"நான் ஏற்கனவே பயங்கர குழப்பத்துல இருக்கேன்.. இதுல உன்னால வர டென்ஷன் எனக்கு வேண்டாம்.. நீ இங்கேயே இரு.. நான் அவளை கண்டுப்பிடிச்சிக்கறேன்.." என்றவன் தனது வாகனம் ஏறி கிளம்பி சென்றான்.

முத்து அவளருகே வந்தார். "உன் வாயை வச்சிக்கிட்டு உன்னால சும்மா இருக்க முடியாதா..? இவ்வளவு நாள் இருந்த பயம் விட்டு போயிடுச்சா..? நீ சாகாம போனதுதான் என் மிக பெரிய தோல்வி.. நல்ல வேளை உன் வயித்துல இருந்த குழந்தை செத்துச்சி‌‌.. இல்லன்னா அதை வச்சி இன்னேரம் என் குடும்பத்தை இரண்டு துண்டாக்கி இருப்ப இல்ல..? உன் சாதி புத்தி உன்னை விட்டு போகுமா.‌? அடுத்தவனை ஏமாத்தி வாழுற பொழப்புக்கு பதிலா நீ செத்துப்போகலாம்.."

சக்திக்கு ஆத்திரமாக வந்தது. சுய மரியாதை 'உனக்கு சூடு சுரணை இருக்கிறதா.‌?' என கேட்டது. சாதியின் பெயரை சொல்லி அவர்கள் வீழ்த்தும் ஒவ்வொரு முறையும் வீழ்ந்ததற்காக அவளுக்கு இப்போது தன் மீதே பரிதாபமாக இருந்தது. தான் சுயக்கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்களுக்கு பயந்து கிடந்தது இப்போது அவளுக்கு புரிந்து போனது.

"உன் மிரட்டலை வேறெங்காவது வச்சிக்க.. நான் இனி உங்க யாருக்கும் பயப்பட மாட்டேன்.. நல்லா ஞாபகம் வச்சிக்க.. இனி உங்களோட எந்த சிறு வார்த்தையும் இனியும் என்னை பாதிக்காது.. இவ்வளவு நாள் உன் குடும்பம் பிரியாம இருக்க நான் பட்டபாடு எல்லாம் வீண் என ஆன பிறகும் நான் ஏன் இன்னும் அதே பைத்தியகாரத்தனத்தோடு இருக்கணும்..? என் பொறுமையை இது வரைக்கும் பார்த்த இல்ல.. இனி என் ருத்ர தாண்டவத்தை பார்க்க போற நீ.. ஏன்டா இவக்கிட்ட வம்பு வச்சிக்கிட்டோம்ன்னு நீ கதற போற.." என்றவள் தனது வீட்டிற்குள் புகுந்து கதவை சாத்தினாள்.

வனஜா நல்ல தூக்கத்தில் இருப்பாள் என்பதை அறிந்தே சக்தி அவளுக்கு அந்த நடு இரவில் ஃபோன் செய்தாள்.

"ஹலோ சக்தி..."

"வனஜாக்கா.. ஒரு பொண்ணு மிஸ்ஸிங்க்.. எழுந்து வாங்க.. கண்டுபிடிக்க போகணும்.."

"யார் சக்தி..?"

"மகேஷோட அக்கா பொண்ணு சந்தியா.. நேத்து சாயங்காலம் என் வீட்டுக்கு வந்தா.. ஆனா திரும்பி போற வழியில் எங்கேயோ மிஸ் ஆகியிருக்கா.. கம்ப்ளைண்ட் பண்ண முடியாது.‌. அதனால் பர்சனலா அந்த பெண்ணை கண்டுபிடிக்க உதவி செய்றிங்களா..?"

எதிர்முனையில் சிறிது நேரம் மௌனம் நிலவியது. "சரி சக்தி.. இன்னும் இரண்டு மணி நேரத்தில விசயத்தை கண்டுபிடிக்க பார்க்கறேன்.." என்ற வனஜா தொடர்பை துண்டித்து கொண்டாள்.

மகேஷ் பைத்தியம் பிடித்தவன் போலாகிவிட்டான். சந்தியா சிறு பெண்.. இந்த நேரத்தில் எங்கு இருக்கிறாளோ.. யாரோடு இருக்கிறாளோ.. என்ற யோசனை அவனை பயம் கொள்ள செய்திருந்தது.

சந்தியாவின் தோழிகள் வீடுகளுக்கு சென்று அவளது சமீபத்திய நடவடிக்கையில் ஏதேனும் மாறுபாடு இருந்ததா.. அவளை யாராவது வம்புக்கு இழுத்தார்களா என விசாரித்தான். அவன் சந்தியாவின் தோழிகள் பலரிடம் விசாரித்த பிறகே ரகுவை பற்றிய தகவல் கிடைத்தது. ரகு யாரென விசாரித்துக் கொண்டு ரகுவின் வீட்டிற்கு சென்றான் மகேஷ்.

ரகுவின் அம்மாதான் அவனை எதிர் கொண்டாள். ரகு மாலையிலிருந்து வீடு வரவில்லை என்ற தகவல் மட்டும்தான் கிடைத்தது. அவனது ஃபோன் ஸ்விட்ச் ஆஃபாக இருந்தது. சந்தியா காணாமல் போனதற்கு ரகுதான் காரணம் என உறுதியாக புரிந்துக் கொண்டான் மகேஷ். ரகுவின் நண்பர்களின் விலாசத்தை வாங்கி கொண்டு ரகுவின் வீட்டை விட்டு சென்றான்.

அதிகாலை மணி நான்கை தாண்டிவிட்டிருந்தது.

ரகுவின் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று மகேஷ் விசாரித்ததில் அவனுக்கு கிடைத்த தகவல் ஒன்றுதான். ரகுவை போலவே அவனது நண்பர்களும் காணவில்லை.

'சந்தியா குட்டி.. உனக்கு ஒன்னும் ஆகியிருக்க கூடாது.. கடவுளே..! நான் எத்தனை பேருக்கு மறைமுகமாக உதவி செஞ்சிட்டு இருக்கேன்.. இதுதான் அதற்கான கூலியா..? என் வீட்டு பொண்ணுக்கு எதுவும் ஆகாம பார்த்துக்க.. அவ சின்ன பொண்ணு.. இத்தனை தடிமாடுங்க சேர்ந்து அவளை கடத்தி வச்சிருக்காங்களே.. அவளை பத்திரமா என்கிட்ட ஒப்படைச்சிடு கடவுளே.. அந்த தடிமாடுங்க அத்தனை பேருக்கும் உன் சார்ப்பா நான் பொங்க வைக்கிறேன்..'

ரகுவின் நண்பர்கள் பட்டியலில் இருந்த கடைசி நண்பனின் வீட்டு கதவை தட்டினான் மகேஷ். தூக்க கலக்கத்தோடு ஒரு வாலிபன் வந்து கதவை திறந்தான். இவனை கண்டதும் அவன் மொத்த தூக்கமும் தெளிந்து போனது.

"மகேஷ் ஸார்.." என்றான் குழப்பமாக.

"உன் பிரெண்ட் ரகு எங்கன்னு உனக்கு தெரியுமா..?" அவசர தொனியில் கேட்டான் மகேஷ்.

"ரகுவா‌‌..? எதுக்கு ஸார் கேட்கறிங்க..? எனக்கும் அவனுக்கும் சண்டை.. அதனால் அவனை பத்தி எதையும் என்கிட்ட கேட்காதிங்க.."

மகேஷ் அவனது சட்டையை பிடித்து அவனை கதவோடு வைத்து நெருங்கினான். "எங்க வீட்டு பொண்ணு சந்தியாவை காணல.. அவளை உன் நாதாரி பிரெண்ட் ரகுதான் கடத்தி போயிருக்கான்.. அவன் இருக்கற இடத்தை இப்போ நீ சொல்லல உன்னை நான் இங்கேயே கொன்னு புதைச்சிட்டு போயிடுவேன்‌‌.."
அந்த பையனின் கண்களில் மிரட்சி தெரிந்தது. "ஸார் எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ஸார்.. ரகுவுக்குதான் சந்தியான்னா பிடிக்கும்.. அவளையே சுத்தி சுத்தி வந்திட்டு இருப்பான். ஆனா சந்தியாவுக்குதான் அவனை சுத்தமா பிடிக்காது.. அவனை விரட்டி அடிச்சிட்டே இருப்பா‌‌.."

"இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும்.. இப்போ அவன் எங்கேன்னு மட்டும் எனக்கு சொல்லு.." அவனது குரலில் அவசரம் மட்டுமே இருந்தது.

அந்த பையன் தயங்கி நின்றான். "அவனும் எங்க ப்ரெண்ட்ஸும் எப்பவும் இந்த ஊரை தள்ளி இருக்கற புளியந்தோப்புக்கு நடுவுல இருக்குற ஓட்டு வீட்டுலதான் இருப்பாங்க.." அவன் சொல்லி முடித்த வினாடி மகேஷ் அவனது சட்டை காலரை பிடித்து இழுத்துக் கொண்டு தனது வாகனத்தை நோக்கி நடந்தான்.

"என்னை ஏன் ஸார் கூட்டி போறிங்க..? எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு முதல்லயே சொல்லிட்டனே.. அவன் பண்ண தப்புக்கு எதுக்கு என்னை இழுத்துட்டு போறிங்க..?"

மகேஷ் அவனை காரின் முன் இருக்கையில் தள்ளி விட்டுவிட்டு அவனை பார்த்தான். "நான் பயங்கர டென்சன்ல இருக்கேன்.. உன்னை கையை காலை உடைச்சி கூட நான் உன்னை என்னோடு இழுத்துட்டு போயிடுவேன்.. அந்த நாய் என் கையில் கிடைக்கற வரைக்கும் நீ என் கூட தான் இருந்தாகணும்.. இதை மறுத்து பேச ஆசை பட்ட உன் வாயில் ஒரு பல்லு கூட இருக்காது.. முழுசாத்தையும் தட்டி உன் கையில் கொடுத்துடுவேன்.."

அந்த பையன் பயந்து போன முகத்தோடு ஒடுங்கி போய் அமர்ந்தான். மகேஷ் காரை கிளப்பிய வேகத்தில் அந்த பையன் மூச்சி விட கூட பயந்து போய் விட்டான்.

அந்த பையன் சொன்ன புளியந்தோப்புக்குள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான் மகேஷ். அவனை தொடர்ந்து இறங்கினான் அந்த பையன்.

தூரத்தில் ஒரு ஓட்டு வீடு தெரிந்தது. வீட்டின் முன்னால் ஒரு குண்டு பல்பு அரை மஞ்சளாக எரிந்துக் கொண்டிருந்தது.‌ மொத்த இடமும் நிசப்தமாக இருந்தது. மகேஷும் அந்த பையனும் நடக்கும் போது காய்ந்த இலைகள் உடையும் சத்தம் மட்டும் தெளிவாக கேட்டது‌. மகேஷ்கு சிறு சந்தேகம் வந்தது.

"நிஜமாவே இந்த இடம்தானா..?" என்றான் அருகில் வந்து கொண்டிருந்தவனிடம்.

"இந்த இடம்தான் ஸார்.. நான் கூட நிறைய நாள் நைட்ல இங்கேதான் தூங்கியிருக்கேன்.."

மகேஷ் வீட்டை நோக்கி நடந்தான். தூரத்திலிருந்து ஒரு நாய் குரைத்தபடியே ஓடி வந்தது. அந்த பையன் விசிலடித்தவுடன் அந்த நாய் அவனருகே வந்து தன் வாலை ஆட்டியது.

"இது நாங்க வளர்க்கற நாய்.." என்றான் அவன்.

"அதுக்கு இருக்கற நல்ல குணம் கூட உங்களுக்கு இல்ல.. வந்து உன் பிரெண்டை காட்டு.. ரகுன்னு பேர் வச்சவன் இன்னையோட சாகப்போறான்.." மகேஷ் சொன்னதில் அந்த பையன் பயந்துபோய் மிடறு விழுங்கினான்.
இருவரும் வீட்டின் அருகே சென்றனர். அந்த பையன் வீட்டை திறந்தான். வீடு வெறிச்சோடி கிடந்தது. மகேஷ்க்கு ஆத்திரமாக வந்தது. அந்த பையனை தூக்கி சுவற்றில் வீசினான். அந்த பையன் முனகியபடியே இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.

"எங்கடா அவங்க..? இங்கே இருப்பாங்ன்னு நீதானே சொன்ன..? அதுக்குள்ள அவங்க எங்கே போனாங்க‌.?"

"இந்த வீட்ல இருப்பாங்கன்னுதான் நானும் நினைச்சேன் ஸார்.." தயங்கி தயங்கி சொன்னான் அவன்.

"யாரது..?" யாரோ வெளியிலிருந்து குரல் கொடுக்க இருவரும் வீட்டிலிருந்து வெளியே வந்தனர். வயதான ஒருவர் கையில் பேட்டரி லைட் ஒன்றை பிடித்தபடி இவர்களை பார்த்தார்.

"இவர் இந்த இடத்தோட வாட்ச்மேன் ஸார்.." என்றான் அந்த பையன் சின்ன குரலில்.

மகேஷ் அந்த முதியவரிடம் வந்தான். "இந்த வீட்டுல இருந்த பையன் ரகு எங்கன்னு தெரியுமா..?"

அவர் அவனை மேலும் கீழும் பார்த்தார். அவன் யாரென தெரிந்ததும் அவரது கண்களில் சிறு பயம் குடி கொண்டது.

"ரகுவுக்கு காலையில கல்யாணம்.. அதனால் எல்லோரும் மலை சிவன் கோவிலுக்கு போயிருக்காங்க.."

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top