நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

29. என் மனம் திருடிய கிளியே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் நெஞ்சில் மைவிழி திடீரென தஞ்சம் புகவும் புரியாமல் அவளது தோளை உலுக்கினான் கதிர்.

"பயந்துட்டியா மைவிழி.. ஆனா நீதானே ராட்டினம் சுத்த ஆசைன்னு சொன்ன..?" அவன் குழப்பமாக கேட்டான்.

அவள் அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள். அசடு போல் சிரித்து மழுப்பினாள். தன் கண்களில் முன்பு தென்பட்ட அந்த ஜோடியை மீண்டும் பார்த்தாள். கதிரும் அவளின் விழிகள் சென்ற வழியில் சென்று அந்த ஜோடியை பார்த்தான். எங்கோ பார்த்த முகம் போலிருந்தது. ஆனால் அது யார் என நிச்சயமாக சொல்லும் அளவிற்கு நினைவுக்கு வரவில்லை.

"யார் அவங்க..?"

"என் தங்கையும் அவளோட லவ்வரும்.." என்றவள் திடீரென தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். அவன் குழப்பமாக கீழே பார்த்தான். அந்த ஜோடி பொது இடம் என்றும் பாராமல் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

'அவங்க கிஸ் பண்ணிக்கிட்டா இவ ஏன் கண்ணை மூடுறா..? அநியாயத்துக்கு இப்படி அப்பாவியா இருக்காளே..!'

கதிர் அவளின் நெற்றியில் விரலால் தொட்டான். அவள் கைகளை விலக்கிக் கொண்டு அவனை பார்த்தாள். "எ.. என்ன..?" என்று கேட்டவளுக்கு மொத்த முகமும் குங்கும நிறத்தில் சிவந்து இருந்தது.

"அவங்க கிஸ் பண்ணிக்கிட்டா உனக்கென்ன போகுது..? அந்த கிஸ்ல சம்மந்தப்பட்ட உன் தங்கை கூட இவ்வளவு முகம் சிவந்திருக்க மாட்டா.. தெரியுமா..?" அவன் கேள்வியை கேட்க அவள் தன் கைகளால் காதுகளை பொத்திக் கொண்டாள்.

"இப்படியெல்லாம் பேசாத.. அவளுக்குதான் வெட்கம் இல்லைன்னா இந்த கருமத்தையெல்லாம் பார்த்தும் நான் எப்படி அமைதியா இருப்பது..?"

அவள் கண்களை மூடி காதுகளை பொத்திக் கொண்டு பற்களை கடித்தபடி சொன்னாள். அந்த நேரத்தில் அவனது மனம் சாத்தானின் வசம் சென்று விட்டது. அமர்ந்த இடத்திலிருந்தபடியே சின்ன சிரிப்போடு கண்களை மூடியிருந்தவளின் நெற்றியில் தன் இதழ் பதித்தான். மைவிழி பட்டென கண்களை விரித்து பார்த்தாள். எதிரே அவன் சிரிப்பு மாறாமல் அமர்ந்திருந்தான்.

மைவிழி சிறு சந்தேகத்தோடு தன் நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். "நீ என்னை கிஸ் பண்ணியா..?" என்றாள் நம்பாமல்.

சிரிப்போடு உதடு கடித்தபடி ஆமென அவன் தலையசைக்க அவள் கண்களை சிமிட்டி அவனை பார்த்தாள். "லூஸா நீ..? நாம ஒன்னும் நிஜ புருஷன் பொண்டாட்டி கிடையாது.. எனக்கெதுக்கு நீ கிஸ் தந்த..?" என்றவள் தன் கையை ஓங்கிக் கொண்டு வர, கதிர் சட்டென அவளது கையை பிடித்து தடுத்து அவளை அமர வைத்தான்.
"இங்கே நீ இப்படி சட்டுன்னு எழக் கூடாது.. உன்னால இரண்டு பேரும் கீழே விழுந்துடுவோம்.. நாம இருப்பது ராட்டினத்துல.. இதை நீ மறந்துட்டியா..?" அவன் கேட்கவும் அவள் தன்னை சுற்றி பார்த்துவிட்டு அமைதியாக அமர்ந்தாள்.

"சரி.. எதுக்கு எனக்கு கிஸ் தந்த..?" கோபத்தில் மூக்கு சிவக்க கேட்டவளின் மூக்கை பிடித்த ஆட்டியவன் "உன்னை டீஸ் பண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றான் கண்ணடித்து.

அவள் பழிப்புக் காட்டிவிட்டு கைகளை கட்டியபடி அவன் திசையிலிருந்து எதிர்பக்கம் திரும்பி அமர்ந்துக் கொண்டாள். அவளது இதயம் புல்லட் ரயிலாக ஓடுவது அவளுக்கு மட்டும்தானே தெரியும்..? 'என்ன கோளாறான மனசு இது..? ஒத்த முத்தத்துக்கு இப்படி துள்ளி குதிக்குது..? அவன் உன் காதலன் கிடையாது அறிவு கெட்ட மனமே.. அவன் டீஸ் பண்ணினானாம்.. டீஸ்..!? பைத்தியகாரா.. என்னை பார்த்தா உனக்கு எப்படிடா இருக்கு..? நீ விளையாட என் மனசு என்ன சதுரங்கமா..?'

கதிருக்கு இப்போது கூட அவளை பார்க்க பார்க்க சிரிப்புதான் வந்தது. அவளது சிறுபிள்ளை கோபம் கூட அவன் ரசிக்கும் படி அழகாய் தோன்றியது.

ராட்டினம் நின்றவுடன் வேகமாக இறங்கினாள் மைவிழி. அவளை தொடர்ந்து இறங்கி ஓடி வந்தான் கதிர். அவளின் கையை பிடித்து நிறுத்தினான். அவனிடமிருந்து தன் கையை உதறிக் கொண்டு அவனை பார்த்தாள் அவள்.

"உனக்கென்ன வேணும்..?"

"ஸாரி மைவிழி.. இனி இப்படி நடந்துக்க மாட்டேன்.." என்றவன் தன் காதுகளை பிடித்துக் கொண்டு அவளை அப்பாவியாக பார்த்தான்.

அவளுக்கு சட்டென மதுபாலன்தான் நினைவுக்கு வந்தான். "அன்னைக்கு எங்க மது ஸார் கூட இப்படிதான் அவங்க மனைவிக்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.." அவள் எதேச்சையாக சொன்னாள். ஆனால் அவன் முகம் சட்டென கருத்து போய் விட்டது. கைகள் தானாக கீழ் இறங்கி விட்டது.

மைவிழி அவனது முக மாற்றத்தை கவனிக்கவில்லை. அவனது கையை பற்றிக் கொண்டு அவனை பார்த்தாள். "மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.. நாம அந்த பக்கமா சுத்தி பார்க்க போகலாமா..?" என்றபடி அவனை இழுத்துக் கொண்டு நடந்தாள்.

அவனுக்குள் நெருப்பாக எரிந்துக் கொண்டிருந்தது பொறாமை. 'மது ஸார்..!? அந்த பொறுக்கி எப்படி அவன் மனைவிக்கிட்ட மன்னிப்பு கேட்டா எனக்கென்ன வந்தது..? ஸாராம் ஸாரு.. பால்வாடி பையனாட்டாம் மூஞ்சிய வச்சிட்டு இருக்கான்.. அவனுக்கு யாரு காலேஜ்ல வேலை தந்தது..? ஊர் உலகுல எத்தனை காலேஜ் இருக்கு.. அங்கேயெல்லாம் அவனுக்கு கிடைக்காத வேலை என் பொண்டாட்டி படிக்கிற காலேஜ்லதான் கிடைச்சதா..? எப்போதாவது தனியா சிக்கட்டும் அந்த பிஸ்கட்.. அப்படியே பல்லெல்லாம் உடைச்சி வச்சிடுறேன்..' அவன் மனசுக்குள் மதுபாலனை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான்.

கதிரின் பொறுமையை சோதிப்பது போலவே அங்கு மதுபாலன் ஜோடியும் எதிரே வந்தனர்.

"கதிர்.. அங்கே பாரு எங்க ஸார் வராங்க.." மைவிழி கைநீட்டி காட்டிய திசையில் பார்த்தவன் மதுபாலனை கண்டதும் அவளை மாற்று திசையில் செல்ல இழுத்தான்.

"நாம அந்த பக்கம் பார்த்துட்டு வந்துட்டோம்.. வா நாம இந்த பக்கம் போகலாம்.."

"அந்த பக்கம் போனோமா..?" அவள் சந்தேகமாக கேட்டாள்.

"உனக்கு ஞாபக மறதி இருக்கு போல.." என்ற கதிர் அவளை தன்னோடு இழுத்துக் கொண்டு அருகிருந்து பேய் வீடு ஒன்றிற்குள் நுழைந்தான்.

இருளாக இருந்த அந்த மாதிரி வீட்டிற்குள் நுழைந்ததும் அவளின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான் கதிர். "இங்கே எல்லாம் உன் சொந்தகாரங்கதான் இருப்பாங்க.. பார்த்து பயந்துடாம என் பக்கத்துலயே இரு.." என்றவனின் கிண்டல் புரிந்ததும் மைவிழி கலகலவென சிரித்தாள்.

"ஆமா.. ஆமா.. எல்லோரும் என் புகுந்த வீட்டு சொந்தகாரங்கதான்.." என்றவள் சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க, அவனும் அவளோடு சேர்ந்து சிரித்தான்.

"நல்லா சமாளிக்கற.. உன்னை நான் முதல் நாள் பார்த்ததுக்கும் இப்போதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு.."

ஒரு எலும்பு கூடு வழியில் வந்து பயமுறுத்த அதை விலக்கி விட்டு மேலே நடந்தவள் "அது உண்மைதான்.. உன்னோடு இருக்கும் போது நான் எனக்கே வேற ஒரு ஆள் மாதிரி தெரியறேன்.. இது நான்தானான்னு எனக்கே பல நேரத்துல சந்தேகம் வருது.. இப்பல்லாம் எனக்கு கோபம் வரதேயில்ல.. கெட்ட வார்த்தைகள் நியாபகத்துலயே இல்ல.. சந்தரை கூட மன்னிச்சி பழையபடி பிரெண்டா ஏத்துக்கிட்டேன்.." என்று சொல்லிக் கொண்டே சென்றாள்.

கதிருக்கு அவள் சொல்வதை கேட்டு வியப்பாக இருந்தது. அவனுக்குள்ளும் பல மாற்றங்கள் உண்டானது என்னவோ நிஜம்தான். அவளருகே இருக்கும் போதெல்லாம் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்துக் கொண்டிருந்தான். அதை உணர்ந்து கொண்டவனுக்கு ஏன் தங்களுக்குள் இந்த மாற்றம் என்ற கேள்விதான் எழுந்தது.

'நான் அவளை விரும்புறேன்.. அதனால் என் வாழ்க்கையில் இத்தனை மாற்றம்.. அவளும் அதுபோல என்னை விரும்புகிறாளா..?' குழப்பத்தோடு அரை இருளில் கூட நிலவாக மின்னும் அவளை பார்த்தான். அவள் சுற்றிலும் இருந்த உருவங்களை வியப்போடும் சிறு சிரிப்போடும் பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்தாள்.

ஒரு இடத்தில் கல்லறையின் மாதிரி வந்தது. அங்கங்கே பிண உருவங்கள் எழுந்து நடந்துக் கொண்டும் அமர்ந்து கை நீட்டி அழைத்துக் கொண்டும் இருந்தன‌. இவர்களுக்கு முன்னால் நடந்துக் கொண்டிருந்தது ஒரு ஜோடி. அந்த பெண் சிறு சிறு விஷயத்திற்கும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த காதலனோ கணவனோ அவனை ஒட்டிக்கொண்டு நடந்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி கத்தியபடி அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் சிரித்தபடியே அவளை வழி நடத்திக் கொண்டிருந்தான்.

மைவிழி அந்த ஜோடியை பார்த்து ஆச்சரியப்பட்டாள். "இதுல இப்படி பயப்பட என்ன இருக்கு..? இது எல்லாம் செட்டப்.. இது தெரிஞ்சும் எதுக்கு இந்த பொண்ணு இப்படி பயப்படுறா..?" மைவிழி சொன்னது முன்னால் நடந்து சென்றவனின் காதுகளிலும் விழுந்தது. அவன் இவளை திரும்பி பார்த்து முறைத்து விட்டு நடந்தான். கதிருக்கு ஏனோ சிரிப்புதான் வந்தது.

மைவிழியின் கை பிடித்து இழுத்து தனக்கு மிக நெருக்கமாக வைத்துக் கொண்டான். "டார்லிங்.. இதெல்லாம் ரொமான்ஸ் சம்பந்தப்பட்டது.. அந்த பொண்ணு பயந்து தன்னை கட்டிக்கணும்ன்னு பிளான் பண்ணிதான் அவன் அவளை இங்கே கூட்டி வந்திருக்கான்.. அவளும் இதெல்லாம் செட்டப்ன்னு தெரிஞ்சிதான் அவனை ஒட்டுண்ணி மாதிரி சுத்துறா.. இது அவங்க தங்களுக்குள்ள காட்டிக்கற காதல் சம்மந்தப்பட்டது.. என்னதான் இருந்தாலும் நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட.‌. அதுக்காக வாழ்க்கையை என்ஜாய் பண்ற மத்தவங்களையாவது அவங்க போக்குல வாழ விடு.."

மைவிழி அவனிடமிருந்து விலகி நின்றாள். "இந்த கருமத்தையெல்லாம் ரொமான்ஸ் லிஸ்ட்ல சேர்த்திருக்க பார்த்தியா.. அங்கே தெரியுது உன் காதல் கன்றாவியெல்லம்.. உன் டேஸ்ட்டுக்கு உன்னை மாதிரியே எவளாவது சீக்கிரம் கிடைக்கட்டும்.."

அவளது வார்த்தைகள் அவனுக்குள் ஏற்படுத்திய காயத்தை அவள் அறியவில்லை. "காதல் அப்படி ஒன்னும் கிடையாது.. ஒரே டேஸ்ட், ஒரே கருத்து, ஒரே ரசனை இதெல்லாம் ஒரு காதலுக்கு முக்கியம் கிடையாது.. நீ என்னை விட்டு எவ்வளவு மாறுப்பட்டிருந்தாலும் நான் உன்னை விரும்புவேன்.. என் உலகத்துக்கும் உன் உலகத்துக்கும் ஆயிரம் ஒளியாண்டுகள் தூரம்ன்னு காலம் சொன்னாலும் நான் உன்னை விரும்புவேன்.. நீயே என்னை விரும்பாம காலாகாலத்துக்கும் வெறுத்தாலும் நான் உன்னை காதலிப்பேன்.." அவன் சொல்ல சொல்ல அவனது ஒவ்வொரு வார்த்தைகளிலும் தன் சிந்தை தொலைத்து நின்றாள் மைவிழி.

"இ.. இது எனக்காகவா..?" அவன் அவளை குறிப்பிட்டு சொல்லவில்லை என முழுமையாக நம்பினாள் அவள். இருந்தும் அவளையும் மீறி வந்துவிட்டது அந்த கேள்வி. அவனோ என்ன பதில் அளிப்பது என புரியாமல் குழம்பினான்.

அவளை அவன் காதலிக்க தொடங்கி விட்டிருந்தான். ஆனால் அந்த காதல் சரிதானா என்ற ஆராய்ச்சியில் இருந்தான். தனது மனம் தன்னை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்ற பார்ப்பதாக நினைத்தான். அவன் முடிவில் அவனே உறுதியாக இல்லாதபோது எப்படி அதை அவளிடம் சொல்வான்..?

"இல்ல.. உன்னை சொல்லல.. பொ.. பொதுவா சொன்னேன்.."

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top