நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

கானல் - 3

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாற்கடலை அடைந்த பாற்கரன் தன்னவள் மேல் கொண்ட காதலால்
மஞ்சள் நிறம் கொண்டவனும் செங்கதிரோனாய் வெட்கத்தில் சிவக்க
கனவில் வரும் நாயகியின் நினைவில்
அதைவிட சிவந்தான் நம் நாயகன் துருவ் கிருஷ்ணா.

" அடேய் உன் கனவுக் காரிகை எப்படி இருப்பானு ஒரே கேள்வி தான் கேட்டேன்.
அதுக்கு ஒரு மணி நேரமா நீ பண்ணுற அலப்பறை தாங்கல சொல்ல விருப்பம் இல்லைனா அதை நேரா சொல்லிடு அதை விட்டுட்டு தயவு செய்து இந்த கருமத்தை பண்ணாத சகிக்கல" என்ற பூஷனைக் கண்டு சிரித்தவன்

" இரு டா சொல்லுறேன்" என்றவன் சில நாழிகை கண்களை மூடித் திறந்தான்.

கதவருகே நின்று அவன் செயல்களை கண்ட சாஹீ புன்னகை மயமாக நின்றிருந்தாள்.
இதுவரை அவள் காணாத துருவ் இது.

ஆறடி உயரம், மாநிறத்திற்கும் மேலான அவன் நிறம், அடர்த்தியான காற்றில் பறந்தாடும் அவன் கேசம் அனைவரையும் அதை கலைத்து விளையாட ஈர்க்கும்.
சாஹீயின் நீண்ட நாள் கனவுகளில் இதுவும் ஒன்று அவன் முடியை கலைத்து விளையாட வேண்டுமென்று.
புன்னகை நிறைந்த முகம் அனைவரையும் கட்டி இழுத்தாலும் அதில் இருக்கும் சிறு இறுக்கம் தன்னை விட்டு தள்ளியே இரு எனக் காட்டும்.
ஆறடி ஆண்மகனையும் சில நேரம் வளர்ந்த குழந்தையாக காட்டும் அவனது முகம்.
இடது கையில் எழுதும் பழக்கமுடையவன், வலது கையைக் காட்டிலும் இடது கை தான் அதிகமாக புழங்கும்.
கண்களின் மேல் இருக்கும் புருவம் இது புருவமா இல்லை காடா என்று கூறும் அளவு அடர்த்தி மற்றும் நேர்த்தியாக வளைந்திருக்கும்.
சுருக்கமாக கூற வேண்டுமென்றால்
அழகு என்றும் ஆபத்து தான் என்ற வார்த்தைக்கு இவன் தான் எடுத்துக்காட்டு போல.
கிருஷ்ணா என்ற பெயரை வைத்து விட்டு மங்கையர் கூட்டம் இல்லாத வேந்தன் இவன்.

கண்கள் மூடித் திறந்த அவனை கண் கொட்டாமல் பார்த்தாள் சாஹீ.

பூஷனின் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டவன் அவனைப் பார்த்து சிரித்தவாறு பாட

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சி பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை கூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி உன் கண்ணை
பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே
ஒரு வார்த்தை பேசாமல் தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிபோக்கன் போனாலும் வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்


சாஹீ மட்டுமில்லை சுற்றி இருக்கும் அனைவரும் மயங்கினர் அவன் குரலில்.

"பாட்டாவே படிச்சிட்டியா" என்றவனைப் பார்த்து பெரிதாக புன்னகைத்தவன் அவன் கைகளை விடுவித்து தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு மேசையின் மீது படுத்தான்.

நீண்ட கார்கூந்தல் கொண்ட
மங்கையல்ல அவள்
பிறைநெற்றி கொண்ட நிலவு
பெண்ணல்ல அவள்
விழிகளுக்கு மை தீட்டும்
பாவையல்ல அவள்
மௌன மொழிகளை மட்டுமே
பேசும் மாயக்காரி அவள்
நவநாகரிக பெண்ணோ
நான் அறியேன்
என் எண்ணத்தில் நிலைகொண்டு
உள்ளத்தில் குடி கொள்ள
கானலாய் வந்த காரிகை அவள்


என்று கூறி முடிக்க

"பேஷ் பேஷ் கவிதையும் வந்துடுத்தா" என்று கலாய்த்த சக மாணவர்களைக் கண்டு கொள்ளாமல்

"மச்சான் அவ அடிக்கடி என் கனவுல வந்துட்டே இருக்கா டா ஆனால் இன்னும் அவ முகத்தை நான் தெளிவா பார்க்கல பார்க்க முடியல அதுதான் உண்மை அவ கண்ணைப் பார்த்தா என்னால வேற எதையும் பார்க்க முடியாது அப்படி ஒரு கண்ணு சப்பா" என்றவன் மேலும் தொடர்ந்தான்.

"லாங்க் ஹேர்லாம் இல்லை எந்த மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வரானு கண்டுபிடிக்க முடியல.
ஒருவேளை மாடர்ன் பொண்ணா இல்லை டிரெடிசனல் பொண்ணா தெரியல மச்சான்.
அவளோட நெற்றி ரொம்ப பெரிசு டா ஆனால் பொட்டு வைக்க மாட்டிங்கிறா டா
அவ மஞ்சள் நிற லாங்க் சுடிதார் போட்டுட்டு நெற்றியில் சின்னதா ஒரு பொட்டு வெச்சுட்டு அவளோட அந்த அழகான விழிகளுக்கு மட்டும் மை தீட்டீட்டு அப்படியே நடந்து வரப்போ காதுகளை தீண்டிட்டே இருக்க அந்த முடியை ஒதுக்கி மட்டும் விட்டா சத்தியமா சொல்றேன் அவ தேவதை மாதிரியே இருப்பா டா மச்சான்"

"இனி ஒன்னே ஒன்னு டா மச்சான் அவ கண்ணு இருக்குல அது என்கிட்ட ஆயிரம் மொழி பேசுது டா ஏன்னு தெரியல அவ வாய் மொழி பேசுலனாலும் அவன் கண்கள் பேசுது டா என்கிட்ட ஆயிரம் மொழிகள் சத்தியமா முடியலடா"
என்றவன் பெருமூச்சு விட

அங்கே இருந்த ஒரு பெண் "கிருஷ்ணா நீ சொல்லுற உன் காரிகை பெண் அப்படியே சாஹீ மாதிரியே இருக்காடா" என்றவளை முறைத்தவன்

" ச்சசச அவ கால் தூசிக்கு வர மாட்டா என் காரிகை பத்தி பேசுறப்போ அந்த கிழவியை பத்தி பேசாத " என்றவன் திரும்ப

அவன் காரிகை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினானோ அதே போல் மஞ்சள் நிற அனார்க்களியில் நெற்றியில் சிறியதாக ஒரு பொட்டு ,விழிகளுக்கு மை தீட்டி ,காதருகே விளையாடும் அவள் சுருள் முடியை ஒதுக்கியவாறு
துருவைப் பார்த்தவாறே வந்தாள் சாஹீதா.

அனைவரும் வாயைப் பிளந்து அவளைப் பார்க்க அவனோ ச்சச என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
விளையாட்டுக்குக் கூட அவளை அவன் தன் காரிகையாக நினைக்க விரும்பவில்லை.

அவன் கூறிய அனைத்தையும் கேட்டு மனம் வாடினாலும் அவனருகே இருப்பது மட்டும் தான் அவளுக்கு மகிழ்ச்சி.

பூஷனிடம் வந்தவள் எதுவும் பேசாமல்
நிற்க

" இவ ஒருத்தி இவனை பார்க்கணும்னு வந்துருவா வந்தவ ஏன் வந்தேனு சொல்ல ஒரு காரணம் வெச்சுருந்தா கூட ஓகே அதுவும் யோசிக்கா மாட்டா" என்றவன் அவளைப் பார்க்க

அவள் அவனை முறைத்தாள்.

" ஏன் முறைக்கிற " என்று கேட்டவனிடம் மொபைலை காதருகே வைத்து அப்போ என்று சைகை செய்ய சிறுது நேரம் கழித்து தான் புரிந்தது அவன் காலையில் இங்கே வந்து முறைச்சுக்கோ என்று கூறியது..

தலையில் அடித்துக் கொண்டவன் மானு எங்கே என்று கேட்க
தெரியல என்று உதட்டைப் பிதுக்கியவளை முறைப்பது இப்போது இவன் முறையாயிற்று.

" நான் மட்டும் உன் ஆளு எங்கே இருக்கானு கரெக்ட்டா டிடெக்டிவ் வேலை பார்க்கிறேன்ல எனக்கு நீ பார்க்க மாட்டியா?" என்று கேட்டவனிடம்

" மாட்டேன் " என தலையாட்ட

அவள் தலையில் கொட்டியவன்

" அதெல்லாம் நீ ஏன் சொல்லுற அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நான் உனக்கு மாமா வேலை பார்க்கிற மாதிரி நீயும் எனக்கு மாமி வேலை பார்க்கணும் " என்றவன் செமினார் ஹாலுக்குள் வேகமாக நுழைந்த மானுவைக் கண்டான்.

" ஏன் என் செல்லம் இப்படி ஓடி வருது " என்றவன்

" மானுக்குட்டி என்னடா ஆச்சு...இந்தா வாட்டர் மொதல்ல குடி" என்றவனைக் கண்டுகொள்ளாமல்

" சாஹீ நாளைக்கு ஏதோ செமினாராம்"

" அது எப்பவும் தானே நடக்குது " என்ற பூஷனை முறைத்தவள்

"யாரோ ஒரு சிறப்பு விருந்தினர் வராங்களாம் நீ வா உன்னை நம்ம மேம் கூப்பிட்டாங்க" என்ற மானு கையோடு அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

"அப்பாடா இன்னைக்கும் நான் என் செல்லக்குட்டிங்க கூட விளையாடலாம்" என்று மகிழ்ந்த கிருஷ்ணாவை முறைத்த பூஷன்

"அப்போ இன்னைக்கு எனக்கு சிவராத்திரி தான்" என சோகமாக கூறி
மேசையில் படுத்துவிட்டான்.

எப்போதும் நடப்பது இதுதான்.
நாளை செமினார் என்று தெரிந்து விட்டால் நம் துருவ் கிருஷ்ணாவை கைகளில் பிடிக்க முடியாது அவன் செல்லக்குட்டி புறாக்களோடு இரவு முழுவதும் ஆடல் பாடல் என அந்த புறாக்களையும், பூஷனையும் ஒரு வழி செய்து விடுவான்.அடுத்த நாள் வந்து செமினாரில் தூங்கி விடுவான்.
செமினார் என்றாலே இவனுக்கு அலர்ஜி.

நாளை அந்த நிலை மாறப்போகிறது என அறியாமல் மகிழ்ச்சியாக வலம் வந்தான் நம் நாயகன்.

மாலையில் ஒரு வித சந்தோஷத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான் கிருஷ்.
மாடிக்கு சென்று விசில் அடித்து தன் செல்லக்குட்டிகளை கூப்பிட அவன் கைகள் மீது, தோள் பட்டை மீது அவனைச் சுற்றி ஒரு முப்பதிற்கும் மேற்பட்ட புறாக்கள் இருக்க அதைக் கண்டவனுக்கு காலையில் கண்ட கனவும்,தன் காரிகையின் நினைவும் வந்தது.

அவளின் நினைவால் இன்னும் ஆனந்தத்தில் திளைத்தவன் சாப்பிடக் கூட மறந்து புறாக்களுடன் ஐக்கியமானான்.

வீடு என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம்.
ஒவ்வொரு இடமும் அவனின் விருப்பத்திற்கேற்பத்தான் அமைந்திருக்கும்.
அவன் அறை கரு நீல நிற வண்ணத்தில் நட்சத்திரம் நிலா சூரியன் என ஆகாயத்தில் உள்ள அனைத்தையும் கொண்டு அமைத்திருப்பான்.

மாடியின் மேல் கார்டன் அதன் அருகில் புறாக்களுக்கான கூண்டு, அவன் அங்கேயே படிக்க ,படுத்து தூங்க என அனைத்து ஏற்பாடுகளுடன் இருக்கும் அந்த இடம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று....

காலை ஏனோ அவனுள் ஒரு இனம் புரியாத பரவசம்.
என்வென்று தெரியாமல் எப்பொழுதும் போல் தூங்குவதற்கு ஏற்ப ஒரு இடத்தைப் பிடித்து தன் வானரக்கூட்டங்களுடன் அமர்ந்து விட்டான்.

உள்ளே நுழைந்தவரைக் கண்டு அனைவரும் வியந்தனர்.
இன்று வானியல் பற்றி ஒருவர் செமினார் தரப்போகிறார், இது
இறுதி வருடம் என்பதால் ப்ராஜெக்ட் சம்பந்தமாக ஏதாவது இருந்தால் கூட அவரிடம் கேட்டுக்கொள்ளலாம் என கூறியிருந்தார் அவரது மென்டர்.

எப்படியும் ஒரு கிழவன் தான் வரப்போகிறார் என அனைவரும் எண்ணியிருக்க அங்கு வந்தவரின் வயதோ முப்பதுகளில் இருக்கும்.
அனைவருக்கும் தன் பின்னால் ஒரு பட்டம் போட ஆசை தான்...ஆனால் இவருக்கோ பெயர் என்னவோ சிறியது தான் , அவர் பட்டம் மட்டுமே ஐந்து வரிகளுக்கு மேல் இருந்தது.
ஒன்றா இரண்டா முப்பது பட்டங்கள் அவர் பெயரின் பின்னால்.

அதைக் கண்டு இன்னும் வியந்தனர்...இவர் வீட்டுக்கே போக மாட்டாரு போல மச்சான் என பூஷன் கூறிக் கொண்டிருக்க "அப்படியா தான் இருக்கும் " என்ற துருவிற்கு ஏனோ முதல் பார்வையிலே அவரைப் பிடித்து விட்டது.

எப்படியும் அவரும் தாலாட்டுத்தான் பாடப் போகிறார் என நினைத்திருக்க அவரோ ஒரு பத்திற்கும் மேற்பட்ட வானியல் சம்பந்தப்பட்ட தலைப்புகள் கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொன்னார்.

இவர் கொஞ்சம் வித்தியசமானவர் தான் போல என்று நினைத்த துருவிற்கு தெரியவில்லை இவரது பேச்சு தன் வாழ்வையே மாற்ற போகிறது, தன் தூக்கத்தையே பறிக்கப் போகிறது என்று.

செமினாரில் அவரது பேச்சு அவனுள் பல வித மாற்றங்களை கொண்டு வந்தது, அவரின் பேச்சில் ஒன்றிப்போன துருவை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சாஹீ.
அனைவருக்கும் கிருஷ்ணா என்றால் இவளுக்கு மட்டும் துருவ்...
அவனுக்கு துருவ் என்று அழைத்தால் பிடிக்காது அதனால்
மனதில் மட்டும் அப்படி அழைத்துக் கொள்வாள்.

கன்னங்களை வலது கை தாங்கியிருக்க,இடது கை பேனாவை சுற்றிக் கொண்டிருக்க அவனது கண்கள் அவர் பேசுவதைக் கவனித்துக் கொண்டருந்தது.

அவ்வப்போது அவர் கூறுவதை தன் குறிப்பேடில் எழுதிக் கொண்டிருந்தவனைக் கண்டவளுக்கு தான் அவன் கைகளில் சிக்கித் தவழும் பேனாவாக இருந்திருக்கக் கூடாதா என்ற சிறு ஏக்கம் கூட எழுந்தது.

அவளுக்குத் தெரியவில்லை
மை(இங்க்) என்ற தேவதை பேனாவின் காதலைப் புரிந்துக் கொள்ளாமல் பேனாவை விட்டு காகிதம் என்னும் அவள் காதலனை சேர்ந்துவிடும் என்பது.

நேற்று இரவு முழுவதும் தூங்காததால் லேசாக தலைவலிக்க மெத்தையில் போய் சரிந்தான் கிருஷ்ணா.

"நான் தெரியாம இங்கே வந்துட்டேன் தெரிஞ்சே யாராவது இங்க வருவாங்களா ???"
என்று அவன் கத்த இல்லை இல்லை கோபமாக இருப்பது போல் தன்னைக் காட்டிக்கொள்ள அதை கண்டுகொள்ளவில்லை எதிரில் இருப்பவள்.

நீ வந்தது தப்புதான் அதுவும் இந்த நேரத்தில் என்று அவள் அவனைப் பொரிந்து தள்ள
அவன் கண்களுக்கு அழகிய விருந்தாய் அமைந்தாள் அவள்.
ஆஹா எவ்வளவு அழகான கண்கள், பேரழகி இவள் என அவன் கண்ணதாசனின் பேரன் போல் எதிரில் இருப்பவளை வர்ணிக்க அவன் பேசுவது புரியாமல் முழித்தது அந்த அழகான கண்கள்.

திருத்திருவென முழிக்கும் கண்கள் கூட அழகாக இருந்தது அவனுக்கு.ஏன் நான் இப்படி மாறிவிட்டேன் ஒருவேளை காதலாக இருக்குமோ??? இல்லை இல்லை கண்டவுடன் காதலா இதில் தான் இவனுக்கு நம்பிக்கை இல்லையே.
ஆனால் ஏன் என் மனம் இப்படி அலைபாய்கிறது.
இதுவரை அவள் முகம் காணாத அவன் இன்று அவள் முகம் கண்டு அதிர்ந்தான்.

காதல் என்பது யாருக்கு யார்மீது எப்போது வரும் என யாருக்கும் தெரியாது.
துருவிற்கும் அப்படிதான்.
ஒருவேளை இது காதலா? இது சாத்தியமா? அவனுக்குத் தெரியவில்லை....

காரிகை வருவாள்
♥♥​
 

Author: im_dhanuu
Article Title: கானல் - 3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

Sri Ram

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super update athai yaar antha kaarigai?
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top