நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 33

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் கையை தாங்கி பிடித்த சந்தியாவை அதிர்ச்சியோடு பார்த்தார் முத்து.

"என்னை தடுத்து நிறுத்துறியா நீ..? உனக்கெப்படி இவ்வளவு தைரியம் வந்துச்சி..?"

"அநியாயம் நடக்குற இடத்துல தட்டிக் கேட்குற அளவுக்கு நியாயம் தெரிஞ்சிருந்தா போதும்.. இங்கே தப்பு என் மேலன்னா என்கிட்ட நேரா பேசுங்க.. அதை விட்டுட்டு பாட்டியை அடிக்கற உரிமை உங்களுக்கு கிடையாது.."
"என் பொண்டாட்டியை அடிக்க எனக்கு உரிமை இல்லையா..?" என கர்ஜித்தார் அவர்.

"பொண்டாட்டியா இருந்தாலும் கூட உங்களுக்கு அடிக்க உரிமை கிடையாது.. இதுதான் நிஜம்.. அவங்க உங்க பொண்டாட்டி.. உங்க அடிமை கிடையாது.."

முத்து அதற்கும் பொன்னியைதான் முறைத்து பார்த்தார்.

"என்னடி.. புள்ளையை எனக்கு எதிரா வளத்தி விட்டுருக்கியா..?" என்றவர் தன் கையை உருவிக் கொண்டார். சந்தியாவின் கன்னத்தில் பளீரென ஒரு அறை விட்டார். சந்தியா நான்கடி தள்ளி கீழே விழுந்தாள். கன்னத்தை பிடித்தபடி தாத்தாவை பார்த்தாள். அவர் கண்களை உருட்டி அவளை முறைத்தபடி அருகே வந்தார்.

"என்ன பார்க்கற..? உன்னை அடிச்சிட்டேன்னு பார்க்கறியா..? உன் பெண் திமிரை உன்னோடு வச்சிக்க.. இந்த வீட்டுல நான் வச்சதுதான் சட்டம்.. இந்த வீட்டுல யாரா இருந்தாலும் நான் வச்ச சட்டத்தைதான் கேட்டு நடக்கணும்.." என்றவர் மீண்டும் தன் கையை ஓங்கிக் கொண்டு அவளை நெருங்க அவர்கள் இருவருக்கும் இடையே ஓடி வந்து நின்றான் மூர்த்தி.

"என் பொண்ணு இவ.. இவளை நானே இதுவரைக்கும் கை நீட்டி அடிச்சதில்ல..உங்க வீட்டோட மாப்பிள்ளையா நான் இருக்கற ஒரே காரணத்துக்காக நீங்க என்னையும் என் பொண்ணையும் கேவலமா நடத்த வேண்டாம்.."

முத்து அதிர்ச்சியோடு அவனை பார்த்தார். "நீயா என்னை எதிர்த்து பேசுற..? நான் செஞ்சதை நீயும் தப்புன்னு சொல்ல வரியா..? உன் மாமன்டா நான்..! என் பையன் மேல வச்ச பாசத்தை விட நான் உன் மேல வச்ச பாசமாதான்டா அதிகம்.."

மூர்த்தி வேதனையோடு சிரித்தபடியே தன் மகளை எழுப்பி நிறுத்தினான். "நீங்க என் மேலதான் ரொம்ப பாசம் வச்சிங்க.. அதனாலதான் நீங்க பெத்த மகனோட காதலை ஏத்துக்க மனம் வரலனாலும் என்னோட காதலை ஏத்துக்கிட்டிங்க.. அதுக்காக நான் காலம் முழுக்க உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன்.. ஆனா அதுக்காக என் பொண்ணை நீங்க அடிக்கறதை பார்த்துட்டு அமைதியா இருக்கணுமா..? ஏற்கனவே நான் சக்திக்கும் அவளோட குழந்தைக்கும் பண்ண பாவத்துக்குதான் என் பொண்டாட்டியை இழந்துட்டேன்.. இனியும் முட்டாள்தனமா நடந்து என் பொண்ணையும் நான் இழக்க தயாரா இல்ல.."

முத்து அவனை அதிர்ச்சியோடு பார்த்தார். அவன் சொன்ன வார்த்தைகளில் ஒன்றை கூட அவரால் நம்ப முடியவில்லை.

மூர்த்தி தன் மகளின் கண்ணீர் வடியும் கண்களை துடைத்து விட்டார். "நீ ரெடியாகி வாம்மா.. நான் உன்னை ஸ்டேஷனுக்கு கூட்டி போறேன்.. அப்படியே உன் டிரெஸையெல்லாம் பேக் பண்ணிக்க.. நாம இந்த வீட்டுல இதுக்கு மேல இருந்தா மரியாதையே கிடையாது.. நாம நம்ம வீட்டுக்கே போயிடலாம்.."

முத்துவிற்கு அவனது முடிவு அதிர்ச்சியை தந்துவிட்டது. அவன் மீது அவர் வைத்த பாசம் அதிகம். ஆனால் அவன் நொடியில் அதை குப்பையில் எடுத்து வீசி செல்வானென அவர் நினைத்து பார்க்கவே இல்லை.

சந்தியா தனது அறைக்கு சென்ற பிறகு மூர்த்தியை தன்னோடு ஒரு ஓரமாக இழுத்து சென்றார் முத்து.
"நீ சுலபமா தூக்கி எறிஞ்சிட்டு போற அளவுக்கு இல்ல நம்மோட உறவு.. நான் பண்ண எல்லா தப்புக்கும் நீயும் உடந்தையா இருந்திருக்க.. நீ பண்ண எல்லா தப்புக்கும் நான் காரணமா இருந்திருக்கேன்.. நாம இரண்டு பேரும் எப்பவும் பிரிய முடியாத அளவுக்கு தப்பை பண்ணியிருக்கோம்.. நீ வீணா உன் வாழ்க்கையை கெடுத்துக்காத.. அமைதியா என் யோசனைக்கு கட்டுப்பட்டு போ.. சந்தியாவுக்கும் மகேஷ்க்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கிறதுதான் இருக்கற ஒரே நல்ல முடிவு.. நீயே நல்லா யோசனை பண்ணி பாரு.. உன் பொண்ணு இப்படி ஒரு நிலமையில சிக்கி வந்த பிறகும் யார் அவளை கட்டிப்பா..?"

மூர்த்தி அவரிடமிருந்து விலகி நின்று அவரை வியப்பாக பார்த்தான்.

"நீங்க திருந்தவே மாட்டிங்களா மாமா..? அவ சின்ன பொண்ணு.. அவ வாழ்க்கையை இவ்வளவு ஈஸியா முடிக்க பார்க்கிறிங்க.. மகேஷ்க்கும் சந்தியாவுக்கும் இடையில் இருக்கற வயசு வித்தியாசம் தெரியுமா..? அவளோட எதிர்கால லட்சியம் ஆசையெல்லாம் உங்களுக்கு ஒரு விசயமே இல்லையா..?"

மூர்த்தி விலகி நடக்க அவனின் கை பிடித்து நிறுத்தினார் முத்து.

"நான் சொல்றதுல இருக்கற லாபத்தை மட்டும் நீ பாரு.. இந்த மொத்த சொத்துக்கும் நீயும் உன் மகளுமே வாரிசா இருப்பிங்க.. இது என்ன கொஞ்ச சொத்தா இல்ல கொறைஞ்ச சொத்தா..?"

மூர்த்தி அவரின் கையை பட்டென தட்டி விட்டான். "உங்க புத்தி எப்போதும் மாறாது இல்ல..? இவ நான் பெத்த பொண்ணு.. உங்களை போல அத்துவான காட்டுல விட்டுட்டு போக நான் இவளை பெத்துக்கல.. இனியும் உங்களோடு இருந்தா அது எனக்கும் நல்லதும் இல்ல.. என் மகளுக்கும் நல்லது இல்ல.."

அவன் விலகி நடந்தான். அவன் இரண்டடி நடக்கும் முன்பே அவனின் முன்னே வந்து நின்று அவனை நிறுத்தினார்.

"நீ நினைக்கற மாதிரி விரும்பிய நேரத்தில் விலகி போக இது ஒன்னும் அவ்வளவு சுலபம் இல்ல.. நீ சக்திக்கு என்ன பண்ணன்னு நான் மகேஷ்கிட்ட சொன்னா என்னவாகும் தெரியுமா..? உன்னை அவன் உயிரோடு விடுவான்னு நினைக்கிறியா நீ..? அவனோட குழந்தையை அழிச்சிருக்க நீ.. உன்னோட பொண்ணை அவன் சும்மா விடுவான்னு நினைக்கிறியா..? உனக்கு இப்போ ஒரே ஒரு வழிதான் இருக்கு.. உன் பொண்ணை அவனுக்கு கட்டி வச்சி அவனை உன் பக்கம் வளைச்சி போடுற வழியை பாரு.. உனக்கு மூளை இருந்தா யோசிச்சி பாரு.. நான் சொல்ல வரது உனக்கே புரியும்..."

மூர்த்திக்கு அவரை மறுத்து பேச ஆசைதான். ஆனால் அவர் வார்த்தைகளில் உள்ள உண்மை அவனுக்கு நன்றாக புரிந்தது. மகேஷ்க்கு நடந்த உண்மை தெரிந்தால் நிச்சயம் உயிரோடு விட மாட்டான். அவன் கையில் அடிப்பட்டு சாகுவதற்கு பதிலாக முத்துவின் வழியில் செல்வதே சரியென பட்டது அவனுக்கு. அருகிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனது முகத்தில் ஓடிய யோசனை அவரை நிம்மதி பெருமூச்சி விட வைத்தது. மூர்த்தி சொத்துக்கு செவி சாய்க்கவில்லை என்றாலும் கூட உயிர் மீது உள்ள பயத்தில் தன் வழிக்கு வந்துவிட்டு அவருக்கு சந்தோசமே.

சக்தி தனது இருக்கையில் அமர்ந்து தனது பணியை கவனித்துக் கொண்டிருந்தாள். மகேஷ் லாக்கப்புக்குள் இருந்தபடியே அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

"நீங்க அவங்களை எத்தனை வருசமா விரும்புறிங்க..?" என்றான் ரகு. அவனது குரல் கேட்டு திரும்பியவன் அவன் தன் முதுகு பின்னால் நிற்பது கண்டு ஒருநொடி திகைத்து ஓரடி பின்னால் தள்ளி நின்றான்.

"ஏன்டா எருமை.. நீ இருக்கற இடத்துல இருந்தே அதை கேட்க கூடாதா..? ஒரு நிமிஷத்துல என்னையே திடுக்கிட வச்சிட்டியே.."

"நீங்க ரவுடியா.." அவன் இளக்காரமாக கேட்க அவனது தலையில் தட்டினான் மகேஷ்.

"நீயெல்லாம் என்னை எடைப்போடக்கூடாது.. நீ பண்ண மொள்ளைமாறி தனதுக்கு என்னையவே கிண்டல் பண்றியா..? அப்படியே இடுப்பெலும்புல ஒரு மிதி விட்டேன்னு வச்சிக்க அப்படியே பூமிக்குள்ள புதைஞ்சி போயிடுவ பார்த்துக்க.." அவன் பல்லை கடித்துக்கொண்டு பேச ரகு சற்று பயந்து விட்டான்.

அவனை பயத்தோடு பார்த்தபடி ஒரு ஓரமாக சென்று அமர்ந்தான். "உங்க காதல்மட்டும் உசத்தின்னு நினைக்கிறதை நிறுத்துங்க ஸார்.. நீங்க இவங்களை எவ்வளவு விரும்புருங்களோ அதை விட அதிகமா நான் சந்தியாவை விரும்பறேன்.."

மகேஷ்க்கு கோபத்தில் கை நரம்புகள் முறுக்கேறியது. அவனை அங்கேயே கொன்று விடும் கோபத்தோடு அவனருகே சென்று அவனது சட்டையை பிடித்தான். "நான் அவளை பைத்தியமா விரும்பறேன்.. ஆனா ஒரு செகண்ட் கூட அவளோட விருப்பம் இல்லாம அவளை தொடவும் நினைக்கல.. அவ விருப்பம் இல்லாம அவளை என் சொந்தமாக்கிகவும் நினைக்கல.. உன்னோட அகங்காரத்துக்கும் என்னோட காதலுக்கும் முடிச்சி போட நினைக்காத.."

"அங்கே என்ன சத்தம்..?" என்றபடி எட்டிப்பார்த்தாள் சக்தி. மகேஷ் ரகுவை சட்டையை பிடித்து மிரட்டிக் கொண்டிருப்பதை கண்டதும் அவளுக்கு கோபம்தான் வந்தது.

"உன் ரவுடியிசத்தை போலிஸ் ஸ்டேசன்லயே காட்ட ஆரம்பிச்சிட்டியா..? உன்னையெல்லாம் திருத்த ஆண்டவனால கூட முடியாது.."

மகேஷ் அவனை விட்டுவிட்டு அவளருகே வந்தான். "உன் கண்ணுக்கு நான் மட்டும் எப்பவும் கெட்டவனா தெரியறேன் இல்ல..? ஏன் சக்தி என் பக்கத்து நியாயத்தை எப்பவுமே கேட்க மாட்டேங்கற..?" அவன் அதை கேட்கையில் அவனது குரலில் இருந்த சோகம் ரகுவிற்கும் புரிந்தது. சக்திக்கும் புரிந்தது. ஆனால் அதை அவனிடம் ஒப்புக் கொள்ளதான் அவளுக்கு மனம் வரவில்லை.

"இன்னும் சந்தியா இங்கே வரல.. ஏற்கனவே நான் அந்த டென்சன்ல இருக்கேன்.. நீயும் என்னை டென்சனாக்காத மகேஷ்.. அந்த பையன் பண்ண தப்புக்கு நான் கோர்ட்டுல தண்டனை வாங்கி தருவேன்.. நீ உன் சொந்த விருப்பு வெறுப்பை காட்ட இது ஒன்னும் உன்னோட மாந்தோப்பு இல்ல.."

மகேஷ் திருப்பி பேச முயலும்முன் சக்தியின் மேஜையிலிருந்த மகேஷின் போன் சத்தமிட்டது. சக்தி அதை கையில் எடுத்துக் கொண்டு மகேஷின் அருகே வந்தாள். போனை ஸ்பீக்கரிவ் வைத்து அவனருகே நீட்டினாள்.

"இப்படியே பேசு.." என்றாள் மெல்லிய குரலில்.

பல்லிலித்து அவளை பார்த்தபடியே "ஹலோ.." என்றான் போனில்.

"நான் அம்மா பேசுறேன் மகேஷ்.." என்ற அம்மாவின் குரலில் பதட்டம் அதிக அளவில் இருந்தது.

"என்னம்மா..?"

"சந்தியா போலிஸ் ஸ்டேசன் வரமாட்டா மகேஷ்.." பொன்னி சொன்னதை கேட்டு சக்தியும் மகேஷும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.

"ஏன் அப்படி சொல்றிங்கம்மா..?" சந்தேகமாக கேட்டான் மகேஷ்.

பொன்னி வீட்டில் நடந்த பிரச்சனையை விலாவாரியாக சொன்னாள். ஆனால் மகேஷ்க்கும் சந்தியாவிற்கும் முத்து திருமணம் செய்ய நினைத்துள்ளதை அவள் சொல்லாமல் மறைத்து விட்டாள். அவள் சொன்னதை கேட்டு மகேஷ்க்கும் சக்திக்கும் கோபம் வந்தது.

"உங்க அப்பா இந்த பக்கம் வராரு.. நான் போனை வைக்கிறேன்.." என்றவள் போஃனை வைத்துவிட மகேஷ் கோபத்தோடு தனக்கு முன்னால் இருந்த கம்பியில் தன் கையை குத்தினான். கை முட்டியில் அடிப்பட்டதில் அவனது கையிலிருந்து உடனடியாக ரத்தம் கொட்டியது.

"நீ என்ன லூஸா..?" என கேட்டப்படியே கதவை திறந்துக் கொண்டு உள்ளே பாய்ந்து வந்தாள் சக்தி. தனது கைக்குட்டையை எடுத்து அவனது கையை சுற்றி கட்டிட்டாள்.

"இவனை இதுக்கு மேல நீ எதுவும் செய்ய முடியாது.. கம்ப்ளைண்ட் இல்லாத கேஸ் இது.." மகேஷ் சொன்னதை கேட்டு எரிச்சலுடன் புரிந்ததென தலையசைத்தாள் சக்தி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN