என் நெஞ்சுநேர்பவளே -8

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
8

அவசரப்பட்டு சொல்லியிருக்கக் கூடாது ரதி... இப்படி நானே பொய் சொல்லவும் என்ன பத்தி என்ன நினைச்சுருப்பாங்க .. கண்டிப்பா தப்பாதான் நினைச்சுருப்பாங்க .. அதனாலதான் எதுவும் பதில் பேசாமல் போய்ட்டாங்க...

நான் ஒரு லூசு இப்படித்தான் ஏதாவது அவசரப்பட்டு சொல்லிட்டு பின்னாடி வருத்தப்படறதே எனக்கு வேலையா போயிருச்சு..

இப்ப என்ன பண்றது ஊருக்கு போறதுக்குள்ள நாம அவங்கள பார்த்து பேசி ஆகணுமே... என்ன பண்றது? என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ரதி...

"தங்கம் அம்மாச்சிக்கு ஒரு ஒத்தாசை பண்றியா?" என்றவாறு அவள் அறைக்குள் வந்தார் சிவகாமி

" என்ன அம்மாச்சி சொல்லுங்க செய்யறேன்..."

"கொஞ்சம் கார்த்தி தம்பி வீட்டு வரைக்கும் போயிட்டு வா தங்கம்... சுந்தரி கால் சுளுக்கு எப்படி இருக்குதுன்னு கேட்டுட்டு வரியா...

"இதோ இப்பவே போயிட்டு வரேன் அம்மாச்சி.. என்று துள்ளிக் குதித்தவாறு கிளம்பினாள் ரதி..

அவர்கள் வீட்டின் வெளியே நின்று சுந்தரி அக்கா என்று குரல் கொடுத்தாள் ரதி... வந்து நின்றதோ கார்த்தி...

"ஓய் என்ன இந்தப் பக்கம்..."

"அது வந்துண்ணா!!! அம்மாச்சி சுந்தரி அக்கா கால் சுளுக்கு எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வர சொன்னாங்க.."

" ஓ அப்படியா!! அம்மா குளிச்சுட்டு இருக்காங்க... நீ வா வந்து உள்ள உட்காரு.."

ரதியும் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தாள்...

" எங்க அண்ணா உங்க பிரண்ட காணோம்...."

'உன் குரல் கேட்டதுமே அவன் உள்ள ஓடிட்டான் நீ இருக்கிற வரைக்கும் அவன் வெளியே வர மாட்டான் இது எப்படி உங்கிட்ட நான் சொல்ல முடியும்' என்று மனதில் நினைத்துக் கொண்டவன், "அவன் உள்ள இருக்காம்மா..."என்றான்...

"ஓ... "என்றவள், லேசாக இருமினாள்... "அண்ணா கொஞ்சம் தண்ணி கிடைக்குமா...? "

"இதோ இரும்மா கொண்டு வரேன்.." 'நம்மள கிளப்ப என்னம்மா நடிக்குது இந்த பொண்ணு' என்று நினைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டுவர உள்ளே சென்றான் கார்த்தி...

உள்ளே ஆதியோ அவள் பேசுவதை கேட்டவாறு அமர்ந்திருந்தான்.. அவள் கார்த்தியிடம் தண்ணி கேட்டதும் எதற்காக என்பதை புரிந்து கொண்ட அவன் அறைக்குள் இருந்து வெளியே வந்தான் அவள் உள்ளே வருவதை தடுக்கும் பொருட்டு...

ரதி அவன் அறைக்கு செல்ல எழுந்திருக்கவும் ஆதி வெளியே வரவும் சரியாய் இருந்தது...ரதி அவனிடம் பேச அருகில் செல்ல அவனோ கண்டுகொள்ளாமல் வெளியே சென்று விட்டான்...

தான் அவமானப் பட்ட உணர்வில் குன்றிப் போனாள்.. அப்போது கார்த்தி தண்ணீரை கொண்டு வந்து குடுத்தான்.. பேருக்காக கொஞ்சம் குடித்து விட்டு அவனிடம் குடுத்தாள்...

அவள் முகவாட்டத்தை பார்த்தவனுக்கு பாவமாக இருந்தது... "உன் பேர் என்னமா.. "

"ஆரதிண்ணா... "

"என்ன படிக்கிற.. "

"டுவெல்த் எக்ஸாம் எழுதிருக்கேன் ண்ணா... "

"ம்ம்... சரி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லவா... "

"சொல்லுங்க ண்ணா.. "

"ஆதி என்கிட்ட சில விஷயங்களை சொன்னான்மா... இது எல்லாருக்கும் இந்த வயசுல வர ஒரு இன்பாக்சுவேஷன் தான்... நீ இன்னும் சின்ன பொண்ணுடா... மற்ற விஷயங்களில் மனசை சிதற விடாம படிப்புல கவனம் செலுத்து.. இது லவ் பண்றதுக்கான வயசும் இல்லை.. அதுக்கான மெச்சூரிட்டியும் இருக்காது... இது ஒன்னு மட்டுமேவும் வாழ்க்கையும் இல்ல.. சரியா... "என்று அவளின் நலனிற்காய் சொல்ல,

ஆரதி தலை குனிந்தவாறு எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்... கார்த்தி சொல்வது அவளுக்கும் புரிந்து இருந்தது தான்... ஆனால் மனம் என்பது இருக்கிறதே, விடாப்பிடியாய் ஆதியிடம் செல்வதை தவிக்க முடியாமல் தள்ளாடுகிறது... அதே நேரம் தன்னை ஒருவர் குறைவாய் பேசுவதை எண்ணி தன் மேலேயே கோவமும் கொள்கிறது... இத்தனை மன உளைச்சலும் சேர்ந்து ஆதியின் மீது தான் கோவமாய் மாறுகிறது...

எதிரில் நின்ற கார்த்தியிடம் "என் மனசுல இருக்கறது காதல் இல்ல வெறும் இன்பாக்சுவேஷன் வேற எதுவா வேணா இருக்கட்டும்.... அதை நானா அவங்க கிட்ட சொன்னதுனால தான என்னை சீப்பா நினைச்சுட்டு அவமானப் படுத்தறார்..."

"அப்பிடிலாம் இல்ல ரதி.. நீ தப்பா நெனச்சுட்டு இருக்க... "

"இல்லண்ணா நான் சரியா தான் நினைச்சுட்டு இருக்கேன்... அவங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிருங்கண்ணா... "என்று சொல்லிவிட்டு கார்த்தி அவளை தடுத்தும் நிற்காமல், கண்ணில் நிறைந்த நீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்... கார்த்தியோ தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்..

அவள் கண்ணை துடைத்துக் கொண்டே வெளியே சென்றதை மறைந்திருந்து பார்த்த ஆதியின் மனம் திக்கென்றது.. வேகமாய் வீட்டிற்குள் சென்றான்..

"என்னடா ஆச்சு.. ஏன் அவ அழுதுட்டு போறா... "

"எல்லாம் நீதாண்டா காரணம்... என்ன நினைச்சுட்டு இருக்க மனசுல, அந்த புள்ளை புடிச்சுருக்குன்னு சொல்லும் போது பக்குவமா புரிய வைக்குறது இல்லையா... நீ பாட்டுக்கு அவாய்ட் பண்ணவும், அந்த பொண்ணு நீ அவளை தப்பா நெனைச்சுட்டீனு பீல் பண்ணுது... "

"ப்ச்.... நான் எதாவது பேசி அவளுக்கு எதுவும் ஹோப் குடுத்தறக் கூடாதுன்னு தான்டா விலகிப் போறேன்.... "

"சரி விடு பார்த்துக்கலாம்... சாயந்திரம் வண்டி வர சொல்லிருக்கு.. ரெடியா இரு... "என்றுவிட்டு கார்த்தி சென்றுவிட ஆதி யோசனையை அமர்ந்திருந்தான்...

வீட்டிற்கு சென்ற ஆரதி சிவகாமியிடம் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு தன்னறைக்குள் புகுந்தாள்... கண்களின் கண்ணீர் தலையணையை நனைக்க மனமோ வறண்டு போய் கிடந்தது...

மாலை நான்கு மணி... ஆதியும் கார்த்தியும் காரில் தங்கள் உடமைகளை ஏற்றிக் கொண்டு கிளம்பினர்... கார்த்தி ஆதியை பார்த்தான்.. அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை...

கார் ஆராதியின் அம்மாச்சி வீட்டை நெருங்கும்போது என்ன நினைத்தானோ" டிரைவர் அண்ணா கொஞ்சம் இங்க நிறுத்துங்க ஒரு அஞ்சு நிமிஷம் தான் பேசிட்டு வந்தரோம்..." என்றவன் கார் நின்னதும் கீழே இறங்கி வீட்டிற்குள் சென்றான்.. கார்த்தியும் அவன் பின்னாடியே சென்றான்..

உள்ளே இவர்கள் இருவரையும் பார்த்த முத்துசாமி" வாங்க சாமி... எங்க ஊருக்கு புறப்பட்டாச்சுங்களா " என்றவாரே அவர்கள் இருவரையும் வரவேற்றார்....

சிவகாமி "ஏன் சாமி இன்னும் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு போலாமே அதுக்குள்ள ஏன் போறீங்க.... "

ஆதி "இல்லைங்க பாட்டி... லீவு முடிஞ்சது.. நாளைல இருந்து காலேஜிக்கு போகணும் "

சிவகாமி "சரி சாமி பார்த்து போய்ட்டு வாங்க... "

முத்துச்சாமி "சிவகாமி என்ன புள்ளைங்கள வெறுங்கையோட அனுப்பற "

சிவகாமி "நான் ஒருத்தி !! இத மறந்து போய்ட்டேன் பார்த்தீங்களா... இருங்க சாமி வரேன் என்றவர் கைகளில் கொஞ்சம் திருநீறும் இருநூறு ரூபாய் பணத்தோடும் வந்தார்..

அதில் நூறு ரூபாயை ஆதியிடம் நீட்டினார்... அதில் பதறியவன் "அச்சோ பாட்டி காசெல்லாம் வேண்டாம்.. ஆசீர்வாதம் மட்டும் பண்ணுங்க "என்று காலில் விழுந்தவனை "நூறு வருஷம் நல்ல ஆரோக்யத்தோட நல்லா இருக்கனும் சாமி "என்று அவனை ஆசீர்வாதம் செய்தார்.. எழுந்தவன் நெற்றியில் திருநீர் வைத்து "சாமி ஆத்தா குடுக்குற காச வேண்டாம்னு சொல்லக்கூடாது.. வாங்கிக்கோ..."என்று சொல்ல அவனும் மறுப்பு சொல்லாமல் வாங்கி கொண்டான்...

கார்த்திக்கும் அதே போல் ஆசீர்வாதம் செய்து காசை தர அவனும் வாங்கி கொண்டான்... இவ்வளவு நேரமும் வெளியே வராத ரதியை எண்ணி கவலை கொண்டவன் அதை மறைத்து இயல்பாய் கேட்பது போல் சிவகாமியிடம் "பாட்டி ஆரதி வந்தா அப்பிடியே சொல்லிட்டு கிளம்பிருவோம்... "என்று கேட்டான்..

"அவ வீட்ல இல்ல சாமி... தோட்டத்துக்கு போலாம்னு பக்கத்து பொடுசுக கூட்டிட்டு போய்டுச்சு... நானும் மால நேரம் அனுப்ப வேண்டாம்னு பார்த்தேன்.. ஏனோ புள்ள முகம் காலைல இருந்து சோர்ந்து போய் கிடந்துச்சு... அவிங்க வீட்டு நெனப்பு வந்துருக்கும்... அதான் போய்ட்டு வரட்டும்னு அனுப்பி வச்சேன்... "என்று எதார்தமாய் இவனிடம் சொல்லி வைக்க அதிகமாய் எழுந்த குற்ற உணர்வில் வெகுவாய் தவித்துப் போனான்...

"சரி ஆத்தா... நாங்க போய்ட்டு வரோம்.. ரதிகிட்ட சொல்லிருங்க... "என்று சொல்லிவிட்டு முத்துசாமியிடமும் சொல்லிவிட்டு ஆதியை அழைத்துக் கொண்டு வெளி வந்தான் கார்த்தி ... காரில் எறிய ஆதி "நான் கொஞ்சம் ரதி கிட்ட பேசி புரிய வச்சுட்டு வரலாம்னு நினைக்கிறன் கார்த்தி... "

"சரிடா.. போற வழியில் தான தோட்டம் இருக்கு..பேசிட்டு போலாம்... கவலைப்படாத... "

தோட்டத்தின் அருகில் காரை நிறுத்தி விட்டு கார்த்தியும் ஆதியும் உள்ளே சென்றனர்... அங்கு ஆரதி ரோஜா செடிகளுக்கு பின்பு இருந்த மோட்டாரில் தண்ணி விழுவதை வெறித்து பார்த்தவாறு அருகில் இருந்த கல்லில் அமர்ந்திருக்க அவள் அருகில் விளையாடியபடி சிறுமியர் இருந்தனர்...

கார்த்தி அவர்களிடம் கொய்யா பழம் பறிக்கலாம் என்று சொல்லி வேறு பக்கம் அழைத்து சென்று விட ஆதி ரதியிடம் சென்றான்....

அவன் வருவதை அவள் பார்த்தாள் தான்.. ஆனாலும் மீண்டும் அவமானப்பட மனம் இல்லாமல் அமைதியாகவே அவனை கவனியாதவாறு அமர்ந்திருந்தாள்...

இப்பொழுது அவள் எதிரில் இருந்த தொட்டி மீது அவன் அமரவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்... அவன் முகத்தில் வருத்தம் இருந்தது.... அது அவளை கனியச் செய்தது...

"ஊருக்கு கிளம்பியாச்சா.... "என்று அவளே அந்த உரையாடலை தொடங்கி வைத்தாள்...

"ம்ம் ஆமாம்... "அவனிடம் வந்தது ஒற்றையாய் பதில்..

"சரி.. பார்த்து போய்ட்டு வாங்க.... "

"ம்ம்ம்... "என்றவன் எப்படி அவளிடம் ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறினான்....

ரதி "என்னாச்சு.... என்கிட்ட எதாவது சொல்லனுமா.. "

"ஆமாம்.. நான் இனி இங்க வரமாட்டேன்.. இனி போன காலேஜ் கேரியர்னு லைப் அப்பிடியே போயிரும்... "

"என் நினைவுலாம் வராதுன்னு சொல்ல வாரீங்களா.. "என்றாள் பட்டென்று...

"அது.... ஹ்ம்ம்.. சரி ஓப்பனாவே சொல்றேன் ரதி.... எனக்கு இந்த ஏஜ்ல வர லவ் மேலயெல்லாம் நம்பிக்கை இல்ல... இதெல்லாம் ஜஸ்ட் கொஞ்ச நாள் அவ்ளோ தான்.. "

"அதாவது டைம் பாஸ் மாதிரி... "சிறிதாய் ஒரு கோவம் அவளுள்... அவனுள்ளும் தான்..

"ப்ச் முழுசா கேளு.... உனக்கு இதெல்லாம் லவ் வரதுக்கான வயசும் இல்ல... சும்மா வந்த கிரஸ்ஸ லவ்வுன்னு தலைல தூக்கி வச்சுக்காத.. ஜஸ்ட் த்ரோவ் அவே... "

"அதாவது உங்களை என் மனசில் இருந்து தூக்கி போட்டுட்டு வேலைய பாக்க சொல்றீங்க... "

"ஆமாம் அப்பிடித்தான்... இதெல்லாம் இந்த டிவி சினிமா பண்ற வேலை.. உன்ன மாதிரி வளர்ற புள்ளைங்க மனச கெடுத்து வச்சுருக்கு.. அதை பார்த்துட்டு நீங்களும் அறிவில்லாம லவ்வுன்னு சுத்தறீங்க.... "

அவன் சொல்வதும் உண்மை தான் என்றாலும் தன்னுடைய காதலை அப்பிடி இல்லை என்று அவனுக்கு உணர்த்த நினைத்தாள்...

"நான் உங்களை உண்மையாவே லவ் பண்றேன்... "என்றாள் பரிதவிக்கும் உள்ளதோடு...

"ஷிட்... இவ முகத்தை பார்த்தாலே மனசுல திடம் இல்லாம போகுதே.. இப்ப கடுமையை காட்டாவிட்டால் இவளை இந்த எண்ணத்தில் இருந்து மாற்ற முடியாது என்று நினைத்தான்... மனதை கல்லாக்கினான்.. முகத்தை கடுமையாய் வைத்துக் கொண்டான்...

"இதோ பாரு எனக்கு இந்த லவ் எல்லாம் பிடிக்கல.. எனக்கும் எங்க அண்ணாவுக்கும் ஒரே வீட்டில் பொறந்த அக்கா தங்கச்சியை தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தான் எண்ணம்... அதனால் இந்த மாதிரி என்னால மனசை சிதற விட முடியாது... எனக்கு வர போற மனைவிக்கு மட்டும் தான் என்னோட முழு காதலும் அன்பும்.. அது நீயா இருக்கும்னு எனக்கு தோணல... "

"ஓ அப்போ அன்னைக்கு மஞ்சள் பூசினது... "என்றாள் வலியுடன்

"லூசா நீ... அது எல்லாருக்கும் பூசினது தான.... அப்பிடி தான் உனக்கும் பூசினேன்... அதனால் எல்லாம் லவ் வரது சுத்த பேத்தல்... "அவன் தன் மீதே வரும் கோவத்தை அவன் வார்த்தைகளில் கட்டினான்....

ரதியின் மனதோ அவன் கோவிலில் 'தன் மனைவியை தவிர வேறு ஒரு பொண்ணையும் தீண்ட மாட்டேன் 'என்று சொன்னதை நினைத்தது... இதை சொன்னால் அதற்கும் எதாவது பதில் சொல்வான் என்றே அதை சொல்லவில்லை...

பொங்கி வரும் வேதனையை தொண்டைக் குழியில் நிறுத்தியவள் " இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் உங்களை மறக்க முடியும்னு தோணலை... நான் வெயிட் பன்றேனே உங்க மனசு மாறுற வரைக்கும்... "இப்படி கேட்பது கூட அவளுக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது.. ஆனாலும் வேறு வழியில்லை இனி விட்டால் இவனை பார்க்கவே முடியாது.. அதனால் தான் தன் இயல்பையும் மீறி அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்...

"அறைஞ்சேன்னு வையி அவ்வளவு தான்.. நானும் சின்னப்புள்ள சொல்லி புரிய வைக்கலாம்னு பேசிட்டு இருக்கேன்.. நீ கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இருக்கற... உன்னை மாதிரி ஒரு பொண்ணு எனக்கு வேண்டவே வேண்டாம்.... இனி எங்கயாவது பார்த்தாலும் தயவு செஞ்சு பேசிறாத..செம்ம இரிடேடிங்கா இருக்கு... முதல்ல இவ்ளோ தூரம் வளர்த்த உங்க அப்பா அம்மா உன் மேல உயிரை வாச்சுருக்க உங்க அம்மாச்சி அப்பிச்சிக்கு நல்ல பொண்ணா இருக்க பழகு.. இப்படி நாலு நாள் பழக்கத்துல ஒருத்தனை பிடிச்சுருக்குன்னு அவன் பின்னாடியே திரியாத... "என்று பேசியவனின் கன்னம் உணர்ந்தது சுரீர் என்ற வலியை தான்...

ஆம் ரதி அவனை அடித்து இருந்தாள்.... அவள் உடல் நடுங்கி கொண்டிருந்தது...
பட்டென அவனை கையெடுத்து கும்பிட்டவள் "சத்தியமா எல்லாம் என் தப்பு தான்... நல்லா புத்தியில் உறைக்கற மாதிரி சொன்னதுக்கு ரொம்பவே தேங்க்ஸ்.... இனி மறந்தும் கூட உங்க முன்னாடி வர மாட்டேன்.. வந்தாலும் உங்க பின்னாடி நிச்சயம் சுத்த மாட்டேன்... ஒன்னு மட்டும் நியாபகம் வச்சுக்குங்க மறந்தும் கூட என் மேல காதல்னு சொல்லி நீங்க என் முன்னாடி வந்தராதீங்க... சாத்தியமா ஒரு நாளும் உங்களை ஏத்துக்க மாட்டேன்... "என்று உதடுகள் நடுங்க ஆவேசமாய் அவனிடம் உரைத்தவள் கார்த்தி அருகில் இருந்த சிறுமிகளை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றாள்....

ஆதியின் அருகில் வந்த கார்த்தி "என்னடா ஆச்சு... ஏன் அந்த புள்ள கோவமா போகுது... "

ஆதியின் முகமோ எப்போதும் இல்லாத வேதனையை பிரதிபலித்தது... இவ்வளவு தூரம் அவள் மனதை காயப்படுத்த வேண்டி வரும் என்று நினைக்கவில்லை..

கார்த்தியிடம் நடந்ததை சொன்னான்.. "என்னடா இப்படி பேசி வச்சுருக்க.... "

"எனக்கு வேற வழி தெரியலடா.. எனக்கு ரதி மைண்ட மாத்தணும்னு மட்டும் தான் எண்ணம்.. ஏன்னா இப்படி என்னை பத்தி எதிர்பார்ப்போட அவ வர போற நாட்களை கடத்தறத நான் விரும்பல... எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்... அதன் பிறகு தான் எந்த விஷயத்திலும் திடமா முடிவு எடுக்க முடியும்....

"அது சரி தான்.. நீ பேசி வச்சுருக்க பேச்சுக்கு மீண்டும் ரதி முன்னாடி போய் லவ்வுன்னு நின்ன அவ உனக்காக தான் காத்திருந்தேன்னு ஏத்துக்குவா பாரு... "

'எப்படியும் எதுவும் சுலபமா இருக்க போறதில்ல... 'என்று மனதில் நினைத்தவன், கார்த்தியிடம் "அப்போ பார்த்துக்கலாம்... "என்று கூறி அவனையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறிச்சென்றனர்...

நாமும் செல்வோம் நிகழ்காலத்திற்கு அடுத்த பதிவில்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN