நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 37

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தான் மீதி வைத்த விஷம்தான் தன் வாரிசை கொன்றிருக்கிறது என அறிந்ததும் மகேஷின் மனம் துடியாக துடித்தது. வியர்த்த முகத்தை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டான்.

"அதுக்கப்புறம் என்ன ஆச்சி..?" கரகரத்த குரலில் கேட்டான் மகேஸ்.

"நான் அதுக்கப்புறம் உன்னை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்துட்டேன்.. நான் மாந்தோப்புக்கு திரும்பிப்போய் பார்த்த போது அங்கே சக்தி இல்ல.. அவளோட வீட்டுல கூட போய் பார்த்தேன்.. அவ அங்கேயும் இல்ல.. மாமா பிணத்தை மறைக்கற அளவுக்கு வேலை வைக்காம அவளே எங்கேயோ போய் செத்துட்டா போலன்னு சொல்லி என்னை மறுபடி எங்கேயும் தேடி போக விடல.. அவ செத்துட்டான்னுதான் நாங்க நம்பியிருந்தோம். ஆனா அவ ஒரு வருசம் கழிச்சி திரும்பி வந்த பிறகுதான் அவ சாகலன்னு எங்களுக்கே தெரிஞ்சது.. உங்க அப்பா போய் அவளை பார்த்தாரு.. அவ உன் வாழ்க்கையில் மீண்டும் வரக்கூடாதுன்னு உறுதியா இருந்தாரு.. ஆனா அவ திரும்பி வரதுக்கு ஒரு வாரம் முன்னாடிதான் உன் அக்கா கர்ப்பமா இருப்பது உங்க அப்பாவுக்கு தெரிஞ்சது.. தன் மகள் வயித்துல வளரும் குழந்தைக்கு தோஷம் எதுவும் பிடிச்சிடக்கூடாதுன்னு நினைச்சி சக்திக்கிட்ட ஒரு லட்ச ரூபா பணத்தை தந்துட்டு வந்துட்டாரு.. சக்தியும் அந்த பணத்தை வாங்கிக்கிட்டு உன் பக்கம் திரும்பி பார்க்காம இருந்துட்டதாதான் நானும் நினைச்சேன்.. ஆனா அன்னைக்கு ஒரு நாள் நைட் நான் அவளை கொல்ல கத்தியோடு போனபோதுதான் அவ விலகி இருக்க காரணம் எங்களோட மிரட்டல் இல்ல உங்க அம்மாவோட கண்ணீர்ன்னு தெரிஞ்சது.. அவ நல்லவன்னு எனக்கும் தெரியும் ஆனா என் ரத்ததுல ஊறிப்போன சாதிவெறி அவளை ஏத்துக்க விடல.. இதை நான் இன்னைக்கு சொல்ல காரணம் கூட என் மகளோட வாழ்க்கை மேல இருக்கற சுயநலம்ன்னு உனக்கே தெரியும்.. எங்களை திருத்த யாராலயும் முடியாது மகேஷ்.. நீங்க வாழணும்ன்னா நீங்களேதான் போராடி வாழ்ந்துக்கணும்.."

மகேஷிற்கு தன் இதயம் நடுங்குவது தெரிந்தது. வாழ்க்கையின் போராட்டம் பற்றி நன்கு அறிவான் அவன். ஆனால் இப்படி வாழ்வே போராட்டம் என்பதைதான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

அவனால் மூர்த்தியின் எதிரே நிற்க கூட முடியவில்லை. அந்த வீட்டில் இருப்பதே அவனுக்கு நரகத்தில் இருப்பது போலிருந்தது. மூர்த்தியை தாண்டிக்கொண்டு நடந்தான். ஊர்த்தி அவனது கையை பற்றி நிறுத்தினான்.

"எதுவும் சொல்லாம போறியே மகேஷ்..?" என்றான்.

மகேஷ் சிலைப் போன்ற முகப்பாவத்தோடு அவனை பார்த்தான். "நான் இதுல சொல்ல என்ன இருக்கு மாமா..? உங்க முன்னாடி நான் அற்பமா உணர்கிறேன்.. அறியாத பிள்ளை அத்துவான காட்டுக்குள்ள இருக்கா மாதிரி தோணுது.. இவ்வளவு நாளா உங்களோடுதான் சேர்ந்து வாழ்ந்தேன். ஆனா பாருங்க எனக்கென்னவோ நீங்க எல்லோரும் புதுசா அறிமுகமான எமலோக பூதங்கள் மாதிரியே இருக்கு.. உங்களோடு இருக்க எனக்கு பயமா இருக்கு மாமா.." என்றவன் தன் கையை விடுவித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

மகேஷின் மனம் முழுக்க ஏதேதோ நினைவுகள். கால் போனப் போக்கில் நடந்துக் கொண்டிருந்தான். கொதிக்கும் நடுமதிய தார்சாலை அவனது வெற்றுப்பாதத்தை அனலாக சுட்டது. ஆனால் அதன் உணர்வை அறியக்கூட அவனது மூளையால் முடியவில்லை.

கரும்புகை கிளப்பி செல்லும் மோட்டார் வாகனங்களில் மத்தியில் பைத்தியம் போல நடந்தான். காதோரம் கத்திய வாகனமொன்றின் ஹாரன் சத்தம் கேட்டு திரும்பியவன் அந்த வாகன ஓட்டி எதையை திட்டியபடி அவனை கடநயது செல்வதை உணர்ந்தான். ஆனால் அவன் என்ன திட்டினான் என்பதை கூட அவன் செவி கேட்டுக் கொள்ள மறுத்து விட்டது.

வானில் சூழ்ந்த திடீர் கரும் மேகங்கள் துளிதுளியாக மழை நீரை சிந்தியது. தரைப்பட்ட தண்ணீர் துளிகள் இதுவரை அடித்த வெயிலின் காரணமாய் கொதித்துப்போயிருந்த தரையில் பட்டு உடனடியாக ஆவியாகி மறைந்தக் கொண்டிருந்தது.

மகேஷ் தன் மேல் விழுந்த மழைத்துளிகளை அண்ணாந்துப் பார்த்தான். அவனது கண்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணீர் மழையோடு சேர்ந்து கரைய தொடங்கியது. கன்னம் விழும் குளிர்ந்த மழையோடு கலக்கும் தன் சூடான கண்ணீரை புறங்கையால் துடைக்க முயன்றான். ஆனால் அவனது முயற்சியையும் மீறி கண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்தது. தன்னோடு போராடவே இயலாமல் அருகிருந்த ஒரு பூங்காவில் நுழைந்து சிமெண்ட் பெஞ்ச் மீது அமர்ந்தான்.

மழையோடு தானும் கரைந்து விட மாட்டோமா என ஆசைக்கொண்டான். இதுவரை தன் வீட்டில் தன் காதலியை ஏற்க மறுக்கிறார்கள் என்று மட்டுமே எண்ணியிருந்தவனுக்கு தன் சொந்த குடும்பம் தன் காதலிக்கு செய்த துரோகம் அறிந்ததும் தனது இவ்வளவு நாள் வாழ்வே வீணென உணர்ந்தான்.

கண்கள் மூடி வானத்திற்கு தன் முகம் காட்டி பெஞ்ச் மீது தலை சாய்த்தவனுக்கு தான் தனது இரண்டாம் கட்ட நரகத்து தண்டனையை அனுபவிப்பது போல இருந்தது. முதல் கட்டமாக அனுபவித்த தண்டனை இன்னும் அவன் நெஞ்சில் இருந்தது.

விஷமருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளி வந்தவன் முதலில் தேடு சென்றது சக்தியையே. அவளை காணாமல் தினம் தினம் இப்படி பைத்தியம் போல சுற்றியதை எப்படி மறப்பான் அவன்..?
இன்றும் அதே நிலையில் பைத்தியமாக சுற்றுவதை உணர்ந்தவனுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் புத்தியில் உரைத்தது. அன்று சோகமாக திரிய அவன் காரணம் சக்தி. இன்றும் அவன் சோகமாக திரிய காரணம் சக்தியேதான். ஆனால் அன்று அருகில் இல்லாதவள் இன்று இருக்கிறாளே என உணர்ந்து உடனடியாக எழுந்து நின்றான்.

போலிஸ் ஸ்டேசனை நோக்கி வேகமாக நடந்தான். சக்தியின் இவ்வளவு நாள் சோகத்தையும் இன்று ஒரே நாளில் துடைக்க ஆசைக்கொண்டான். அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாலே அனைத்தும் சரியாகி விடுமென நம்பினான்.

"சக்தி.. விஷம் கொடுக்கப்பட்ட அன்னைக்கு எப்படியெல்லாம் துடிச்சியோ..? அன்னைக்குதான் இந்தம பாவி உன்னை காப்பாத்தவும் இல்ல.. உன் வேதனையில் பங்கு கொள்ளவும் இல்லை.. ஆனா இன்னைக்கு நான் இருக்கேன் உனக்காக.. இனிமேல் எந்த சக்தியாலும் நம்மளை பிரிக்க முடியாது.. பழைய முட்டாள் மகேஷ் நான் இல்ல இனிமேலும்.. இனி எவனாவது உன் நிழலை தொட்டாக்கூட நான் அவன் கழுத்தை வெட்டப்போறேன்.. உன்னோட ஒவ்வொரு நொடையையும் கூட நானே எடுத்துக்க போறேன்.." தனது நனைந்த உடைகளை சரிசெய்துக் கொண்டான். தனது கலைந்த தலையை கைகளை கொண்டு இயல்பாக்கிக்கொண்டான். முகத்தை நிறைய முறை அழுந்த துடைத்துக் கொண்டான்.

மகேஷ் ஸ்டேசனுக்குள் நுழைந்து சக்தியின் அறையை நோக்கி நடந்தான். வனஜா அவனை பார்த்ததும் அவனருகே வந்தாள்.

"மகேஷ் இந்த நேரத்துக்கு இங்கே என்ன பண்ற..? இன்னைக்கும் எவனோட கையையும் காலையும் உடைச்சிட்டு நீயே சரணடைய வந்திருக்கியா..?" வனஜா கேட்ட கேள்விக்கு இல்லையென தலையசைத்து விட்டு சக்தியின் அறைக்குள் நுழைந்தான். காலியாக இருந்த அவளது இருக்கையை பார்த்து விட்டு முகம் சுருங்கி வனஜா பக்கம் திரும்பினான். "சக்தி எங்கே..?"

"அவ இங்கே இல்ல.. ஒரு முக்கியமான வேலையா வெளியூர் போயிருக்கா.."

"எங்கே..?" என கேட்டவனுக்கு எப்படி பதிலை சொல்வதென ஒரு நொடி யோசித்தாள் வனஜா.

"வேலை விசயமா போயிருக்கா.. எங்கே போறன்னு எங்கிட்ட கூட சொல்லாம போயிருக்கா.. சீக்கிரம் வந்துடுவேன்னு சொல்லிட்டுதான் போயிருக்கா.."

மகேஷ்க்கு முகம் வாடிப்போனது. அவளை உடனடியாக சந்திக்க முடியாமல் போனதே என்று வருந்தினான்.

"என்ன விசயம் மகேஷ்..? ஏதாவது முக்கியமான விஷயம்ன்னா போன் பண்ணி பாரேன்.."

"போன் எடுக்கல அக்கா.." அவன் சோகமாக கூற, "ப்ளைட்டல இருப்பா போல.. கொஞ்சம் நேரம் கழிச்சி போன் பண்ணி பாரேன்.." என்றாள் வனஜா.

அவனுக்கு இதயம் ஒரு நொடி நின்று விட்டது. "ப்ளைட்டா..? என் தொல்லை தாங்காம வெளிநாடு எங்காவது கிளம்பிட்டாளா..?" அவசரமாக கேட்டவனை சிரிப்போடு பார்த்தாள் அவள்.

"இல்லப்பா.. வேலை விசயமா எங்கேயோ பக்கத்துலதான் போயிருக்கா.. இன்னும் கொஞ்ச நேரம் கழுச்சி போன் பண்ணி பாரு.. அவளே மீதியை சொல்வா.."

வனஜா நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சொன்னாலும் கூட அவனுக்கு என்னவோ சிறு சந்தேகமாகவே இருந்தது. அதனால் ஸ்டேசனை விட்டு வெளியே வந்த மறு நிமிடமே குமரனுக்கு போன் செய்தான்.

"மாமா சக்தி எங்கே..?" அவன் அவசரமாக கேட்க எதிர் முனையில் குமரன் கலகலகவென சிரித்தார்.

"சக்தியை நான் என்ன என் பாக்கெட்டுக்குள்ளயா வச்சிருக்கேன்..? அவ அவளோட ஸ்டேசன்ல இருப்பா.."

"இங்கே இல்ல மாமா.. ஏதோ வேலை விசயமா அவ வெளியூர் போனதா ஸ்டேசன்ல சொன்னதாலதான் அவ எங்கேன்னு தெரிஞ்சிக்க உங்களுக்கு போன் பண்ணேன்.."

இந்த தகவல் குமரனுக்கே புது தகவல். அவருக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் கூட மகேஷிடம் வீணாக வார்த்தைகளை விட்டி விடக்கூடாதென புரிந்தது.

'சக்தி சொல்லாம கொள்ளாம எங்கே போனா..? இவன்கிட்ட நான் என்னன்னு சொல்வேன்..?' அவர் குழம்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சக்தி அழைப்பது போனில் தெரிந்தது.

"மகேஷ் ஒரு செகண்ட் லைன்லயே இரு.. ஒரு முக்கியமான கால் வருது.."

சக்தியின் அழைப்பை ஏற்றவர் "எங்கே போன என்கிட்ட கூட சொல்லாம.. உன் லவ்வர் என்னை போன் பண்ணி டார்ச்சர் பண்றான்.. அவன்கிட்ட நான் என்னத்தை சொல்றது..?" என கோபமாக கேட்டார்.

"ஸாரி ஸார்.. என் அண்ணன் செல்வா அவசரமா ஆக்ரா வரச்சொல்லிட்டான்.. ப்ளைட் பிடிக்கற அவசரத்துல உங்கக்கிட்ட சொல்ல முடியாம போயிடுச்சி.. இங்கே இறங்கின மறு நொடியே உங்களுக்குதான் போன் பண்ணேன்.. அப்புறம் ஒரு முக்கியமான வேண்டுக்கோள்.. அந்த ரவுடியை என் லவ்வர்ன்னு சொல்லாதிங்க.."

"உங்களுக்குள்ள இருக்கற காதல் ஊர் அறிஞ்சதுங்கற விசயத்தை மறந்துட்டு என்கிட்ட பேசாதே.. அவன் லைன்லதான் இருக்கான்.. நீ இப்படியே பேசினா நான் கான்ப்ரன்ஸ் காலா போட்டு விட்டுடுவேன்.."

"ஸார்.. " என அவள் இழுக்க அவர் சிரித்தார்.

"என்ன பாட்டு மாதிரி இழுத்துட்டு இருக்க..? உன் ஆளு காலை கட் பண்ணிக்கிட்டு போயிட்டான்.. இல்லன்னா கான்பரன்ஸ் காலா போட்டு கதை பேசிட்டு இருந்திருக்கலாம்.." என்றவர், "என்ன விசயமா ஆக்ரா போனன்னனு சொல்லவே இல்லையே.." என்றார் நினைவு வந்தவராக.

"எனக்கும் தெரியல ஸார்.. செல்வாவை பார்த்த பிறகுதான் எனக்கே தெரியும்.. அங்கே அவன் காலை கட் பண்ணான்னு சொன்னிங்க இல்ல..? இங்கே பண்ணியிருக்கான்.."

"அப்படின்னா நான் காலை கட் பண்ணிக்கிறேன்.. சிவ பூஜையில் கரடி நான் எதற்கு..?" என்றவர் சிரிப்போடு அழைப்பை துண்டித்துக் கொள்ள, சக்தி மகேஷின் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top