நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 43

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகேஷ் அவனுக்கும் சந்தியாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்க இருப்பதை பற்றி சொன்னதும் சக்தியின் முகத்தில் இருந்த மொத்த ரத்த ஓட்டமும் நின்று போனது.

"நீ சொல்வது நிஜமா மகேஷ்..? உங்க அப்பாவுக்கு பைத்தியமா என்ன..? அந்த பொண்ணு வயசென்ன... உன் வயசென்ன..?" செல்வா கோபத்தோடு கேட்டான்.

"இதே சாக்குல நீ என்னை கிழவன்னு முத்திரை குத்தாத.. இங்கே விசயம் என்னன்னா அவ என்னோடு என் வீட்டுக்கு என் மனைவியா வருவாளான்னுதான்.." மகேஷ் சக்தியை சுட்டிக் காட்டி சொன்னான்.

சாமிநாதனும் கலையும் அவளது பதிலுக்கு காத்திருந்தனர்.

"சக்தி.. இது உனக்கான கடைசி சான்ஸ்.. இதையும் விட்டுட்டன்னா அப்புறம் நீ ஆயுசுக்கும் அவனை நினைச்சி மட்டும்தான் வாழ முடியும்.." என புத்தி கூறினான் செல்வா.

அவள் மௌனமாகவே இருந்தாள்.

சக்தி அமர்ந்திருந்த கட்டிலின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் மகேஷ். "நீ எனக்கு நிஜமான பொண்டாட்டியா இருக்க வேண்டாம்.. ஒரு உதவியா நினைச்சி என்னோடு நடிக்க வா.. உனக்கு நான் சம்பளம் கூட தரேன்.. உனக்கும் எனக்குமான காதல் போராட்டத்துல அந்த அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிட வேண்டாம்.."

"என்னடா இது சம்பளம்ன்னுலாம் பேசுற..?" என அதிர்ச்சியாக கேட்டான் செல்வா.

"வேற என்ன பண்ண சொல்ற..? இவளுக்காக காலம் முழுக்க வெயிட் பண்ண நான் ரெடி.. ஆனா என் அப்பா ரெடி இல்லையே.. இவளை தவிர நான் வேற யாரை கட்டிட்டு போய் நின்னாலும் என் அப்பா அதை நாடகம்ன்னு நொடியில கண்டுபிடிச்சுடுவாரு.. எனக்கான தலையெழுத்தே இவதான்னு ஆன பிறகு இப்படியாவது கெஞ்சலாம்ன்னுதான் தோணுதே தவிர வேற ஏதும் நினைவுக்கு வர மாட்டேங்குது.." மகேஷ் தரையில் அமர்ந்து தன் கைகளில் தன் முகம் புதைத்துக் கொண்டான்.

"என்னடா பைத்தியம் மாதிரி பண்ணற..? எழுந்து மேல உட்காருடா.." சாமிநாதன் அவனை எழுப்பி கட்டிலில் அமர வைத்தான்.

"என் வீட்டுல நடக்கற விசயங்களை பார்த்தா எனக்கு பைத்தியம்தான் பிடிக்கும் போல இருக்குடா.. எனக்கு மட்டும் ஏன்டா இப்படியெல்லாம் நடக்குது..? எல்லோரும் என்னை ஏமாத்துற மாதிரி இருக்கு.. இந்த மொத்த உலகத்துல நான் மட்டும் அனாதையா இருக்கா மாதிரி தோணுது.. எல்லாம் இவளாலதான்.." அவன் தன் போக்கில் புலம்பினான்.

"உனக்கு எதுக்குடி இவ்வளவு ஆணவம்.. அவன்தான் இவ்வளவு கெஞ்சறானே.. இப்பவாவது அவனுக்கு சரின்னு சொல்லி தொலையேன்டி.." கலை சக்தியை பிடித்து திட்டினாள்.

"அவனோட வீட்டுக்கு அவன் இஷ்டப்படியே போறேன்.." சக்தி ஒருவழியாக அவர்களோடு ஒத்துப் போனாள்..
மகேஷ் அவளை ஆச்சரியமாக பார்த்தான். "நிஜமாதான் சொல்லுறியா..?"

"ஆமா.. இது உனக்காகவோ இல்ல எனக்காகவோ இல்ல.. சந்தியாவுக்காக.. போலிஸும் ரவுடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊரே என்னை ஒரு மாதிரி பார்க்கும்.. இருந்தாலும் உன் வீட்டுக்கு நான் சந்தியா வாழ்க்கை நாசமாக கூடாதேன்னு வரேன்.."

மகேஷ் பெருமூச்சு விட்டான். 'இவளை எல்லாம் ஆண்டவனால கூட திருத்த முடியாது..'

"இதுக்கு நான் எவ்வளவு அமௌண்ட் தரணும்..?" மகேஷ் வேண்டுமென்றே கேட்டான்.

சக்தி ஆத்திரமாகதான் இருந்தது. ஆனாலும் அவனை அவன் போக்கிலேயே விட தோன்றியது. "மாசம் பதினெட்டாயிரம் கொடு.."

"சக்தி... என்னதிது..?" கலை அதிர்ச்சியோடு கேட்டாள்.

அவளை கண்டுக் கொள்ளாமல் மகேஷை பார்த்தவள் "ஒரு பாண்ட் பேப்பர் வாங்கி கண்டிஷன்ஸை எழுதி கையெழுத்து போட்டுக்கலாம்.." என்றாள்.

மகேஷ்க்கு உள்ளுக்குள் ஆத்திரம் வந்தாலும் வெளியே சரியென்றே தலையாட்டினான்.

"அப்ப சரி.. செல்வா நீ கலை வீட்டுல எத்தனை நாளோ இருந்துட்டு கிளம்பு.. நான் இப்ப மகேஷோடு கிளம்பறேன்.." என்றபடியே எழுந்து நின்றாள்.

"இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போ சக்தி.." என்றாள் கலை.

"இன்னொரு நாள் வரேன்.." என்றவள் மகேஷிடம் "கிளம்பலாமா..?" என்றாள்.

அவன் தலையசைத்து விட்டு எழுந்து நின்றான்.

"இவங்க சேர்ந்து போறதை பார்க்கும் போதே எனக்கு பக்குன்னு இருக்கு.." என சாமிநாதன் புலம்பியது இருவரின் காதிலும் விழுந்தது. ஆனால் இருவரும் அதை கண்டுக் கொள்ளவில்லை.

இருவரும் இதற்கு பிறகு என்ன செய்வதென்ற யோசனையில் மூழ்கி இருந்தனர்.

இரண்டு மணி நேரம் கடந்த பிறகு இருவரும் வழியோரம் இருந்த ஹோட்டல் ஒன்றினுள் அமர்ந்திருந்தனர்.
சக்தி தன் கையிலிருந்த பாண்ட் பேப்பரை மகேஷிடம் தந்தாள்.

மகேஷ் அவளை பார்த்தபடியே அதை கையில் வாங்கினான். அதில் இருந்தவற்றை படிக்க ஆரம்பித்தான்.

"1. நீ என் வீட்டாளுங்களை எப்படி நடத்தினாலும் நான் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன்.

2. உன்கிட்ட நான் எந்த பொய்யுமே சொல்ல மாட்டேன்.

3. என் வீட்டாளுங்க முன்னாடி நீ என்ன சொன்னாலும் நான் சரின்னு தலையாட்டுவேன்.

4. எல்லோர் முன்னாடியும் நாகரீகமாக நான் உன்னை நடத்துவேன்.

5. நீ என்னை எப்படி நடத்தினாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்.

6. நீ எத்தனை பொய்கள் சொன்னாலும் நான் அந்த பொய்களுக்கு ஏத்த மாதிரி நடந்துப்பேன்.

7.இரண்டு பேரும் தனிமையில் இருக்கும் சூழல் வருகையில் நான் உன்னை சுண்டுவிரல் கூட தீண்ட மாட்டேன். அதை நான் மீறினால் நீ என் சுண்டு விரலை கூட கத்தரிக்கலாம் என நான் அனுமதி தருகிறேன்.." மகேஷ் முறைப்போடு அவளை பார்த்தான்.

"அடுத்ததை படி.."

"8. நீ ஏற்க போகும் இந்த கடும் பணிக்காக நான் என் மாந்தோப்பையும் என் வீட்டையும் உன் பெயருக்கு எழுதி தருகிறேன்.."

படித்து முடித்த பேப்பரை அவளிடமே நீட்டியவன் "உன் உதவிக்கு நான் எங்களோட சொத்துல பாதியை உனக்கு தரணுமா..? நியாய தேவதையே என் எதிர்ல வந்து உட்கார்ந்த மாதிரி இருக்கு.. உன்னை போலிஸ் வேலைக்கு எடுத்ததுக்கு பதிலா கோர்ட்ல ஜட்ஜா நியமிச்சிருக்கலாம்.. உன் ஒப்பந்த பேப்பர்லதான் எவ்வளவு நீதி நேர்மை..!?" அவன் நக்கலாக கேட்டான்.

"இந்த கிண்டலெல்லாம் வேண்டாம்.. ஒத்தை வார்த்தை மாத்தி பேசாம அதுல கையெழுத்தை போடு.." என்றவள் பேனாவை அவனிடம் நீட்டினாள்.

'எல்லாம் என் தலையெழுத்து.. இரு.. எப்படியும் என்கிட்ட ஒருநாளைக்கு வசமா சிக்குவ.. அப்ப இதுக்கு பதிலுக்கு பதில் பழி வாங்கிடுறேன்..' என்றவன் கையெழுத்தை போட்டு அவளிடம் நீட்டினான்.

"சரி வா.. என் வீட்டுக்கு முதல்ல போகலாம்.. நான் என் அப்பாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்..:
மகேஷ் தலையசைத்து அவளோடு அவள் வீட்டிற்கு கிளம்பினான்.

சக்தியின் அப்பா சக்தி வீட்டுக்குள் நுழைந்த உடனே "என் பேரன் எப்படி இருக்கான்ம்மா..?" என்றார்.

சக்திக்கு பின்னால் அந்த வீட்டிற்குள் நுழைந்த மகேஷ் "பேரன் யாரு..?" என்றான் சக்தியிடம்.

"செல்வாவோட பையனைதான் பேரன்னு அப்பா சொல்றாரு.." யோசிக்காமல் பொய்யை சொன்னாள் சக்தி.

"அவனுக்கு ஒரே பொண்ணுன்னு அவன் சொன்னானே.?" குழப்பமாக கேட்டான் மகேஷ்.

சக்தி அவனை ஆச்சரியமாக பார்த்தாள். "அவன் இதை உன்கிட்ட எப்ப சொன்னான்.?"

"நாங்க பேசிக்கும் போது சொன்னான்.."

"ஓ.. அவன் ஒரு பையனை தத்தெடுத்து வளர்க்கறான்... அந்த பையனை பத்தி அவன் யார்க்கிட்டயும் அதிகம் சொன்னதில்ல.. அப்பா அந்த பையனை பத்திதான் கேட்கறார்.." என அவனுக்கு பதில் சொல்லியபடியே அப்பாவை பார்த்தாள் சக்தி.

அப்பா அவளது பொய்க்கு என்ன சொல்வதென தெரியாமல் மொத்தமாக தலையசைத்து வைத்தார்.

"ஏன் தம்பி அங்கேயே நின்னு பேசிட்டு இருக்கிங்க..? இப்படி வந்து உட்காருங்க,," அப்பா நாற்காலி ஒன்றை கை காட்டினார்.

மகேஷ் தயக்கமாகவே வந்து அமர்ந்தான்.

"அப்பா நானும் மகேஷும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.." என்ற சக்தி தன் அறைக்குள் நுழைந்தாள்.

"மறுபடியுமா..? இப்பவா..? இந்த வயசுலயா..?" அவருக்கே என்ன கேள்வியை கேட்பதென தெரியவில்லை.

சக்தி தன் அறையிலிருந்து எட்டி பார்த்தாள். "மறுபடியும்தான்.. இப்பதான்.. இந்த வயசுலதான்.." அப்பாவிற்கு பதில் அளித்தவள் "மகேஷ் இங்கே கொஞ்சம் வரியா..?" என்றாள் மகேஷிடம். அவன் அப்பாவை தயக்கமாக பார்த்தான்.

"அவரை என்ன பார்க்கற..? சீக்கிரம் வா.." என்றாள்.

மகேஷ் எழுந்து அவளது அறைக்கு சென்றான்.

"எதுக்கு அவர் முன்னாடி கூப்பிடுற..?" என்றவனின் அடிவயிற்றில் ஓங்கி குத்தியவள் "உன்னை நான் ரொமான்ஸ் பண்ண கூப்பிடல.. அதோ அங்கே மேல இருக்கற பெட்டியை எடுத்துக் கொடுன்னு சொல்லதான் கூப்பிட்டேன்.." என்றாள்.

மகேஷ் தன் அடிவயிற்றை பிடித்துக் கொண்டே அவளை முறைத்து விட்டு அவள் கேட்ட பெட்டியை எடுத்து தந்தான்.

'என்ன விட குட்டையா இருக்கான்னு சொன்னா அதுக்கும் அடிப்பாளே..' என நினைத்தபடியே அவன் கட்டிலில் அமர்ந்தான்.

சக்தி தனது துணி மணிகளை பெட்டியில் அடுக்கினாள்.

சக்தியின் முகத்தை பார்த்தான் மகேஷ். "நீ என் வீட்டாளுங்களை பழி வாங்கதான் வரப்போறேன்னு நல்லாவே தெரியுது.. ஆனா சந்தியா பாவம்.. அவளை மட்டும் உன் பழிவாங்குற லிஸ்ட்ல இருந்து எடுத்துடுறியா..?"

சக்தி பொங்கி வந்த தன் சிரிப்பை அடக்கியபடி அவனை பார்த்தாள். "என்னை கொடுமைகாரின்னு நீயே முடிவு பண்ணிக்காத.."

அவள் தனக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்ட பின் அவனை பார்த்தாள். "போகலாம்.." என்றாள்.

இருவரும் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர். செல்லும் வழியில் இருந்த கோவிலில் தன் வண்டியை நிறுத்தினான் மகேஷ்.

சக்தி அவனை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு கீழே இறங்கினாள். அருகிருந்த கடைக்கு சென்று இரு மாலைகளையும் ஒரு மஞ்சள் கொம்பும் ஒரு மஞ்சள் கயிரும் வாங்கிக் கொண்டு வந்தாள்.

காரில் வந்து அமர்ந்தவள் அவனிடம் ஒரு மாலையை தந்தாள். "இதை நீ போட்டுக்க.." என்றவள் தன் கழுத்தில் மற்றொரு மாலையை போட்டுக் கொண்டாள். அவளே மஞ்சள் கயிறோடு மஞ்சள் கொம்பை இணைத்துக் கட்டினாள். அதை அவள் தன் கழுத்தில் கட்டிக் கொள்ள முயல, அவளின் கை பற்றி நிறுத்தினான் மகேஷ்.

"நான் உயிரோடுதான் இருக்கேன்.. அதுவும் செலை மாதிரி உன் பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கேன்.. இந்த தாலியை நானே உன் கழுத்துல கட்டி விடுறேனே.." ஆர்வமாக கேட்டான் அவன்.

"இது நடிப்புங்கறதை மறந்துட்டு பேசாத.. நான் உன் வீட்டுக்கு நடிக்கதான் வரனே தவிர உன்னோடு குடும்பம் நடத்த வரல.. சந்தியாவை மனசுல வச்சிக்கிட்டு எதுவா இருந்தாலும் பேசு.."

மகேஷின் முகம் பீஸ் போன பல்பாக மாறிப்போனது. 'இதுக்கு மேல இவளோட டார்ச்சரை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே ஆண்டவா..' அவனின் புலம்பல் ஆண்டவனுக்கே கேட்டு விட்டது போல. டண் டண்னென கோவிலில் இருந்து மணியோசை கேட்டது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and commend பண்ணுங்க...

பிரதிலிபி ஆப்ல காவிய தலைவன் சிறுகதை போட்டிக்கு நான் அனுப்பிய இல்லோர் ஒக்கல் தலைவன் (அதியமான் அஞ்சி) வெற்றி பெற்றிடுச்சி. இதை உங்களோட பகிர்ந்துக்கறதுல ரொம்ப சந்தோசப்படுறேன் நட்புள்ளங்களே..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top