நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

43. சிறகின் மென்மையே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மைவிழி கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் அந்த அறையை சுற்றிப் பார்த்தாள்.

அறை முழுக்க புகைப்படங்கள். அத்தனையிலும் மைவிழி சிறு பெண்ணாக ஒரு சிறுவனுடன் சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தாள்.

"ஓ மை காட்.. அப்படின்னா இதெல்லாம் நிஜம்தானா..? நான் இத்தனை வருசமா இந்த இடத்தையும் இந்த பையனையும் கனவுல பார்த்ததா நினைச்சிட்டு இருந்தேன்.." தன் மனதில் இருந்ததை சற்று சத்தமாகவே சொல்லி விட்டாள் மைவிழி.

அவளது கனவுகளை கொள்ளையடிப்பவன் நிஜம். அந்த பையனை கவனித்து பார்த்தாள். இத்தனை வருச கனவுகள் கடந்த பிறகும் கொஞ்சம் கூட முகம் மாறாமல் அதே போல இருந்தான் அவன். அவளை விட சற்று பெரியவன்தான். ஆனால் இத்தனை வருட காலத்தில் இவள் வளர்ந்து விட்டாள். ஆனால் கனவில் அவன் வளரவே இல்லை. அதனால் நிதர்சனத்தை சட்டென புரிந்துக் கொள்ள முடியவில்லை அவளால்.

"ஆனா இந்த போட்டோஸ் உங்களுக்கு எப்படி கிடைச்சது..?" என கேட்டவளை கண்டு சுவாரசியம் இழந்தாள் ருத்ரா.

"உன்னோடு கூட இருக்கற இந்த பையன் யாருன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா உனக்கு..?"

மைவிழி புகைப்படங்களை மீண்டும் பார்த்தாள். கனவில் பார்த்தவன் என இவ்வளவு நாள் நினைத்தவளுக்கு அவன் கனவில்லை என்பதே பெரிய ஆச்சரியம்தான். அந்த ஆச்சரியத்திலிருந்து வெளிவரவே அவளுக்கு இன்னும் ஒரு வாரங்கள் கூட ஆகும். அப்படி இருக்கையில் அந்த பையன் யாரென அவளால் எப்படி சட்டென யூகிக்க முடியும்..?

"இந்த குட்டிப்பையன் எங்கே இருக்கானோ யாருக்கு தெரியும்..?" என அவள் கேட்டதை கண்டு ருத்ராவிற்க்கு தூக்கிவாரி போட்டது.

"அவன் இன்னேரம் வளர்ந்திருப்பான்.. இன்னுமா குட்டி பையனா இருப்பான்..?"

"அட ஆமா இல்ல.. நானே வளர்ந்திருக்கும் போது அவனும்தான் வளர்ந்திருப்பான்.." மைவிழியின் பதில் கேட்டு ருத்ரா மானசீகமாக நெற்றியில் அறைந்துக் கொண்டாள்.

'லூஸுக்கு ஏத்த லூஸுதான்..'

அந்த புகைப்படங்களின் அருகே சென்றாள் மைவிழி. ஒரு புகைப்படம் அவளை மிகவும் கவர்ந்து விட்டது. அந்த பையனும் அவளும் இரு குச்சிகளை வைத்து போலியான கத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பாவாடை சட்டையில் முகமெல்லாம் சிரிப்போடு இருந்த தன்னை பார்க்கும் போது இது கனவுதான் என மூளையில் ஒரு குரல் மீண்டும் கேட்டது. ஆனால் அந்த பையனின் கண்களில் தெரிந்த உயிர்ப்பு அவளுக்கு உண்மைதான் இது எனும் நம்பிகையை தந்தது.
"க்யூட்டி பாய்.. வேர் ஆர் யூ..? இத்தனை வருசம் கழிச்சும் நான் உன்னை மறக்கவே இல்லை தெரியுமா..? ஆரஞ்சு மிட்டாய்.. நீ கத்து தந்த எதிர்த்து பேசுற குணம், வீரம்.. எதையுமே நான் மறக்கல.. உனக்கும் என்னை ஞாபகம் இருக்கா..?" புகைப்படத்தோடு பேசிக் கொண்டிருந்தவளை கண்டு கண்களை சுழற்றினாள் ருத்ரா. 'போட்டோக்கிட்ட கேட்டா அது எப்படி பதில் சொல்லும்..'

"அவன் யாருன்னு தெரியுதா..?" என்றாள் மீண்டும்.

"அழகா இருக்கான் இவன்.. அதனால்தான் இவனை நான் இவ்வளவு நாள் கனவுன்னு நினைச்சிருக்கேன்.. ஆனா யாரா இருப்பான்னு தெரியல.. உங்க வீட்டுல ஏன் இந்த போட்டோஸ் இருக்கு..?" என மைவிழி கேட்டபிறகே அவளுக்குள் சிறு சந்தேகம் வந்தது. மீண்டும் புகைப்படங்களை பார்த்தாள்.

'ஒரு வேளை இது கதிரா இருக்குமோ..?' நினைக்கும் போதே அவளுக்கு இதயம் எக்கசக்கமாக துடித்தது.

"இது கதிரா..?" என கேட்டு விட்டு ருத்ராவை திரும்பி பார்த்தாள். ருத்ரா ஏதும் சொல்லவில்லை. ஆனால் ருத்ராவின் தலைக்கு மேல் இருந்த ஒரு புகைப்படம் அவளுக்கான பதிலை சொல்லிவிட்டது.

புகைப்படத்தில் அந்த சிறுவன் வட்டமான ஒன்றை மைவிழியிடம் காட்டிக் கொண்டிருந்தான். அது அன்று ஒருநாள் கதிர் கையில் பார்த்த நசுங்கிய நாணயம் என இப்போது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

மீண்டும் அந்த புகைப்படங்களை சுற்றி பார்த்தாள். "எனக்கு இது கனவு மாதிரி இருக்கு அக்கா.. கதிர்தான் அந்த கனவு பையனா..?" என அதிர்ச்சியோடு கேட்டவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள் ருத்ரா.

"கதிர்தான்.. எல்லாத்தையும் ஒரே டைம்ல யோசிச்சா உனக்கு இது கனவு மாதிரிதான் தோணும்.. இது உனக்கு ரொம்ப அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருக்கு இல்ல.. இந்த விசயம் கதிருக்கு தெரிஞ்சா எப்படி ஆச்சரியப்படப்போறானோ தெரியல.. சரி வா.. வெளியே உட்கார்ந்து பொறுமையா யோசிப்ப.."

ருத்ரா மைவிழியை அழைத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினாள். அறை வெளியே இருந்த அம்மா இவர்களை கண்டதும் அதிர்ச்சியடைந்தாள்.

"ருத்ரா.. நீ என பண்ணிருக்க..?" என்றாள் அதிர்ச்சி குறையாமல்.

"அவளுக்கு அவளோட லைப்ல சந்திச்ச ஒருத்தரை பத்தி தெரிஞ்சிக்க எல்லாவித உரிமையும் இருக்கு அம்மா.. இதை ஏன் நீங்க மறைக்க பார்க்கறிங்க..?"

"ஆனா அதை அவங்களேதான் தெரிஞ்சிக்கணும்.. அவங்களுக்குள் அவங்களே ஏற்படுத்திக்கிட்ட சர்ப்ரைஸை உடைக்க நமக்கு என்ன உரிமை இருக்கு..?"

"அது அப்படி கிடையாதும்மா.. அவங்க இரண்டு பேரும் சின்ன வயசு பிரெண்ட்ஸ்ன்னு தெரிஞ்சிக்கிட்டா அது அவங்களோட லவ்வை இன்னும் அதிகமாக்கும் இல்லையா..?" தன் பக்க நியாயத்தை சொன்னாள் ருத்ரா.

"லவ் இந்த மாதிரி காரணங்களால் வரக்கூடாது.. அவங்களோட உள்மனசு சொல்றதை கேட்டுதான் உருவாகணும்.." அம்மா தன் பக்க கருத்தை சொன்னாள்.
மைவிழி அவர்கள் பேசியதை காதில் கூட வாங்கவில்லை. அருகிருந்த ஸோபாவில் அமர்ந்து தன் யோசனையில் ஆழ்ந்தாள்.

'கதிர்தான் அந்த கனவு பையன்.. ஆனா இது ஏன் அவனை பார்த்தவுடனே ஞாபகம் வரல..? பத்து வயசு பையனை இப்படி பனை மரம் உயரத்துல பார்த்தா எப்படி ஞாபகம் வரும்..? ஓ.. காட்.. கதிர் நீதானா இது..? அதனால்தான் உன் பக்கத்துல நான் இவ்வளவு மாறிட்டனா..? உனக்கும் எனக்கும் இடையில் இருந்த பிரிக்க முடியா பந்தம்தான் நம்மள ஒன்னு சேர்த்து வச்சிருக்கு..'

தனது யோசனையில் இருந்தவளின் அருகே வந்து அமர்ந்தார் கதிரின் அப்பா.

"ரொம்ப யோசிக்காத.. உனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா பொருத்தமா இருக்கும்ன்னு அவனோட அம்மாதான் உன்னை தேடி கண்டுபிடிச்சி கட்டி வச்சிருக்கா.."

மைவிழி அவரது திடீர் குரலில் கொஞ்சம் பயந்து விட்டாலும் அவர் சொன்ன விசயம் கேட்டு சந்தேகம் தெளிந்தாள்.

'அப்படின்னா இவங்க ப்ளான் பண்ணிதான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க..'

"அப்படின்னா நீங்களும் எங்க அப்பாவும் ப்ரெண்ட்ஸ் இல்லையா..?" என கேட்டவளுக்கு இல்லையென தலையசைத்தார் அவர்.

"அவரும் நானும் முன்ன பின்ன பார்த்துக்கிட்டது கூட கிடையாது.. நாங்க கதிரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நிறைய முறை கேட்டுக்கிட்டோம்.. ஆனா அவனுக்கு இந்த காதல் கல்யாணம் மேல எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்ல.. அதை விட முக்கியமா அவனுக்கு பொண்ணுங்க மேல மரியாதை கொஞ்சம் கூட கிடையாது.. அப்பதான் என் பொண்டாட்டி ரொம்ப வருசமா ப்ரிண்ட் போடாம வச்சிருந்த சில போட்டோக்களை பிரிண்ட் போட்டு எங்ககிட்ட காட்டினா.. அதுல கதிரும் நீயும் ரொம்ப சந்தோசமா சிரிச்சிட்டு இருந்திங்க.. என் பையனுக்கு அவ்வளவு சந்தோசமா கூட இருக்க தெரியும்ன்னு அந்த போட்டோவை பார்த்துதான் நானே தெரிஞ்சிக்கிட்டேன்.. அவனுக்கு பொருத்தமான பொண்ணு நீதான்னு சொல்லி உன்னை தேடவும் ஆரம்பிச்சிட்டா.. ஆனா எனக்கே செம சர்ப்ரைஸ்தான் உனக்கும் அவனை போலவே கல்யாணம் காதல்ல இன்ட்ரஸ்ட் இல்லன்னு தெரிஞ்சப்ப..! அப்புறம் உங்க அப்பாக்கிட்ட உனக்கும் கதிருக்கும் இடையில் இருந்த நட்பையும் உங்க ஒற்றுமை குணத்தையும் சொன்ன பிறகு உங்க அப்பா உன்னை கதிருக்கு கட்டி வைக்க சம்மதம் சொல்லிட்டாரு.. உங்க வீட்டுல இந்த விசயம் உன் அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்ன்னு நினைக்கிறேன்.. ஆனா நாங்க எதிர் பார்த்த மாதிரியே நீங்க இரண்டு பேரும் கல்யாணத்துக்கு நோதான் சொன்னிங்க.. அதான் அவன்கிட்டயும் உன் அப்பா உன்கிட்டயும் டைவர்ஸ் ஆப்சனை பத்தி சொல்லி உங்களை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சோம்.. உங்களுக்குள்ள அழகான காதல் உண்டாகும்ன்னு என் பொண்டாட்டி ரொம்ப நம்பிக்கையா சொன்னா.. எனக்குதான் நம்பிக்கையே இல்லாம இருந்தது.. ஆனா ருத்ரா சொன்னா என் பையன் உன்கிட்ட தன் காதலை சொன்னதை.."

மைவிழிக்கு முகம் சிவந்து போனது அன்றைய நாள் உரையாடலை நினைத்து. 'புருசன் பொண்டாட்டி பேசிக்கொள்வதையெல்லாம் இவங்க ஏன் வெளியே சொல்றாங்க..?'

அப்பா அவளை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டார். "அவனை உனக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா..?" என்றார் தயக்கமாக.

மைவிழிக்கு நேரடியாக பதில் சொல்ல நாணம் தடுத்தது. அதனால் ஆமென தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.

அவர் அடுத்ததாக பேச முயலும் முன் அவரது போன் ஒலித்தது. "போன் பேசிட்டு வந்துடுறேன்.." என்றவர் போனோடு எழுந்து சென்றார்.

மைவிழியின் அருகே வந்து அமர்ந்த ருத்ரா "இப்ப சொல்லு.. உனக்கு அந்த பைத்தியகாரனை எவ்வளவு பிடிச்சிருக்குன்னு..?" என்றாள் ஆர்வமாக.

மைவிழி ருத்ரைவின் காதருகே தன் முகத்தை கொண்டு சென்றாள். "பைத்தியமாகுற அளவுக்கு பிடிச்சிருக்கு.." என்றாள் சற்று சத்தமாகவே. அவளது உரத்த குரலால் ருத்ரா தன் முகத்தை சுருக்கினாள்.

மைவிழியிடமிருந்து தள்ளி அமர்ந்து தன் காதை தேய்த்துக் கொண்டாள். "என் தம்பி கூட சேர்ந்து நீயும் அவனை மாதிரியே கெட்டு போயிட்ட.. நல்லாருந்தா சரிதான்.." என்றபடி எழுந்தவளை கை பிடித்து அமர வைத்தாள் மைவிழி.

"உங்ககிட்ட ஒரு உதவி கேட்கணும்.." என்றாள் மைவிழி.

"ம் சொல்லு..:"

"இந்த விசயத்தை பத்தி நீங்க யாரும் கதிர்க்கிட்ட சொல்லலன்னு நல்லாவே தெரியுது.. அதை இதுக்கு மேலயும் சொல்லாம இருந்திடுங்களேன்.." என்றாள் மெல்லிய குரலில்.

"ஆனா ஏன்ம்மா..?" சந்தேகமாக கேட்டாள் ருத்ரா.

"காதல் அதுவா வரணும்.. இப்படி ஒரு காரணம் கொண்டெல்லாம் வரக்கூடாது.."

"ஆனா நீங்கதான் ஏற்கனவே காதலிக்க ஆரம்பிச்சிட்டிங்களே.."

"இது அப்படி இல்ல அக்கா.. அவன் என்னை புரிஞ்சிக்கணும்.. இப்ப நான் எப்படி இருக்கேனோ அப்படியே ஏத்துக்கணும்.. அவன்கிட்ட இப்பவே இந்த நினைவை பத்தி சொன்னா அவன் கண்ணுக்கு நான் அந்த குட்டிப் பொண்ணாதான் தெரிவேன்.. ஏதாவது சின்ன சண்டை வந்தா கூட அந்த குட்டிப் பொண்ணை மனசுல வச்சிதான் அவன் என்னை மன்னிச்சிட்டு போவான்.. ஆனா எனக்கு அவனோட உண்மையான காதல் வேணும்.. எந்தவித தடையும் இருக்க கூடாது.. அதே போல எங்க காதலுக்கு இந்த மாதிரி லிப்ட்டும் தேவையா இருக்க கூடாது.."

ருத்ரா அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். "ஐ லைக் யூ.." என்றாள்.

"சரி வா.. நாம போய் சாப்பிடலாம்.. எங்க அம்மா சூப்பரா சமைப்பாங்க.." என்றவள் மைவிழியை தன்னோடு இழுத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றாள்.

அந்த சமையல் ருசியா இருந்ததா இல்லையான்னு அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துக் கொள்ளலாம் நட்புள்ளங்களே..

நான் பிரதிலிபி ஆப்ல நடந்த காவிய தலைவன் சிறுகதை போட்டிக்கு இல்லோர் ஒக்கல் தலைவன் (அதியமான் அஞ்சி) என்ற தலைப்புல ஒரு கதை பதிப்பிச்சி இருந்தேன். அந்த கதை வெற்றி பெற்றிடுச்சி நட்புள்ளங்களே.. இதை உங்களோடு பகி்ந்துகறதுல சந்தோசப்படுறேன்..
 
OP
Sevanthi durai

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Congratulations akka... Kathir ku eppo maivizhi than antha kutty ponnu nu teriyavarum
நன்றுகள் ம்மா.. அடுத்து வரும் எபிசோட்ல தெரியும்
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top