நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

பனி விழும் இரவு 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பெங்களூர்... பேருக்கு ஏற்ப பெரிய ஊராகவே இருந்தது...

பஸ் இன் வேகமும்... டிராபிக் இல் ஏற்படும் நெரிசலும்... வாகனங்களின் சத்தமும்... கொஞ்சம் புதிதாகவே எனக்கு தோன்றியது...

அங்கங்கங்கே பெரிய பெரிய கட்டிடங்களும் தொழில் சாலைகளும்.... சாலைகள் பக்கத்தில் வீன்றிருக்கும் மரங்களும்... மேலும் அந்த பேருநகரத்திற்கு அழகை கூட்டியது...

ராகுல் :என்ன... சைது... அப்படி பாக்குற... ஊரு எப்படி??

சைதாலி:ம்ம்ம் பார்க்க நல்லாத்தான் இருக்கு... ஆன இந்த டிராபிக் தான்...
1000 சொல்லுங்க... எங்க ஊரு எங்க ஊருதான்...

ராகுல் : ஆரம்பிச்சிட்டியா... உன் ஊர் பத்தி...

சைதாலி: ஏன் எங்க ஊருக்கு என்ன... அத விட ஊரு அழகான இடத்தை காட்டுங்க பாக்கலாம்... தஞ்சாவூர் எங்க ஊரு மட்டும் இல்லை எங்க அடையாளம்...

ராகுல் :அம்மா தாயை தெரியம்மா கேட்டேன் மா... மன்னிச்சிக்கோ... இறங்குற இடம் வந்துடுச்சி... வா... எல்லாம் லக்ஏஜூம் எடுத்துக்கோ...

அந்த நகரின்... ஒரு பெரிய கால்னி வந்தோம்... இங்கே இருக்கும் புதிய அபார்ட்மெண்ட் தான் இனிமேல் எங்கள் வாழ்க்கை ஆரம்பம் ஆகப்போகிறது... ஆம்... நாங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள்... 5 மாதம் ஆகிறது... அவர் கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்... நான் ஒரு பட்டதாரி ஆனால் வேளைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாக இல்லை..
காரணம் எனக்கு எப்போதும் வீட்டு வேலைகள் செய்வது தான் மன நிறைவை தரும்... காலையில் எழுந்து கோலம்போடுவது முதல்... இரவு பாத்திரம் தொழகுதல் வரை நானே செய்வது தான் என் வழக்கம்... ஓவியம் வரைதல்... செடி பராமரித்தல்... புதுமையாக சமைத்தல்... இதல்லாம் என்னோடைய பிடித்த விஷயங்களில் சில.....

ராகுல் : எல்லாம் எடுத்தாச்சா... போகலாமா??... 3rd floor... பிளாட் no 15..அதுதான் இனிமே நம்ப வீடு...வா... லிப்ட் ல போகலாம்...

லிப்ட் இல்... என் தோளில் கை வைத்த படி...

ராகுல் :என்ன மேடம்... ரொம்ப யோசனையா இருக்கீங்க... இடம் எல்லாம் ஒகே வா...

சைதாலி:நீங்க இருக்குறப்ப எனக்கு என்னங்க... நீங்க எங்க இருக்க சொன்னாலும் நான் உங்ககூடவே இருந்துடுவேன் ..

ராகுல் :இன்னும் கொஞ்ச நாள் தான் சைது... நம்ப இன்னும் நல்லா settle ஆகிட்டு... நம்ப வீட்டுலையே சென்னையில் இருந்துடலாம்... அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. ஏன்னா இது நம்ப ஊரு மாதிரி லாம் இருக்காது.. புது இடம் புது மொழி.. புது மனிதர்கள்... பக்கத்துல இருந்தா கூட பழக்கமாட்டாங்க... சோ நான் ஆஃபீஸ் கு போயிட்டு வரவரைக்கும் பத்திரமா இருக்கனும் சரியா...

சைதாலி:ஐயோ... எங்க ங்க.. நான் என்ன சின்ன குழந்தைய.. என்ன பத்தி இப்படி கவலைப்படுறீங்க... நீங்க இருக்கறப்ப எனக்கு என்ன?? நான் பத்திரமா இருப்பேன் ங்க..

ராகுல் :இங்கேந்து என் ஆஃபீஸ் 20mins தான்... சோ... மாமா.. வேலை முடிச்சிட்டு உன்கிட்ட ஓடி வந்துறேன்... சரியா??

சைதாலி:ஹாஹாஹா... சரிங்க.... சரிங்க..

வீட்டுக்குள் வந்ததும்...

சைதாலி:அய்ய்ய்... பால்கனி இருக்கு... நல்லா பெரிய வீடா தான் ங்க இருக்கு...

ராகுல் :ம்ம்ம் உனக்கு பிடிக்கும்னு தான் balcony பக்கம் கேட்டேன்.. உனக்கு தான் என்னைவிட செடிகளை பிடிக்கும் னு சொல்லுவியே...

சைதாலி:ஐயோ... நான் எப்போ அப்படி சொன்னேன்??.. எனக்கு இந்த உலகத்துலையே உங்கள தான் ரொம்ப பிடிக்கும்...

ராகுல் :அப்படியா...

என் பக்கம் வந்தார்... என் நெற்றியில் அவர் இதழ் பதிந்தது...

சைது...நீ என் கூட ஹாப்பி அ தானே இருக்க...??

சைதாலி:என்ன கேள்வி இது புதுசா...

ராகுல் :பரவாயில்லை... சொல்லேன்...?

சைதாலி: எங்க அப்பா அம்மா கூட இருந்தது விட உங்க கூட ரொம்ப ஹாப்பி அ இருக்கேங்க...

ராகுல் :உன்ன நான் நல்லாதானே பாத்துக்குறேன்?? இங்கே அழைச்சிட்டு வந்ததுல உனக்கு என் மேல எதாச்சும் கோவமா??

சைதாலி:என்னங்க நீங்க?? நீங்க யாருக்காக இப்படி ஒழைக்கிறீங்க... எனக்காகவும் நமக்கு பிறக்க போற பிள்ளைங்க லொட எதிர் காலத்துக்காக தானே... சென்னை ல தராத விட இங்கே 40% salary அதிகமா இருக்கும்னு நீங்க சொன்னப்ப... அப்போ அங்கையே ஷிபிட் அகலாம்னு 1st சொன்னதே நான் தானே நான் எப்டி உங்கள தப்பா நினைப்பேன்???

ராகுல் : ஜஸ்ட் 1 இயர் தான் அதுக்குள்ள எல்லாம்மே நான் sari பண்ணிடுறேன்... நமக்குன்னு ஒரு வீடு நமக்குன்னு ஒரு இடம் அது போதும்... அப்பா அம்மா ஓட இருந்துக்கலாம்... அதுக்கு அப்றம் நம்ப ஓடி ஓடி உழைக்க லாம் வேணாம்... நீ நான் நம்ப குழந்தைங்க னு சந்தோஷமா இருக்கலாம்... சரியா??

சைதாலி:சரிங்க எல்லாத்தையும் arrange பண்ணிடுறேன்..

ராகுல் :இன்னைக்கு நானும் லீவ் தான் நாளைக்கு தான் ஆஃபீஸ் போய் transfer லெட்டர் சம்மிட் பண்ணி ஜோஇன் பண்ணனும்....நீ எல்லாம் எடுத்து வை... நான் எலக்ட்ரானிக்ஸ் ஷாப் போயிட்டு நமக்கு தேவையான எல்லாத்தையும் இங்கே ஷிபிட் பண்ணிட சொல்றேன்... அப்றம் சமைக்கலாம் வேணாம் இன்னைக்கு நான் வாங்கிட்டு வரேன் எல்லாத்தையும்,... நாளைலந்து எல்லாத்தையும் பாத்துக்கலாம்... உனக்கு என்னனா வேணும் னு லிஸ்ட் போடு eveng போய் எல்லாம் வாங்கிடலாம்... சரியா...

ஒரு வழியாக எல்லாம் வேலையும் முடித்தது... eveng 7 மணி ஆகிவிட்டது... வீட்டு வேலை முடிந்தாலும்... வீட்டுக்கு தேவையான எல்லாம் பொருள்களையும் வாங்கி வர இரவு 9 மணி ஆகி விட்டது...

சைதாலி: cha... வீட்டுக்கு வரதுக்குள்ள எவ்ளோ டிராபிக்...

ராகுல் : சரி... எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு தூங்கலாம் மார்னிங் சீக்கிரம் ஏழனும் வேற.. நீ வேற tired அ இருப்ப பாவம்.....

சைதாலி:அதலாம் ஒன்னும் இல்லை நீங்க தூங்குங்க.. நான் 10 mins ல எல்லாம் வச்சிட்டு வந்துறேன்...

ராகுல் : எதாச்சும் வேணும்ன கூப்பிடு... நான் தூங்குறேன்... ரொம்ப tired அ இருக்கு...

பால்கனி பக்கம் என்னோட ஹாக்கிங் flower vase ஏ தொங்கவிட்டேன்... அதில் வாங்கி வந்த மண் கலவையும் அதில் வயலட் நிறம் பூ பூக்கும் அமெரிக்கன் பூ விதைகளை போட்டுவைத்தேன்... அங்கே மிக குளிராக இருந்தது... மீதமுள்ள வாங்கி வந்த பொருள்களை எல்லாம் அதன் அதன் இடங்களில் வைத்து விட்டு... மெயின் கேட் ஏ மூடுவதற்கு வந்தேன்...

அப்போது...

பக்கத்து வீட்டில் உள்ள பெண் வெளியில் போனில் அழுது கொண்டே பேசி கொண்டிருந்தாள்....
 

Author: yuvanika
Article Title: பனி விழும் இரவு 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
conversation super...
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top