நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 63

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் தனது கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்தான். எழுந்தவனின் முதல் பார்வையிலேயே சக்தியின் முகம் தென்பட்டது. அவளது தலையை வருடி விட்டான். அவள் எப்போது எழுவாள் என காத்திருந்தான்.

கொட்டாவி விட்டபடி எழுந்து நின்றவன் பெட்ஷீட் தன் மேலிருந்து சரிந்து விழுவதை கண்டு குழம்பினான்.

"இந்த பெட்ஷீட் எப்படி என் மேல வந்துச்சி..?" பெட்ஷீட்டை எடுத்து உரிய இடத்தில் மடித்து வைத்தவன் எதேச்சையாக தன் இடுப்பில் கை வைத்தான்.

தனது துப்பாக்கி தன்னிடம் இல்லை என்ற விசயம் புரிந்ததும் பதற்றதோடு தான் அமர்ந்திருந்த இருக்கையையும் கட்டிலையும் சுற்றி தேடினான். துப்பாக்கி அவனது கண்களுக்கு தென்படவில்லை.

பதட்டத்தோடு நெற்றியை பிடித்தபடி அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அறை வாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த மகேஷை கண்டவன் அலட்சியத்தோடு விழிகளை சுழற்றினான்.

ஆனால் மகேஷ் அவனை கண்டு விட்டு சின்ன சிரிப்போடு அவனது துப்பாக்கியை கையில் எடுத்தான். தனது துப்பாக்கியை மகேஷ் கையில் பார்த்ததும் இனியனுக்கு ஆத்திரமாக வந்தது.

"என் துப்பாக்கியை என்கிட்ட கொடுங்க.." என்றான் கையை நீட்டி. அவனது சிறு பிள்ளை செயலை கண்டு மகேஷ்க்கு சிரிப்புதான் வந்தது.

"போலிஸ்காரியோட பையன் பர்மிசன் இல்லாம துப்பாக்கி வச்சிருக்கான்னு நான் வேணா நியூஸ்க்கு தகவல் சொல்லட்டா..?" என்றவன் தன் கையிலிருந்த துப்பாக்கியை திருப்பி திருப்பி பார்த்து அதன் மேல் இல்லாத தூசியை ஊதினான்.

"போலிஸ்காரியோட புருசன் ரவுடின்னு தெரிஞ்சவங்களுக்கு பையனும் ரவுடின்னு தெரிஞ்சா ஒன்னும் நட்டமில்ல.. என் துப்பாக்கியை கொடுங்க.."

"உங்க அம்மாவை மாதிரியே திமிருடா உனக்கு.." என்ற மகேஷை உறுத்து பார்த்தான் அவன்.

"அவங்களோட அதே சாதி திமிரா இருக்கும் எனக்கும்.. உங்க சாதியை விட அவங்க சாதி கொஞ்சம் வீரமாச்சே.. அதான் அதே திமிரு.." அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எழுந்து அவனருகே வந்து விட்டான் மகேஷ்.

இனியனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான். கோபத்தில் சிவந்து விட்ட மகேஷின் முகத்தை பார்த்து இனியனுக்கு உள்ளுக்குள் சற்று பயம்தான். ஆனால் அதை வெளி காட்டாமல் அதே கோபத்தோடு அவனை திருப்பி முறைத்தான் அவன்.

"இந்த நாட்டுல ஓராயிரம் சாதி இருக்கு.. ஒவ்வொரு சாதிக்கும்தான் வரலாறும் திமிரும் இருக்கு.. சாதி திமிரு தன் சாதியோட பெருமையை சொல்லும்போது இருக்கணுமே தவிர அடுத்தவனை தாழ்த்தும் போது இருக்க கூடாது.. இங்கே எல்லாம் மனுசன்தான்.. அடுத்த மனுசனை மதிக்கறதுதான் தன் சாதியோட பெருமையா இருக்கணும்.. உங்க அம்மாவும் நானும் காதலிச்சாலும்.. கல்யாணம் பண்ணாலும்... இதோ இப்படி தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையை பெத்து வச்சிருந்தாலும் கூட இரண்டு பேரும் பிரிஞ்சி ஒருத்தர் நினைப்புல ஒருத்தர் உருகிதான் சாகுறோம்.. இதுக்கு காரணம் சாதிங்கற பேர்ல என் அப்பா பண்ண தப்பு.. நீ எனக்கும் சக்திக்கும் பிறந்தவன்.. சாதியால பிரிவினையை உண்டாக நினைச்ச அப்புறம் பெத்த புள்ளைன்னு கூட பார்க்காம புல்லட்டை மூளையில இறக்கிடுவேன்.." என்று உருமியவன் தான் முன்பு அமர்ந்திருந்த அதே இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

இனியனின் முதுகு தண்டில் ஜில்லென பயம் ஓடியது. ஆனாலும் பார்வையை கூர்மையாகவும் உடம்பை விரைப்பாகவும் வைத்தபடி மகேஷை பார்த்தான். அவன் சொல்லி சென்ற வார்த்தைகள் காதுகளை விட்டு அகலவில்லை. பசி வேறு வயிற்றை கிள்ளியது.

"சிலையை போல ஏன் நிக்கற..? பசி எடுத்தா போய் சாப்பிட்டு வா.. நான் இங்கே இருக்கேன்.. நீ திரும்பி வரதுக்கு முன்னாடி நான் உன் அம்மாவை கடத்திட்டு போயிட மாட்டேன்.. அதனால பயப்படாம போய்ட்டு வா.." என்றான் மகேஷ் இனியனை பார்த்து.

இனியனுக்கும் சாப்பிட செல்ல ஆசைதான். ஆனால் அம்மாவை விட்டு செல்ல மனம் வரவில்லை. நேற்றிரவு வந்தது போல வேறு எவனாவது இப்போது வந்து விட்டால் என்ன செய்வது என பயந்தான்.

மகேஷ் பெருமூச்சோடு எழுந்து நின்றான். "அவ பக்கத்துல இரு.. நான் கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்.." என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.
மகேஷின் உருவம் கண்ணிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான் இனியன். பின்னர் அறையினுள் நுழைந்தான். சற்று நேரத்தில் ஒரு செவிலியை வந்தாள்.

"நீங்க யாரு..? இங்கே என்ன பண்றிங்க..? பேஷண்ட் பக்கத்துல யாரும் இருக்க கூடாது.. வெளியே போய் வெயிட் பண்ணுங்க.." என்றவள் மருந்தை ஊசியில் இழுத்தாள்.

இனியன் அவள் சொன்னதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை. அவள் அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சக்திக்கு மருந்தை செலுத்தினாள்.

"வெளியே போய் உட்காருங்கன்னு சொன்னது உங்க காதுல விழலையா..?" எரிச்சலோடு அவள் கேட்ட நேரத்தில் அறையின் கதவை திறந்தான் மகேஷ்.

மகேஷை கண்டதும் செவிலியை முகம் பயத்தில் நிறமிழந்து போனது. அவன் அவனை தெரிந்தவர்களுக்கு மட்டும்தானே நல்ல ரவுடி..? மற்ற எல்லோருடைய பார்வையிலும் கெட்டவன்தானே.? அதனால்தான் செவிலியை முகம் நொடியில் மாறி விட்டது.

மகேஷ் செவிலியையின் பயத்தை உணர்ந்தான். "என்ன பிரச்சனை..?" என்றான் இனியனையும் அவளையும் மாறி மாறி பார்த்தபடி.

"பேஷண்ட் பக்கத்துல யாரும் இருக்க வேண்டாம் வெளியே இருங்கன்னு சொன்னேன்.." அவள் பயந்த குரலில் தயக்கமாக தரை பார்த்து சொன்னாள்.

"அது என் பொண்டாட்டி.. அவன் என் மகன்.. நாங்க இரண்டு பேரும் இவளுக்கு பாதுகாப்பா இங்கே இருக்கோம்.. இவ பக்கத்துல நாங்க இருக்க உங்க டாக்டர்கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கோம்.. இதுல உங்களுக்கு ஏதும் பிரச்சனையா..?" என புருவம் உயர்த்தி கேட்டான்.

அவள் இல்லையென தலையை அசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றாள்.

"ரவுடி.. அப்பாவி மனுசங்களை நல்லா பயப்படுத்தறிங்க.." நக்கலும் வெறுப்புமாக சொன்னவனின் முன்னால் தன் கையிலிருந்த கவரையும் தண்ணீரையும் வைத்தான்.

"உன் நக்கலுக்கும் கிண்டலுக்கும் வேற ஒரு நாளைக்கு நல்ல பதிலா சொல்றேன்.. இதோ இதுல சாப்பாடு இருக்கு.. சாப்பிடு.." என்றவன் கதவை சாத்திக் கொண்டு வெளியே நடந்தான்.

இனியன் சந்தேகத்தோடு உணவை பார்த்தான்.

சட்டென கதவு திறந்தது. இனியன் நிமிர்ந்து பார்த்தான். மகேஷ் கதவருகே நின்றுக் கொண்டிருந்தான். "சாப்பாட்டுல எதையும் நான் கலக்கல.. நீ என் மகன்.. உனக்கு விஷம் வச்சா எனக்குதான் நட்டம்.. அதை விட முக்கியமா நீ அவளுக்கும் மகன்.. உனக்கு எதாவது ஆகிட்டா அப்புறம் அவ என்னை சாகடிச்சிடுவா.. அதனால சந்தேகப்படாம சாப்பிடு.." என்றவன் கதவை மீண்டும் சாத்திக் கொண்டான்.

இனியன் சிறிது நேரம் யோசித்து பார்த்தான். மகேஷ் சொல்வதில் உள்ள உண்மையை புரிந்துக் கொண்டான். அதனால் மகேஷ் வாங்கி வந்த உணவினை உண்டான்.

குமரன் சீனுவை கைது செய்தார். அவனை அழைத்து வந்து முத்து இருந்த லாக்அப்பிலேயே அடைத்தார்.

"குமரா.. நான் சொல்றதையும் கொஞ்சம் கேளேன்.." என்றார் முத்து.

"உங்களுக்கு என்ன பிரச்சனை மாமா..?" எரிச்சலோடு கேட்டான் அவன்.

"எங்க குடோன்ல இருந்த பணத்தை இதோ இந்த பக்கத்து செல்லுல இருப்பவன் திருடிட்டான்.. அவனை கொஞ்சம் விசாரிச்சி பணத்தை வாங்கி கொடேன்.."

சக்தியின் கழுத்திற்கு கத்தி வீசியவன் முத்துவை முறைப்போடு பார்த்து விட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

குமரன் அவனையும் முத்துவையும் மாறி மாறி பார்த்தார். பின்னர் அவன் முன்னால் வந்து நின்றார்.

"அவங்க குடோன்ல இருந்து பணத்தை திருடினாயா..?" என்றார் கோபத்தோடு.

அவன் இல்லையென தலையசைத்தான். "அவர் என்ன சொல்றாருன்னு கூட எனக்கு தெரியாது.. அவருக்கு எதிரே நான் அப்ரூவரா மாறியதால் அவர் இப்படி என் மேல பொய் கேஸ் போட பார்க்கறாரு.."

முத்து பொய் சொல்வதற்கு அவசியம் இல்லை என்பதை உணர்ந்தார் குமரன். அதனால் அவனது லாக்கப்பை திறந்து அவனை தன்னோடு தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அவனை ஒரு நாற்காலியில் அமர வைத்து விட்டு அவன் எதிரே அமர்ந்தார்.

₹அன்னைக்கு என்ன நடந்ததுன்னு ஆரம்பத்துல இருந்து சொல்லு.." என்றார்.

அவன் பயத்தோடு பேச தொடங்கினான். "அன்னைக்கு சாயங்காலம் சக்தியை கொலை பண்ண முயற்சி பண்ணேன் ஸார்.. அவ செத்துடுவான்னு நினைச்சிதான் கத்தி வீசினேன்.. ஆனா கத்தி மிஸ் ஆயிடிச்சி.. அவளை எல்லோரும் சேர்ந்து ஹாஸ்பிட்டல் கொண்டு போயிட்டாங்க.."

அவன் சொன்னதை கேட்டு குமரனின் உடம்பில் ஓடிய நரம்புகள் கோபத்தில் முறுக்கேறின. தன் கோபத்தை கட்டுப்படுத்தியபடியே அவனை பார்த்தார்.

"அவ செத்துட்டான்னு இவரு நம்பிட்டாரு.. அதனால பணத்தை வாங்கிட்டு போகறதுக்காக மாந்தோப்புக்கு என்னை கூப்பிட்டாரு.. நானும் போனேன்.. இரண்டு பேரும் சேர்ந்து சரக்கடிச்சோம்.. அவர் மட்டையாகிட்டாரு.. எனக்கு மனசாட்சி உருத்தியதால உங்களை தேடி வந்து சரண்டர் ஆகிட்டேன்.." பயத்தோடு சொல்லி முடித்தவனின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டார் அவர்.

"நம்பற மாதிரி பொய் சொல்ல கூட தெரியல உனக்கு எதுக்குடா இந்த கத்தி பிடிக்கற பொழப்பு..?" என்றவர் மீண்டும் ஒரு அறையை விட்டார். அவன் தன் கன்னத்தை பிடித்தபடி சோகமாக அவரை பார்த்தான்.

"மரியாதையா நடந்த உண்மை எல்லாத்தையும் சொல்லு.. அந்த பணத்தை எங்கே மறைச்சி வச்சிருக்க..? எந்த கூட்டாளிக்கிட்ட கொடுத்து வச்சிருக்க..? சக்தியை கொலை பண்ண தயங்காத உனக்கு எப்படி திடீர்ன்னு மனசாட்சி வேலை செஞ்சது..?"

அவன் தன் கன்னத்தை பிடித்தபடி தலையை குனிந்தான்.

"அந்த இடத்துல ஒரு பையனை பார்த்தேன் ஸார்.." என்றான் தயக்கமாக.

"பையனா..? அது யாரு..? அவனும் உன் கூட்டாளியா..?"

"இல்ல ஸார்.. அவன் யாருன்னே எனக்கு தெரியாது.. முத்து போதையான பிறகு என் கையில சாவியை கொடுத்து பணத்தை எடுத்துக்க சொன்னாரு.. அந்த ரகசிய அறையில நிறைய பண கட்டை பார்த்ததும் என் மனசுல பேராசை புகுந்துடுச்சி.. அதனாலதான் எல்லா பணத்தையும் எடுத்துக்கிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.. ஆனா குடோனுக்கு வெளியலயே ஒரு பையன் துப்பாக்கியை காட்டி மிரட்டி என்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் பிடுங்கிட்டான்.. போலிஸ்ல சரணடையலன்னா என்னை சுட்டுடுவேன்னு சொல்லி மிரட்டினான்.. கால் பக்கத்துல சுட்டுட்டான் ஸார்.. கொஞ்சம் மிஸ்.. இல்லன்னா என் காலே போயிருக்கும்.." அவனை கண்டு பிடிச்சி ஜெயில்ல போடுங்க ஸார்..

குமரனுக்கு எல்லா விசயமும் இப்போது தெளிவாக புரிந்து போனது. இனியன்தான் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை வைத்து மிரட்டி இவனிடம் இருக்கும் பணத்தை பிடுங்கி கொண்டு இவனையும் போலிஸில் சரணடைய சொல்லி அனுப்பி இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான்.

அவனை லாக்கப்பில் அடைத்தவர் மகேஷ்க்கு போனை செய்து விசயத்தை சொன்னார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE
COMMENT
FOLLW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top