நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

முடிவுரை

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்து செய்த தவறுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் மூர்த்திக்கு மூன்று ஆண்டுகள் சிறையும் தீர்ப்பாக வழங்கப்பட்டது.

தன் அம்மாவிற்கு இனி எதிரி யாரும் இல்லையென சந்தோசப்பட்டான் இனியன்.

சக்தி தனக்கு உணவு ஊட்டிய மகேஷை நேசத்தோடு பார்த்தாள்.

"உனக்கு என் மேல எந்த கோபமும் இல்லையா..? உனக்கு ஒரு மகன் இருப்பதை நான் இவ்வளவு நாளா உன்கிட்ட இருந்து மறைச்சிட்டேன்.." என்றவளின் கன்னம் தடவினான் அவன்.

"உன்னை என்னால புரிஞ்சிக்க முடியுது சக்தி.. உன் இடத்துல யார் இருந்தாலும் இப்படிதான் செஞ்சி இருப்பாங்க.. என்னை காதலிச்சதுக்கு நான் உனக்கு தந்தது எல்லாமே வலிகளும் வேதனைகளும்தான்.. என்னை தவிர வேற யாரை காதலிச்சி இருந்தாலும் உனக்கு கண்டிப்பா நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கும்.. என் சுய நலத்தால உன் மொத்த வாழ்க்கையையும் நான் அழிச்சிட்டேன்.." என்றவனின் குரல் கரகரத்து இருந்தது.

அவனின் கை பற்றினாள் சக்தி. "நீ சொல்வதும் உண்மைதான்.. வேற யாரையாவது காதலிச்சி இருந்தா என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்.. ஆனா எனக்குதான் உன்னை தவிர வேற யார் மேலயும் காதல் வரலையே.. என்ன செய்யட்டும்..?" என்றவளின் முகத்தை பார்த்தான் மகேஷ்.

சலனமில்லாமல் அவனை பார்த்தவள் "நான் உன்னை நேசிக்கிறேன் மகேஷ்.. ரொம்ப நேசிக்கிறேன்.. உன்னை விட்டு பிரிஞ்சி வாழ்ந்த எல்லா நாளுமே எனக்கு நரகம்தான்.. ஒரு நாளைக்கு லட்சம் முறை யோசிப்பேன் உன்கிட்ட ஓடி வந்துட..! நீன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்.. உன்னை பார்க்கும் போதெல்லாம் உன் நெஞ்சில சாஞ்சி உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேன்னு சொல்ல தோணும்.. ஆனா எனக்கு தைரியமே இல்ல.. எனக்கு பிரச்சனைகளை பார்த்து பயம்.. சாதியை வச்சி சண்டை போடுறவங்களை கண்டு பயம்.. உங்க அப்பா உன்னை கொன்னுடுவாரோன்னு தினம் தினம் பயம் எனக்கு.. தூரமா இருந்தாலும் எனக்கு சம்மதமே.. நீ எப்பவும் நல்லாருந்தா போதும் எனக்கு.. நான் உன்னை என் உயிருக்கும் மேல நேசிக்கிறேன் மகேஷ்.." என்றாள்.

அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவனுக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. "நானும் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்டி.. உன்னை விட்டு பிரிஞ்சி வாழ்ந்த நாட்களில் ஒரு நாளுல கூட நான் நானா வாழவே இல்ல.. உன் முகம் பார்க்கற ஒரே காரணத்துக்காகவே தினமும் கண் விழிச்சேன்.. உன்னை பார்க்கும் போதெல்லாம் கண் காணாத தேசத்துக்கு உன்னை கடத்திட்டு போகணும்ன்னு யோசிப்பேன்.. போன நாட்களை கொண்டு வர முடியாது.. இனிமேலாவது என்னை பிரியாம இருடி.. உயிரின் கடைசி நொடி சேர்ந்து இருக்க போராடுவோம்.. என்ன பிரச்சனை வந்தாலும் சேர்ந்தே சமாளிப்போம்.. ஆனா விட்டுட்டு மட்டும் போயிடாத.. அதுக்கு பதிலா என்னை சாகடிச்சிட்டு போயிடு.." என்றவன் அவளின் நெற்றியில் முத்தம் ஒன்றை அழுத்தமாக தந்தான்.

"இனி போக மாட்டேன்.. உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.. உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க பார்த்தா அவங்களை சும்மா விட மாட்டேன்.." என்றவள் தன்னை அவனிடமிருந்து யாராலும் இனி பிரிக்க முடியாது என நம்பினாள்.

***

திருமண வீடு கோலாக்கலமாக இருந்தது. சக்தியின் கழுத்து காயமும் தோள்பட்டை காயமும் முழுமையாக ஆறி விட்டது. ஆனால் அதிகம் நடமாட முடியவில்லை.

நல்ல வேளையாக அவள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். இல்லையேல் இனியனின் சங்கை கடித்து துப்பி இருப்பாள். ஏனெனில் அவன் மீது அவ்வளவு வெறியில் இருந்தாள். இருந்தாலும் சந்தியா அவ்வப்போது அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டுதான் இருந்தாள்.

முத்துவும் மூர்த்தியும் ஸ்பெஷல் பர்மிஷனோடு வந்து திருமண மேடையில் அமர்ந்திருந்தனர். பொன்னி அதிகளவு சந்தோசத்தில் இருந்தாள். மகேஷும் சந்தோசத்தில் தலைகால் புரியாமல் இருந்தான்.

இனியன் மண மேடையில் அமர்ந்திருந்தான்.

"பொண்ணை கூட்டிட்டு வாங்க.." ஐயர் சொன்னதும் சந்தியா மணமேடைக்கு வந்தாள். மாலையிட்ட கழுத்தோடு அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த கூட்டத்தை பார்த்தாள். ஒட்டு மொத்த ஊரும் இரண்டு சமுதாய மக்களும் அங்குதான் இருந்தனர்.

இனியன் தன்னருகில் அமர்ந்த சந்தியாவை காதலோடு பா்த்தான். அழகின் சிற்பமென இருந்தாள் சந்தியா. இன்னும் சில நிமிடத்தில் தனக்கே தனக்கு அவள் சொந்தமாக போவதை நினைத்து ஆனந்தத்தில் மூழ்கி இருந்தான் அவன்.

"தாலியை கட்டுங்க.." ஐயர் எடுத்து தந்த தாலியை தன் கையில் வாங்க முயன்றான் இனியன்.

"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.." என சொன்னவள் எழ முயன்றாள்.

அவள் இப்படி எதையாவது செய்வாள் என எதிர்பார்த்துதான் காத்திருந்தான் இனியன். அதனால் அவளை எழ விடாமல் கை பிடித்து அங்கேயே அமர வைத்தான். அவளின் காதாரோம் சென்று தன் முகத்தை கொண்டு சென்றான்.

"நீ இப்ப அமைதியா உட்கார்ந்து தாலி கட்டிக்கலன்னா அப்புறம் நான் நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் இங்கே வந்திருக்கும் எல்லார்க்கிட்டயும் சொல்லி உன் மானத்தை வாங்கிடுவேன்.." என்றான் கிசுகிசுப்பாக.

அவள் அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள். "ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கறதா நினைப்பா..? என் பெரியப்பா போலிஸ்காரர்.. இதை மறந்துடாத.. இப்படி எதையாவது நீ உளறி வச்சா அப்புறம் நீ காலம் முழுக்க ஜெயில்ல கம்பி எண்ண வேண்டி இருக்கும்.."

இனியன் சிரிப்பு குறையாமல் அவளின் காதோரம் தன் மூக்கை தேய்த்தான். அவனது சிறு தீண்டல் அவளுக்கு சிலிர்ப்பை தந்தது. அதை உணர்ந்தவனுக்கு சிரிப்பு உதடுகளில் அதிகமானது.

"நான் ஒன்னும் உன்னை ரேப் பண்ணல.. அதனால என்னை யாரும் அரெஸ்ட் பண்ண முடியாது.. நீ சின்ன பொண்ணும் இல்ல.. அரை மெண்டலும் இல்ல.. உன்னை ஏமாத்திட்டன்னு போலிஸ் சொல்றதுக்கு.. நீ ஸ்மார்டா இருக்கறதா நினைக்காத.. இந்த கல்யாணத்தை நிறுத்தி என் மானத்தை நீ வாங்க நினைச்சா அப்புறம் நானும் எந்த பாவமும் பார்க்காம உன் மானத்தை வாங்கிடுவேன்.."

சந்தியாவின் முகம் கோபத்தில் கறுத்து போனது. அவளுக்கு அந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. தன் தலையெழுத்தை நொந்தபடி இனியன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டாள்.

சர்வாதிகாரி இனியனையும் அவனை அடியோடு வெறுக்கும் சந்தியாவின் கதையையும் காதல் சர்வாதிகாரி என்ற புது நாவலில் பார்க்கலாம்..

இதுவரை இந்த நாவலோடு இணைந்திருந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. நீங்கள் தந்த ஒவ்வொரு வோட்டிற்கும் ஒவ்வொரு கமெண்டிற்கும் மிக்க நன்றிகள்..

சைலண்ட் ரீடர்ஸ் உங்களுக்கும் என்னோட மிக பெரிய நன்றிகள்..

அனைத்து நட்புள்ளங்களும் காதல் சர்வாதிகாரியை வாசிக்க தவறாதீர்.. விரைவில் காதல் சர்வாதிகாரியின் முதல் அத்தியாயம் அப்டேட் பண்றேன்..♥️♥️♥️

personal bio;

பெயர்; செவ்வந்தி (அ) செவ்வந்தி துரை (sevanthidurai.blogspot.com)
இதுவரை புத்தகமாக வந்தவை எட்டு நாவல்கள்.
இணையத்தில் மட்டும் எழுதி முடித்தவை இரண்டு. ஆன் கோயிங்க் நாவல்கள் இரண்டு. எழுத்தாளர் செவ்வந்தி என்றோ செவ்வந்தி துரை என்றோ இணையத்தில் தேடினால் எனது நாவல்கள் பற்றிய மற்ற தகவல்கள் வரும்..

பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் செவ்வந்தி துரைன்னு தேடினா எனது ஐடி வரும் மக்களே..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top