நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் (முன்னுரை)

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் சர்வாதிகாரத்தின் மன்னன்..

சந்தியா அப்பாவிதனத்தின் குழந்தை..

இது எந்தன் நேசம் கதையோட அடுத்த பாகம்.. அந்த கதையை படிக்காதவங்க இந்த கதையை புரிஞ்சிக்கணும்ன்னு இதுல ஒரு சின்ன முன்னுரை தரேன்..

கட்டப்பஞ்சாயத்து ரவுடி மகேஷுக்கும் காவல் துறை அதிகாரி சக்திக்கும் இடையில் அழியாத காதல் இருந்தது. அந்த காதலுக்கு எதிரியாக மகேஷின் தந்தை முத்துவும், மகேஷின் மாமன் மூர்த்தியும் இருந்தனர். ஆணவ கொலையில் தன் காதல் கணவனை பலியாக்கி விட கூடாது என நினைத்து அவனை விட்டு விலகி விட்டாள் சக்தி. அவள் வயிற்றில் ஒரு குழந்தை இருந்ததையோ அவன் ஆக்ராவில் உள்ள தன் மாமன் வீட்டில் இளைஞனாக வளர்ந்ததையோ மகேஷும் அவனது குடும்பமும் அறியவில்லை.

போலிஸ் சக்திக்கும் ரவுடி மகேஷுக்கும் இடையில் அழியாத பகையும் இருந்தது. அந்த பகையின் இடையே தங்களின் காதலையும் உயிர் வளர்த்து வந்தனர் இருவரும்.

இளைஞனாக வளரும் வரையிலும் கூட இனியனுக்கு தன் தந்தை யாரென தெரியாது. அம்மா சக்தியும் அவனை சொந்த ஊருக்கு வரவிடாமல் தடுத்து வைத்திருந்தாள். மாமன் வீட்டில் வளர்ந்தாலும் அவனுக்கு அம்மா சக்தியின் மீது உயிர்.

தவிர்க்க இயலாத சூழல் ஒன்றில் மகேஷும் சக்தியும் மற்றோரு முறை திருமண பந்தத்தில் இணைகின்றனர். இதை எதேச்சையாக அறிந்துக் கொள்கிறான் இனியன்.

இனியனுக்கு உரிமை பெற்று தரும் எண்ணம் கொண்டு புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த சக்திக்கு விரைவிலேயே தன் மாமனார் முத்துவின் வஞ்சகத்தால் மருத்துவமனையில் மயங்கி கிடக்கும் சூழல்.

அம்மா மட்டும் போதும் தந்தை வேண்டாம், சொத்து வேண்டாம், உரிமை வேண்டாம் என அம்மாவிடம் சொல்லுவதற்காக சொந்த ஊர் வந்த இனியன் தன் அம்மாவின் நிலைக்காக அந்த குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறான்.

சந்தியா மகேஷின் அக்காளுக்கும் மூர்த்திக்கும் பிறந்த மகள். தன் அக்கா தன் மீது காட்டி வந்த பாசத்தை அவன் தன் அக்காள் மகள் மீது காட்டி வந்தான்.
தாத்தாவையும் மாமனையும் பழிவாங்க நினைத்து தன் அத்தை‌ மகள் சந்தியாவிடம் பொய்யாய் காதல் வலை விரித்தான் இனியன். அவன் அவளை ஏமாற்ற நினைத்த நொடியில் அவள் மீது காதல் கொண்டு விட்டான். ஆனால் சந்தியா உண்மை தெரிந்ததும் அவனை வெறுத்து ஒதுங்கினாள்.

ஒரு சூழலில் மகேஷ் தனக்கு மகன் இருப்பதை அறிந்துக் கொள்கிறான். அவன் மீது எல்லையில்லா அன்பையும் காட்டுகிறான். ஆனால் அந்த அன்பு இனியனை சர்வாதிகாரியாக மாற்றி விடுகிறது. சக்தி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இனியன் கேட்டு விட்டான் என்ற ஒரே காரணத்திற்காக இனியனுக்கும் சந்தியாவிற்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறான் மகேஷ்.

சந்தியா விருப்பம் இல்லாமல் இனியனை திருமணம் செய்துக் கொண்டாள். இனியன் தன் அதிகாரத்தின் மூலம் அவளின் அன்பை பெற்று விடலாம் என நினைக்கிறான்.. அவன் நினைத்தது நடக்குமா..?
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN