நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

69. உயிரின் ரேகை நீயானாய்

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மைவிழி கண்களை மூடி படுத்திருந்தாள். மூடியிருந்த விழிகளில் இருந்து சூடான கண்ணீர் கசிந்துக் கொண்டிருந்தது. அவளது நினைப்பு முழுக்க பாலா சொன்ன வார்த்தைகள் மட்டுமே திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. அவளின் மூளை முழுக்க பாலா காட்டிய புகைப்படம் மட்டுமே இருந்தது.

இவள் வீட்டை விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. கதிர் இவளை எங்கெங்கோ தேடிக் கொண்டுதான். இவளின் குடும்பமும் கதிரின் குடும்பமும் இவளை காணாமல் தவித்து போய் இருந்தனர். ஆனால் அது எதையும் அறியாமல், அறிந்து கொள்ள மனமில்லாமல் தனி அறையில் அடைந்துக் கிடந்தாள் மைவிழி.

இவளை விட விஷ்வா அதிக கவலையில் இருந்தான். இவள் இரண்டு நாட்களாக ஏதும் சாப்பிடவில்லை. அந்த ஒரு விசயமே விஷ்வாவை கவலையில் ஆழ்த்தி விட்டது. இவளின் பேச்சை மீறி கதிருக்கு ஃபோன் செய்யவும் அவனுக்கு தயக்கமாக இருந்தது. கதிர் செய்த தவறை அடையாளம் கண்டுக் கொள்ள முடியாவிட்டாலும் கூட அவன் செய்த தவறுக்கு இந்த பிரிவு அவசியம் என நினைத்து ஃபோன் செய்யாமல் விட்டு விட்டான் அவன்.

'உன் புருசன் என் காதலன். இப்ப என் குழந்தைக்கு அப்பா..' பாலா சொன்னது மைவிழியின் செவிகளை விட்டு அகல மறுத்தது. ஒவ்வொரு முறை அதை நினைக்கும் போதும் புதிதாக சோகம் தாக்கி கொண்டே இருந்தது அவளை.

"விழி.." அதியன் வீட்டுக்குள் நுழையும் போதே அவளை அழைத்தபடிதான் நுழைந்தான்.

தன் மனதின் யோசனையோடு அமர்ந்திருந்த விஷ்வா அதியனின் குரலை கேட்டதும் தனது அறையிலிருந்து எழுந்து வெளியே ஓடி வந்தான்.

அதியன் தன் பயண பேக்கை ஸோபாவில் எறிந்து விட்டு விஷ்வாவின் அருகே வந்தான்.

"விழி எங்கே..?" என்றான் கவலையோடு.

"அந்த ரூம்ல இருக்கா.." என விஷ்வா சொன்னதும் அறையை நோக்கி ஓட இருந்தான் அதியன்‌. ஆனால் அவனை சட்டென பிடித்து நிறுத்தினான் விஷ்வா.

"அவளுக்கும் கதிருக்கும் நடுவுல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். இரண்டு நாளாக எதுவும் பேச மாட்டேங்கறா.. எதுவும் சாப்பிடவும் இல்ல இன்னும்.. இவளை காணாமா அங்கே கதிர் பைத்தியம் ஆகி இருப்பான் இன்னேரம். இவ அவனுக்கு போன் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டா.‌ அதனால நான் இன்னும் அவனுக்கு போன் கூட பண்ணல.."

அதியன் பெரு மூச்சி விட்டுக் கொண்டான்.

"கதிருக்கு ஃபோன் பண்ணி இங்கே வர சொல்லு.. நான் அவன்கிட்ட பேசணும். அதுக்கு முன்னாடி நான் இவக்கிட்ட பேசணும்.." என்றவன் எதிரில் இருந்த அறையை நோக்கி நடந்தான்.

"விழி.." கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவன் அவளின் நிலை கண்டு மனமுடைந்து போனான்.

ஈரம் காயாத விழிகள் தூக்கமின்மையால் சிவந்து கிடந்தது. முகமெல்லாம் வாடி கிடந்தது. இவனை கண்டதும் எழுந்து அமர்ந்தாள்.

"மாமா.." என்றவள் விம்மி விம்மி அழுதாள். அவளின் அழுகை அதியனுக்குதான் அதிக வலிகளை தந்தது.

தன் வாழ்வுதான் போராட்டம் என்றால் ஏன் இவளின் வாழ்வும் இப்படி ஆகி விட்டது என மனதுக்குள் புலம்பிக் கொண்டே அவளருகே சென்றான்.

அவள் முன் மண்டியிட்டவன் கட்டிலில் அமர்நதிருந்தவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

அவனை அணைத்தபடி அவன் தோளில் சாய்ந்து அழுதுக் கொண்டே இருந்தாள் அவள். நேரம் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. ஆனால் அவளது அழுகை குறையவேயில்லை.

"எல்லாம் சரியாகிடும் விழி.. அழாத.." அவளை சமாதானம் செய்தான் அவன்.

மறுத்து தலையசைத்தாள் மைவிழி.

"க.. க.. கதிருக்கு வேற ஒரு பொண்ணு கூட லவ் இருக்கு மாமா.." விக்கலோடு அவள் சொல்லவும் அதியன் அதிர்ச்சியோடு அவளை பார்த்தான்.

"என்ன சொல்ற விழி..? இது உண்மையா..?"

"ம்.. நானே பார்த்தேன் அவ காட்டிய போட்டோவை. இரண்டு பேருக்கும் ரொம்ப நாளா‌ லவ்வாம். அவளோட வயித்துல கதிரோட குழந்தை வளருது.." என்றவள் தன் குழந்தையின் நினைவில் இன்னும் அதிகமாக அழுதாள்‌.

அவளுக்கு என்ன சமாதானம் செய்வதென அதியனுக்கு புரியவில்லை. இந்த விசயம் அவளுக்கு எந்த அளவிலான மரண வலியை தந்திருக்கும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

"சரிம்மா அழாத விடு.. எதுவானாலும் பேசிக்கலாம். அவன்கிட்ட நான் பேசுறேன்.."

வேண்டாமென தலையசைத்தாள் அவள்.

"என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்க மாமா.. ப்ளீஸ்.. எனக்கு இங்கே இருக்க பிடிக்கல.. என்னை உங்களோடு கூட்டிட்டு போயிடுங்க.."

அதியனுக்கு அவளது வேதனை புரிந்தது. அவளுக்கு துன்பம் அதிகமாக இல்லாவிட்டால் இப்படி சொல்லி இருக்க மாட்டாள் என்பதை அறிவான் அதியன்.

அவளின் முதுகை வருடி தந்தான் அவன். சொந்த பந்தங்கள் தந்த பாசத்தை விட வேதா அவனுக்கு தந்து சென்ற வலி அதிகம் என்பதாலேயே அவளோடு கொஞ்சி மகிழ்ந்த ஊரை விட்டு செல்ல முடிவெடுத்து கடைசியில் நாட்டை விட்டே போனான் அதியன். இன்று அவனது முடிவையே மைவிழியும் எடுத்து விட்டாள் என்பதை நினைத்தவனுக்கு சோகம்தான் குப்பென நெஞ்சை தாக்கியது.

"சரி எழுந்து வா.. சாப்பிடுவ.." என்றான் அதியன்.

"எனக்கு வேணாம் மாமா.. எனக்கு கதிர் இருக்குற ஊர்ல இருக்கவே வேண்டாம்.." என்றவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

"நான் உன்னை என்னோடு கூட்டிட்டு போறேன்‌. ஆனா நீ முதல்ல சாப்பிடு.." அதியன் சொன்னான். ஆனால் அவள் முடியாதென தலையை அசைத்தாள்.

"மைவிழி.." கதிரின் குரல் கேட்டவுடன் பதறி நிமிர்ந்தாள் அவள்.

காற்றை போல அந்த அறைக்குள் புகுந்தான் கதிர்.

மைவிழியை கண்டவன் தலையை கோதியபடியே பெருமூச்சோடு கதவில் சாய்ந்தான்.

அவளை காணாமல் இந்த இரண்டு நாளில் பைத்தியமாக ஆகி விட்டான் அவன். அப்படி இருக்கையில் அவளை இப்படி கண் முன்னால் பார்த்தவுடன் அவனுடைய மிக பெரிய பயம் மறைந்தது.

அவள் நன்றாக உள்ளாள் என்பதே அவனுக்கு அப்போதைக்கு போதுமானதாக இருந்தது.

அவளின் நிலை அவனுக்கு தந்த வருத்தத்தை விட அவள் அவன் கண் முன்னால் உள்ளாள் என்ற விசயமே மனம் முழுக்க ஆக்கிரமித்து இருந்தது.

"அண்ணா.. நீ எப்ப வந்த..?" செழியன் குழப்பத்தோடு கேட்டுக் கொண்டு உள்ளே வந்தான்.

அதியன் மைவிழியை நேராக அமர வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

கையை முறுக்கி கொண்டு கதிரை நோக்கி அவன் வரவும் செழியன் சட்டென பாய்ந்து வந்து கதிரின் முன்னால் நின்றான்.

"அண்ணா என்ன பண்ற நீ..?" படபடவென அடித்துக் கொள்ளும் இதயத்தோடு கேட்டான் செழியன்.

"இவளை விட்டுட்டு வேற எவ கூடவோ இவன் குடும்பம் நடத்தி இருக்கான். இதை கேட்ட பிறகும் நான் சும்மா இருக்கணுமா..?" என கேட்ட அதியன் தன் தம்பியை தூர தள்ளி விட்டான். அவன் தள்ளி விட்டதில் இரண்டடி தள்ளி போய் நின்றான் செழியன்.

கதிரை கோபத்தோடு நெருங்கியவன் அவனது தாடையில் ஒரு குத்து விட்டான். ரத்தம் கசியும் உதட்டோடு இருந்த கதிர் மைவிழியைதான் பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர அதியன் மேல் துளியும் கோபம் கொள்ளவில்லை.

மைவிழி கண்ணீரோடு முகத்தை திருப்பி கொண்டாள்.

அதியன் மீண்டும் அவனை அடிக்க முயலும் முன் அவனை தடுத்தான் சரண்.

சரணை கண்ட அதியன் இன்னும் கோபத்தோடு அவனை குத்தினான். சரண் அடி வாங்கிய இடத்தை தேய்த்துக் கொண்டு அவனை பார்த்தான்.

"உனக்கு கோபம் தீரணும்ன்னா என்னையே அடி.. கதிரை அடிக்காத.. அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை.." என சரண் சொன்னான். அவனுக்கு மீண்டும் ஒரு அடியை தந்தான் அதியன்.

செழியன் அதியனை பிடித்து பின்னால் இழுத்தான்.

"பைத்தியமா நீ..? எதுக்கு இவனை அடிக்கற..?" என்றான் கோபத்தோடு அவன்.

"இந்த நாய் கரெக்டா இருந்தா எதுக்குடா இவனெல்லாம் அவ மனசை உடைக்கிறான்..?" கதிரை கை காட்டி சரணை குறிப்பிட்டு செழியனை கேட்டான் அதியன்.

"இதெல்லாம் சின்ன தப்புதானே.. விடுண்ணா.." என செழியன் சொல்லவும் அவனை அறைய கையை ஓங்கினான் அதியன். ஆனால் அவன் கையை தடுத்து நிறுத்தினான் கதிர்.

"தப்பு என் மேலதான். நீங்க என் மேலயே கோபப்படுங்க.. இவங்களை விட்டுடுங்க.." என்றான்.

"என்ன நாடகம் ஆடுறியா..? இப்படி வசனம் பேசிட்டா நான் உன்னை சும்மா விட்டுடுவேன்னு உனக்கு நினைப்பா..?" என கேட்டவன் அவனின் சட்டை காலரை பிடித்தான்.

"இவளுக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படிடா மனசு வந்தது.? எவ கூடவோ குழந்தை பெத்துக்கறவன் எதுக்குடா இவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட..?" அதியன் கோபத்தோடு கேட்டான்.

செழியன் மைவிழியை பார்த்தான். அவள் வேறு திசையில் திரும்பி இருந்தாள். ஆனால் அவள் கண்களில் அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

"அண்ணா விழி உன்கிட்ட என்ன சொன்னான்னு தெரியல.. ஆனா பாலாவுக்கும் கதிருக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல.." என்றான் செழியன் அவசரமாக.
அவன் சொன்னதை மைவிழி துளியும் நம்பவில்லை.

"கதிருக்கும் பாலாவும் இரண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி லவ் இருந்திருக்கு. ஆனா இப்ப இல்ல.. இவரு எவ கூடவோ குழந்தை பெத்துக்கல. அதோ உட்கார்ந்திருக்காளே மகராசி அவதான் இவருடைய குழந்தையை வயித்துல வளர்த்திட்டு இருக்கா.." என செழியன் சொல்லவும் அதியன் அதிர்ச்சியோடு மைவிழியை பார்த்தான்.

மைவிழி உதட்டை கடித்து கொண்டு தன் விம்மலை அடக்க முயன்றாள்.

"கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கறது ஒன்னும் தப்பு கிடையாது அண்ணா.." என செழியன் சொல்லவும் விசுக்கென எழுந்து நின்றாள் மைவிழி.

"அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி வேற ஒருத்தியோடு குடும்பம் நடந்தறதும் தப்பு கிடையாதா..?" என்றாள் தன் கண்ணீரை துடைத்து கொண்டே.

"அது.. அது ஏதோ சந்தர்ப்பம் சூழ்நிலை.." செழியன் அவளுக்கு சமாதானம் சொன்னான்.

"அது சந்தர்ப்பம் சூழ்நிலையா..? இதே மாதிரி நான் வேற எவனோடயோ எப்படி எப்படியோ இருந்துட்டு வந்தா அப்பவும் இப்படியே சொல்விங்களா..?" ஆத்திரத்தோடு கேட்டாள் அவள்.

செழியன் எரிச்சலோடு அவளை பார்த்தான். அவனுக்கும் இந்த விசயத்தில் கதிர் மேல் கோபம்தான். ஆனால் அந்த தவறுக்காக அவன் மேல் கோபம் கொண்டு அவனை கொன்றால் மட்டும் அவன் செய்த தவறு இல்லையென்றா மாறிவிடும்.?

"இவர் தப்பு பண்ணிட்டாருன்னு கோபப்படுறியா இல்ல உன்னால அந்த தப்பை செய்ய முடியலையேன்னு பெமினிச பார்வையில கோபப்படுறியா..?" எரிச்சல் குறையாமல் கேட்டான் செழியன்.

அவன் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டாள் மைவிழி. "உனக்கு இது எதுவும் புரியாது செழியா.. உனக்கு சொந்தமானது உனக்கு சொந்தமில்லை.. அது வேற யாரோ யூஸ் பண்ணதுன்னு தெரியும்போது அப்ப தெரியும் என் கஷ்டம் உனக்கு.."

"ஜெலஸோட இருக்கறது தப்பு இல்ல விழி. எதிராள் பேசவும் வாய்ப்பு தரணும்.." கதிர் அவளிடம் முதல் முறையாக பேசினான்‌.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top