நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

70. உறவின் இணைப்பு நானானேன்

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதிரை கோபத்தோடு பார்த்தாள் மைவிழி.

"ஜெலஸா..? சாதாரணமா ஜெலஸ்ன்னு சொல்லிட்டு போற உனக்கு எப்படி தெரியும் என் கஷ்டம்..? நான் மதுபாலன் ஸார்க்கிட்ட சும்மா சிரிச்சி பேசியதே உன்னால தாங்கிக்க முடியலன்னு சொன்ன. ஆனா நீ வேற எவளையோ காதலிச்சதை என்னால மட்டும் தாங்கிக்க முடியும்ன்னு எப்படி நினைச்ச..?" கோபத்தோடு கேட்டாள் அவள்.

"நான் இவளோடு தனியா பேசணும்.." கதிர் சொன்ன உடன் செழியனும் சரணும் அந்த அறையிலிருந்து வெளியே நடந்தனர்.

அதியன் சிலையாக நின்றான். அவனை கை பிடித்து வெளியே இழுத்து சென்றான் விஷ்வா.

அனைவரும் சென்ற பிறகு மைவிழியின் பக்கம் பார்த்தாள் கதிர்.

"நான் தப்பு பண்ணிட்டேன்னு தெரியும் விழி. ஆனா என் பக்க காரணத்தையும் கேளு.."

"உன் பக்க காரணமா..? என்ன சொல்ல போற..? பாலாவுக்கும் எனக்கும் தெய்வீக காதல் இருந்தது. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிஞ்சிட்டோம்ன்னு சொல்ல போற.." என்றவள் முகத்தை துடைத்துக் கொண்டு அவன் முகத்தை பார்த்தாள்.

"உன்னோட காதல் அவ்வளவு உசத்தியா இருந்தா என்னை ஏன் கல்யாணம் பண்ண..? ஓகே.. விவாகரத்து வாங்கதான் கல்யாணம் பண்ண.. ஆனா ஏன் என்னை காதலிக்கிறதா சொல்லி ஏமாத்தின..?" என்றவளுக்கு கடைசி வாக்கியத்தை சொல்லுகையில் குரல் உடைந்து போயிருந்தது.

கதிர் வேதனையோடு தன் தலை முடியை கோதி விட்டு கொண்டான்.

"நான் உன்னை ஏமாத்தல.. உன்னை நான் என் உயிரா நேசிக்கிறேன்.."

அவனை இளக்காரமாக பார்த்தாள் அவள். "அவளைதானே நீ முதல்ல நேசிச்ச.. என்னை எப்படி காதலிக்க முடியும் உன்னால.. அவளோட வந்தது காதல். ஆனா என்னோட வந்தது ஜஸ்ட் மன குழப்பம்.." என்றவள் நிற்க முடியாமல் தடுமாறினாள்.

அவளை சட்டென தாங்கி பிடித்தான் கதிர். அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள் மைவிழி. ஆனால் இரண்டு நாட்களாக பட்டினியாய் இருந்ததின் பலனாக சொந்த காலில் கூட நிற்க முடியவில்லை அவளால்.

கதிர் அவளை கட்டிலின் மீது அமர வைத்தான். அவள் அருகில் அமர்ந்தான் அவனும்.

"மைவிழி நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேளு.." என்றவன் தனக்கும் பாலாவுக்கும் இடையில் இருந்த காதலை பற்றி முழுதும் சொன்னான்.

"எனக்கு காதல் சைக்காலஜி பத்தி எதுவும் தெரியாது விழி. என் பக்க நியாயத்தை உன்கிட்ட சொல்ல நினைக்கிறேன் அவ்வளவுதான். பாலாவை நான் காதலிக்கறதாதான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா உன்னோடு பழக ஆரம்பிச்ச பிறகு அவளோடு இருந்தது வெறும் அபெக்சன்.. உன்னோடு வந்ததுதான் காதல்ன்னு புரிஞ்சது. அவளை நான் உண்மையா காதலிச்சிருந்தா அவ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் விட்டிருக்க மாட்டேன்னு இன்னைக்கு தோணுது.. உன்னை பிரிஞ்சி இரண்டு நாள் கூட என்னால இருக்க முடியல. ஆனா அவளை பிரிஞ்சி இருக்க முடியுது. அவ விட்டுட்டு போன போது கோபம் வந்தது. ஏமாற்றமா இருந்தது. ஆனா இந்த இரண்டு நாள் மாதிரி இதயத்தை கசக்கி பிழியற வலி இல்ல.. நான் சொல்றதை நம்பறதும் நம்பாததும் உன் விருப்பம். ஆனா என் மனசுல காதலின்னா நீ மட்டும்தான்."

மைவிழி கசப்பாக சிரித்தாள்.

"நல்லா பேசுற கதிர். ஆனா அவ வயித்துல உன் குழந்தை வளருதுன்னு சொன்னாளே.. அதை கூட பொய்யுன்னு சொல்வ. ஆனா அவ காட்டிய போட்டோ.." என்றவளுக்கு கண்ணீர் மீண்டும் மடை திறந்தது.

"கல்யாணம் கூட பண்ணிக்காம இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்திருக்கிங்க.." என்றவள் அந்த புகைப்பட நினைவில் இன்னும் அதிகமாக கண்ணீர் விட்டாள்.
கதிர் தலையை பிடித்தபடி அருகிலிருந்த தலையணை மேல் சாய்ந்து அமர்ந்தான். "தப்புதான்‌. ஆனா என் நிலைமையில் இருந்து ஒரு செகண்ட் யோசிச்சி பாரு. அன்னைக்கு நாளுல அவதான் என் காதலி. அவளையே கல்யாணம் பண்ணிக்க போறதா முழுசா நம்பினேன் நான். கல்யாணம் பண்ணிக்க போறவளோடு கணவன் மனைவியா வாழ்ந்தா தப்பென்னன்னுதான் நினைச்சிட்டேன். இந்த வாழ்க்கை என் நினைப்பு முழுக்க முட்டாள்தனம்ன்னு சுட்டிக் காட்டும்ன்னு நான் எதிர் பார்க்கல. நான் நினைச்ச அத்தனையும் தப்பு. நான் செஞ்சது அத்தனையும் தப்புன்னு எனக்கு தெரியல. அவ என் மனைவியாக பிறக்கல. நீதான்னு தெரிஞ்சிருந்தா அவளை நிமிர்ந்து கூட பார்த்திருக்க மாட்டேன். நீதான் என் மொத்த உலகமா மாற போறன்னு தெரிஞ்சிருந்தா அவளை காதலிக்கிறதா கனவுல கூட நினைச்சிருக்க மாட்டேன். இன்னைக்கு இப்படி நீ வயித்துல குட்டிப்பாப்பாவை வச்சிக்கிட்டு மாலை மாலையா கண்ணீர் விடுவன்னு தெரிஞ்சிருந்தா அவளை சுண்டு விரல் கூட தொட்டிருக்க மாட்டேன்.

எல்லாமே என் தப்புதான். ஆனா செஞ்சிட்ட தப்பை எப்படி மறைய வைக்க முடியும்..? இதே நான் இன்னும் அவளை காதலிக்கிறதா சொல்லி உன்கிட்ட டைவர்ஸ்காக கல்யாணம் பண்ணி இருந்தா நீயும் என் மேல பரிதாபப்பட்டு இருப்ப.. காதலும் பிரச்சனை இல்லாம வளர்ந்திருக்கும்.."

அவன் சொன்னதை யோசித்து பார்த்தவளுக்கு அது உண்மைதான் என தோன்றியது. ஆனாலும் அந்த புகைப்படங்கள் தந்த வலியை அவளால் பொறுக்க முடியவில்லை.

"ஆனா கஷ்டமா இருக்கு கதிர். அந்த பொண்ணு காட்டிய போட்டோ என் கண்ணை விட்டு போக மாட்டேங்குது.." முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் அவள்.

அதை கண்டு கதிருக்கும் கஷ்டமாகதான் இருந்தது.

"ஸாரி விழி.. உன்னோட கஷ்டத்தை என்னால புரிஞ்சிக்க முடியுது. ஆனா என்ன பரிகாரம் பண்றதுன்னுதான் தெரியல. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். அதோட தண்டனை முழுக்க உனக்குதான்னு தெரியும். ஆனா முடிஞ்சிட்ட நிமிஷங்களை நான் எப்படி திரும்ப கொண்டு வரமுடியும்..? இது உனக்கு ரொம்ப வலியை தரும்ன்னு தெரியும்.. அதனாலதான் பாலாவை பத்தி உன்கிட்ட சொல்ல கூட எனக்கு தைரியம் வரல. ஆனா நான் செஞ்சது தப்புதான்.. தண்டனையை அனுபவிக்க போறது நீதான்னு தெரிஞ்சும் என்ன பண்றதுன்னு தான் எனக்கு தெரியல.." குரல் முழுக்க வேதனையோடு சொன்னான் கதிர்.
அவனும் தான் அனுபவிக்கும் அதே கஷ்டத்தை அனுபவிக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டாள் மைவிழி.

"எனக்கு கொஞ்சம் டைம் வேணும் கதிர். உன்னை பார்த்தா எனக்கு அந்த போட்டோ மட்டும்தான் நினைவுக்கு வரும். எனக்கு ரொம்ப தாராள மனசு கிடையாது. நடந்தது எல்லாத்தையும் டேக் இட் ஈஸியா எடுத்துட்டு போக முடியாது. உன்னை விட்டு கொஞ்ச நாளாவது பிரிஞ்சி இருந்தாதான் என் ரணமும் ஆறும்.." முகத்தை துடைத்துக் கொண்டு சொன்னாள் அவள்.

கதிர் புரிந்து கொண்டவனாக தலையசைத்தான்.

"நீ நம்ம வீட்டுல வந்து இரு.. நான் வெளியே எங்கேயாவது தங்கிக்கிறேன்.."

மறுத்து தலையசைத்தாள் மைவிழி.

"நான் என் பிரெண்ட் ரேகா வீட்டுல போய் கொஞ்ச நாளுக்கு இருக்கேன். எனக்கு எப்ப வரணும்ன்னு தோணுதோ அப்போது வரேன்.‌. உன் பக்கம் நியாயம் இருக்குன்னு தெரியும் கதிர். ஆனா என் மனசுல அது பதிய கொஞ்சம் இடைவேளை வேணும்.."

அவளது பதில் கதிருக்கு அதிர்ச்சியைதான் தந்தது. ஆனால் அவளிடம் மறுப்பு தெரிவிக்க மனம் இல்லை அவனுக்கு. பெருமூச்சோடு எழுந்து நின்றான்.
கதவை நோக்கி நடந்தவன் சிறு யோசனையோடு நின்றான். மைவிழியை திரும்பி பார்த்தான். அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.

"என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ருத்ராவுக்கும் நீ பிரகனென்டா இருப்பது ரொம்ப சந்தோசம். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. உன் காலேஜ் பத்தி நீ கவலைபட வேணாம். குழந்தை பிறந்த பிறகு என் அம்மா அந்த குழந்தையை பார்த்துப்பாங்க. நீ உன் இஷ்டப்படி உன் கேரியரை தொடரலாம்.. பத்திரமா இரு. குழந்தையை பத்திரமா பார்த்துக்க. சீக்கிரம் திரும்பி வந்துடு.. ப்ளீஸ்.." என சொன்னவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

கதிர் ஹாலுக்கு வந்ததும் செழியனும் சரணும் அவனை எதிர்கொண்டு அழைத்தனர்.

"என்ன ஆச்சி..?" தயக்கத்தோடு கேட்டான் சரண்.

"அவளுக்கு டைம் வேணுமாம். அதனால அவ கொஞ்ச நாளைக்கு ரேகா வீட்டுல போய் தங்க போறாளாம்.."

"அந்த லூஸு கூடவா..?" என கேட்ட அதியனை கதிர் ஆச்சரியமாக பார்த்தான்.

கதிரும் மைவிழியும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் செழியனும் சரணும் கதிர் பக்கம் இருந்த நியாயங்களை எடுத்து சொல்லி ஏதோ ஓர் அளவிற்கு புரிய வைத்திருந்தனர். அதியனும் ஏற்கனவே காதலில் விழுந்தவன் என்பதால் கதிர் மீது கொண்ட கோபத்தை குறைத்து கொண்டான்.

"ஏன் இப்படி சொல்றிங்க..?" தயக்கமாக கேட்டான் கதிர்.

"அவ சரியான ரவுடி பொண்ணுப்பா. இந்த உலகம் உருண்டையா இல்ல தட்டையா இருக்குன்னு டாபிக் தந்து பேச விட்டா, அரைமணி நேரம் அவ பேசியதை கேட்டாளே நாமளும் பூமி தட்டைன்னு சத்தியம் பண்ணிடுவோம். அவ அப்படிபட்டவ. அவளோட கிறுக்கு தனத்தால மைவிழியை சன்னியாசியா மாத்திடுவா.." என அவன் சொல்ல கதிர் முகத்தில் பயம் குடி கொண்டது.

"ஆமா நான் என் மூளையை அடமானம் வச்சிருக்கேன். அதனால ரேகா சொல்ற எல்லாத்தையுமே கேட்டுப்பேன் இல்லையா..?" மைவிழியின் குரலை கேட்டு அவர்கள் திரும்பி பார்த்தனர்.

கதிர் பொய் கோபத்தோடு அதியன் பக்கம் பார்த்தான்.

"என் பொண்டாட்டி மத்தவங்க பேச்சை கேட்க மாட்டா.. அவளுக்கு எது நல்லது கெட்டதுன்னு தெரியும்.." என கதிர் சொல்ல, செழியன் அவனின் காதோரம் "காக்கா பிடிக்கிறது நல்லா தெரியுது.." என்றான்.

மைவிழி தரை பார்த்தாள்.

"ஸாரி மாமா.. என்னால உங்களுக்குதான் ரொம்ப சிரமம். நான் கூப்பிட்ட உடனே இவ்வளவு தூரம் நீங்க வந்திருக்கிங்க.. உங்க சப்போர்டுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.." என சொன்னவளின் அருகே சென்று அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் அதியன்.

"நன்றி எதுக்கு.? நீ என்னோட தங்கை மாதிரி. அத்தனை பிரச்சனையிலும் உனக்கு என் ஞாபகம் வந்ததுதுக்கு நான் சந்தோசப்படுறேன். நீ என்ன மாதிரி முடிவு எடுத்தாலும் நான் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்.."

அதியனின் நெஞ்சில் சாய்ந்து இருந்தவளுக்கு ஓர் துளி கண்ணீர் கசிந்தது.

"நீங்க என் அண்ணனா பிறக்கலையேன்னு ரொம்ப பீல் பண்றேன்.." கரகரத்த குரலில் அவள் சொல்ல சரண் பதில் சொல்ல மனதில் தெம்பில்லாமல் தலை குனிந்தான்.

"கூட பிறக்கலன்னாலும் பாசம் மாறாதும்மா.." என்றான் அதியன்.

முதலில் கதிர் அங்கிருந்து கிளம்பி போனான்.

மைவிழியின் அருகே வந்த செழியன் அவளின் தலையில் வலிக்காத மாதிரி ஒரு கொட்டு வைத்தான்‌.

"என் நினைவு உனக்கு வரவே இல்லதானே.? எங்கேயோ இருக்கற இவனுக்கு ஃபோன் பண்ணியிருக்க.. ஆனா பக்கத்துல இருக்கற என்னை மறந்துட்ட.."

"ஸாரி செழியா.. எனக்கு கதிர் மேல ரொம்ப கோபம். நான் எங்கே இருக்கேன்னு உனக்கு தெரிஞ்சா கதிர்கிட்டயும் சொல்லிடுவியோன்னு நினைச்சி குழம்பிட்டேன்.. ஸாரி.." என்றாள் வருத்தத்தோடு.

"எங்கேயாவது போனா முதல்ல எனக்கு சொல்லு பேயே.‌ எனக்குன்னு இருக்குற ஒரே பிரெண்ட் நீதான்.. உன்னை காணாம நான் எவ்வளவு பீல் பண்ணேன் தெரியுமா.?" என கேட்டவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

தான் அவனுக்கு தேவையில்லாத பயத்தை தந்து விட்டோம் என்பது அவளுக்கு புரிந்தது.

"ஸாரி.." என்றாள் மெல்லமாக.

"உன் ஸாரி யாருக்கு வேணும்..? ஆனா இன்னொரு முறை இப்படி சொல்லாம கொள்ளாம ஓடிப்போனா அப்புறம் நான் உன்னை கொன்னுடுவேன் பார்த்துக்க..?" என்றவன் அவளிடம் இருந்து விலகி நின்றான்.

"உன்னை என் அண்ணன்தான் தங்கச்சியா நினைக்கிறான்

ஆனா நான் இல்ல.. அதனால சொத்துல பங்கு கேட்டு வந்துடாத.." செழியன் சொல்லவும் இரண்டு நாட்கள் அழுகைக்கு பிறகான சிரிப்பு முதன் முறையாக மைவிழி முகத்தில் அரும்பியது.

"கதிர் மேல தப்பேதும் இல்ல விழி.. பாவம் அவர்.. உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்காரு.." சரண் இப்படி சொல்லவும் மைவிழி அவனை திரும்பி பார்த்தாள்.

இரண்டடி தள்ளி தயக்கமாக நின்றிருந்தான் அவன். மைவிழிக்கு அவன் மேல் கோபம் ஏதும் இல்லை. ஆனால் மனம் முழுக்க வருத்தம் இருந்தது.

"ஸாரி விழி. உன்னை அன்னைக்கு அப்படி நான் பேசி இருக்க கூடாது.. நான் நல்ல அண்ணன் இல்லன்னு எனக்கே நல்லா தெரியும்.. அது என்னவோ சின்ன பையனிலிருந்தே உன் மேல பாசம் காட்டல நான். பாசம் இருந்தது மனசுக்குள்ள. ஆனா அதை வெளிக்காட்ட தயக்கம்.. அம்மாவுக்கும் பாட்டிக்கும் உன்னை பிடிக்கல. நான் உன் மேல பாசம் காட்டினா அவங்க என் மேல காட்டுற பாசம் குறைஞ்சிடுமோன்னு பயந்து என் பாசத்தை உள்ளுக்குள்ளயே வச்சிக்கிட்டேன்.. ஸாரி இத்தனை நாள் உன் மனசை கஷ்டப்படுத்தியதுக்கு.. ஆனா இனி இப்படி எங்கேயும் காணாம போகாத.." என்றவன் திரும்பி நடந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்தான் கதிர். மைவிழியின் கையில் ஆரஞ்சி மிட்டாய் பாக்ஸை தந்தான்.

அவளுக்கு மிட்டாயை கண்டதும் கண்கள் மின்னின.

"அன்னைக்கு ஏன் நீ மிட்டாய் கேட்டன்னு அப்ப தெரியல.. இப்ப தந்திருக்கேன். டெய்லியும் மிட்டாய் வாங்கி யாருக்கிட்டயாவது தந்து விடுறேன்.." என்றவன் தன் பின்னங்கழுத்தை தடவிக்கொண்டே மைவிழியை தயக்கமாக பார்த்தான். தன் பாக்கெட்டில் இருந்த ஒரு டெய்ரி மில்கை அவளிடம் நீட்டினான்.

"ஸாரி ஆரஞ்சு மிட்டாய்.. அன்னைக்கு உன் பிறந்த நாள் அன்னைக்கு காலையில் நாங்க அந்த ஊரை விட்டு மாறி வந்துட்டோம். அதான் உனக்கு அன்னைக்கு மிட்டாய் தர முடியல. உன்னை ஏமாத்திடமேன்னு தினமும் பீல் பண்ணேன் நான்.." என்றவன் அவளை கடைசி ஒருமுறை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான்.
தன் கையில் இருந்த டெய்ரி மில்கை ஆச்சரியத்தோடு பார்த்தாள் மைவிழி.

LIKE

COMMENT

FOLLOW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top