நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

என் நெஞ்சுநேர்பவளே -12

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் -12

"ரஞ்சி அந்த வேலைக்கு போயே ஆகணுமா... "என்று அன்றைய நாளின் நூறாவது முறையாவது கேட்டிருப்பாள் ஆரதி..

"எத்தனை தடவடி கேப்ப..உனக்கு பதில் சொல்லியே என் வாய் டயர்ட் ஆகிருச்சு. நீ பண்ண வேலையையும் மீறி வேலை குடுத்துருக்காங்கடி.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க போல.. நாம பண்ற அலப்பறைக்கு இந்த மாதிரி ஈனா வானா தான் பெஸ்ட்.. அதோட நிறைய வெரைடீ கல்யாணத்துக்கு போகலாம்.. அதும் இவங்க வேற பெரிய பார்ட்டி.. இவங்க புடிக்கறதும் பெரிய ஆளுங்களா தான் இருக்கும்..

சோ ஆல்வேஸ் சாப்பாடு கூட செம்ம தரமா இருக்கும்டி.. அதை விட வேற என்ன வேணும்...தட் கண்ணா லட்டு தின்ன ஆசையா.... "

"மச்சி சோறுன்னு வந்துட்டா உன் மைண்ட் மட்டும் தான்டி இப்படி அல்டிமேட்டா யோசிக்குது.. "

"ஹிஹி.. எல்லாம் பொறப்பு ரகசியம் மச்சி... "

"என்னவோடி அந்த சோத்துக்காக மட்டும் தான் அவன்கிட்டலாம் வேலைக்கு வரேன் புரிஞ்சுதா.. 'இவள் மானங்கெட்ட மனசாட்சியோ"ம்க்கும் இதை நாங்க நம்பணுமாக்கும்.. அவனை பார்க்க போறோம்னு அரலோடு மேக்கப் அள்ளி மூஞ்சில பூசிட்டு வந்துட்டு பேச்சை பாரு சோத்துக்கு செத்தவளாட்டம்.. "என்று தாடையில் இடித்துக் கொண்டது...
ஆராதனையை ஒருவழியாய் அடைந்தவர்கள் வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தனர்.. வரவேற்பு பெண் ஸ்நேகமாய் சிரித்து வைக்க, இவர்கள் இருவரும் முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டியதில் இனி சிரிக்கவே கூடாது என்று வேண்டுதல் வைத்தாளோ என்னவோ அடுத்து இவர்கள் புறம் திரும்பவே இல்லை...

பின் இன்னொரு பெண் வந்து அவர்கள் டிபார்ட்மென்ட்க்கு அழைத்துச் சென்றாள்.. அங்கிருந்த ஒருவனிடம் இவர்களை அறிமுகம் செய்து விட்டு சென்றுவிட்டாள்..

"ஹாய் கேர்ள்ஸ்.. ஐ யம் ரித்விக்... உங்க டீம்மேட் .. சரி ஈவென்ட் மேனேஜ்மென்ட்னா என்னனு தெரியுமா... "

ஆரதி "ஈவென்ட்ட மேனேஜ் பண்றதா சார்.. "

ரித்விக் "ஹாஹா.. அப்படினா என்னனு கேட்டேன்.. எப்படி அதை மேனேஜ் செய்வீங்க.."

ஆரதி"அப்பிடி இப்படின்னு எப்படியாச்சும் மேனேஜ் செஞ்சுறலாம் சார்.. "

ரித்விக் "எது..... அப்புடி இப்படின்னு மேனேஜ் செய்வீங்களா. சரி தான் இதுக்கு தெரியலைன்னே சொல்லிருக்கலாம்ல.. "

ரஞ்சி"அப்படி பொசுக்குன்னு சொல்லிட்டா இந்த உலகம் எங்களை என்ன நினைக்கும்.. கெத்து முக்கியம் சாரே... "

இங்கு இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை சிசிடிவி மூலம் பார்த்து கொண்டிருந்த ஆதி "ரெண்டும் வந்ததும் ஆரம்பிச்சுருச்சுக டா... இனி வாய் கிழிய கிழிய பேசுவாளுங்க.. ரித்விக் பாவம்.. பதறியடிச்சு ஓடி வர போறான்.. "சொன்ன சிறிது நேரத்திலேயே அறைக்கதவை வேகமாக திறந்து கொண்டு வந்தான் ரித்விக்..

"டேய் பாஸு.. முடிலடா.. எங்கிருந்து புடிச்சுட்டு வந்து என்னைய கோர்த்து விட்ட.. ரெண்டும் பாக்க பச்ச புள்ள மாறி இருந்துட்டு என்னமா பேசி டார்ச்சர் பன்றாங்க.. அதிலும் உன் ஆளு இருக்கே.. யம்மா யப்பா.. எப்படித் தான் சமாளிப்பாயோ.. "

கார்த்தி "நீ வேற.. பேசுனதுக்கே நீ பேய் அடிச்ச மாதிரி ஓடி வந்துருக்க.. இன்னும் மேடம் க்கு இவனை பார்த்தா பொங்கும் பாரு ஆத்திரம்.. ஒரே ரணகளமா இருக்கும் மச்சி.. எதுக்கும் நீ சீக்கிரம் உன் சீட்டுக்கு ஓடி போயிரு.. ரொம்ப நேரம் அவங்கள வெயிட் பண்ண வச்சு தேவையில்லாம ஒரு பிளவர்வாஷ்க்கு உன் தலையை இரையாக்கிறாத... "

"அய்யயோ இது வேறயா.. உங்க கூட சகவாசம் வச்சதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.. "என்று கூறிவிட்டு ஓடி விட்டான் ரித்விக்..

அறைக்கு மீண்டும் வந்தவனை ரஞ்சியும் ரதியும் மாறி மாறி கேள்வி கேட்டு குடைந்ததில் பதில் சொல்லியே டயர்ட் ஆனவன்,

"கேர்ள்ஸ் இனாப்... இதுக்கும் மேல எதாவது கேட்டால் நான் அழுதுருவேன்.. ரெண்டு மூணு ப்ரோக்ராம் எங்களோட சேர்ந்து அட்டென்ட் பண்ணுங்க.. நாங்க செய்யறதை வாட்ச் பண்ணுங்க.. தென் நீங்களே எல்லாம் கத்துக்குவீங்க.. "

ரதி "இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்ல.. எதுக்கு எங்களை அது தெரியுமா இது தெரியுமான்னு கேள்வி கேட்டிங்க.."

ரித்விக் "தப்பு தான்... ரொம்ப பெரிய தப்பு தான்.. மன்னிச்சுடுங்கமா.."

ரஞ்சி"உங்களையும் பார்த்தா பாவமா தான் இருக்கு.. சரி மன்னிச்சு விட்டறோம்... கடைசியா ஒரு டவுட்டு.. அதை மட்டும் கிளியர் பண்ணிடீங்கனா மேற்படி எங்க ஜாப் கண்டின்யூ பண்ண வசதியா இருக்கும்.. "

"அப்பிடி என்னமா முக்கியமான டவுட்டு.."
ரஞ்சி " அது வந்து சார்... நாம இப்ப ஒரு ஈவென்ட் ஆர்கனைஸ் பண்ணும்போது புட் எல்லாம் நாம கொண்டு வரணுமா.. இல்ல அவங்களே தருவாங்களா.. "

அவர்களை விசித்திரமாய் பார்த்த ரித்விக் "நாம தான் புட் அரேஞ்சமென்ட் எல்லாம் பண்றோம்.. அப்பிடி இருக்கறப்ப நாமளே சாப்பிடலைனா மாதவங்க எப்படி சாப்பிடுவாங்க.. அதிலும் நம்ம டிபார்ட்மென்ட் தான் ஹோல் பங்சன் ஆர்கனைஸ் பண்றோம்..சோ அங்க போய்ட்டு டிபன் பாக்ஸ்ல வச்சு சாப்பிட்டு இருந்தா எல்லாரும் நம்மள ஒரு மாதிரி பார்ப்பாங்க... அதனால் அங்க செர்வ் பண்ற புட் தான் நமக்கும்.. "

"இது போதும் எங்களுக்கு இது போதுமே.. வேறென்ன வேணும் இது போதுமே "என இருவரும் கோரஸாக பாட, 'என்ன மேனுபாக்சரிங்டா ரெண்டு பேரும்... 'என்று தான் யோசித்தான்..

பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் பொறுப்பாய் எல்லாம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்...

இப்படி ஒருவார காலம் கற்றுக் கொள்வதில் சென்றது.. இடையில் அவ்வப்போது ஆதியை சந்தித்தாலும் பேச்சும் இன்றி பிரச்சனையும் இன்றி போய்க்கொண்டிருந்தது..

அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பத்து மணி வரைக்கும் இழுத்து போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தாள் ஆரதி.. அவள் அருகில் ரஞ்சியும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்..

அந்த அறைக்குள் பூனை நடை போட்டு வந்தவன் ஒரு வாளி தண்ணீரை மேலே ஊற்ற அலறியடித்து எழுந்தனர் தோழிகள் இருவரும்..

"ஏழு கழுதை வயசு ஆச்சு... இன்னும் என்ன பத்து மணிக்கும் மேல தூக்கம் வேண்டி கிடக்கு... " என்று வாளியுடன் நின்றவனை பார்த்ததும் ஒரே தாவலில் கட்டிக்கொண்டனர்..

"டேய் அபி... எப்படா வந்த.. "என்றனர் ஒரே குரலில்...

"இப்போ தான் அக்காஸ் வந்தேன்.. வாசல்ல நின்னு என்னை ஆவலா எதிர் பார்த்துட்டு இருப்பீங்கன்னு நினைச்சுட்டு வந்தா, என் நெனப்பே இல்லாம தூங்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்... "

ரதி "ஹேய் சாரி சாரி அபிக் குட்டி... "

ரஞ்சி "மன்னிச்சுக்கோ அபி பையா.. "

"ஐ மிஸ் யூ சோ மச் அக்காஸ்.. "என்று இவனும் சொல்ல மூணு பேரும் கட்டிக்கொண்டு குதித்தனர்... இவர்கள் சத்தத்தில் உள்ளே வந்தார் வேணி...

"உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லையா வாலுங்களா.. அவன் என்னமோ மாசக் கணக்கா பிரிஞ்சு இருக்கற மாதிரி நீங்க போடற சீன் உங்களுக்கே நல்லாருக்கா.. என்ஜினீயரிங் கவுன்சலிங்க்கு ஒரு ரெண்டு நாள் சென்னை போய்ட்டு வந்ததுக்கு இவ்ளோ அலப்பறை... "

என்றவர் கண்ணில் ஈர பெட்டும் வாளியும் தென்பட்டு விட "டேய் காலங்காத்தால என்ன கூத்துடா பண்ணி வச்சுருக்க.. மரியாதையா மூணு பேரும் பெட்ட தூக்கி மாடில போட்டுட்டு பெட்ஸிட் அலசிட்டு ரூமை மாப் போட்டு தொடச்சிட்டு தான் வேற வேலை பார்க்கணும்... "என்று உத்தரவு போட்டு விட்டு தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டார்..மூன்று பேரும் ஆளுக்கு ஒரு வேலையை செய்து முடித்ததும் தங்கள் வீட்டிற்கு வந்தாள் ரதி...

"ஏண்டி.. இப்ப தான் எழுந்தியா.." என்றவாறு எதிர்பட்டார் மீனா..

"விட்டுருந்தா இன்னும் தூங்கிருப்பேன்..அபி வந்து எழுப்பி விட்டுட்டான்.. "

"ஹே அபிக் குட்டி வந்துட்டானா.. கவுன்சிலிங்ல நம்ம ஊரு காலேஜ் கிடைச்சிருமா.. "

"அதெல்லாம் அவன் மார்க்குக்கு ஈஸியா கிடைக்கும்மா.. "

"ஆமாண்டி அதுவும் சரிதான்... அப்புறம் நம்ம அம்மாச்சியும் அப்புச்சியும் இன்னைக்கு சாயந்தரம் வரேன்னு சொன்னாங்க.. நாளைக்கு சுபிக்கு பாத்துருக்கற பையன் வீட்ல இருந்து வராங்கலாம்.. "

"வாவ் சூப்பர் மா.. போட்டோ கூட பார்த்தேன் சுபிக்கு செம்ம பொருத்தமா இருப்பாரு.. ஆனால் நாளைக்கு எனக்கு ஆபிஸ் இருக்கேமா... லீவும் போட முடியாதே.. "

"பரவாயில்ல விடு ரதி.. ஜஸ்ட் பார்க்க தான வராங்க.. கன்போர்ம் ஆகிட்டா அப்புறம் வர பங்சன்க்குலாம் லீவு போட்டுக்கலாம்.. "

"சரிம்மா.. "என்று விட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.. அப்போது தான் குளித்து விட்டு வந்து சுபியை கட்டிக் கொண்டாள்..

"சுபிக்கா.. உன்னை நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்களாம்.. "

"ப்ச்.. போடி.. இது அப்பப்போ நடக்கறது தான.. வருவாங்க.. அப்புறம் அது நொள்ளை இது சொள்ளைம்பாங்க.. கடைசியா ஜாதகத்தை காரணம் காட்டி ஓடிருவாங்க.. கடுப்பா இருக்குடி.. "

"சுபி செல்லம் இப்படிலாம் அப்போசிட்டா யோசிக்க கூடாது.. நீ வேணுனா பாரு நாளைக்கு வரவர் தான் என்னோட எதிர்கால மாமாவாகப்போறார்... "

அவளுக்கு தெரியவில்லை அந்த மாமா மூலம் தனக்கு பெரிய ஆப்பு வரும் என்று...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN