யாசிக்கிறேன் உன் காதலை - 14
"நம்ம வீடு இப்ப போர்க்களம் மாதிரி மாறிருச்சுல" என்றான் நந்து வருத்தமாக.
"ஆமா எப்ப என்ன சண்டை வரும்னு பயமா இருக்கு நேகி ரியாக்ட் பண்றது சரியா அண்ணா.. மாமா.." என்றாள் மித்ரா யோசனையுடன்.
"ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ரியாக்ட் பண்ணுவாங்க, நேகி இந்த மாதிரி பண்ணுறா நாம எல்லாரும் கோவம் வந்தா கத்துவோம் ஆனா துரு" என்றான் சந்தோஷ் புருவம் உயர்த்தி. மித்ரா முழித்தாள்.
"துரு மாமாதான் தாத்தாகிட்ட அன்னைக்கு கோவமா பேசுனாங்களே!" என்றாள் சந்தியா வேகமாக.
"அன்னைக்கு தாத்தா அப்படி பண்ணுனது தப்பு அத புரியவைக்க தான் கோவமா இருக்க மாதிரி பேசுனேன்" என்றான் துரு.
"துரு உண்மையா கோவப்பட்டா பேசவே மாட்டான் நம்மள மாதிரி கத்தி சண்டை போட மாட்டான்" என்றான் விரு.
"அவன் பேசாம இருந்தே கொல்லுவான், இப்ப நம்மள சமாதானம் பண்ண எப்படி முன்னாடி வரான், இவன சமாதான பண்ணவே முடியாது இவனா சமாதானமாகி வந்தாலும் பேச மாட்டான், அப்படியே பேசுனாலும் பேசாமலே இருந்துருக்கலாம்னு தோணும் அந்த அளவுக்கு வார்த்தை கொல்லும்" என்றான் ரிஷி.
"என்னைய பத்தி பேசறதுக்கு விட்டுட்டு டாலுவையும் அபியையும் எப்படி சமாதானம் பண்றதுன்னு யோசிங்க டா" என்றான் துரு.
"ஆமா அபி வேற அழுதா நேகி வேற செம்ம டென்ஷனா இருக்கா ரவீன் மாமா பாவம் நல்லா திட்டு வாங்குனாங்க" என்றான் நந்து.
"ரவீன கல்யாணம் பண்ண சம்மதமானு இவகிட்ட கேட்டிருக்கலாம் கேட்காம விட்டுட்டாங்க, அபி கிட்ட கேட்டாங்களா?? இவ கிட்ட கேட்டா தான் என்ன??" என்றான் சந்தோஷ் எரிச்சலாக.
"ஆமாடா அப்ப அவ மனசுல நா தான் இருக்கேன்னு உண்மைய சொல்லி இருப்பா" என்றான் ரிஷி.
"என்னடா " என்று குனிய வைத்து அவனை அடித்தனர்.
"டேய்!! போதும் சமாதானம் பண்ணனும் டா முதல்ல, என்னைய வேற இந்த விஷயத்துல தலையிடாதன்னு வேற சொல்லிட்டா" என்றான் துரு வருத்தமாக.
"அவ சொன்னது கரெக்ட் டா துரு ரவீன் விஷயத்த பத்தி நாம அவ கிட்ட பேச வேணாம்" என்றான் விரு.
"நானும் அதான் நினைக்கிறேன்" என்றான் யோசனையுடன்.
"என்னங்க சாப்பிடாம இப்படி ரூம்ல வந்து உட்கார்ந்திருக்கீங்க" என்றார் அகிலா.
"நம்ம பொண்ணுங்க வந்ததுக்கு அப்புறம் சாப்பிட வரேன்" என்றார் குணா.
"கீழ கேட்டாங்க நீங்க ஆபீஸ் வேலையா ரூமுல போன் பேசிட்டு இருக்கீங்கன்னு சொன்னேன், வாங்க நாம போலாம், வேலையாள கூப்பிட அனுப்பிட்டேன்".
"ம்ம்.. பூசாரி வேற இப்படி சொல்லிட்டாரு பேபி டால் மனசு உடையாம பார்த்துக்கணும், அபிய துரு நல்லா பாத்துப்பான் அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல" என்றார் பெருமூச்சுடன்.
"ஏங்க ரவீன் நேகாவ நல்லா பார்த்துக்க மாட்டானா??" என்றார் அகிலா வேகமாக.
"நா எப்ப அப்படி சொன்னேன் பேபி டால் சம்மதம் சொன்னா எனக்கு ரொம்ப சந்தோஷம் தான், அபி கிட்ட பேசி சம்மதம் வாங்குன மாதிரி இவ கிட்ட வாங்க முடியாதுன்னு உனக்கு நல்லாவே தெரியும், நா பூசாரி சொன்னத பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்" என்றார் யோசனையுடன்.
"சரி வாங்க நாம கீழ போலாம்" என்று அவரை அழைத்து வந்தார். மறுபக்கம் படிக்கட்டு வழியாக தீயா, நேகா, ஆதி, அபி நால்வரும் வந்தனர்.
"வாங்க டா சாப்பிடலாம்" என்று அழைத்து சென்றார். சிறியவர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இருந்தனர். அனைவரும் சாப்பிட உட்கார்ந்தனர். பரிமாற ஆரம்பித்தனர்.
"பாட்டி எனக்கு நீங்க நெய் தோச ஊத்தி தாங்க" என்றாள் நேகா அபிராமி பாட்டியிடம்.
"கண்ணு என்கிட்டயா பேசுன??" என்றார் அதிர்ச்சியுடன்.
"ஆமா பாட்டி" என்றாள் சிரிப்புடன். மற்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
"இதோ! கொண்டு வரேன்" என்று சந்தோஷமாக உள்ளே சென்றார்.
"டாலு எப்படி பாட்டி கிட்ட பேசுன, பாட்டிய மன்னிச்சுட்டியா??" என்றான் துரு. மற்றவர்களும் அதே கேள்வியுடன் அவள் முகத்தை பார்த்தனர்.
பாட்டி தோசையை எடுத்து வந்து தட்டில் வைத்து சட்னியை ஊற்றினார்."ஆமா தாத்தாவ கன்சிடர் பண்றப்ப பாட்டி தௌசண்ட் டைம் பெட்டர், அவர் பண்றதுக்கு பாட்டி கால் தூசிக்கு கூட வர மாட்டாங்க, பாட்டி ரியலி கிரேட்" என்றாள் சாப்பிட்டுக்கொண்டே.
பாட்டி அவள் தலையை கோதி விட்டு உள்ளே சென்றார்."நேகா தாத்தாவ பத்தி அப்படி பேசக்கூடாது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்றார் அகிலா பொறுமையாக.
"மீ இங்க நா சின்ன பொண்ணா இல்ல தாத்தா சின்ன பையனா?? இது என் லைஃப் சம்பந்தப்பட்டது ஆனா நா என் முடிவை எடுக்கக்கூடாது, அதுக்கு நா அட்ஜஸ்ட் பண்ணனுமா?? உங்களுக்கு தெரியும்ல நானும் சரி அபியும் சரி எந்த இடத்துக்கும் போறதுக்கு முன்னாடியே அதுக்கு தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிப்போம்னு, இங்க வந்தப்ப எனக்கு அலர்ஜி வந்துருச்சு அதுனால த்ரீ பை ஃபோட் டிரஸ் போட்டுட்டு வந்தேன், அதுக்கப்புறம் எதுக்குமே நா ஜஸ்ட் பண்ணலையா?? மாம், ஓகே நா சொல்றதுக்கு எதுவும் இல்ல" என்றாள் வருத்தத்துடன்.
"பேபிடால் யாருக்கும் உன்ன நிருபிக்கனும்னு அவசியமில்லை சாப்பிடு" என்று குணா அவள் தட்டில் இருந்த சாப்பாட்டை ஊட்டினார்.
"டாடி திஸ் இஸ் பேட்.. எனக்கு" என்று தியா வாயை திறந்து காட்டினாள்.
குணா சிரிப்புடன் தியாவிற்கு ஊட்டிவிட்டு,"ஓடிவாங்க யார் யாருக்கு வேணுமோ லைன்ல வாங்க எல்லாத்துக்கும் ஊட்டி விடுறேன்" என்றார் சிரிப்புடன். சிறியவர்கள் அனைவரும் அவரிடம் வாங்கினர். "பார்வதி, மல்லிகா, முல்லை வந்து ஆ வாங்கிக்கோங்க" என்றார் சிரிப்புடன்.
"எங்களுக்குமா அண்ணா" என்றனர் ஆச்சரியமாக.
"ஆமாடா வாங்க" என்று அவர்களுக்கும் ஊட்டி விட்டார். மற்றவர்கள் சிரிப்புடன் பார்த்தனர். அனைவரும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.
"நாளைக்கு காலைல வீட்ல பூஜை இருக்குடா அதுக்கு புடவ தான் கட்டனும் எல்லாரும் புடவ கட்டிட்டு வாங்க" என்றார் அபிராமி.
"சரி" என்றனர் சிறியவர்கள். பெரியவர்கள் அனைவரும் படுக்க சென்றனர் குணா மற்றும் அகிலாவை தவிர. மற்றவர்கள் தாழ்வாரத்தில் உட்கார்ந்தனர்.
"அபி நீ எதுக்கு அழுத??" என்றார் குணா கூர்மையான பார்வையுடன்.
"நா அழுகுல டாடி" என்றாள் பொய்யான சிரிப்புடன்.
"அப்ப ஏன் உன் கண்ணு வீங்கி இருக்கு??" என்றார் அகிலா.
"ஃபைட் பண்ணுன நேகியே கன்னு மாதிரி நிக்கிறா வேடிக்க பார்த்த நீ அழுகுற" என்றான் நந்து சலிப்புடன்.
"அதுக்காகவா அழுத" என்றனர் குணா மற்றும் அகிலா.
"ஆமா இப்பதான் ஒன்னு சேர்ந்து இருக்கோம் சண்ட பெருசாச்சுனா அதான்" என்றாள் உண்மை பாதி பொய் பாதியாக.
"அப்படி பிரிய நாங்க விடமாட்டோம் இதுக்கு போயி ஏன் அழுகுற அழாத டா" என்றான் துரு சமாதானமாக. அபி தலைகுனிந்தாள்.
"அப்படி எல்லாம் நடக்காது குட்டிமா ரிலாக்ஸா இரு, யூஎஸ்ல நீயும் ரொம்ப போல்டா தான் இருந்த, இப்ப ரொம்ப மாறிட்ட எதுக்கு எடுத்தாலும் அழுகுற, அழுகாத நல்ல யோசி அப்ப தான் தெளிவு கிடைக்கும்" என்றார் குணா அவள் தலை கோதி.
"சரி டாடி" என்றாள் அவரை அணைத்துவிடுவிட்டு.
"நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க நாங்க போய் தூங்குறோம், நாளைக்கு வேலை வேற இருக்கு" என்று குணா எழுந்தார். அகிலாவும் எழுந்தார்."பேபி டால் டாடி மேல கோபம் இல்லையே!" என்றார் தயங்கியபடி.
"நோ.. டாடி இதுல இருந்து எப்படி வெளிய வருதுன்னு யோசிக்கிறேன் என்னால யாருக்கும் எந்த ப்ராப்ளமும் வராத மாதிரி யோசிப்பேன் டாடி, நீங்க போய் படுங்க" என்றாள் உறுதியாக.
"குட் யார் மனசையும் கஷ்ட படுத்த கூடாது நல்லா யோசி டா, வா அகி" என்று மேலே அழைத்து சென்றார்.
"டாலு என் மேல கோவமா??" என்றான் துரு.
"உன் மேல ஏன் கோவப்படனும் நீ என்ன தப்பு பண்ணுன??" என்றாள் நிதானமாக அவன் முகத்தை பார்த்து.
"இல்ல இந்த விஷயத்துல தலையிட வேணாம் சமாதானம் பண்ண வராதுன்னு சொன்னியே" என்றான் தயங்கியபடி.
"சொன்னேன் தான் நா தாத்தா சொல்ற எல்லாத்துக்கும் சரின்னு சொல்ல மாட்டேன், நீயே சொல்லு என் மேரேஜ் எனக்கே மெசேஜ் மாதிரி சொன்னா எப்படி இருக்கும்?? வாழ போறது நானா இல்ல தாத்தாவா??" என்றாள் எரிச்சலுடன்.
"ஏய்! கூல் கூல்" என்றனர் அனைவரும்.
"பேபி இப்ப எதுக்கு இவ்ளோ! டென்சன் தாத்தா பண்ணுனதுக்கு துரு என்ன பண்ணுவாரு" என்றாள் அபி பொறுமையாக.
"பாருடா இப்பவே அண்ணாவுக்கு சப்போட் பண்ணுறத" என்றாள் மித்ரா கிண்டலாக.
"நீ நடத்து அபி" என்றாள் சந்தியா கிண்டலாக.
அபிக்கு எரிச்சலாக வந்தது கட்டுப்படுத்தி முகத்தை மாற்றிக் கொண்டாள். துரு சலிப்புடன் பார்த்தான்."அவனுக்கு சப்போர்ட் பண்ணல நா தேவ் மேல கோவப்படுறேன்னு நினைச்சு தான் சொன்னா" என்றாள் நேகா எரிச்சலுடன்.
"அட நேகி இன்னைக்கு நீ ரொம்ப டென்ஷனா இருக்க போல யார் என்ன சொன்னாலும் நல்லா வாங்கி கட்டிப்பாங்க போலயே!" என்றான் ரிஷி கிண்டலாக.
"ஆமா கொஞ்சம் டென்ஷன் ரிஷி சாரி மித்து, சந்தியா, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல" என்றாள் வருத்தமாக.
"இட்ஸ் ஓகேடா விடு" என்று ரிஷி அவள் தோளில் கையை போட்டு தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
"தாத்தா இப்படித்தானே விடு டா" என்றான் சந்தோஷ் பொறுமையாக.
"ஆமா நேகி தாத்தா பேசுனதுக்கு தான் நீ லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டியே!" என்றான் விரு சமாதானமாக.
ரிஷி இடமிருந்து வேகமாக விலகி,"முதல்ல இப்படிப் பேசுறத நிறுத்துங்க, தாத்தா இப்படித்தானேன்னு இன்னொரு தடவ யாராச்சும் சொன்னிங்க அவ்ளோ தான், கடவுள் குடுத்தது ஒரு லைஃப் தான் அதையும் தாத்தாக்காக வாழ்ந்தா நமக்கான லைஃப எப்ப வாழ்றது??" என்றாள் எரிச்சலுடன்.
"டாலு ரவீன கல்யாணம் பண்ண சொல்லி நாங்க சொல்ல மாட்டோம் நீ கிட்ட வா" என்று துரு தலையசைத்தான்.
"போ நா வரமாட்டேன் ரிஷி.. விரு.. கூட தான் இருப்பேன்" என்று பக்கத்தில் இருந்த விருவின் தோளில் சாய்ந்தாள்.
விரு ஓர் கையால் அவளை அணைத்துக் கொண்டு, "அவ வரமாட்டா என் கிட்ட தான் இருப்பா போடா" என்றான் கிண்டலாக.
ரிஷி மற்றும் விருவை விஷமமாக பார்த்து சிரித்துவிட்டு," என்கிட்ட இப்ப வருவியா?? மாட்டியா?? டாலு" என்று புருவம் உயர்த்தி வா என்பது போல் தலையாசைத்தான்.
நேகா சிரிப்புடன் எழுந்து தூணில் சாய்ந்திருந்த துருவின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளை இரு கையால் அணைத்து," இந்த குட்டி மூளையில இவ்ளோ! இருந்தா வெடிச்சு போயிடும் தெரியாதா?? சரியான போலி டாக்டரா இருப்ப போலயே! உன் கோவம் வெடிச்சத்துக்கு அப்பறம் உனக்கு அழுக வரல" என்றான் ஒன்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி.
"இல்ல கோவம் தான் வருது".
"அப்ப இது என்ன??" என்றான் அவள் கன்னத்தில் இருந்த கண்ணீரை தொட்டுக்காட்டி.
"இல்ல நா அழுக மாட்டேன்" என்றாள் அவன் மார்பில் புதைந்து கண்ணீரை ஷர்ட்டில் துடைத்து.
"டாலு" என்று இரு கையால் அவள் முகத்தை நிமிர்த்தி,"எல்லாத்தையும் பேஸ் பண்ற, உனக்காக தாத்தா மாப்பிள்ள பார்க்க கூடாதா அதுக்கு அவருக்கு ரைட்ஸ் இல்லையா?? ஏன் இப்படி பேசுற?? நீ கோவத்துல அதிகமா வார்த்தைய விடுற, எதுக்கு இவ்ளோ கோவம்?? குணா மாமா யூஎஸ் போயிடலாம்னு நினைக்கிறாரு இங்க இருந்தா நீயும் அபியும் ஹேர்ட் ஆயிடுவீங்கன்னு பயப்படுறாங்க, நாம இப்ப தான் ஒன்னு சேர்ந்துருக்கோம் இப்ப போயி பிரியனுமா??" என்றான் கூர்மையான பார்வையுடன். இல்லை என்பது போல் தலையாட்டினாள்.
"என்ன பிராப்ளம் வந்தாலும் என்கிட்ட சொல்லு சால்வ் பண்ணலாம், நீ ரொம்ப எமோசனல் ஆகாத ஓகே!!" என்றான்.
"ஓகே!!" என்றாள் லேசான சிரிப்புடன்.
"குட் கேர்ள்" என்று மீண்டும் அணைத்துக் கொண்டான்.
"மாமா என்னமா சமாதானம் பண்றீங்க" என்றான் நந்து கிண்டலாக.
அதில் சுய உணர்வு வந்தவன் நேகாவிடம் இருந்து விலகி அபியை சங்கடமாக பார்த்தான்.
"துரு பேபிய சூப்பரா சமாதானம் பண்ணுறீங்க அவ அழுதா யாரும் சமாதானம் பண்ணினாலும் அவ்ளோ சீக்கிரமா சமாதானமாக மாட்டா உங்ககிட்ட என்னமோ இருக்கு போல" என்றாள் அபி சிரிப்புடன்.
"அபி டாலு எனக்கு குழந்த மாதிரி நா அவள குழந்தையா தான் பார்க்குறேன் என்ன டா க்ளோஸ் இருக்கேன்னு நினைக்காத" என்றான் மெதுவாக.
"இத ஏன் என் கிட்ட சொல்றீங்க?? எதுக்கு எக்ஸ்பிளைன் பண்ணுறீங்க?? இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு??" என்றாள் அபி குழப்பமாக.
"நீ தப்பா நினைச்சுப்பியோன்னு தான்" என்றான் தயங்கியபடி.
"நா அப்படி நினைக்கல" என்று அபி பேசும்போதே,
"ஏய்! சத்தமா தான் சொல்லேன்டி" என்றான் ரிஷி நேகாவிடம்.
"ஐயோ! எருமை அதான் சீக்ரெடுன்னு சொன்னால" என்றான் விரு ரிஷியின் தலையில் அடித்து. அனைவரும் அவர்களை கவனித்தனர்.
"என்ன சீக்ரெட?" என்றாள் ஆதி.
"நா அப்புறம் சொல்றேன் ஆதி" என்றாள் நேகா சிரிப்புடன். தியா குறுகுறுவென்று பார்த்தாள்."தியா இப்படி லுக் விடாத" என்றாள் சிரிப்புடன்.
"ஏதோ பிளான் மாதிரி தெரியுது" என்றாள் தியா கிண்டலாக.
"ஒன்னு இல்ல தியா நானும் நேகியும் ஓடிப்போய் கல்யாணம் பண்ண போறோம் அதான் எங்க போய் கல்யாணம் வச்சுக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணுறோம்" என்றான் ரிஷி வேகமாக.
"ஓ... ஓடி போற நீ அதுவும் நேகி கூட" என்றாள் சந்தியா முறைப்புடன்.
"ஏன் என் நேகிக்கு என்ன குறைச்சல் ரிஷி வரலனா நா கல்யாணம் பண்ணுவேன், மூணு பேரும் ஓட போறோம், யாருக்கு நேகின்னு அங்க போய் டாஸ் போட்டு பார்த்துப்போம்" என்றான் விரு கிண்டலாக.
"டேய்! என் தங்கச்சி என்ன பொருளா டா, விட்டா இவள தனித்தனியா பிரிச்சுடுவீங்க போல நேகி இங்க வாடா" என்று சந்தோஷ் அவளை இழுத்து பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான்.
"தூங்க போலாமா??" என்றாள் அபி கொட்டாவி விட்டபடி.
"போலாம் சோ டயட்" என்றனர் ஆதி மற்றும் தியா.
"சரி வாங்க போலாம்" என்று சந்தியா மற்றும் மித்ரா எழுந்தனர்.
"பேபி டால் வரியா??" என்றாள் அபி.
"இப்ப எனக்கு தூக்கம் வரல ஜானு" என்றாள். இங்கு இருக்கும் சிறுவர்கள் கேள்வியாக பார்த்தனர்."நா அபிய மேரே ஜானு தான் கூப்பிடுவேன்" என்றாள் சிரிப்புடன்.
"ஓ.. சரி" என்றனர் மித்ரா மற்றும் சந்தியா. பெண்கள் மேலே சென்றனர். மேலே சென்றதை பார்த்தவுடன் விரு மற்றும் நேகா ரிஷியை கீழே தள்ளி அடிக்க ஆரம்பித்தனர்.
"விடுங்கடா விடுங்க" என்று ரிஷி அடியைத் தடுத்துக் கொண்டே.
"என்னாச்சு ஏன் அடிக்கறீங்க??" என்றனர் மற்ற மூவரும்.
"கேளுங்க டா விட்டுருங்கடா, நா பாவம்" என்றான் பாவமாக. இருவரும் முறைத்தபடி உட்கார்ந்தனர்.
"என்னாச்சு??" என்றனர் மூவரும்.
"தியா கிட்ட புரோபோஸ் பண்ணுனேன், நேகி தியா என்னைய நோட் பன்றத பார்த்துட்டு என்கிட்ட நோட் பண்ணுறா பாருன்னு சொன்னா, இந்த நாய் எங்களுக்கு நடுவுல உட்கார்ந்தனால இவனுக்கு சரியா கேக்கலன்னு கத்திட்டான், இவன் கத்துனதுல தியா உஷாராகிட்டா" என்றான் விரு எரிச்சலுடன்.
"என்னது ப்ரொபோஸ் பண்ணுனியா??" என்றனர் மற்ற மூவரும். விரு காரில் பேசிய அனைத்தையும் சொன்னான்.
"இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும் நேகி யார் சொன்னா தியாக்காவா??" என்றான் நந்து.
"இந்த விருக்கு இந்த பக்கம் தான் நா உட்கார்ந்திருந்தேன், ரெண்டு பேரும் பேசினது தெளிவா கேட்டது" என்றாள் சிரிப்புடன்.
"எல்லாத்தையும் நோட் பண்ற" என்றான் சந்தோஷ்.
"ஆமா உன்ன கூட நோட் பண்ணிட்டு தான் இருக்கேன் மேன்" என்று சிரிப்புடன் நந்துவின் மடியில் தலைவைத்து படுத்தாள்.
"நேகி வேற யாருக்கு லைன் போகுது" என்றான் நந்து ஆர்வமாக அவள் தலை முடியை கோதியபடி.
"நீ விட்ட ஜொல்லுல தான் வீட்டையே வாஷ் பண்ணுனாங்க, அப்புறம் ரிஷி ஏதோ ட்ரை பண்றான் என்ன ட்ரை பண்றான்னு அவனுக்கும் புரியல எனக்கும் புரியல" என்றாள் கிண்டலும் சிரிப்புமாக. ரிஷியை பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.
"அதுதான் நேகி எனக்கும் தெரியல உன்ன பேசாம கரெக்ட் பண்ணிகிட்டா??" என்றான் ரிஷி பாவமாக.
"அதெல்லாம் உன்னால முடியாது மேன் உண்மைய சொல்லனும்னா என்னைய நீ கரெக்ட் பண்ண ட்ரை பண்ணல பண்ணவும் மாட்ட, நமக்குள்ள ஃப்ரெண்ட்ஷிப் பாண்டு தான் இருக்கு" என்றாள் சிரிப்புடன்.
"ரொம்ப அறிவுதான் ஃப்ரெண்ட்ஷிப்ல லவ் வராதா" என்றான் துரு கிண்டலாக.
"வரும் ஆனா ரிஷி மனசு வேற எதுவோ தேடுது நீ யோசி ரிஷி" என்றாள் சிரிப்புடன்.
"உன் மனசு ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா??" என்றான் விரு கிண்டலாக.
"அவன் மனசுல காலேஜ் படிச்ச பொண்ணுங்களோட பேருதான் வரிசையா சொல்லிட்டே இருக்கும்" என்றான் சந்தோஷம் கிண்டலாக. நான்கு ஆண்களும் சேர்ந்து ரிஷியை கிண்டல் செய்தனர்.
"ஏய்! நேகி எல்லாம் உன்னால" என்று சொல்லியபடி அவள் முகத்தை பார்த்துவிட்டு நிறுத்தினான். "தூங்கிட்டா" என்றான் மெதுவாக. சிரிப்புடன் மற்றவர்களும் அவள் முகத்தை பார்த்தனர்.
"சரி அவள தூக்கிட்டு போய் ரூம்ல படுக்க வச்சுட்டு நாமளும் தூங்கலாம்" என்று துரு எழுந்து தூக்க போனான்.
"வேணா துரு நாங்களே நேகிய தூக்கிட்டு போறோம் அபி முன்னாடி நீ சங்கடப்படாத" என்று சந்தோஷ் நேகாவை தூக்கினான்.
"ஆமா துரு நீ சங்கடப்படுறத பாக்க முடியல" என்றான் விரு.
"நாங்களே இவள நல்ல பார்த்துப்போம் டா, ஃபீல் ப்ரீயா.. வாங்க போலாம்" என்றான் ரிஷி.
துருவின் மனதில் ஓர் வலி ஏற்பட்டது அதனை கண்டுகொள்ளாமல் அவர்களுடன் மேலே சென்றான். நேகாவை படுக்க வைத்துவிட்டு அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.
மறுநாள் காலையில் அம்மாக்கள் (அகிலா, மல்லிகா, முல்லை, வனிதா) நான்கு பேரும் பெண்களுக்கு புடவை கட்டி அலங்காரம் செய்து கீழே அழைத்து வந்தனர்.
"வாவ்!! அட நம்ம பொண்ணுங்களா இதுங்க??" என்றனர் ஆண்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக.
"ஆமா நாங்களேதான்" என்றனர் சிரிப்புடன்.
"என்ன அங்க சத்தம் சாமி கும்பிட வாங்க" என்று தாத்தா சத்தம் போட்டார். சாமி கும்பிட போகும்போது ரவீன் வந்தான். அவனையும் சாமி கும்பிட அழைத்துச்சென்றனர்.
"எல்லாரும் தாத்தா பாட்டி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க" என்றார் நாதன்(துருவின் அப்பா).
"அபிமா துரு ஜோடியா வந்து ஆசிர்வாதம் வாங்குங்க முதல்ல, பார்வதி ஆசிர்வாதம் பண்ண பூ மஞ்சள் அரிசி கலந்து எடுத்துட்டு வா" என்றார் தாத்தா.
அபி பதட்டமாக ரவீன் மற்றும் நேகாவை பார்த்தாள். இருவரும் அவளை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆதி மற்றும் தியாவை பார்த்தாள். அவர்கள் அபியின் முகத்தை பார்த்துவிட்டு நேகாவை பார்த்தனர்.
"ரிஷி நாம சிங்கில்ல அப்ப நாம ஜோடியா விழ முடியாதே" என்றாள் நேகா மெதுவாக பக்கத்தில் நின்றவனிடம்.
"ஆமால" என்றான் மெதுவாக.
"விரு உனக்கு தியா கூட சேர்ந்து விழ ஆசை இல்லையா??" என்றாள் மெதுவாக மறுபக்கம் நின்றவனிடம்.
ஆமா என்பது போல் தலையை ஆட்டி அவள் முகத்தை பார்த்தான். "கஷ்டம் தான்" என்றான் நந்து பின்னால் நின்று.
"அத விட இன்னொரு கஷ்டமும் இருக்கு" என்றாள் சோகமாக.
"என்ன??" என்றனர் மூவரும் மெதுவாக.
"இவ்ளோ! பேரு இருக்காங்களே எல்லார் காலுலையும் விழுந்து எழுந்தா நம்ம நிலைம என்னாகுறது" என்றாள் சோகமாக.
"அதானே!!" என்றனர் மூவரும் சத்தமாக.
"என்னடா??" என்றார் தாத்தா முறைப்புடன். பார்வதி தாம்பாளத் தட்டுடன் வந்தார். "துரு வா அபி வாங்க" என்றார் தாத்தா.
"தாத்தா எத்தன பேர் காலுல விழுந்து கும்பிடுறது" என்றான் ரிஷி வேகமாக.
"விழுந்து கும்பிட்டுட்டு எங்களால எந்திரிக்கவே முடியாது போல" என்றான் விரு கடுப்பை மறைத்து.
"இப்ப என்ன தான்டா பிரச்சன??" என்றார் தாத்தா முறைப்புடன்.
"அதுக்கு தான் தாத்தா எங்ககிட்ட ஒரு ஐடியா இருக்கு, பெரியவங்க எல்லாரும் சேர்ந்து நில்லுங்க, நாங்க எல்லாரும் மொத்தமாக காலுல விழுறோம் ஆசிர்வாதம் பண்ணிடுங்க" என்றான் நந்து வேகமாக.
"ஆமாப்பா பசங்க எதுக்கு ஒவ்வொருத்தர் கால்ல விழுந்துக்கிட்டு" என்றார் குணா.
"ஆமாப்பா ஆமா மாமா" என்றனர் மற்ற அப்பாக்களும்.
"சரி சரி எல்லாரும் மொத்தமா விழுங்க" என்றார்.
நேகாவை பார்த்து விரு, ரிஷி, நந்து மூவரும் கட்டைவிரலை தூக்கி காட்டினார். அவள் சிரிப்புடன் தலை அசைத்து கட்டை விரலை காட்டினாள். இதனை ஒரு ஜோடி கண்கள் பார்த்தது.எல்லாரும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். "சரி சாப்பிட வாங்க" என்று பாட்டி அழைத்து சென்றார்.
நேகா மட்டும் தனியாக நின்று,'நா நினைக்கிறது கரெக்டா என்னன்னு தெரியல, நா எடுக்குற முடிவு யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது, எந்த கஷ்டம் வந்தாலும் எனக்கு குடு, யாரையும் கஷ்டப்படுத்த கூடாது, அபிக்கு துருவ கல்யாணம் பண்ண விருப்பமில்ல, அவங்க கல்யாணம் நடக்கக் கூடாது, எப்படியாச்சும் அபிய ரவீன் கூட சேர்த்துவை' என்று வேண்டிக் கொண்டு வெளியே வந்தாள். அவள் கையை யாரோ பிடித்து இழுத்தனர்.
இழுத்தது யார்?? பார்த்த ஜோடி கண்கள் யார்?? நேகா வேண்டுதல் பலிக்குமா?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.........
யாசிப்பு தொடரும்...................
Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 14
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 14
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.