அத்தியாயம் 9

மலர் கனவா? நினைவா? என்பது போல் ஆதித்யாவை பயத்துடன் பார்க்க,

அவனோ அடுத்த வினாடியே,

"ஏன்னா நாம ரெண்டு பேரும் ரிலேட்டிவ்ஸ். இப்படி ஒரே வீட்டில் இருந்துட்டு நீ என்ன பாத்து பயப்பட வேண்டாம், முகத்தை தூக்கி வச்சுக்க வேண்டாம். எல்லாரையும் மாதிரி என்கிட்டயும் அன்பா இரு" என்று பேச்சை மாற்றி அவளை நன்றாக குழப்பி விட்டு நகர்ந்தான் .

மலருக்கு அவன் என்ன சொன்னான் என்று சுத்தமாக புரியவில்லை...

குழப்பமாக தனது அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தாள் மலர்.

நந்தன் வாங்கி கொடுத்த புது மொபைலில் நோட்டிபிகேஷன் சவுண்ட் கேட்டது. எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். ஒன்றல்ல இரண்டல்ல 32 மிஸ்டு கால்கள் வரிசையாக குவிந்து கிடந்தன.மீண்டும் அழைப்பு வந்ததும், ஒரே ரிங்கில் எடுத்தாள் மலர்.

இவள் எடுத்ததும்,

அந்தப்புறம் பயங்கர அமைதி...

மலர் மெதுவாக "நந்தன்" என்றாள்.

"இவ்வளவு நேரம் எங்க போன?" என்று கேட்ட நந்தனின் குரலில் சினம் மிகுந்து இருந்தது.

"அது அது..." என்று இழுத்தவள் "வானதியை தூங்கவைக்க போனேன்" என்றாள்.

"எங்க தூங்க வைக்க போன?" என்று அடுத்த கேள்வியை கேட்டான் நந்தன் ஒருமாதிரி குரலில்,

ஒரு நொடி தயங்கியவள்,

"சௌமி அண்ணன் ரூம்ல" என்றாள்.

மீண்டும் சில நொடிகள் மௌனம் நிலவியது.

மௌனத்தைக் கலைத்து,

"இனி அவரோட ரூம்க்கு அடிக்கடி போகாத மலர்" என்றான் நந்தன்.

மலர் ஒன்றும் தினமும் அங்கே செல்லவில்லையே... இன்று தானே முதன்முதலில் சென்றிருக்கிறாள். அங்கு செல்வது மலருக்கும் பிடிக்கவில்லை தான்!!!

ஆனால் நந்தன் 'அடிக்கடி போகாத' என்று சொன்னதும்,

"ஏன்?" என்று கேட்டாள் மலர்.

அவனிடமிருந்து,

"ப்ச்ச்... எனக்கு பிடிக்கல" என்று கோபமாக பதில் வந்தது.

பதில் பேசாமல் மலர் மௌனமானாள்.

"எப்பவும் உன்னோட கைல மொபைல்ல வச்சுக்கோ மலர்... தவிர்க்க முடியாத காரணத்த தவிர்த்து நான் கூப்பிடும் போது நீ உடனே கால் அட்டென்ட் பண்ணனும்" என்று சொன்னவன்,

"எனக்கு எப்படி சொல்லனு தெரியல மலர்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன்னை மேரேஜ் பண்ணி கூட்டிட்டு போய்டனும் போல இருக்கு. உன் அண்ணா பிசினஸ் ட்ரிப் முடிஞ்சு வந்ததும் சீக்கிரம் மேரேஜ் பண்ணிப்போம்... நீ அங்க இருக்கிறது எனக்கு பிடிக்கவே இல்லை..."என்றான் நந்தன்.

மலர் மௌனமாகவே இருக்கவும்... நந்தன், "மலர் லைன்ல இருக்கியா?" என்று கேட்டான்.

"ம்ம்ம் இருக்கேன் நந்தன்"

"எதுக்கு பதில் சொல்ல மாட்டுக்க..."

ஒரு பெருமூச்சுடன்,

"உங்க குரல் சரி இல்ல? எதா இருந்தாலும் டைரக்டா சொல்லுங்க" என்றாள் மலர் குரலில் இறுக்கத்துடன்...

அவனும் ஒன்றும் திணற வில்லை.

"மலர் நான் ஏற்கனவே சொன்னதுதான் எனக்கு கோபமும் பொசசிவ்னஸும் அதிகம். நீ அடுத்தவன் ரூம்க்கு போறது எனக்கு பிடிக்கல. அது யாரா இருந்தாலும் சரி தான். எப்பவுமே நீ டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணிதான் ஆகணும்"என்றான் நந்தன் தெளிவாக...

அவள் என்ன ஒட்டிக்கொண்டா அலைகிறாள்?

டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணனுமாமே...

மலருக்கு அழுகையாக வந்தது.

அவள் என்ன ஆசைப்பட்டா சென்றாள்?

தன் அம்மா அப்பா உயிரோடு இருந்தால் இந்த கேள்வி எல்லாம் வந்திருக்குமா? அவளது அப்பா தான் வர விட்டிருப்பாரா?

நெஞ்சை முட்டிக் கொண்டு வந்த

அழுகையை விழுங்கிக்கொண்டு,

"நீங்க இப்படி சொல்றது என்னோட கேரக்டர சந்தேகப்படுற மாதிரி எனக்கு தோணுது. தயவு செஞ்சு இப்படி எல்லாம் இனி பேசாதிங்க நந்தன்" என்று பட்டென்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

அந்தப்பக்கம் நந்தனுக்கு அவளது அழுகுரல் கேட்டு பாவமாக இருந்தாலும் அதை விட கோபம் தான் அதிகமாக வந்தது.

அதான் முகத்தில் அடித்தது போல் அவன் பதில் சொல்வதற்கு முன்பே அவள் அழைப்பை துண்டித்து விட்டாளே...!!!

ஹோட்டலில் இரவு உணவை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நந்தன் மலருடன் பேசவேண்டும் என்று ஆசையாக அவளுக்கு கால் செய்தான்.

மலரின் மொபைலுக்கு பலமுறை முயன்றும் அவள் தனது அழைப்பை ஏற்கவில்லை என்றவுடன்... ஏதாவது பிரச்சனையாக இருக்குமா? என்று நினைத்து சௌமியாவிற்கு கால் செய்தான்.

அவளும் இரண்டு மூன்று முறை முயற்சித்த பிறகே அட்டென்ட் செய்தாள்.

தூக்கக்கலக்கத்தில் ஹலோ என்றவள்...

நந்தன் ஹலோ என்றதும் தூக்கத்தை விரட்டிவிட்டு விவரம் கேட்டாள்.

அவன் மலர் தனது அழைப்பை ஏற்காதது பற்றி சொல்ல விருப்பம் இல்லாமல்,

"மலர் எங்கிருக்கிறாள்?" என்று மட்டும் கேட்டான்.

ஏற்கனவே தூக்கம் கலைந்த எரிச்சலில் இருந்தவள், நந்தன் மலரை பற்றி விசாரித்ததும் கடுப்பாகி...

"என் மடியில தான் வச்சிருக்கேன்... இப்பவே தூக்கி அனுப்புறேன்" என்றாள்.

இந்தப்புறம் நந்தனுக்கு கோபமும் சிரிப்பும் தான் வந்தது.

முயன்று கட்டுப்படுத்தி கொண்டவன்

"சௌமி பீ சீரியஸ்" என்று அழுத்தமாக சொல்லவும்,

ஊப்ப்... என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள்... "ஒன் மினிட்" என்று முகத்தை கழுவி விட்டு வந்தாள்.

"இப்ப சொல்லுங்க நந்தா மாஸ்டர்" என்றாள் பவ்யமாக.

"மலர் எங்க இருக்குறா?" என்றான் நந்தன் மீண்டும்...

"மலர் அவ ரூம்ல தான் இருப்பா" என்றாள் சௌமியா கடுப்பாக...

"கொஞ்சம் அவ ரூமுக்கு போய் பார்த்துட்டு வா..." என்று நந்தன் கூறவும், எரிச்சலுடன் ஏதோ சொல்ல வந்தவள் என்ன நினைத்தாளோ...

அவனை லைனில் காத்திருக்க சொல்லிவிட்டு, மலரின் மலரின் அறைக்கு சென்றாள்.

அவள் அங்கு இல்லை என்றவுடன் வேலைக்காரர்களிடம் விசாரித்து விட்டு தன் அண்ணனின் அறைக்கு வந்தாள்.

வெளியே மலர் குழந்தைக்கு கதை சொல்லும் சத்தம் கேட்டது. லைனில் காத்திருந்த நந்தனிடம்,

"மலர் அண்ணன் ரூம்ல இருக்கா..." என்றாள் சௌமியா.

நந்தனுக்கு கோபத்துடன் அதேசமயம் குழப்பமாகவும் இருந்தது.

"சௌமி உன்னோட அண்ணன் ரூம்க்கு மலர் எதுக்கு போனா?" என்று கேட்டவனிடம்,

"மலர் மோஸ்ட்லி அங்கதான் முக்கியமான வேலையா இருப்பா" என்றாள் சௌமியா நக்கல் தெறித்த குரலில்,

அவளது நக்கல் குரல் புரியாமல்,

இந்த புறம் நந்தனுக்கு பிபி தான் எகிறியது.

"என்ன வேலை??" என்று முடிந்தவரை குரலில் எதையும் காட்டாமல் கேட்டான் நந்தன்.

"வானதியை தூங்க வச்சுட்டு இருக்காங்க... வானதிய எப்பவும் அவங்க ரெண்டு பேரும் தான் பார்த்துக்குவாங்க" என்றாள் சௌமியா.

நிம்மதிப் பெருமூச்சுடன் ஓஓ..என்றான் நந்தன்.

சௌமியா மேலும் சொன்னாள்...

அண்ணனும் மலரும் குழந்தை மேல் வைத்திருக்கும் அன்பு இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை (?)பற்றி கதை அளந்தாள். அதைக்கேட்டு எரிச்சலுடன் மொபைலை அணைத்தான் நந்தன்.

அந்த எரிச்சலில் மீண்டும் மலருக்கு அழைத்து பார்த்தான்.

மலரின் கெட்ட நேரமோ? என்னவோ? சரியாக அவளும் எடுத்தாள்.

கோபத்தில் திட்ட தான் நினைத்தான் நந்தன். ஆனால் அவளது குரலை கேட்டதும், அவளை காயப்படுத்த மனது வரவில்லை. அதனால் தான் பொறுமையாக சொல்ல நினைத்தான்.

ஆனால் அவளோ அவன் முகத்தில் அடித்தாற்போல் அழைப்பை துண்டிக்கவும் மீண்டும் நந்தனுக்கு கடுமையான கோபம் வந்தது.

"ச்சே... திமிரு பிடிச்சவ...இனி அவளே என்ன கூப்பிடுற வர நான் பேசவே மாட்டேன்..." என்று மனதில் உறுதி வேறு எடுத்துக்கொண்டான்.

சில நேரங்களில் உறவுகளுக்குள் ஈகோ பார்ப்பதால் சிறிய பிரச்சினைகள் கூட பூதாகரமாகி விடுகின்றன.

இங்கும் அதுதான் நடந்து கொண்டிருந்தது.

நந்தன் பேசியதை நினைத்து இரவு முழுக்க அழுது தீர்த்த மலர்,

மறுநாள் காலையில் குளித்துவிட்டு அழுது களைத்த விழிகளோடு பால்கனியில் நின்றாள்.

நேற்று காலையில் இருந்த மனநிலை என்ன? இப்பொழுது இருக்கும் மனநிலை என்ன? மனதில் விரக்தி தான் தோன்றியது மலருக்கு.

கீழிருந்து யாரோ கூப்பிடும் குரல் கேட்டு கீழே பார்த்தாள்.ஆதித்யா வானதியுடன் நின்று கொண்டிருந்தான்.

வானதி, கீழே வா என்பது போல் சைகை செய்தாள். மனநிலை சரியில்லை என்றாலும் வானதி கூப்பிட்டதும் கீழே சென்றாள் மலர்.

வானதியின் சிரித்த முகம் மலரின் முகத்திலும் லேசாக சிரிப்பை கொண்டு வந்தது.

"அத்த நா இன்னைக்கு சீக்கிரமே எழுந்துட்டேன்... குட் கேர்ள் ஆகிட்டேன்னு மாமா சாக்லேட் வாங்கி தரேன்னு சொன்னாங்க..." என்று கண்களை உருட்டி கதை அளந்தாள் வானதி.

"ஹைய்யா குட்டி எப்பவுமே குட் கேர்ள் தானே" என்று பாசத்துடன் அவளது கன்னத்தை தடவினாள் மலர்.

"ஆமா ஆமா" என்று குழந்தையும் வேகமாக தலையாட்டினாள்.

ஆதித்யா இருப்பதையே மறந்து இருவரும் பேசிக்கொண்டிருக்க,

மலரை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யா. அவளது அழுது சிவந்த விழிகள் அவனது கண்களில் இருந்து தப்பவில்லை.

"மலர் நேத்து நீ போட்ட காஃபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருந்துச்சு... இன்னைக்கும் அது கிடைக்குமா?" என்று ஆதித்யா கேட்கவும் தான் அங்கே அவனும் இருக்கிறான் என்பதையே உணர்ந்தாள் மலர்.

முகத்தில் அடித்தது போல் முடியாது என்று சொல்ல மனமில்லாமல் சரி என்று தலையசைத்து விட்டு உள்ளே சென்றாள் மலர்.

சிறிது நேரத்தில் ஒரு ட்ரேயில் ஆதித்யாவிற்கு காஃபி, வானதிக்கு பூஸ்ட் ,அவளுக்கு ஸ்ட்ராங்கான இஞ்சி, ஏலக்காய் போட்டு டீ ...மூன்றையும் எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தாள் மலர்.

நேற்று போலவே அந்த செயற்கை நீரூற்று அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் தான் அமர்ந்திருந்தான் ஆதித்யா.அவனருகில் அமர்ந்து அவனிடம் வழவழத்து கொண்டிருந்தாள் வானதி.

" மாமா நான் குட் கேர்ள் தான... அதனால எனக்கு பெரிய சாக்லேட் வேணும்... அப்புறம் பெரிய டோரிமான் பொம்மை வேணும்... அப்புறம் புதுசா பார்பி கேர்ள் பொம்மை ஒன்னு வேணும்... அப்புறம் சின்சான் டீசர்ட் வேணும்... அப்புறம் க்ரையான்ஸ் பாக்கெட் வேணும்... டிராயிங் நோட் வேணும்..." என்று தனக்கு வேண்டியதை அடுக்கிக் கொண்டிருந்தாள் வானதி

"சரிடா குட்டிமா ஈவினிங் ஷாப்பிங் போய் உனக்கு பிடிச்சது எல்லாம் வாங்கிட்டு வரலாம்" என்று வாக்களித்தான் ஆதித்யா.

தான் கேட்டதெல்லாம் உடனே வாங்கித்தருவதாக தன் மாமா சொன்னதும், வானதி குட்டிக்கு மிகவும் குஷி.

கண்கள் பளபளக்க சிரித்துக்கொண்டே,

"மாமா நான் மாமா தான்..." என்று அவனது கன்னத்தில் பரிசாக முத்தமொன்று பதித்தாள் வானதி.

"ம்ம்ம் வானதி குட்டிக்கு வாங்கித் தராமல் யாருக்கு வாங்கி கொடுக்க போறேன்" என்று அவளது தலையை வருடி விட்டான் ஆதித்யா.

அவனது மனக்கண்ணில் வானதி போலவே ஒரு சிறு பெண்,

"வலிக்குது அண்ணா... வலிக்குது அண்ணா என்னை காப்பாத்து எனக்கு ரொம்ப வலிக்குது... நான் சாகப் போறேனா? என்னால வலியை தாங்கிக்க முடியல அண்ணா..." என்று மரண வலியினால் அலறியது வந்து போனது.

கண்களை இறுக மூடி மனதை கட்டுப்படுத்தியவன், கண்களைத் திறக்கும் பொழுது மலர் வந்திருந்தாள்.

வானதியின் சிரிப்பை ரசித்தவாறு,

ட்ரேயினை அங்கிருந்த மேஜையில் வைத்தவள்... அழகான டோரிமான் கப்பில் கொண்டுவந்திருந்த பூஸ்ட்டை எடுத்து குழந்தையின் கையில் கொடுத்தாள்.

அடுத்து ஆதித்யாவிற்கு காஃபி கொடுத்துவிட்டு தனது டீ கப்பினை தூக்கிக்கொண்டு நகர போனவளை ஆதித்யாவின் குரல் தடுத்தது.

"நீ ...நான்... சௌமி வானதி நாலு பேரும் இன்னைக்கு ஈவினிங் ஷாப்பிங் போகலாம்... ஈவினிங் சீக்கிரம் எல்லாரும் கிளம்பி இருங்க" என்றவன் தனது கப் காபியை தூக்கிக்கொண்டு நகர்ந்தான்.

அவளிடம் வருகிறாயா??? என்று கூட கேட்காமல் அவனது இஷ்டத்திற்கு கட்டளையிட்டது மலருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இன்னைக்கு என்ன ஆனாலும் போகவே கூடாது என்று மனதில் நினைத்தவள் கோபமாக வானதியின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

ஆதித்யா அலுவலகத்திற்கு கிளம்பி எப்பொழுதும்போல் தங்கையை பார்க்க அவளது அறைக்கு சென்றான்.

சௌமியா அப்பொழுதுதான் எழுந்து முகம் கழுவிவிட்டு வந்திருந்தாள்.

அவனைப் பார்த்ததும், "குட் மார்னிங் அண்ணா" என்றால் உற்சாகமாக,

"குட் மார்னிங் சௌமி மா சீக்கிரம் எழுந்து பழகு... வானதி குட்டி கூட சீக்கிரம் எழுந்துக்குறா..." என்று பாசமாக சொன்ன ஆதித்யா,

வேலையாளை கூப்பிட்டு தங்கைக்கு

காபி கொண்டு வர சொன்னான்.

"அண்ணா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்ற சௌமியா

நேற்று இரவு நடந்ததை அவனிடம் கூறினாள்.மலரின் கண்களின் சிவப்பிற்கு காரணம் தெள்ளத் தெளிவாக புரிந்தது ஆதித்யாவிற்கு....

அவனின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

"ஒருநாள்...ஒரே ஒரு நாள்ல இப்படி ஆகிட்டே...இவ்வளவுதான் சௌமி... அவங்க உறவு... என்னமோ ரெண்டு பேருக்கும் இடையில ரொம்ப பாசம் இருக்குற மாதிரி சொன்ன ஒரு சின்ன நெருப்பு போதும் ....எந்த உறவையும் ஈஸியா உடைச்சிடலாம்..."

என்றான் ஆதித்யா உறுதியாக...

"அதெல்லாம் சரி...ஆனா எனக்கு நந்தா எப்படி கிடைப்பான்???"என்று கேட்டாள் சௌமியா.

"உன்னோட பழைய பிரண்ட்ச எல்லாம் கூப்பிட்டு பார்ட்டி அது இதுன்னு சொல்லி நந்தனையும் நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு பேசி பழகு... மலரை விட நீ பெட்டர் னு ப்ருவ் பண்ணு..தட்ஸால் முடிஞ்சு போச்சு" என்றான் ஆதித்யா இலகுவாக.

"நான் மலரை விட அழகு கம்மிதான் அண்ணா" என்றாள் தங்கை சோகமாக...

"என்னோட கண்ணுக்கு என்னோட தங்கச்சி தான் அழகு" என்றான் ஆதித்யா.

"அப்படியா அண்ணா நந்தாவுக்கு என்ன பிடிக்குமா??" என்று கேட்ட சௌமியின் முகம் மின்னியது.

"நீ கான்ஃபிடன்டா இருந்தா எல்லாம் உன்னோட இஷ்டப்படி தான் நடக்கும்" என்று தங்கைக்கு தைரியம் சொன்னான் ஆதித்யா.

சந்தோஷமாக சரி என்று தலையாட்டிய சௌமியா,

"அண்ணா ரெண்டு பேரும் பிரிஞ்சு எனக்கு நந்தா கிடைச்சுட்டாலும்... மலர் பாவம் அண்ணா... அவளுக்கு ஏதாவது பண்ணனும்... அவ ரொம்ப நல்லவளா இருக்கா" என்றாள் பரிதாபமாக.

மலர் பற்றிய தன் எண்ணத்தை தங்கையிடம் கூட அவன் சொல்லவில்லை... அமைதியாக இருந்தான் ஆதித்யா.

வேலையாள் கொண்டு வந்து கொடுத்த காபியை பருக ஆரம்பித்த சௌமியா....

"இன்னைக்கு ஈவினிங் ஷாப்பிங் போகணும்" என்று ஆதித்யா சொன்னவுடன்...

"எப்ப போகணும் அண்ணா? எங்கே போகணும்?" என்று பரபரத்தாள்.

ஆதித்யா தங்கையிடம்,

"நீ வர வேண்டாம் சௌமி ...உனக்கு வேண்டிய லிஸ்ட மலர் கிட்ட கொடுத்து கண்டிப்பா வேணும்னு வாங்கிட்டு வர சொல்லு" என்றான்.

ஏன்? என்று கேட்ட தங்கைக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான் ஆதித்யா.

காலையில் சீக்கிரமாக எழுந்ததால்...மதிய வேளையில் வானதி தூங்கிவிட, தனது மொபைலை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் மலர்.

மொபைல் வாங்கியதும் கேமராவை செக் செய்ய இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி அதில் மின்னியது. அதை பார்த்துக்கொண்டிருந்த மலரின் கண்களும் தன்னாலேயே கலங்கியது.

கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு...

"உனது ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை கொல்லாமல் கொன்று உள்ளுக்குள் வதைக்கின்றதே...

உனக்கது புரியலையா???"

என்று நந்தனுக்கு மெசேஜ் அனுப்பினாள் மலர்.

உடனே ரிப்ளை வந்தது.

"எனது உரிமையும் பாசமும் தான் என்னை அப்படி பேச வைத்தது

என்று உனக்கு புரியலையா???"

மலரின் முகம் லேசாக தெளிந்து புன்னகை அரும்பியது.

அவனும் மொபைலை தான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான் என்று...

புன்னகையுடனே அவனுக்கு பதில் அனுப்பினாள்.

"வார்த்தைகளின் வீரியம் அதிகம் என்றால்... பாசம் உரிமை இரண்டும் கண்ணுக்கு

தெரிவதில்லை...

மனதின் ரணம் தான் அதிகமாகி வலி கொடுக்கிறது..."

அதற்கு அவனிடமிருந்து பதில் வரவில்லை...

வெகுநேரம் பதில் வராததால், கவலையுடன் மொபைலை வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மலர்.

அப்பொழுது சௌமியா மலரை பார்க்க அவளது அறைக்கு வந்தாள்.

மலர் கவலையாக மொபைலை பார்த்து கொண்டிருப்பதை கவனித்தவள்...

"மலர் நான் ஈவினிங் ஷாப்பிங் வரல... நான் ஒரு லிஸ்ட் தாரேன் அதை மட்டும் எனக்கு வாங்கிட்டு வருவியா... ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள் சௌமியா.

"நானும் ஷாப்பிங் போகல" என்று மலர் சொல்வதற்கு வாய்ப்பே தராமல்...

அத வாங்கிட்டு வந்துரு இதை வாங்கிட்டு வந்துரு என்று கெஞ்சிய சௌமியா

மலர் சரி என்று சொல்லும்வரை அவளை விடவில்லை.

மாலை அலுவலக வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு ஆதித்யா வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

அவனுக்காக மலரும் வானதியும் ஏற்கனவே தயாராகி காத்திருந்தனர்.

ஆதித்யாவும் சீக்கிரம் ரெடியாகி வர மூவரும் ஷாப்பிங் கிளம்பினர்.

மலர் ஞாபகமாக தனது மொபைலை எடுத்து வைத்துக்கொண்டாள்.

நந்தன் அவளது மெசேஜ்க்கு இன்னும் பதில் அளிக்கவில்லையே...

அப்படி அவன் பதிலளித்தால் இவள் உடனே ரிப்ளை செய்ய வேண்டுமே

அதற்காக தான்....!!!

ஆனால் ஆதித்யாவின் கார் வெளியேறிய சில நிமிடங்கள் கழித்து நந்தனின் கார் ஆதித்யாவின் பங்களாவிற்குள் நுழைந்தது.

தொடரும்....

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.