Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
மண்ணில் தோன்றிய வைரம்....
மண்ணில் தோன்றிய வைரம் 10
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

சாரு மற்றும் அஸ்வினின் காதல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ந்தது... காலையில் குட்மார்னிங் மெசேஜுடன் ஆரம்பமாகும் அவர்களது நாள் இரவு ஒரு மணி நேர உரையாடலுடனே முடிவடையும். இடையிடையே சிறு சிறு சண்டைகளும் சமாதானங்களும் அவர்களது உரையாடலில் முக்கியமாக இடம்பெறும்... அது காதலர்களுக்கே பிரத்யேகமான ஒன்று....

அன்று ஒரு நாள்

“ஹேய் ஜிலேபி இன்னைக்கு அந்த காபி ஷாப்பில் ஒரு பொண்ணு வந்து உன்னோட பேசிட்டு இருந்தாளே அவ யாரு???”

“அதை தெரிந்துக்கிட்டு நீ என்ன பண்ண போற ரௌடி பேபி??”

“சும்மா ஒரு ஜென்ரல் நாலேஜிக்கு தான்...”

“அப்படி என்ன ஜெனரல் நாலேஜ் உனக்கு இதை தெரிந்துக்கொள்வதால் கிடைக்கப்போகுது???” என்று கடுப்புடன் சாரு கேட்க

“ அது உனக்கு எதுக்கு... நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. யாரு அந்த பொண்ணு.... பார்க்க சும்மா சமந்தா மாதிரி இருந்தா அவள்”

“ஓ அவ்வளவு தூரத்திற்கு போயிருச்சா??”

“இல்லை ஜிலேபி உண்மையாவே அவ்வளவு அழகா இருந்தா.... நீ சொல்லு அவ யாரு அவளோட....” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அழைப்பு துண்டிக்கப்பட்டது... அவன் மீண்டும் முயற்சிக்க அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது....

இது எப்போதும் நடப்பதே... அஸ்வின் அவளை கோபப்படுத்துவதற்கென்றே அவளை வம்பிழுப்பான். ஆனால் அவளோ வாய் வார்த்தைதளால் சண்டையிடாது தன் அமைதியின் மூலம் அவனுக்கு தன் கோபத்தை வெளிக்காட்டுவாள்... வாய் ஓயாமல் பேசும் அவள் மௌனமாய் இருப்பது அவனுக்கு நகைப்பாய் இருந்தாலும்.. ஏதோ ஒன்று இல்லாத குறைய அவன் உணருவான்... ஆனால் அவளது கோபமும் அவனை அவள் மேல் இன்னும் மையல் கொள்ளச் செய்யும்..... சிறு பிள்ளை போல் அவனுடன் பேசாது போர்க்கொடி தூக்கும் அவளை அவன் எப்போதும் ரசிப்பான்.... அதற்காக அவன் அவளை சீண்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தனது தோரணையில் சமாதானப்படுத்தவும் தவறமாட்டான்.

அதாவது அவனது சமாதானப்படலம் ரோஜாப்பூ பொக்கேயுடன் ஆரம்பிக்கும்.... ஆபிசில் தன் அறையில் நுழையும் சாருவை சாரி ஜிலேபி என்ற அட்டையை தாங்கிய பூங்கொத்தே வரவேற்றும்... பின் மெயில் பாக்ஸை திறந்ததும் சாரி பொம்மு குட்டி என்ற அஸ்வினின் மெயிலே முதலில் வரவேற்கும்...

பின் அவளது மொபைலில் அஸ்வினது சாரியை தாங்கியிருக்கும் வாய்ஸ் மேசேஜும் அதனது சேவையை ஆற்றியிருக்கும். ஆபிஸ் நேரம் முடிந்த பின் அஸ்வின் நேரடியாக வந்து அவளை தன் சித்தி அழைத்து வரச்சொன்னதாக சொல்லி அழைப்பான்.... மறுக்கும் சாருவை தன் சித்தியை பேச வைத்தே சரி கட்டுவான்.....

அவளை நேராக வீட்டிற்கு அழைத்து செல்லாமல் அவளை எப்போதும் செல்ல விரும்பும் கடற்கரைக்கு அழைத்து செல்வான்... அவளுக்கு கடற்கரை மண்ணில் அமர்ந்து கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டே கடற்காற்றை சுவாசிப்பதில் கொள்ளை இஷ்டம். அதுவும் நிலவொளியில் வானத்தை முற்றுகையிட்டிருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதென்பது அவளது வாடிக்கை.... அந்த நேரத்தில் அவளது கோப தாபங்கள் அவளிடமிருந்து விடைபெற்றிருக்கும்.. அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாருவிடம் மன்னிப்பு கேட்பது அஸ்வினின் வாடிக்கை....

பின் அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்று சித்ராவின் நளபாகத்தை ருசிக்க செய்து மிச்சம் மீதி உள்ள கோபத்தையும் சரிகட்டி விடுவான்... சாருவும் இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே அவனிடம் அடிக்கடி சண்டையிடுவாள்..... அவளுக்கு அந்த கடற்கரை மண்ணில் நிலவொளியில் அஸ்வினுடன் நேரம் செலவளிக்க அலாதி விருப்பம்.... அதற்காகவே ஏதேனும் ஒரு காரணத்தை உருவாக்கி அவனுடன் சண்டையிடுவாள்...

அவளது சண்டையிற்கு காரணங்களாக அவள் கூறுபவை

“ குட் மானிங் சொல்லலை,என்னை பார்த்து சிரிக்கல, எனக்கு உம்மா குடுக்கலை” என்று தினம் தினம் அவளது பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்....

அதன் மூலக்காரணத்தை அறிந்த அஸ்வினோ அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வான்.. இதற்கிடையில் ஒரு நாள் சஞ்சு இவர்களது அலும்பலை பொறுக்க முடியாது சாருவிடம் புகார் கொடுத்தான்...

“ சாரு நீயும் அஸ்வினும் டூ மச்..... நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுவீங்களாம் அதுக்கு பொக்கே வருமாம்... அவன் உனக்கு சாரி சொல்ல பீச்சிற்கு கூட்டிட்டு போவானாம்... நீயும் அங்க போனதும் கன்வின்ஸ் ஆகிருவியாம்.... என்னமா நடக்குது இங்க??? சண்டைக்கான ரீசன் கேட்ட அதுக்கு நீ சொல்லுற பதிலை கேட்டா எனக்கு அழுவதா சிரிப்பதானு தெரியலை.... குட் மார்னிங் சொல்லலை, பார்த்து முறைச்சது இப்படி உப்பு சப்பு இல்லாத விஷயத்தை ஒரு மேட்டரா எடுத்து நீ பண்ணுறது எல்லாம் ஓவர். அதை விட ஓவர் அதுக்கு அவன் கூஜா தூக்குறது...” என்று தன் குற்றச்சாட்டினை முன்வைக்க

“எங்களை பார்த்து உனக்கு பொறாமை டா... ரௌடி பேபியை பார்த்து சரி கத்துக்கோ.... எவ்வளோ ஸ்வீட் அவன்...நான் எப்ப கோபப்பட்டாலும் அடுத்த நாளே என்னை எப்படியாவது சமாதானப்படுத்திடுவான். அதுக்கு அவன் செய்யும் செயல்கள் எப்பவும் யுனிக்கா இருக்கும்.... யுனிக்கா மட்டும் இல்லாமா எனக்கு பிடித்ததாகவும் இருக்கும். அது தான் என்னோட ரௌடி பேபி... அவனுக்கு என்னோட கோபம் உண்மையில்லைனு தெரிந்தாலும் எனக்காக நான் அப்படி அவன் கெஞ்சுவதை விரும்புறேன் அப்படிங்கிறதுக்காக என்னிடம் வந்து கெஞ்சுவதை போல் நடிப்பான்... இதை பலபேர் அடிமைத்தனம்னு நினைக்கலாம். ஆனால் காதலன்-காதலி உறவிற்கும் கணவன் மனைவி உறவுக்கும் இது ரொம்ப அவசியம். எதிரிகளை தோற்கடித்து தன் முன் மண்டியிடச்செய்யும் அரசன் கூட தன் காதலி அல்லது மனைவியிடம் மண்டியிட்டு காதல் யாசகம் பெறுவதை மானக்குறைச்சலாக நினைக்க மாட்டேன். அதே போல அந்த காதலி அல்லது மனைவி தன் கணவன் அல்லது காதலன் அவள் முன் மட்டுமே மண்டியிட வேண்டும் என்று எப்போதும் விரும்புவாள்.இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும். தன் அன்புக்குரியவன் தன்னிடம் மட்டுமே சிரம் தாழ்த்தி கையேந்த வேண்டும் அதான் பெண்கள் மெண்டாலிட்டு...இதை பசங்க நீங்க தப்பா புரிந்துகொள்றீங்க.. ஏதோ நாங்க உங்களை டாச்சர் பண்ணுறதாகவும் ஏதோ உங்கள் ஒரிஜினாலிட்டியை நாங்க அழிச்சிட்டதாகவும் பேசுறீங்க.... ஆனா அது அப்படியில்லை.. எங்கிட்ட மட்டும் நீங்க அப்படி இருக்கனும்னு விரும்புறோமே தவிர சமூகத்தில் உங்களுக்கு அப்படி நடக்க நாங்க எப்பவும் விரும்ப மாட்டோம்.... அப்படி நடந்தா அதுக்கு எதிரா சண்டை போடுவமே தவிர என்னைக்கும் அக்சப்ட் பண்ண மாட்டோம்...நீ யோசிச்சி பாரு ஆது அவள் உன்னை எப்படி வேணாலும் திட்டுவா... ஆனா அவள் முன் நான் உன்னை திட்டுனா அவ சண்டைக்கு தான் வருவா.....அது தான் பெண்கள் நேச்சர்... இதை நீங்க எப்பவும் புரிந்துகொள்ளாமல் ஏதோ நாங்க உங்களை டாச்சர் பண்ணுற மாதிரி சீனைப் போடுவீங்க....ஆனா என்னோட ரௌடிபேபி அதில் எல்லாம் கெட்டி..... எப்பவும் எனக்காக மட்டுமே யோசித்து எனக்கு பிடித்ததை மட்டும் செய்வான்.... அதுனாலேயே எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்..... நீயும் அவனிடம் கேட்டு கத்துக்கோ....அப்போ சரி ஆது கிட்ட திட்டு வாங்காம இருக்கியானு பார்ப்போம்......” என்று குற்றம் சாட்டிய சஞ்சுவிற்கு சாரு ஆலோசனை வழங்க

“போதும் உன் ரௌடி பேபி புராணம்...இப்போவா வேலையை பார்க்கலாம்...”

“நீ இப்ப மட்டும் இல்லை எப்பவும் ஆதுகிட்ட வாங்கிகட்டிட்டு தான் இருப்ப... உன்னை எல்லாம் திருத்தவே முடியாது... “ என்றுவிட்டு வேலையை கவனிக்க தொடங்கினாள் சாரு....

அன்று பெஸ்ட ஆப்ஷன் கன்ஸ்ரக்ஷனால் மருத்துவ முகாம் ஒன்று கம்பனி ஊழியர்களுக்கும் கண்ஸ்ரக்ஷன் சைட்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது....

அதிக நிதி புழக்கம் உள்ள நிறுவனங்கள் வரி கட்டணத்தில் சிறிதளவு கழிவினை பெறுவதற்கும் தங்கள் நிறுவனத்தின் நற்பெயரினை மேம்பெறச்செய்து தங்களது மார்க்கட் சாரினினை அதிகரிப்பதற்காகவும் சி.எஸ்.ஆர்(கார்ப்பரேட் சோர்ஷல் ரெஸ்பான்சிபிலிட்டி) செயற்திட்டங்களில் ஈடுபடுவர்.... இதில் இரு வகைப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும். முதல்வகை நிறுவனங்கள் சமூகத்தை முன்னேற்றுவது தொடர்பான செயல்களில் ஈடுபடும். இரண்டாவது வகை நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு உதவும் விதமாகவும் அவர்களுக்கு நன்மையை பெற்றுக்கொடுத்து அவர்களிடம் நற்பெயரை பெறும் நோக்கத்துடனும் செயற்படும்.

பெஸ்ட் ஆப்ஷன் இரண்டாவது வகை நிறுவனம்..... கம்பனியின் உயர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநலத்தை பரிசோதித்து குறைகள் இருந்தால் அதற்குரிய தீர்வுகளை பெற்றுத்தரவென்று முழுக்க முழுக்க தொழிலாளர்களின் நன்மையை கருத்திற்கொண்டே வருடாவருடம் மருத்துவமுகாம் நடைபெறும்..... இந்த முகாமின் முக்கிய சிறப்பு சில நோய்களுக்கான உணவுக்கட்டுப்பாடுகள் மற்றும் சிகிச்சைமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்படும்... இதற்கு ஒரு நாள்போதாது என்ற காரணத்தால் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து இந்த மருத்துவ முகாம் இடம்பெறும்.

சாரு அஸ்வினிற்கு அந்த முகாம் பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தாள்... ஆகவே அம்முறை அவனே முன்வந்து அந்த முகாம் ஒழுங்கமைப்பை பொறுப்பேற்றிருந்தான். அவன் பெறுப்பேற்றதற்கு காரணம் அவனது ஜிலேபியே... அவள் அதை வருடாவருடம் நடாத்துவதற்காக கூறிய காரணமே இம்முறை அவனை பொறுப்பெடுத்து நடத்த உந்தியது...

இருவரும் அன்று கடற்கரையில் அமர்ந்திருக்கும் போதே சாரு முகாம் பற்றி கூறத்தொடங்கினாள்.

“ரௌடி பேபி நம்ம கம்பனியில் வருடா வருடம் அடுத்தடுத்து வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மெடிக்கல் காம்ப் ஒன்று கண்டாக்ட் பண்ணுவோம். அதில் செக்கப் மட்டும் இல்லாமல் சில நோய்கள் பற்றிய அவாய்ர்னஸ் செஷன்ஸ் மற்றும் சில நோய்களுக்கான உணவு கட்டுப்பாட்டுமுறைகள் பற்றி ஸ்பெஷலிஸ்ட் பேசுவாங்க..... இந்த காம்ப் அம்மாவோட நினைவு தினம் வருகின்ற மாதம் தான் வழமையாக நடைபெறும். அதனால இந்த முறை இதை நீ பொறுப்பெடுத்து செய்தால் உன்னோட ஜிலேபிக்கு ரொம்ப ஹேபியா இருக்கும்...”

“என்னோட ஜிலேபி கேட்டு நான் ஏதும் செய்யாம விடுவேனா??? ஓகே ஜிலேபி அதை நான் பர்பர்க்டா செய்து முடிக்கின்றேன்....ஆனா எனக்கு இதை நீ ஏன் அத்தையோட நினைவு தினம் வருகின்ற மாதத்தில் கண்டாக்ட் பண்ணுறனு தெரியனும்??”

“சும்மா ஒரு ட்ரிபியூட்டா தான்”

“ஜிலேபி உன்னோட ரௌடி பேபி ரொம்ப ஸ்மார்ட் சோ உண்மையை மறைக்காமல் சொல்லு..... எதனால இந்த காம்ப் எவ்ரி இயர் கண்டாக்ட் பண்ணுற??? என்னோட ஜிலேபி எது செய்தாலும் அதுக்கு ஒரு வெலியுபல் ரீசன் இருக்கும்... சோ லெட் மி நோ த ரீசன்”

“ஹாஹா எப்படிடா எதை மறைத்தாலும் கண்டுப்பிடிக்கிற?? எப்படி உன்னால மட்டும் என்னை சரியா கெஸ் பண்ண முடியிது???”

“அது அப்படி தான்... இப்போ நீ ரீசனை சொல்லு..”

“அது அம்மாவுக்காக தான்”

“அத்தைக்கு என்னானது?”

“அம்மா வலிப்பு வந்து இறந்துட்டாங்க”என்று சாரு சிறிது நேரம் அமைதியாக இருக்க அவளது துக்கம் அறிந்த அஸ்வினோ அவளை ஆற்றும் விதம் அறியாது தவிக்க

“ஜிலேபி.... எது நடக்கவேண்டுமென இருக்கோ அது நடந்தே தீரும். ஒரு தவறு நடக்கிறதென்று தெரிந்தால் அது நம் சக்திக்கு உட்பட்டதா இருந்தா மட்டுமே அதை நம்மால் தடுக்க முடியும்... ஆனால் பிறப்பும் இறப்பும் நம்மை படைத்த ஆண்டவனாலேயே தடுக்கமுடியாதவை... இது தான் இயற்கையின் விதி... இதுக்கு நீயோ நானோ விதிவிலக்கல்ல.. ஒருத்தர் இறந்து போயிட்டாங்கனா அவங்க நம்மை விட்டுட்டு போய்ட்டாங்கனு சொல்றோம். ஆனால் நம்மை விட்டு பிரிந்து சென்றது அவங்களோட உடம்பு மட்டும் தான்.... அவங்களோட நியாபகங்களும் நினைவுகளும் எப்பவும் நம்மோட தான் இருக்கும். அவங்க நம்ம மனசுக்கு பிடித்தவங்கனா அவங்களோட ஆன்மா எப்பவும் நமக்கு துணையாக இருக்கும். என்னோட அத்தையும் அப்படிதான். உன்னைவிட்டு பிரிந்தது அவங்களோட உடல் மட்டும் தான்.....ஆனா அவங்களோட ஆன்மா உனக்கு எப்போதும் காவலா மட்டும் இல்லாம உன்னை சரியான பாதையில் வழிகாட்டிட்டு தான் இருக்கிறது... உதாரணமா எடுத்துக்கோ நீ அன்புக்கு ஏங்கினாய்... உன்னை காதல் வசனம் பேசி நயவஞ்சகர் யாராவது உன் வாழ்க்கையை சீரழிச்சிருக்கலாம்....... இல்லைனா நீ பொண்ணுதானேனு உன்னை பிசினஸ் சர்க்கிலில் உள்ளவங்க ஏதாவது உன்னை காயப்படுத்துகின்ற அளவுக்கு ஏதும் பண்ணியிருக்கலாம். அவ்வளவு ஏன் அன்றைக்கு சஞ்சுவும் ராம் சாரும் இல்லாவிடின் உன்னோட நிலை என்ன???? எப்படி உன்னோட வாழ்க்கை சீர்குலைவதற்கு ஏகப்பட்ட வழிகள் இருந்த போதும் நீ எந்தவித கறையும் இல்லாம பளிச்சிடுவதற்கு காரணம் உங்க அம்மா உன்கூட உனக்கு காவலாக இருப்பது தான். அவங்க உயிரோடு இல்லாட்டியும் அவங்க ஆன்மா உனக்கு துணையா இருந்திருக்கு..... சோ அத்தை இல்லைனு நீ எப்பவும் கவலைப்படக்கூடாது.... அத்தை எப்பவும் உன் கூட தான் இருக்காங்க புரிந்ததா??” என்று அஸ்வின்அவளது கையினில் சிறு அழுத்தம் கொடுத்து அவள் முகம் பார்த்து கேட்க

“ம்...” என்று சாரு அஸ்வினின் தோளின் மீது சாய்ந்தாள்

“ என்னோட சமத்து ஜிலேபி. இப்ப சொல்லு அத்தைக்கு என்னாச்சி?” என்று அவளது தலையை நிமிர்த்தி கேட்க

“ அம்மாவுக்கு வீசிங் இருந்தது... அதுக்கு மெடிசின் எடுத்துட்டு தான் இருந்தாங்க...ஒருநாள் திடீர்னு பிட்ஸ் வந்தது... ஆஸ்பிடல் கூட்டிட்டு போகிற வழியில் இறந்துட்டாங்க........

அப்போ அம்மோவோட டெத்திற்கு ரீசன் நிமோனியானு சொன்னாங்க... ஆனாலும் நிமோனியா அவ்வளவு சீரியஸ் இல்லையேனு டாக்டர்ஸ் கிட்ட கேட்டப்போ அவங்க சாப்பிட்ட ஏதோ தான் நிமோனியாவ சிவியர் ஆக்கி அவங்களுக்கு பிட்ஸ் உண்டாக்கி பிரீத் பண்ண முடியாம இறந்துட்டதா டாக்கடர்ஸ் சொன்னாங்க.... டாக்டர்ஸ் அவங்க என்ன சாப்பிட்டதா விசாரிச்சாங்க.... அன்றைக்கு பகல் அம்மா ரொம்ப நாளைக்கு பிறகு சிங்கறால் பிரைட்ரைஸ் செய்திருந்தாங்க... அது தான் அன்றைக்கு லஞ்ச் னு டாக்கடரிடம் சொன்னப்போ அவங்க அது நிமோனியாவுக்கு அலர்ஜியான புட் அதான் அவங்களுக்கு பிட்ஸ் வந்ததுனு சொன்னாங்க...... இதைக்கேட்டவுடன் அன்று பகல் அந்த பிரைட்ரைஸை ரசித்து சாப்பிட்ட அம்மாவோட முகம் என் கண்முன்னே வந்து என்னிடம் “நல்லா இருக்கு சாருமா நாளைக்கும் செய்து சாப்பிடலாம்” என்று ஒலித்தது போல் இருக்க நான் அங்கேயே மயங்கி விழுந்துட்டேன்..” என்று விட்டு மீண்டும் அஸ்வினை அணைத்து அழத்தொடங்கினாள் சாரு.......

அவளை அணைத்து அஸ்வின் அவளது தலையை கோதியவாறு இருக்க சிறிது நேரத்தில்

“சாருமா........” என்று அஸ்வின் அழைக்க

“வேணா அஸ்வின் அப்படி கூப்பிடாத அம்மாவும் இப்படி தான் கூப்பிடுவாங்க” என்றுவிட்டு மீண்டும் அவன் மார்பில் தலைவைத்து அழுதாள் சாரு...

தன்னவளின் அழுகை அவளது மனபாரத்தை குறைக்கும் என்று அவன் அறிவு கூறினாலும் அவன் மனமோ மிகவும் கலங்கியது...... ஆனாலும் தன்னவளை ஆசுவாசப்படுத்த தன்னாலே முடியும் என்று அஸ்வின்

“ஓய் ஜிலேபி நான் எங்க அத்தை கூட கா....” அவனது திடீர் பேச்சில் குழம்பிய சாரு தலையை நிமிர்த்தி பார்க்க

“இப்படி ஒரு அழகான பாப்பாவ அழுகுனிபாப்பாவா வளர்த்திருக்காங்களே.... நானும் இவ்வளவு நாள் இந்த பாப்பாக்கு அழவே தெரியாது சமத்து பாப்பானு நினைத்திருந்தேன்.... ஆனா இந்த பாப்பா லீட்டர் லீட்டரா தண்ணியை ஸ்டோர் பண்ணி வைத்திருக்குனு எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போயிருச்சே...” என்ற அஸ்வினை முறைத்த சாரு

“தெரிந்திருந்தா என்ன பண்ணி இருப்ப??”

“வேற என்ன பண்ணியிருப்பேன்?? வீட்டில் இன்னும் ரெண்டு வாட்டர் டேங் வாங்கி வைத்திருப்பேன்” என்று அசால்டாக அஸ்வின் கூற அவனை அருகில் இருந்த தன் ஹான்ட் பேக்கினால் அடித்தாள் சாரு....

“ஓய் ஜிலேபி இப்படி வெப்பன்ஸ் எல்லாம் யூஸ் பண்ண கூடாது சொல்லிட்டேன்...”

“உன்னை இத்தோடு விட்டதே பெரிது....என்னையே கலாய்ப்பியா ரௌடி பேபி...??”

“ஹாஹா உன்னை கலாய்க்காம வெறு யாரை ஜிலேபி கலாய்ப்பது?? சரி இப்போ அத்தையை பற்றி சொல்லு”

“சொல்லுறேன்.... உங்க அத்தையை பற்றி மட்டும் இல்லை... அவங்க புருஷனை பற்றியும் சொல்லுறேன்” என்று தன் குடும்பம் பற்றி கூறத்தொடங்கினாள் சாரு

ராணி கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார்.... அன்று கல்லூரி வாசலில் அவருக்காக காத்துக்கொண்டிருந்தார் செல்வம் என்றழைக்கப்படும் செல்வநாயகம்... கல்லூரி கேட்டை தாண்டி வந்த ராணி செல்வத்தை பார்த்து கையசைக்க அவரும் ராணியை நோக்கி வந்தார். அங்கிருந்து இருவரும் சென்ற இடம் அருகிலிருந்த பூங்காவிற்கு....

செல்வம் பற்றி சொல்வதானால் அவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்... படிப்பதற்காக நகரத்திற்கு வந்தவருக்கு அவரது ஜூனியரான ராணியை பார்த்தவுடன் பிடித்து போனது.... அவரிடம் தன் காதலை கூறிய போது ராணி அதனை மறுத்துவிட்டார். ஆனாலும் முயன்று ராணியை தன் காதலுக்கு சம்மதம் சொல்ல வைத்தார்....

ராணி அனாதை இல்லத்தில் வளர்ந்தவர்.. இல்லத்தின் உதவியாலே கல்லூரிப்படிப்பை அவரால் தொடர முடிந்தது. அச்சந்தர்ப்பத்திலேயே செல்வம் தன் காதலை வெளிப்படுத்தினார்.... பல அறிவுரைகள் எச்சரிக்கைகளை புகுத்தி வளர்க்கப்பட்ட ராணிக்கு செல்வத்தின் காதலை ஏற்பதில் பயம். ஆயினும் அவரது ஆழமான காதல் ராணியை ஏற்கவைத்தது.....

இருவரும் பூங்காவில் வழமையாக அமரும் இடத்தில் அமர்ந்ததும் செல்வம் பேச ஆரம்பித்தார்....

“ராணிமா... எங்க வீட்டில் எனக்கு பெண் பார்க்கிறாங்க”

“என்னங்க சொல்லுறீங்க???”

“நான் நம்ம காதலை வீட்டில் சொன்ன பிறகு தான் இந்த ஏற்பாடு”

“என்னங்க..... அப்போ....” என்றவாறு ராணி அழத்தொடங்க

“ஐயோ ராணிமா இப்போ நீ எதுக்கு அழுற?? கண்ணை துடைத்துக்கோ முதலில்.... முதல்ல நான் சொல்ல வருவதை முழுமையாக கேளு..?” என்று செல்வம் கூற ஒப்புக்காக ராணி கண்ணை துடைத்துக்கொண்டாலும் கண்கள் இப்போ அப்போ என்று கண்ணீரை வெளிவிடுவதற்கு தயாராக இருந்தது..

“ம்.. சொல்லுங்க...”

“நாம எங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம் ராணிமா.... இது மட்டும் தான் இப்ப நம்மால் செய்யக்கூடிய ஒன்று... எங்க வீட்டில் முதலில் எதிர்த்தாலும் காலப்போக்கில் நம்மை ஏற்றுக்கொள்வார்கள்”

“வேணாங்க.... திரும்ப நாம பேசிப்பார்க்கலாம்... ஒரு அழகான கூட்டில் இருக்கிற உங்களை என்னோட சுயநலத்திற்காக பிரித்து கூட்டிட்டு போக விரும்பலை.... இப்போ உறவுகள் வேணாம்னு தோனும்.. ஆனா உறவுகளின் அருமை அதுக்காக ஏங்குனவங்களுக்கு தான் தெரியும்... பிளீஸ் ங்க... மறுபடியும் உங்க வீட்டிலே பேசி பார்க்கலாம்....”

“இல்லை ராணிமா எவ்வளவோ பேசிப்பார்த்திட்டேன் அவங்க முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க..நம்ம அவங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கறது தான் நாம சேர்வதற்கு ஒரே வழி” என்று செல்வம் பல காரணங்களும் சமாதானங்களும் சொல்லி ராணியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்.

அவர்களது திருமணம் நண்பர்கள் துணையோடு கோயிலில் நடைபெற்றது…

அவர்கள் தம் வாழ்வை ஒரு கூலிவீட்டில் தொடங்கினர். செல்வம் ஒரு கம்பனியில் அப்போது எக்சிகியூட்டிவ்வாக கடமையாற்றிக்கொண்டிருந்தார்… ராணியும் அவருக்கு உதவும் முகமாக செல்வம் தடுத்தும் வேலைக்கு சென்றார்.. இருவரது உழைப்பும் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தியது… தன்னை ஒதுக்கிய பெற்றோர் முன் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறி செல்வத்தினுள் இருந்ததால் தன் நெடுநாள் கனவான கண்ஸ்ரக்ஷன் கம்பனியை தமது சேமிப்பு பணத்தையும் வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகையையும் மூலதனமாக இட்டு தொடங்கினார்… ஆரம்பித்த புதிதில் சில சறுக்கல்கள் இருந்தாலும் தன் விடா முயற்சியினாலும் அவரது பால்ய சிநேகிதன் ராமின் துணையினாலும் தொழிலில் காலூன்றினார்…. அந்த சமயத்திலேயே அவர்களுக்கு சாரு பிறந்தாள்…. அவள் பிறந்த நேரம் அவரது தொழில் அசுர வளர்ச்சியடையத் தொடங்கியது… தொழில் தொழில் என்று தன் முழு நேரத்தையும் அதில் செலவிட்டவர் தன் குடும்பத்துடனான நேரத்தை குறைத்துக்கொண்டார்…. அவரது வேலைப்பலு அறிந்த ராணி அதை கண்டுகொள்ளாதவாறு வெளியில் காட்டிக்கொண்டாலும் மனமோ செல்வத்துடன் நேரம் செலவழிக்கவே ஏங்கியது…. ஆனால் அந்த ஏக்கத்தை போக்கவென்றே அவருக்கு துணையாய் இருந்தாள் சாரு….. அவளுக்கு எதுவென்றாலும் அம்மா துணை வேண்டும்…. காலை எழும்பியதிலிருந்து அம்மா அம்மா என்று ராணியின் முந்தானையை பிடித்துக்கொண்டே சுற்றுவாள். அவளது அம்மாவே அவளின் உலகம்…. அவளுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தார் ராணி…….அவளுக்கு தைரியத்தை புகட்டுவதற்காக அவளை ஸ்போட்சில் ஈடுபடுத்தினார்….. தற்காப்பிற்கு கராத்தே பயில வழி செய்தார்…. அவை மட்டும் போதாதென்று பாட்டு டான்ஸ் என்று அனைத்தையும் பயிற்று வித்தார்… அவள் உடல்ரீதியாக மட்டுமே பெண் …... மனரீதியாக ஒரு ஆணிற்கு நிகரான ஆளுமையுடன் வளர்க்கப்பட்டாள்.

அது பிற்காலத்தில் சாருவிற்கு பெரிதும் உதவியது….. சிறு வயதிலேயே புத்திசாலியாக திகழ்ந்தாள்…. பள்ளியில் கல்வி, விளையாட்டு என்று அனைத்திலும் அவளே முதலிடம்…. இப்படி இவர்களது நாட்கள் அழகாக சென்று கொண்டிருக்க அக்குடும்பத்தின் மகிழ்ச்சியை கெடுப்பதற்கென்றே நிகழ்ந்தது ராணியின் மரணம்……அவரது மரணத்தின் பின் சாரு தனிமைபடுத்தப்பட்டாள்…… அம்மா என்று ஒருவரை மட்டும்கொண்ட அவளது உலகம் இப்பொழுது யாருமில்லாது இருண்டிருந்தது… தந்தை என்றொருவர் இருந்தாலும் அவரை இதுவரை எதற்கு நாடியதில்லை…. அதாவது அவர் நாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை…… ஆனால் இனிமேல் தன் துணை அவருக்கு தேவை என்றுணர்ந்த சாரு அவருக்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்து கொடுத்தாள்…. அவளது அம்மா இறக்கும் போது அவள் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தாள்……இந்த நேரத்திலேயே செல்வத்தின் குடும்பத்தினர் புது குழப்பத்தை உண்டு பண்ணினர்……

அன்று சாரு பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது அவளது வீடு அலங்கரிக்கப்பட்டு வீட்டில் விருந்தினர்கள் நிரம்பி வழிந்தனர்… வீட்டின் இந்த மாற்றத்திற்கு காரணம் அறியாத சாருவோ தன் தந்தையை தேடிச்சென்றாள்….

அவள் செல்லும் வழியில் அவளது அன்னையின் பெயர் அடிபட அந்த இடத்திலேயே நின்று அவர்கள் பேசுவதை கேட்கத்தொடங்கினாள்…

“இங்க பாரு ஷெண்பா… நீ இனி புத்தியா பிழைச்சுக்கனும்… செல்வம் நல்ல பையன் தான். ஆனா அந்த அனாதை சிறுக்கி ராணி ஏதோ மாயம் பண்ணி அவனை எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டா….. இப்போ அவ போனதால எங்க பையன் எங்களுக்கு திருப்பி கிடைச்சிட்டான்…ஆனா அவளோட ரத்தமா அவ மக இருக்கா…. அவளும் அந்த ராணி மாதிரியே தான்… ராங்கி பிடிச்சவள்….. நீ தான் அவளை அடக்கி உன் கட்டுக்குள் வச்சிருக்கனும்…. அதுக்கு நீ செல்வத்தை உன் கைக்குள் போட்டுக்கொள்ளனும்…… இதெல்லாம் நீ சரிவர செய்யலைனா செல்வம் பய சொத்துபத்து எல்லாத்தையும் அந்த அனாதை பெத்த மகளுக்கே எழுதி வச்சிருவான்…. அவளை காரணம் காட்டி தான் இந்த கல்யாணத்தையே நடத்துனோம். அதனால இனிமே நீ புத்தியா பிழைச்சா தான் உன்னோட வாரிசுக்கு ஏதாவது சொத்து சுகத்தை சேர்க்க முடியும்… நான் சொல்வது உனக்கு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்….. .” என்று செல்வத்தின் அம்மா தன் புது மருமகள் ஷெண்பாவிடம் கூறிக்கொண்டிருந்தாள்.

அதை கேட்டுக்கொண்டிருந்த சாருவிற்கோ ஆத்திரம் அழுகை என்று அனைத்தும் ஒரு சேர வந்தது. அவளது அறைக்கு வந்தவள் அழுது தீர்த்தாள். பின் ஒரு முடிவு எடுத்தவளாக தன் தந்தையிடம் சென்று தான் ஆஸ்டலில் தங்கி படிக்கப்போவதாக கூறினாள். செல்வமும் சரி என்றுவிட அவளின் ஆஸ்டல் வாசம் ஆரம்பமானது. விடுமுறைக்கு வீட்டிற்கு வருபவள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். என்ன தான் ஷெண்பா அவளுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள முனைந்தாலும் சாரு அதனை ஏற்க முனையவில்லை. காரணம் அன்று செல்வத்தின் தாயார் பேசிய பேச்சு. ஆனால் சாருவிற்கு தெரியாத ஒன்று ஷெண்பா அவரது அறிவுரைகளை காதால் கேட்டாரே ஒழிய அதை செயற்படுத்த முனையவில்லை.

இவ்வாறு சென்று கொண்டிருக்க ஷெண்பா மற்றும் செல்வத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது… அதற்கு ரதன் என்று பெயர் சூட்டினர்….. சாரு இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருக்கும் போது செல்வம் இறந்து போனார்…. அவரது உயில் கம்பனியும் ஒரு வீடும் சாருவிற்கென்றும் ஏனைய சொத்துக்கள் அனைத்தும் ஷெண்பா மற்றும் அவரது மகன் ரதனிற்கும் என்றும் அறிவித்தது. ஆனால் அவரது உறவினர்கள் சாருவின் பெயரில் இருந்த சொத்துக்களையும் ஷெண்பாவின் பெயரிற்கு மாற்றுமாறு சாருவிடம் கூற அதனை ஷெண்பா தடுத்துவிட்டார். அதுவே சாரு ஷெண்பா மற்றும் ரதனை பார்த்த கடைசி நாள். பின் அவளது வாழ்க்கை சக்கரம் சுமூகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

என்று சாரு தன் கதையையினை முடிக்க அஸ்வின்

“ஏன் ஜிலேபி நீ அதற்கு பிறகு உன் சித்தியை பார்க்கவே இல்லையா??”

“இல்லை அஸ்வின் அவங்க அதற்கு பிறகு ரதனோடு அவங்க ஊருக்கு போய்ட்டாங்க…. நானும் அவங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படவும் இல்லை…”

“ஓ… ஆனா நான் ஒன்று கேட்பேன் நீ தப்பா எடுத்துக்க கூடாது…”

“இல்லை சொல்லு…”

“உன்னோட சித்தி தப்பானவங்கனு உனக்கு தோனுதா????”

“ஏன் அப்படி கேட்குற??”

“நீ சொல்வதை கேட்டப்போ அவங்க கெட்டவங்க இல்லைனு தோனுது???? நீ என்ன நினைக்கிற ஜிலேபி???” என்று அஸ்வின் கேட்க சாருவிடம் பதிலில்லை….

அஸ்வின் சாருவிடம் எழுப்பிய வினாவிற்கு அவளிடம் பதில் இல்லை. காரணம் ஷெண்பா சாருவிடம் நடந்து கொண்ட முறை.....

விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் சாருவை நன்றாக கவனித்துக்கொள்வார் ஷெண்பா. வேளா வேளைக்கு அவளது அறைக்கே உணவினை அனுப்பிவைப்பார்.... அவர் அவளிடம் நலம் விசாரிக்கும் போது அவளது பதில் ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும்..... அவள் ஒதுங்கி சென்றாலும் அவர் அவளை ஒதுக்கி வைக்காது பார்த்து கவனித்துக்கொள்வார்...

“என்ன ஜிலேபி சைலண்ட் ஆகிட்ட??? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு உன்னோட ஷெண்பா சித்தி கெட்டவங்க இல்லைதானே???”

“இல்லை தான் பேபி... ஆனாலும் அவங்களை நல்லவங்க காட்டகரிக்குள்ள சேர்க்க மனது ஒப்புக்கொள்ள மாட்டேன்குது...”

“ சரி நீ இந்த கேள்விக்கு பதில் சொல்லு??? அவங்களை எதனால உனக்கு பிடிக்கலை?? உன்னோட அம்மா ஸ்தானத்திற்கு அவங்க வந்தது தப்பென்று நினைக்கிறியா??”

“இல்லை பேபி அப்படி எனக்கு எப்பவும் தோன்றியதில்லை... சொல்லப்போனா அப்பா செகண்ட் மேரஜ் பண்ணது கூட எனக்கு தப்பென்று தோன்றவில்லை.... ஆனா அன்று அப்பாவோட அம்மாவும் அவங்களும் பேசிக்கிட்டது தான் நான் அவங்களை வெறுக்க காரணம்...”

“சரி நீ என்ன நினைக்கிறனு எனக்கு புரியிது ஜிலேபி.... ஆனா நீ ஒரு விஷயத்தை கவனிக்காமல் விட்டுட்ட... அன்று உன்னோட பாட்டி சொன்னதை உன்னோட சித்தி கேட்டாங்கனு சொன்னியே..... அதை என்றாவது அவங்க செயலில் காட்டியிருக்காங்களா?? உன்னோட விஷயத்தில் எதிலாவது அவங்க தலையிட்டிருக்காங்களா??? அங்க உன் பாட்டி சொல்வதை கேட்டு இருந்தாங்கனா மாமா இறந்த பிறகு கம்பனி உன் பேருக்கு வந்ததை எதிர்த்த உறவினர்களை ஏன் தடுத்தாங்க??? நீ ஏன் இந்த ஆங்கிலில் இருந்து யோசிக்க மாட்டேன்ற??” என்ற அஸ்வினின் வினா சாருவிற்கு தன் தவறை சுட்டிக்காட்டியது.

ஆம் அப்போதுதான் தன் சித்தியின் நற்குணத்தை புரிந்துகொண்டாள். என்னதான் தான் முகம் கொடுத்து பேசாவிட்டாலும் விடுமுறை நாட்களுக்கு வீட்டிற்கு வரும் தன்னை அவர் முகம் சுழிக்காது சீராட்டியது, தன் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றியது என்று அவர் செயல்கள் ஒவ்வொன்றும் தன் மீதான அன்பை மட்டுமே வெளிக்காட்டியது.... ஆனால் அந்நேரம் அறியாமையால் அவரை புறக்கணித்தது இப்போது மிக வேதனையை தந்தது... அதைவிட வேதனையூட்டிய விடயம் அவர் தன் தந்தையுடன் வாழ்ந்தது குறுகிய காலம் என்பதே. ஒரு பெண்ணான சாருவிற்கு அவரின் வேதனையை இப்போது புரிந்து கொள்ளமுடிந்தது.

பின் ஒரு முடிவெடுத்தவளாக அஸ்வினிடம்

“தாங்ஸ் ரௌடி பேபி...... இவ்வளவு நாளா ஒரு நல்லவங்களை பற்றி தப்பா நினைத்திருந்தேன்.... நீ தான் அதை தப்புனு எனக்கு புரியவச்ச.. இல்லைனா நான் வாழ்நாள் முழுவதும் அவங்க அன்பை புரிந்து கொள்ளாமலே இருந்திருப்பேன். லவ் யூ டா ரௌடி பேபி..” என்று அவனது கன்னம் திருப்பி சாரு தன் செவ்விதழால் ஒரு முத்தமொன்றை பரிசளிக்க அஸ்வினோ தேனுண்ட வண்டானான்.

“ ஏன் ஜிலேபி தப்பான டைமில் இப்படி தாறுமாறா கிப்ட் குடுக்குற???” என்று ஒரு மார்க்கமாய் அஸ்வின் சாருவை நோக்க சாருவோ அதை கவனிக்காது

“ இன்னும் நிறைய கிப்ட் குடுப்பேன் என்னோட ரௌடி பேபிக்கு..... அவன் தான் என்னோட தப்பை புரிய வைத்தான்..... எனக்கென்று உறவுகள் இருக்குனு புரியவைத்தான்..... நான் சித்தியை இந்த சண்டே பார்த்து அவங்களை கையோட கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்.. இப்போ தம்பியும் வளர்ந்திருப்பான்... ரெண்டு பேரையும் இனி என்கூடாவே என்னோட வீட்டுலயே வைத்து பார்த்துக்கொள்வேன்... இந்த டைம் மெடிக்கல் காம்பையும் சித்தி தான் ஓபன் பண்ணுவாங்க... அம்மா மாதிரி யாரும் தவறான உணவு பழக்கத்தால் இறந்துவிட கூடாதுனு தான் இந்த மெடிக்கல் கேம்பும் மெடிக்கல் செஷன்சும் இயர்லி கான்டக்ட் பண்ணுறேன். அதை இந்த முறை சித்தியே ஓபன் பண்ணட்டும்.. அது தான் நான் அவங்களுக்கு செய்ற மரியாதை ...”என்று சாரு தன்பாட்டில் பேசியபடி இருக்க அஸ்வினிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லையே என்று சாரு அவனை திரும்பி பார்க்க அவனோ மன்மத அம்பை தன் கண்களில் ஏந்தி அவளை தாக்குவதற்கு தயாரான நிலையில் இருந்தான்.

அவனது பார்வை சாருவினுள் ஏதோ ஒரு புது உணர்வை கிளப்ப அவளோ பேச மடந்தையாகினாள்... அவனது பார்வை அவளிடத்தில் வெட்கத்தை உண்டு பண்ண அவள் அதை மறைக்கும் பொருட்டு தலை குனிந்தாள். அவளது வெட்கத்தால் அந்த இருட்டிலும் சிவந்து ஜொலிக்கும் அவளது வதனம் அஸ்வினை இன்னும் பித்தனாக்கியது... தன் கரத்தால் அவளது கரம் பற்றிய அஸ்வின் அவளது புறங்கையில் இதழொற்றினான்.. அதில் கூச்சமடைந்த சாரு தன் தலையை மறுபக்கம் திருப்ப அஸ்வினோ அவளது தாடையை பற்றி அவன் புறம் திருப்பினான். வெட்கத்தால் சிவந்து ஜொலித்த அவளது வதனம் வானில் காய்ந்து கொண்டிருந்த நிலவிவுடன் போட்டியிட்டது.. அலைகள் போல் ஆர்பரித்த அவளது உணர்வுகளை அடக்கும் வழி தெரியாது அவள் தன் சிவந்த அதரங்களை கடிக்க மீனின் வாயில் மாட்டிய தூண்டில் போல் அவளது பற்களுக்கிடையில் சிறைபட்டிருந்த அந்த தக்காளிப்பழ செவ்விதழ்களை தன் கைகளால் விடுவித்தான் அஸ்வின்.

அதில் இன்னும் வெட்கம் வரப்பெற்ற சாரு “அஸ்வின்” என்று முனங்க

“ரௌடி பேபி சொல்லு ஜிலேபி” என்றவாறு அவள் முகத்தினை அஸ்வின் கையிலேந்தி அவளது கண்களை நேருக்கு நேர் நோக்க அவளும் உயிரை ஊடுருவிச்செல்லும் அவன் பார்வை வீச்சை தாங்கி நின்றாள்... ஓரிடத்தில் நிற்காது அங்குமிங்கும் அலைப்பாயும் அவளது கருமணிகள் இரண்டும் அவனது விம்பத்தை திரையிட அந்த நிலவொளியில் அதை கண்ட அஸ்வினிற்கு அவளது இதயத்தில் தன் இருப்பிடத்தை தெரிந்துகொண்டாதான ஒரு உணர்வு.....

அவனிடம் எதையோ எதிர்பார்த்து ஏங்கி நிற்பது போல் அடிக்கடி மூடித்திறந்த அவளது இமைகள் அவனது மையலை இன்னும் அதிகரித்தது....

அவன் அவளது முகம் நோக்கி குனிய அவளோ தன் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் பெண்களுக்கே உரிய நாணம் அவளை தன் கண்களை மூட வைக்க அவளது முகம் நோக்கி குனிந்த அஸ்வின் நிலையில்லாது ஓடிக்கொண்டிருந்த அவளது மூடிய விழிகள் இரண்டின் மீதும் இதழ் பதித்தவன் பின் அவள் காதோரம் இருந்த கூந்தல் கற்றையை ஒதுக்கிவிட்டவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து

“ நிலவு கூட உன்

கன்னக்கதப்பை

பார்த்து

பொறாமைப்படுகின்றது...

என்றும்

என் தனிமைக்கு

துணை நிற்கும் அதற்கு

ஒரு வரி கவிதையேனும்

இயற்ற முன்வராத என் நா

இன்று

உன் கன்னச்சிவப்பு

கண்டு மயங்கி

அருவியாய் கவி பாட

முயன்றதை கண்டு..”

என்று அவளது காதோரம் கிசுகிசுக்க சாரு தன் வசம் இழந்து அவன் தோளில் சாய்ந்தாள்.... இவர்களது மோனநிலையை கலைக்கவென்று சாருவின் செல் ஒலித்தது..... அதில் அவர்களது மோனநிலை கலைய இருவரும் விலகி அமர்ந்து கொண்டனர்.

போனை ஆன் செய்த சாரு

“டேய் ஏன்டா சிவபூஜையில நுழைந்த ??”என்று அந்தப்புறம் அழைப்பிலிருந்த சஞ்சுவிடம் பாய அவள் கேட்ட தொனியில் அஸ்வின் சிரிக்கத்தொடங்கினான்....

அவனை சாரு முறைக்க அவன் தன் கைகளால் வாயை மூடிக்கொண்டு நிறுத்திய சிரிப்பை மீண்டும் தொடர்ந்தான்..

“ஏன் சாரு கோயில்ல இருக்கியா?? நான் ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா???”

“ஆமா கோயில்ல இருந்து சிவபூஜை பண்ணிட்டு இருந்தேன். நீ கரடி மாதிரி உள்ள நுழைஞ்சி கெடுத்துட்ட...” என்று சாரு கூற சஞ்சய் சிவபூஜை கரடி என்ற வார்த்தைகளிலே புரிந்து கொண்டு

“ஹாஹா அதான் மேடத்திற்கு கோபமா??? நட்புனா அதான் மா.... பூஜை நேரத்தில் மட்டும் இல்லை எல்லாவற்றிலும் குழப்பத்தை உண்டு பண்ணுவோம்....” என்றுவிட்டு சஞ்சு சிரிக்க அதில் கடுப்பான சாரு

“இப்படி சிரிக்கத்தான் கால் பண்ணியா??”

“இல்லை ..ஒரு டீல் பற்றி பேசத்தான் கால் பண்ணேன்... ஆனா இப்ப எனக்கு சிரிக்கனும் போல தோனுது...” என்றுவிட்டு மீண்டும் சஞ்சு சிரிக்க சாரு கடுப்பில் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

பின் அவன் மீதிருந்த கோபத்தை அஸ்வினை அடித்து தீர்த்துக்கொண்டாள்... பின் இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.....

இவ்வாறு அழகாய் சென்றுக்கொண்டிருக்கும் அவர்களது வாழ்விற்கு விதி என்ன செய்ய காத்திருக்கிறது.....???

[QUOTE="Anu Chandran, post: 2634, member: 6"] சாரு மற்றும் அஸ்வினின் காதல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ந்தது... காலையில் குட்மார்னிங் மெசேஜுடன் ஆரம்பமாகும் அவர்களது நாள் இரவு ஒரு மணி நேர உரையாடலுடனே முடிவடையும். இடையிடையே சிறு சிறு சண்டைகளும் சமாதானங்களும் அவர்களது உரையாடலில் முக்கியமாக இடம்பெறும்... அது காதலர்களுக்கே பிரத்யேகமான ஒன்று.... அன்று ஒரு நாள் “ஹேய் ஜிலேபி இன்னைக்கு அந்த காபி ஷாப்பில் ஒரு பொண்ணு வந்து உன்னோட பேசிட்டு இருந்தாளே அவ யாரு???” “அதை தெரிந்துக்கிட்டு நீ என்ன பண்ண போற ரௌடி பேபி??” “சும்மா ஒரு ஜென்ரல் நாலேஜிக்கு தான்...” “அப்படி என்ன ஜெனரல் நாலேஜ் உனக்கு இதை தெரிந்துக்கொள்வதால் கிடைக்கப்போகுது???” என்று கடுப்புடன் சாரு கேட்க “ அது உனக்கு எதுக்கு... நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. யாரு அந்த பொண்ணு.... பார்க்க சும்மா சமந்தா மாதிரி இருந்தா அவள்” “ஓ அவ்வளவு தூரத்திற்கு போயிருச்சா??” “இல்லை ஜிலேபி உண்மையாவே அவ்வளவு அழகா இருந்தா.... நீ சொல்லு அவ யாரு அவளோட....” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அழைப்பு துண்டிக்கப்பட்டது... அவன் மீண்டும் முயற்சிக்க அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.... இது எப்போதும் நடப்பதே... அஸ்வின் அவளை கோபப்படுத்துவதற்கென்றே அவளை வம்பிழுப்பான். ஆனால் அவளோ வாய் வார்த்தைதளால் சண்டையிடாது தன் அமைதியின் மூலம் அவனுக்கு தன் கோபத்தை வெளிக்காட்டுவாள்... வாய் ஓயாமல் பேசும் அவள் மௌனமாய் இருப்பது அவனுக்கு நகைப்பாய் இருந்தாலும்.. ஏதோ ஒன்று இல்லாத குறைய அவன் உணருவான்... ஆனால் அவளது கோபமும் அவனை அவள் மேல் இன்னும் மையல் கொள்ளச் செய்யும்..... சிறு பிள்ளை போல் அவனுடன் பேசாது போர்க்கொடி தூக்கும் அவளை அவன் எப்போதும் ரசிப்பான்.... அதற்காக அவன் அவளை சீண்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தனது தோரணையில் சமாதானப்படுத்தவும் தவறமாட்டான். அதாவது அவனது சமாதானப்படலம் ரோஜாப்பூ பொக்கேயுடன் ஆரம்பிக்கும்.... ஆபிசில் தன் அறையில் நுழையும் சாருவை சாரி ஜிலேபி என்ற அட்டையை தாங்கிய பூங்கொத்தே வரவேற்றும்... பின் மெயில் பாக்ஸை திறந்ததும் சாரி பொம்மு குட்டி என்ற அஸ்வினின் மெயிலே முதலில் வரவேற்கும்... பின் அவளது மொபைலில் அஸ்வினது சாரியை தாங்கியிருக்கும் வாய்ஸ் மேசேஜும் அதனது சேவையை ஆற்றியிருக்கும். ஆபிஸ் நேரம் முடிந்த பின் அஸ்வின் நேரடியாக வந்து அவளை தன் சித்தி அழைத்து வரச்சொன்னதாக சொல்லி அழைப்பான்.... மறுக்கும் சாருவை தன் சித்தியை பேச வைத்தே சரி கட்டுவான்..... அவளை நேராக வீட்டிற்கு அழைத்து செல்லாமல் அவளை எப்போதும் செல்ல விரும்பும் கடற்கரைக்கு அழைத்து செல்வான்... அவளுக்கு கடற்கரை மண்ணில் அமர்ந்து கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டே கடற்காற்றை சுவாசிப்பதில் கொள்ளை இஷ்டம். அதுவும் நிலவொளியில் வானத்தை முற்றுகையிட்டிருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதென்பது அவளது வாடிக்கை.... அந்த நேரத்தில் அவளது கோப தாபங்கள் அவளிடமிருந்து விடைபெற்றிருக்கும்.. அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாருவிடம் மன்னிப்பு கேட்பது அஸ்வினின் வாடிக்கை.... பின் அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்று சித்ராவின் நளபாகத்தை ருசிக்க செய்து மிச்சம் மீதி உள்ள கோபத்தையும் சரிகட்டி விடுவான்... சாருவும் இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே அவனிடம் அடிக்கடி சண்டையிடுவாள்..... அவளுக்கு அந்த கடற்கரை மண்ணில் நிலவொளியில் அஸ்வினுடன் நேரம் செலவளிக்க அலாதி விருப்பம்.... அதற்காகவே ஏதேனும் ஒரு காரணத்தை உருவாக்கி அவனுடன் சண்டையிடுவாள்... அவளது சண்டையிற்கு காரணங்களாக அவள் கூறுபவை “ குட் மானிங் சொல்லலை,என்னை பார்த்து சிரிக்கல, எனக்கு உம்மா குடுக்கலை” என்று தினம் தினம் அவளது பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.... அதன் மூலக்காரணத்தை அறிந்த அஸ்வினோ அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வான்.. இதற்கிடையில் ஒரு நாள் சஞ்சு இவர்களது அலும்பலை பொறுக்க முடியாது சாருவிடம் புகார் கொடுத்தான்... “ சாரு நீயும் அஸ்வினும் டூ மச்..... நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுவீங்களாம் அதுக்கு பொக்கே வருமாம்... அவன் உனக்கு சாரி சொல்ல பீச்சிற்கு கூட்டிட்டு போவானாம்... நீயும் அங்க போனதும் கன்வின்ஸ் ஆகிருவியாம்.... என்னமா நடக்குது இங்க??? சண்டைக்கான ரீசன் கேட்ட அதுக்கு நீ சொல்லுற பதிலை கேட்டா எனக்கு அழுவதா சிரிப்பதானு தெரியலை.... குட் மார்னிங் சொல்லலை, பார்த்து முறைச்சது இப்படி உப்பு சப்பு இல்லாத விஷயத்தை ஒரு மேட்டரா எடுத்து நீ பண்ணுறது எல்லாம் ஓவர். அதை விட ஓவர் அதுக்கு அவன் கூஜா தூக்குறது...” என்று தன் குற்றச்சாட்டினை முன்வைக்க “எங்களை பார்த்து உனக்கு பொறாமை டா... ரௌடி பேபியை பார்த்து சரி கத்துக்கோ.... எவ்வளோ ஸ்வீட் அவன்...நான் எப்ப கோபப்பட்டாலும் அடுத்த நாளே என்னை எப்படியாவது சமாதானப்படுத்திடுவான். அதுக்கு அவன் செய்யும் செயல்கள் எப்பவும் யுனிக்கா இருக்கும்.... யுனிக்கா மட்டும் இல்லாமா எனக்கு பிடித்ததாகவும் இருக்கும். அது தான் என்னோட ரௌடி பேபி... அவனுக்கு என்னோட கோபம் உண்மையில்லைனு தெரிந்தாலும் எனக்காக நான் அப்படி அவன் கெஞ்சுவதை விரும்புறேன் அப்படிங்கிறதுக்காக என்னிடம் வந்து கெஞ்சுவதை போல் நடிப்பான்... இதை பலபேர் அடிமைத்தனம்னு நினைக்கலாம். ஆனால் காதலன்-காதலி உறவிற்கும் கணவன் மனைவி உறவுக்கும் இது ரொம்ப அவசியம். எதிரிகளை தோற்கடித்து தன் முன் மண்டியிடச்செய்யும் அரசன் கூட தன் காதலி அல்லது மனைவியிடம் மண்டியிட்டு காதல் யாசகம் பெறுவதை மானக்குறைச்சலாக நினைக்க மாட்டேன். அதே போல அந்த காதலி அல்லது மனைவி தன் கணவன் அல்லது காதலன் அவள் முன் மட்டுமே மண்டியிட வேண்டும் என்று எப்போதும் விரும்புவாள்.இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும். தன் அன்புக்குரியவன் தன்னிடம் மட்டுமே சிரம் தாழ்த்தி கையேந்த வேண்டும் அதான் பெண்கள் மெண்டாலிட்டு...இதை பசங்க நீங்க தப்பா புரிந்துகொள்றீங்க.. ஏதோ நாங்க உங்களை டாச்சர் பண்ணுறதாகவும் ஏதோ உங்கள் ஒரிஜினாலிட்டியை நாங்க அழிச்சிட்டதாகவும் பேசுறீங்க.... ஆனா அது அப்படியில்லை.. எங்கிட்ட மட்டும் நீங்க அப்படி இருக்கனும்னு விரும்புறோமே தவிர சமூகத்தில் உங்களுக்கு அப்படி நடக்க நாங்க எப்பவும் விரும்ப மாட்டோம்.... அப்படி நடந்தா அதுக்கு எதிரா சண்டை போடுவமே தவிர என்னைக்கும் அக்சப்ட் பண்ண மாட்டோம்...நீ யோசிச்சி பாரு ஆது அவள் உன்னை எப்படி வேணாலும் திட்டுவா... ஆனா அவள் முன் நான் உன்னை திட்டுனா அவ சண்டைக்கு தான் வருவா.....அது தான் பெண்கள் நேச்சர்... இதை நீங்க எப்பவும் புரிந்துகொள்ளாமல் ஏதோ நாங்க உங்களை டாச்சர் பண்ணுற மாதிரி சீனைப் போடுவீங்க....ஆனா என்னோட ரௌடிபேபி அதில் எல்லாம் கெட்டி..... எப்பவும் எனக்காக மட்டுமே யோசித்து எனக்கு பிடித்ததை மட்டும் செய்வான்.... அதுனாலேயே எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்..... நீயும் அவனிடம் கேட்டு கத்துக்கோ....அப்போ சரி ஆது கிட்ட திட்டு வாங்காம இருக்கியானு பார்ப்போம்......” என்று குற்றம் சாட்டிய சஞ்சுவிற்கு சாரு ஆலோசனை வழங்க “போதும் உன் ரௌடி பேபி புராணம்...இப்போவா வேலையை பார்க்கலாம்...” “நீ இப்ப மட்டும் இல்லை எப்பவும் ஆதுகிட்ட வாங்கிகட்டிட்டு தான் இருப்ப... உன்னை எல்லாம் திருத்தவே முடியாது... “ என்றுவிட்டு வேலையை கவனிக்க தொடங்கினாள் சாரு.... அன்று பெஸ்ட ஆப்ஷன் கன்ஸ்ரக்ஷனால் மருத்துவ முகாம் ஒன்று கம்பனி ஊழியர்களுக்கும் கண்ஸ்ரக்ஷன் சைட்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.... அதிக நிதி புழக்கம் உள்ள நிறுவனங்கள் வரி கட்டணத்தில் சிறிதளவு கழிவினை பெறுவதற்கும் தங்கள் நிறுவனத்தின் நற்பெயரினை மேம்பெறச்செய்து தங்களது மார்க்கட் சாரினினை அதிகரிப்பதற்காகவும் சி.எஸ்.ஆர்(கார்ப்பரேட் சோர்ஷல் ரெஸ்பான்சிபிலிட்டி) செயற்திட்டங்களில் ஈடுபடுவர்.... இதில் இரு வகைப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும். முதல்வகை நிறுவனங்கள் சமூகத்தை முன்னேற்றுவது தொடர்பான செயல்களில் ஈடுபடும். இரண்டாவது வகை நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு உதவும் விதமாகவும் அவர்களுக்கு நன்மையை பெற்றுக்கொடுத்து அவர்களிடம் நற்பெயரை பெறும் நோக்கத்துடனும் செயற்படும். பெஸ்ட் ஆப்ஷன் இரண்டாவது வகை நிறுவனம்..... கம்பனியின் உயர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநலத்தை பரிசோதித்து குறைகள் இருந்தால் அதற்குரிய தீர்வுகளை பெற்றுத்தரவென்று முழுக்க முழுக்க தொழிலாளர்களின் நன்மையை கருத்திற்கொண்டே வருடாவருடம் மருத்துவமுகாம் நடைபெறும்..... இந்த முகாமின் முக்கிய சிறப்பு சில நோய்களுக்கான உணவுக்கட்டுப்பாடுகள் மற்றும் சிகிச்சைமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்படும்... இதற்கு ஒரு நாள்போதாது என்ற காரணத்தால் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து இந்த மருத்துவ முகாம் இடம்பெறும். சாரு அஸ்வினிற்கு அந்த முகாம் பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தாள்... ஆகவே அம்முறை அவனே முன்வந்து அந்த முகாம் ஒழுங்கமைப்பை பொறுப்பேற்றிருந்தான். அவன் பெறுப்பேற்றதற்கு காரணம் அவனது ஜிலேபியே... அவள் அதை வருடாவருடம் நடாத்துவதற்காக கூறிய காரணமே இம்முறை அவனை பொறுப்பெடுத்து நடத்த உந்தியது... இருவரும் அன்று கடற்கரையில் அமர்ந்திருக்கும் போதே சாரு முகாம் பற்றி கூறத்தொடங்கினாள். “ரௌடி பேபி நம்ம கம்பனியில் வருடா வருடம் அடுத்தடுத்து வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மெடிக்கல் காம்ப் ஒன்று கண்டாக்ட் பண்ணுவோம். அதில் செக்கப் மட்டும் இல்லாமல் சில நோய்கள் பற்றிய அவாய்ர்னஸ் செஷன்ஸ் மற்றும் சில நோய்களுக்கான உணவு கட்டுப்பாட்டுமுறைகள் பற்றி ஸ்பெஷலிஸ்ட் பேசுவாங்க..... இந்த காம்ப் அம்மாவோட நினைவு தினம் வருகின்ற மாதம் தான் வழமையாக நடைபெறும். அதனால இந்த முறை இதை நீ பொறுப்பெடுத்து செய்தால் உன்னோட ஜிலேபிக்கு ரொம்ப ஹேபியா இருக்கும்...” “என்னோட ஜிலேபி கேட்டு நான் ஏதும் செய்யாம விடுவேனா??? ஓகே ஜிலேபி அதை நான் பர்பர்க்டா செய்து முடிக்கின்றேன்....ஆனா எனக்கு இதை நீ ஏன் அத்தையோட நினைவு தினம் வருகின்ற மாதத்தில் கண்டாக்ட் பண்ணுறனு தெரியனும்??” “சும்மா ஒரு ட்ரிபியூட்டா தான்” “ஜிலேபி உன்னோட ரௌடி பேபி ரொம்ப ஸ்மார்ட் சோ உண்மையை மறைக்காமல் சொல்லு..... எதனால இந்த காம்ப் எவ்ரி இயர் கண்டாக்ட் பண்ணுற??? என்னோட ஜிலேபி எது செய்தாலும் அதுக்கு ஒரு வெலியுபல் ரீசன் இருக்கும்... சோ லெட் மி நோ த ரீசன்” “ஹாஹா எப்படிடா எதை மறைத்தாலும் கண்டுப்பிடிக்கிற?? எப்படி உன்னால மட்டும் என்னை சரியா கெஸ் பண்ண முடியிது???” “அது அப்படி தான்... இப்போ நீ ரீசனை சொல்லு..” “அது அம்மாவுக்காக தான்” “அத்தைக்கு என்னானது?” “அம்மா வலிப்பு வந்து இறந்துட்டாங்க”என்று சாரு சிறிது நேரம் அமைதியாக இருக்க அவளது துக்கம் அறிந்த அஸ்வினோ அவளை ஆற்றும் விதம் அறியாது தவிக்க “ஜிலேபி.... எது நடக்கவேண்டுமென இருக்கோ அது நடந்தே தீரும். ஒரு தவறு நடக்கிறதென்று தெரிந்தால் அது நம் சக்திக்கு உட்பட்டதா இருந்தா மட்டுமே அதை நம்மால் தடுக்க முடியும்... ஆனால் பிறப்பும் இறப்பும் நம்மை படைத்த ஆண்டவனாலேயே தடுக்கமுடியாதவை... இது தான் இயற்கையின் விதி... இதுக்கு நீயோ நானோ விதிவிலக்கல்ல.. ஒருத்தர் இறந்து போயிட்டாங்கனா அவங்க நம்மை விட்டுட்டு போய்ட்டாங்கனு சொல்றோம். ஆனால் நம்மை விட்டு பிரிந்து சென்றது அவங்களோட உடம்பு மட்டும் தான்.... அவங்களோட நியாபகங்களும் நினைவுகளும் எப்பவும் நம்மோட தான் இருக்கும். அவங்க நம்ம மனசுக்கு பிடித்தவங்கனா அவங்களோட ஆன்மா எப்பவும் நமக்கு துணையாக இருக்கும். என்னோட அத்தையும் அப்படிதான். உன்னைவிட்டு பிரிந்தது அவங்களோட உடல் மட்டும் தான்.....ஆனா அவங்களோட ஆன்மா உனக்கு எப்போதும் காவலா மட்டும் இல்லாம உன்னை சரியான பாதையில் வழிகாட்டிட்டு தான் இருக்கிறது... உதாரணமா எடுத்துக்கோ நீ அன்புக்கு ஏங்கினாய்... உன்னை காதல் வசனம் பேசி நயவஞ்சகர் யாராவது உன் வாழ்க்கையை சீரழிச்சிருக்கலாம்....... இல்லைனா நீ பொண்ணுதானேனு உன்னை பிசினஸ் சர்க்கிலில் உள்ளவங்க ஏதாவது உன்னை காயப்படுத்துகின்ற அளவுக்கு ஏதும் பண்ணியிருக்கலாம். அவ்வளவு ஏன் அன்றைக்கு சஞ்சுவும் ராம் சாரும் இல்லாவிடின் உன்னோட நிலை என்ன???? எப்படி உன்னோட வாழ்க்கை சீர்குலைவதற்கு ஏகப்பட்ட வழிகள் இருந்த போதும் நீ எந்தவித கறையும் இல்லாம பளிச்சிடுவதற்கு காரணம் உங்க அம்மா உன்கூட உனக்கு காவலாக இருப்பது தான். அவங்க உயிரோடு இல்லாட்டியும் அவங்க ஆன்மா உனக்கு துணையா இருந்திருக்கு..... சோ அத்தை இல்லைனு நீ எப்பவும் கவலைப்படக்கூடாது.... அத்தை எப்பவும் உன் கூட தான் இருக்காங்க புரிந்ததா??” என்று அஸ்வின்அவளது கையினில் சிறு அழுத்தம் கொடுத்து அவள் முகம் பார்த்து கேட்க “ம்...” என்று சாரு அஸ்வினின் தோளின் மீது சாய்ந்தாள் “ என்னோட சமத்து ஜிலேபி. இப்ப சொல்லு அத்தைக்கு என்னாச்சி?” என்று அவளது தலையை நிமிர்த்தி கேட்க “ அம்மாவுக்கு வீசிங் இருந்தது... அதுக்கு மெடிசின் எடுத்துட்டு தான் இருந்தாங்க...ஒருநாள் திடீர்னு பிட்ஸ் வந்தது... ஆஸ்பிடல் கூட்டிட்டு போகிற வழியில் இறந்துட்டாங்க........ அப்போ அம்மோவோட டெத்திற்கு ரீசன் நிமோனியானு சொன்னாங்க... ஆனாலும் நிமோனியா அவ்வளவு சீரியஸ் இல்லையேனு டாக்டர்ஸ் கிட்ட கேட்டப்போ அவங்க சாப்பிட்ட ஏதோ தான் நிமோனியாவ சிவியர் ஆக்கி அவங்களுக்கு பிட்ஸ் உண்டாக்கி பிரீத் பண்ண முடியாம இறந்துட்டதா டாக்கடர்ஸ் சொன்னாங்க.... டாக்டர்ஸ் அவங்க என்ன சாப்பிட்டதா விசாரிச்சாங்க.... அன்றைக்கு பகல் அம்மா ரொம்ப நாளைக்கு பிறகு சிங்கறால் பிரைட்ரைஸ் செய்திருந்தாங்க... அது தான் அன்றைக்கு லஞ்ச் னு டாக்கடரிடம் சொன்னப்போ அவங்க அது நிமோனியாவுக்கு அலர்ஜியான புட் அதான் அவங்களுக்கு பிட்ஸ் வந்ததுனு சொன்னாங்க...... இதைக்கேட்டவுடன் அன்று பகல் அந்த பிரைட்ரைஸை ரசித்து சாப்பிட்ட அம்மாவோட முகம் என் கண்முன்னே வந்து என்னிடம் “நல்லா இருக்கு சாருமா நாளைக்கும் செய்து சாப்பிடலாம்” என்று ஒலித்தது போல் இருக்க நான் அங்கேயே மயங்கி விழுந்துட்டேன்..” என்று விட்டு மீண்டும் அஸ்வினை அணைத்து அழத்தொடங்கினாள் சாரு....... அவளை அணைத்து அஸ்வின் அவளது தலையை கோதியவாறு இருக்க சிறிது நேரத்தில் “சாருமா........” என்று அஸ்வின் அழைக்க “வேணா அஸ்வின் அப்படி கூப்பிடாத அம்மாவும் இப்படி தான் கூப்பிடுவாங்க” என்றுவிட்டு மீண்டும் அவன் மார்பில் தலைவைத்து அழுதாள் சாரு... தன்னவளின் அழுகை அவளது மனபாரத்தை குறைக்கும் என்று அவன் அறிவு கூறினாலும் அவன் மனமோ மிகவும் கலங்கியது...... ஆனாலும் தன்னவளை ஆசுவாசப்படுத்த தன்னாலே முடியும் என்று அஸ்வின் “ஓய் ஜிலேபி நான் எங்க அத்தை கூட கா....” அவனது திடீர் பேச்சில் குழம்பிய சாரு தலையை நிமிர்த்தி பார்க்க “இப்படி ஒரு அழகான பாப்பாவ அழுகுனிபாப்பாவா வளர்த்திருக்காங்களே.... நானும் இவ்வளவு நாள் இந்த பாப்பாக்கு அழவே தெரியாது சமத்து பாப்பானு நினைத்திருந்தேன்.... ஆனா இந்த பாப்பா லீட்டர் லீட்டரா தண்ணியை ஸ்டோர் பண்ணி வைத்திருக்குனு எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போயிருச்சே...” என்ற அஸ்வினை முறைத்த சாரு “தெரிந்திருந்தா என்ன பண்ணி இருப்ப??” “வேற என்ன பண்ணியிருப்பேன்?? வீட்டில் இன்னும் ரெண்டு வாட்டர் டேங் வாங்கி வைத்திருப்பேன்” என்று அசால்டாக அஸ்வின் கூற அவனை அருகில் இருந்த தன் ஹான்ட் பேக்கினால் அடித்தாள் சாரு.... “ஓய் ஜிலேபி இப்படி வெப்பன்ஸ் எல்லாம் யூஸ் பண்ண கூடாது சொல்லிட்டேன்...” “உன்னை இத்தோடு விட்டதே பெரிது....என்னையே கலாய்ப்பியா ரௌடி பேபி...??” “ஹாஹா உன்னை கலாய்க்காம வெறு யாரை ஜிலேபி கலாய்ப்பது?? சரி இப்போ அத்தையை பற்றி சொல்லு” “சொல்லுறேன்.... உங்க அத்தையை பற்றி மட்டும் இல்லை... அவங்க புருஷனை பற்றியும் சொல்லுறேன்” என்று தன் குடும்பம் பற்றி கூறத்தொடங்கினாள் சாரு ராணி கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார்.... அன்று கல்லூரி வாசலில் அவருக்காக காத்துக்கொண்டிருந்தார் செல்வம் என்றழைக்கப்படும் செல்வநாயகம்... கல்லூரி கேட்டை தாண்டி வந்த ராணி செல்வத்தை பார்த்து கையசைக்க அவரும் ராணியை நோக்கி வந்தார். அங்கிருந்து இருவரும் சென்ற இடம் அருகிலிருந்த பூங்காவிற்கு.... செல்வம் பற்றி சொல்வதானால் அவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்... படிப்பதற்காக நகரத்திற்கு வந்தவருக்கு அவரது ஜூனியரான ராணியை பார்த்தவுடன் பிடித்து போனது.... அவரிடம் தன் காதலை கூறிய போது ராணி அதனை மறுத்துவிட்டார். ஆனாலும் முயன்று ராணியை தன் காதலுக்கு சம்மதம் சொல்ல வைத்தார்.... ராணி அனாதை இல்லத்தில் வளர்ந்தவர்.. இல்லத்தின் உதவியாலே கல்லூரிப்படிப்பை அவரால் தொடர முடிந்தது. அச்சந்தர்ப்பத்திலேயே செல்வம் தன் காதலை வெளிப்படுத்தினார்.... பல அறிவுரைகள் எச்சரிக்கைகளை புகுத்தி வளர்க்கப்பட்ட ராணிக்கு செல்வத்தின் காதலை ஏற்பதில் பயம். ஆயினும் அவரது ஆழமான காதல் ராணியை ஏற்கவைத்தது..... இருவரும் பூங்காவில் வழமையாக அமரும் இடத்தில் அமர்ந்ததும் செல்வம் பேச ஆரம்பித்தார்.... “ராணிமா... எங்க வீட்டில் எனக்கு பெண் பார்க்கிறாங்க” “என்னங்க சொல்லுறீங்க???” “நான் நம்ம காதலை வீட்டில் சொன்ன பிறகு தான் இந்த ஏற்பாடு” “என்னங்க..... அப்போ....” என்றவாறு ராணி அழத்தொடங்க “ஐயோ ராணிமா இப்போ நீ எதுக்கு அழுற?? கண்ணை துடைத்துக்கோ முதலில்.... முதல்ல நான் சொல்ல வருவதை முழுமையாக கேளு..?” என்று செல்வம் கூற ஒப்புக்காக ராணி கண்ணை துடைத்துக்கொண்டாலும் கண்கள் இப்போ அப்போ என்று கண்ணீரை வெளிவிடுவதற்கு தயாராக இருந்தது.. “ம்.. சொல்லுங்க...” “நாம எங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம் ராணிமா.... இது மட்டும் தான் இப்ப நம்மால் செய்யக்கூடிய ஒன்று... எங்க வீட்டில் முதலில் எதிர்த்தாலும் காலப்போக்கில் நம்மை ஏற்றுக்கொள்வார்கள்” “வேணாங்க.... திரும்ப நாம பேசிப்பார்க்கலாம்... ஒரு அழகான கூட்டில் இருக்கிற உங்களை என்னோட சுயநலத்திற்காக பிரித்து கூட்டிட்டு போக விரும்பலை.... இப்போ உறவுகள் வேணாம்னு தோனும்.. ஆனா உறவுகளின் அருமை அதுக்காக ஏங்குனவங்களுக்கு தான் தெரியும்... பிளீஸ் ங்க... மறுபடியும் உங்க வீட்டிலே பேசி பார்க்கலாம்....” “இல்லை ராணிமா எவ்வளவோ பேசிப்பார்த்திட்டேன் அவங்க முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க..நம்ம அவங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கறது தான் நாம சேர்வதற்கு ஒரே வழி” என்று செல்வம் பல காரணங்களும் சமாதானங்களும் சொல்லி ராணியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். அவர்களது திருமணம் நண்பர்கள் துணையோடு கோயிலில் நடைபெற்றது… அவர்கள் தம் வாழ்வை ஒரு கூலிவீட்டில் தொடங்கினர். செல்வம் ஒரு கம்பனியில் அப்போது எக்சிகியூட்டிவ்வாக கடமையாற்றிக்கொண்டிருந்தார்… ராணியும் அவருக்கு உதவும் முகமாக செல்வம் தடுத்தும் வேலைக்கு சென்றார்.. இருவரது உழைப்பும் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தியது… தன்னை ஒதுக்கிய பெற்றோர் முன் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறி செல்வத்தினுள் இருந்ததால் தன் நெடுநாள் கனவான கண்ஸ்ரக்ஷன் கம்பனியை தமது சேமிப்பு பணத்தையும் வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகையையும் மூலதனமாக இட்டு தொடங்கினார்… ஆரம்பித்த புதிதில் சில சறுக்கல்கள் இருந்தாலும் தன் விடா முயற்சியினாலும் அவரது பால்ய சிநேகிதன் ராமின் துணையினாலும் தொழிலில் காலூன்றினார்…. அந்த சமயத்திலேயே அவர்களுக்கு சாரு பிறந்தாள்…. அவள் பிறந்த நேரம் அவரது தொழில் அசுர வளர்ச்சியடையத் தொடங்கியது… தொழில் தொழில் என்று தன் முழு நேரத்தையும் அதில் செலவிட்டவர் தன் குடும்பத்துடனான நேரத்தை குறைத்துக்கொண்டார்…. அவரது வேலைப்பலு அறிந்த ராணி அதை கண்டுகொள்ளாதவாறு வெளியில் காட்டிக்கொண்டாலும் மனமோ செல்வத்துடன் நேரம் செலவழிக்கவே ஏங்கியது…. ஆனால் அந்த ஏக்கத்தை போக்கவென்றே அவருக்கு துணையாய் இருந்தாள் சாரு….. அவளுக்கு எதுவென்றாலும் அம்மா துணை வேண்டும்…. காலை எழும்பியதிலிருந்து அம்மா அம்மா என்று ராணியின் முந்தானையை பிடித்துக்கொண்டே சுற்றுவாள். அவளது அம்மாவே அவளின் உலகம்…. அவளுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தார் ராணி…….அவளுக்கு தைரியத்தை புகட்டுவதற்காக அவளை ஸ்போட்சில் ஈடுபடுத்தினார்….. தற்காப்பிற்கு கராத்தே பயில வழி செய்தார்…. அவை மட்டும் போதாதென்று பாட்டு டான்ஸ் என்று அனைத்தையும் பயிற்று வித்தார்… அவள் உடல்ரீதியாக மட்டுமே பெண் …... மனரீதியாக ஒரு ஆணிற்கு நிகரான ஆளுமையுடன் வளர்க்கப்பட்டாள். அது பிற்காலத்தில் சாருவிற்கு பெரிதும் உதவியது….. சிறு வயதிலேயே புத்திசாலியாக திகழ்ந்தாள்…. பள்ளியில் கல்வி, விளையாட்டு என்று அனைத்திலும் அவளே முதலிடம்…. இப்படி இவர்களது நாட்கள் அழகாக சென்று கொண்டிருக்க அக்குடும்பத்தின் மகிழ்ச்சியை கெடுப்பதற்கென்றே நிகழ்ந்தது ராணியின் மரணம்……அவரது மரணத்தின் பின் சாரு தனிமைபடுத்தப்பட்டாள்…… அம்மா என்று ஒருவரை மட்டும்கொண்ட அவளது உலகம் இப்பொழுது யாருமில்லாது இருண்டிருந்தது… தந்தை என்றொருவர் இருந்தாலும் அவரை இதுவரை எதற்கு நாடியதில்லை…. அதாவது அவர் நாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை…… ஆனால் இனிமேல் தன் துணை அவருக்கு தேவை என்றுணர்ந்த சாரு அவருக்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்து கொடுத்தாள்…. அவளது அம்மா இறக்கும் போது அவள் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தாள்……இந்த நேரத்திலேயே செல்வத்தின் குடும்பத்தினர் புது குழப்பத்தை உண்டு பண்ணினர்…… அன்று சாரு பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது அவளது வீடு அலங்கரிக்கப்பட்டு வீட்டில் விருந்தினர்கள் நிரம்பி வழிந்தனர்… வீட்டின் இந்த மாற்றத்திற்கு காரணம் அறியாத சாருவோ தன் தந்தையை தேடிச்சென்றாள்…. அவள் செல்லும் வழியில் அவளது அன்னையின் பெயர் அடிபட அந்த இடத்திலேயே நின்று அவர்கள் பேசுவதை கேட்கத்தொடங்கினாள்… “இங்க பாரு ஷெண்பா… நீ இனி புத்தியா பிழைச்சுக்கனும்… செல்வம் நல்ல பையன் தான். ஆனா அந்த அனாதை சிறுக்கி ராணி ஏதோ மாயம் பண்ணி அவனை எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டா….. இப்போ அவ போனதால எங்க பையன் எங்களுக்கு திருப்பி கிடைச்சிட்டான்…ஆனா அவளோட ரத்தமா அவ மக இருக்கா…. அவளும் அந்த ராணி மாதிரியே தான்… ராங்கி பிடிச்சவள்….. நீ தான் அவளை அடக்கி உன் கட்டுக்குள் வச்சிருக்கனும்…. அதுக்கு நீ செல்வத்தை உன் கைக்குள் போட்டுக்கொள்ளனும்…… இதெல்லாம் நீ சரிவர செய்யலைனா செல்வம் பய சொத்துபத்து எல்லாத்தையும் அந்த அனாதை பெத்த மகளுக்கே எழுதி வச்சிருவான்…. அவளை காரணம் காட்டி தான் இந்த கல்யாணத்தையே நடத்துனோம். அதனால இனிமே நீ புத்தியா பிழைச்சா தான் உன்னோட வாரிசுக்கு ஏதாவது சொத்து சுகத்தை சேர்க்க முடியும்… நான் சொல்வது உனக்கு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்….. .” என்று செல்வத்தின் அம்மா தன் புது மருமகள் ஷெண்பாவிடம் கூறிக்கொண்டிருந்தாள். அதை கேட்டுக்கொண்டிருந்த சாருவிற்கோ ஆத்திரம் அழுகை என்று அனைத்தும் ஒரு சேர வந்தது. அவளது அறைக்கு வந்தவள் அழுது தீர்த்தாள். பின் ஒரு முடிவு எடுத்தவளாக தன் தந்தையிடம் சென்று தான் ஆஸ்டலில் தங்கி படிக்கப்போவதாக கூறினாள். செல்வமும் சரி என்றுவிட அவளின் ஆஸ்டல் வாசம் ஆரம்பமானது. விடுமுறைக்கு வீட்டிற்கு வருபவள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். என்ன தான் ஷெண்பா அவளுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள முனைந்தாலும் சாரு அதனை ஏற்க முனையவில்லை. காரணம் அன்று செல்வத்தின் தாயார் பேசிய பேச்சு. ஆனால் சாருவிற்கு தெரியாத ஒன்று ஷெண்பா அவரது அறிவுரைகளை காதால் கேட்டாரே ஒழிய அதை செயற்படுத்த முனையவில்லை. இவ்வாறு சென்று கொண்டிருக்க ஷெண்பா மற்றும் செல்வத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது… அதற்கு ரதன் என்று பெயர் சூட்டினர்….. சாரு இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருக்கும் போது செல்வம் இறந்து போனார்…. அவரது உயில் கம்பனியும் ஒரு வீடும் சாருவிற்கென்றும் ஏனைய சொத்துக்கள் அனைத்தும் ஷெண்பா மற்றும் அவரது மகன் ரதனிற்கும் என்றும் அறிவித்தது. ஆனால் அவரது உறவினர்கள் சாருவின் பெயரில் இருந்த சொத்துக்களையும் ஷெண்பாவின் பெயரிற்கு மாற்றுமாறு சாருவிடம் கூற அதனை ஷெண்பா தடுத்துவிட்டார். அதுவே சாரு ஷெண்பா மற்றும் ரதனை பார்த்த கடைசி நாள். பின் அவளது வாழ்க்கை சக்கரம் சுமூகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்று சாரு தன் கதையையினை முடிக்க அஸ்வின் “ஏன் ஜிலேபி நீ அதற்கு பிறகு உன் சித்தியை பார்க்கவே இல்லையா??” “இல்லை அஸ்வின் அவங்க அதற்கு பிறகு ரதனோடு அவங்க ஊருக்கு போய்ட்டாங்க…. நானும் அவங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படவும் இல்லை…” “ஓ… ஆனா நான் ஒன்று கேட்பேன் நீ தப்பா எடுத்துக்க கூடாது…” “இல்லை சொல்லு…” “உன்னோட சித்தி தப்பானவங்கனு உனக்கு தோனுதா????” “ஏன் அப்படி கேட்குற??” “நீ சொல்வதை கேட்டப்போ அவங்க கெட்டவங்க இல்லைனு தோனுது???? நீ என்ன நினைக்கிற ஜிலேபி???” என்று அஸ்வின் கேட்க சாருவிடம் பதிலில்லை…. அஸ்வின் சாருவிடம் எழுப்பிய வினாவிற்கு அவளிடம் பதில் இல்லை. காரணம் ஷெண்பா சாருவிடம் நடந்து கொண்ட முறை..... விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் சாருவை நன்றாக கவனித்துக்கொள்வார் ஷெண்பா. வேளா வேளைக்கு அவளது அறைக்கே உணவினை அனுப்பிவைப்பார்.... அவர் அவளிடம் நலம் விசாரிக்கும் போது அவளது பதில் ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும்..... அவள் ஒதுங்கி சென்றாலும் அவர் அவளை ஒதுக்கி வைக்காது பார்த்து கவனித்துக்கொள்வார்... “என்ன ஜிலேபி சைலண்ட் ஆகிட்ட??? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு உன்னோட ஷெண்பா சித்தி கெட்டவங்க இல்லைதானே???” “இல்லை தான் பேபி... ஆனாலும் அவங்களை நல்லவங்க காட்டகரிக்குள்ள சேர்க்க மனது ஒப்புக்கொள்ள மாட்டேன்குது...” “ சரி நீ இந்த கேள்விக்கு பதில் சொல்லு??? அவங்களை எதனால உனக்கு பிடிக்கலை?? உன்னோட அம்மா ஸ்தானத்திற்கு அவங்க வந்தது தப்பென்று நினைக்கிறியா??” “இல்லை பேபி அப்படி எனக்கு எப்பவும் தோன்றியதில்லை... சொல்லப்போனா அப்பா செகண்ட் மேரஜ் பண்ணது கூட எனக்கு தப்பென்று தோன்றவில்லை.... ஆனா அன்று அப்பாவோட அம்மாவும் அவங்களும் பேசிக்கிட்டது தான் நான் அவங்களை வெறுக்க காரணம்...” “சரி நீ என்ன நினைக்கிறனு எனக்கு புரியிது ஜிலேபி.... ஆனா நீ ஒரு விஷயத்தை கவனிக்காமல் விட்டுட்ட... அன்று உன்னோட பாட்டி சொன்னதை உன்னோட சித்தி கேட்டாங்கனு சொன்னியே..... அதை என்றாவது அவங்க செயலில் காட்டியிருக்காங்களா?? உன்னோட விஷயத்தில் எதிலாவது அவங்க தலையிட்டிருக்காங்களா??? அங்க உன் பாட்டி சொல்வதை கேட்டு இருந்தாங்கனா மாமா இறந்த பிறகு கம்பனி உன் பேருக்கு வந்ததை எதிர்த்த உறவினர்களை ஏன் தடுத்தாங்க??? நீ ஏன் இந்த ஆங்கிலில் இருந்து யோசிக்க மாட்டேன்ற??” என்ற அஸ்வினின் வினா சாருவிற்கு தன் தவறை சுட்டிக்காட்டியது. ஆம் அப்போதுதான் தன் சித்தியின் நற்குணத்தை புரிந்துகொண்டாள். என்னதான் தான் முகம் கொடுத்து பேசாவிட்டாலும் விடுமுறை நாட்களுக்கு வீட்டிற்கு வரும் தன்னை அவர் முகம் சுழிக்காது சீராட்டியது, தன் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றியது என்று அவர் செயல்கள் ஒவ்வொன்றும் தன் மீதான அன்பை மட்டுமே வெளிக்காட்டியது.... ஆனால் அந்நேரம் அறியாமையால் அவரை புறக்கணித்தது இப்போது மிக வேதனையை தந்தது... அதைவிட வேதனையூட்டிய விடயம் அவர் தன் தந்தையுடன் வாழ்ந்தது குறுகிய காலம் என்பதே. ஒரு பெண்ணான சாருவிற்கு அவரின் வேதனையை இப்போது புரிந்து கொள்ளமுடிந்தது. பின் ஒரு முடிவெடுத்தவளாக அஸ்வினிடம் “தாங்ஸ் ரௌடி பேபி...... இவ்வளவு நாளா ஒரு நல்லவங்களை பற்றி தப்பா நினைத்திருந்தேன்.... நீ தான் அதை தப்புனு எனக்கு புரியவச்ச.. இல்லைனா நான் வாழ்நாள் முழுவதும் அவங்க அன்பை புரிந்து கொள்ளாமலே இருந்திருப்பேன். லவ் யூ டா ரௌடி பேபி..” என்று அவனது கன்னம் திருப்பி சாரு தன் செவ்விதழால் ஒரு முத்தமொன்றை பரிசளிக்க அஸ்வினோ தேனுண்ட வண்டானான். “ ஏன் ஜிலேபி தப்பான டைமில் இப்படி தாறுமாறா கிப்ட் குடுக்குற???” என்று ஒரு மார்க்கமாய் அஸ்வின் சாருவை நோக்க சாருவோ அதை கவனிக்காது “ இன்னும் நிறைய கிப்ட் குடுப்பேன் என்னோட ரௌடி பேபிக்கு..... அவன் தான் என்னோட தப்பை புரிய வைத்தான்..... எனக்கென்று உறவுகள் இருக்குனு புரியவைத்தான்..... நான் சித்தியை இந்த சண்டே பார்த்து அவங்களை கையோட கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்.. இப்போ தம்பியும் வளர்ந்திருப்பான்... ரெண்டு பேரையும் இனி என்கூடாவே என்னோட வீட்டுலயே வைத்து பார்த்துக்கொள்வேன்... இந்த டைம் மெடிக்கல் காம்பையும் சித்தி தான் ஓபன் பண்ணுவாங்க... அம்மா மாதிரி யாரும் தவறான உணவு பழக்கத்தால் இறந்துவிட கூடாதுனு தான் இந்த மெடிக்கல் கேம்பும் மெடிக்கல் செஷன்சும் இயர்லி கான்டக்ட் பண்ணுறேன். அதை இந்த முறை சித்தியே ஓபன் பண்ணட்டும்.. அது தான் நான் அவங்களுக்கு செய்ற மரியாதை ...”என்று சாரு தன்பாட்டில் பேசியபடி இருக்க அஸ்வினிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லையே என்று சாரு அவனை திரும்பி பார்க்க அவனோ மன்மத அம்பை தன் கண்களில் ஏந்தி அவளை தாக்குவதற்கு தயாரான நிலையில் இருந்தான். அவனது பார்வை சாருவினுள் ஏதோ ஒரு புது உணர்வை கிளப்ப அவளோ பேச மடந்தையாகினாள்... அவனது பார்வை அவளிடத்தில் வெட்கத்தை உண்டு பண்ண அவள் அதை மறைக்கும் பொருட்டு தலை குனிந்தாள். அவளது வெட்கத்தால் அந்த இருட்டிலும் சிவந்து ஜொலிக்கும் அவளது வதனம் அஸ்வினை இன்னும் பித்தனாக்கியது... தன் கரத்தால் அவளது கரம் பற்றிய அஸ்வின் அவளது புறங்கையில் இதழொற்றினான்.. அதில் கூச்சமடைந்த சாரு தன் தலையை மறுபக்கம் திருப்ப அஸ்வினோ அவளது தாடையை பற்றி அவன் புறம் திருப்பினான். வெட்கத்தால் சிவந்து ஜொலித்த அவளது வதனம் வானில் காய்ந்து கொண்டிருந்த நிலவிவுடன் போட்டியிட்டது.. அலைகள் போல் ஆர்பரித்த அவளது உணர்வுகளை அடக்கும் வழி தெரியாது அவள் தன் சிவந்த அதரங்களை கடிக்க மீனின் வாயில் மாட்டிய தூண்டில் போல் அவளது பற்களுக்கிடையில் சிறைபட்டிருந்த அந்த தக்காளிப்பழ செவ்விதழ்களை தன் கைகளால் விடுவித்தான் அஸ்வின். அதில் இன்னும் வெட்கம் வரப்பெற்ற சாரு “அஸ்வின்” என்று முனங்க “ரௌடி பேபி சொல்லு ஜிலேபி” என்றவாறு அவள் முகத்தினை அஸ்வின் கையிலேந்தி அவளது கண்களை நேருக்கு நேர் நோக்க அவளும் உயிரை ஊடுருவிச்செல்லும் அவன் பார்வை வீச்சை தாங்கி நின்றாள்... ஓரிடத்தில் நிற்காது அங்குமிங்கும் அலைப்பாயும் அவளது கருமணிகள் இரண்டும் அவனது விம்பத்தை திரையிட அந்த நிலவொளியில் அதை கண்ட அஸ்வினிற்கு அவளது இதயத்தில் தன் இருப்பிடத்தை தெரிந்துகொண்டாதான ஒரு உணர்வு..... அவனிடம் எதையோ எதிர்பார்த்து ஏங்கி நிற்பது போல் அடிக்கடி மூடித்திறந்த அவளது இமைகள் அவனது மையலை இன்னும் அதிகரித்தது.... அவன் அவளது முகம் நோக்கி குனிய அவளோ தன் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் பெண்களுக்கே உரிய நாணம் அவளை தன் கண்களை மூட வைக்க அவளது முகம் நோக்கி குனிந்த அஸ்வின் நிலையில்லாது ஓடிக்கொண்டிருந்த அவளது மூடிய விழிகள் இரண்டின் மீதும் இதழ் பதித்தவன் பின் அவள் காதோரம் இருந்த கூந்தல் கற்றையை ஒதுக்கிவிட்டவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து [B][I]“ நிலவு கூட உன் கன்னக்கதப்பை பார்த்து பொறாமைப்படுகின்றது... என்றும் என் தனிமைக்கு துணை நிற்கும் அதற்கு ஒரு வரி கவிதையேனும் இயற்ற முன்வராத என் நா இன்று உன் கன்னச்சிவப்பு கண்டு மயங்கி அருவியாய் கவி பாட[/I][/B] [I][B]முயன்றதை கண்டு..”[/B][/I] என்று அவளது காதோரம் கிசுகிசுக்க சாரு தன் வசம் இழந்து அவன் தோளில் சாய்ந்தாள்.... இவர்களது மோனநிலையை கலைக்கவென்று சாருவின் செல் ஒலித்தது..... அதில் அவர்களது மோனநிலை கலைய இருவரும் விலகி அமர்ந்து கொண்டனர். போனை ஆன் செய்த சாரு “டேய் ஏன்டா சிவபூஜையில நுழைந்த ??”என்று அந்தப்புறம் அழைப்பிலிருந்த சஞ்சுவிடம் பாய அவள் கேட்ட தொனியில் அஸ்வின் சிரிக்கத்தொடங்கினான்.... அவனை சாரு முறைக்க அவன் தன் கைகளால் வாயை மூடிக்கொண்டு நிறுத்திய சிரிப்பை மீண்டும் தொடர்ந்தான்.. “ஏன் சாரு கோயில்ல இருக்கியா?? நான் ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா???” “ஆமா கோயில்ல இருந்து சிவபூஜை பண்ணிட்டு இருந்தேன். நீ கரடி மாதிரி உள்ள நுழைஞ்சி கெடுத்துட்ட...” என்று சாரு கூற சஞ்சய் சிவபூஜை கரடி என்ற வார்த்தைகளிலே புரிந்து கொண்டு “ஹாஹா அதான் மேடத்திற்கு கோபமா??? நட்புனா அதான் மா.... பூஜை நேரத்தில் மட்டும் இல்லை எல்லாவற்றிலும் குழப்பத்தை உண்டு பண்ணுவோம்....” என்றுவிட்டு சஞ்சு சிரிக்க அதில் கடுப்பான சாரு “இப்படி சிரிக்கத்தான் கால் பண்ணியா??” “இல்லை ..ஒரு டீல் பற்றி பேசத்தான் கால் பண்ணேன்... ஆனா இப்ப எனக்கு சிரிக்கனும் போல தோனுது...” என்றுவிட்டு மீண்டும் சஞ்சு சிரிக்க சாரு கடுப்பில் அழைப்பை துண்டித்துவிட்டாள். பின் அவன் மீதிருந்த கோபத்தை அஸ்வினை அடித்து தீர்த்துக்கொண்டாள்... பின் இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்..... இவ்வாறு அழகாய் சென்றுக்கொண்டிருக்கும் அவர்களது வாழ்விற்கு விதி என்ன செய்ய காத்திருக்கிறது.....??? [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
மண்ணில் தோன்றிய வைரம்....
மண்ணில் தோன்றிய வைரம் 10
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN