🔥அக்னி-1🔥

Lakshmi Devi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
🔥அக்னி-1🔥
"டேய் உங்களுக்கு எல்லாம் அறிவு இருக்கா..? நான் பாவம் தானே.. என்ன மட்டும் தனியா இங்க தவிக்க விட்டுட்டீங்க.. நான் என்ன பண்ணுவேன்..?", என்று போனில் கத்திக்கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி ஸ்ரீ வதனி.


"போதும்டி... போதும்.. இப்படியா கத்துவ..? உன்ன அங்க விட்டாலும்.. நீ எங்கள தூங்கவா விட்ட..? ",என்று கத்திக்கொண்டு இருந்தான் நம் ஸ்ரீயின் பாசமிகு அண்ணன் ஸ்ரீதர்.

(நம்ம ஸ்ரீ வதனி வீட்ல ஸ்ரீனு தான் கூப்பிடுவாங்க நாமளும் அப்படியே கூப்பிடுவோம்)..

"அப்படி சொல்லுங்க அண்ணா.. இவள் ஓவரா பண்றா..! ", என்று குறை கூறினான் நம் ஸ்ரீயின் செல்ல தம்பி ஸ்ரீ வர்ஷன்.

"நான் மட்டும் இங்க.. நீங்க மட்டும் அங்க.. எனக்கு கம்பெனிக்கு கூட ஆளே.. இல்ல..", என்று சிணுங்கிக் கொண்டு இல்லல்ல சினுங்கல் பாதி கத்தல் பாதியாக போனில் வாதாடி கொண்டிருந்தாள் ஸ்ரீ.

(இவ கொடுக்கிற பில்டப்புக்கு இவ ஃபாரின்ல இருக்கானெல்லாம் தப்பா நினைச்சிடாதீங்க.. பக்கத்துல சொந்தக்காரங்க மேரேஜ்க்கு சீதாம்மா,
சித்துமா மற்றும் தன் அக்கா ஸ்ரீ வர்ஷா கூட வந்திருக்கா.
இவர்கள் இங்கே பேசிக்கொண்டு இருக்கட்டும் நாம காலையில என்ன ஆச்சுன்னு பார்ப்போம் வாங்க...)

(ஃபிளாஷ்பேக் ஸ்டார்ட்)

சண்டே ஆனா... ஸ்ரீக்கும் சரி அண்ணன் தம்பிக்கும் சரி காலையில 11 மணிக்கு தான் இயர்லி மார்னிங். 4.30மணி போல் இவள் நல்லா தூங்கி கொண்டு இருக்க. சீதா ஸ்ரீயின் அன்னை, "அடியே.. சீக்கிரமா எழுந்திரு டி.. பாரு எப்படி பசங்க கூட தூங்குகிறத...? ".

"அம்மா நான் என் அண்ணா தம்பி கூட தானே தூங்குறேன். உங்களுக்கு என்ன குத்தம் சொல்லலனா.. நாளே ஓடாதே..", என்று தூக்கத்திலேயே கூறினாள் ஸ்ரீ.

"சீதாவுக்கு கோவம் ஏறியது என்னடி நான் உன்ன குறை சொல்றனா..? ",என்று அடிக்க கையை ஓங்க அவரை தடுத்தான் தரு.

(ஸ்ரீதரையும் ஸ்ரீ வர்ஷன் ஐயும் வீட்டில் தரு வருனு தான் கூப்பிடுவாங்க நாமளும் அப்படியே கூப்பிடுவோம்)

"ஏன்மா..? காலையிலேயே வந்து கத்திட்டு இருக்கீங்க", என்றான் வரு.

"நான் கத்துறேனா..?" என்றார் சீதா.

"அம்மா இன்னைக்கு தானே மா தூங்குறா... மத்த நாளெல்லாம் காலேஜ் போறா.. அண்ட் வொர்க் வேற போறா டயடா இருப்பாள", என்றான் தரு.

"டேய் நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு ரொம்ப செல்லம் தறீங்க.. முக்கியமா தரு நீ தான் அவளுக்கு எல்லாமே சொல்லி தரணும்... மார்னிங்லாம் சீக்கிரமா எழுந்திருக்கணும்... போற வீட்ல இப்படி தூங்குனா எப்படி...?
நாங்க சொல்றத விட நீ சொன்னா அவ மறுக்கவே மாட்டா.. நீதான் வீட்டிலேயே பெரியவன்.. வரு சின்ன பையன் அவனுக்கு ஒன்னும் தெரியாது.. நீதான் அவளுக்கு எடுத்து சொல்லனும்", என்றார் சீதா.

"மா முதல்ல போய் தண்ணி குடிங்க.. போங்க.. மூச்சு விட்டு பேசுங்கமா ",என்றான் வரு.


"திமிரு டா உனக்கு ",என்றார் சீதா.

"அம்மா அதெல்லாம் ஸ்ரீ பாத்துப்பா மா... ",என்றான் தரு.


"டேய் நீங்க ரெண்டு பேரும் அவளை கெடுக்கறீங்க", என்றார் கோவமாக." சரி.. உங்கிட்டலாம் என்னால பேச முடியாது அவள எழுந்து கிளம்ப சொல்லுங்க..."


"எங்கே", என்றனர் இரண்டு பேரும் கோரசாக." அப்போ அவள் உங்ககிட்ட சொல்லையா... நான்தான் நைட்டே காலையிலேயே மேரேஜ்க்கு போனும்னு சொல்லியிருந்தேனே உங்கள்ட்ட அவ சொல்லவே இல்லையா..?"

"இல்லையே.. மா, நாங்க மால் போயிட்டு அப்படியே மூவி போயிட்டு வரலாம்னு நெனச்சோம்...", என்றான் தரு."பரவால்லம்மா நீங்க போயிட்டு வாங்க.. ஸ்ரீ வீட்டிலேயே இருக்கட்டும்.. ",என்றான் வரு."நீங்க இப்படி ஏதாவது பிளான் போடுவீங்கன்னு தான் நான் அவகிட்ட நைட்டே சொல்ல சொன்னேன் நாய் சொல்லவே இல்ல...",


"சரி மா நீங்க மட்டும் போய்ட்டு வாங்க..", என்றான் தரு.


"டேய்.. பொண்ணுங்கள இந்த மாதிரி பங்ஷனுக்குலாம் கூட்டிட்டு போனா தான் நம்ம வீட்ல பொண்ணு இருக்கான்னு தெரியும் நாலு பேரு கேட்க வருவாங்க அதனால நீங்க சும்மா இருங்க..... ",


"மா அது பொண்ணுங்கல தானே கூட்டிட்டு போகணும் இது தான் குரங்கு ஆச்சே", என்று வரு கூற எட்டி உதைத்தால் ஸ்ரீ.

"ராட்சசி.. ராட்சசி.. மா இவள கூட்டிட்டு கிளம்புங்கமா..",


"திமிரு புடிச்சவன்..",என்று எழுந்து மண்டையில் கொட்டு வைத்தாள் . அனைவரும் சிரித்து விட்டனர்."அதான் எழுந்திருச்சுட்டியே.. போ கெளம்பு உனக்கு வர்ஷா டிரஸ் எடுத்து வச்சிட்டா பாரு..", என்றார் சீதா.

"சரி மா..", என்றுவிட்டு அவர் போனதும் கையை எடுத்து கும்பிட்டு விட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள் ஸ்ரீ.


"அம்மா... அம்மா.. இங்க பாருங்க மறுபடியும் ஸ்ரீ தூங்குறா.. ",என்றாள் வர்ஷா.

"அக்கா என்ன கா..? ப்ளீஸ் கா.. ஒரு 5 மினிட்ஸ்...",


"இது சரிப்பட்டு வராது ",என்று விட்டு தரு வரு ரெண்டு பேரும் சேர்ந்து அவளை இழுத்து பாத்ரூமில் விட்டு விட்டு கதவை சாத்தினர்.

"டேய் பாவிகளா டிரஸ் தராமையே கதவ சாத்திடீங்க..", என்றதும் வர்ஷா டிரஸ் எடுத்து கொடுத்தாள் . இவள் குளித்து விட்டு வெளியே வந்ததும் வர்ஷா அக்கா அழகா இருக்க என்று சொல்லிவிட்டு தருவையும் வருவையும் பார்க்க அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்..

"நன்றி... நன்றி டி", என்றால் வர்ஷா.

"அக்கா எனக்கும் உன்ன மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணி விடு..", என்றாள் ஸ்ரீ .


"சரிடி.. உட்காரு",

"அக்கா.. அக்கா.. எனக்கு மேக்கப் பண்ணி விடாதே கண்ணுக்கு மட்டும் போட்டு விடு ",என்றாள்.


"சரி டி.. சும்மா இரு கொஞ்ச நேரம்..‌",

சிறிது நேரத்தில் சீதாவும் சித்ராவும்," கிளம்பிட்டீங்களா..? இல்லையா..?", என்று கேட்டுக்கொண்டே மேலே வந்தனர்..

இவர்கள் சத்தத்தை கேட்டு தருவும் வருவும் திடுக்கிட்டு எழுந்தனர்...

"நீங்க இன்னுமா.. போல..?", என்றான் வரு.

"கொழுப்புடா உனக்கு.. என் தங்கம் ரெண்டு பேருமே அழகா.. இருக்கிங்க டா..", என்றார் சித்துமா.


"என் செல்லம்.. ரெண்டும் அழகா இருக்குங்க..", என்று திருஷ்டி கழித்தார் சீதாமா.

"தேங்க் யூ அம்மா", என்றால் வர்ஷா.


"ஈஈஈஈஈஈஈஈ ",என்று பல்லை காண்பித்தாள்‌ ஸ்ரீ.

"ஆமா... வர்ஷா அக்கா எப்படி இவ்வளவு... அழகா இருக்க..?", என்றான் வரு.

"ஆமாண்டா... என் செல்ல தங்கச்சி ரொம்ப அழகா இருக்கா..",
என்றான் தரு.


"என்ன எதுமே சொல்லல..?", என்றாள் ஸ்ரீ.


"ஹே.. ஸ்ரீ அது நீதானா நான் கூட... வேற யாரோ ஒரு பொண்ணு நிக்குதுன்னு நினைச்சேன்..", என்றான் வரு.

"டேய்.. பன்னி பயலே போடா..", என்று அடிக்க வந்தாள் ஸ்ரீ.


"ஏய்.. சும்மா.. சும்மா... சும்மா..", என்றான் வரு .


"டேய்.. சும்மா இருடா இன்னைக்கு என் குட்டி தங்கச்சி ரொம்ப க்யூட்டா இருக்கா..", என்றான் தரு.


"really.. அண்ணா..? ",என்றாள் ஸ்ரீ.

"யாடா.. தங்கமே..", என்றான் தரு.


"போடா..", என்று வருவிடம் பழிப்பு காட்டினாள்.

"நீ இன்னைக்கு தான் பொண்ணு மாதிரி அழகா கியூட்டா.. இருக்க.. ",என்றான் வரு.


"தேங்க்யூ.. வரு பயலே அண்ணா உனக்கும் தேங்க் யூ.. இது எல்லாத்துக்குமே வர்ஷா அக்கா தான் காரணம்.. தேங்க்யூ வர்ஷா அக்கா ",என்று கன்னத்தில் முத்தம் ஒன்றை பரிசாக அளித்தாள் ஸ்ரீ.


"சரி டைம் ஆச்சு... எல்லாரும் கிளம்புங்க", என்றார் சீதா. அனைவரும் விடை பெற ஸ்ரீ மட்டும் இவர்களை பார்த்து நமட்டு சிரிப்பு ஒன்று அளித்து விட்டு சென்றாள்.


"போச்சுடா... இந்த ஸ்ரீ சிரிப்பே சரி இல்லை என்ன பண்ணப் போறாளோ..?", என்றான் தரு .


"இன்னைக்கு.. நாம தூங்குன மாதிரி தான்.. ",என்றான் வரு.


(ஃப்ளாஷ்பேக் ஓவர்)

"வெயிட் பண்ணு ஸ்ரீ கால் வருது.. ஹோல்ட்ல போடுறேன்.. ",என்றான் தரு.

"சரிடா.. அண்ணா ",என்று இவளும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்க ஒரு பெண்ணின் குரல் போனில் கேட்டது...

"கவி அண்ணி.. ",என்றால் ஸ்ரீ.


"ஸ்ரீ குட்டி என்னடா பண்ற..? சாப்டியா..?", என்றாள் கவிதா.

"எங்க.. ",என்று விட்டு அனைத்தையும் மூச்சு விடாமல் கூறி முடித்தாள்.


"நீ கவலை படாதே.. தருக்கும் வருக்கும் பனிஷ்மெண்ட் ஏதாவது கொடுத்தற்லாம்....".

"அப்போ ஓகே அண்ணி.. ".

"அண்ணி.. என்ன அண்ணி...?", என்றான் வரு.

"வரு குட்டி.. நீயும் இருக்கியா..?", என்றாள் கவி.

"ஆமா அண்ணி.. அவ அங்க இருந்தும் எங்கள என்ன தூங்கவா விட்டா..? இவ்வளவு நேரம் போன் பண்ணி பேசிட்டு தான் இருக்கா.. ",என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே சீதா வந்து இவளை மண்டையில் கொட்டினார் "அங்க பார்த்தியா..? வர்ஷாவை எவ்வளவு பொறுப்பா இருக்கா..? ஆனா நீ ஏண்டி இப்படி இருக்க..? போனை கட் பண்ணு அறிவே இல்லை", என்று திட்டிவிட்டு சொல்ல.. இவளும் வேறு வழியின்றி. "guys அம்மா பாசம் தாங்க முடியல.. ".

"சரி.. சரி.. நீ கிளம்பு ",என்றான் வரு .

"சரிடா.. பாத்து பத்திரமா வாங்க ",என்றான் தரு .

"சரிடா பாய்.. ",என்றாள் கவிதா ..

" ஓகே.. ஓகே... ",என்று விட்டு போனை கட் செய்தாள்

சற்று நேரம் இருந்து விட்டு சாப்பிட்டு வீடு திரும்ப காரில் ஏறினர் இவர்கள் வீடு செல்லட்டும் நாம் இவர்கள் குடும்பத்தை பற்றி பார்ப்போம்.(தனசேகர் மற்றும் தேவானை தம்பதியருக்கு இரு மகன்கள் விஸ்வநாதன் மற்றும் வைத்தியநாதன் . விஸ்வநாதன் மற்றும் சீதா தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீ வதனி. வைத்தியநாதன் மற்றும் சித்ரா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் ஸ்ரீ வர்ஷா மற்றும் ஸ்ரீ வர்ஷன்.

தனசேகர் மற்றும் தேவானை விஸ்வநாதன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிட்டனர்.‌ அதிலிருந்து தன் படிப்பை விட்டுவிட்டு தன் உடன்பிறந்த வரையும் பார்த்து கொண்டு அவர் தந்தை நடத்தி வந்த ஜவுளி கடையையும் பார்த்துக் கொண்டார்...ஸ்ரீதர் -ஆறடி உயரம் அழகிய புருவம் handsome பையன் . இன்ஜினியரிங் முடித்து விட்டு கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான். இன்னும் இரண்டு மாதங்களில் கல்யாண மாப்பிள்ளை வேற... மேல போன்ல பேசினாங்களே கவிதா அவங்க தான் இவங்களோட அவங்க. தம்பி தங்கச்சி தான் எல்லாமே. எந்த ஒரு குழப்பம்.. வேதனை.. சந்தோஷம்.. எல்லாமே முழுசா வருவிடமும் ஸ்ரீயிடமும் மட்டும்தான் கூறுவான் பாசமும் கண்டிப்பும் ஒரே அளவில் காட்டும் பாசமலர் அண்ணன்‌...

ஸ்ரீ வர்ஷா - அழகும் பொறுமையும் அதிகம் கொண்டவள்.ஸ்ரீயைவிட ரெண்டு வருஷம் பெரியவள் பேஷன் டிசைனிங் படிச்சிருக்கா.. இவளுக்கும் மாப்பிள்ளை பார்த்தாச்சு அண்ணனுடைய மேரேஜ் அப்புறம் இவங்க மேரேஜ் தான் அம்மா அப்பா பேச்சை மட்டும் தான் கேட்பாள்.. தனிமையை மட்டும் தான் விரும்புவா.. அதுக்குனு பேசாமல் இருக்க மாட்டாள் என்று சொல்ல முடியாது தேவையான நேரத்தில் அண்ணன் தம்பி தங்கச்சியோடு சேர்த்துப்பா....
ஸ்ரீ வதனி- xx காலேஜில்... இன்ஜினியரிங் ஃபைனல் இயர் படிக்கிறாள் ரொம்ப அழகு என்று சொல்லமுடியாது.... அவனுக்கு அவள் அழகு... முட்ட கண்ணு... கோபம் சட்டென கொஞ்சம் வரும்... ரொம்ப சாஃப்ட்... அண்ணன் தம்பி தான் எல்லாமே.


ஸ்ரீ வர்ஷன் - yyy காலேஜ்ல பிஎஸ்சி செகண்ட் இயர் படிக்கிறான். 6 அடி உயரம் அழகிய கண்கள் பெண்களின் கனவு கண்ணன்.. அக்கா அண்ணன் தான் எல்லாமே.. ஸ்ரீய அக்கானுலாம் சொல்ல மாட்டான் ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கோவம் கொஞ்சம் ஓவரா வரும்.....போகப்போக மற்றதை பார்ப்போம்)

இவர்கள் காரில் பயணம் செய்து கொண்டிருக்க திடீரென்று கார் சடன் பிரேக் போட்டு நின்றது அவர்கள் முன் காரில் இருந்து ஒருவர் இறங்கி அவர்களை நோக்கி வந்தார் . அவரைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்...

வநத்வர் யார் ??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்......


🔥வெப்பம் தொடரும்🔥.....
 

Author: Lakshmi Devi
Article Title: 🔥அக்னி-1🔥
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
apapapaaaa..... enna sandai poduraanga.. ivanga theerthu vaikave oru story eluthanum polaye
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN